Tag Archives: இப்னுமாஜா

இப்னுமாஜா பக்கம் – 54

இப்னுமாஜா பக்கம் – 54

பக்கம் – 54 (ஹதீஸ்கள் 531 முதல் 540 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

79 بَاب الْأَرْضُ يُطَهِّرُ بَعْضُهَا بَعْضًا  

531 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا مَالِكُ بن أَنَسٍ ثنا محمد بن عُمَارَةَ بن عَمْرِو بن حَزْمٍ عن مُحَمَّدِ بن إبراهيم بن الْحَارِثِ التَّيْمِيِّ عن أُمِّ وَلَدٍ لِإِبْرَاهِيمَ بن عبد الرحمن بن عَوْفٍ أنها سَأَلَتْ أُمَّ سَلَمَةَ زَوْجَ النبي (ص) قالت إني امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي فَأَمْشِي في الْمَكَانِ الْقَذِرِ فقالت قال رسول اللَّهِ (ص) يُطَهِّرُهُ ما بَعْدَهُ

பாடம் 79. பூமியும் சுத்தப்படுத்தக் கூடியதாகும்

ஹதீஸ் எண்: 531

நான் முந்தானையை நீளமாக விட்டுக் கொண்டவளாக இருக்கிறேன். அசுத்தமான இடங்களைக் கடந்து வருகின்றேன். (அந்த அசுத்தங்கள் ஆடையில் படுவதால் என்ன செய்வது?) என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அந்த அசுத்தமான இடத்திற்கு அடுத்து வரும் தூய்மையான இடம் அதைத் தூய்மைப்படுத்தும்’ என்றார்கள் என அன்னை உம்முஸலமா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளராக அப்துர்ரஹ்மான் இப்னு அவ்பு (ரலி) அவர்களின் அடிமைப் பெண் என்பவர் இடம் பெறுகிறார். ஆனால் அவர் யாரென்று அறிப்படாதவர் என்பதால் இது பலவீனமானதாகும். ஆனால் 533 வது ஹதீஸில் இந்தக் கருத்து இடம் பெறுவதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கின்றது.)

532 حدثنا أبو كُرَيْبٍ ثنا إِبْرَاهِيمُ بن إسماعيل الْيَشْكُرِيُّ عن بن أبي حَبِيبَةَ عن دَاوُدَ بن الْحُصَيْنِ عن أبي سُفْيَانَ عن أبي هُرَيْرَةَ قال قِيلَ يا رَسُولَ اللَّهِ إِنَّا نُرِيدُ الْمَسْجِدَ فَنَطَأُ الطَّرِيقَ النَّجِسَةَ فقال رسول اللَّهِ (ص) الْأَرْضُ يُطَهِّرُ بَعْضُهَا بَعْضًا

ஹதீஸ் எண்: 532

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பள்ளிக்கு வரும் போது அசுத்தான பாதையை மிதித்து விடுகிறோம் என்று கேட்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘பூமியில் சிலபகுதி (யில்பட்ட அசுத்தத்தை) சிலபகுதி சுத்தப்படுத்தி விடும் என்று கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளர் இப்னு அபூஹபீபா என்பவரும் ஐந்தாவது அறிவிப்பாளர் இப்ராஹீம் இப்னு இஸ்மாயில் அல்யெஷ்குரீ என்பவரும் பலவீனமானவர்கள்.)

533 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا شَرِيكٌ عن عبد اللَّهِ بن عِيسَى عن مُوسَى بن عبد اللَّهِ بن يَزِيدَ عن امْرَأَةٍ من بَنِي عبد الْأَشْهَلِ قالت سَأَلْتُ النبي (ص) فقلت إِنَّ بَيْنِي وَبَيْنَ الْمَسْجِدِ طَرِيقًا قَذِرَةً قال فَبَعْدَهَا طَرِيقٌ أَنْظَفُ منها قلت نعم قال فَهَذِهِ بِهَذِهِ

ஹதீஸ் எண்: 533

எனக்கும் பள்ளிக்குமிடையே அசுத்தமான இடம் உள்ளது என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அந்த இடத்தைக் கடந்ததும் சுத்தமான இடம் இல்லையா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அதற்கு இது சரியாகி விட்டது’ என்றார்கள் என பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த பெண்மணி அறிவிக்கிறார்.

(குறிப்பு: இது அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது. நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இந்தப் பெண்மணியின் பெயர் தெரியாமலிருப்பது இந்த ஹதீஸின் தரத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. நபித்தோழர் அல்லாத மற்றவர்களுக்கே இந்த அளவுகோல் கவனிக்கப்பட வேண்டும்.)    

80 بَاب مُصَافَحَةِ الْجُنُبِ  

534 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا إسماعيل بن عُلَيَّةَ عن حُمَيْدٍ عن بَكْرِ بن عبد اللَّهِ عن أبي رَافِعٍ عن أبي هُرَيْرَةَ أَنَّهُ لَقِيَهُ النبي (ص) في طَرِيقٍ من طُرُقِ الْمَدِينَةِ وهو جُنُبٌ فَانْسَلَّ فَفَقَدَهُ النبي (ص) فلما جاء قال أَيْنَ كُنْتَ يا أَبَا هُرَيْرَةَ قال يا رَسُولَ اللَّهِ لَقِيتَنِي وأنا جُنُبٌ فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ حتى أَغْتَسِلَ فقال رسول اللَّهِ (ص) الْمُؤْمِنُ لَا يَنْجُسُ

பாடம் 80. குளிப்புக் கடமையானவருடன் கைலாகு கொடுத்தல்

ஹதீஸ் எண்: 534

மதீனாவின் ஒரு வீதியில் நான் குளிப்புக் கடமையானவனாக உள்ள நிலையில் என்னை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தனர். நான் நழுவி விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைக் காணாமல் தேடிய போது அவர்களிடம் வந்தேன். ‘அபூஹுரைராவே! எங்கே போய்விட்டீர்?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! நான் குளிப்புக் கடமையானவனாக உள்ள நிலையில் நீங்கள் என்னை சந்தித்தீர்கள். குளிக்காமல் உங்களுடன் சேர்ந்து அமர்வதை நான் விரும்ப வில்லை என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘மூமின் அசுத்தமாக மாட்டார்’ என்று விடையளித்தனர் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத், ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

535 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ح وحدثنا إسحاق بن مَنْصُورٍ أَنْبَأَنَا يحيى بن سَعِيدٍ جميعا عن مِسْعَرٍ عن وَاصِلٍ الْأَحْدَبِ عن أبي وَائِلٍ عن حُذَيْفَةَ قال خَرَجَ النبي (ص) فَلَقِيَنِي وأنا جُنُبٌ فَحِدْتُ عنه فَاغْتَسَلْتُ ثُمَّ جِئْتُ فقال مالك قلت كنت جُنُبًا قال رسول اللَّهِ (ص) إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ

ஹதீஸ் எண்: 535

நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்த போது என்னைக் குளிப்புக் கடமையான நிலையில் சந்தித்தார்கள். அவர்களை விட்டும் வேறு பாதையில் சென்று குளித்து விட்டு பிறகு வந்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்ன விஷயம்’ என்றனர். ‘நான் குளிப்புக் கடமையானவனாக இருந்தேன்’ என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘முஸ்லிம் அசுத்தமாவது இல்லை’ என்று கூறினார்கள் என ஹுதைபா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அபூதாவூத், நஸயி, அஹ்மத், பைஹகீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

81 بَاب الْمَنِيِّ يُصِيبُ الثَّوْبَ  

536 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عَبْدَةُ بن سُلَيْمَانَ عن عَمْرِو بن مَيْمُونٍ قال سَأَلْتُ سُلَيْمَانَ بن يَسَارٍ عن الثَّوْبِ يُصِيبُهُ الْمَنِيُّ أَنَغْسِلُهُ أو نَغْسِلُ الثَّوْبَ كُلَّهُ قال سُلَيْمَانُ قالت عَائِشَةُ كان النبي (ص) يُصِيبُ ثَوْبَهُ فَيَغْسِلُهُ من ثَوْبِهِ ثُمَّ يَخْرُجُ في ثَوْبِهِ إلى الصَّلَاةِ وأنا أَرَى أَثَرَ الْغَسْلِ فيه

பாடம் 81. ஆடையில் விந்து பட்டிருந்தால்…?

ஹதீஸ் எண்: 536

ஆடையில் விந்து பட்டுவிடும் போது அந்த இடத்தை மட்டும் கழுவ வேண்டுமா? அல்லது முழு ஆடையையும் கழுவ வேண்டுமா? என்று சுலைமான் இப்னு யஸார் அவர்களிடம் கேட்டேன். அதற்கு சுலைமான் அவர்கள் ‘நபி (ஸல்) அவர்களின் ஆடையில் விந்து பட்டுவிடும். அந்த இடத்தை (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் கழுவி விட்டு அதே ஆடையுடன் தொழுகைக்கு கிளம்புவார்கள். கழுவிய ஈரத்தை அவர்களின் ஆடையில் நான் காண்பேன்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக பதிலளித்தார்கள். இதை அம்ரு இப்னு மைமூன் அறிவிக்கிறார்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

82 بَاب في فَرْكِ الْمَنِيِّ من الثَّوْبِ  

537 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو مُعَاوِيَةَ ح وحدثنا محمد بن طَرِيفٍ ثنا عَبْدَةُ بن سُلَيْمَانَ جميعا عن الْأَعْمَشِ عن إبراهيم عن هَمَّامِ بن الحرث عن عَائِشَةَ قالت رُبَّمَا فَرَكْتُهُ من ثَوْبِ رسول اللَّهِ (ص) بِيَدِي

பாடம் 82. ஆடையில் பட்ட விந்தை சுரண்டி விடதல்

ஹதீஸ் எண்: 537

‘நபி (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட விந்தை சில சமயங்களில் என் கையால் நான் சுரண்டி விடுவேன்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)

538 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو مُعَاوِيَةَ عن الْأَعْمَشِ عن إبراهيم عن هَمَّامِ بن الْحَارِثِ قال نَزَلَ بِعَائِشَةَ ضَيْفٌ فَأَمَرَتْ له بِمِلْحَفَةٍ لها صَفْرَاءَ فَاحْتَلَمَ فيها فاستحيى أَنْ يُرْسِلَ بها وَفِيهَا أَثَرُ الِاحْتِلَامِ فَغَمَسَهَا في الْمَاءِ ثُمَّ أَرْسَلَ بها فقالت عَائِشَةُ لِمَ أَفْسَدَ عَلَيْنَا ثَوْبَنَا إنما كان يَكْفِيهِ أَنْ يَفْرُكَهُ بِإِصْبَعِهِ رُبَّمَا فَرَكْتُهُ من ثَوْبِ رسول اللَّهِ (ص) بِإِصْبَعِي

ஹதீஸ் எண்: 538

ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு விருந்தாளி வந்து தங்கினார். மஞ்சள் நிறமுடைய ஒரு ஆடையை அவருக்குக் கொடுக்குமாறு ஆயிஷா (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அந்த ஆடையை விரித்து அதில் அவர் உறங்கிய போது) அவர் ஸ்கலிதமாகி விட்டார். ஸ்கலிதம் ஏற்பட்டதன் சுவடு அந்த ஆடையில் தென்பட்டதால் அதை ஆயிஷா (ரலி) அவர்களிடம் திரும்பிக் கொடுக்க அவர் வெட்கப்பட்டார். எனவே அந்த ஆடையைத் தண்ணீரில் நனைத்து (கழுவி) பிறகு கொடுத்தனுப்பினார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் ‘எங்கள் ஆடையை ஏன் அவர் பாழாக்கி விட்டார். தம் விரலால் அதை அவர் சுரண்டிவிடுவது அவருக்குப் போதுமே! நபி (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து விந்து பட்ட இடத்தை என் விரலால் நான் சுரண்டி விட்டிருக்கிறேன் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். இதை ஹம்மாம் இப்னுல் ஹாரிஸ் என்பார் அறிவிக்கிறார்.

(குறிப்பு: முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

539 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا هُشَيْمٌ عن مُغِيرَةَ عن إبراهيم عن الْأَسْوَدِ عن عَائِشَةَ قالت لقد رَأَيْتُنِي أَجِدُهُ في ثَوْبِ رسول اللَّهِ (ص) فَأَحُتُّهُ عنه

ஹதீஸ் எண்: 539

இங்கே 537 வது ஹதீஸின் கருத்தே இடம் பெறுகிறது.

83 بَاب الصَّلَاةِ في الثَّوْبِ الذي يُجَامِعُ فيه  

540 حدثنا محمد بن رُمْحٍ أنا اللَّيْثُ بن سَعْدٍ عن يَزِيدَ بن أبي حَبِيبٍ عن سُوَيْدِ بن قَيْسٍ عن مُعَاوِيَةَ بن حُدَيْجٍ عن مُعَاوِيَةَ بن أبي سُفْيَانَ أَنَّهُ سَأَلَ أُخْتَهُ أُمَّ حَبِيبَةَ زَوْجَ النبي (ص) هل كان رسول اللَّهِ (ص) يصلى في الثَّوْبِ الذي يُجَامِعُ فيه قالت نعم إذا لم يَكُنْ فيه أَذًى

ஹதீஸ் எண்: 540

‘நபி (ஸல்) அவர்கள் உடலுறவு கொள்ளும் போது அணிந்திருந்த ஆடையுடனேயே தொழுததுண்டா?’ என்று அவர்களின் மனைவியும் தனது சகோதரியுமான உம்முஹபீபா (ரலி) அவர்களிடம் முஆவியா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் அந்த ஆடையில் அசுத்தம் ஏதும் பட்டிருக்கா விட்டால் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள், என்று முஆவியா இப்னு ஹுதைஜ் என்பார் அறிவிக்கிறார்.

(குறிப்பு: அபூதாவூத், நஸயீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
 

இப்னுமாஜா பக்கம் – 53

இப்னுமாஜா பக்கம் – 53

பக்கம் – 53 (ஹதீஸ்கள் 521 முதல் 530 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

521 حدثنا مَحْمُودُ بن خَالِدٍ وَالْعَبَّاسُ بن الْوَلِيدِ الدِّمَشْقِيَّانِ قالا ثنا مَرْوَانُ بن مُحَمَّدٍ ثنا رِشْدِينُ أَنْبَأَنَا مُعَاوِيَةُ بن صَالِحٍ عن رَاشِدِ بن سَعْدٍ عن أبي أُمَامَةَ الْبَاهِلِيِّ قال قال رسول اللَّهِ (ص) إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ إلا ما غَلَبَ على رِيحِهِ وَطَعْمِهِ وَلَوْنِهِ

ஹதீஸ் எண்: 521

வாடை, சுவை, நிறம் மாறிவிடும் போது தவிர தண்ணீரை எப்பொருளும் அசுத்தப்படுத்தாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸின் நான்காவது அறிவிப்பாளராக ரிஷ்தீன் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்பதால் இந்த ஹதீஸ் ஏற்கத்தக்கதல்ல.)

77 بَاب ما جاء في بَوْلِ الصَّبِيِّ الذي لم يُطْعَمْ  

522 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو الْأَحْوَصِ عن سِمَاكِ بن حَرْبٍ عن قَابُوسَ بن أبي الْمُخَارِقِ عن لُبَابَةَ بِنْتِ الحرث قالت بَالَ الْحُسَيْنُ بن عَلِيٍّ في حِجْرِ النبي (ص) فقلت يا رَسُولَ اللَّهِ أَعْطِنِي ثَوْبَكَ وَالْبَسْ ثَوْبًا غَيْرَهُ فقال إنما يُنْضَحُ من بَوْلِ الذَّكَرِ وَيُغْسَلُ من بَوْلِ الْأُنْثَى

பாடம் 77. உணவு உட்கொள்ளாத குழந்தைகளின் சிறுநீர் பற்றியது

ஹதீஸ் எண்: 522

நபி (ஸல்) அவர்களின் மடி மீது (அவர்களின் பேரர்) அலி (ரலி) அவர்களின் மகன் ஹுஸைன் (ரலி) சிறுநீர் கழித்து விட்டார். ‘அல்லாஹ்வின் தூதரே! உங்களின் இந்த ஆடையை என்னிடம் கொடுத்துவிட்டு வேறு ஆடையை அணிந்து கொள்ளுங்கள்’ என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘பெண் குழந்தையின் சிறுநீர் (பட்டால்) கழுவப்பட வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீர் (பட்டால் பட்ட இடத்தில்) தண்ணீர் தெளித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று விடையளித்தார்கள் என்று லுபாபா பின்துல் ஹாரிஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத், ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

523 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ ثنا هِشَامُ بن عُرْوَةَ عن أبيه عن عَائِشَةَ قالت أُتِيَ النبي (ص) بِصَبِيٍّ فَبَالَ عليه فَأَتْبَعَهُ الْمَاءَ ولم يَغْسِلْهُ

ஹதீஸ் எண்: 523

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டான். நபி (ஸல்) அவர்கள் மீது அவன் சிறுநீர் கழித்தான். நபி (ஸல்) அவர்கள் அதைக் கழுவாமல் அதன் மீது தண்ணீர் தெளித்துக் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.    

524 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَمُحَمَّدُ بن الصَّبَّاحِ قالا ثنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن الزُّهْرِيِّ عن عُبَيْدِ اللَّهِ بن عبد اللَّهِ عن أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ قالت دَخَلْتُ بِابْنٍ لي على رسول اللَّهِ (ص) لم يَأْكُلْ الطَّعَامَ فَبَالَ عليه فَدَعَا بِمَاءٍ فَرَشَّ عليه

ஹதீஸ் எண்: 524

‘உணவு உண்ணாத என் மகனை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அவர்கள் மீது அவன் சிறுநீர் கழித்து விட்டான். நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் செய்து அவ்விடத்தில் தெளித்துக் கொண்டார்கள்’ என்று உம்முகைஸ் பின்து மிஹ்ஸன் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, தாரிமீ, திர்மிதி, அஹ்மத், பைஹகீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

525 حدثنا حَوْثَرَةُ بن مُحَمَّدٍ وَمُحَمَّدُ بن سَعِيدِ بن يَزِيدَ بن إبراهيم قالا ثنا مُعَاذُ بن هِشَامٍ أَنْبَأَنَا أبي عن قَتَادَةَ عن أبي حَرْبِ بن أبي الْأَسْوَدِ الدِّيْلِيِّ عن أبيه عن عَلِيٍّ أَنَّ النبي (ص) قال في بَوْلِ الرَّضِيعِ يُنْضَحُ بَوْلُ الْغُلَامِ وَيُغْسَلُ بَوْلُ الْجَارِيَةِ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ حدثنا أَحْمَدُ بن مُوسَى بن مَعْقِلٍ ثنا أبو الْيَمَانِ الْمِصْرِيُّ قال سَأَلْتُ الشَّافِعِيَّ عن حديث النبي (ص) يُرَشُّ من بَوْلِ الْغُلَامِ وَيُغْسَلُ من بَوْلِ الْجَارِيَةِ وَالْمَاءَانِ جميعا وَاحِدٌ قال لِأَنَّ بَوْلَ الْغُلَامِ من الْمَاءِ وَالطِّينِ وَبَوْلَ الْجَارِيَةِ من اللَّحْمِ وَالدَّمِ ثُمَّ قال لي فَهِمْتَ أو قال لَقِنْتَ قال قلت لَا قال إِنَّ اللَّهَ تَعَالَى لَمَّا خَلَقَ آدَمَ خُلِقَتْ حَوَّاءُ من ضِلْعِهِ الْقَصِيرِ فَصَارَ بَوْلُ الْغُلَامِ من الْمَاءِ وَالطِّينِ وَصَارَ بَوْلُ الْجَارِيَةِ من اللَّحْمِ وَالدَّمِ قال قال لي فَهِمْتَ قلت نعم قال لي نَفَعَكَ الله بِهِ

ஹதீஸ் எண்: 525

குழந்தையின் சிறுநீர் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது ‘ஆண் குழந்தையின் சிறுநீர் (பட்டால்) கழுவப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டதாக அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

மேற்கூறிய ஹதீஸ் பற்றி நான் ஷாபி அவர்களிடம் இரண்டுமே (அசுத்தமான) தண்ணீர் தானே! ஏனிந்த வித்தியாசம்? என்று கேட்டேன். அதற்கு ஷாபி அவர்கள் ஆண் குழந்தையின் சிறுநீர் தண்ணீரிலிருந்தும் களிமண்ணிலிருந்தும் உருவானது. பெண் குழந்தையின் சிறுநீர் இரத்தம் சதையிலிருந்து உருவானது என்று கூறிவிட்டு புரிகிறதா? எனக் கேட்டார்கள். நான் புரியவில்லை என்றேன். அல்லாஹ் ஆதமைப் படைத்து அவரது சிறிய விலா எலும்பிலிருந்து ஹவ்வா படைக்கப்பட்டார். எனவே (ஆண்கள் மண் தண்ணீர் ஆகியவற்றிலிருந்து நேரடியாகப் படைக்கப்பட்டதால்) ஆண் குழந்தையின் சிறுநீர் தண்ணீராலும் களிமண்ணாலும் ஆனது. பெண் குழந்தையின் சிறுநீர் சதையிலிருந்தும் இரத்தத்திலிருந்தும் ஆனது என்று விளக்கம் தந்துவிட்டு புரிகிறதா என்றார்கள். நான் ஆம் என்றேன். இதன் மூலம் இறைவன் உனக்குப் பயனளிப்பானாக என்றார்கள் என்று அபுல்யமான் அல் மிஸ்ரீ என்பார் அறிவிக்கின்றார்.

(குறிப்பு: இது இமாம் ஷாபி அவர்களின் சொந்தக் கருத்தாகும். இது நபி (ஸல்) அவர்களின் கூற்று அல்ல என்பதை கவனிக்கவும்.)

526 حدثنا عَمْرُو بن عَلِيٍّ وَمُجَاهِدُ بن مُوسَى وَالْعَبَّاسُ بن عبد الْعَظِيمِ قالوا حدثنا عبد الرحمن بن مَهْدِيٍّ ثنا يحيى بن الْوَلِيدِ حدثنا مُحِلُّ بن خَلِيفَةَ أخبرنا أبو السَّمْحِ قال كنت خَادِمَ النبي (ص) فجئ بِالْحَسَنِ أو الْحُسَيْنِ فَبَالَ على صَدْرِهِ فَأَرَادُوا أَنْ يَغْسِلُوهُ فقال رسول اللَّهِ (ص) رُشَّهُ فإنه يُغْسَلُ بَوْلُ الْجَارِيَةِ وَيُرَشُّ من بَوْلِ الْغُلَامِ

ஹதீஸ் எண்: 526

நான் நபி (ஸல்) அவர்களின் ஊழியனாக இருந்தேன். அப்போது ஹஸன் அல்லது ஹுஸைன் கொண்டு வரப்பட்டார். அவர் நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் சிறுநீர் கழித்தார். அங்கிருந்தோர் அதை கழுவிவிட எத்தனித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தெளியுங்கள்! ஏனெனில் பெண் குழந்தையின் சிறுநீர் பட்டால் கழுவப்பட வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் தெளிக்கப்பட வேண்டும் என்று கூறியதாக அபுஸ்ஸம்ஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், நஸயீ, ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

527 حدثنا محمد بن بَشَّارٍ ثنا أبو بَكْرٍ الْحَنَفِيُّ ثنا أُسَامَةُ بن زَيْدٍ عن عَمْرِو بن شُعَيْبٍ عن أُمِّ كُرْزٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال بَوْلُ الْغُلَامِ يُنْضَحُ وَبَوْلُ الْجَارِيَةِ يُغْسَلُ

ஹதீஸ் எண்: 527

ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் தெளிக்கப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு குர்ஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளராகிய அம்ரு இப்னு ஷுஐப் அவர்கள் உம்முகுர்ஸ் (ரலி) அவர்களைச் சந்தித்ததில்லை என்பதால் இது அறிவிப்பாளர் இடையில் விடுபட்ட ஹதீஸாகும். ஆயினும் இக்கருத்தில் வந்துள்ள முந்தைய ஹதீஸ்கள் இதை வலுப்படுத்துகின்றன.)

78 بَاب الأرض يُصِيبُهَا الْبَوْلُ كَيْفَ تُغْسَلُ  

528 حدثنا أَحْمَدُ بن عَبْدَةَ أنا حَمَّادُ بن زَيْدٍ ثنا ثَابِتٌ عن أَنَسٍ أَنَّ أَعْرَابِيًّا بَالَ في الْمَسْجِدِ فَوَثَبَ إليه بَعْضُ الْقَوْمِ فقال رسول اللَّهِ (ص) لَا تُزْرِمُوهُ ثُمَّ دَعَا بِدَلْوٍ من مَاءٍ فَصَبَّ عليه

பாடம் 78. தரையில் பட்ட சிறுநீரை எவ்வாறு சுத்தம் செய்வது?

ஹதீஸ் எண்: 528

ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டார். மக்கள் அவர் மீது பாய முற்பட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அரைகுறையாக சிறுநீர் கழிக்கும் நிலைக்கு அவரைத் தள்ளாதீர்கள்’ என்று கூறிவிட்டு தண்ணீர் வாளியைக் கொண்டு வரச் செய்து அந்த இடத்தில் ஊற்றினார்கள்’ என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இக்கருத்து புகாரி, முஸ்லிம், நஸயீ, தாரிமி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

529 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عَلِيُّ بن مُسْهِرٍ عن مُحَمَّدِ بن عَمْرٍو عن أبي سَلَمَةَ عن أبي هُرَيْرَةَ قال دخل أَعْرَابِيٌّ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ (ص) جَالِسٌ فقال اللهم اغْفِرْ لي وَلِمُحَمَّدٍ ولا تَغْفِرْ لِأَحَدٍ مَعَنَا فَضَحِكَ رسول اللَّهِ (ص) وقال لقد احْتَظَرْتَ وَاسِعًا ثُمَّ وَلَّى حتى إذا كان في نَاحِيَةِ الْمَسْجِدِ فَشَجَ يَبُولُ فقال الْأَعْرَابِيُّ بَعْدَ أَنْ فَقِهَ فَقَامَ إلي بِأَبِي وَأُمِّي فلم يُؤَنِّبْ ولم يَسُبَّ فقال إِنَّ هذا الْمَسْجِدَ لَا يُبَالُ فيه وَإِنَّمَا بُنِيَ لِذِكْرِ اللَّهِ وَلِلصَّلَاةِ ثُمَّ أَمَرَ بِسَجْلٍ من مَاءٍ فَأُفْرِغَ على بَوْلِهِ

ஹதீஸ் எண்: 529

ஒரு கிராமவாசி பள்ளியில் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர் ‘என்னையும் முஹம்மதையும் இறைவா நீ மன்னிப்பாயாக! எங்களுடன் வேறு எவரையும் நீ மன்னிக்காதே’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டு இறைவனின் பரந்த அருளுக்கு தடை போடுகிறீரே என்று கேட்டார்கள். பிறகு அவர் திரும்பி பள்ளியின் ஒரு ஓரம் சென்று அங்கே சிறுநீர் கழித்தார். (தன் தவறை) விளங்கிய பிறகு என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடிந்து கொள்ள வில்லை. ஏசவில்லை. இந்தப் பள்ளிவாசல் இறைவனை நினைவு கூர்வதற்கும், தொழுவதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிறுநீர் கழிக்கப்படாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு தண்ணீர் நிரம்பிய பெரிய வாளியைக் கொண்டு வரச் செய்து அவரது சிறுநீர் மீது கொட்டப்பட்டது என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மதிலும் இடம் பெற்றுள்ளது.)

530 حدثنا محمد بن يحيى ثنا محمد بن عبد اللَّهِ عن عُبَيْدِ اللَّهِ الْهُذَلِيِّ قال محمد بن يحيى وهو عِنْدَنَا بن أبي حُمَيْدٍ أنا أبو الْمَلِيحِ الْهُذَلِيُّ عن وَاثِلَةَ بن الْأَسْقَعِ قال جاء أَعْرَابِيٌّ إلى النبي (ص) فقال اللهم ارْحَمْنِي وَمُحَمَّدًا ولا تُشْرِكْ في رَحْمَتِكَ إِيَّانَا أَحَدًا فقال لقد حَظَرْتَ وَاسِعًا وَيْحَكَ أو وَيْلَكَ قال فَشَجَ يَبُولُ فقال أَصْحَابُ النبي (ص) مَهْ فقال رسول اللَّهِ (ص) دَعُوهُ ثُمَّ دَعَا بِسَجْلٍ من مَاءٍ فَصَبَّ عليه

ஹதீஸ் எண்: 530

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைவா! எனக்கும் முஹம்மதுக்கும் அருள் புரிவாயாக! நீ எங்களுக்கு செய்யும் அருளில் எவரையும் கூட்டாக்கி விடாதே! என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் விசாலமான அருளைச் சுருக்கி விட்டீரே! உனக்குக் கேடு உண்டாகட்டும் என்று கூறினார்கள். பின்னர் கால்களை விரித்து அவர் சிறுநீர் கழிக்கலானார். அப்போது நபித்தோழர்கள் ‘நிறுத்து!’ என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அவரை விட்டுவிடுங்கள்’! என்று கூறி விட்டு ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வரச் செய்து அந்த இடத்தில் ஊற்றினார்கள் என்று வாஸிலா இப்னுல் அஸ்கஃ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் அல்ஹுதலீ என்பவர் அனைவராலும் பலவீனமானவர் என ஒதக்கப்பட்டவராவார். ஆயினும் 529 வது ஹதீஸ் இதே கருத்தைக் கூறுவதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)
 

இப்னுமாஜா பக்கம் – 52

இப்னுமாஜா பக்கம் – 52

பக்கம் – 52 (ஹதீஸ்கள் 511 முதல் 520 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

511 حدثنا إسماعيل بن تَوْبَةَ ثنا زِيَادُ بن عبد اللَّهِ ثنا الْفَضْلُ بن مُبَشِّرٍ قال رأيت جَابِرَ بن عبد اللَّهِ يصلى الصَّلَوَاتِ بِوُضُوءٍ وَاحِدٍ فقلت ما هذا فقال رأيت رَسُولَ اللَّهِ (ص) يَصْنَعُ هذا فَأَنَا أَصْنَعُ كما صَنَعَ رسول اللَّهِ (ص)

ஹதீஸ் எண்: 511

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரு ஒளூவின் மூலம் பல தொழுகைகளைத் தொழக் கண்டேன். ‘ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக் கண்டேன். நபி (ஸல்) அவர்கள் செய்தவாறு நானும் செய்கிறேன்’ என்று ஜாபிர் (ரலி) விடையளித்தார்கள் என்று பழ்லு இப்னு முபஷ்ஷிர் அறிவிக்கிறார்.

73 بَاب الْوُضُوءِ على الطَّهَارَةِ  

512 حدثنا محمد بن يحيى ثنا عبد اللَّهِ بن يَزِيدَ الْمُقْرِئُ ثنا عبد الرحمن بن زِيَادٍ عن أبي غُطَيْفٍ الْهُذَلِيِّ قال سمعت عَبْدَ اللَّهِ بن عُمَرَ بن الْخَطَّابِ في مَجْلِسِهِ في الْمَسْجِدِ فلما حَضَرَتْ الصَّلَاةُ قام فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ عَادَ إلى مَجْلِسِهِ فلما حَضَرَتْ الْعَصْرُ قام فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ عَادَ إلى مَجْلِسِهِ فلما حَضَرَتْ الْمَغْرِبُ قام فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ عَادَ إلى مَجْلِسِهِ فقلت أَصْلَحَكَ الله أَفَرِيضَةٌ أَمْ سُنَّةٌ الْوُضُوءُ عِنْدَ كل صَلَاةٍ قال أَوَ فَطِنْتَ إلى وَإِلَى هذا مِنِّي فقلت نعم فقال لَا لو تَوَضَّأْتُ لِصَلَاةِ الصُّبْحِ لَصَلَّيْتُ بِهِ الصَّلَوَاتِ كُلَّهَا ما لم أُحْدِثْ وَلَكِنِّي سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول من تَوَضَّأَ على كل طُهْرٍ فَلَهُ عَشْرُ حَسَنَاتٍ وَإِنَّمَا رَغِبْتُ في الْحَسَنَاتِ

பாடம் 73. ஒளூ நீங்காத போதே ஒளூ செய்தல்

ஹதீஸ் எண்: 512

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் பள்ளியில் தமது இடத்தில் அமர்ந்திருந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் எழுந்து ஒளூ செய்து தொழுதார்கள். பின்னர் தாம் அமர்ந்த இடத்தில் திரும்பவும் அமர்ந்தார்கள். அஸர் நேரம் நெருங்கியதும் எழுந்து ஒளூ செய்து தொழுதார்கள். பிறகு தமது இடத்திற்குச் சென்று திரும்ப அமர்ந்தார்கள். மஃரிப் நேரம் வந்ததும் எழுந்து ஒளூ செய்து தொழுதார்கள். பின்னர் தமது இருப்பிடம் சென்று அமர்ந்தார்கள். ‘அல்லாஹ் உங்களுக்கு நன்மை புரிவானாக! ஒவ்வொரு தொழுகையின் போதும் ஒளூ செய்வது அவசியமா? நபிவழியா?’ என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நீர் என்னைக் கவனித்துப் பார்த்தீரா? என்னிடமிருந்து இதை விளங்கிக் கொண்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அதற்கு அவர்கள் ‘(கடமையோ நபிவழியோ) அல்ல சுபுஹ் தொழுகைக்கு நான் ஒளூ செய்து விட்டு அந்த ஒளூ நீங்காதவரை அதன் மூலம் பல தொழுகைகளைத் தொழுதிருப்பேன். ஆனால் ‘யார் ஒளூ இருக்கும் போது மீண்டும் ஒளூ செய்கிறாரோ அவருக்குப் பத்து நன்மைகள் உள்ளன’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன். அந்த நன்மைகளுக்கு ஆசைப்பட்டே இவ்வாறு செய்தேன் என விடையளித்தார்கள் என்று அபூகுதைப் அல்ஹுதலீ அறிவிக்கிறார்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய அப்துர் ரஹ்மான் இப்னு ஸியாரத் அல்அப்ரீகி என்பவர் பலவீனமானவர் என்பதால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.)

74 بَاب لَا وُضُوءَ إلا من حَدَثٍ  

513 حدثنا محمد بن الصَّبَّاحِ قال أَنْبَأَنَا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن الزُّهْرِيِّ عن سَعِيدٍ وَعَبَّادُ بن تَمِيمٍ عن عَمِّهِ قال شُكِيَ إلى النبي (ص) الرَّجُلُ يَجِدُ الشَّيْءَ في الصَّلَاةِ فقال لَا حتى يَجِدَ رِيحًا أو يَسْمَعَ صَوْتًا

பாடம் 74. ஒளூ நீங்காமல் ஒளூ அவசியமில்லை

ஹதீஸ் எண்: 513

தொழும் போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வைப் பெறும் ஒரு மனிதர் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாற்றத்தை உணரும் வரை அல்லது அதன் சப்தத்தை கேட்கும் வரை (தொழுகையை முறித்து விட) வேண்டாம் என்று கூறியதாக அப்பாத் இப்னு தமீம் அறிவிக்கிறார்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

514 حدثنا أبو كُرَيْبٍ ثنا الْمُحَارِبِيُّ عن مَعْمَرِ بن رَاشِدٍ عن الزُّهْرِيِّ أَنْبَأَنَا سَعِيدُ بن الْمُسَيَّبِ عن أبي سَعِيدٍ الْخُدْرِيِّ قال سُئِلَ النبي (ص) عن التَّشَبُّهِ في الصَّلَاةِ فقال لَا يَنْصَرِفْ حتى يَسْمَعَ صَوْتًا أو يَجِدَ رِيحًا

ஹதீஸ் எண்: 514

தொழுகையில் ஏற்படும் சந்தேகம் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தை கேட்கும் வரை (தொழுகையை விட்டு) திரும்பிவிட வேண்டாம் என்று கூறினார்கள் என அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான மஃமர் இப்னு ராஷித் என்பவரிடமிருந்து ஐந்தாவது அறிவிப்பாளரான முஹாரிபீ என்பார் எதனையும் செவியுற்றதில்லை, எனவே இது அறிவிப்பாளரிடையே தொடர்பு அற்ற ஹதீஸாகும். ஆயினும் இந்த கருத்தில் நம்பகமான வேறு பல ஹதீஸ்களும் வந்துள்ளதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)

515 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ح وحدثنا محمد بن بَشَّارٍ ثنا محمد بن جَعْفَرٍ وَعَبْدُ الرحمن قالوا ثنا شُعْبَةُ عن سُهَيْلِ بن أبي صَالِحٍ عن أبيه عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) لَا وُضُوءَ إلا من صَوْتٍ أو رِيحٍ

ஹதீஸ் எண்: 515

காற்று அல்லது நாற்றம் வெளிப்படுவதால் தவிர ஒளூ இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: அஹ்மத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

516 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا إسماعيل بن عَيَّاشٍ عن عبد الْعَزِيزِ بن عُبَيْدِ اللَّهِ عن مُحَمَّدِ بن عَمْرِو بن عَطَاءٍ قال رأيت السَّائِبَ بن يَزِيدَ يَشُمُّ ثَوْبَهُ فقلت مِمَّ ذلك قال إني سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول لَا وُضُوءَ إلا من رِيحٍ أو سَمَاعٍ

ஹதீஸ் எண்: 516

ஸாயிப் இப்னுயஸீத் (ரலி) அவர்கள் தமது ஆடையை முகர்ந்து பார்ப்பார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் வாடையோ சப்தமோ வெளிப்பட்டால் தவிர ஒளூ (தேவை) இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்று விடையளித்தார்கள் என்று முஹம்மத் இப்னு அம்ரு இப்னு அதா என்பார் அறிவிக்கிறார்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளரான அப்துல் அஸீஸ் இப்னு உபைதுல்லாஹ் என்பவர் பலவீனமானவர் எனவே இந்த ஹதீஸ் சரியானதன்று.)

75 بَاب مِقْدَارِ الْمَاءِ الذي لَا يُنَجَّسُ  

517 حدثنا أبو بَكْرِ بن خَلَّادٍ الْبَاهِلِيُّ ثنا يَزِيدُ بن هَارُونَ أَنْبَأَنَا محمد بن إسحاق عن مُحَمَّدِ بن جَعْفَرِ بن الزُّبَيْرِ عن عُبَيْدِ اللَّهِ بن عبد اللَّهِ بن عُمَرَ عن أبيه قال سمعت رَسُولَ اللَّهِ (ص) سُئِلَ عن الْمَاءِ يَكُونُ بِالْفَلَاةِ من الأرض وما يَنُوبُهُ من الدَّوَابِّ وَالسِّبَاعِ فقال رسول اللَّهِ (ص) إذا بَلَغَ الْمَاءُ قُلَّتَيْنِ لم يُنَجِّسْهُ شَيْءٌ حدثنا عَمْرُو بن رَافِعٍ ثنا عبد اللَّهِ بن الْمُبَارَكِ عن مُحَمَّدِ بن إسحاق عن مُحَمَّدِ بن جَعْفَرٍ عن عُبَيْدِ اللَّهِ بن عبد اللَّهِ بن عُمَرَ عن أبيه عن النبي (ص) نَحْوَهُ

பாடம் 75. எவ்வளவு தண்ணீர் இருந்தால் அசுத்தமாகாது?

ஹதீஸ் எண்: 517

வெட்ட வெளியில் இருக்கும் தண்ணீர் பற்றியும் அங்கே விலங்குகளும் ஊர்வனவும் வந்து செல்வது பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் இரண்டு குல்லத் களை அடைந்து விட்டால் அது அசுத்தமாவதில்லை என்று கூற நான் செவியுற்றுள்ளேன் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

518 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا حَمَّادُ بن سَلَمَةَ عن عَاصِمِ بن الْمُنْذِرِ عن عُبَيْدِ اللَّهِ بن عبد اللَّهِ بن عُمَرَ عن أبيه قال قال رسول اللَّهِ (ص) إذا كان الْمَاءُ قُلَّتَيْنِ أو ثَلَاثًا لم يُنَجِّسْهُ شَيْءٌ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ حدثنا أبو حَاتِمٍ ثنا أبو الْوَلِيدِ وأبو سَلَمَةَ وبن عَائِشَةَ الْقُرَشِيُّ قالوا حدثنا حَمَّادُ بن سَلَمَةَ فذكر نَحْوَهُ

ஹதீஸ் எண்: 518

தண்ணீர் இரண்டு அல்லது மூன்று குல்லத்களை அடைந்து விட்டால் அதை எப்பொருளும் அசுத்தமாக்கி விடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

76 بَاب الْحِيَاضِ  

519 حدثنا أبو مُصْعَبٍ الْمَدَنِيُّ ثنا عبد الرحمن بن زَيْدِ بن أَسْلَمَ عن أبيه عن عَطَاءِ بن يَسَارٍ عن أبي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ النبي (ص) سُئِلَ عن الْحِيَاضِ التي بين مَكَّةَ وَالْمَدِينَةِ تَرِدُهَا السِّبَاعُ وَالْكِلَابُ وَالْحُمُرُ وَعَنْ الطَّهَارَةِ منها فقال لها ما حَمَلَتْ في بُطُونِهَا وَلَنَا ما غَبَرَ طَهُورٌ

ஹதீஸ் எண்: 519

வனவிலங்குகள், நாய்கள், கழுதைகள் நீரருந்துகின்ற மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையில் அமைந்த நீர்துறைகள் பற்றியும் அவற்றிலிருந்து ஒளூ செய்வது பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவை வயிற்றில் சுமந்து கொண்டது (அதாவது குடித்தது) அவற்றுக்கு. மீதம் வைத்தது நமக்குரியதும் சுத்தம் செய்யத் தக்கதுமாகும் என்று விடையளித்தனர் என அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளராகிய அப்துர்ரஹ்மான் இப்னுஸைத் இப்னு அஸ்லம் என்பார் அனைவராலும் பலவீனமானவர் என்று முடிவு செய்யப்பட்டவர். ஆயினும் இந்தக் கருத்தில் வேறு அறிவிப்பாளர்கள் வழியாக பல ஹதீஸ்கள் வந்துள்ளதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)

520 حدثنا أَحْمَدُ بن سِنَانٍ ثنا يَزِيدُ بن هَارُونَ ثنا شَرِيكٌ عن طَرِيفِ بن شِهَابٍ قال سمعت أَبَا نَضْرَةَ يحدث عن جَابِرِ بن عبد اللَّهِ قال انْتَهَيْنَا إلى غَدِيرٍ فإذا فيه جِيفَةُ حِمَارٍ قال فَكَفَفْنَا عنه حتى انْتَهَى إِلَيْنَا رسول اللَّهِ (ص) فقال إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ فَاسْتَقَيْنَا وَأَرْوَيْنَا وَحَمَلْنَا

ஹதீஸ் எண்: 520

நாங்கள் ஒரு குட்டையை அடைந்தோம். அதில் கழுதையின் பிணம் ஒன்று கிடந்தது. எனவே நபி (ஸல்) அவர்களிடம் சென்று விளக்கம் கேட்கும் வரை அத்தண்ணீரிலிருந்து (பயன்படுத்தாமல்) நாங்கள் விலகிக் கொண்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தண்ணீரை எப்பொருளும் அசுத்தப் படுத்தாது என்று கூறினார்கள். (அதன் பிறகு) நாங்கள் அருந்தினோம். பிறரையும் அருந்தச் செய்தோம். வீட்டிற்கும் எடுத்துச் சென்றோம் என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளராகிய தரீப் இப்னு ஷிஹாப் என்பவர் பலவீனமானவர். ஆயினும் தண்ணீரை எப்பொருளும் அசுத்தப்படுத்தாது என்ற வாசகம் மட்டும் அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, தாரகுத்னீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
 

இப்னுமாஜா பக்கம் – 51

இப்னுமாஜா பக்கம் – 51

பக்கம் – 51 (ஹதீஸ்கள் 501 முதல் 510 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

501 حدثنا إسحاق بن إبراهيم السَّوَّاقُ ثنا الضَّحَّاكُ بن مَخْلَدٍ ثنا زَمْعَةُ بن صَالِحٍ عن بن شِهَابٍ عن أَنَسِ بن مَالِكٍ قال حَلَبَ رسول اللَّهِ (ص) شَاةً وَشَرِبَ من لَبَنِهَا ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَضْمَضَ فَاهُ وقال إِنَّ له دَسَمًا

ஹதீஸ் எண்: 501

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டில் பால் கறந்தார்கள். அதன் பாலை அருந்தினார்கள். பிறகு தண்ணீர் கொண்டு வரச் செய்து வாய் கொப்பளித்து விட்டு ‘இதில் கொழுப்பு உள்ளது’ எனவும் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.

69 بَاب الْوُضُوءِ من الْقُبْلَةِ  

502 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ ثنا الْأَعْمَشُ عن حَبِيبِ بن أبي ثَابِتٍ عن عُرْوَةَ بن الزُّبَيْرِ عن عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قَبَّلَ بَعْضَ نِسَائِهِ ثُمَّ خَرَجَ إلى الصَّلَاةِ ولم يَتَوَضَّأْ قلت ما هِيَ إلا أَنْتِ فَضَحِكَتْ

பாடம் 69. முத்தமிட்டால் ஒளூ நீங்குமா?

ஹதீஸ் எண்: 502

‘நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரில் ஒருவரை முத்தமிட்டு விட்டு ஒளூ செய்யாமலே தொழுகைக்குப் புறப்பட்டார்கள்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய போது, ‘அந்த மனைவி உங்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?’ என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் சிரித்தார்கள் என உர்வா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: உர்வா அவர்களிடம் இதை அறிவிக்கும் ஹபீப் இப்னு அபீஸாபித் என்பார் உர்வாவிடம் எதனையும் செவியுற்றதில்லை, எனவே இந்த ஹதீஸ் முர்ஸல் எனும் வகையைச் சேர்ந்ததாகும்.)

503 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا محمد بن فُضَيْلٍ عن حَجَّاجٍ عن عَمْرِو بن شُعَيْبٍ عن زَيْنَبَ السَّهْمِيَّةِ عن عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) كان يَتَوَضَّأُ ثُمَّ يُقَبِّلُ ويصلى ولا يَتَوَضَّأُ وَرُبَّمَا فَعَلَهُ بِي

ஹதீஸ் எண்: 503

‘நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்து விட்டு முத்தமிடுவார்கள். பிறகு ஒளூ செய்யாமலேயே தொழுவார்கள். சிலசமயம் என்னிடமும் அவ்வாறு நடந்து கொள்வார்கள்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளரான ஸைனப் அல்ஸஹ்மிய்யா என்பவரும் நான்காவது அறிவிப்பாளரான ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத் என்பவரும் பலவீனமானவர்கள்.)

70 بَاب الْوُضُوءِ من الْمَذْيِ  

504 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا هُشَيْمٌ عن يَزِيدَ بن أبي زِيَادٍ عن عبد الرحمن بن أبي لَيْلَى عن عَلِيٍّ قال سُئِلَ رسول اللَّهِ (ص) عن الْمَذْيِ فقال فيه الْوُضُوءُ وفي الْمَنِيِّ الْغُسْلُ

பாடம் 70. ‘மதீ’ வெளிப்படுவது ஒளூவை நீக்கும்

(ஆண்கள் காம உணர்வுக்கு ஆளாகும் போது கசியும் நீர் அரபியில் ‘மதீ’ எனப்படும்)

ஹதீஸ் எண்: 504

‘மதீ’ யைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அதற்கவர்கள் ‘ஒளூ செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்’ என்று விடையளித்ததாக அலீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

505 حدثنا محمد بن بَشَّارٍ ثنا عُثْمَانُ بن عُمَرَ ثنا مَالِكُ بن أَنَسٍ عن سَالِمٍ أبي النَّضْرِ عن سُلَيْمَانَ بن يَسَارٍ عن الْمِقْدَادِ بن الْأَسْوَدِ أَنَّهُ سَأَلَ النبي (ص) عن الرَّجْلِ يَدْنُو من امْرَأَتِهِ فلا يُنْزِلُ قال إذا وَجَدَ أحدكم ذلك فَلْيَنْضَحْ فَرْجَهُ يعنى لِيَغْسِلْهُ وَيَتَوَضَّأْ

ஹதீஸ் எண்: 505

‘ஒரு மனிதர் தன் மனைவியுடன் நெருங்கி, விந்து வெளிப்பட வில்லையானால்…?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ‘இந்த நிலையை ஒருவர் அடைந்தால் மர்ம உறுப்பைக் கழுவிவிட்டு, ஒளூ செய்யட்டும்’ என்று விடையளித்தார்கள் என்ற மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், முஅத்தா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

506 حدثنا أبو كُرَيْبٍ ثنا عبد اللَّهِ بن الْمُبَارَكِ وَعَبْدَةُ بن سُلَيْمَانَ عن مُحَمَّدِ بن إسحاق حدثنا سَعِيدُ بن عُبَيْدِ بن السَّبَّاقِ عن أبيه عن سَهْلِ بن حُنَيْفٍ قال كنت أَلْقَى من الْمَذْيِ شِدَّةً فَأُكْثِرُ منه الِاغْتِسَالَ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ (ص) فقال إنما يُجْزِيكَ من ذلك الْوُضُوءُ قلت يا رَسُولَ اللَّهِ كَيْفَ بِمَا يُصِيبُ ثَوْبِي قال إنما يَكْفِيكَ كَفٌّ من مَاءٍ تَنْضَحُ بِهِ من ثَوْبِكَ حَيْثُ تَرَى أَنَّهُ أَصَابَ

ஹதீஸ் எண்: 506

நான் கடுமையான மதியின் பாதிப்புக்கு ஆளாகி இருந்தேன். இதனால் அடிக்கடி குளித்துக் கொண்டிருந்தேன். இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்ட போது, ‘அதற்கு ஒளூ செய்வதே போதுமாகும்’ என்றார்கள். ‘அப்படியானால் ஆடையில் பட்டு விட்டதை என்ன செய்வது?’ என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘அதுபட்ட இடத்தில் ஒரு கையளவு தண்ணீரை தெளித்துக் கொள்வது உனக்குப் போதுமாகும்’ என்று விடையளித்தார்கள் என ஸஹ்ல் இப்னு ஹுனைப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

507 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا محمد بن بِشْرٍ ثنا مِسْعَرٌ عن مُصْعَبِ بن شَيْبَةَ عن أبي حَبِيبِ بن يَعْلَى بن مُنْيَةَ عن بن عَبَّاسٍ أَنَّهُ أتى أُبَيَّ بن كَعْبٍ وَمَعَهُ عُمَرُ فَخَرَجَ عَلَيْهِمَا فقال إني وَجَدْتُ مَذْيًا فَغَسَلْتُ ذكرى وَتَوَضَّأْتُ فقال عُمَرُ أَوَ يُجْزِئُ ذلك قال نعم قال أَسَمِعْتَهُ من رسول اللَّهِ (ص) قال نعم

ஹதீஸ் எண்: 507

உபை இப்னு கஃபு (ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சென்றார்கள். அவருடன் உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவ்விருவரிடமும் சென்று, ‘என்னிடமிருந்து மதி வெளிப்பட்டது, என் உறுப்பைக் கழுவி விட்டு ஒளூ செய்து கொண்டேன்’ எனக் கூறினார். அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், ‘இவ்வாறு செய்வது போதுமா?’ என்று கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்றார். ‘நபி (ஸல்) அவர்களிடம் இதை நீ செவியுற்றுள்ளீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்’ என்றார் என்று அபூஹபீப் இப்னு யஃலா என்பார் அறிவிக்கிறார்.

(குறிப்பு: இக்கருத்து புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

71 بَاب وُضُوءِ النَّوْمِ  

508 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ سمعت سُفْيَانَ يقول لِزَائِدَةَ بن قُدَامَةَ يا أَبَا الصَّلْتِ هل سَمِعْتَ في هذا شيئا فقال ثنا سَلَمَةُ بن كُهَيْلٍ عن كُرَيْبٍ عن بن عَبَّاسٍ أَنَّ النبي (ص) قام من اللَّيْلِ فَدَخَلَ الْخَلَاءَ فَقَضَى حَاجَتَهُ ثُمَّ غَسَلَ وَجْهَهُ وَكَفَّيْهِ ثُمَّ نَامَ حدثنا أبو بَكْرِ بن خَلَّادٍ الْبَاهِلِيُّ ثنا يحيى بن سَعِيدٍ ثنا شُعْبَةُ أنا سَلَمَةُ بن كُهَيْلٍ أنا بُكَيْرٌ عن كُرَيْبٍ قال فَلَقِيتُ كُرَيْبًا فَحَدَّثَنِي عن بن عَبَّاسٍ عن النبي (ص) فذكر نَحْوَهُ

பாடம் 71. தூங்கு முன் ஒளூ செய்தல்

ஹதீஸ் எண்: 508

நபி (ஸல்) அவர்கள் இரவில் எழுந்து கழிப்பிடம் சென்று தம் தேவையை நிறைவேற்றினார்கள். பிறகு தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவி விட்டு பின்னர் உறங்கி விட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

72 بَاب الْوُضُوءِ لِكُلِّ صَلَاةٍ وَالصَّلَوَاتِ كُلِّهَا بِوُضُوءٍ وَاحِدٍ  

509 حدثنا سُوَيْدُ بن سَعِيدٍ ثنا شَرِيكٌ عن عَمْرِو بن عَامِرٍ عن أَنَسِ بن مَالِكٍ قال كان رسول اللَّهِ (ص) يَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ وَكُنَّا نَحْنُ نصلى الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ

பாடம் 72. ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்தலும் ஒரு ஒளூவில் பல தொழுகைகளைத் தொழுவதும்

ஹதீஸ் எண்: 509

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்பவர்களாக இருந்தனர். நாங்கள் பல தொழுகைகளை ஒரே ஒளூவின் மூலம் தொழுபவர்களாக இருந்தோம் என்று அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

510 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن مُحَارِبِ بن دِثَارٍ عن سُلَيْمَانَ بن بُرَيْدَةَ عن أبيه أَنَّ النبي (ص) كان يَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ فلما كان يَوْمُ فَتْحِ مَكَّةَ صلى الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ

ஹதீஸ் எண்: 510

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்பவர்களாக இருந்தனர். மக்கா வெற்றியின் தினத்தில் ஒரே ஒளூவைக் கொண்டு பல தொழுகைகளைத் தொழுதார்கள் என்று புரைதா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

 

இப்னுமாஜா பக்கம் – 50

இப்னுமாஜா பக்கம் – 50

பக்கம் – 50 (ஹதீஸ்கள் 491 முதல் 500 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

491 حدثنا محمد بن الصَّبَّاحِ ثنا حَاتِمُ بن إسماعيل عن جَعْفَرِ بن مُحَمَّدٍ عن أبيه عن عَلِيِّ بن الْحُسَيْنِ عن زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ عن أُمِّ سَلَمَةَ قالت أُتِيَ رسول اللَّهِ (ص) بِكَتِفِ شَاةٍ فَأَكَلَ منه وَصَلَّى ولم يَمَسَّ مَاءً

ஹதீஸ் எண்: 491

நபி (ஸல்) அவர்களுக்கு ஆட்டின் தொடைப்பகுதி கொடுக்கபட்டது, அதிலிருந்து அவர்கள் சாப்பிட்டு விட்டு தண்ணீரைத் தொடாமல் (அதாவது ஒளூ செய்யாமல்) தொழுதார்கள் என்று உம்மு ஸலமா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதே செய்தியை மைமூனா (ரலி) வழியாக புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.)

492 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عَلِيُّ بن مُسْهِرٍ عن يحيى بن سَعِيدٍ عن بُشَيْرِ بن يَسَارٍ أنا سُوَيْدُ بن النُّعْمَانِ الْأَنْصَارِيُّ أَنَّهُمْ خَرَجُوا مع رسول اللَّهِ (ص) إلى خَيْبَرَ حتى إذا كَانُوا بِالصَّهْبَاءِ صلى الْعَصْرَ ثُمَّ دَعَا بِأَطْعِمَةٍ فلم يُؤْتَ إلا بِسَوِيقٍ فَأَكَلُوا وَشَرِبُوا ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَضْمَضَ فَاهُ ثُمَّ قام فَصَلَّى بِنَا الْمَغْرِبَ  

ஹதீஸ் எண்: 492

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். ‘ஸஹ்பா’ எனும் இடத்தை அடைந்த போது நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகை நடத்தினார்கள். பிறகு உணவுப் பொருட்களைக் கொண்டு வரச்சொன்னார்கள். வறுத்த மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதை (அனைவரும்) சாப்பிட்டு விட்டு நீரருந்தினார்கள். பிறகு தண்ணீர் கொண்டு வரச் செய்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு எழுந்து எங்களுக்கு மஃரிப் தொழுகை நடத்தினார்கள் என்று ஸுவைத் இப்னு நுஃமான் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஅத்தா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

493 حدثنا محمد بن عبد الْمَلِكِ بن أبي الشَّوَارِبِ ثنا عبد الْعَزِيزِ بن الْمُخْتَارِ ثنا سُهَيْلٌ عن أبيه عن أبي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) أَكَلَ كَتِفَ شَاةٍ فَمَضْمَضَ وَغَسَلَ يَدَيْهِ وَصَلَّى

ஹதீஸ் எண்: 493

நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடைப் பகுதியைச் சாப்பிட்டுவிட்டு வாய் கொப்பளித்து இரண்டு கைகளையும் கழுவி விட்டு தொழுதார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இக்கருத்து அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

67 بَاب ما جاء في الْوُضُوءِ من لُحُومِ الْإِبِلِ  

494 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عبد اللَّهِ بن إِدْرِيسَ وأبو مُعَاوِيَةَ قالا ثنا الْأَعْمَشُ عن عبد اللَّهِ بن عبد اللَّهِ عن عبد الرحمن بن أبي لَيْلَى عن الْبَرَاءِ بن عَازِبٍ قال سُئِلَ رسول اللَّهِ (ص) عن الْوُضُوءِ من لُحُومِ الْإِبِلِ فقال توضؤوا منها

பாடம் 67. ஒட்டக மாமிசம் உண்பதால் ஒளூ நீங்கும்

ஹதீஸ் எண்: 494

ஒட்டக மாமிசம் உண்பதால் ஒளூ செய்ய வேண்டுமா என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ‘அதை உண்டால் ஒளூ செய்யுங்கள்’ என்று விடையளித்தார்கள். இதை பாரா இப்னு ஆஸீப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

495 حدثنا محمد بن بَشَّارٍ ثنا عبد الرحمن بن مَهْدِيٍّ ثنا زَائِدَةُ وَإِسْرَائِيلُ عن أَشْعَثَ بن أبي الشَّعْثَاءِ عن جَعْفَرِ بن أبي ثَوْرٍ عن جَابِرِ بن سَمُرَةَ قال أَمَرَنَا رسول اللَّهِ (ص) أَنْ نَتَوَضَّأَ من لُحُومِ الْإِبِلِ ولا نَتَوَضَّأَ من لُحُومِ الْغَنَمِ

ஹதீஸ் எண்: 495

ஒட்டகையின் மாமிசத்(தை உண்ப)தினால் நாங்கள் ஒளூ செய்ய வேண்டுமெனவும் ஆட்டு மாமிச(த்தை உண்ப)தினால் ஒளூ செய்ய வேண்டியதில்லை எனவும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர் என்று ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்தக் கருத்து முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

496 حدثنا أبو إسحاق الْهَرَوِيُّ إِبْرَاهِيمُ بن عبد اللَّهِ بن حَاتِمٍ ثنا عَبَّادُ بن الْعَوَّامِ عن حَجَّاجٍ عن عبد اللَّهِ بن عبد اللَّهِ مولى بنى هَاشِمٍ وكان ثِقَةً وكان الْحَكَمُ يَأْخُذُ عنه ثنا عبد الرحمن بن أبي لَيْلَى عن أُسَيْدِ بر حُضَيْرٍ قال قال رسول اللَّهِ (ص) لَا توضؤوا من أَلْبَانِ الْغَنَمِ وَتَوَضَّئُوا من أَلْبَانِ الْإِبِلِ

ஹதீஸ் எண்: 496

ஆட்டின் பாலை அருந்துவதால் நீங்கள் ஒளூ செய்ய வேண்டியதில்லை, ஒட்டகத்தின் பாலை அருந்துவதால் ஒளூ செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸைத் இப்னு ஹுலைர் (ரலி) அறிவிக்கிறார்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத் என்பவர் பலவீனமானவர்.)

497 حدثنا محمد بن يحيى ثنا يَزِيدُ بن عبد رَبِّهِ ثنا بَقِيَّةُ عن خَالِدِ بن يَزِيدَ بن عُمَرَ بن هُبَيْرَةَ الْفَزَارِيِّ عن عَطَاءِ بن السَّائِبِ قال سمعت مُحَارِبَ بن دِثَارٍ يقول سمعت عَبْدَ اللَّهِ بن عمرو يقول سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول توضؤوا من لُحُومِ الْإِبِلِ ولا تَتَوَضَّئُوا من لُحُومِ الْغَنَمِ وَتَوَضَّئُوا من أَلْبَانِ الْإِبِلِ ولا توضؤوا من أَلْبَانِ الْغَنَمِ وَصَلُّوا في مُرَاحِ الْغَنَمِ ولا تُصَلُّوا في مَعَاطِنِ الْإِبِلِ

ஹதீஸ் எண்: 497

ஒட்டகையின் மாமிசம் உண்பதால் ஒளூ செய்யுங்கள்! ஆட்டின் மாமிசம் உண்பதால் ஒளூ செய்யாதீர்கள்! ஒட்டகத்தின் பாலருந்துவதால் ஒளூ செய்யுங்கள்! ஆட்டுப் பால் அருந்துவதால் ஒளூ செய்யாதீர்கள்! ஆடுகள் கட்டுமிடங்களில் தொழுங்கள்! ஒட்டகம் கட்டுமிடங்களில் தொழாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளராகிய காலித் இப்னு யஸீத் இப்னு உமர் என்பவர் யாரெனத் தெரியாதவர்.)

68 بَاب الْمَضْمَضَةِ من شُرْبِ اللَّبَنِ  

498 حدثنا عبد الرحمن بن إبراهيم الدِّمَشْقِيُّ ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ ثنا الْأَوْزَاعِيُّ عن الزُّهْرِيِّ عن عُبَيْدِ اللَّهِ بن عبد اللَّهِ بن عُتْبَةَ عن بن عَبَّاسٍ أَنَّ النبي (ص) قال مَضْمِضُوا من اللَّبَنِ فإن له دَسَمًا

பாடம் 68. பால் அருந்திய பின் வாய் கொப்பளித்தல்

ஹதீஸ் எண்: 498

பால் அருந்திய பின் வாய் கொப்பளியங்கள்! ஏனெனில் அதில் கொழுப்பு உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், நஸயீ, திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

499 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا خَالِدُ بن مَخْلَدٍ عن مُوسَى بن يَعْقُوبَ حدثني أبو عُبَيْدَةَ بن عبد اللَّهِ بن زَمْعَةَ عن أبيه عن أُمِّ سَلَمَةَ زَوْجِ النبي (ص) قالت قال رسول اللَّهِ (ص) إذا شَرِبْتُمْ اللَّبَنَ فَمَضْمِضُوا فإن له دَسَمًا

ஹதீஸ் எண்: 499

மேற்கூறிய கருத்து உம்முஸலமா (ரலி) வாயிலாக அறிவிக்கப்படுகின்றது.

500 حدثنا أبو مُصْعَبٍ ثنا عبد الْمُهَيْمِنِ بن عَبَّاسِ بن سَهْلِ بن سَعْدٍ السَّاعِدِيُّ عن أبيه عن جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال مَضْمِضُوا من اللَّبَنِ فإن له دَسَمًا

ஹதீஸ் எண்: 500

மேற்கூறிய ஹதீஸ் ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான அப்துல் முஹைமின் என்பார் நம்பத்தக்கவர் அல்ல.)
 

இப்னுமாஜா பக்கம் – 49

இப்னுமாஜா பக்கம் – 49

பக்கம் – 49 (ஹதீஸ்கள் 481 முதல் 490 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

481 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا الْمُعَلَّى بن مَنْصُورٍ ح وحدثنا عبد اللَّهِ بن أَحْمَدَ بن بَشِيرِ بن ذَكْوَانَ الدِّمَشْقِيُّ ثنا مَرْوَانُ بن مُحَمَّدٍ قالا ثنا الْهَيْثَمُ بن حُمَيْدٍ ثنا الْعَلَاءُ بن الحرث عن مَكْحُولٍ عن عَنْبَسَةَ بن أبي سُفْيَانَ عن أُمِّ حَبِيبَةَ قالت سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول من مَسَّ فَرْجَهُ فَلْيَتَوَضَّأْ

ஹதீஸ் எண்: 481

மேற்கூறிய கருத்தையே உம்முஹபீபா (ரலி) அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அன்பஸா என்பவரிடமிருந்து அறிவிக்கும் மக்ஹுல் என்பார் அன்பஸாவிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை என்று இமாம் புகாரி குறிப்பிடுகின்றார்கள்.)

482 حدثنا سُفْيَانُ بن وَكِيعٍ ثنا عبد السَّلَامِ بن حَرْبٍ عن إسحاق بن أبي فَرْوَةَ عن الزُّهْرِيِّ عن عبد الله بن عَبْدٍ القارىء عن أبي أَيُّوبَ قال سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول من مَسَّ فَرْجَهُ فَلْيَتَوَضَّأْ  

ஹதீஸ் எண்: 482

மேற்கூறிய கருத்தை அபூஅய்யூப் (ரலி) அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான இஸ்ஹாக் இப்னு அபூபர்வா என்பவர் அனைவராலும் பலவீனமானவர் என்று முடிவு செய்யப்பட்டவர்.)

64 بَاب الرُّخْصَةِ في ذلك  

483 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا محمد بن جَابِرٍ قال سمعت قَيْسَ بن طَلْقٍ الْحَنَفِيَّ عن أبيه قال سمعت رَسُولَ اللَّهِ (ص) سُئِلَ عن مَسِّ الذَّكَرِ فقال ليس فيه وُضُوءٌ إنما هو مِنْكَ

பாடம் 64. மேற்கூறிய விஷயத்தில் அனுமதி

ஹதீஸ் எண்: 483

உறுப்பைத் தொடுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘அதற்கு ஒளூ அவசியமில்லை அதுவும் உனது உறுப்புக்களில் ஒன்றுதான்’ என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள் என தல்க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத், தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

484 حدثنا عَمْرُو بن عُثْمَانَ بن سَعِيدِ بن كَثِيرِ بن دِينَارٍ الْحِمْصِيُّ ثنا مَرْوَانُ بن مُعَاوِيَةَ عن جَعْفَرِ بن الزُّبَيْرِ عن الْقَاسِمِ عن أبي أُمَامَةَ قال سُئِلَ رسول اللَّهِ (ص) عن مَسِّ الذَّكَرِ فقال إنما هو حذية مِنْكَ

ஹதீஸ் எண்: 484

மேற்கூறிய கருத்தை அபூஉமாமா (ரலி) அறிவிப்பதாக இங்கே இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய ஜஃபர் இப்னுஸ்ஸுபைர் பொய்யர் என்று அனைவராலும் முடிவு செய்யப்பட்டவர்.)

65 بَاب الْوُضُوءِ مِمَّا غَيَّرَتْ النَّارُ  

485 حدثنا محمد بن الصَّبَّاحِ ثنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن مُحَمَّدِ بن عَمْرِو بن عَلْقَمَةَ عن أبي سَلَمَةَ بن عبد الرحمن عن أبي هُرَيْرَةَ أَنَّ النبي (ص) قال توضؤوا مِمَّا غَيَّرَتْ النَّارُ فقال بن عَبَّاسٍ أَتَوَضَّأُ من الْحَمِيمِ فقال له يا بن أَخِي إذا سَمِعْتَ عن رسول اللَّهِ (ص) حَدِيثًا فلا تَضْرِبْ له الْأَمْثَالَ

பாடம் 65. சமைத்த பொருட்களை உண்பதால் ஒளூச் செய்தல்

ஹதீஸ் எண்: 485

நெருப்பு தீண்டியவற்றால் (அதாவது அவற்றை உண்பதால்) ஒளூச் செய்யுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வெண்ணீர் சாப்பிட்டால் ஒளூ செய்ய வேண்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என் சகோதரர் மகனே! அல்லாஹ்வின் தூதரிடமிருந்து ஒரு செய்தியைக் கேட்டால் அதற்கு உவமைகள் கற்பிக்காதே!’ என்று குறப்பிட்டதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

486 حدثنا حَرْمَلَةُ بن يحيى ثنا بن وَهْبٍ أنا يُونُسُ بن يَزِيدَ عن بن شِهَابٍ عن عُرْوَةَ عن عَائِشَةَ قالت قال رسول اللَّهِ (ص) توضؤوا مِمَّا مَسَّتْ النَّارُ

ஹதீஸ் எண்: 486

மேற்கூறிய ஹதீஸை ஆயிஷா (ரலி) அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது. எனினும் இப்னு அப்பாஸ் (ரலி) சம்பந்தப்பட்ட விபரம் கூறப்படவில்லை.

(குறிப்பு: முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

487 حدثنا هِشَامُ بن خَالِدٍ الْأَزْرَقُ ثنا خَالِدُ بن يَزِيدَ بن أبي مَالِكٍ عن أبيه عن أَنَسِ بن مَالِكٍ قال كان يَضَعُ يَدَيْهِ على أُذُنَيْهِ وَيَقُولُ صُمَّتَا إن لم أَكُنْ سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول توضؤوا مِمَّا مَسَّتْ النَّارُ

ஹதீஸ் எண்: 487

மேற்கூறிய ஹதீஸை அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது.

66 بَاب الرُّخْصَةِ في ذلك  

488 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو الْأَحْوَصِ عن سِمَاكِ بن حَرْبٍ عن عِكْرِمَةَ عن بن عَبَّاسٍ قال أَكَلَ النبي (ص) كَتِفًا ثُمَّ مَسَحَ يَدَيْهِ بِمِسْحٍ كان تَحْتَهُ ثُمَّ قام إلى الصَّلَاةِ فَصَلَّى

பாடம் 66. சமைத்த பொருட்களை உண்பதால் ஒளூ அவசியமில்லை

ஹதீஸ் எண்: 488

நபி (ஸல்) அவர்கள் (ஆட்டின்) தொடைப் பகுதியை சாப்பிட்டு விட்டு, அவர்களுக்கு கீழ் இருந்த துண்டை எடுத்து அதில் தம் கைகளைத் துடைத்து விட்டு தொழுகைக்கு எழுந்து தொழுதார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

489 حدثنا محمد بن الصَّبَّاحِ أخبرنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن مُحَمَّدِ بن الْمُنْكَدِرِ وَعَمْرِو بن دِينَارٍ وَعَبْدِ اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن جَابِرِ بن عبد اللَّهِ قال أَكَلَ النبي (ص) وأبو بَكْرٍ وَعُمَرُ خُبْزًا وَلَحْمًا ولم يَتَوَضَّئُوا

ஹதீஸ் எண்: 489

நபி (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இறைச்சியையும் ரொட்டியையும் சாப்பிட்டனர். அவர்கள் ஒளூ செய்யவில்லை என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூதிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

490 حدثنا عبد الرحمن بن إبراهيم الدِّمَشْقِيُّ ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ ثنا الْأَوْزَاعِيُّ ثنا الزُّهْرِيُّ قال حَضَرْتُ عَشَاءَ الْوَلِيدِ أو عبد الْمَلِكِ فلما حَضَرَتْ الصَّلَاةُ قُمْتُ لِأَتَوَضَّأَ فقال جَعْفَرُ بن عَمْرِو بن أُمَيَّةَ أَشْهَدُ على أبي أَنَّهُ شَهِدَ على رسول اللَّهِ (ص) أَنَّهُ أَكَلَ طَعَامًا مِمَّا غَيَّرَتْ النَّارُ ثُمَّ صلى ولم يَتَوَضَّأْ وقال عَلِيُّ بن عبد اللَّهِ بن عَبَّاسٍ وأنا أَشْهَدُ على أبي بِمِثْلِ ذلك

ஹதீஸ் எண்: 490

அப்துல்மாலிக் அவர்களோ வலீத் அவர்களோ அளித்த இரவு உணவுக்கு நான் சென்றிருந்தேன். தொழுகைக்கான நேரம் வந்ததும் ஒளூ செய்வதற்காக நான் எழுந்தேன். அப்போது ஜஃபர் இப்னு உமய்யா அவர்கள், நபி (ஸல்) அவர்கள் சமைத்த உணவை உட்கொண்டு ஒளூ செய்யாமல் தொழுததை என் தந்தை பார்த்திருக்கிறார்கள். என் தந்தையிடமிருந்து இதை நான் அறிந்துள்ளதாக உறுதி கூறுகிறேன் என்றார் என ஸுஹ்ரீ அறிவிக்கிறார்கள். மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் அலி என்பாரும் தம் தந்தை வழியாக இதை அறிந்துள்ளதாக உறுதி கூறினார்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

 

இப்னுமாஜா பக்கம் – 48

இப்னுமாஜா பக்கம் – 48

பக்கம் – 48 (ஹதீஸ்கள் 471 முதல் 480 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

61 بَاب الْوُضُوءِ بِالصُّفْرِ  

471 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أَحْمَدُ بن عبد اللَّهِ عن عبد الْعَزِيزِ بن الْمَاجِشُونِ ثنا عَمْرُو بن يحيى عن أبيه عن عبد اللَّهِ بن زَيْدٍ صَاحِبِ النبي (ص) قال أَتَانَا رسول اللَّهِ (ص) فَأَخْرَجْنَا له مَاءً في تَوْرٍ من صُفْرٍ فَتَوَضَّأَ بِهِ

பாடம் 61. செம்புப் பாத்திரத்தில் ஒளூச் செய்தல்

ஹதீஸ் எண்: 471

‘எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தனர். அவர்களுக்கு செம்புப் பாத்திரத்தில் நாங்கள் நீர் வார்த்துக் கொடுத்தோம். அதிலிருந்து அவர்கள் ஒளூச் செய்தார்கள்’ என்று அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, அபூதாவூது ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

472 حدثنا يَعْقُوبُ بن حُمَيْدِ بن كَاسِبٍ ثنا عبد الْعَزِيزِ بن مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ عن عُبَيْدِ اللَّهِ بن عُمَرَ عن إبراهيم بن مُحَمَّدِ بن عبد اللَّهِ بن جَحْشٍ عن أبيه عن زَيْنَبَ بِنْتِ جَحْشٍ أَنَّهُ كان لها مِخْضَبٌ من صُفْرٍ قالت كنت أُرَجِّلُ رَأْسَ رسول اللَّهِ (ص) فيه  

ஹதீஸ் எண்: 472

‘என்னிடம் வாய் அகன்ற செம்புப் பாத்திரம் இருந்தது. அதில் நபி (ஸல்) அவர்களின் தலையை (க்கழுவி) நான் வாரி விடுவேன்’ என்று நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஸைனப் பின்து ஜஹ்ஷ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

473 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ عن شَرِيكٍ عن إبراهيم بن جَرِيرٍ عن أبي زُرْعَةَ بن عَمْرِو بن جَرِيرٍ عن أبي هُرَيْرَةَ أَنَّ النبي (ص) تَوَضَّأَ في تَوْرٍ

ஹதீஸ் எண்: 473

‘நபி (ஸல்) அவர்கள் பாத்திரத்திலிருந்து ஒளூச் செய்தார்கள்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

62 بَاب الْوُضُوءِ من النَّوْمِ  

474 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ ثنا الْأَعْمَشُ عن إبراهيم عن الْأَسْوَدِ عن عَائِشَةَ قالت كان رسول اللَّهِ (ص) يَنَامُ حتى يَنْفُخَ ثُمَّ يَقُومُ فَيُصَلِّي ولا يَتَوَضَّأُ قال الطَّنَافِسِيُّ قال وَكِيعٌ تَعْنِي وهو سَاجِدٌ

பாடம் 62. தூங்கி எழுந்த பின் ஒளூ செய்ய வேண்டுமா?

ஹதீஸ் எண்: 474

‘குறட்டை வருமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் உறங்கி எழுந்து ஒளூச் செய்யாமலே தொழுவார்கள்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

475 حدثنا عبد اللَّهِ بن عَامِرِ بن زُرَارَةَ ثنا يحيى بن زَكَرِيَّا بن أبي زَائِدَةَ عن حَجَّاجٍ عن فُضَيْلِ بن عَمْرٍو عن إبراهيم عن عَلْقَمَةَ عن عبد اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) نَامَ حتى نَفَخَ ثُمَّ قام فَصَلَّى

ஹதீஸ் எண்: 475

மேற்கூறிய கருத்தை அப்துல்லாஹ் (ரலி) அறிவிப்பதாக இங்கே இடம் பெற்றுள்ளது.
 

476 حدثنا عبد اللَّهِ بن عَامِرِ بن زُرَارَةَ عن بن أبي زَائِدَةَ عن حُرَيْثِ بن أبي مَطَرٍ عن يحيى بن عَبَّادٍ أبي هُبَيْرَةَ الْأَنْصَارِيِّ عن سَعِيدِ بن جُبَيْرٍ عن بن عَبَّاسٍ قال كان نَوْمُهُ ذلك وهو جَالِسٌ يَعْنِي النبي (ص)

ஹதீஸ் எண்: 476

(மேற்கூறிய உறக்கத்திற்கு விளக்கம் கூறும் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘நபி (ஸல்) அவர்களின் இந்த உறக்கம் உட்கார்ந்த நிலையில் ஏற்பட்டதாகும்’ என்றார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளராகிய ஹுரைஸ் இப்னு அபீமதர் என்பார் பலவீனமானவர்.)

477 حدثنا محمد بن الْمُصَفَّى الْحِمْصِيُّ ثنا بَقِيَّةُ عن الْوَضِينِ بن عَطَاءٍ عن مَحْفُوظِ بن عَلْقَمَةَ عن عبد الرحمن بن عَائِذٍ الْأَزْدِيِّ عن عَلِيِّ بن أبي طَالِبٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال الْعَيْنُ وِكَاءُ السَّهِ فَمَنْ نَامَ فَلْيَتَوَضَّأْ

ஹதீஸ் எண்: 477

‘காற்றுப் பிரியாமல் கண்களே கவனிக்கின்றன. எனவே எவர் உறங்குகிறாரோ (அவர் எழுந்ததும் தொழ விரும்பினால்) ஒளூச் செய்து கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

478 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن عَاصِمٍ عن زِرٍّ عن صَفْوَانَ بن عَسَّالٍ قال كان رسول اللَّهِ (ص) يَأْمُرُنَا أَنْ لَا نَنْزِعَ خِفَافَنَا ثَلَاثَةَ أَيَّامٍ إلا من جَنَابَةٍ لَكِنْ من غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ

ஹதீஸ் எண்: 478

‘(கால்களைக் கழுவி விட்டு நாங்கள் காலுறைகளை அணிந்து கொண்டால்) மலஜலம் கழித்தால், உறங்கி எழுந்தால் எங்கள் காலுறைகளை மூன்று நாட்களுக்கு நீக்காமல் (அதன் மீது மஸஹ் செய்ய) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தனர். கடமையான குளிப்பு ஏற்படும் போது மட்டும் அதை நீக்கி விட்டு கழுவ வேண்டும்’ என்றனர் என ஸப்வான் இப்னு அஸ்ஸால் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: அஹ்மத், நஸயீ, திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

63 بَاب الْوُضُوءِ من مَسِّ الذَّكَرِ  

479 حدثنا محمد بن عبد اللَّهِ بن نُمَيْرٍ ثنا عبد اللَّهِ بن إِدْرِيسَ عن هِشَامِ بن عُرْوَةَ عن أبيه عن مَرْوَانَ بن الْحَكَمِ عن بُسْرَةَ بِنْتِ صَفْوَانَ قالت قال رسول اللَّهِ (ص) إذا مَسَّ أحدكم ذَكَرَهُ فَلْيَتَوَضَّأْ

பாடம் 63. ஆணுறுப்பைத தொட்டால் ஒளூ செய்ய வேண்டும்.

ஹதீஸ் எண்: 479

‘யாரேனும் தனது உறுப்பைத் தொட்டால் அவர் ஒளூச் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புஸ்ரா பின்து ஸஃப்வான் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, முஅத்தா, இப்னுகுஸைமா, இப்னுஹிப்பான், ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

480 حدثنا إِبْرَاهِيمُ بن الْمُنْذِرِ الْحِزَامِيُّ حدثنا مَعْنُ بن عِيسَى ح وحدثنا عبد الرحمن بن إبراهيم الدِّمَشْقِيُّ ثنا عبد اللَّهِ بن نَافِعٍ جميعا عن بن أبي ذِئْبٍ عن عُقْبَةَ بن عبد الرحمن عن مُحَمَّدِ بن عبد الرحمن بن ثَوْبَانَ عن جَابِرِ بن عبد اللَّهِ قال قال رسول اللَّهِ (ص) إذا مَسَّ أحدكم ذَكَرَهُ فَعَلَيْهِ الْوُضُوءُ

ஹதீஸ் எண்: 480

மேற்கூறிய ஹதீஸின் கருத்தை ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிப்பதாக இங்கே இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய உக்பா இப்னு அப்துர்ரஹ்மான் என்பவர் யாரெனத் தெரியாதவர்.)
 

இப்னுமாஜா பக்கம் – 47

இப்னுமாஜா பக்கம் – 47

பக்கம் – 47 (ஹதீஸ்கள் 461 முதல் 470 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

58 بَاب ما جاء في النَّضْحِ بَعْدَ الْوُضُوءِ  

461 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا محمد بن بِشْرٍ ثنا زَكَرِيَّا بن أبي زَائِدَةَ قال قال مَنْصُورٌ حدثنا مُجَاهِدٌ عن الْحَكَمِ بن سُفْيَانَ الثَّقَفِيِّ أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ ثُمَّ أَخَذَ كَفًّا من مَاءٍ فَنَضَحَ بِهِ فَرْجَهُ

பாடம் 58. ஒளூ செய்த பின் மர்மஸ்தானத்தில் தண்ணீர் தெளித்தல்

ஹதீஸ் எண்: 461

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்து விட்டு ஒரு கையளவு தண்ணீர் எடுத்து தமது மர்மஸ்தானத்தில் தெளித்துக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று ஹகம் ஸுப்யான் அறிவிக்கிறார்.

(குறிப்பு: அபூதாவூது, நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதை அறிவிப்பவர் ஸுப்யான் மகன் ஹகம் என்று சிலரும், ஹகமுடைய மகன் ஸுப்யான் என்று வேறு சிலரும் குறிப்பிடுகின்றனர். இதன் அறிவிப்பாளர் உண்மையில் யார் என்பது உறுதி செய்யப்பட வில்லை. ‘ஸுப்யானின் மகன் ஹகம் என்பவர் தான் அறிவிப்பாளர் என்றால் அவர் நபித்தோழர் அல்ல என்று புகாரி, அஹ்மத் ஆகியோர் குறிப்பிடுகின்றனர். எனவே இந்த ஹதீஸ் சரியானதல்ல. இந்தக் கருத்தில் வருகின்ற எந்த ஒரு ஹதீஸும் சரியானதல்ல.)

462 حدثنا إِبْرَاهِيمُ بن مُحَمَّدٍ الْفِرْيَابِيُّ ثنا حَسَّانُ بن عبد اللَّهِ ثنا بن لَهِيعَةَ عن عُقَيْلٍ عن الزُّهْرِيِّ عن عُرْوَةَ قال حدثنا أُسَامَةُ بن زيد عن أبيه زَيْدِ بن حَارِثَةَ قال قال رسول اللَّهِ (ص) عَلَّمَنِي جِبْرَائِيلُ الْوُضُوءَ وَأَمَرَنِي أَنْ أَنْضَحَ تَحْتَ ثَوْبِي لِمَا يَخْرُجُ من الْبَوْلِ بَعْدَ الْوُضُوءِ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ ثنا أبو حَاتِمٍ ح وثنا عبد اللَّهِ بن يُوسُفَ التَّنِّيسِيُّ ثنا بن لَهِيعَةَ فذكر نَحْوَهُ   

ஹதீஸ் எண்: 462

ஜிப்ரில் (அலை) அவர்கள் எனக்கு ஒளூ செய்வதைக் கற்றுத் தந்தார்கள். ஒளூ செய்த பிறகு கசியும் சிறுநீர் காரணமாக ஒளூவுக்குப் பின் ஆடையின் கீழ் தண்ணீர் தெளிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் ஆறாவது அறிவிப்பாளராக இப்னு லஹ்யஆ என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுகிறார்.)

463 حدثنا الْحُسَيْنُ بن سَلَمَةَ الْيَحْمِدِيُّ ثنا سَلْمُ بن قُتَيْبَةَ ثنا الْحَسَنُ بن عَلِيٍّ الْهَاشِمِيُّ عن عبد الرحمن الْأَعْرَجِ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) إذا تَوَضَّأْتَ فَانْتَضِحْ

ஹதீஸ் எண்: 463

நீ ஒளூ செய்த பின் மர்மஸ்தானத்தில் தண்ணீர் தெளித்துக் கொள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது. இதன் மூன்றாவது அறிவிப்பாளரான ஹஸன் இப்னு அலீ அல்ஹாஷிமீ என்பவர் ஹதீஸ் கலையில் நிராகரிக்கப் படுபவராவார்.)

464 حدثنا محمد بن يحيى ثنا عَاصِمُ بن عَلِيٍّ ثنا قَيْسٌ عن بن أبي لَيْلَى عن أبي الزُّبَيْرِ عن جَابِرٍ قال تَوَضَّأَ رسول اللَّهِ (ص) فَنَضَحَ فَرْجَهُ

ஹதீஸ் எண்: 464

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்த போது தனது மர்மஸ்தானத்தில் தண்ணீர் தெளித்தார்கள் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான கைஸ் இப்னு ஆஸிம் என்பவர் பலவீனமானவர் என்பதால் இது சரியான ஹதீஸ் அல்ல.)

59 بَاب الْمِنْدِيلِ بَعْدَ الْوُضُوءِ وَبَعْدَ الْغُسْلِ  

465 حدثنا محمد بن رُمْحٍ أنا اللَّيْثُ بن سَعْدٍ عن يَزِيدَ بن أبي حَبِيبٍ عن سَعِيدِ بن أبي هِنْدٍ أَنَّ أَبَا مُرَّةَ مولى عَقِيلٍ حدثه أَنَّ أُمَّ هَانِئٍ بِنْتَ أبي طَالِبٍ حَدَّثَتْهُ أَنَّهُ لَمَّا كان عَامُ الْفَتْحِ قام رسول اللَّهِ (ص) إلى غُسْلِهِ فَسَتَرَتْ عليه فَاطِمَةُ ثُمَّ أَخَذَ ثَوْبَهُ فَالْتَحَفَ بِهِ

பாடம் 59. ஒளூ செய்த பின்பும் குறித்த பின்பும் ஈரத்தை துடைப்பது

ஹதீஸ் எண்: 465

மக்கா வெற்றியின் போது நபி (ஸல்) அவர்கள் குளிக்கமிடம் சென்றார்கள். (அவர்களின் மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கள், அவர்களை மறைத்துக் கொண்டார்கள். (குளித்த) பிறகு தமது ஆடையைச் சுற்றிக் கொண்டார்கள் என உம்முஹானி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)

466 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا بن أبي لَيْلَى عن مُحَمَّدِ بن عبد الرحمن بن سعد بن زُرَارَةَ عن مُحَمَّدِ بن شُرَحْبِيلَ عن قَيْسِ بن سَعْدٍ قال أَتَانَا النبي (ص) فَوَضَعْنَا له مَاءً فَاغْتَسَلَ ثُمَّ أَتَيْنَاهُ بِمِلْحَفَةٍ وَرْسِيَّةٍ فَاشْتَمَلَ بها فَكَأَنِّي أَنْظُرُ إلى أَثَرِ الْوَرْسِ على عُكَنِهِ

ஹதீஸ் எண்: 466

எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களுக்காக நாங்கள் தண்ணீர் எடுத்து வைத்தோம். அவர்கள் குளித்தார்கள். பிறகு நாங்கள் குங்குமப்பூ இலைகளால் சாயமேற்றப்பட்ட போர்வையை அவர்களிடம் கொண்டு வந்தோம். அதைச் சுற்றிக் கொண்டார்கள். அவர்களின் வயிற்று மடிப்பில் அந்தச் சாயத்தின் சுவடு படிந்திருந்ததை இன்று பார்ப்பது போல உள்ளது என்று கைஸ் இப்னு ஸஃது (ரலி) அறிவிக்கிறார்கள்.

467 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ ثنا الْأَعْمَشُ عن سَالِمِ بن أبي الْجَعْدِ عن كُرَيْبٍ ثنا بن عَبَّاسٍ عن خَالَتِهِ مَيْمُونَةَ قالت أَتَيْتُ رَسُولَ اللَّهِ (ص) بِثَوْبٍ حين اغْتَسَلَ من الْجَنَابَةِ فَرَدَّهُ وَجَعَلَ يَنْفُضُ الْمَاءَ

ஹதீஸ் எண்: 467

நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றியதும் அவர்களிடம் ஒரு துணியை நான் எடுத்து வந்தேன். அதை அவர்கள் மறுத்து விட்டு தண்ணீரை உதறிக் கொண்டார்கள் என்று மைமூனா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்தக் கருத்து இடம் பெற்றுள்ளது.)

468 حدثنا الْعَبَّاسُ بن الْوَلِيدِ وَأَحْمَدُ بن الْأَزْهَرِ قالا ثنا مَرْوَانُ بن مُحَمَّدٍ ثنا يَزِيدُ بن السِّمْطِ ثنا الْوَضِينُ بن عَطَاءٍ عن مَحْفُوظِ بن عَلْقَمَةَ عن سَلْمَانَ الْفَارِسِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ فَقَلَبَ جُبَّةَ صُوفٍ كانت عليه فَمَسَحَ بها وَجْهَهُ

ஹதீஸ் எண்: 468

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்து விட்டு அவர்கள் அணிந்திருந்த குளிராடையைப் புரட்டி அதன் மூலம் தம் முகத்தைத் துடைத்துக் கொண்டார்கள் என்று ஸல்மான் அல்பாரிஸி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: ஸலமான் ஃபாரிஸி அவர்களிடமிருந்து அறிவிக்கும் மஹபூழ் அவர்கள் ஸல்மான் ஃபாரிஸி அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளாரா என்ற விஷயம் நிரூபிக்கப்பட வில்லை.)

60 بَاب ما يُقَالُ بَعْدَ الْوُضُوءِ  

469 حدثنا مُوسَى بن عبد الرحمن ثنا الْحُسَيْنُ بن عَلِيٍّ وَزَيْدُ بن الْحُبَابِ ح وحدثنا محمد بن يحيى ثنا أبو نُعَيْمٍ قالوا ثنا عَمْرُو بن عبد اللَّهِ بن وَهْبٍ أبو سُلَيْمَانَ النَّخَعِيُّ قال حدثني زَيْدٌ الْعَمِّيُّ عن أَنَسِ بن مَالِكٍ عن النبي (ص) قال من تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قال ثَلَاثَ مَرَّاتٍ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلا الله وَحْدَهُ لَا شَرِيكَ له وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فُتِحَ له ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ من أَيِّهَا شَاءَ دخل قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ الْقَطَّانُ ثنا إِبْرَاهِيمُ بن نَصْرٍ ثنا أبو نُعَيْمٍ بِنَحْوِهِ

பாடம் 60. உலூ செய்த பின் சொல்ல வேண்டியவை

ஹதீஸ் எண்: 469

யார் அழகிய முறையில் உலூ செய்து, பிறகு மூன்று தடவை அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு என்று கூறுவாரோ, அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவற்றில் அவர் விரும்பிய வாசல் வழியாக அதில் நுழையலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளராக வரும் ஸைத் அல் அம்மீ என்பார் பலவீனமானவர், எனினும் இதை அடுத்து வருகின்ற ஹதீஸின் காரணமாக இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)

470 حدثنا عَلْقَمَةُ بن عَمْرٍو الدَّارِمِيُّ حدثنا أبو بَكْرِ بن عَيَّاشٍ عن أبي إسحاق عن عبد اللَّهِ بن عَطَاءٍ الْبَجَلِيِّ عن عُقْبَةَ بن عَامِرٍ الْجُهَنِيِّ عن عُمَرَ بن الْخَطَّابِ قال قال رسول اللَّهِ (ص) ما من مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ ثُمَّ يقول أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلا الله وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ إلا فُتِحَتْ له ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ يَدْخُلُ من أَيِّهَا شَاءَ

ஹதீஸ் எண்: 470

மேற்கூறிய ஹதீஸ் உமர் (ரலி) வழியாக அறிவிக்கப்படுகிறது. எனினும் இங்கே ‘வஹ்தஹு லாஷரீகலஹு என்ற வாசகம் இடம் பெற வில்லை.

(குறிப்பு: முஸ்லிம், அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
 

இப்னுமாஜா பக்கம் – 46

இப்னுமாஜா பக்கம் – 46

பக்கம் – 46 (ஹதீஸ்கள் 451 முதல் 460 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

451 قال الْقَطَّانُ حدثنا أبو حَاتِمٍ ثنا عبد الْمُؤْمِنِ بن على ثنا عبد السَّلَامِ بن حَرْبٍ عن هِشَامِ بن عُرْوَةَ عن أبيه عن عَائِشَةَ قالت قال رسول اللَّهِ (ص) وَيْلٌ لِلْأَعْقَابِ من النَّارِ

ஹதீஸ் எண்: 451

‘இத்தகைய குதிகால்களை நரக நெருப்பு தீண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

452 حدثنا محمد بن الصَّبَّاحِ ثنا عبد اللَّهِ بن رَجَاءٍ الْمَكِّيُّ عن بن عَجْلَانَ ح وحدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا يحيى بن سَعِيدٍ وأبو خَالِدٍ الْأَحْمَرُ عن مُحَمَّدِ بن عَجْلَانَ عن سَعِيدِ بن أبي سَعِيدٍ عن أبي سَلَمَةَ قال رَأَتْ عَائِشَةُ عَبْدَ الرحمن وهو يَتَوَضَّأُ فقالت أَسْبِغْ الْوُضُوءَ فَإِنِّي سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول وَيْلٌ لِلْعَرَاقِيبِ من النَّارِ  

ஹதீஸ் எண்: 452

(தனது சகோதரர்) அப்துர் ரஹ்மான் ஒளூ செய்வதைக் கண்ட ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஒளூவைப் பூரணமாகச் செய்! ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் (தண்ணீர் படாத) குதிகால்களை நரக நெருப்புத் தீண்டும் என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்’ என்று குறிப்பிட்டார்கள். இதை அபூஸலமா அறிவிக்கிறார்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம், முஅத்தா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

453 حدثنا محمد بن عبد الْمَلِكِ بن أبي الشَّوَارِبِ ثنا عبد الْعَزِيزِ بن الْمُخْتَارِ ثنا سُهَيْلٌ عن أبيه عن أبي هُرَيْرَةَ عن النبي (ص) قال وَيْلٌ لِلْأَعْقَابِ من النَّارِ  

ஹதீஸ் எண்: 453

இங்கே 451 வது ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களால் அறிவிக்கப்படுகிறது.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

454 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا الْأَحْوَصِ عن أبي إسحاق عن سَعِيدِ بن أبي كريب عن جَابِرِ بن عبد اللَّهِ قال سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول وَيْلٌ لِلْعَرَاقِيبِ من النَّارِ

ஹதீஸ் எண்: 454

மேற்கூறிய ஹதீஸ் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது.

455 حدثنا الْعَبَّاسُ بن عُثْمَانَ وَعُثْمَانُ بن إسماعيل الدِّمَشْقِيَّانِ قالا ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ ثنا شَيْبَةُ بن الْأَحْنَفِ عن أبي سَلَّامٍ الْأَسْوَدِ عن أبي صَالِحٍ الْأَشْعَرِيِّ حدثني أبو عبد اللَّهِ الْأَشْعَرِيُّ عن خَالِدِ بن الْوَلِيدِ وَيَزِيدَ بن أبي سُفْيَانَ وَشُرَحْبِيلَ بن حَسَنَةَ وَعَمْرِو بن الْعَاصِ كُلُّ هَؤُلَاءِ سَمِعُوا من رسول اللَّهِ (ص) قال أَتِمُّوا الْوُضُوءَ وَيْلٌ لِلْأَعْقَابِ من النَّارِ

ஹதீஸ் எண்: 455

மேற்கூறிய ஹதீஸின் கருத்தே இங்கேயும் இடம் பெறுகிறது.

56 بَاب ما جاء في غَسْلِ الْقَدَمَيْنِ  

456 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو الْأَحْوَصِ عن أبي إسحاق عن أبي حَيَّةَ قال رأيت عَلِيًّا تَوَضَّأَ فَغَسَلَ قَدَمَيْهِ إلى الْكَعْبَيْنِ ثُمَّ قال أَرَدْتُ أَنْ أُرِيَكُمْ طُهُورَ نَبِيِّكُمْ (ص)

பாடம் 56. இரு பாதங்களையும் கழுவுதல்

ஹதீஸ் எண்: 456

அலி (ரலி) அவர்கள் ஒளூ செய்த போது தமது இருகால்களையும் கரண்டை வரை கழுவியதை நான் பார்த்திருக்கிறேன். பிறகு அவர்கள் ‘உங்கள் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு ஒளூ செய்வார்கள் என்பதை உங்களுக்குக் காண்பிக்க நான் விரும்பினேன்’ எனவும் குறிப்பிட்டார்கள். இதை அபூஹய்யா என்பார் அறிவிக்கிறார்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.)

457 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ ثنا حَرِيزُ بن عُثْمَانَ عن عبد الرحمن بن مَيْسَرَةَ عن الْمِقْدَامِ بن معد يكرب أَنَّ رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ فَغَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا

ஹதீஸ் எண்: 457

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்த போது தம் இருகால்களையும் மும்மூன்று தடவை கழுவினார்கள் என்று மிக்தாம் இப்னு மஃதீ கரீப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

458 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا بن عُلَيَّةَ عن رَوْحِ بن الْقَاسِمِ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن الرُّبَيِّعِ قالت أَتَانِي بن عَبَّاسٍ فَسَأَلَنِي عن هذا الحديث تَعْنِي حَدِيثَهَا الذي ذَكَرَتْ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ وَغَسَلَ رِجْلَيْهِ فقال بن عَبَّاسٍ إِنَّ الناس أَبَوْا إلا الْغَسْلَ ولا أَجِدُ في كِتَابِ اللَّهِ إلا الْمَسْحَ

ஹதீஸ் எண்: 458

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்த போது தம் இருகால்களையும் கழுவினார்கள் என்று நான் அறிவிக்கும் ஹதீஸைப் பற்றி என்னிடம் இப்னு அப்பாஸ் (ரலி) விசாரித்தார்கள். அப்போது அவர்கள் ‘மக்களெல்லாம் கால்களைக் கழுவியாக வேண்டும் என்கின்றனர். ஆனால் அல்லாஹ்வின் வேதத்தில் மஸஹ் செய்ததைத் தான் நான் பார்க்கின்றேன்’ என்று குறிப்பிட்டார்கள் என்று ருபையிஃ (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தக் கருத்திலிருந்து பிறகு விலகிக் கொண்டார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஃபத்ஹுல் பாரியில் குறிப்பிடுகிறார்கள்.)

57 بَاب ما جاء في الْوُضُوءِ على ما أَمَرَ الله تَعَالَى  

459 حدثنا محمد بن بَشَّارٍ ثنا محمد بن جَعْفَرٍ ثنا شُعْبَةُ عن جَامِعِ بن شَدَّادٍ أبي صَخْرَةَ قال سمعت حُمْرَانَ يحدث أَبَا بُرْدَةَ في الْمَسْجِدِ أَنَّهُ سمع عُثْمَانَ بن عَفَّانَ يحدث عن النبي (ص) قال من أَتَمَّ الْوُضُوءَ كما أَمَرَهُ الله فَالصَّلَاةُ الْمَكْتُوبَاتُ كَفَّارَاتٌ لِمَا بَيْنَهُنَّ

பாடம் 57. இறைவன் கட்டளையிட்டவாறு ஒளூ செய்தல்

ஹதீஸ் எண்: 459

‘அல்லாஹ் கட்டளையிட்டவாறு யார் ஒளூவைப் பூரணமாகச் செய்து தொழுகிறாரோ அவர் தொழும் கடமையான தொழுகைகள் இடைப்பட்ட நேரங்களில் நிகழும் தவறுகளுக்குப் பரிகாரமாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.) 

460 حدثنا محمد بن يحيى ثنا حَجَّاجٌ ثنا هَمَّامٌ ثنا إسحاق بن عبد اللَّهِ بن أبي طَلْحَةَ حدثني عَلِيُّ بن يحيى بن خَلَّادٍ عن أبيه عن عَمِّهِ رِفَاعَةَ بن رَافِعٍ أَنَّهُ كان جَالِسًا عِنْدَ النبي (ص) فقال إِنَّهَا لَا تَتِمُّ صَلَاةٌ لِأَحَدٍ حتى يُسْبِغَ الْوُضُوءَ كما أَمَرَهُ الله تَعَالَى يَغْسِلُ وَجْهَهُ وَيَدَيْهِ إلى الْمِرْفَقَيْنِ وَيَمْسَحُ بِرَأْسِهِ وَرِجْلَيْهِ إلى الْكَعْبَيْنِ

ஹதீஸ் எண்: 460

‘முகத்தையும் இருகைகளையும் மஸஹ் செய்து இறைவன் கட்டளையிட்டவாறு ஒளூவைப் பூரணமாகச் செய்யாதவரை உங்களில் எவரது தொழுகையும் முழுமை பெறாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ரிபாஆ இப்னு ராபிவு (ரலி) அறிவிக்கிறார்கள்.

 

இப்னுமாஜா பக்கம் – 45

 

இப்னுமாஜா பக்கம் – 45

பக்கம் – 45 (ஹதீஸ்கள் 441 முதல் 450 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

441 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ عن الْحَسَنِ بن صَالِحٍ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بن عَفْرَاءَ قالت تَوَضَّأَ النبي (ص) فَأَدْخَلَ إِصْبَعَيْهِ في جُحْرَيْ أُذُنَيْهِ

ஹதீஸ் எண்: 441

ஏறத்தாழ முந்தைய ஹதீஸின் கருத்தே இங்கும் இடம் பெறுகின்றது.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அகீல் என்பார் குறை கூறப்பட்டுள்ளார்.)

442 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا الْوَلِيدُ ثنا حَرِيزُ بن عُثْمَانَ عن عبد الرحمن بن مَيْسَرَةَ عن الْمِقْدَامِ بن معد يكرب أَنَّ رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ فَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ ظَاهِرَهُمَا وَبَاطِنَهُمَا   

ஹதீஸ் எண்: 442

இங்கே 439 வது ஹதீஸின் கருத்தே இடம் பெறுகின்றது, மிக்தாம் இப்னு மஃதீ யகரிப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது.)

53 بَاب الْأُذُنَانِ من الرَّأْسِ  

443 حدثنا سُوَيْدُ بن سَعِيدٍ ثنا يحيى بن زَكَرِيَّا بن أبي زَائِدَةَ عن شُعْبَةَ عن حَبِيبِ بن زَيْدٍ عن عَبَّادِ بن تَمِيمٍ عن عبد اللَّهِ بن زَيْدٍ قال قال رسول اللَّهِ (ص) الْأُذُنَانِ من الرَّأْسِ

பாடம் 53. இருகாதுகளும் தலையில் ஒரு பகுதியாகும்

ஹதீஸ் எண்: 443

‘இருகாதுகளும் தலையின் ஒரு பகுதியாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

444 حدثنا محمد بن زِيَادٍ أنا حَمَّادُ بن زَيْدٍ عن سِنَانِ بن رَبِيعَةَ عن شَهْرِ بن حَوْشَبٍ عن أبي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال الْأُذُنَانِ من الرَّأْسِ وكان يَمْسَحُ رَأْسَهُ مَرَّةً وكان يَمْسَحُ الْمَأْقَيْنِ

ஹதீஸ் எண்: 444

நபி (ஸல்) அவர்கள், இரு காதுகளும் தலையைச் சேர்ந்ததாகும் என்று சொன்னார்கள். மேலும் அவர்கள் தம் தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்வார்கள், மூக்கை ஒட்டிய கண் ஓரங்களையும் மஸஹ் செய்வார்கள் என்று அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்.

445 حدثنا محمد بن يحيى ثنا عَمْرُو بن الْحُصَيْنِ ثنا محمد بن عبد اللَّهِ بن عُلَاثَةَ عن عبد الْكَرِيمِ الْجَزَرِيِّ عن سَعِيدِ بن الْمُسَيَّبِ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) الْأُذُنَانِ من الرَّأْسِ

ஹதீஸ் எண்: 445

443 வது ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக இங்கே இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு அப்துல்லாஹ்வும் ஐந்தாம் அறிவிப்பாளரான அம்ரு இப்னு ஹுஸைன் என்பவரும் பலவீனமானவர்களாவர்.)

54 بَاب تَخْلِيلِ الْأَصَابِعِ  

446 حدثنا محمد بن الْمُصَفَّى الْحِمْصِيُّ ثنا محمد بن حِمْيَرٍ عن بن لَهِيعَةَ حدثني يَزِيدُ بن عَمْرٍو الْمَعَافِرِيُّ عن أبي عبد الرحمن الْحُبُلِيِّ عن الْمُسْتَوْرِدِ بن شَدَّادٍ قال رأيت رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ فَخَلَّلَ أَصَابِعَ رِجْلَيْهِ بِخِنْصِرِهِ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ ثنا خلاد بن يحيى الْحُلْوَانِيُّ ثنا قُتَيْبَةُ ثنا بن لَهِيعَةَ فذكر نَحْوَهُ

பாடம் 54. விரல்களைக் கோதிக்கழுவுதல்

ஹதீஸ் எண்: 446

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்யும் போது தமது கால்விரல்களை சுண்டு விரலால் கோதியதை நான் பார்த்திருக்கிறேன் என்று முஸ்தவ்ரித் இப்னு ஷத்தாத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் இப்னு லஹ்யஆ என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார். எனினும் இவர் இடம் பெறாமலும் வேறு நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெறுவதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)

447 حدثنا إِبْرَاهِيمُ بن سَعِيدٍ الْجَوْهَرِيُّ ثنا سَعْدُ بن عبد الْحَمِيدِ بن جَعْفَرٍ عن بن أبي الزِّنَادِ عن مُوسَى بن عُقْبَةَ عن صَالِحٍ مولى التَّوْأَمَةِ عن بن عَبَّاسٍ قال قال رسول اللَّهِ (ص) إذا قُمْتَ إلى الصَّلَاةِ فَأَسْبِغْ الْوُضُوءَ وَاجْعَلْ الْمَاءَ بين أَصَابِعِ يَدَيْكَ وَرِجْلَيْكَ

ஹதீஸ் எண்: 447

தொழுகைக்கு நீ தயாராகும் போது ஒளூவை பூரணமாகச் செய்! உன் கால் விரல்கள், கை விரல்களுக்கிடையே தண்ணீரைச் செலுத்து! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இது திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.)

448 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا يحيى بن سُلَيْمٍ الطَّائِفِيُّ عن إسماعيل بن كَثِيرٍ عن عَاصِمِ بن لَقِيطِ بن صَبْرَةَ عن أبيه قال قال رسول اللَّهِ (ص) أَسْبِغْ الْوُضُوءَ وَخَلِّلْ بين الْأَصَابِعِ

ஹதீஸ் எண்: 448

ஒளூவைப் பூரணமாகச் செய்! விரல்களைக் கோதிக்கழுவு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக லகீத் இப்னு ஸபிரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: திர்மிதி, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

449 حدثنا عبد الْمَلِكِ بن مُحَمَّدٍ الرَّقَاشِيُّ ثنا مَعْمَرُ بن مُحَمَّدِ بن عُبَيْدِ اللَّهِ بن أبي رَافِعٍ ثني أبي عن عُبَيْدِ اللَّهِ بن أبي رَافِعٍ عن أبيه أَنَّ رَسُولَ اللَّهِ (ص) كان إذا تَوَضَّأَ حَرَّكَ خَاتَمَهُ

ஹதீஸ் எண்: 449

‘நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்யும் போது தமது மோதிரத்தை அசைத்து விடுவார்கள்’ என்று அபூராபிவு (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய முஹம்மத் இப்னு உபைதுல்லாஹ்வும், நான்காவது அறிவிப்பாளராகிய மஃமர் என்பவரும் பலவீனமானவர்கள்.)  

55 بَاب غَسْلِ الْعَرَاقِيبِ  

450 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن مَنْصُورٍ عن هِلَالِ بن يَسَافٍ عن أبي يحيى عن عبد اللَّهِ بن عمر قال رَأَى رسول اللَّهِ (ص) قَوْمًا يتوضؤون وَأَعْقَابُهُمْ تَلُوحُ فقال وَيْلٌ لِلْأَعْقَابِ من النَّارِ أَسْبِغُوا الْوُضُوءَ

பாடம் 55. குதிகால்களைக் கழுவுதல்

ஹதீஸ் எண்: 450

ஒரு கூட்டத்தினர் ஒளூ செய்த போது அவர்களின் குதி கால்களில் தண்ணீர் படாமலிருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள் அப்போது, ‘ஒளுவைப் பூரணமாகச் செய்யுங்கள்! இத்தகைய குதிகால்களை நரக நெருப்பு தீண்டும்’ என்று கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)