Tag Archives: ஹதீஸ்கள்

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை நிராகரிக்கலாமா?

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கலாமா?

எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ

அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது! அவை முரண்படுவது போல் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது. இத்தகைய ஹதீஸ்களைக் கண்டால் ஹதீஸின் வெளிப்படையான கருத்தைக் கவனத்திற் கொண்டு குர்ஆனின் கருத்தை மறுத்து விடவும் கூடாது. குர்ஆனை ஏற்பதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்துவிடவும் கூடாது. இரண்டையும் இணைத்து பொருள் கொண்டு இரண்டையுமே அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் ஆரம்ப காலத்தில் தமிழ் பேசும் தௌஹீத் பிரச்சாரத்தில் முன்வைக்கப்பட்ட கருத்தாகும். இருப்பினும் இந்த சரியான கருத்திலிருந்து சிலர் தடம் புரண்டதால் ஹதீஸ்களை அவரவர் தமது விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நான் தமிழகம் சென்றிருந்த போது ஒரு பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பயானின் இறுதியில் ஒரு அமைப்பைச் சேர்ந்த பலர் ஒன்றிணைந்து திட்டமிட்டு வந்து கேள்விகளைத் தொடுத்தனர். அதில் ஒருவர் ஆயிஷா(ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் ஆறு (6) வயதில் மணந்ததாகவும், ஒன்பது (9) வயதில் அவர்களுடன் இல்லறத்தில் ஈடுபட்டதாகவும் புஹாரியில் ஹதீஸ் வருகின்றது. இதையும் ஏற்பீர்களா? எனக் கோட்டார். குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்தில் உள்ள தௌஹீத் அமைப்பைச் சேர்ந்தவர் அவர். எனவே, இது எந்த குர்ஆன் வசனத்திற்கு முரண்படுகின்றது என நான் அவரிடம் கேட்டேன். இதை மனசாட்சி ஏற்குதா? நீங்கள் இந்த அடிப்படையில் செயற்படுவீர்களா? என அவர் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தார். இடையில் மறித்த நான் குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மட்டும் நிராகரிக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்த நீங்கள் இப்போது மனசாட்சிக்கு முரண்படும் ஹதீஸ்களையும் மறுக்க வேண்டும் என்கின்றீர்களா? நபி(ஸல்) அவர்கள் 9 வயது ஆயஷா(ரழி) அவர்களுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டதை என் மனசாட்சி மறுக்கவே இல்லை. எனது தாய் திருமணம் முடிக்கும் போது அவருக்கு 14 வயது. அவரின் தாய் மணக்கும் போது அவருக்கு 12 வயது. இப்படி இருக்கும் போது 1400 வருடங்களுக்கு முன்னர் 9 வயதுப் பெண்ணுடன் இல்லறம் நடத்துவது என்பது மனசாட்சி ஏற்க முடியாத கருத்து அல்ல எனக் கூறி மற்றும் சில நடைமுறை உதாரணங்களையும் கூறினேன்.

மக்களை எந்த மனநிலைக்கு இந்த கொள்கை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இது நிதர்சனமான சான்றாகும்.

   هل النساء أكثر أهل النار

என்ற பெயரில் ஒருவர் ஒரு நூலை எழுதுகின்றார். பெண்கள் அதிகமாக நரகத்தில் இருப்பார்களா? என்பது இதன் அர்த்தமாகும். ஒரு பெருநாள் தினத்தில் பெண்கள் பகுதிக்கு வந்த நபி(ஸல்) அவர்கள் பெண்களை நரகில் அதிகமாகக் கண்டதாக கூறினார்கள். இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஆகும்.

பெண்ணிலைவாத சிந்தனையுடைய இந்த நூலாசிரியர் இந்த ஹதீஸை மறுக்கின்றார். அதற்கு அவர் வாதங்களை முன்வைக்கும் போது பெருநாள் தினத்தில் பெண்கள் பகுதிக்கு வந்த நபி(ஸல்) அவர்கள் அந்த நல்ல சந்தர்ப்பத்தில் நீங்கள் அதிகமாக நரகத்தில் இருப்பீர்கள் என்ற மோசமான விடயத்தைக் கூறுவார்களா? இதை மனசாட்சி ஏற்குமா? அது வாழ்த்துக் கூறும் நேரமல்லவா? நல்ல பண்புள்ள நாகரீகமான நடத்தையுள்ள நபி(ஸல்) அவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு செய்தியைக் கூறி இருப்பார்களா? எனக் கேள்வி கேட்டு ஹதீஸை மறுக்கிறார்.

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க முனைந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிலையில் இருந்து இறங்கி வந்து அறிவுக்குப் பொருந்தவில்லை. விஞ்ஞானத்திற்கு முரண்படுகின்றது. மனசாட்சி ஏற்கிறதில்லை என பல காரணங்கள் கூறி ஹதீஸ்களை மறுக்கும் நிலை தோன்றிவிடும். எனவே, குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுப்பது ஆபத்தானது அதே வேளை வழிகேடர்களின் கொள்கையாகத் திகழ்ந்துள்ளது. அந்த வழியில் போனால் எத்தகைய விபரீதமான கருத்துக்கள் ஏற்படும் என்பதை இந்தக் கட்டுரையூடாக விவரிக்க முனைகின்றேன்.

01. மீன் சாப்பிடலாமா?

இறந்தவைகள் உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது என குர்ஆன் கூறுகின்றது.

‘தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடுத்துள்ளான்.. .. .. .. .’ (2:173) (பார்க்க: 5:3, 16:115)

மீன் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் இறந்த பின்னரும் அவற்றை நாம் சாப்பிடுகின்றோம். நேரடியாகப் பார்த்தால் அது இந்த குர்ஆன் வசனத்திற்கு முரணானதாகும். எனினும் மீன், வெட்டுக்கிளி இரண்டும் இறந்த பின்னரும் சாப்பிடத்தக்கவை என ஹதீஸ் கூறுகின்றது.

இந்த ஹதீஸின் அடிப்படையில் மீன்கள் இறந்த பின்னரும் முஸ்லிம்களால் சாப்பிடப்பட்டு வருகின்றது.

அல்லாஹ் குர்ஆனில் இறந்தவை ஹராம் என பல இடங்களில் கூறியிருக்கும் போது இறந்து போன மீன்களை உண்ணலாம் என ஹதீஸில் எப்படி வரமுடியும்? இது குர்ஆனின் கருத்துக்கு முரணாக இருக்கிறதே என யாரும் வாதிடுவதில்லை. குர்ஆன் பொதுவாக ஹராம் எனக் கூறியிருந்தாலும் ஹதீஸும் வஹிதான். குர்ஆனில் பொதுவாகக் கூறப்பட்ட சட்டத்தில் விதிவிலக்களிக்கும் அதிகாரம் அல்லாஹ்வினாலே நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இது குர்ஆனுக்கு முரண் அல்ல. குர்ஆன் கூறும் பொதுச் சட்டத்திலிருந்து ஹதீஸ் மீனுக்கு விதிவிலக்களித்திருக்கிறது என்றுதான் அனைத்து முஸ்லிம்களும் விளங்கிக் கொள்கின்றனர். இவ்வாறுதான் ஏனைய ஹதீஸ்களையும் விளங்க வேண்டும்.

02. தவறான பாலியல் உறவு:

‘உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்களாவர். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பிய விதத்தில் செல்லுங்கள்.’ (2:223)

மனைவியர் விளை நிலம் என்றும், நீங்கள் விரும்பிய விதத்தில் அவர்களிடம் செல்லுங்கள் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. எப்படி வேண்டுமானாலும் மனைவியுடன் இன்பம் அனுபவிக்கலாம் என இந்த வசனம் கூறுகின்றது. எனினும் மனைவியின் மலப்பாதையில் உறவு கொள்வது ஹதீஸ்களில் தடுக்கப்பட்டுள்ளது. எப்படி வேண்டுமானாலும் செல்லுங்கள் எனக் குர்ஆன் கூறுவதற்கு இது முரண்படுவதாகக் கூறி இந்த ஹதீஸை மறுப்பதா அல்லது எப்படி வேண்டுமானாலும் செல்லுங்கள் என்ற குர்ஆன் வசனத்தை இந்த ஹதீஸ்கள் முறையாக விளக்குகின்றன என்று எடுத்துக் கொள்வதா?

03. காபிரான சந்ததிக்கும் சொத்துரிமை:

‘இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.’ (4:11)

என அல்லாஹ் கூறுகின்றான். ‘அல் அவ்லாத்’ என்றால் காபிரான பிள்ளைகளையும் குறிக்கும். இந்த அர்த்தத்தில்தான் குர்ஆனில் அவ்லாத் என்ற பதம் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பெற்ற பிள்ளை குப்ரில் இருந்தால் தாய்-தந்தையின் சொத்திலிருந்து அந்தப் பிள்ளைக்கு வாரிசுரிமைச் சொத்து வழங்கப்படப் கூடாது. இவ்வாறே பிள்ளை முஸ்லிமாக இருந்து தந்தை காபிரா இருந்தால் பிள்ளையின் சொத்தில் தந்தைக்கும் பங்கு சேராது என ஸதீஸ் கூறுகின்றது. இது குர்ஆனுக்கு முரண்படுகின்றது. காபிராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் பிள்ளை பிள்ளைதான். மகன் காபிராகிவிட்டால் அவன் மகன் இல்லையென்றாகிவிடுமா? இந்த அடிப்படையில் காபிரான பிள்ளைக்கு சொத்தில் பங்கு இல்லை என்ற ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது. அறிவுக்கும், மனசாட்சிக்கும் முரண்படுகின்றது எனக் கூறி மறுக்க முடியுமா? அல்லது பிள்ளைகளுக்கு சொத்தில் பங்குள்ளது என்ற குர்ஆனின் சட்டத்திலிருந்து சொத்துக்காக கொலை செய்த வாரிசு, காபிரான வாரிசு போன்றவர்களுக்கு வாரிசுரிமையில் பங்கு இல்லை எனக் கூறி அவர்களை பொதுச் சட்டத்திலிருந்து ஹதீஸ் விதிவிலக்களிக்கின்றது என்று எடுத்துக் கொள்வதா?

04. ஒரு பெண்ணையும் அவள் சாச்சியையும் ஒரே நேரத்தில் முடிக்கலாமா?

ஒரு பெண்ணையும், அவளது தாயின் சகோதரிகளையும் (சாச்சி, பெரியம்மா) தந்தையின் சகோதரி (மாமி)யையும் ஒரே நேரத்தில் ஒருவர் மணமுடிப்பது இஸ்லாத்தில தடைசெய்யப்பட்டதாகும். எனினும் அல் குர்ஆன் திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவர்கள் பற்றி குறிப்பிடுகின்றது. அதில் இந்தத் தரப்பினர் இடம்பெறவில்லை. அந்த வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது.

‘…. இவர்களைத் தவிர ஏனையோரை நீங்கள் விபச்சாரத்தில் ஈடுபடாதவர்களாகவும், கற்பொழுக்கம் உடையவர்களாகவும், உங்கள் செல்வங்களை (மஹராக)க் கொடுத்து அடைந்து கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது…..’ (4:24)

என்று முடிக்கின்றான். இதற்குப் பின்னால் உள்ள உறவினர்கள் அனைவரும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளனர். எனக் குர்ஆன் கூறிய பின்னர் ஹதீஸ் வேறு சிலரையும் சில சந்தர்ப்பத்தில் திருமணம் முடிக்கத் தாகாகவர்கள் எனக் கூறுகின்றது. இப்போது குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி இத்தகைய ஹதீஸ்களை மறுப்பதா? அல்லது ஹதீஸும் சட்ட ஆதாரம்தான் குர்ஆனின் சட்டத்தையும், ஹதீஸின் சட்டத்தையும் இணைத்துத்தான் முடிவெடுக்க வேண்டும் என்று முடிவு செய்வதா? எது நேர்வழி, எது வழிகேடு என்று சிந்தித்துப் பாருங்கள். குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் ஒன்றுடன் ஒன்றை மோத விடாமல் இரண்டையும் இணைத்து பொருள் கொள்வதுதானே நியாயமான நிலை? நேர்மையான விடை? இதை விட்டும் விலகிச் செல்வது நபி(ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை முழுமையாக ஏற்காத குற்றத்தில் அல்லவா நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும்?

05. இந்த ஹதீஸ்களையும் மறுக்கலாமா?

சமீபத்தில அல்லாஹ்வுக்கும் உருவம் இருக்கின்றதா? என்றொரு வாதம் நடந்தது. அந்த விவாதத்தில் மறுமையில் மக்கள் நரகத்தில் போடப்பட்ட பின்னர் நரகம் ‘இன்னும் இருக்கிறதா? இன்னும் இருக்கிறதா? என்று கேட்கும். அப்போது அல்லாஹ் தன் காலை நரகத்தில் வைத்து நரகத்தை நிரப்புவான் என்ற ஆதாரபூர்வமான ஹதீஸ் தௌஹீத் தரப்பால் முன்வைக்கப்பட்டது. இந்த ஹதீஸை வழிகேடர்கள் சிலர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஏற்கனவே மறுத்துள்ளனர்.

‘இதிலிருந்து இழிவுபடுத்தப்பட்டவனாகவும் சபிக்கப்பட்டவனாகவும் நீ வெளியேறி விடு! அவர்களில் எவரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்கள் அனைவராலும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்.’ (7:18)

ஷைத்தானைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு நரகத்தை நிரப்புவதாக அல்லாஹ் கூறுகின்றான்.

‘….ஜின்கள், மனிதர்கள் அனைவரிலிருந்தும் நான் நரகத்தை நிரப்புவேன் என்ற உமது இரட்சகனின் வாக்கு பூர்த்தியாகி விட்டது.’ (11:119)

மனிதர்கள், ஜின்களைக் கொண்டு நரகத்தை நிரப்புவதாக இந்த வசனம் கூறுகின்றது. இதே கருத்தை 32:13 ஆம் வசனம் கூறுகின்றது.

‘உன்னாலும், அவர்களில் உன்னைப் பின்பற்றும் அனைவராலும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன் (என்றும் கூறினான்.)’ (38:85)

ஷைத்தான் மற்றும் அவனைப் பின்பற்றியவர்களைக் கொண்டு நரகத்தை நிரப்புவதாக இந்த வசனம் கூறுகின்றது. ஆனால் அந்த ஆதாரபூர்வமான ஹதீஸ் கடைசியில் அல்லாஹ்வின் கால் மூலம் தான் நரகம் நிரப்பப்படுவதாகக் கூறுகின்றது. எனவே, இந்த ஹதீஸ் மேற்குறிப்பிட்ட அத்தனை ஆயத்துக்களுக்கும் முரண்படுவதாகக் கூறி இந்த ஹதீஸை மறுத்தனர். இந்த வாதத்தை முன்வைப்பவர்கள் இந்த ஹதீஸை எப்படி எடுத்து வைக்க முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினரைப் பொருத்தவரையில் குர்ஆனில் மூடலாக சொல்லப்பட்டதை ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது என்றுதான் எடுத்துக் கொள்வர். மாற்றமாக குர்ஆனுக்கு முரணாக ஹதீஸ் பேசுவதாக அவர்கள் கருதுவதில்லை.

06. இந்த வாதத்தை முன்வைப்போர் மற்றும் பல ஹதீஸ்களையும் நிராகரிக்கும் நிர்ப்பந்தம் ஏற்படும்.

இறந்த ஒருவருக்காக உயிருடன் இருக்கும் ஒருவர் சில நிபந்தனைகளுடன் நோன்பு நோற்பது, ஸதகா கொடுப்பது, ஹஜ் செய்வது போன்ற கிரியைகளைச் செய்தால் அவை இறந்தவருக்கு சேரும் என்பது ஹதீஸ்கள் தரும் தகவலாகும். ஆனால் குர்ஆனில் மறுமை நாள் பற்றிக் கூறும் போது,

‘ஒவ்வொரு ஆத்தமாவுக்கும் அது சம்பாதித்தவற்றுக்கான கூலி…’ (20:15)

வழங்குவதற்கான நாளாகக் கூறுகின்றது. அந்தந்த ஆத்மா சம்பாதித்தவைக்குத்தான் கூலி கொடுக்கப்படும் என குர்ஆன் கூறுகின்றது.

‘மேலும், நிச்சயமாக அவனது முயற்சி விரைவில் அவனுக்குக் காண்பிக்கப்படும்.’ (53:40)

‘நிச்சயமாக இது உங்களுக்குரிய கூலியாக இருக்கிறது. மேலும், உங்களது முயற்சி நன்றி பாராட்டத்தக்கது (என்றும் கூறப்படும்.)’ (76:22)

‘(அவை) தமது முயற்சி குறித்து திருப்தியுடனிருக்கும்.’ (88:9)

‘எனவே, எவர் நம்பிக்கை கொண்டவராக நல்லறங்கள் புரிகின்றாரோ அவரது முயற்சி நிராகரிக்கப்பட மாட்டாது. நிச்சயமாக நாம் (அதை) அவருக்காகப் பதியக் கூடியவர்களாக இருக்கின்றோம்.’ (21:94)

‘மேலும், மனிதனுக்கு அவன் முயற்சித்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை.’ (53:39)

மேற்படி வசனங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்ததிற்குத்தான் கூலி வழங்கப்படும் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றது.

எனினும் ஹதீஸ்கள் நோன்பு, ஹஜ், ஸதகா என்பன சேரும் என்று கூறுகின்றன. இந்த ஹதீஸ்களையும் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி மறுக்க நேரிடும். எனினும் சரியான பாதையில் உள்ளோர் இவற்றை முரண்பாடாக அல்லாமல் விதிவிலக்காக எடுத்துக் கொள்வர்.

07. இவ்வாறே அல் குர்ஆனின் பல வசனங்கள் ஒருவருடைய பாவச் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் எனக் கூறுகின்றது.

‘(நபியே!) நீர் கூறுவீராக! ஒவ்வொரு ஆன்மாவும் (தீமையை) தனக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கின்றது. எந்த ஓர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது.’ (6:164)

‘எவர் நேர்வழியில் செல்கிறாரோ அவர் தனக்காகவே நேர்வழியில் செல்கிறார். யார் வழிகேட்டில் செல்கிறானோ அவன் தனக்கு எதிராகவே வழிகேட்டில் செல்கிறான். எந்தவோர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது. மேலும் நாம், எந்த ஒரு தூதரையும் அனுப்பாது (எவரையும்) வேதனை செய்வோராக இருந்ததில்லை.’ (17:15)

‘எந்தவோர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது. (பாவச்) சுமை கனத்த ஆன்மா அதைச் சுமப்பதற்கு (எவரையேனும்) அழைத்த போதிலும், (அழைக் கப்பட்டவன்) உறவினராக இருந்த போதிலும் அதிலிருந்து எதையும் அவன்மீது சுமத்தப்பட மாட்டாது.’ (35:18)

‘எந்தவோர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது. பின்பு உங்கள் அனைவரின் மீளுதலும் உங்கள் இரட்சகன் பாலே உள்ளது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.’ (39:7)

‘எந்தவோர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையைச் சுமக்காது.’ (53:38)

இத்தனை வசனங்களும் இந்தக் கருத்தைக் கூறுகின்றன. எனினும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் உலகில் ஒருவர் பிறருக்கு அநீதமிழைத்தால் அநீதமிழைத்தவரின் நன்மைகள் பாதிக்கப் பட்டவனுக்கு வழங்கப்படும். அவனது நன்மைகள் முடிந்துவிட்டால் பாதிக்கப்பட்டவனின் பாவத்தை அநீதமிழைக்கப்பட்டவன் சுமக்க நேரிடும் என வந்துள்ளது. குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வோர் இந்த ஹதீஸ்களையும் தமது உரைகளிலும், எழுத்துக்களிலும் பயன்படுத்துகின்றனர். இது எப்படி என்றுதான் புரியவில்லை.

ஒருவர் பாவச் சுமையை மற்றவர் சுமக்க முடியாது எனப் பல வசனங்கள் கூறுகின்றன. இதே வேளை,
‘நிச்சயமாக அவர்கள் தமது (பாவச்) சுமைகளையும், அத்துடன் (தாம் வழி கெடுத்தோரின் பாவச்) சுமைகளைத் தமது சுமைகளுடன் சுமப்பர். மறுமை நாளில் அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்படுவர்.’ (29:13)

இந்த வசனம் சிலர் சிலரின் பாவத்தை சுமப்பர் என்று வருகின்றது. குர்ஆன் ஆயத்துக்களின் வெளிப்படையான அர்த்தம் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதாகத் தென்படுகின்றது. இது போன்ற சந்தர்ப்பங்களில் இரண்டு ஆயத்துக்களையும் நிராகரிப்பதா? அல்லது ஒன்றை ஏற்று மற்றொன்றை நிராகரிப்பதா? அல்லது இரண்டையும் முரண்படாமல் விளங்கி இரண்டையும் ஏற்பதா? எனக் கோட்டால் மூன்றாவது முடிவைத்தான் ஒரு உண்மை முஸ்லிம் எடுப்பான். அந்த அடிப்படையில்தான் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் விடயத்திலும் செயற்பட வேண்டும். ஹதீஸும் வஹீ என்பதால் ஒன்றுடன் ஒன்று முரண்படுவது போல் தோன்றினாலும் ஆழமாக அவதானித்தால் ஏதேனும் ஒரு உடன்பாடு இருக்கும். அந்த உடன்பாட்டைக் கண்டுபிடித்து இரண்டையும் இணைத்து விளக்கம் சொல்ல வேண்டும். உடன்பாட்டைக் காணமுடியாவிட்டால் நான் புரிந்த கொண்டதில் ஏதோ தவறு இருக்கிறது எனக் கருதி அந்த ஹதீஸ் குறித்து மௌனம் காக்க வேண்டும்.

எனவே, குர்ஆனை ஏற்று ஹதீஸை மறுக்கும் வழிகேட்டிலிருந்த விடுபட்டு இரண்டையும் இணைத்து விளக்கம் கொள்ளும் நேரான பாதையில் பயணிப்போமாக!.

 

Ibnmajah Page – 44

இப்னுமாஜா பக்கம் – 44

பக்கம் – 44 (ஹதீஸ்கள் 431 முதல் 440 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

431 حدثنا محمد بن عبد اللَّهِ بن حَفْصِ بن هِشَامِ بن زَيْدِ بن أَنَسِ بن مَالِكٍ ثنا يحيى بن كَثِيرٍ أبو النَّضْرِ صَاحِبُ الْبَصْرِيِّ عن يَزِيدَ الرَّقَاشِيِّ عن أَنَسِ بن مَالِكٍ قال كان رسول اللَّهِ (ص) إذا تَوَضَّأَ خَلَّلَ لِحْيَتَهُ وَفَرَّجَ أَصَابِعَهُ مَرَّتَيْنِ

ஹதீஸ் எண்: 431

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்யும் போது தமது விரல்களால் இரண்டு தடவை தாடியைக் கோதிக் கழுவுவார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளரான யஸீத் அர்ரகாஷீ என்பவரும் மூன்றாவது அறிவிப்பாளரான யஹ்யா இப்னுகஸீர் என்பவரும் நம்பகமானவர்கள் அல்லர்.)

432 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا عبد الْحَمِيدِ بن حَبِيبٍ ثنا الْأَوْزَاعِيُّ ثنا عبد الْوَاحِدِ بن قَيْسٍ حدثني نَافِعٌ عن بن عُمَرَ قال كان رسول اللَّهِ (ص) إذا تَوَضَّأَ عَرَكَ عَارِضَيْهِ بَعْضَ الْعَرْكِ ثُمَّ شَبَكَ لِحْيَتَهُ بِأَصَابِعِهِ من تَحْتِهَا  

ஹதீஸ் எண்: 432

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்யும் போது முகத்தின் இரு ஓரங்களையும் சிறிது தேய்த்து விட்டு தமது விரல்களைத் தாடியின் கீழ்ப்புறமாகச் செலுத்தி தாடியைக் கோதுவார்கள் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராக இடம் பெறும் அப்துல் வாஹித் இபுன் கைஸ் என்பவரும் விமர்சிக்கப்பட்டுள்ளார் இதுவும் நம்பகமான ஹதீஸ் அல்ல.)

433 حدثنا إسماعيل بن عبد اللَّهِ الرَّقِّيُّ حدثنا محمد بن رَبِيعَةَ الْكِلَابِيُّ ثنا وَاصِلُ بن السَّائِبِ الرَّقَاشِيُّ عن أبي سَوْرَةَ عن أبي أَيُّوبَ الْأَنْصَارِيِّ قال رأيت رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ فَخَلَّلَ لِحْيَتَهُ

ஹதீஸ் எண்: 433

இங்கே 429 வது ஹதீஸையே அபூஅய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அறிவிப்பதாக கூறப்படுகின்றது.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அபூஸவ்ரா என்பவரும் அவரிடமிருந்து அறிவிக்கும் வாஸில் இப்னுஸ் ஸாயிப் அர்ரகாஷீ என்பவரும் நம்பகமானவர்கள் அல்லர். தாடியைக் கோதிக் கழுவுவது சம்பந்தமாக அறிவிக்கப்படும் எந்த ஒரு ஹதீஸும் நம்பகமானது அல்ல என்று இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் குறிப்பிட்டுள்ளனர்.)

51 بَاب ما جاء في مَسْحِ الرَّأْسِ  

434 حدثنا الرَّبِيعُ بن سُلَيْمَانَ وَحَرْمَلَةُ بن يحيى قالا أخبرنا محمد بن إِدْرِيسَ الشَّافِعِيُّ قال أَنْبَأَنَا مَالِكُ بن أَنَسٍ عن عَمْرِو بن يحيى عن أبيه أَنَّهُ قال لِعَبْدِ اللَّهِ بن زَيْدٍ وهو جَدُّ عَمْرِو بن يحيى هل تَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي كَيْفَ كان رسول اللَّهِ (ص) يَتَوَضَّأُ فقال عبد اللَّهِ بن زَيْدٍ نعم فَدَعَا بِوَضُوءٍ فَأَفْرَغَ على يَدَيْهِ فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثًا ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إلى الْمِرْفَقَيْنِ ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ ذَهَبَ بِهِمَا إلى قَفَاهُ ثُمَّ رَدَّهُمَا حتى رَجَعَ إلى الْمَكَانِ الذي بَدَأَ منه ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ

பாடம் 51. தலைக்கு மஸஹ் செய்தல்

ஹதீஸ் எண்: 434

நபி (ஸல்) அவர்கள் எப்படி ஒளூ செய்வார்கள் என்பதை எனக்கு நீங்கள் செய்து காட்ட முடியுமா? என்று அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம் அவர்களின் மகன் யஹ்யா கேட்டார். அதற்கு அவர்கள் ‘ஆம்’ எனக்கூறி தண்ணீரை வரவழைத்தார்கள்.

தனது இரு (முன்) கைகள் மீது தண்ணீர் ஊற்றி இரண்டு தடவைக் கைகளைக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் மூன்று தடவை சுத்தம் செய்தார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று தடவை கழுவினார்கள். பிறகு தமது கைகளை முழங்கை வரை இரண்டு தடவை கழுவினார்கள். பிறகு தமது இரு கைகளையும் தலைக்கு முன்னும் பின்னும் கொண்டு சென்று தலைக்கு மஸஹ் செய்தார்கள். (அதாவது) தலையில் முன்பாகத்தில் துவங்கி பிடரி வரை கைகளைக் கொண்டு சென்றார்கள். பிறகு ஆரம்பித்த இடத்திற்கே கைகளைக் கொண்டு வந்தார்கள். பின்னர் இரண்டு கால்களையும் கழுவினார்கள் என்று அம்ரு இப்னு யஹ்யா அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

435 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عَبَّادُ بن الْعَوَّامِ عن حَجَّاجٍ عن عَطَاءٍ عن عُثْمَانَ بن عَفَّانَ قال رأيت رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ فَمَسَحَ رَأْسَهُ مَرَّةً

ஹதீஸ் எண்: 435

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்யும் போது தமது தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று உஸ்மான் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் தாரகுத்னியிலும் இடம் பெற்றுள்ளது.)

436 حدثنا هَنَّادُ بن السَّرِيِّ ثنا أبو الْأَحْوَصِ عن أبي إسحاق عن أبي حَيَّةَ عن عَلِيٍّ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) مَسَحَ رَأْسَهُ مَرَّةً

ஹதீஸ் எண்: 436

நபி (ஸல்) அவர்கள் தம் தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்தார்கள் என்று அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.)

437 حدثنا محمد بن الْحَارِثِ الْمِصْرِيُّ ثنا يحيى بن رَاشِدٍ الْبَصْرِيُّ عن يَزِيدَ مولى سَلَمَةَ عن سَلَمَةَ بن الْأَكْوَعِ قال رأيت رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ فَمَسَحَ رَأْسَهُ مَرَّةً

ஹதீஸ் எண்: 437

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்த போது தமது தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்தார்கள் என்று ஸலமா இப்னுல் அக்வஃ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான யஹ்யா இப்னு ராஷித் அல்பஸரீ என்பவர் பலவீனமானவர்.)

438 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بن عَفْرَاءَ قالت تَوَضَّأَ رسول اللَّهِ (ص) فَمَسَحَ رَأْسَهُ مَرَّتَيْنِ

ஹதீஸ் எண்: 438

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்யும் போது தமது தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்தார்கள் என்று ருபய்யிஃ பின்து அப்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: திர்மிதி, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அகீல் என்பவர் குறை கூறப்பட்டிருக்கிறார்.)

52 بَاب ما جاء في مَسْحِ الْأُذُنَيْنِ  

439 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عبد اللَّهِ بن إِدْرِيسَ عن بن عَجْلَانَ عن زَيْدِ بن أَسْلَمَ عن عَطَاءِ بن يَسَارٍ عن بن عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) مَسَحَ أُذُنَيْهِ دَاخِلَهُمَا بِالسَّبَّابَتَيْنِ وَخَالَفَ إِبْهَامَيْهِ إلى ظَاهِرِ أُذُنَيْهِ فَمَسَحَ ظَاهِرَهُمَا وَبَاطِنَهُمَا

பாடம் 52. இரு காதுகளுக்கும் மஸஹ் செய்வது

ஹதீஸ் எண்: 439

‘நபி (ஸல்) அவர்கள் தமது இரு காதுகளுக்கும் மஸஹ் செய்தார்கள். இரு ஆட்காட்டி விரல்களைக் கொண்டு காதுகளின் உட்புறத்திலும் கட்டை விரல்களால் காதுகளின் வெளிப்புறத்திலுமாக மஸஹ் செய்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: நஸயி, பைஹகீ, ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)  

440 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا شَرِيكٌ ثنا عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن الرُّبَيِّعِ أَنَّ النبي (ص) تَوَضَّأَ فَمَسَحَ ظَاهِرَ أُذُنَيْهِ وَبَاطِنَهُمَا

ஹதீஸ் எண்: 440

மேற்கூறிய ஹதீஸின் கருத்தே ருபய்யிஃ வழியாக இங்கும் இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அகீல் என்பார் குறை கூறப்பட்டுள்ளார்.)
 

Ibnmajah Page – 43

இப்னுமாஜா பக்கம் – 43

பக்கம் – 43 (ஹதீஸ்கள் 421 முதல் 430 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

48 بَاب ما جاء في الْقَصْدِ في الْوُضُوءِ وكراهية التَّعَدِّي فيه  

421 حدثنا محمد بن بَشَّارٍ ثنا أبو دَاوُدَ ثنا خَارِجَةُ بن مُصْعَبٍ عن يُونُسَ بن عُبَيْدٍ عن الْحَسَنِ عن عُتَيِّ بن ضَمْرَةَ السَّعْدِيِّ عن أُبَيِّ بن كَعْبٍ قال قال رسول اللَّهِ (ص) إِنَّ لِلْوُضُوءِ شَيْطَانًا يُقَالُ له وَلَهَانُ فَاتَّقُوا وَسْوَاسَ الْمَاءِ

பாடம் 48. ஒளூவில் நடுத்தரத்தை மேற்கொள்வதும் வரம்பு மீறாதிருப்பதும்

ஹதீஸ் எண்: 421

‘ஒளூவுக்கு என்று ஒரு ஷைத்தான் இருக்கின்றான். ‘வலஹான்’ என்று அவன் குறிப்பிடப்படுவான். எனவே தண்ணீர் விஷயமாக மனக்குழப்பம் (வஸ்வாஸ்) அடைவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உபை இப்னு கஃபு (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது. இதன் ஐந்தாவது அறிவிப்பாளராகிய காரிஜா இப்னு முஸ்அப் என்பவர் நம்பகமானவர் அல்ல.)

422 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا خَالِي يَعْلَى عن سُفْيَانَ عن مُوسَى بن أبي عَائِشَةَ عن عَمْرِو بن شُعَيْبٍ عن أبيه عن جَدِّهِ قال جاء أَعْرَابِيٌّ إلى النبي (ص) فَسَأَلَهُ عن الْوُضُوءِ فَأَرَاهُ ثَلَاثًا ثَلَاثًا ثُمَّ قال هذا الْوُضُوءُ فَمَنْ زَادَ على هذا فَقَدْ أَسَاءَ أو تَعَدَّى أو ظَلَمَ 

ஹதீஸ் எண்: 422

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒளூ செய்வது பற்றிக் கேட்டார். அவருக்கு மும்மூன்று தடவை கழுவி ஒளூ செய்து காட்டினார்கள். பிறகு இதுதான் ஒளூ செய்யும் முறையாகும். யார் இதைவிட அதிகப்படுத்துகின்றாரோ அவர் தீங்கிழைத்து விட்டார், வரம்பு மீறி விட்டார், அநீதி இழைத்து விட்டார் என்றார்கள். இதை அம்ரு இப்னுஷுஐப் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் நஸயீ அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

423 حدثنا أبو إسحاق الشَّافِعِيُّ إِبْرَاهِيمُ بن مُحَمَّدِ بن الْعَبَّاسِ ثنا سُفْيَانُ عن عَمْرٍو سمع كُرَيْبًا يقول سمعت بن عَبَّاسٍ يقول بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ فَقَامَ النبي (ص) فَتَوَضَّأَ من شَنَّةٍ وُضُوءًا يُقَلِّلُهُ فَقُمْتُ فَصَنَعْتُ كما صَنَعَ

ஹதீஸ் எண்: 423

‘நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி)யின் இல்லத்தில் ஒரு இரவு தங்கினேன். நபி (ஸல்) அவர்கள் எழுந்து ஒரு தோல் பாத்திரத்திலிருந்து ஒளூ செய்தார்கள். தண்ணீரை மிகவும் குறைவாகப் பயன்படுத்தினார்கள்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

424 حدثنا محمد بن الْمُصَفَّى الْحِمْصِيُّ ثنا بَقِيَّةُ عن مُحَمَّدِ بن الْفَضْلِ عن أبيه عن سَالِمٍ عن بن عُمَرَ قال رَأَى رسول اللَّهِ (ص) رَجُلًا يَتَوَضَّأُ فقال لَا تُسْرِفْ لَا تُسْرِفْ

ஹதீஸ் எண்: 424

ஒரு மனிதர் ஒளூ செய்வதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘நீ விரயம் செய்யாதே! நீ விரயம் செய்யாதே!’ என்றார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் ஐந்தாம் அறிவிப்பாளர் ‘பகிய்யா’ என்பவர் தனக்கு முந்தைய அறிவிப்பாளரிடமிருந்து கேட்காமலே அவர் பெயரால் அறிவிப்பவர்.)

425 حدثنا محمد بن يحيى ثنا قُتَيْبَةُ ثنا بن لَهِيعَةَ عن حُيَيِّ بن عبد اللَّهِ الْمَعَافِرِيِّ عن أبي عبد الرحمن الْحُبُلِيِّ عن عبد اللَّهِ بن عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ (ص) مَرَّ بِسَعْدٍ وهو يَتَوَضَّأُ فقال ما هذا السَّرَفُ فقال أَفِي الْوُضُوءِ إِسْرَافٌ قال نعم وَإِنْ كُنْتَ على نَهَرٍ جَارٍ

ஹதீஸ் எண்: 425

ஸஃது அவர்கள் ஒளூ செய்து கொண்டிருந்த போது அவரருகே நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். அப்போது ‘ஏனிந்த விரயம்?’ என்று கேட்டார்கள். அதற்கு ஸஃது அவர்கள் ‘ஒளூவிலும் விரயம் உண்டா?’ எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்! ஓடும் நதியிலிருந்து ஒளூ செய்தாலும் விரயம் செய்யலாகாது’ என்றார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய ஹுயை இப்னு அப்துல்லாஹ் அல்மஆபிரி என்பவரும், நான்காவது அறிவிப்பாளராகிய இப்னு லஹ்யஆ என்பவரும் பலவீனமானவர்கள்.)

49 بَاب ما جاء في إِسْبَاغِ الْوُضُوءِ  

426 حدثنا أَحْمَدُ بن عَبْدَةَ ثنا حَمَّادُ بن زَيْدٍ ثنا مُوسَى بن سَالِمٍ أبو جَهْضَمٍ ثنا عبد اللَّهِ بن عُبَيْدِ اللَّهِ بن عَبَّاسٍ عن بن عَبَّاسٍ قال أَمَرَنَا رسول اللَّهِ (ص) بِإِسْبَاغِ الْوُضُوءِ

பாடம் 49. ஒளூவைப் பூரணமாகச் செய்தல்

ஹதீஸ் எண்: 426

‘ஒளூவைப் பூரணமாகச் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், நஸயீ, திர்மிதி ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

427 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا يحيى بن أبي بُكَيْرٍ ثنا زُهَيْرُ بن مُحَمَّدٍ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن سَعِيدِ بن الْمُسَيَّبِ عن أبي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ سمع رَسُولَ اللَّهِ (ص) قال ألا أَدُلُّكُمْ على ما يُكَفِّرُ الله بِهِ الْخَطَايَا وَيَزِيدُ بِهِ في الْحَسَنَاتِ قالوا بَلَى يا رَسُولَ اللَّهِ قال إِسْبَاغُ الْوُضُوءِ على الْمَكَارِهِ وَكَثْرَةُ الخطا إلى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ

ஹதீஸ் எண்: 427

‘தவறுகளை அழித்து நன்மைகளை அதிகப்படுத்தும் காரியங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித்தோழர்கள் ‘ஆம்’ என்றனர். ‘சிரமமான நேரத்தில் (குளிரின் போது) ஒளூவைப் பூரணமாகச் செய்தல், பள்ளி வாசலுக்கு அதிகம் நடந்து செல்வது, ஒரு தொழுகைக்குப் பின் மறு தொழுகையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஆகியவையே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், தாரிமி, இப்னுஹிப்பான் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

428 حدثنا يَعْقُوبُ بن حُمَيْدِ بن كَاسِبٍ ثنا سُفْيَانُ بن حَمْزَةَ عن كَثِيرِ بن زَيْدٍ عن الْوَلِيدِ بن رَبَاحٍ عن أبي هُرَيْرَةَ أَنَّ النبي (ص) قال كَفَّارَاتُ الْخَطَايَا إِسْبَاغُ الْوُضُوءِ على الْمَكَارِهِ وَإِعْمَالُ الْأَقْدَامِ إلى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ

ஹதீஸ் எண்: 428

மேற்கூறிய கருத்தே அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, முஅத்தா ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

50 بَاب ما جاء في تَخْلِيلِ اللِّحْيَةِ  

429 حدثنا محمد بن أبي عُمَرَ الْعَدَنِيُّ ثنا سُفْيَانُ عن عبد الْكَرِيمِ أبي أُمَيَّةَ عن حَسَّانَ بن بِلَالٍ عن عَمَّارِ بن يَاسِرٍ ح وحدثنا بن أبي عُمَرَ قال ثنا سُفْيَانُ عن سَعِيدِ بن أبي عَرُوبَةَ عن قَتَادَةَ عن حَسَّانَ بن بِلَالٍ عن عَمَّارِ بن يَاسِرٍ قال رأيت رَسُولَ اللَّهِ (ص) يُخَلِّلُ لِحْيَتَهُ

பாடம் 50. தாடியைக் கோதிக் கழுவுதல்

ஹதீஸ் எண்: 429

‘நபி (ஸல்) அவர்கள் தமது தாடியைக் கோதிக் கழுவ நான் பார்த்திருக்கின்றேன்’ என்று அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளர் ஹஸ்ஸான் இப்னு பிலால் என்பவரிடமிருந்து, மூன்றாவது அறிவிப்பாளர் கதாதாவும், அப்துல் கரீம் என்பாரும் எதனையும் செவியுற்றது கிடையாது. மேலும் நான்காவது அறிவிப்பாளரான ஸயீத் என்பவரிடமிருந்து ஐந்தாவது அறிவிப்பாளர் ஸுப்யான் எதனையும் செவியுற்றதில்லை, எனவே அறிவிப்பாளரிடையே தொடர்பு அறுந்த ஹதீஸாகும் இது.)  

430 حدثنا محمد بن أبي خَالِدٍ الْقَزْوِينِيُّ ثنا عبد الرَّزَّاقِ عن إِسْرَائِيلَ عن عَامِرِ بن شَقِيقٍ الْأَسَدِيِّ عن أبي وَائِلٍ عن عُثْمَانَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ فَخَلَّلَ لِحْيَتَهُ

ஹதீஸ் எண்: 430

மேற்கூறிய கருத்தையே உஸ்மான் (ரலி) அறிவிப்பதாக இங்கே கூறப்படுகின்றது.

(குறிப்பு: இதுவும் நம்பகமான ஹதீஸ் அல்ல. ஏனெனில் இதன் மூன்றாவது அறிவிப்பாளர் ஆமிர் இப்னு ஷகீக் அல் அஸதீ என்பார் நம்பிக்கைக்கு உரியவர் அல்லர்.)

 

Ibnmajah Page – 42

இப்னுமாஜா பக்கம் – 42

பக்கம் – 42 (ஹதீஸ்கள் 411 முதல் 420 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

411 حدثنا أبو بَكْرِ بن خَلَّادٍ الْبَاهِلِيُّ ثنا يحيى بن سَعِيدٍ الْقَطَّانُ عن سُفْيَانَ عن زَيْدِ بن أَسْلَمَ عن عَطَاءِ بن يَسَارٍ عن بن عَبَّاسٍ قال رأيت رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ غُرْفَةً غُرْفَةً

ஹதீஸ் எண்: 411

‘நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை ஒளூ செய்ததை நான் பார்த்திருக்கிறேன்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இக்கருத்து புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

412 حدثنا أبو كُرَيْبٍ ثنا رِشْدِينُ بن سَعْدٍ أنا الضَّحَّاكُ بن شر حبيل عن زَيْدِ بن أَسْلَمَ عن أبيه عن عُمَرَ قال رأيت رَسُولَ اللَّهِ (ص) في غَزْوَةِ تَبُوكَ تَوَضَّأَ وَاحِدَةً وَاحِدَةً

ஹதீஸ் எண்: 412

‘தபூக்’ போரின் போது நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை ஒளூ செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்’ என்று உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் ஐந்தாவது அறிவிப்பாளர் ரிஷ்தீன் இப்னு ஸஃது என்பவர் பலவீனமானவர்.)

46 بَاب الْوُضُوءِ ثَلَاثًا ثَلَاثًا  

413 حدثنا مَحْمُودُ بن خَالِدٍ الدِّمَشْقِيُّ ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ الدِّمَشْقِيُّ عن بن ثَوْبَانَ عن عَبْدَةَ بن أبي لُبَابَةَ عن شَقِيقِ بن سَلَمَةَ قال رأيت عُثْمَانَ وَعَلِيًّا يتوضأن ثَلَاثًا ثَلَاثًا وَيَقُولَانِ هَكَذَا كان وُضُوءُ رسول اللَّهِ (ص) قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ حَدَّثَنَاهُ أبو حَاتِمٍ ثنا أبو نُعَيْمٍ ثنا عبد الرحمن بن ثَابِتِ بن ثَوْبَانَ فذكر نَحْوَهُ

பாடம் 46. முன்மூன்று தடவை உறுப்புக்களைக் கழுவுதல்

ஹதீஸ் எண்: 413

உஸ்மான் (ரலி), அலி (ரலி) இருவரும் மும்மூன்று தடவை உறுப்புக்களைக் கழுவி விட்டு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே ஒளூ செய்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்கள் என்று ஷகீக் இப்னு ஸலமா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

414 حدثنا عبد الرحمن بن إبراهيم الدِّمَشْقِيُّ ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ ثنا الْأَوْزَاعِيُّ عن الْمُطَّلِبِ بن عبد اللَّهِ بن حَنْطَبٍ عن بن عُمَرَ أَنَّهُ تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا وَرَفَعَ ذلك إلى النبي (ص)

ஹதீஸ் எண்: 414

இப்னு உமர் (ரலி) அவர்கள் மும்மூன்று தடவை உறுப்புக்களைக் கழுவி விட்டு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் குறிப்பிட்டார்கள் என்று முத்தலிப் இப்னு அப்துல்லாஹ் என்பார் அறிவிக்கிறார்கள்.

415 حدثنا أبو كُرَيْبٍ ثنا خَالِدُ بن حَيَّانَ عن سَالِمٍ أبي الْمُهَاجِرِ عن مَيْمُونِ بن مِهْرَانَ عن عَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ أَنَّ النبي (ص) تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا

ஹதீஸ் எண்: 415

நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவை உறுப்புக்களைக் கழுவியதாக அபூஹுரைரா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகிய இருவரும் அறிவித்ததாக மைமூன் இப்னு மிஹ்ரான் என்பார் அறிவிக்கிறார்கள்.

416 حدثنا سُفْيَانُ بن وَكِيعٍ ثنا عِيسَى بن يُونُسَ عن فَائِدِ أبي الورقاء بن عبد الرحمن عن عبد اللَّهِ بن أبي أَوْفَى قال رأيت رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا وَمَسَحَ رَأْسَهُ مَرَّةً

ஹதீஸ் எண்: 416

நபி (ஸல்) அவர்கள் உறுப்புக்களை மும்மூன்று தடவை கழுவி விட்டு தலைக்கு (மட்டும்) ஒரு தடவை மஸஹ் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்’ என்று அப்துல்லாஹ் இப்னு அபீஅவ்பா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய ஃபாயித் இப்னு அப்துர்ரஹ்மான் நம்பகமானவர் அல்ல.)

417 حدثنا محمد بن يحيى ثنا محمد بن يُوسُفَ عن سُفْيَانَ عن لَيْثٍ عن شَهْرِ بن حَوْشَبٍ عن أبي مَالِكٍ الْأَشْعَرِيِّ قال كان رسول اللَّهِ (ص) يَتَوَضَّأُ ثَلَاثًا ثَلَاثًا

ஹதீஸ் எண்: 417

‘நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவை கழுவி ஒளூ செய்பவர்களாக இருந்தனர்’ என்று அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான லைஸ் இப்னு அபீஸைஃப் என்பவர் பலவீனமானவர்.)

418 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بن عَفْرَاءَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا

ஹதீஸ் எண்: 418

நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவை கழுவி ஒளூ செய்ததாக ருபைய்யிஃ பின்து அஃப்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

47 بَاب ما جاء في الْوُضُوءِ مَرَّةً وَمَرَّتَيْنِ وَثَلَاثًا  

419 حدثنا أبو بَكْرِ بن خَلَّادٍ الْبَاهِلِيُّ حدثني مَرْحُومُ بن عبد الْعَزِيزِ الْعَطَّارُ حدثني عبد الرَّحِيمِ بن زَيْدٍ الْعَمِّيُّ عن أبيه عن مُعَاوِيَةَ بن قُرَّةَ عن بن عُمَرَ قال تَوَضَّأَ رسول اللَّهِ (ص) وَاحِدَةً وَاحِدَةً فقال هذا وُضُوءُ من لَا يَقْبَلُ الله منه صَلَاةً إلا بِهِ ثُمَّ تَوَضَّأَ ثِنْتَيْنِ ثِنْتَيْنِ فقال هذا وُضُوءُ الْقَدْرِ من الْوُضُوءِ وَتَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا وقال هذا أَسْبَغُ الْوُضُوءِ وهو وُضُوئِي وَوُضُوءُ خَلِيلِ اللَّهِ إبراهيم وَمَنْ تَوَضَّأَ هَكَذَا ثُمَّ قال عِنْدَ فَرَاغِهِ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلا الله وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فُتِحَ له ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ يَدْخُلُ من أَيِّهَا شَاءَ

பாடம் 47. இரண்டிரண்டு தடவை கழுவி ஒளூ செய்தல்

ஹதீஸ் எண்: 419

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி ஒளூ செய்து விட்டு ‘இதுவே இறைவன் தொழுகையை ஒப்புக் கொள்ள அவசியமான அளவாகும்’ என்றார்கள். இரண்டிரண்டு தடவை கழுவி ஒளூ செய்து விட்டு, ‘இது ஒளூவின் சரியான – போதுமான – அளவாகும்’ என்றார்கள். மும்மூன்று தடவை ஒளூ செய்து விட்டு ‘இதுவே ஒளூவின் முழுமையான அளவாகும். இதுவே இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த ஒளூவாகும். யார் இவ்வாறு ஒளூ செய்து விட்டு முடிவில், ‘அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹுவரஸுலுஹு என்று கூறுகிறாரோ அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படுகின்றன அவர் விரும்பிய வாசல் வழியாக பிரவேசிக்கலாம்’ என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய ஸைத் அல் அம்மீ என்பவரும் நான்காவது அறிவிப்பாளரான அவரது மகன் அப்துர்ரஹீம் என்பவரும் பலவீனமானவர்கள். இதன் இரண்டாவது அறிவிப்பாளர் முஆவியா இப்னு குர்ரா என்பவர் தனக்கு முந்தைய அறிவிப்பாளர் இப்னு உமரைச் சந்தித்தது கிடையாது.)  

420 حدثنا جَعْفَرُ بن مُسَافِرٍ ثنا إسماعيل بن قَعْنَبٍ أبو بِشْرٍ ثنا عبد اللَّهِ بن عَرَادَةَ الشَّيْبَانِيُّ عن زَيْدِ بن الْحَوَارِيِّ عن مُعَاوِيَةَ بن قُرَّةَ عن عُبَيْدِ بن عُمَيْرٍ عن أُبَيِّ بن كَعْبٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) دَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ مَرَّةً مَرَّةً فقال هذا وَظِيفَةُ الْوُضُوءِ أو قال وُضُوءٌ من لم يَتَوَضَّأْهُ لم يَقْبَلْ الله له صَلَاةً ثُمَّ تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ثُمَّ قال هذا وُضُوءٌ من تَوَضَّأَهُ أَعْطَاهُ الله كِفْلَيْنِ من الْأَجْرِ ثُمَّ تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا فقال هذا وُضُوئِي وَوُضُوءُ الْمُرْسَلِينَ من قَبْلِي

ஹதீஸ் எண்: 420

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி ஒளூ செய்து விட்டு ‘இது ஒளூவின் போதிய அளவாகும்’ என்றோ ‘இந்த அளவு கூட செய்யாவிட்டால் இறைவன் தொழுகையை ஏற்கமாட்டான் என்றோ கூறினார்கள். பிறகு இரண்டிரண்டு தடவைகள் ஒளூ செய்து விட்டு ‘இவ்வாறு ஒளூ செய்பவருக்கு இரு மடங்கு கூலிகளை இறைவன் அளிக்கிறான்’ என்றார்கள். பிறகு மும்மூன்று தடவை ஒளூ செய்து விட்டு, ‘இதுவே எனக்கு முன் சென்ற நபிமார்களின் ஒளூவாகும்’ என்றார்கள். இதை உபை இப்னு கஃபு (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இங்கேயும் ஸைத் அல் அம்மீ என்பார் இடம் பெறுகிறார். அவர் வழியாக அறிவிக்கும் அப்துல்லாஹ் இப்னு அராதா என்பவரும் பலவீனமானவர்.)

 

Ibnmajah Page – 41

இப்னுமாஜா பக்கம் – 41

பக்கம் – 41 (ஹதீஸ்கள் 401 முதல் 410 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

42 بَاب التَّيَمُّنِ في الْوُضُوءِ  

401 حدثنا هَنَّادُ بن السَّرِيِّ ثنا أبو الْأَحْوَصِ عن أَشْعَثَ بن أبي الشَّعْثَاءِ ح وحدثنا سُفْيَانُ بن وَكِيعٍ ثنا عُمَرُ بن عُبَيْدٍ الطَّنَافِسِيُّ عن أَشْعَثَ بن أبي الشَّعْثَاءِ عن أبيه عن مَسْرُوقٍ عن عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) كان يُحِبُّ التَّيَمُّنَ في الطُّهُورِ إذا تَطَهَّرَ وفي تَرَجُّلِهِ إذا تَرَجَّلَ وفي انْتِعَالِهِ إذا انْتَعَلَ

பாடம் 42. ஒளூவின் போது வலப்புறமாக துவக்குதல்

ஹதீஸ் எண்: 401

‘நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்யும் போதும், தலை வாரும் போதும், செருப்பணியும் போதும் வலப்புறமாகத் துவக்குவதை விரும்பக் கூடியவர்களாக இருந்தனர்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், திர்மிதி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

402 حدثنا محمد بن يحيى ثنا أبو جَعْفَرٍ النُّفَيْلِيُّ ثنا زُهَيْرُ بن مُعَاوِيَةَ عن الْأَعْمَشِ عن أبي صَالِحٍ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) إذا تَوَضَّأْتُمْ فابدؤوا بِمَيَامِنِكُمْ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ ثنا أبو حَاتِمٍ ثنا يحيى بن صَالِحٍ وبن نُفَيْلٍ وَغَيْرُهُمَا قالوا ثنا زُهَيْرٌ فذكر نَحْوَهُ

ஹதீஸ் எண்: 402

‘நீங்கள் ஒளூ செய்தால் உங்களின் வலப்புறத்தைக் கொண்டு துவக்குங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

43 بَاب الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ من كَفٍّ وَاحِدٍ  

403 حدثنا عبد اللَّهِ بن الْجَرَّاحِ وأبو بَكْرِ بن خَلَّادٍ الْبَاهِلِيُّ ثنا عبد الْعَزِيزِ بن مُحَمَّدٍ عن زَيْدِ بن أَسْلَمَ عن عَطَاءِ بن يَسَارٍ عن بن عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) مَضْمَضَ وَاسْتَنْشَقَ من غُرْفَةٍ وَاحِدَةٍ

பாடம் 43. ஒரு கை நீரால் வாய் கொப்பளித்து மூக்கை சுத்தம் செய்தல்

ஹதீஸ் எண்: 403

‘நபி (ஸல்) அவர்கள் ஒரு கை நீரால் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்பவர்களாக இருந்தனர்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். 

404 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا شَرِيكٌ عن خَالِدِ بن عَلْقَمَةَ عن عبد خَيْرٍ عن عَلِيٍّ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ فَمَضْمَضَ ثَلَاثًا وَاسْتَنْشَقَ ثَلَاثًا من كَفٍّ وَاحِدٍ

ஹதீஸ் எண்: 404

‘நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்த போது ஒரு கைநீரில் மூன்று தடவை வாய் கொப்பளித்து மூன்று தடவை மூக்கையும் சுத்தம் செய்தார்கள்’ என்று அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.

405 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو الْحُسَيْنِ الْعُكْلِيُّ عن خَالِدِ بن عبد اللَّهِ عن عَمْرِو بن يحيى عن أبيه عن عبد اللَّهِ بن يزيد الْأَنْصَارِيِّ قال أَتَانَا رسول اللَّهِ (ص) فَسَأَلَنَا وَضُوءًا فَأَتَيْتُهُ بِمَاءٍ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ من كَفٍّ وَاحِدٍ

ஹதீஸ் எண்: 405

எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்து தண்ணீர் கேட்டார்கள். நான் அவர்களிடம் தண்ணீர் கொண்டு வந்தேன். ஒரு கை நீரில் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள்’ என்று அப்துல்லாஹ் இப்னு யஸீத் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)  

44 بَاب الْمُبَالَغَةِ في الِاسْتِنْشَاقِ وَالِاسْتِنْثَارِ  

406 حدثنا أَحْمَدُ بن عَبْدَةَ ثنا حَمَّادُ بن زَيْدٍ عن مَنْصُورٍ ح وحدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو الْأَحْوَصِ عن مَنْصُورٍ عن هِلَالِ بن يَسَافٍ عن سَلَمَةَ بن قَيْسٍ قال قال لي رسول اللَّهِ (ص) إذا تَوَضَّأْتَ فَانْثُرْ وإذا اسْتَجْمَرْتَ فَأَوْتِرْ

பாடம் 44. மூக்கையும் சுத்தம் செய்வது அவசியம்

ஹதீஸ் எண்: 406

‘நீ ஒளூ செய்யும் போது மூக்கையும் சுத்தம் செய்! (கற்களால்) சுத்தம் செய்வதென்றால் ஒற்றை எண்ணிக்கையில் பயன்படுத்து!’ என்று நபி (ஸல்) கூறியதாக ஸலமா இப்னு கைஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் நஸயீ, திர்மிதி ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

407 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا يحيى بن سُلَيْمٍ الطَّائِفِيُّ عن إسماعيل بن كَثِيرٍ عن عَاصِمِ بن لَقِيطِ بن صَبْرَةَ عن أبيه قال قلت يا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي عن الْوُضُوءِ قال أَسْبِغْ الْوُضُوءَ وَبَالِغْ في الِاسْتِنْشَاقِ إلا أَنْ تَكُونَ صَائِمًا

ஹதீஸ் எண்: 407

அல்லாஹ்வின் தூதரே! ஒளூ செய்வது பற்றி எனக்குக் கூறுங்கள்! என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒளூவைப் பூரணமாகச் செய், நீ நோன்பு நோற்றிருக்கும் சமயத்தில் தவிர மற்ற சமயங்களில் மூக்கை நன்கு சுத்தம் செய்! என்று கூறினார்கள் என லகீத் இப்னு ஸப்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.) 

408 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا إسحاق بن سُلَيْمَانَ ح وحدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن بن أبي ذِئْبٍ عن قَارِظِ بن شَيْبَةَ عن أبي غَطَفَانَ الْمُرِّيِّ عن بن عَبَّاسٍ قال قال رسول اللَّهِ (ص) اسْتَنْثِرُوا مَرَّتَيْنِ بَالِغَتَيْنِ أو ثَلَاثًا

ஹதீஸ் எண்: 408 

‘நீங்கள் நல்ல முறையில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் மூக்கைச் சுத்தம் செய்யுங்கள்!’ என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது.) 

409 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا زَيْدُ بن الْحُبَابِ وَدَاوُدُ بن عبد اللَّهِ قالا ثنا مَالِكُ بن أَنَسٍ عن بن شِهَابٍ عن أبي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) من تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ وَمَنْ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ

ஹதீஸ் எண்: 409

ஒருவர் ஒளூச் செய்யும் போது மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். தூய்மை செய்ய கற்களைப் பயன்படுத்தினால் ஒற்றை எண்ணிக்கையில் பயன்படுத்த வேண்டும் என் நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், முஅத்தா, நஸயீ, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)  

45 بَاب ما جاء في الْوُضُوءِ مَرَّةً مَرَّةً  

410 حدثنا عبد اللَّهِ بن عَامِرِ بن زُرَارَةَ ثنا شَرِيكُ بن عبد اللَّهِ النَّخَعِيُّ عن ثَابِتِ بن أبي صَفِيَّةَ الثُّمَالِيِّ قال سَأَلْتُ أَبَا جَعْفَرٍ قلت له حُدِّثْتَ عن جَابِرِ بن عبد اللَّهِ أَنَّ النبي (ص) تَوَضَّأَ مَرَّةً مَرَّةً قال نعم قلت وَمَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَثَلَاثًا ثَلَاثًا قال نعم

பாடம் 45. உறுப்புக்களை ஒவ்வொரு தடவை கழுவி ஒளூ செய்தல்

ஹதீஸ் எண்: 410

நபி (ஸல்) ஒவ்வொரு தடவை (உறுப்புக்களைக் கழுவி) ஒளூ செய்தார்கள் என்று ஜாபிர் (ரலி) உங்களுக்குக் கூறினார்களா? என்று அபூஜஃபர் அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆம்’ என்றார்கள். ‘இரண்டிரண்டு தடவைகள்?’ என்று நான் கேட்ட போது ‘ஆம்’ என்றனர். ‘மும்மூன்று தடவைகள்?’ என்று நான் கேட்ட போது ‘ஆம்’ என்றனர் என ஸாபித் இப்னு அபூஸஃபிய்யா என்பார் அறிவிக்கின்றார்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது. இதை அறிவிக்கும் ஸாபித் இப்னு அபீஸஃபிய்யா என்பவர் பலவீனமானவர்.)

 

 

இப்னுமாஜா பக்கம் – 40

இப்னுமாஜா பக்கம் – 40

பக்கம் – 40 (ஹதீஸ்கள் 391 முதல் 400 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்

391 حدثنا بِشْرُ بن آدَمَ ثنا زَيْدُ بن الْحُبَابِ حدثني الْوَلِيدُ بن عُقْبَةَ حدثني حُذَيْفَةُ بن أبي حُذَيْفَةَ الْأَزْدِيُّ عن صَفْوَانَ بن عَسَّالٍ قال صَبَبْتُ على النبي (ص) الْمَاءَ في السَّفَرِ وَالْحَضَرِ في الْوُضُوءِ

ஹதீஸ் எண்: 391

‘பிரயாணத்தின் போதும் ஊரிலிருக்கும் போதும் நபி (ஸல்) அவர்களுக்கு ஒளூ செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றியுள்ளேன்’ என்று ஸஃப்வான் இப்னு அஸ்ஸால் (ரலி) குறிப்பிடுகின்றார்கள்.

392 حدثنا كُرْدُوسُ بن أبي عبد اللَّهِ الْوَاسِطِيُّ ثنا عبد الْكَرِيمِ بن رَوْحٍ ثنا أبي رَوْحُ بن عَنْبَسَةَ بن سَعِيدِ بن أبي عَيَّاشٍ مولى عُثْمَانَ بن عَفَّانَ عن أبيه عَنْبَسَةَ بن سَعِيدٍ عن جَدَّتِهِ أُمِّ أبيه أُمِّ عَيَّاشٍ وَكَانَتْ أَمَةً لِرُقَيَّةَ بِنْتِ رسول اللَّهِ (ص) قالت كنت أوضىء رَسُولَ اللَّهِ (ص) أنا قَائِمَةٌ وهو قَاعِدٌ

ஹதீஸ் எண்: 392

‘நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்திருக்கும் போது நான் நின்று கொண்டு அவர்கள் ஒளூ செய்வதற்காக தண்ணீர் ஊற்றியுள்ளேன் என்று உம்மு அய்யாஷ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான ரவ்ஹ் இப்னு அன்பஸா என்பவர் யாரென்று தெரியாதவராவார். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.)

40 بَاب الرَّجُلِ يَسْتَيْقِظُ من مَنَامِهِ هل يُدْخِلُ يَدَهُ في الْإِنَاءِ قبل أَنْ يَغْسِلَهَا  

393 حدثنا عبد الرحمن بن إبراهيم الدِّمَشْقِيُّ ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ ثنا الْأَوْزَاعِيُّ حدثني الزُّهْرِيُّ عن سَعِيدِ بن الْمُسَيَّبِ وَأَبِي سَلَمَةَ بن عبد الرحمن أَنَّهُمَا حَدَّثَاهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ كان يقول قال رسول اللَّهِ (ص) إذا اسْتَيْقَظَ أحدكم من اللَّيْلِ فلا يُدْخِلْ يَدَهُ في الْإِنَاءِ حتى يُفْرِغَ عليها مَرَّتَيْنِ أو ثَلَاثًا فإن أَحَدَكُمْ لَا يَدْرِي فِيمَ بَاتَتْ يَدُهُ

பாடம் 40. தூங்கி எழுந்ததும் கைகளைக் கழுவாமல் பாத்திரத்தில் கையை விடலாகாது.

ஹதீஸ் எண்: 393

‘உங்களில் எவரும் இரவில் உறங்கி எழுந்தால், இரண்டு அல்லது மூன்று தடவை கைகளைக் கழுவாமல் பாத்திரத்தில் கைகளை விட வேண்டாம். ஏனெனில் இரவில் அவரது கைகள் எங்கெங்கே பட்டன என்பது அவருக்குத் தெரியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது. எனினும் ‘இரண்டு அல்லது மூன்று தடவை’ என்ற வாசகம் புகாரியில் இல்லை. முஸ்லிமில் மூன்று தடவை என்று இடம் பெற்றுள்ளது.)

394 حدثنا حَرْمَلَةُ بن يحيى ثنا عبد اللَّهِ بن وَهْبٍ أخبرني بن لَهِيعَةَ وَجَابِرُ بن إسماعيل عن عُقَيْلٍ عن بن شِهَابٍ عن سَالِمٍ عن أبيه قال قال رسول اللَّهِ (ص) إذا اسْتَيْقَظَ أحدكم من نَوْمِهِ فلا يُدْخِلْ يَدَهُ في الْإِنَاءِ حتى يَغْسِلَهَا

ஹதீஸ் எண்: 394

‘உங்களில் எவரும் உறங்கி எழுந்தால் தன்கையைக் கழுவாமல் பாத்திரத்தில் விட வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

395 حدثنا إسماعيل بن تَوْبَةَ ثنا زِيَادُ بن عبد اللَّهِ الْبَكَّائِيُّ عن عبد الْمَلِكِ بن أبي سُلَيْمَانَ عن أبي الزُّبَيْرِ عن جَابِرٍ قال قال رسول اللَّهِ (ص) إذا قام أحدكم من النَّوْمِ فَأَرَادَ أَنْ يَتَوَضَّأَ فلا يُدْخِلْ يَدَهُ في وَضُوئِهِ حتى يَغْسِلَهَا فإنه لَا يدرى أَيْنَ بَاتَتْ يَدُهُ ولا على ما وَضَعَهَا

ஹதீஸ் எண்: 395

‘உங்களில் எவரேனும் உறக்கத்திலிருந்து எழுந்து ஒளூ செய்ய நாடினால் கையைக் கழுவாமல் பாத்திரத்தில் விட வேண்டாம். ஏனெனில் அவரது கை எங்கெங்கு பட்டது என்பதும், அவர் எங்கெங்கு கைகளை வைத்தார் என்பதும் அவருக்குத் தெரியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

396 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو بَكْرِ بن عَيَّاشٍ عن أبي إسحاق عن الْحَارِثِ قال دَعَا عَلِيٌّ بِمَاءٍ فَغَسَلَ يَدَيْهِ قبل أَنْ يُدْخِلَهُمَا الْإِنَاءَ ثُمَّ قال هَكَذَا رأيت رَسُولَ اللَّهِ (ص) صَنَعَ

ஹதீஸ் எண்: 396

அலி (ரலி) அவர்கள் தண்ணீர் வரவழைத்து, கைகளைப் பாத்திரத்தில் விடுவதற்கு முன் கழுவிக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை தான் பார்த்திருப்பதாகவும் கூறினார்கள் என ஹாரிஸ் என்பார் அறிவிக்கிறார்.

41 بَاب ما جاء في التَّسْمِيَةِ في الْوُضُوءِ  

397 حدثنا أبو كُرَيْبٍ محمد بن الْعَلَاءِ ثنا زَيْدُ بن الْحُبَابِ ح وحدثنا محمد بن بَشَّارٍ ثنا أبو عَامِرٍ الْعَقَدِيُّ ح وحدثنا أَحْمَدُ بن مَنِيعٍ ثنا أبو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قالوا ثنا كَثِيرُ بن زَيْدٍ عن رُبَيْحِ بن عبد الرحمن بن أبي سَعِيدٍ عن أبيه عن أبي سعيد أَنَّ النبي (ص) قال لَا وُضُوءَ لِمَنْ لم يذكر اسْمَ اللَّهِ عليه

பாடம் 41. ஒளூ செய்யும் போது இறைநாமம் கூறுவது

ஹதீஸ் எண்: 397

‘அல்லாஹ்வின் பெயரைக் கூறாதவருக்கு ஒளூ இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான கஸீர் இப்னு ஸைத் என்பவர் பலவீனமானவர் என்று இப்னு முயீன், அபூஹாதம், புகாரி மற்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.)

398 حدثنا الْحَسَنُ بن عَلِيٍّ الْخَلَّالُ ثنا يَزِيدُ بن هَارُونَ أنا يَزِيدُ بن عِيَاضٍ ثنا أبو ثِفَالٍ عن رَبَاحِ بن عبد الرحمن بن أبي سُفْيَانَ أَنَّهُ سمع جَدَّتَهُ بِنْتَ سَعِيدِ بن زَيْدٍ تَذْكُرُ أنها سَمِعَتْ أَبَاهَا سَعِيدَ بن زَيْدٍ يقول قال رسول اللَّهِ (ص) لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ له ولا وُضُوءَ لِمَنْ لم يذكر اسْمَ اللَّهِ عليه

ஹதீஸ் எண்: 398

‘ஒளூ இல்லாதவருக்குத் தொழுகை இல்லை, அல்லாஹ்வின் பெயர் கூறாதவருக்கு ஒளூ இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸயீத் இப்னு ஸைத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய ரபாஹ் இப்னு அப்துர் ரஹ்மான் என்பவரும், நான்காவது அறிவிப்பாளரான அபூஸிகார் என்பவரும் யாரென்றே தெரியாதவர்கள் என அபூஹாதம், அபூஸுர்ஆ ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.)

399 حدثنا أبو كُرَيْبٍ وَعَبْدُ الرحمن بن إبراهيم قالا ثنا بن أبي فُدَيْكٍ ثنا محمد بن مُوسَى بن أبي عبد اللَّهِ عن يَعْقُوبَ بن سَلَمَةَ اللَّيْثِيِّ عن أبيه عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ له ولا وُضُوءَ لِمَنْ لم يذكر اسْمَ اللَّهِ عليه

ஹதீஸ் எண்: 399

மேற்கூறிய ஹதீஸின் கருத்தே இங்கும் இடம் பெறுகின்றது.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய யஃகூப் இப்னு ஸலமா என்பவர் தம் தந்தை வாயிலாக இதை அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது. ஆனால் இவர் தம் தந்தையிடம் எதையும் செவியுற்றதற்குச் சான்று இல்லை என்று புகாரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.)

400 حدثنا عبد الرحمن بن إبراهيم ثنا بن أبي فُدَيْكٍ عن عبد الْمُهَيْمِنِ بن عَبَّاسِ بن سَهْلِ بن سَعْدٍ السَّاعِدِيِّ عن أبيه عن جَدِّهِ عن النبي (ص) قال لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ له ولا وُضُوءَ لِمَنْ لم يذكر اسْمَ اللَّهِ عليه ولا صَلَاةَ لِمَنْ لَا يُصَلِّي علي النبي ولا صَلَاةَ لِمَنْ لَا يُحِبُّ الْأَنْصَارَ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ حدثنا أبو حَاتِمٍ ثنا عِيسَى عبيس بن مَرْحُومٍ الْعَطَّارُ ثنا عبد الْمُهَيْمِنِ بن عَبَّاسٍ فذكر نَحْوَهُ

ஹதீஸ் எண்: 400

மேற்கூறிய கருத்துடன் ‘யார் நபியின் மீது ஸலவாத் கூறவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை’ என்ற வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான அப்துல் முஹைமின் இப்னு அப்பாஸ் என்பார் அனைத்து அறிஞர்களாலும் பலவீனமானவர் என்று நிராகரிக்கப்பட்டவராவார். இந்தக் கருத்தில் வரும் எல்லா ஹதீஸ்களும் பலவீனமானதாக இருந்தாலும் நஸயியில் இடம் பெறும் 78 வது ஹதீஸ் பலமானதாக உள்ளதாக அதன் அடிப்படையில் பிஸ்மில்லாஹ் கூறுவது ஸுன்னத் ஆகும்.)

இப்னுமாஜா பக்கம் – 39

இப்னுமாஜா பக்கம் – 39

பக்கம் – 39 (ஹதீஸ்கள் 381 முதல் 390 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்

36 بَاب الرَّجُلِ وَالْمَرْأَةِ يتوضأن من إِنَاءٍ وَاحِدٍ  

381 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا مَالِكُ بن أَنَسٍ حدثني نَافِعٌ عن بن عُمَرَ قال كان الرِّجَالُ وَالنِّسَاءُ يتوضؤون على عَهْدِ رسول اللَّهِ (ص) من إِنَاءٍ وَاحِدٍ

பாடம் 36. ஆணும் பெண்ணும் ஒரு பாத்திரத்திலிருந்து ஒளூ செய்தல்

ஹதீஸ் எண்: 381

‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் ஒரு பாத்திரத்திலிருந்து ஒளூ செய்பவர்களாக இருந்தனர்’ என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஅத்தா, அஹ்மத், நஸயீ, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

382 حدثنا عبد الرحمن بن إبراهيم الدِّمَشْقِيُّ ثنا أَنَسُ بن عِيَاضٍ ثنا أُسَامَةُ بن زَيْدٍ عن سَالِمِ أبي النُّعْمَانِ وهو بن سَرْحٍ عن أُمِّ صُبَيَّةَ الْجُهَنِيَّةِ قالت رُبَّمَا اخْتَلَفَتْ يَدِي وَيَدُ رسول اللَّهِ (ص) في الْوُضُوءِ من إِنَاءٍ وَاحِدٍ قال أبو عَبْد اللَّهِ بْن مَاجَةَ سمعت مُحَمَّدًا يقول أُمُّ صُبَيَّةَ هِيَ خَوْلَةُ بِنْتُ قَيْسٍ فَذَكَرْتُ لِأَبِي زُرْعَةَ فقال صَدَقَ

ஹதீஸ் எண்: 382

‘ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் ஒளூ செய்யும் போது எங்கள் கைகள் போட்டி போட்டுக் கொள்ளும்’ என்று கவ்லா பின்து கைஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

383 حدثنا محمد بن يحيى ثنا دَاوُدُ بن شَبِيبٍ ثنا حَبِيبُ بن أبي حَبِيبٍ عن عَمْرِو بن هَرَمٍ عن عِكْرِمَةَ عن عَائِشَةَ عن النبي (ص) أَنَّهُمَا كَانَا يتوضأن جميعا لِلصَّلَاةِ

ஹதீஸ் எண்: 383

‘நபி (ஸல்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களும் தொழுகைக்காக சேர்ந்து ஒளூ செய்பவர்களாக இருந்தனர்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

37 بَاب الْوُضُوءِ بِالنَّبِيذِ  

384 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ عن أبيه ح وحدثنا محمد بن يحيى ثنا عبد الرَّزَّاقِ عن سُفْيَانَ عن أبي فَزَارَةَ الْعَبْسِيِّ عن أبي زَيْدٍ مولى عَمْرِو بن حُرَيْثٍ عن عبد اللَّهِ بن مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال له لَيْلَةَ الْجِنِّ عِنْدَكَ طَهُورٌ قال لَا إلا شَيْءٌ من نَبِيذٍ في إِدَاوَةٍ قال تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ فَتَوَضَّأَ هذا حَدِيثُ وَكِيعٍ

பாடம் 37. நபீத் எனும் பானத்தில் ஒளூ செய்தல்

(குறிப்பு: தண்ணீரில் பேரீத்தம் பழங்களையோ, திராட்சையையோ போட்டு வைத்து, தண்ணீருக்கு சுவை ஏற்றுவது அரபியர் வழக்கம். போதை தரும் அளவுக்கு நீண்ட நாட்கள் ஊற வைப்பதும் உண்டு. போதை தராத அளவுக்கு ஒன்றிரண்டு நாட்கள் ஊற வைப்பதும் உண்டு. போதை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தா விட்டாலும் இரண்டுமே ‘நபீத்’ எனப்படும்.)

ஹதீஸ் எண்: 384

‘உம்மிடம் தூய்மை செய்யும் தண்ணீர் உள்ளதா?’ என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டனர். அதற்கு நான், ‘தோல் பாத்திரத்தில் உள்ள ‘நபீத்’ தவிர வேறொன்றும் இல்லை’ என்றேன். (அதில் போடப்பட்டிருப்பது) நல்ல பேரீத்தம்பழம் தண்ணீரும் தூய்மையானது’ என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அதில் ஒளூ செய்தார்கள். இது நடந்தது ஜின்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்த இரவிலாகும் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளரான அபூஸைத் என்பார் யாரென்றே அறியப்படாதவர். இது பற்றிய அதிக விபரத்தை திர்மிதி 28 வது ஹதீஸில் காண்க.)

385 حدثنا الْعَبَّاسُ بن الْوَلِيدِ الدِّمَشْقِيُّ ثنا مَرْوَانُ بن مُحَمَّدٍ ثنا بن لَهِيعَةَ ثنا قَيْسُ بن الْحَجَّاجِ عن حَنَشٍ الصَّنْعَانِيِّ عن عبد اللَّهِ بن عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال لابن مَسْعُودٍ لَيْلَةَ الْجِنِّ مَعَكَ مَاءٌ قال لَا إلا نَبِيذًا في سَطِيحَةٍ فقال رسول اللَّهِ (ص) تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ صُبَّ عَلَيَّ قال فَصَبَبْتُ عليه فَتَوَضَّأَ بِهِ

ஹதீஸ் எண்: 385

மேலே கூறிய ஹதீஸுடன் ‘ஒளூ செய்வதற்கு எனக்குத் தண்ணீர் ஊற்றுவாயாக’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் அவ்வாறே ஊற்றியதாகவும் கூறப்படுகின்றது.

(குறிப்பு: இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானதன்று. ஏனெனில் பலவீனமான இப்னு லஹ்யஆ என்பார் இதன் ஐந்தாம் அறிவிப்பாளராக இடம் பெறுகிறார்.)

38 بَاب الْوُضُوءِ بِمَاءِ الْبَحْرِ  

386 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا مَالِكُ بن أَنَسٍ حدثني صَفْوَانُ بن سُلَيْمٍ عن سَعِيدِ بن سَلَمَةَ هو من آلِ بن الْأَزْرَقِ أَنَّ الْمُغِيرَةَ بن أبي بُرْدَةَ وهو من بَنِي عبد الدَّارِ حدثه أَنَّهُ سمع أَبَا هُرَيْرَةَ يقول جاء رَجُلٌ إلى رسول اللَّهِ (ص) فقال يا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ من الْمَاءِ فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا أَفَنَتَوَضَّأُ من مَاءِ الْبَحْرِ فقال رسول اللَّهِ (ص) هو الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ

பாடம் 38. கடல் நீரால் ஒளூ செய்தல்

ஹதீஸ் எண்: 386

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் கடலில் பிரயாணம் செய்யும் போது சிறிதளவு தண்ணீரை எடுத்துச் செல்கிறோம். அந்தத் தண்ணீரால் நாங்கள் ஒளூ செய்தால் தாகத்தால் தவிப்போம். எனவே கடல் நீரால் நாங்கள் ஒளூ செய்யலாமா? என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘கடல் நீர் தூய்மை செய்யத் தக்கதும் அதில் இறந்தவைகள் உண்ண அனுதிக்கப்பட்டதுமாகும்’ என்று விடையளித்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: நஸயீ, அபூதாவூத், திர்மிதி, முஅத்தா, இப்னு குஸைமா, இப்னுஹிப்பான் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

387 حدثنا سَهْلُ بن أبي سَهْلٍ ثنا يحيى بن بُكَيْرٍ حدثني اللَّيْثُ بن سَعْدٍ عن جَعْفَرِ بن رَبِيعَةَ عن بَكْرِ بن سَوَادَةَ عن مُسْلِمِ بن مَخْشِيٍّ عن بن الْفِرَاسِيِّ قال كنت أَصِيدُ وَكَانَتْ لي قِرْبَةٌ أَجْعَلُ فيها مَاءً وَإِنِّي تَوَضَّأْتُ بِمَاءِ الْبَحْرِ فَذَكَرْتُ ذلك لِرَسُولِ اللَّهِ (ص) فقال هو الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ

ஹதீஸ் எண்: 387

நான் வேட்டைக்குச் செல்பவனாக இருந்தேன். அப்போது ஒரு தோல் பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துச் செல்வேன் (தண்ணீர் குறைவாக இருந்ததால்) கடல் நீரில் ஒளூ செய்தேன். பின்னர் இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது ‘அதன் தண்ணீர் தூய்மை செய்யத்தக்கதும், அதில் இறந்தவை உண்ணத்தக்கதுமாகும்’ என்று கூறினார்கள் என இப்னுல் பராஸீ என்பார் அறிவிக்கிறார்.

(குறிப்பு: இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களே. எனினும் இப்னுல் பிராஸீ என்பவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்ததில்லை. அவரது தந்தைதான் நபித்தோழர். எனவே தந்தை வழியாகவே இதை அவர் அறிவித்திருக்கக் கூடும்.)

388 حدثنا محمد بن يحيى ثنا أَحْمَدُ بن حَنْبَلٍ ثنا أبو الْقَاسِمِ بن أبي الزِّنَادِ قال حدثني إسحاق بن حَازِمٍ عن عُبَيْدِ اللَّهِ هو بن مِقْسَمٍ عن جَابِرٍ أَنَّ النبي (ص) سُئِلَ عن مَاءِ الْبَحْرِ فقال هو الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ حدثنا عَلِيُّ بن الْحَسَنِ الْهَسْتَجَانِيُّ ثنا أَحْمَدُ بن حَنْبَلٍ ثنا أبو الْقَاسِمِ بن أبي الزِّنَادِ ثنى إسحاق بن حَازِمٍ عن عُبَيْدِ اللَّهِ هو بن مِقْسَمٍ عن جَابِرِ بن عبد اللَّهِ أَنَّ النبي (ص) فذكر نَحْوَهُ

ஹதீஸ் எண்: 388

நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்ட போது ‘அதன் தண்ணீர் தூய்மை செய்யத்தக்கதும், அதில் இறந்தவை உண்ணத்தக்கதுமாகும்’ என் விடையளித்ததாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாகிம், தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

39 بَاب الرَّجُلِ يَسْتَعِينُ على وُضُوئِهِ فَيَصُبُّ عليه  

389 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا عِيسَى بن يُونُسَ ثنا الْأَعْمَشُ عن مُسْلِمِ بن صُبَيْحٍ عن مَسْرُوقٍ عن الْمُغِيرَةِ بن شُعْبَةَ قال خَرَجَ النبي (ص) لِبَعْضِ حَاجَتِهِ فلما رَجَعَ تَلَقَّيْتُهُ بِالْإِدَاوَةِ فَصَبَبْتُ عليه فَغَسَلَ يَدَيْهِ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثُمَّ ذَهَبَ يَغْسِلُ ذِرَاعَيْهِ فَضَاقَتْ الْجُبَّةُ فَأَخْرَجَهُمَا من تَحْتِ الْجُبَّةِ فَغَسَلَهُمَا وَمَسَحَ على خُفَّيْهِ ثُمَّ صلى بِنَا

பாடம் 39. ஒளூ செய்வதற்காக பிறர் உதவியை நாடுதல்

ஹதீஸ் எண்: 389

‘நபி (ஸல்) அவர்கள் தம் தேவையை நிறைவேற்றுவதற்காகப் புறப்பட்டார்கள். அவர்கள் திரும்பி வந்த போது, தண்ணீர் பாத்திரத்துடன் அவர்களை எதிர் கொண்டேன். அவர்கள் (ஒளூ செய்வதற்காக) தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது இரு முன்னங்கைகளையும் கழுவி, பின்னர் தமது முகத்தைக் கழுவினார்கள். பிறகு தம் கைகளைக் கழுவ முயன்ற போது, அவர்களின் ஆடை (இறுக்கமாக இருந்ததால் கைகளை சுருட்ட) சிரமமாக இருந்தது. தம் இரு கைகளையும் சட்டையின் கீழ்ப்புறம் இருந்து வெளிப்படுத்தி இருகைகளையும் கழுவினார்கள். தமது இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்து பின்னர் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள் என்று முகீரா பின் ஷுஃபா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, தாரிமி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

390 حدثنا محمد بن يحيى ثنا الْهَيْثَمُ بن جَمِيلٍ ثنا شَرِيكٌ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قالت أَتَيْتُ النبي (ص) بِمِيضَأَةٍ فقال اسْكُبِي فَسَكَبْتُ فَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَأَخَذَ مَاءً جَدِيدًا فَمَسَحَ بِهِ رَأْسَهُ مُقَدَّمَهُ وَمُؤَخَّرَهُ وَغَسَلَ قَدَمَيْهِ ثَلَاثًا ثَلَاثًا

ஹதீஸ் எண்: 390

‘நான் நபி (ஸல்) அவர்களிடம் தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொண்டு வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘ஊற்றுவாயாக!’ எனக் கூறினார்கள். நான் ஊற்றியதும் தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள்’ என்று ருபைய்யிஃ பின்து முஅவ்வித் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூதிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

இப்னுமாஜா பக்கம் – 38

இப்னுமாஜா பக்கம் – 38

பக்கம் – 38 (ஹதீஸ்கள் 371 முதல் 380 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்

371 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن سِمَاكِ عن عِكْرِمَةَ عن بن عَبَّاسٍ أَنَّ امْرَأَةً من أَزْوَاجِ النبي (ص) اغْتَسَلَتْ من جَنَابَةٍ فَتَوَضَّأَ واغتسل النبي (ص) من فَضْلِ وَضُوئِهَا

ஹதீஸ் எண்: 371

‘நபி (ஸல்) அவர்களின் மனைவி ஒருவர் குளித்து விட்டு மீதம் வைத்த தண்ணீரில் நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்தார்கள்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான ஸிமாக் இப்னு ஹர்பு என்பவர் நம்பகமானவரே, எனினும் இவர் இக்ரிமா வழியாக அறிவிப்பவை மட்டும் நம்பகமான செய்தி அல்ல. ஏனெனில் நினைவு தடுமாறிய முதுமைக் காலத்திலேயே இக்ரிமா வழியாக இவர் அறிவித்துள்ளார். இந்த ஹதீஸும் இக்ரிமா வழியாக ‘ஸிமாக்’ அறிவிக்கும் ஹதீஸ்களில் ஒன்றாகும். ஆயினும் இதன் கருத்தை வலுப்படுத்தக் கூடிய வேறு ஹதீஸ்கள் உள்ளதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)

372 حدثنا محمد بن الْمُثَنَّى وَمُحَمَّدُ بن يحيى وإسحاق بن مَنْصُورٍ قالوا ثنا أبو دَاوُدَ ثنا شَرِيكٌ عن سِمَاكٍ عن عِكْرِمَةَ عن بن عَبَّاسٍ عن مَيْمُونَةَ زَوْجِ النبي (ص) أَنَّ النبي (ص) تَوَضَّأَ بِفَضْلِ غُسْلِهَا من الْجَنَابَةِ

ஹதீஸ் எண்: 372

முந்தைய ஹதீஸின் கருத்தே இங்கும் இடம் பெறுகிறது.

34 بَاب النَّهْيِ عن ذلك  

373 حدثنا محمد بن بَشَّارٍ ثنا أبو دَاوُدَ ثنا شُعْبَةُ عن عَاصِمٍ الْأَحْوَلِ عن أبي حَاجِبٍ عن الْحَكَمِ بن عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ (ص) نهى أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ

பாடம் 34. மேற்கூறியவாறு செய்யலாகாது என்பது பற்றியது

ஹதீஸ் எண்: 373

பெண்கள் ஒளூ செய்து விட்டு மீதம் வைத்த தண்ணீரில் ஆண்கள் ஒளூ செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று ஹகம் இப்னு அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், திர்மிதியிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

374 حدثنا محمد بن يحيى ثنا الْمُعَلَّى بن أَسَدٍ ثنا عبد الْعَزِيزِ بن الْمُخْتَارِ ثنا عَاصِمٌ الْأَحْوَلُ عن عبد اللَّهِ بن سَرْجِسَ قال نهى رسول اللَّهِ (ص) أَنْ يَغْتَسِلَ الرَّجُلُ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ وَالْمَرْأَةُ بِفَضْلِ الرَّجُلِ وَلَكِنْ يَشْرَعَانِ جميعا قال أبو عَبْد اللَّهِ بْن مَاجَةَ الصَّحِيحُ هو الْأَوَّلُ وَالثَّانِي وَهْمٌ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ ثنا أبو حَاتِمٍ وأبو عُثْمَانَ الْمُحَارِبِيُّ قالا ثنا الْمُعَلَّى بن أَسَدٍ نَحْوَهُ

ஹதீஸ் எண்: 374

ஆண்கள் மீதம் வைத்த தண்ணீரில் பெண்கள் குளிப்பதையும் பெண்கள் மீதம் வைத்த தண்ணீரில் ஆண்கள் குளிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் எனினும் இருவரும் (ஒரு பாத்திரத்திலிருந்து) ஒரே நேரத்தில் குளிக்கத் துவங்கலாம் என்று அனுமதித்தார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு ஸர்ஜிஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

முதலாவது ஹதீஸ் தான் சரியானது, இரண்டாவது ஹதீஸ் தவறானது என்று இப்னுமாஜா கூறுகிறேன்.

(குறிப்பு: இது அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது. இப்னுமாஜா அவர்கள் இந்த ஹதீஸை தவறானது என்பதற்கு ஆதாரம் எதையும் கூறவில்லை, இதில் குறைகாண நாமறிந்தவரை முகாந்திரம் எதுவும் இல்லை.)

375 حدثنا محمد بن يحيى ثنا عُبَيْدُ اللَّهِ عن إِسْرَائِيلَ عن أبي إسحاق عن الْحَارِثِ عن عَلِيٍّ قال كان النبي (ص) وَأَهْلُهُ يَغْتَسِلُونَ من إِنَاءٍ وَاحِدٍ ولا يَغْتَسِلُ أَحَدُهُمَا بِفَضْلِ صَاحِبِهِ

ஹஹதீஸ் எண்: 375

‘நபி (ஸல்) அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் ஒரு பாத்திரத்திலிருந்து குளிப்பவர்களாக இருந்தனர். ஆயினும் ஒருவர் மீதம் வைத்ததிலிருந்து மற்றவர் குளிக்க மாட்டார்கள்’ என்று அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான அபூஇஸ்ஹாக் என்ற அப்துல்லாஹ் இப்னு மைஸரா என்பவர் ஹதீஸ் கலை வல்லுனர்களால் பலவீனமாக்கப்பட்டவராவார்.)

35 بَاب الرَّجُلِ وَالْمَرْأَةِ يَغْتَسِلَانِ من إِنَاءٍ وَاحِدٍ  

376 حدثنا محمد بن رُمْحٍ أنا اللَّيْثُ بن سَعْدٍ عن بن شِهَابٍ ح وحدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن الزُّهْرِيِّ عن عُرْوَةَ عن عَائِشَةَ قالت كنت أَغْتَسِلُ أنا وَرَسُولُ اللَّهِ (ص) من إِنَاءٍ وَاحِدٍ

பாடம் 35. ஆண்களும் பெண்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிக்கலாம்

ஹதீஸ் எண்: 376

‘நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்திலிருந்து குளிப்பவர்களாக இருந்தோம்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத், நஸயியிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

377 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن عَمْرِو بن دِينَارٍ عن جَابِرِ بن زَيْدٍ عن بن عَبَّاسٍ عن خَالَتِهِ مَيْمُونَةَ قالت كنت أَغْتَسِلُ أنا وَرَسُولُ اللَّهِ (ص) من إِنَاءٍ وَاحِدٍ

ஹதீஸ் எண்: 377

மேற்கூறிய ஹதீஸ் மைமூனா (ரலி) வழியாக இங்கே இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: இதுவும் நஸயியில் இடம் பெற்றுள்ளது.)

378 حدثنا أبو عَامِرٍ الْأَشْعَرِيُّ عبد اللَّهِ بن عَامِرٍ ثنا يحيى بن أبي بُكَيْرٍ ثنا إِبْرَاهِيمُ بن نَافِعٍ عن بن أبي نَجِيحٍ عن مُجَاهِدٍ عن أُمِّ هَانِئٍ أَنَّ النبي (ص) اغْتَسَلَ وَمَيْمُونَةَ من إِنَاءٍ وَاحِدٍ في قَصْعَةٍ فيها أَثَرُ الْعَجِينِ

ஹதீஸ் எண்: 378

‘குழைத்த மாவின் அடையாளம் படிந்திருந்த ஒரு பாத்திரத்தில் மைமூனா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களும் குளிப்பவர்களாக இருந்தனர்’ என்று உம்முஹானி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: உம்முஹானி அவர்கள் வழியாக அறிவிக்கும் முஜாஹித் அவர்கள் உம்முஹானியின் காலத்தவர் அல்ல என்பதால் இது சரியானதல்ல, எனினும் நஸயியில் இடம் பெறும் இதே ஹதீஸில் உம்முஹானி வழியாக ‘அதாஃ’ என்பவர் அறிவிப்பதாக உள்ளதால் இது ஹஸன் நிலைக்கு உயர்கிறது.)

379 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا محمد بن الْحَسَنِ الْأَسَدِيُّ ثنا شَرِيكٌ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن جَابِرِ بن عبد اللَّهِ قال كان رسول اللَّهِ (ص) وَأَزْوَاجُهُ يَغْتَسِلُونَ من إِنَاءٍ وَاحِدٍ

ஹதீஸ் எண்: 379

‘நபி (ஸல்) அவர்களும், அவர்களது மனைவியரும் ஒரு பாத்திரத்திலிருந்து குளிப்பவர்களாக இருந்தனர்’ என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

380 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا إسماعيل بن عُلَيَّةَ عن هِشَامٍ الدَّسْتُوَائِيِّ عن يحيى بن أبي كَثِيرٍ عن أبي سَلَمَةَ عن زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ عن أُمِّ سَلَمَةَ أنها كانت وَرَسُولُ اللَّهِ (ص) يَغْتَسِلَانِ من إِنَاءٍ وَاحِدٍ

ஹதீஸ் எண்: 380

‘நபி (ஸல்) அவர்களும் உம்முஸலமா (ரலி) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்பவர்களாக இருந்தனர்’ என்று உம்முஸலமா (ரலி) அவர்களின் புதல்வி ஸைனப் என்பார் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இது நஸயியிலும் இடம் பெற்றுள்ளது.)

இப்னுமாஜா பக்கம் – 37

இப்னுமாஜா பக்கம் – 37

பக்கம் – 37 (ஹதீஸ்கள் 361 முதல் 370 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்

361 حدثنا عِصْمَةُ بن الْفَضْلِ وَيَحْيَى بن حَكِيمٍ قالا ثنا حَرَمِيُّ بن عُمَارَةَ بن أبي حَفْصَةَ ثنا حَرِيشُ بن الْخِرِّيتِ أن بن أبي مُلَيْكَةَ عن عَائِشَةَ قالت كنت أصنع لِرَسُولِ اللَّهِ (ص) ثَلَاثَةَ آنِيَةٍ من اللَّيْلِ مُخَمَّرَةً إِنَاءً لِطَهُورِهِ وَإِنَاءً لِسِوَاكِهِ وَإِنَاءً لِشَرَابِهِ

ஹதீஸ் எண்: 361

‘நான் நபி (ஸல்) அவர்களுக்காக, அவர்கள் குடிப்பதற்காக ஒன்றும் பல்துலக்குவதற்காக ஒன்றும், தூய்மைப்படுத்துவதற்காக ஒன்றும் ஆக மூன்று பாத்திரங்களை இரவில் அவர்களுக்காக தயார் செய்து மூடி வைப்பேன்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: கரீஷி இப்னுல் கிர்ரீத் என்பவர் இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளராக இடம் பெறுகிறார். இவர் அனைத்து அறிஞர்களாலும் பலவீனமானவராகக் கருதப்படுவார். எனவே இந்தச் செய்தி நம்பகமானது அல்ல.)

362 حدثنا أبو بَدْرٍ عَبَّادُ بن الْوَلِيدِ ثنا مُطَهَّرُ بن الْهَيْثَمِ ثنا عَلْقَمَةُ بن أبي جَمْرَةَ الضُّبَعِيُّ عن أبيه أبي جَمْرَةَ عن بن عَبَّاسٍ قال كان رسول اللَّهِ (ص) لَا يَكِلُ طُهُورَهُ إلى أَحَدٍ ولا صَدَقَتَهُ التي يَتَصَدَّقُ بها يَكُونُ هو الذي يَتَوَلَّاهَا بِنَفْسِهِ

ஹதீஸ் எண்: 362

‘நபி (ஸல்) அவர்கள் (ஒளூ செய்தல் மற்றும் தன்னைத் துப்புரவு செய்தல் போன்ற) தூய்மை செய்யும் காரியங்களை எவரிடமும் ஒப்படைக்க மாட்டார்கள். மேலும் தாங்கள் செய்யும் தர்மத்தை தாங்களே பொறுப்பாளராக இருந்து தன் கையாலேயே செய்வார்கள்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளராகிய முதஹ்ஹிர் இப்னு ஹைஸம் என்பவர் நம்பகமானவர் அல்ல.)

31 بَاب غَسْلِ الْإِنَاءِ من وُلُوغِ الْكَلْبِ  

363 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو مُعَاوِيَةَ عن الْأَعْمَشِ عن أبي رَزِينٍ قال رأيت أَبَا هُرَيْرَةَ يَضْرِبُ جَبْهَتَهُ بيده وَيَقُولُ يا أَهْلَ الْعِرَاقِ أَنْتُمْ تَزْعُمُونَ أَنِّي أَكْذِبُ على رسول اللَّهِ (ص) لِيَكُونَ لَكُمْ الْمَهْنَأُ وعلى الْإِثْمُ أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ (ص) يقول إذا وَلَغَ الْكَلْبُ في إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ

பாடம் 31. நாய் வாய் வைத்து விட்ட பாத்திரங்களை கழுவுதல்

ஹதீஸ் எண்: 363

இராக் வாசிகளே! நான் நபி (ஸல்) அவர்கள் பெயரால் பொய் கூறுவதாக நீங்கள் கருதுகிறீர்கள். (இவ்வாறு பொய் சொல்லி இருந்தால்) எனக்கு அதன் பாவமும் உங்களுக்கு கூலியும் கிடைக்கும். (எனக்குப் பாவத்தை ஏற்படுத்தும் போது நான் எப்படி பொய் சொல்லி இருப்பேன்.) என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் தமது கையை தமது நெற்றியில் அடித்துக் கூறினார்கள்.

மேலும் தொடர்ந்து, ‘உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் விட்டு விடுமானால் அப்பாத்திரத்தை அவர் ஏழுமுறை கழுவிக் கொள்ள வேண்டும்’ என்று நபி (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என்றும் குறிப்பிட்டார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது பாரா மட்டும் முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

364 حدثنا محمد بن يحيى ثنا رَوْحُ بن عُبَادَةَ ثنا مَالِكُ بن أَنَسٍ عن أبي الزِّنَادِ عن الْأَعْرَجِ عن أبي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال إذا ولغ الْكَلْبُ في إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ

ஹதீஸ் எண்: 364

முந்தைய ஹதீஸின் இரண்டாவது பாராவே இங்கும் இடம் பெற்றுள்ளது.

365 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا شَبَابَةُ ثنا شُعْبَةُ عن أبي التَّيَّاحِ قال سمعت مُطَرِّفًا يحدث عن عبد اللَّهِ بن الْمُغَفَّلِ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال إذا وَلَغَ الْكَلْبُ في الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ وَعَفِّرُوهُ الثَّامِنَةَ بِالتُّرَابِ

ஹதீஸ் எண்: 365

பாத்திரங்களில் நாய் வாய் விட்டுவிடுமானால் அதை ஏழு தடவைக் குழுவிக் கொள்ளுங்கள்! எட்டாவது தடவையாக மண்ணால் தேய்த்துக் கழுவுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், நஸயீ, அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

366 حدثنا محمد بن يحيى ثنا بن أبي مَرْيَمَ أَنْبَأَنَا عبيد اللَّهِ بن عُمَرَ عن نَافِعٍ عن بن عُمَرَ قال قال رسول اللَّهِ (ص) إذا وَلَغَ الْكَلْبُ في إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ

ஹதீஸ் எண்: 366

இங்கே 364 வது ஹதீஸ் இப்னு உமர் (ரலி) வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

32 بَاب الْوُضُوءِ بِسُؤْرِ الْهِرَّةِ وَالرُّخْصَةِ في ذلك  

367 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا زَيْدُ بن الْحُبَابِ أَنْبَأَنَا مَالِكُ بن أَنَسٍ أخبرني إسحاق بن عبد اللَّهِ بن أبي طَلْحَةَ الْأَنْصَارِيُّ عن حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بن رِفَاعَةَ عن كَبْشَةَ بِنْتِ كَعْبٍ وَكَانَتْ تَحْتَ بَعْضِ وَلَدِ أبي قَتَادَةَ أنها صَبَّتْ لِأَبِي قَتَادَةَ مَاءً يَتَوَضَّأُ بِهِ فَجَاءَتْ هِرَّةٌ تَشْرَبُ فَأَصْغَى لها الْإِنَاءَ فَجَعَلْتُ أَنْظُرُ إليه فقال يا ابْنَةَ أَخِي أَتَعْجَبِينَ قال رسول اللَّهِ (ص) إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ هِيَ من الطَّوَّافِينَ أو الطَّوَّافَاتِ

பாடம் 32. பூனையின் எச்சில் நீரால் ஒளூ செய்யலாமா?

ஹதீஸ் எண்: 367

(எனது மாமனார்) அபூகதாதா (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்கு ஒளூ செய்யும் நீரை நான் வார்த்துக் கொடுத்தேன். அப்போது ஒரு பூனை வந்து அதிலிருந்து குடிக்கலாயிற்று. அது குடித்து முடியும் வரை அவர் பாத்திரத்தை (அது குடிப்பதற்கு ஏற்றவாறு) சாய்த்துக் கொண்டிருந்தார். அவர்களையே நான் கூர்ந்து நோக்குவதைக் கண்ட போது ‘என் சகோதரர் மகளே! நீ வியப்படைகிறாயா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். அதற்கு அவர்கள் ‘பூனைகள் அசுத்தமானவை அல்ல’ அவை உங்களைச் சுற்றி வரக்கூடியவை (அண்டி வாழ்பவை)’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக குறிப்பிட்டார்கள் என்று கப்ஷா பின்து கஃபு (ரலி) அறிவிக்கிறார்கள்.

368 حدثنا عَمْرُو بن رَافِعٍ وإسماعيل بن تَوْبَةَ قالا ثنا يحيى بن زَكَرِيَّا بن أبي زَائِدَةَ عن حَارِثَةَ عن عَمْرَةَ عن عَائِشَةَ قالت كنت أَتَوَضَّأُ أنا وَرَسُولُ اللَّهِ (ص) من إِنَاءٍ وَاحِدٍ قد أَصَابَتْ منه الْهِرَّةُ قبل ذلك

ஹதீஸ் எண்: 368

‘முன்பே பூனை வாய் விட்டிருந்த ஒரு பாத்திரத்தில் நானும் நபி (ஸல்) அவர்களும் ஒளூ செய்பவர்களாக இருந்தோம்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாம் அறிவிப்பாளராக ஹாரிஸா இப்னு அபிர் ரிஜால் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவராவார்.)

369 حدثنا محمد بن بَشَّارٍ ثنا عُبَيْدُ اللَّهِ بن عبد الْمَجِيدِ يَعْنِي أَبَا بَكْرٍ الْحَنَفِيَّ ثنا عبد الرحمن بن أبي الزِّنَادِ عن أبيه عن أبي سَلَمَةَ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) الْهِرَّةُ لَا تَقْطَعُ الصَّلَاةَ لِأَنَّهَا من مَتَاعِ الْبَيْتِ

ஹதீஸ் எண்: 369

‘பூனை தொழுகையை முறிக்காது, ஏனெனில் அது வீட்டுப் பொருட்களில் ஒன்றாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளர் அப்துர்ரஹ்மான் இப்னு அபிஸ் ஸினாத் என்பவர் நம்பகமானவரே. எனினும் இவரது நினைவாற்றல் இவர் பாக்தாதுக்கு வந்த கால கட்டத்தில் மாறி விட்டது.)

33 بَاب الرُّخْصَةِ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ  

370 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو الْأَحْوَصِ عن سِمَاكِ بن حَرْبٍ عن عِكْرِمَةَ عن بن عَبَّاسٍ قال اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النبي (ص) في جَفْنَةٍ فَجَاءَ النبي (ص) لِيَغْتَسِلَ أو يَتَوَضَّأَ فقالت يا رَسُولَ اللَّهِ إني كنت جُنُبًا فقال الْمَاءُ لَا يُجْنِبُ

பாடம் 33. பெண்கள் ஒளூ செய்து விட்டு மீதம் வைத்த தண்ணீரில் மற்றவர்கள் ஒளூ செய்யலாம்

ஹதீஸ் எண்: 370

நபி (ஸல்) அவர்களின் மனைவியருள் ஒருவர் அகன்ற பாத்திரத்தில் குளித்தார்கள். அந்த தண்ணீரில் ஒளூ செய்யவோ குளிக்கவோ நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! நான் கடமையான குளிப்பை இதில் நிறைவேற்றியுள்ளேன்’ என்று அந்த மனைவி கூறிய போது, ‘தண்ணீர் தவிர்க்கப்படுவதில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், நஸயீ, அபூதாவூத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

இப்னுமாஜா பக்கம் – 36

இப்னுமாஜா பக்கம் – 36

பக்கம் – 36 (ஹதீஸ்கள் 351 முதல் 360 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்

351 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا مَسْلَمَةُ بن عَلِيٍّ ثنا الْأَوْزَاعِيُّ عن يحيى بن أبي كَثِيرٍ عن أبي سَلَمَةَ عن أبي هُرَيْرَةَ قال مَرَّ رَجُلٌ على النبي (ص) وهو يَبُولُ فَسَلَّمَ عليه فلم يَرُدَّ عليه فلما فَرَغَ ضَرَبَ بِكَفَّيْهِ الْأَرْضَ فَتَيَمَّمَ ثُمَّ رَدَّ عليه السَّلَامَ

ஹதீஸ் எண்: 351

‘நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த போது அவர்களை ஒரு மனிதர் கடந்து சென்றார். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறவில்லை. சிறுநீர் கழித்து முடித்ததும் தமது இரு கைகளையும் தரையில் அடித்து ‘தயம்மும்’ செய்து விட்டு அவரது ஸலாமுக்கு பதில் கூறினார்கள்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் ஐந்தாவது அறிவிப்பாளராகிய மஸ்லமா இப்னு அலி என்பவர் ஹதீஸ்கலை வல்லுனர்களிடம் நம்பகமானவர் அல்ல. எனவே இது பலவீனமான ஹதீஸாகும். ஆயினும் நம்பகமான வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் இந்த ஹதீஸ் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.)

352 حدثنا سُوَيْدُ بن سَعِيدٍ ثنا عِيسَى بن يُونُسَ عن هَاشِمِ بن الْبَرِيدِ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن جَابِرِ بن عبد اللَّهِ أَنَّ رَجُلًا مَرَّ على النبي (ص) وهو يَبُولُ فَسَلَّمَ عليه فقال له رسول اللَّهِ (ص) إذا رَأَيْتَنِي على مِثْلِ هذه الْحَالَةِ فلا تُسَلِّمْ عَلَيَّ فَإِنَّكَ إن فَعَلْتَ ذلك لم أَرُدَّ عَلَيْكَ

ஹதீஸ் எண்: 352

‘நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது அவர்களைக் கடந்து சென்ற ஒரு மனிதர் அவர்கள் மீது ஸலாம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இது போன்ற நிலையில் நீ என்னைக் கண்டால் என் மீது ஸலாம் கூறாதே! அவ்வாறு நீ கூறினால் உனக்கு நான் பதிலளிக்க மாட்டேன்’ என்று கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

353 حدثنا عبد اللَّهِ بن سَعِيدٍ وَالْحُسَيْنُ بن أبي السَّرِيِّ الْعَسْقَلَانِيُّ قالا ثنا أبو دَاوُدَ عن سُفْيَانَ عن الضَّحَّاكِ بن عُثْمَانَ عن نَافِعٍ عن بن عُمَرَ قال مَرَّ رَجُلٌ على النبي (ص) وهو يَبُولُ فَسَلَّمَ عليه فلم يَرُدَّ عليه

ஹதீஸ் எண்: 353

‘நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த போது அவர்களைக் கடந்து சென்ற ஒரு மனிதர், அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘அவருக்கு பதில் ஸலாம் கூறவில்லை’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதி, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

8 بَاب الِاسْتِنْجَاءِ بِالْمَاءِ  

354 حدثنا هَنَّادُ بن السَّرِيِّ ثنا أبو الْأَحْوَصِ عن مَنْصُورٍ عن إبراهيم عن الْأَسْوَدِ عن عَائِشَةَ قالت ما رأيت رَسُولَ اللَّهِ (ص) خَرَجَ من غَائِطٍ قَطُّ إلا مَسَّ مَاءً

பாடம் 28. தண்ணீரால் சுத்தம் செய்தல்

ஹதீஸ் எண்: 354

‘நபி (ஸல்) அவர்கள் மலம் கழித்தவுடன் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடியவர்களாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

355 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا صَدَقَةُ بن خَالِدٍ ثنا عُتْبَةُ بن أبي حَكِيمٍ حدثني طَلْحَةُ بن نَافِعٍ أبو سُفْيَانَ قال حدثني أبو أَيُّوبَ الْأَنْصَارِيُّ وَجَابِرُ بن عبد اللَّهِ وَأَنَسُ بن مَالِكٍ أَنَّ هذه الْآيَةَ نَزَلَتْ ) فيه رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ ( قال رسول اللَّهِ (ص) يا مَعْشَرَ الْأَنْصَارِ إِنَّ اللَّهَ قد أَثْنَى عَلَيْكُمْ في الطُّهُورِ فما طُهُورُكُمْ قالوا نَتَوَضَّأُ لِلصَّلَاةِ وَنَغْتَسِلُ من الْجَنَابَةِ وَنَسْتَنْجِي بِالْمَاءِ قال فَهُوَ ذَاكَ فَعَلَيْكُمُوهُ

ஹதீஸ் எண்: 355

அங்கே தூய்மையை விரும்பக் கூடிய மக்கள் உள்ளனர். (9:108) என்ற வசனம் இறங்கிய போது, ‘அன்ஸார்களே! உங்கள் தூய்மையை இறைவன் புகழ்ந்துரைக்கின்றான். உங்கள் தூய்மை தான் என்ன?’ என்ற நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் ‘நாங்கள் தொழுகைக்காக ஒளூச் செய்கிறோம். குளிப்புக் கடமையானால் குளித்து விடுகிறோம். (மலஜலம் கழித்து விட்டு) தண்ணீரால் சுத்தம் செய்கிறோம்’ என்று விடையளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இதுதான் இறைவன் பாராட்டிய தூய்மையாகும். இதைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள்!’ என்று கூறினார்கள். இதை அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்தச் செய்தி நம்பகமானது அல்ல. ஏனெனில் அபூஅய்யூப் (ரலி) இவ்வாறு அறிவிப்பதாகக் கூறும் ‘தல்ஹா இப்னு நாபிவு’ என்பார் அபூஅய்யூப் (ரலி)யின் காலத்தவர் அல்ல. மேலும் இதன் மூன்றாவது அறிவிப்பாளரான உத்பா இப்னு அபீஹகீம் என்பவர் பலவீனமானவராவார்.)

356 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن شَرِيكٍ عن جَابِرٍ عن زَيْدٍ الْعَمِّيِّ عن أبي الصِّدِّيقِ النَّاجِيِّ عن عَائِشَةَ أَنَّ النبي (ص) كان يَغْسِلُ مَقْعَدَتَهُ ثَلَاثًا قال بن عُمَرَ فَعَلْنَاهُ فَوَجَدْنَاهُ دَوَاءً وَطُهُورًا قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ ثنا أبو حَاتِمٍ وَإِبْرَاهِيمُ بن سُلَيْمَانَ الْوَاسِطِيُّ قالا ثنا أبو نُعَيْمٍ ثنا شَرِيكٌ نَحْوَهُ

ஹதீஸ் எண்: 356

‘நபி (ஸல்) அவர்கள் (மலம் கழித்ததும்) மூன்று தடவை கழுவக் கூடியவர்களாக இருந்தனர்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், இவ்வாறு நாங்களும் செய்யலானோம். இதனால் நல்ல சுத்தமும், நோய் நிவாரணமும் ஏற்பட நாங்கள் கண்டோம்’ என்று இப்னு உமர் (ரலி) குறிப்பிடுகின்றார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான ‘ஸைத் அல் அம்மீ’ என்பவரும் நான்காவது அறிவிப்பாளரான ‘ஜாபிர் அல்ஜுஃபீ’ என்பவரும் நம்பகமானவர்கள் அல்லர்’ எனவே இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அன்று)

357 حدثنا أبو كُرَيْبٍ ثنا مُعَاوِيَةُ بن هِشَامٍ عن يُونُسَ بن الحرث عن إبراهيم بن أبي مَيْمُونَةَ عن أبي صَالِحٍ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) نَزَلَتْ في أَهْلِ قُبَاءَ ) فيه رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ ( قال كَانُوا يَسْتَنْجُونَ بِالْمَاءِ فَنَزَلَتْ فِيهِمْ هذه الْآيَةُ

ஹதீஸ் எண்: 357

இங்கே 355 வது ஹதீஸின் கருத்து இடம் பெற்றுள்ளது.

9 بَاب من دَلَكَ يَدَهُ بِالْأَرْضِ بَعْدَ الِاسْتِنْجَاءِ  

358 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ عن شَرِيكٍ عن إبراهيم بن جَرِيرٍ عن أبي زُرْعَةَ بن عَمْرِو بن جَرِيرٍ عن أبي هُرَيْرَةَ أَنَّ النبي (ص) قَضَى حَاجَتَهُ ثُمَّ اسْتَنْجَى من تَوْرٍ ثُمَّ دَلَكَ يَدَهُ بِالْأَرْضِ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ ثنا أبو حَاتِمٍ ثنا سَعِيدُ بن سُلَيْمَانَ الْوَاسِطِيُّ عن شَرِيكٍ نَحْوَهُ

பாடம் 29. மலஜலம் கழித்து சுத்தம் செய்தபின் கைகளைத் தரையில் தேய்த்துக் கழுவுதல்

ஹதீஸ் எண்: 358

‘நபி (ஸல்) அவர்கள் மலம் கழித்த பின் பித்தளைப் பாத்திரத்தின் மூலம் சுத்தம் செய்தார்கள். பின்பு தமது கையைத் தரையில் தேய்த்தார்கள்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான ஷரீக் என்பவர் நினைவாற்றல் குறைந்தவர் என்பதால் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல.)

359 حدثنا محمد بن يحيى ثنا أبو نُعَيْمٍ ثنا أَبَانُ بن عبد اللَّهِ حدثني إِبْرَاهِيمُ بن جَرِيرٍ عن أبيه أَنَّ نَبِيَّ اللَّهِ (ص) دخل الْغَيْضَةَ فَقَضَى حَاجَتَهُ فَأَتَاهُ جَرِيرٌ بِإِدَاوَةٍ من مَاءٍ فَاسْتَنْجَى منها وَمَسَحَ يَدَهُ بِالتُّرَابِ

ஹதீஸ் எண்: 359

நபி (ஸல்) அவர்கள் ஒரு காட்டுக்குள் நுழைந்து தம் தேவையை நிறைவேற்றினார்கள். நான் அவர்களிடம் தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொண்டு வந்தேன். அதிலிருந்து தூய்மை செய்து விட்டு தம் கையை மண்ணில் தடவி தேய்த்தார்கள் என்று ஜரீர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

30 بَاب تَغْطِيَةِ الْإِنَاءِ  

360 حدثنا محمد بن يحيى ثنا يَعْلَى بن عُبَيْدٍ ثنا عبد الْمَلِكِ بن أبي سُلَيْمَانَ عن أبي الزُّبَيْرِ عن جَابِرٍ قال أَمَرَنَا النبي (ص) أَنْ نُوكِيَ أَسْقِيَتَنَا وَنُغَطِّيَ آنِيَتَنَا

பாடம் 30. பாத்திரங்களை மூடி வைத்தல்

ஹதீஸ் எண்: 360

எங்களின் தோல் பாத்திரங்களின் வாய்களைக் கட்டிவைத்துக் கொள்ளுமாறும், எங்களின் பாத்திரங்களை மூடி வைக்குமாறும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)