Category Archives: குர்ஆன் விளக்கம்

5:3 யூதர் விரும்பிய அல்குர்ஆன் வசனம்

யூதர் விரும்பிய அல்குர்ஆன் வசனம்

 الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا

‘இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்தி விட்டேன். உங்களின் மீது எனது அருட்பேறுகளையும் முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாக திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்.’ (5:3)

விளக்கம்:

இந்த வசனத்தின் சிறப்பையும் அது எப்போது இறக்கப்பட்டது என்பதையும் உமர் (ரலி) அவர்கள் கீழ்வருமாறு விளக்குகிறார்கள்.

45 حدثنا الْحَسَنُ بن الصَّبَّاحِ سمع جَعْفَرَ بن عَوْنٍ حدثنا أبو الْعُمَيْسِ أخبرنا قَيْسُ بن مُسْلِمٍ عن طَارِقِ بن شِهَابٍ عن عُمَرَ بن الْخَطَّابِ أَنَّ رَجُلًا من الْيَهُودِ قال له يا أَمِيرَ الْمُؤْمِنِينَ آيَةٌ في كِتَابِكُمْ تقرؤونها لو عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لَاتَّخَذْنَا ذلك الْيَوْمَ عِيدًا قال أَيُّ آيَةٍ قال ( الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا ) قال عُمَرُ قد عَرَفْنَا ذلك الْيَوْمَ وَالْمَكَانَ الذي نَزَلَتْ فيه على النبي (ص) وهو قَائِمٌ بِعَرَفَةَ يوم جُمُعَةٍ

‘யூத இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம், ‘அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் மாத்திரம் யூத இனமாகிய எங்கள் மீது இறங்கி இருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்’ என்று கூறினார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ‘அது எந்த வசனம்?’ எனக் கேட்டார்கள். அதற்கவர்,

‘இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்தி விட்டேன். உங்களின் மீது எனது அருட்பேறுகளையும் முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாக திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்.’ (5:3)

என்ற வசனம் தான் அது என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி (ஸல்) அவர்கள் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபா பெருவெளியில் ஒரு வெள்ளிக் கிழமை தினத்தில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும் போது தான் (அவ் வசனம் இறங்கியது)’ என பதில் கூறினார்கள்.

என உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

(நூல்: புகாரி 45)

2:143 பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதவர்களின் நிலை என்ன?

பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதவர்களின் நிலை என்ன?

 وما كان الله لِيُضِيعَ إِيمَانَكُمْ

விளக்கம்: முந்தைய கிப்லாவான பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதவர்களின் நிலை பற்றித்தான் 2:143 வது வசனம் இறக்கப்பட்டதாக பராவு (ரலி) அவர்கள் கீழ்கண்டவாறு விளக்குகிறார்கள்.

40 حدثنا عَمْرُو بن خَالِدٍ قال حدثنا زُهَيْرٌ قال حدثنا أبو إِسْحَاقَ عن الْبَرَاءِ أَنَّ النبي (ص) كان أَوَّلَ ما قَدِمَ الْمَدِينَةَ نَزَلَ على أَجْدَادِهِ أو قال أَخْوَالِهِ من الْأَنْصَارِ وَأَنَّهُ صلى قِبَلَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا أو سَبْعَةَ عَشَرَ شَهْرًا وكان يُعْجِبُهُ أَنْ تَكُونَ قِبْلَتُهُ قِبَلَ الْبَيْتِ وَأَنَّهُ صلى أَوَّلَ صَلَاةٍ صَلَّاهَا صَلَاةَ الْعَصْرِ وَصَلَّى معه قَوْمٌ فَخَرَجَ رَجُلٌ مِمَّنْ صلى معه فَمَرَّ على أَهْلِ مَسْجِدٍ وَهُمْ رَاكِعُونَ فقال أَشْهَدُ بِاللَّهِ لقد صَلَّيْتُ مع رسول اللَّهِ (ص) قِبَلَ مَكَّةَ فَدَارُوا كما هُمْ قِبَلَ الْبَيْتِ وَكَانَتْ الْيَهُودُ قد أَعْجَبَهُمْ إِذْ كان يُصَلِّي قِبَلَ بَيْتِ الْمَقْدِسِ وَأَهْلُ الْكِتَابِ فلما وَلَّى وَجْهَهُ قِبَلَ الْبَيْتِ أَنْكَرُوا ذلك قال زُهَيْرٌ حدثنا أبو إِسْحَاقَ عن الْبَرَاءِ في حَدِيثِهِ هذا أَنَّهُ مَاتَ على الْقِبْلَةِ قبل أَنْ تُحَوَّلَ رِجَالٌ وَقُتِلُوا فلم نَدْرِ ما نَقُولُ فِيهِمْ فَأَنْزَلَ الله تَعَالَى ( وما كان الله لِيُضِيعَ إِيمَانَكُمْ )

பராவு (ரலி) அறிவிக்கிறார்கள்:

‘நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த ஆரம்பத்தில் அவர்களின் பாட்டனார்களி(ன் வமிசா வழியினர்களி) டத்திலோ அல்லது அன்சாரிகளைச் சேர்ந்த அவர்களின் மாமன்மார்களி(ன் வமிசா வழியினர்களி) டத்திலோ தங்கி இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பதினாறு மாதங்களோ அல்லது பதினேழு மாதங்களோ பைத்துல் முகத்தஸை நோக்கியே தொழுது வந்தார்கள். (இருப்பினும்) தொழுகையில் தாம் முன்னோக்கித் தொழும் திசை (மக்காவிலுள்ள) கஃபா ஆலயமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது.

(அதற்கேற்ப அல்லாஹ்வின் கட்டளையும் வந்தது) (கஃபாவை முன்னோக்கி) நபி (ஸல்) அவர்கள் தொழுத முதல் தொழுகை ஒரு அஸருடைய தொழுகையாகும். (அப்போது) அவர்களுடன் சிலரும் சேர்ந்து தொழுதனர். நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதவர்களில் ஒரு மனிதர் அங்கிருந்து புறப்பட்டு வேறு ஒரு பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்களைத் தாண்டிச் செல்லும் போது (அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது கொண்டிருந்ததைப் பார்த்த அவர்),

‘நான் இறைவன் மீது சாட்சியாக மக்காவை முன்னோக்கி நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுது விட்டு வருகிறேன்’ என்று சொன்னார். அவர்கள் (தொழுகையில்) அப்போதிருந்த நிலையில் இருந்தவாறே கஃபா ஆலயத்தை நோக்கி திரும்பிக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது வந்தது யூதர்களுக்கும் ஏனைய வேதக்காரர் (களான கிருஸ்தவர்) களுக்கும் மகிழ்ச்சியானதாகவே இருந்து வந்தது.

(தொழுகையில்) தனது முகத்தை நபி (ஸல்) அவர்கள் கஃபாவை நோக்கித் திரும்பிக் கொள்ள ஆரம்பித்ததும் அவர்கள் அதை வெறுக்க ஆரம்பித்து விட்டனர்’ என பராவு (ரலி) அறிவிக்கிறார்கள்.

வேறொரு அறிவிப்பில், தொழுகையில் முன்னோக்கித் தொழும் திசையான கிப்லா மாற்றப்படுவதற்கு முன்னர் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுத காலத்திலேயே சிலர் இறந்து விட்டனர். சிலர் கொல்லப்பட்டு விட்டனர். நாங்கள் அவர்களைப் பற்றி என்ன கூறுவது? என்று அறியாதவர்களாக இருந்தோம்.

அப்போது தான்,

‘(நீங்கள் பைத்துல் முகத்தலை நோக்கித் தொழுத) உங்கள் ஈமானை அல்லாஹ் (நன்மை ஏதுமின்றி) வீணாக்கி விட மாட்டான்’ (2:143) என்ற திருக்குர்ஆன் வசனத்தை இறக்கினான்.

(நூல்: புகாரி 40)

31:13 இணை வைக்காதவர்களே நேர்வழி பெற்றவர்கள்

இணை வைக்காதவர்களே நேர்வழி பெற்றவர்கள்

 إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ

‘நிச்சயமாக (எனக்கு) எதையாவது இணையாக்குவது தான் மிகப் பெரும் அக்கிரமமாகும்’ (31:13)

விளக்கம்: இந்த வசனம் எப்போது இறக்கப்பட்டது என்ற விபரத்தை அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அவர்கள் விளக்குகிறார்கள்.

32 حدثنا أبو الْوَلِيدِ قال حدثنا شُعْبَةُ ح قال وحدثني بِشْرُ قال حدثنا محمد عن شُعْبَةَ عن سُلَيْمَانَ عن إبراهيم عن عَلْقَمَةَ عن عبد اللَّهِ قال لَمَّا نَزَلَتْ ( الَّذِينَ آمَنُوا ولم يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ ) قال أَصْحَابُ رسول اللَّهِ (ص) أَيُّنَا لم يَظْلِمْ فَأَنْزَلَ الله ( إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ )

‘எவர்கள் தமது ஈமானில் அக்கிரமத்தைக் கலக்காத நிலையில் ஈமான் கொண்டவர்களாக இருக்கின்றனரோ அவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு, மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களுமாவர்’ (அல்குர்ஆன் 6:83)

என்ற இறைவசனம் இறங்கிய போது, நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், ‘(அல்லாஹ்வின் தூதரே!) எங்களில் யார் தான் அக்கிரமம் (பாவம்) புரியாதவர்களாக இருக்கிறோம்?’ எனக் கேட்டனர்.

அப்போது தான், ‘நிச்சயமாக (எனக்கு) எதையாவது இணையாக்குவது தான் மிகப் பெரும் அக்கிரமமாகும்’ (31:13) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான் என அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள்.

(நூல்: புகாரி 32)

96:1 நபிகளாருக்கு வந்த முதல் வஹீ

96:1 நபிகளாருக்கு வந்த முதல் வஹீ

 اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الذي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ من عَلَقٍ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ

‘படைத்தானே அந்த உமதிறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக! அவன் தான் மனிதனை ‘அலக்’கிலிருந்து படைத்தான். ஓதுவீராக, உமதிறைவன் கண்ணியம் மிக்கவன்’ (அல்குர்ஆன் 96:1-3)

விளக்கம்: முதன் முதலில் வஹீ வந்த நிகழ்ச்சியை நபி (ஸல்) அவர்கள் கீழ் கண்டவாறு விளக்குகிறார்கள்.

3 حدثنا يحيى بن بُكَيْرٍ قال حدثنا اللَّيْثُ عن عُقَيْلٍ عن بن شِهَابٍ عن عُرْوَةَ بن الزُّبَيْرِ عن عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أنها قالت أَوَّلُ ما بُدِئَ بِهِ رسول اللَّهِ (ص) من الْوَحْيِ الرُّؤْيَا الصَّالِحَةُ في النَّوْمِ فَكَانَ لَا يَرَى رُؤْيَا إلا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ ثُمَّ حُبِّبَ إليه الْخَلَاءُ وكان يَخْلُو بِغَارِ حِرَاءٍ فَيَتَحَنَّثُ فيه وهو التَّعَبُّدُ اللَّيَالِيَ ذَوَاتِ الْعَدَدِ قبل أَنْ يَنْزِعَ إلى أَهْلِهِ وَيَتَزَوَّدُ لِذَلِكَ ثُمَّ يَرْجِعُ إلى خَدِيجَةَ فَيَتَزَوَّدُ لِمِثْلِهَا حتى جَاءَهُ الْحَقُّ وهو في غَارِ حِرَاءٍ فَجَاءَهُ الْمَلَكُ فقال اقْرَأْ قال ما أنا بِقَارِئٍ قال فَأَخَذَنِي فَغَطَّنِي حتى بَلَغَ مِنِّي الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي فقال اقْرَأْ قلت ما أنا بِقَارِئٍ فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيَةَ حتى بَلَغَ مِنِّي الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي فقال اقْرَأْ فقلت ما أنا بِقَارِئٍ فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّالِثَةَ ثُمَّ أَرْسَلَنِي فقال ( اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الذي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ من عَلَقٍ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ )

(நபி (ஸல்)) அவர்கள் ஹிரா மலைக்குகையில் இருக்கும் நிலையில் (ஒரு நாள்) திடீரென்று ஒரு வானவர் அவர்களிடம் வந்து, ‘ஓதுவீராக!’ என்றார். அதற்கவர்கள், ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே’ என்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

உடனே அவர் என்னைப் பிடித்து எனக்கு மூச்சுத் திணறுமாறு என்னை இறுக்கியணைத்தார். (என் சிரமத்தை அவர் உணர்ந்ததும்) என்னை (அணைப்பதை) விட்டுவிட்டு மீண்டும் ‘ஓதுவீராக!’ என்றார். (அப்போதும்) ‘நான் ஓதத்தெரிந்தவனில்லையே’ என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து மூச்சுத் திணறும் வரை என்னை அணைத்து (என் சிரமத்தை அவர் உணர்ந்ததும்) என்னை (அணைப்பதை) விட்டுவிட்டு மீண்டும் ‘ஓதுவீராக!’ என்றார். (அப்போதும்) ‘நான் ஓதத்தெரிந்தவனில்லையே’ என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் என்னை அணைத்துப் பின்னர் விட்டுவிட்டு,

‘படைத்தானே அந்த உமதிறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக! அவன் தான் மனிதனை ‘அலக்’கிலிருந்து படைத்தான். ஓதுவீராக, உமதிறைவன் கண்ணியம் மிக்கவன்’ என்று ஓதினார்.

(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 3 ஹதீஸின் ஒரு பகுதி)

75:16 நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்

75:16 நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்
 

لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ  إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ   فإذا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ  ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ

 
‘அதனை அவசரப்பட்டு மனனம் செய்து கொள்ள வேண்டுமென்பதற்காக நீங்கள் உங்கள் நாவை அசைக்க வேண்டாம்! ஏனெனில் அதனை ஒன்று சேர்ப்பதும், ஓத வைப்பதும் எம்மீது கடமையாகும். எனவே நாம் அதனை ஓதும் போது அதன் ஓதுதலையே நீர் கவனம் செலுத்துவீராக! பின்னர் (உம்மூலம்) அதற்கு விளக்கம் செய்வது எம் மீது கடமையாகும், பின்னர் அதனை நீர் (பிறருக்கு) ஓதிக் காட்டும் படிச் செயவதும் எம் மீது கடமையாகும்’ (75: 16-19)
 
விளக்கம்: இந்த வசனங்களுக்கான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கீழ்கண்டவாறு விளக்குகிறார்கள்.
   

5 حدثنا مُوسَى بن إِسْمَاعِيلَ قال حدثنا أبو عَوَانَةَ قال حدثنا مُوسَى بن أبي عَائِشَةَ قال حدثنا سَعِيدُ بن جُبَيْرٍ عن بن عَبَّاسٍ في قَوْلِهِ تَعَالَى ( لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ ) قال كان رسول اللَّهِ (ص) يُعَالِجُ من التَّنْزِيلِ شِدَّةً وكان مِمَّا يُحَرِّكُ شَفَتَيْهِ فقال بن عَبَّاسٍ فَأَنَا أُحَرِّكُهُمَا لَكُمْ كما كان رسول اللَّهِ (ص) يُحَرِّكُهُمَا وقال سَعِيدٌ أنا أُحَرِّكُهُمَا كما رأيت بن عَبَّاسٍ يُحَرِّكُهُمَا فَحَرَّكَ شَفَتَيْهِ فَأَنْزَلَ الله تَعَالَى ( لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ ) قال جَمْعُهُ له في صَدْرِكَ وَتَقْرَأَهُ ( فإذا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ) قال فَاسْتَمِعْ له وَأَنْصِتْ ( ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ ) ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ فَكَانَ رسول اللَّهِ (ص) بَعْدَ ذلك إذا أَتَاهُ جِبْرِيلُ اسْتَمَعَ فإذا انْطَلَقَ جِبْرِيلُ قَرَأَهُ النبي (ص) كما قَرَأَهُ

 
(ஜிப்ரீல் (அலை) அவர்கள் தங்களுக்கு திருக்குர்ஆனை ஓதிக் காட்டும் போது) அதை மனதில் பதிக்க வேண்டும் என்பதற்காக அவசரப்பட்டு நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் (75:16) என்ற திருக்குர்ஆன் வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
 
திருக்குர்ஆன் அருளப்பட்டதை நபி (ஸல்) அவர்கள் மிகுந்த சிரமத்துடனேயே சமாளித்து வந்தார்கள் என்பது அவர்களின் உதடுகளை அவர்கள் வேகமாக அசைப்பதன் மூலம் அது புலனாகும் என்று கூறிவிட்டு, ‘நபி (ஸல்) அவர்கள் தங்கள் இரு உதடுகளை அசைத்தது போன்று நான் அசைக்கிறேன்’ என்று சொல்லி தங்கள் இரு உதடுகளையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அசைத்துக் காட்டுவார்களாம்.
 
‘(ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதிக்காட்டும் போது) அதனை அவசரப்பட்டு மனனம் செய்து கொள்ள வேண்டுமென்பதற்காக நீங்கள் உங்கள் நாவை அசைக்க வேண்டாம்! ஏனெனில் அதனை (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும், (உங்கள் நாவு மூலம்) ஓத வைப்பதும் எம்மீது கடமையாகும். (அதாவது உமது நெஞ்சம் உமக்காக அதனை ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ளும், பின்னர் அதனை பிறருக்கு ஓதிக் காட்டுவீர்கள்) எனவே நாம் அதனை ஓதும் போது அதன் ஓதுதலையே நீர் கவனம் செலுத்துவீராக! (அதாவது மவுனமாக இருந்து அதனை செவிதாழ்த்திக் கேட்பீராக!) பின்னர் (உம்மூலம்) அதற்கு விளக்கம் செய்வது எம் மீது கடமையாகும், பின்னர் அதனை நீர் (பிறருக்கு) ஓதிக் காட்டும் படிச் செயவதும் எம் மீது கடமையாகும்’ (75: 16-19)
 
ன்ற திருக்குர்ஆன் வசனங்களை அப்போது தான் அல்லாஹ் அருளினான்.
 
அதன் பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வரும் போது (அவர்களின் ஓதுவதை) செவிதாழ்த்திக் கேட்கும் வழக்கம் உடையவர்களாக ஆனார்கள். ஜிப்ரீல் சென்றதும் அவர்கள் ஓதியது போன்றே நபி (ஸல்) அவர்களும் ஓதலானார்கள்.
 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5.

74:1 மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!

74:1 மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!

 يا أَيُّهَا الْمُدَّثِّرُ  قُمْ فَأَنْذِرْ   وَرَبَّكَ فَكَبِّرْ   وَثِيَابَكَ فَطَهِّرْ   وَالرُّجْزَ فَاهْجُرْ

‘போர்வை போர்த்தியவரே! எழுவீராக! (சென்று மக்களுக்கு) எச்சரிக்கை செய்வீராக!, உமது இறைவனைப் பெருமைப் படுத்துவீராக, உமது ஆடைகளைத் தூய்மைப் படுத்துவீராக, அசுத்தங்களை விட்டு ஒதுங்கி விடுவீராக!’ (அல்குர்ஆன் 74:1-5)

விளக்கம்: இந்த திருக்குர்ஆன் வசனங்கள் இறக்கப்பட்டதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் கீழ் கண்டவாறு விளக்குகிறார்கள்.

4 قال بن شِهَابٍ وَأَخْبَرَنِي أبو سَلَمَةَ بن عبد الرحمن أَنَّ جَابِرَ بن عبد اللَّهِ الْأَنْصَارِيَّ قال وهو يحدث عن فَتْرَةِ الْوَحْيِ فقال في حَدِيثِهِ بَيْنَا أنا أَمْشِي إِذْ سمعت صَوْتًا من السَّمَاءِ فَرَفَعْتُ بَصَرِي فإذا الْمَلَكُ الذي جَاءَنِي بِحِرَاءٍ جَالِسٌ على كُرْسِيٍّ بين السَّمَاءِ وَالْأَرْضِ فَرُعِبْتُ منه فَرَجَعْتُ فقلت زَمِّلُونِي زَمِّلُونِي فَأَنْزَلَ الله تَعَالَى ) يا أَيُّهَا الْمُدَّثِّرُ قُمْ فَأَنْذِرْ ( إلى قَوْلِهِ ) وَالرُّجْزَ فَاهْجُرْ ( فَحَمِيَ الْوَحْيُ وَتَتَابَعَ تَابَعَهُ عبد اللَّهِ بن يُوسُفَ وأبو صَالِحٍ وَتَابَعَهُ هِلَالُ بن رَدَّادٍ عن الزُّهْرِيِّ وقال يُونُسُ وَمَعْمَرٌ بَوَادِرُهُ

‘நான் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என் பார்வையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது (அன்று) ஹிரா மலையில் என்னிடம் வந்த அதே வானவர் வானுக்கும் பூமிக்கும் இடையே ஒரு ஆசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டு திடுக்கிட்டவனாக (வீட்டிற்குத்) திரும்பி வந்து, ‘என்னைப் போர்த்துங்கள்! என்னைப் போர்த்துங்கள்!’ என்றேன். அப்போது தான்,

‘போர்வை போர்த்தியவரே! எழுவீராக! (சென்று மக்களுக்கு) எச்சரிக்கை செய்வீராக!’ (74:1) என்ற திருக்குர்ஆன் வசனங்களை ‘அசுத்தங்களை விட்டு ஒதுங்கி விடுவீராக!’ என்பது வரை இறைவன் அருளினான். அதன் பின் வஹீ அடிக்கடி தொடர்ந்து வரத் தலைப்பட்டு விட்டது’ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரி 4.

54:48 விதியைப் பற்றி வீண் தர்க்கம் செய்யாதீர்

54:48 விதியைப் பற்றி வீண் தர்க்கம் செய்யாதீர்
 

 يوم يُسْحَبُونَ في النَّارِ على وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

 
உடனே அவர்கள் நரகில் முகம் குப்புறத் தள்ளப்படும் போது நரகின் வேதனையை சுவைத்துப் பாருங்கள்! (என்று கூறப்படும்). ஒவ்வொரு பொருளையும் (அதற்கான) முன் திட்டப்படியே நாம் படைத்திருக்கிறோம் (அல்குர்ஆன் 54:48,49)
 
விளக்கம்: இந்த வசனம் விதியைப் பற்றி தர்க்கம் செய்ய வந்த இணை வைப்பவர்களுக்காக இறக்கி வைக்கப்பட்டது.  

 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ عن زِيَادِ بن إسماعيل الْمَخْزُومِيِّ عن مُحَمَّدِ بن عَبَّادِ بن جَعْفَرٍ عن أبي هُرَيْرَةَ قال جاء مُشْرِكُو قُرَيْشٍ يُخَاصِمُونَ النبي  في الْقَدَرِ فَنَزَلَتْ هذه الْآيَةُ  يوم يُسْحَبُونَ في النَّارِ على وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

 
குரைஷ் குல இணை வைப்பாளர்கள் நபி ஸல் அவர்களிடம் விதியைப் பற்றி தர்க்கம் செய்ய வந்தனர். உடனே அவர்கள் நரகில் முகம் குப்புறத் தள்ளப்படும் போது நரகின் வேதனையை சுவைத்துப் பாருங்கள்! (என்று கூறப்படும்). ஒவ்வொரு பொருளையும் (அதற்கான) முன் திட்டப்படியே நாம் படைத்திருக்கிறோம் (அல்குர்ஆன் 54:48,49) என்ற வசனம் இறங்கியது.
 
(குறிப்பு: இந்த ஹதீஸ் இப்னுமாஜா 83, முஸ்லிம் 2656 ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
 
 

 

4:65 நபி(ஸல்) அவர்களுக்கு கட்டுப்படாதவர் முஃமினா?

4:65 நபி(ஸல்) அவர்களுக்கு கட்டுப்படாதவர் முஃமினா? 

    فلا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حتى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا في أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا  

 

‘தங்களுக்குள் ஏற்பட்ட பிணக்குகளில் உம்மை நீதிபதியாக ஏற்று, நீ அளித்த தீர்ப்பு பற்றி தங்கள் உள்ளத்தில் அதிருப்தியும் கொள்ளாது, முழுமையாக கட்டுப்படும் வரை உமது இறைவன் மேல் ஆணையாக அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)

விளக்கம்: இந்த வசனம் இறக்கப்பட்டதற்கான காரணத்தை நபித்தோழர் ஸுபைர் (ரலி) அவர்கள் கீழ்கண்டவாறு விளக்குகிறார்கள்.

 

 حدثنا محمد بن رُمْحِ بن الْمُهَاجِرِ الْمِصْرِيُّ أَنْبَأَنَا اللَّيْثُ بن سَعْدٍ عن بن شِهَابٍ عن عُرْوَةَ بن الزُّبَيْرِ أَنَّ عَبْدَ اللَّهِ بن الزُّبَيْرِ حدثه أَنَّ رَجُلًا من الْأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ عِنْدَ رسول اللَّهِ  في شِرَاجِ الْحَرَّةِ التي يَسْقُونَ بها النَّخْلَ فقال الْأَنْصَارِيُّ سَرِّحْ الْمَاءَ يَمُرُّ فأبي عليه فَاخْتَصَمَا عِنْدَ رسول اللَّهِ  فقال رسول اللَّهِ  اسْقِ يا زُبَيْرُ ثُمَّ أَرْسِلْ الْمَاءَ إلى جَارِكَ فَغَضِبَ الْأَنْصَارِيُّ فقال يا رَسُولَ اللَّهِ أَنْ كان بن عَمَّتِكَ فَتَلَوَّنَ وَجْهُ رسول اللَّهِ  ثُمَّ قال يا زُبَيْرُ اسْقِ ثُمَّ احْبِسْ الْمَاءَ حتى يَرْجِعَ إلى الْجَدْرِ قال فقال الزُّبَيْرُ والله إني لَأَحْسِبُ هذه الْآيَةَ نَزَلَتْ في ذلك  فلا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حتى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا في أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا  

 

பேரீத்த மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக உள்ள ‘ஒரு வாய்க்கால்’ விஷயத்தில் ஸுபைர் (ரலி) மீது அன்சாரிகளைச் சேர்ந்த மனிதர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வழக்குக் கொண்டு வந்தார். (வழக்கு என்னவென்றால்) தண்ணீரை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும், (தடுத்து தன் தோட்டத்திற்குப் பாய்ச்சக் கூடாது) என்பது அன்சாரி மனிதரின் வாதம். (தனது தோட்டத்துக்கு) நீர் பாய்ச்சும் வரை வாய்க்காலை அடைத்துக் கொள்வேன், அதன் பிறகே திறந்து விடுவேன் என்று ஸுபைர் (ரலி) மறுக்கிறார். இதுதான் வழக்கு!)

ஸுபைரே! (உனது தோட்டத்திற்கு) நீ நீர் பாய்ச்சி விட்டு, அதன் பின் உன் பக்கத்துத் தோட்டத்தாருக்காக தண்ணீரை விட்டு விடு!’ என்று நபி (ஸல்) அவர்கள் நீதி வழங்கினார்கள்.

‘அல்லாஹ்வின் தூதரே! உங்களின் மாமி மகன் என்பதனால் தான் (ஸுபைருக்கு சாதகமாக) தீர்ப்பு வழங்குகிறீர்களா?’ என்று அந்த அன்சாரி கேட்டார்.

(இதைக் கேட்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம், நிறம் மாறியது. பின்னர் (ஸுபைரை நோக்கி) ஸுபைரே! உனது தோட்டத்திற்கு நீ நீர் பாய்ச்சிக் கொள். அதன் பின்பும் தண்ணீரை தடுத்துக் கொள்! அது வரப்பு (வழியாக நிரம்பி வழிந்து) செல்லட்டும்! என்று (கோபமாகக்) கூறினார்கள்.

‘தங்களுக்குள் ஏற்பட்ட பிணக்குகளில் உம்மை நீதிபதியாக ஏற்று, நீ அளித்த தீர்ப்பு பற்றி தங்கள் உள்ளத்தில் அதிருப்தியும் கொள்ளாது, முழுமையாக கட்டுப்படும் வரை உமது இறைவன் மேல் ஆணையாக அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள். (4:65) என்ற வசனம் இவருக்காகவே இறங்கியதாக அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கருதுகிறேன் என்று ஸுபைர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி 4585, முஸ்லிம் 2357, அபூதாவூத் 3630, இப்னுமாஜா 15, 2480, திர்மிதி 1374, 5017 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. புகாரி, திர்மிதி ஆகிய நூல்களில் ‘ஹர்ரா’ என்னும் இடத்தில் இருந்த வாய்க்கால் விஷயத்தில்’ என்ற விபரம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.)

 

6:153 நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்)

நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்)

 وَأَنَّ هذا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ولا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عن سَبِيلِهِ  6:153

‘இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம்! (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்!’ (அல்குர்ஆன் 6:153)

நபி (ஸல்) அவர்கள் இந்த வசனத்தை கீழ் காணும் ஹதீஸில் விளக்குகிறார்கள்.

 حدثنا أبو سَعِيدٍ عبد اللَّهِ بن سَعِيدٍ ثنا أبو خَالِدٍ الْأَحْمَرُ قال سمعت مُجَالِدًا يَذْكُرُ عن الشَّعْبِيِّ عن جَابِرِ بن عبد اللَّهِ قال كنا عِنْدَ النبي  فَخَطَّ خَطًّا وَخَطَّ خَطَّيْنِ عن يَمِينِهِ وَخَطَّ خَطَّيْنِ عن يَسَارِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ في الْخَطِّ الْأَوْسَطِ فقال هذا سَبِيلُ اللَّهِ ثُمَّ تَلَا هذه الْآيَةَ  وَأَنَّ هذا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ولا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عن سَبِيلِهِ

‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த போது, ஒரு நேர்கோடு வரைந்தார்கள். பிறகு அந்தக் கோட்டுக்கு வலது புறமாக இருகோடுகளையும், இடது புறமாக இரண்டு கோடுகளையும் வரைந்தார்கள். பின்னர் நடுவில் உள்ள நேர்கோட்டில் தமது கையை வைத்துக் கொண்டு, இது தான் இறைவனின் நேரான வழியாகும் என்று கூறி விட்டு, ‘இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம்! (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்!’ (அல்குர்ஆன் 6:153) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்’ என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இப்னுமாஜா 11, அஹ்மத் 4142,4437,15312, தாரிமி 202, இப்னுஹிப்பான் 6,7 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

1:1 சூரா அல்பாத்திஹா விளக்கவுரை

சூரா அல்பாத்திஹா

இது திருக்குர்ஆனின் முதலாவது அத்தியாயமாகும். இந்த அத்தியாயத்தை விளங்கிக் கொள்ள ஏராளமான ஹதீஸ்கள் இருந்தாலும் அவற்றிலிருந்து ஒரு ஹதீஸை இங்கு காண்போம்.

‘தொழுகையில் ஓதுவதை எனக்கும் என் அடியானுக்கும் இடையில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்பவை அவனுக்கு உண்டு. அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அகில உலகங்களையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று ஒருவன் கூறும் போது, ‘என்னை என் அடியான் (புகழ வேண்டிய விதத்தில்) புகழ்ந்து விட்டான்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவன் அர்ரஹ்மா னிர்ரஹீம் (அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்) என்று கூறும் போது, ‘(என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில்) என் அடியான் பாராட்டி விட்டான்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

‘மாலிக்கி யவ்மித்தீன்’ (நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி) என்று கூறும் போது, ‘என்னைக் (கௌரவப் படுத்த வேண்டிய விதத்தில்) கௌரவப் படுத்தி விட்டான்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

‘இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன்’ (உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம்) என்று கூறும் போது, ‘இது தான் எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

‘இஹ்தி னஸ்ஸிராத்தல் முஸ்தகீம்’ (எங்களுக்கு நேர் வழியைக் காட்டுவாயாக!), ‘ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம்’ (எவருக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழியைக் காட்டு), ‘கைரில் மஃலூபி அலைஹிம் வலல்லால்லீன்’ (வழிகெட்டவர்கள், உன்னால் கோபிக்கப்பட்டவர்களின் வழியை அல்ல!) என்று கூறும் போது’ என் அடியானின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம், நஸயீ, அஹ்மத், திர்மிதி, அபூதவூது)