Category Archives: இப்னுமாஜா

இப்னுமாஜா பக்கம் – 31

இப்னுமாஜா பக்கம் – 31
பக்கம் – 31 (ஹதீஸ்கள் 301 முதல் 310 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்

301 حدثنا هَارُونُ بن إسحاق ثنا عبد الرحمن الْمُحَارِبِيُّ عن إسماعيل بن مُسْلِمٍ عن الْحَسَنِ وَقَتَادَةَ عن أَنَسِ بن مَالِكٍ قال كان النبي (ص) إذا خَرَجَ من الْخَلَاءِ قال الْحَمْدُ لِلَّهِ الذي أَذْهَبَ عنى الْأَذَى وَعَافَانِي

ஹதீஸ் எண்: 301

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் போது ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்ஹப அன்னில் அதா வஆஃபானி’ என்று கூறுபவர்களாக இருந்தனர் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய இஸ்மாயில் இப்னு முஸ்லிம் என்பவர் ஹதீஸ்கலை வல்லுனர்களின் ஒருமித்த முடிவின் பிரகாரம் பலவீனமானவராவார்)

11 بَاب ذِكْرِ اللَّهِ عز وجل على الْخَلَاءِ وَالْخَاتَمِ في الْخَلَاءِ  

302 حدثنا سُوَيْدُ بن سَعِيدٍ ثنا يحيى بن زَكَرِيَّا بن أبي زَائِدَةَ عن أبيه عن خَالِدِ بن سَلَمَةَ عن عبد اللَّهِ الْبَهِيِّ عن عُرْوَةَ عن عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) كان يَذْكُرُ اللَّهَ على كل أَحْيَانِهِ

பாடம் 11. கழிப்பிடத்தில் இறைவனை நினைவு கூறல்

ஹதீஸ் எண்: 302

நபி (ஸல்) அவர்கள் எல்லா நேரங்களிலும் இறைவனை நினைவு கூர்பவர்களாக இருந்தனர் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

303 حدثنا نَصْرُ بن على الْجَهْضَمِيُّ ثنا أبو بَكْرٍ الْحَنَفِيُّ ثنا هَمَّامُ بن يحيى عن بن جُرَيْجٍ عن الزُّهْرِيِّ عن أَنَسِ بن مَالِكٍ أَنَّ النبي (ص) كان إذا دخل الْخَلَاءَ وَضَعَ خَاتَمَهُ

ஹதீஸ் எண்: 303

‘நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்லும் போது தமது மோதிரத்தைக் (கழற்றி) வைத்து விடுவார்கள்’ என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: நஸயீ, திர்மிதி, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்று உள்ளது. இதன் இரண்டாவது அறிவிப்பாளராகிய ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து மூன்றாவது அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ் எதையும் செவியுற்றதில்லை என்பதால் இது தொடர்பற்ற ஹதீஸாகும்.)

 12 بَاب كَرَاهِيَةِ الْبَوْلِ في الْمُغْتَسَلِ  

304 حدثنا محمد بن يحيى ثنا عبد الرَّزَّاقِ أَنْبَأَنَا مَعْمَرٌ عن أَشْعَثَ بن عبد اللَّهِ عن الْحَسَنِ عن عبد اللَّهِ بن مُغَفَّلٍ قال قال رسول اللَّهِ (ص) لَا يَبُولَنَّ أحدكم في مُسْتَحَمِّهِ فإن عَامَّةَ الْوَسْوَاسِ منه قال أبو عَبْد اللَّهِ بْن مَاجَةَ سمعت مُحَمَّدَ بن يَزِيدَ يقول سمعت عَلِيَّ بن مُحَمَّدٍ الطَّنَافِسِيَّ يقول إنما هذا في الْحَفِيرَةِ فَأَمَّا الْيَوْمَ فلا فَمُغْتَسَلَاتُهُمْ الْجِصُّ وَالصَّارُوجُ وَالْقِيرُ فإذا بَالَ فَأَرْسَلَ عليه الْمَاءَ لَا بَأْسَ بِهِ  

பாடம் 12. குளிக்குமிடத்தில் சிறுநீர் கழிக்கலாகாது!

ஹதீஸ் எண்: 304

எவரும் தமது குளிக்கும் அறையில் சிறுநீர் கழிக்க வேண்டாம்! ஏனெனில் பெரும்பாலான வஸ்வாஸ் (எனும் மனக்குழப்பம்) அதிலிருந்து தான் ஏற்படுகின்றது’ என அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி) அறிவிக்கின்றனர்.

அன்றைய காலத்திலிருந்த மண்ணில் வெட்டப்பட்ட பள்ளமான குளியலறைக்கே இது பொருந்தும். இன்று குளியலறையில் சிறுநீர் கழித்தல் தவறல்ல. ஏனெனில் இன்றைய குளியலறைகள் காரை, செங்கல், தார் போன்றவற்றால் அமைந்துள்ளன. அதில் நிறுநீர் கழித்து விட்டு அதன் மேல் தண்ணீரை ஊற்றி விட்டால் அதில் தவறில்லை என அலீ இப்னு முஹம்மத் அத்தனாபிஸி அவர்கள் கூறியுள்ளனர் என்று இப்னுமாஜா கூறுகிறேன்.

(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது)

13 بَاب ما جاء في الْبَوْلِ قَائِمًا  

305 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا شَرِيكٌ وَهُشَيْمٌ وَوَكِيعٌ عن الْأَعْمَشِ عن أبي وَائِلٍ عن حُذَيْفَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) أتى سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ عليها قَائِمًا

பாடம் 13. நின்று கொண்டு சிறுநீர் கழித்தல்

ஹதீஸ் எண்: 305

ஒரு கூட்டத்தினர் குப்பைகளைக் கொட்டும் இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் வந்து, நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று ஹுதைபா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

306 حدثنا إسحاق بن مَنْصُورٍ ثنا أبو دَاوُدَ ثنا شُعْبَةُ عن عَاصِمٍ عن أبي وَائِلٍ عن الْمُغِيرَةِ بن شُعْبَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) أتى سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا قال شُعْبَةُ قال عَاصِمٌ يَوْمَئِذٍ وَهَذَا الْأَعْمَشُ يَرْوِيهِ عن أبي وَائِلٍ عن حُذَيْفَةَ وما حَفِظَهُ فَسَأَلْتُ عنه مَنْصُورًا فَحَدَّثَنِيهِ عن أبي وَائِلٍ عن حُذَيْفَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) أتى سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا

ஹதீஸ் எண்: 306

மேற்கூறிய ஹதீஸையே முகீரா இப்னு ஷுஃபா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இங்கே இடம் பெற்றுள்ளது.

14 بَاب في الْبَوْلِ قَاعِدًا  

307 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَسُوَيْدُ بن سَعِيدٍ وإسماعيل بن مُوسَى السُّدِّيُّ قالوا ثنا شَرِيكٌ عن الْمِقْدَامِ بن شُرَيْحِ بن هَانِئٍ عن أبيه عن عَائِشَةَ قالت من حَدَّثَكَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) بَالَ قَائِمًا فلا تُصَدِّقْهُ أنا رَأَيْتُهُ يَبُولُ قَاعِدًا

பாடம் 14. உட்கார்ந்து சிறுநீர் கழித்தல்

ஹதீஸ் எண்: 307

நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததாக உம்மிடம் எவர் கூறினாலும் அதை நம்ப வேண்டாம். நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதை நான் பார்த்திருக்கிறேன் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

308 حدثنا محمد بن يحيى ثنا عبد الرَّزَّاقِ ثنا بن جُرَيْجٍ عن عبد الْكَرِيمِ بن أبي أُمَيَّةَ عن نَافِعٍ عن بن عُمَرَ عن عُمَرَ قال رَآنِي رسول اللَّهِ (ص) وأنا أَبُولُ قَائِمًا فقال يا عُمَرُ لَا تَبُلْ قَائِمًا فما بُلْتُ قَائِمًا بَعْدُ

ஹதீஸ் எண்: 308

‘நான் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை நபி (ஸல்) அவர்கள் பார்த்து விட்டு ‘உமரே! நின்று சிறுநீர் கழிக்காதீர்!’ என்றார்கள். அதன் பிறகு நான் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை என உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான அப்துல்கரீம் இப்னு அபீஉமய்யா என்பவர் அனைத்து ஹதீஸ் கலை மேதைகளாலும் பலவீனமானவர் என்று முடிவு செய்யப்பட்டவர்)

309 حدثنا يحيى بن الْفَضْلِ ثنا أبو عَامِرٍ ثنا عَدِيُّ بن الْفَضْلِ عن عَلِيِّ بن الْحَكَمِ عن أبي نَضْرَةَ عن جَابِرِ بن عبد اللَّهِ قال نهى رسول اللَّهِ (ص) أَنْ يَبُولَ قَائِمًا سمعت مُحَمَّدَ بن يَزِيدَ أَبَا عبد اللَّهِ يقول سمعت أَحْمَدَ بن عبد الرحمن الْمَخْزُومِيَّ يقول قال سُفْيَانُ الثَّوْرِيُّ في حديث عَائِشَةَ أنا رَأَيْتُهُ يَبُولُ قَاعِدًا قال الرَّجُلُ أَعْلَمُ بهذا منها قال أَحْمَدُ بن عبد الرحمن وكان من شَأْنِ الْعَرَبِ الْبَوْلُ قَائِمًا ألا تَرَاهُ في حديث عبد الرحمن بن حسنه يقول قَعَدَ يَبُولُ كما تَبُولُ الْمَرْأَةُ

ஹதீஸ் எண்: 309

நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்ததாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

ஆயிஷா (ரலி) அறிவிக்கும் (307 வது) ஹதீஸ் பற்றி ஸுஃப்யான் ஸவ்ரீ கூறும் போது (வெளியில் நடந்தவற்றை) ஆயிஷா (ரலி)யை விட ஆண்களே அதிகம் அறிந்திருக்க முடியும் எனக் குறிப்பிட்டார்கள்.

அன்றைய அரபுகள் நின்று சிறுநீர் கழிப்பதையே தங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனாலேயே நபி (ஸல்) உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதைக் கண்ட போது ‘இவர் பெண்கள் சிறுநீர் கழிப்பது போல் சிறுநீர் கழிக்கிறார்’ என்று கூறினர் என்று அஹ்மத் இப்னு அப்துர்ரஹ்மான் குறிப்பிடுகிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளராகிய அதீ இப்னுல் ஃபழ்லு என்பவர் அனைவராலும் பலவீனமானவர் என தீர்மானிக்கப்பட்டவர்)

15 بَاب كراهة مَسِّ الذَّكَرِ بِالْيَمِينِ وَالِاسْتِنْجَاءِ بِالْيَمِينِ  

310 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا عبد الْحَمِيدِ بن حَبِيبِ بن أبى الْعِشْرِينَ ثنا الْأَوْزَاعِيُّ عن يحيى بن أبي كَثِيرٍ حدثني عبد اللَّهِ بن أبى قَتَادَةَ أخبرني أبي أَنَّهُ سمع رَسُولَ اللَّهِ (ص) يقول إذا بَالَ أحدكم فلا يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ ولا يَسْتَنْجِ بِيَمِينِهِ حدثنا عبد الرحمن بن إبراهيم ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ ثنا الْأَوْزَاعِيُّ بِإِسْنَادِهِ نَحْوَهُ

பாடம் 15. வலக்கரத்தால் மர்ம உறுப்பைத் தொடுவதும் வலக்கரத்தால் சுத்தம் செய்வதும் கூடாது

ஹதீஸ் எண்: 310

உங்களில் எவரும் சிறுநீர் கழிக்கும் போது தமது வலக்கரத்தால் மர்ம உறுப்பைத் தொடலாகாது! மேலும் தமது வலக்கரத்தால் சுத்தம் செய்யலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, தாரிமி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது)

இப்னுமாஜா பக்கம் – 30

இப்னுமாஜா பக்கம் – 30

பக்கம் – 30 (ஹதீஸ்கள் 291 முதல் 300 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்

291 حدثنا محمد بن عبد الْعَزِيزِ ثنا مُسْلِمُ بن إبراهيم ثنا بَحْرُ بن كنز عن عُثْمَانَ بن سَاجٍ عن سَعِيدِ بن جُبَيْرٍ عن عَلِيِّ بن أبي طَالِبٍ قال إِنَّ أَفْوَاهَكُمْ طُرُقٌ لِلْقُرْآنِ فَطَيِّبُوهَا بِالسِّوَاكِ

ஹதீஸ் எண்: 291

‘உங்களது வாய்கள் குர்ஆன் வெளிப்படுகின்ற பாதைகளாக உள்ளன. எனவே வாய்களை பல்துலக்குவதன் மூலம் மணம் வீசச் செய்யுங்கள்!’ என அலி (ரலி) கூறியதாக ஸயீத் இப்னு ஜுபைர் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளராகிய பஹ்ரு இப்னு கதீர் என்பவர் பலவீனமானவர்.)

8 بَاب الْفِطْرَةِ  

292 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن الزُّهْرِيِّ عن سَعِيدِ بن الْمُسَيَّبِ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) الْفِطْرَةُ خَمْسٌ أو خَمْسٌ من الْفِطْرَةِ الْخِتَانُ وَالِاسْتِحْدَادُ وَتَقْلِيمُ الْأَظْفَارِ وَنَتْفُ الْإِبِطِ وَقَصُّ الشَّارِبِ

பாடம் 8. இயற்கையான வழிமுறைகள்

ஹதீஸ் எண்: 292

ஐந்து காரியங்கள் (அறியாமைக்கால மக்களும் விட்டு விடாமல் கடைபிடித்து வந்த) இயற்கை வழிகளாகும். அவைகள், கத்னா செய்தல், மர்மஸ்தான மயிர்களைக் களைதல், நகங்களை வெட்டுதல், அக்குள் மயிரை அகற்றுதல், மீசையைக் கத்தரித்தல் ஆகியவை என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இது இடம்  பெற்றுள்ளது.)

293 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا وَكِيعٌ ثنا زَكَرِيَّا بن أبي زَائِدَةَ عن مُصْعَبِ بن شَيْبَةَ عن طَلْقِ بن حَبِيبٍ عن أبي الزُّبَيْرِ عن عَائِشَةَ قالت قال رسول اللَّهِ (ص) عَشْرٌ من الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ وَإِعْفَاءُ اللِّحْيَةِ وَالسِّوَاكُ وَالِاسْتِنْشَاقُ بِالْمَاءِ وَقَصُّ الْأَظْفَارِ وَغَسْلُ الْبَرَاجِمِ وَنَتْفُ الْإِبِطِ وَحَلْقُ الْعَانَةِ وَانْتِقَاصُ الْمَاءِ يعنى الِاسْتِنْجَاءَ قال زَكَرِيَّا قال مُصْعَبٌ وَنَسِيتُ الْعَاشِرَةَ إلا أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ

ஹதீஸ் எண்: 293

பத்துக் காரியங்கள் இயற்கை வழிகளாகும். மீசையைக் கத்தரித்தல், தாடியை விடுதல், பல் துலக்குதல், தண்ணீரால் மூக்கைச் சுத்தம் செய்தல், நகங்களை வெட்டுதல், நகங்களின் அடியில் சேரும் அழுக்குகளைக் கழுவுதல், அக்;குள் மயிரை அகற்றுதல், மர்மஸ்தான மயிர்களை நீக்குதல், தண்ணீரால் (மலஜலம் கழித்து) சுத்தம் செய்தல் ஆகியவையே பத்தாவதாகக் கூறியதை நான் மறந்து விட்டேன். அனேகமாக அது வாய் கொப்பளித்தலாகத் தான் இருக்கும் என்று (நான்காவது அறிவிப்பாளர்) முஸ்அப் இப்னு ஷைபா குறிப்பிடுகிறார். இந்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

294 حدثنا سَهْلُ بن أبي سَهْلٍ وَمُحَمَّدُ بن يحيى قالا ثنا أبو الْوَلِيدِ ثنا حَمَّادٌ عن عَلِيِّ بن زَيْدٍ عن سَلَمَةَ بن مُحَمَّدِ بن عَمَّارِ بن يَاسِرٍ عن عَمَّارِ بن يَاسِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال من الْفِطْرَةِ الْمَضْمَضَةُ وَالِاسْتِنْشَاقُ وَالسِّوَاكُ وَقَصُّ الشَّارِبِ وَتَقْلِيمُ الْأَظْفَارِ وَنَتْفُ الْإِبْطِ وَالِاسْتِحْدَادُ وَغَسْلُ الْبَرَاجِمِ وَالِانْتِضَاحُ وَالِاخْتِتَانُ حدثنا جَعْفَرُ بن أَحْمَدَ بن عُمَرَ ثنا عَفَّانُ بن مُسْلِمٍ ثنا حَمَّادُ بن سَلَمَةَ عن على بن زَيْدٍ مثله

ஹதீஸ் எண்: 294

‘வாய் கொப்பளித்தல், மூக்கைச் சுத்தம் செய்தல், பல் துலக்குதல், மீசையைக் கத்தரித்தல், நகங்களைக் களைதல், அக்குள் மயிரை அகற்றுதல், மர்மஸ்தான மயிர்களை நீக்குதல், நகங்களினடியில் தேங்கும் அழுக்குகளைக் கழுவுதல், (சிறுநீர் கழித்த பின்) தண்ணீர் தெளித்துக் கொள்ளல், கத்னா செய்தல் ஆகியவை இயற்கை வழிகளாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

295 حدثنا بِشْرُ بن هِلَالٍ الصَّوَّافُ ثنا جَعْفَرُ بن سُلَيْمَانَ عن أبي عِمْرَانَ الْجَوْنِيِّ عن أَنَسِ بن مَالِكٍ قال وُقِّتَ لنا في قَصِّ الشَّارِبِ وَحَلْقِ الْعَانَةِ وَنَتْفِ الْإِبِطِ وَتَقْلِيمِ الْأَظْفَارِ أَنْ لَا نَتْرُكَ أَكْثَرَ من أَرْبَعِينَ لَيْلَةً

ஹதீஸ் எண்: 295

மீசையை வெட்டுதல், மர்மஸ்தான முடிகளை நீக்குதல், அக்குள் மயிரைக் களைதல், நகங்களை வெட்டுதல் ஆகிய காரியங்களுக்கு (அதிகபட்சம்) நாற்பது நாட்களுக்கு மேல் விடலாகாது என நபி (ஸல்) அவர்களால் எங்களுக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது என்று அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

9 بَاب ما يقول الرَّجُلُ إذا دخل الْخَلَاءَ  

296 حدثنا محمد بن بَشَّارٍ ثنا محمد بن جَعْفَرٍ وَعَبْدُ الرحمن بن مَهْدِيٍّ قالا ثنا شُعْبَةُ عن قَتَادَةَ عن النَّضْرِ بن أَنَسٍ عن زَيْدِ بن أَرْقَمَ قال قال رسول اللَّهِ (ص) إِنَّ هذه الْحُشُوشَ مُحْتَضَرَةٌ فإذا دخل أحدكم فَلْيَقُلْ اللهم إني أَعُوذُ بِكَ من الْخُبُثِ وَالْخَبَائِثِ حدثنا جَمِيلُ بن الْحَسَنِ الْعَتَكِيُّ ثنا عبد الأعلى بن عبد الأعلى ثنا سَعِيدُ بن أبى عَرُوبَةَ عن قَتَادَةَ ح وحدثنا هَارُونُ بن إسحاق ثنا عَبْدَةُ قال ثنا سَعِيدٌ عن قَتَادَةَ عن الْقَاسِمِ بن عَوْفٍ الشَّيْبَانِيِّ عن زَيْدِ بن أَرْقَمَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال فذكر الحديث

பாடம் 9. கழிவறைக்குச் செல்லும் போது கூற வேண்டியவை

ஹதீஸ் எண்: 296

நிச்சயமாக இந்தக் காடுகள் (ஷைத்தான்கள்) வந்து, போகுமிடங்களாகும். எனவே உங்களில் ஒருவர் கழிப்பிடம் சென்றால் ‘அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் குபுஸி, வல்கபாயிஸி’ என்று கூறட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு அர்கம் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதில் கூறப்படும் துஆவின் பொருள், இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.)

297 حدثنا محمد بن حُمَيْدٍ ثنا الْحَكَمُ بن بَشِيرِ بن سَلْمَانَ ثنا خَلَّادٌ الصَّفَّارُ عن الْحَكَمِ البصري عن أبي إسحاق عن أبي جُحَيْفَةَ عن عَلِيٍّ قال قال رسول اللَّهِ (ص) سِتْرُ ما بين الْجِنِّ وَعَوْرَاتِ بنى آدَمَ إذا دخل الْكَنِيفَ أَنْ يَقُولَ بِسْمِ اللَّهِ

ஹதீஸ் எண்: 297

‘கழிப்பிடம் செல்லும் போது ஒரு மனிதனின் மர்ம உறுப்புக்களை ஜின்கள் காணுவதை விட்டும் ‘பிஸ்மில்லாஹ்’ எனக் கூறுவது தடையாக இருக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளராகிய அல்ஹகம் அல் பஸ்ரீ என்பவர் பலவீனமானவர்.)

298 حدثنا عَمْرُو بن رَافِعٍ ثنا إسماعيل بن عُلَيَّةَ عن عبد الْعَزِيزِ بن صُهَيْبٍ عن أَنَسِ بن مَالِكٍ قال كان رسول اللَّهِ (ص) إذا دخل الْخَلَاءَ قال أَعُوذُ بِاللَّهِ من الْخُبُثِ وَالْخَبَائِثِ

ஹதீஸ் எண்: 298

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்லும் போது, ‘அவூது பில்லாஹி மினல் குபுஸி வல் கபாயிஸி’ எனக் கூறுபவர்களாக இருந்தனர் என்று அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள். (முன்னர் கூறிய வாசகத்தின் பொருள் தான் இந்த வாசகத்தின் பொருளாகும்.)

299 حدثنا محمد بن يحيى ثنا بن أبي مَرْيَمَ ثنا يحيى بن أَيُّوبَ عن عُبَيْدِ اللَّهِ بن زَحْرٍ عن عَلِيِّ بن يَزِيدَ عن الْقَاسِمِ عن أبي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال لَا يَعْجِزْ أحدكم إذا دخل مِرْفَقَهُ أَنْ يَقُولَ اللهم إني أَعُوذُ بِكَ من الرِّجْسِ النَّجِسِ الْخَبِيثِ الْمُخْبِثِ الشَّيْطَانِ الرَّجِيمِ قال أبو الْحَسَنِ وَحَدَّثَنَا أبو حَاتِمٍ ثنا بن أبي مَرْيَمَ فذكر نَحْوَهُ ولم يَقُلْ في حَدِيثِهِ من الرِّجْسِ النَّجِسِ إنما قال من الْخَبِيثِ الْمُخْبِثِ الشَّيْطَانِ الرَّجِيمِ

ஹதீஸ் எண்: 299

‘ஒருவர் தமது கழிப்பிடத்திற்குச் செல்லும் போது, ‘அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக மினர் ரிஜ்ஸில் கபீஸில் முக்பிஸிஷ் ஷைத்தானிர்ரஜீம் எனக் கூறுவதை விட்டு விட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளர் காசிம் என்பவரும், மூன்றாவது அறிவிப்பாளர் அலீ இப்னுயஸீத் என்பவரும், நான்காவது அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் ஸஹ்ர் என்பவரும் பலவீனமானவர்கள். ஒரு ஹதீஸில் இம்மூவரும் இடம் பெற்றால் அது இட்டுக்கட்டப்பட்டதாகத் தான் இருக்கும் என இப்னுஹிப்பான் குறிப்பிடுகிறார்கள்.)

10 بَاب ما يقول إذا خَرَجَ من الْخَلَاءِ  

300 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا يحيى بن أبي بُكَيْرٍ ثنا إِسْرَائِيلُ ثنا يُوسُفُ بن أبي بُرْدَةَ سمعت أبي يقول دَخَلْتُ على عَائِشَةَ فَسَمِعْتُهَا تَقُولُ كان رسول اللَّهِ (ص) إذا خَرَجَ من الْغَائِطِ قال غُفْرَانَكَ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ وأخبرنا أبو حَاتِمٍ ثنا أبو غَسَّانَ النَّهْدِيُّ ثنا إِسْرَائِيلُ نَحْوَهُ

பாடம் 10. கழிப்பிடத்திலிருந்து வெளிப்படும் போது கூற வேண்டியவை

ஹதீஸ் எண்: 300

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளியாகும் போது ஃகுஃப்ரானக (இறைவா! மன்னிப்பாயாக) எனக் கூறுபவர்களாக இருந்தனர் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், திர்மிதி, அஹ்மத், தாரிமி, ஹாகிம், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

இப்னுமாஜா பக்கம் – 29

இப்னுமாஜா பக்கம் – 29

பக்கம் – 29 (ஹதீஸ்கள் 281 முதல் 290 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்

6 بَاب ثَوَابِ الطُّهُورِ  

281 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو مُعَاوِيَةَ عن الْأَعْمَشِ عن أبي صَالِحٍ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) إِنَّ أَحَدَكُمْ إذا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أتى الْمَسْجِدَ لَا يَنْهَزُهُ إلا الصَّلَاةُ لم يَخْطُ خَطْوَةً إلا رَفَعَهُ الله عز وجل بها دَرَجَةً وَحَطَّ عنه بها خَطِيئَةً حتى يَدْخُلَ الْمَسْجِدَ

பாடம் 6. ஒளூ செய்வதன் பயன்

ஹதீஸ் எண்: 281

உங்களில் ஒருவர் ஒளூ செய்து, அதையும் அழகிய முறையில் செய்து, தொழுகையைத் தவிர வேறு எதனையும் எண்ணமால் பள்ளி வாசலுக்கு வந்தால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அல்லாஹ் அவருக்கு ஒரு மதிப்பை உயர்த்துகிறான். ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு தீமையை அழிக்கிறான். பள்ளியை அவர் அடையும் வரை இவ்வாறு அவருக்கு வழங்கப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

282 حدثنا سُوَيْدُ بن سَعِيدٍ حدثني حَفْصُ بن مَيْسَرَةَ حدثني زَيْدُ بن أَسْلَمَ عن عَطَاءِ بن يَسَارٍ عن عبد اللَّهِ الصُّنَابِحِيِّ عن رسول اللَّهِ (ص) قال من تَوَضَّأَ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ خَرَجَتْ خَطَايَاهُ من فيه وَأَنْفِهِ فإذا غَسَلَ وَجْهَهُ خَرَجَتْ خَطَايَاهُ من وَجْهِهِ حتى يَخْرُجَ من تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِ فإذا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ خَطَايَاهُ من يَدَيْهِ فإذا مَسَحَ بِرَأْسِهِ خَرَجَتْ خَطَايَاهُ من رَأْسِهِ حتى تَخْرُجَ من أُذُنَيْهِ فإذا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ خَطَايَاهُ من رِجْلَيْهِ حتى تَخْرُجَ من تَحْتِ أَظْفَارِ رِجْلَيْهِ وَكَانَتْ صَلَاتُهُ وَمَشْيُهُ إلى الْمَسْجِدِ نَافِلَةً

ஹதீஸ் எண்: 282

யாரேனும் ஒளூ செய்யும் போது வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தால் அவரது தவறுகள் அவரது வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் வெளியேறி விடும். அவர் தமது முகத்தைக் கழுவும் போது அவரது முகத்திலிருந்து அவரது கண் இமைகளின் கீழிலிருந்து அவரது தவறுகள் வெளியேறுகின்றன. அவர் தமது இரு கைகளைக் கழுவும் போது அவரது கைகளிலிருந்து அவரது தவறுகள் வெளியேறுகின்றன. அவர் தமது தலைகு மஸஹ் செய்யும் போது அவரது காது உட்பட அவரது தலையிலிருந்து அவரது தவறுகள் வெளியேறுகின்றன. அவர் தமது இரு கால்களையும் கழுவும் போது அவரது கால் நகங்கள் உட்பட அவரது கால்கள் வழியாக அவரது தவறுகள் வெளியேறுகின்றன. அவரது தொழுகையும், பள்ளியை நோக்கி அவர் நடந்து செல்வதும் உபரி வணக்கமாக அமைகின்றன. என நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் அஸ்ஸுனாபிஹீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இது அபூதாவூதிலும் இது இடம் பெற்றுள்ளது.)

283 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَمُحَمَّدُ بن بَشَّارٍ قالا ثنا غُنْدَرٌ محمد بن جَعْفَرٍ عن شُعْبَةَ عن يَعْلَى بن عَطَاءٍ عن يَزِيدَ بن طَلْقٍ عن عبد الرحمن بن الْبَيْلَمَانِيِّ عن عَمْرِو بن عَبَسَةَ قال قال رسول اللَّهِ (ص) إِنَّ الْعَبْدَ إذا تَوَضَّأَ فَغَسَلَ يَدَيْهِ خَرَّتْ خَطَايَاهُ من يَدَيْهِ فإذا غَسَلَ وَجْهَهُ خَرَّتْ خَطَايَاهُ من وَجْهِهِ فإذا غَسَلَ ذِرَاعَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ خَرَّتْ خَطَايَاهُ من ذِرَاعَيْهِ وَرَأْسِهِ فإذا غَسَلَ رِجْلَيْهِ خَرَّتْ خَطَايَاهُ من رِجْلَيْهِ

ஹதீஸ் எண்: 283

ஒரு அடியான் ஒளூ செய்யும் போது தம் (முன்) கைகளைக் கழுவினால் அவரது கைகள் வழியாக அவரது தவறுகள் நீங்குகின்றன. அவர் தமது முகத்தைக் கழுவும் போது அவரது முகத்திலிருந்து அவரது தவறுகள் நீங்குகின்றன. அவர் தமது கைகளை முழங்கை வரைக் கழுவும் போதும், தலைக்கு மஸஹ் செய்யும் போதும் அவரது தலை வழியாகவும், கைகள் வழியாகவும் அவரது தவறுகள் நீங்குகின்றன. அவர் தமது கால்களைக் கழுவும் போது அவரது கால்கள் வழியாக அவரது தவறுகள் நீங்குகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அம்ரு இப்னு அபஸா (ரலி) அறிவிக்கிறார்கள்.

284 حدثنا محمد بن يحيى النَّيْسَابُورِيُّ ثنا أبو الْوَلِيدِ هِشَامُ بن عبد الْمَلِكِ ثنا حَمَّادٌ عن عَاصِمٍ عن زِرِّ بن حُبَيْشٍ أَنَّ عَبْدَ اللَّهِ بن مَسْعُودٍ قال قِيلَ يا رَسُولَ اللَّهِ كَيْفَ تَعْرِفُ من لم تَرَ من أُمَّتِكَ قال غُرٌّ مُحَجَّلُونَ بُلْقٌ من آثَارِ الْوُضُوءِ قال أبو الْحَسَنِ الْقَطَّانُ حدثنا أبو حَاتِمٍ حدثنا أبو الْوَلِيدِ فذكر مثله

ஹதீஸ் எண்: 284

‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பார்த்திராத உங்கள் உம்மத்தினரை (மறுமையில்) எப்படி அறிந்து கொள்வீர்கள்?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒளூவின் அடையாளத்தினால் அவர்கள் (முகம், கால்கள் வெள்ளையாகவும், மற்ற பகுதிகள் கறுப்பாகவும் உள்ள) பஞ்சகல்யாணிக் குதிரைகள் போல அவர்கள் இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் விடையளித்ததாக இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள்.

285 حدثنا عبد الرحمن بن إبراهيم ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ ثنا الْأَوْزَاعِيُّ ثنا يحيى بن أبي كَثِيرٍ حدثني محمد بن إبراهيم حدثني شَقِيقُ بن سَلَمَةَ حدثني حُمْرَانُ مولى عُثْمَانَ بن عَفَّانَ قال رأيت عُثْمَانَ بن عَفَّانَ قَاعِدًا في الْمَقَاعِدِ فَدَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ ثُمَّ قال رأيت رَسُولَ اللَّهِ (ص) في مَقْعَدِي هذا تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هذا ثُمَّ قال من تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هذا غُفِرَ له ما تَقَدَّمَ من ذَنْبِهِ وقال رسول اللَّهِ (ص) ولا تَغْتَرُّوا حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا عبد الْحَمِيدِ بن حَبِيبٍ ثنا الْأَوْزَاعِيُّ حدثني يحيى حدثني محمد بن إبراهيم حدثني عِيسَى بن طَلْحَةَ حدثني حُمْرَانُ عن عُثْمَانَ عن النبي (ص) نَحْوَهُ

ஹதீஸ் எண்: 285

உஸ்மான் (ரலி) அவர்கள் ‘மகாயித்’ என்ற இடத்தில் அமர்ந்திருக்க நான் கண்டேன். அப்போது அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் செய்து ஒளூ செய்தார்கள். பின்பு இந்த இடத்தில், இப்போது நான் செய்த ஒளூவைப் போன்று நபி (ஸல்) அவர்களும் ஒளூ செய்து விட்டு யார் நான் செய்த ஒளூவைப் போல் ஒளூ செய்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுகின்றன. இதில் அலட்சியமாக இருக்காதீர்கள் எனக் கூறியதாக உஸ்மான் (ரலி) குறிப்பிட்டார்கள். இதை உஸ்மான் (ரலி) அவர்களின் அடிமை ஹும்ரான் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இது முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)

7 بَاب السِّوَاكِ  

286 حدثنا محمد بن عبد اللَّهِ بن نُمَيْرٍ ثنا أبو مُعَاوِيَةَ وَأَبِي عن الْأَعْمَشِ ح وحدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن مَنْصُورٍ وَحُصَيْنٍ عن أبي وَائِلٍ عن حُذَيْفَةَ قال كان رسول اللَّهِ (ص) إذا قام من اللَّيْلِ يَتَهَجَّدُ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ

பாடம் 7. பல் துலக்குதல்

ஹதீஸ் எண்: 286

நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழ எழும் போது பல் துலக்கும் குச்சியால் தம் வாயைத் தேய்ப்பார்கள் என ஹுதைபா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

287 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو أُسَامَةَ وَعَبْدُ اللَّهِ بن نُمَيْرٍ عن عُبَيْدِ اللَّهِ بن عُمَرَ عن سَعِيدِ بن أبي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) لَوْلَا أَنْ أَشُقَّ على أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كل صَلَاةٍ

ஹதீஸ் எண்: 287

‘என் சமுதாயத்திற்கு நான் சிரமத்தை ஏற்படுத்தியவனாவேன் என்று இல்லா விட்டால் ஒவ்வொரு தொழுகையின் போதும் அவர்கள் பல்துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

288 حدثنا سُفْيَانُ بن وَكِيعٍ ثنا عَثَّامُ بن على عن الْأَعْمَشِ عن حَبِيبِ بن أبى ثَابِتٍ عن سَعِيدِ بن جُبَيْرٍ عن بن عَبَّاسٍ قال كان رسول اللَّهِ (ص) يصلى بِاللَّيْلِ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ ثُمَّ يَنْصَرِفُ فَيَسْتَاكُ

ஹதீஸ் எண்: 288

‘நபி (ஸல்) அவர்கள் இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுது விட்டு, பல் துலக்குவார்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

289 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا محمد بن شُعَيْبٍ ثنا عُثْمَانُ بن أبى الْعَاتِكَةِ عن عَلِيِّ بن يَزِيدَ عن الْقَاسِمِ عن أبي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال تَسَوَّكُوا فإن السِّوَاكَ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ ما جَاءَنِي جِبْرِيلُ إلا أَوْصَانِي بِالسِّوَاكِ حتى لقد خَشِيتُ أَنْ يُفْرَضَ على وَعَلَى أُمَّتِي وَلَوْلَا أنى أَخَافُ أَنْ أَشُقَّ على أُمَّتِي لَفَرَضْتُهُ لهم وَإِنِّي لَأَسْتَاكُ حتى لقد خَشِيتُ أَنْ أحفى مَقَادِمَ فَمِي

ஹதீஸ் எண்: 289

நீங்கள் பல்துலக்குங்கள்! நிச்சயமாக பல்துலக்குதல் வாயைச் சுத்தம் செய்யக் கூடியதும், இறைவனின் திருப்பொருத்தத்திற்க்கு உரியதுமாகும்.

ஜிப்ரீல் (அலை) என்னிடம் வரும் போதெல்லாம் பல்துலக்குவதை வலியுறுத்தாமல் இருப்பதில்லை. என் மீதும், என் சமுதாயத்தின் மீதும் அது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சும் அளவுக்கு அவர்கள் இது பற்றி வலியுறுத்துவார்கள். என் சமுதாயத்திற்குச் சிரமம் தந்தவனாவேன் என்ற அச்சமில்லா விட்டால் அதை அவர்களுக்குக் கடமையாக்கி இருப்பேன். என் வாயின் முன் பற்கள் விழுந்து விடுமோ என்று அஞ்சுமளவுக்கு நான் பல் துலக்குகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முதன் மூன்றாவது அறிவிப்பாளரான இப்னு யஸீத் என்பவர் நிராகரிக்கப்பட்டவர். ஆயினும் இந்த ஹதீஸின் முதல் பாரா மட்டும் அஹ்மத், நஸயியில் நம்பகமான வேறு அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படுகின்றது.)

290 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا شَرِيكٌ عن الْمِقْدَامِ بن شُرَيْحِ بن هَانِئٍ عن أبيه عن عَائِشَةَ قال قلت أَخْبِرِينِي بِأَيِّ شَيْءٍ كان النبي (ص) يَبْدَأُ إذا دخل عَلَيْكِ قالت كان إذا دخل يَبْدَأُ بِالسِّوَاكِ

ஹதீஸ் எண்: 290

நபி (ஸல்) அவர்கள் தங்களிடம் வரும் போது முதன் முதலாக என்ன செய்வார்கள்? என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட போது ‘வீட்டிற்கு வந்ததும் பல் துலக்குவதையே முதலில் செய்வார்கள்’ என்று ஆயிஷா (ரலி) விடையளித்தார்கள். இதை ஷுரைஹ் இப்னு ஹானி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

இப்னுமாஜா பக்கம் – 28

இப்னுமாஜா பக்கம் – 28

பக்கம் – 28 (ஹதீஸ்கள் 267 முதல் 280 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்

 1 بَاب ما جاء في مِقْدَارِ الْمَاءِ لِلْوُضُوءِ وَالْغُسْلِ من الْجَنَابَةِ  

267 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا إسماعيل بن إبراهيم عن أبي رَيْحَانَةَ عن سَفِينَةَ قال كان رسول اللَّهِ (ص) يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ

பாடம் 1. கடமையான குளிப்புக்கும் ஒளு செய்வதற்கும் போதுமான தண்ணீர்

ஹதீஸ் எண்: 267

‘நபி (ஸல்) அவர்கள் ஒரு ‘முத்து’ அளவு தண்ணீரில் ஒளூ செய்பவர்களாகவும் ஒரு ‘ஸாவு’ அளவு தண்ணீரில் குளிப்பவர்களாகவும் இருந்தனர்’ என்று ஸபீனா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், திர்மிதியிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

268 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا يَزِيدُ بن هَارُونَ عن هَمَّامٍ عن قَتَادَةَ عن صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ عن عَائِشَةَ قالت كان رسول اللَّهِ (ص) يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ

ஹதீஸ் எண்: 268

மேற்கூறிய அதே ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாக இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

(குறிப்பு: இது அபூதாவூதிலும் இது இடம் பெற்றுள்ளது.)

269 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا الرَّبِيعُ بن بَدْرٍ ثنا أبو الزُّبَيْرِ عن جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) كان يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاع

ஹதீஸ் எண்: 269

மேற்கூறிய அதே ஹதீஸை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

(குறிப்பு: இது அபூதாவூதிலும் இது இடம் பெற்றுள்ளது.)

270 حدثنا محمد بن الْمُؤَمَّلِ بن الصَّبَّاحِ وَعَبَّادُ بن الْوَلِيدِ قالا ثنا بَكْرُ بن يحيى بن زَبَّانَ ثنا حِبَّانُ بن على عن يَزِيدَ بن أبي زِيَادٍ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلِ بن أبي طَالِبٍ عن أبيه عن جَدِّهِ قال قال رسول اللَّهِ (ص) يُجْزِئُ من الْوُضُوءِ مُدٌّ وَمِنْ الْغُسْلِ صَاعٌ فقال رَجُلٌ لَا يُجْزِئُنَا فقال قد كان يُجْزِئُ من هو خَيْرٌ مِنْكَ وَأَكْثَرُ شَعَرًا يعنى النبي (ص)

ஹதீஸ் எண்: 270

‘ஒரு முத்து’ அளவு தண்ணீர் ஒளூ செய்வதற்கும், ஒரு ‘ஸாவு’ அளவு தண்ணீர் குளிப்பதற்கும் போதுமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அகீல் இப்னு அபீதாலிப் (ரலி) கூறிய போது, ஒரு மனிதர், ‘எங்களுக்கு (இந்த அளவு) போதாதே’ என்றார். அதற்கு அகீல் (ரலி) அவர்கள் ‘உம்மை விடவும் மிகவும் சிறந்தவருக்கே அதாவது நபி (ஸல்) அவர்களுக்கே இந்த அளவு போதுமானதாக இருந்துள்ளது என விடையளித்தார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளர் யஸீத் இப்னு அபீ ஸியாத் என்பவரும், ஐந்தாவது அறிவிப்பாளரான ஹிப்பான் இப்னு அலி என்பவரும் பலவீனமானவர்கள் எனினும் இந்தக் கருத்தில் வேறுபல ஹதீஸ்கள் வந்துள்ளதால் இது ஹஸன் எனும் தரத்தைப் பெறுகிறது!)

 2 بَاب لَا يَقْبَلُ الله صَلَاةً بِغَيْرِ طُهُورٍ  

271 حدثنا محمد بن بَشَّارٍ ثنا يحيى بن سَعِيدٍ وَمُحَمَّدُ بن جَعْفَرٍ ح وحدثنا بَكْرُ بن خَلَفٍ أبو بِشْرٍ خَتَنُ الْمُقْرِئِ ثنا يَزِيدُ بن زُرَيْعٍ قالوا ثنا شُعْبَةُ عن قَتَادَةَ عن أبي الْمَلِيحِ بن أُسَامَةَ عن أبيه أُسَامَةَ بن عُمَيْرٍ الْهُذَلِيِّ قال قال رسول اللَّهِ (ص) لَا يَقْبَلُ الله صَلَاةً إلا بِطُهُورٍ ولا يَقْبَلُ صَدَقَةً من غُلُولٍ حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عبد الله بن سَعِيدٍ وَشَبَابَةُ بن سَوَّارٍ عن شُعْبَةَ نَحْوَهُ

பாடம் 2. தூய்மையின்றி தொழுவதை இறைவன் ஏற்க மாட்டான்

ஹதீஸ் எண்: 271

தூய்மையின்றி தொழுவதை அல்லாஹ் ஏற்கமாட்டான். மோசடி செய்பவனிடமிருந்து தர்மத்தையும் இறைவன் ஏற்க மாட்டான் என நபி (ஸல்) கூறியதாக உஸாமா இப்னு உமைர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, தப்ரானி ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

272 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا إِسْرَائِيلُ عن سِمَاكٍ ح وحدثنا محمد بن يحيى ثنا وَهْبُ بن جَرِيرٍ ثنا شُعْبَةُ عن سِمَاكِ بن حَرْبٍ عن مُصْعَبِ بن سَعْدٍ عن بن عُمَرَ قال قال رسول اللَّهِ (ص) لَا يَقْبَلُ الله صَلَاةً إلا بِطُهُورٍ ولا صَدَقَةً من غُلُولٍ

ஹதீஸ் எண்: 272

மேற்கூறிய அதே ஹதீஸை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

273 حدثنا سَهْلُ بن أبي سَهْلٍ ثنا أبو زُهَيْرٍ عن مُحَمَّدِ بن إسحاق عن يَزِيدَ بن أبي حَبِيبٍ عن سِنَانِ بن سَعْدٍ عن أَنَسِ بن مَالِكٍ قال سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول لَا يَقْبَلُ الله صَلَاةً بِغَيْرِ طُهُورٍ ولا صَدَقَةً من غُلُولٍ

ஹதீஸ் எண்: 273

மேற்கூறிய அதே ஹதீஸை அனஸ் இப்னு மாலிக்  (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

(குறிப்பு: இதில் இடம் பெறும் இரண்டாவது அறிவிப்பாளர் ஸினான் இப்னு ஸஃது என்பவர் பலவீனமானவராவார். மூன்றாவது அறிவிப்பாளரான யஸீத் இப்னு அபீ ஹபீப் என்பவர் யாரென்று தெரியாதவர். ஆயினும் மற்ற ஹதீஸ்கள் வந்துள்ளதால் அதுவும் ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)

274 حدثنا محمد بن عَقِيلٍ ثنا الْخَلِيلُ بن زَكَرِيَّا ثنا هِشَامُ بن حَسَّانَ عن الْحَسَنِ عن أبي بَكْرَةَ قال قال رسول اللَّهِ (ص) لَا يَقْبَلُ الله صَلَاةً بِغَيْرِ طُهُورٍ ولا صَدَقَةً من غُلُولٍ

ஹதீஸ் எண்: 274

மேற்கூறிய அதே ஹதீஸை அனஸ் அபூபக்ரா  (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 بَاب مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ  

275 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن مُحَمَّدِ بن الْحَنَفِيَّةِ عن أبيه قال قال رسول اللَّهِ (ص) مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ

பாடம் 3. தொழுகையின் திறவுகோல் தூய்மையாகும்

ஹதீஸ் எண்: 275

தொழுகையின் திறவுகோல் (ஒளூ எனும்) தூய்மையாகும். தொழுகையில் ஏனைய காரியங்களைக் கூடாததாக ஆக்குவது தக்பீர் ஆகும். அவற்றைக் கூடும் என்று ஆக்குவது ஸலாம் கொடுப்பதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: திர்மிதி, அபூதாவூத், அஹ்மத், தாரிமி ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

276 حدثنا سُوَيْدُ بن سَعِيدٍ ثنا عَلِيُّ بن مُسْهِرٍ عن أبي سُفْيَانَ طَرِيفٍ السَّعْدِيِّ ح وحدثنا أبو كُرَيْبٍ محمد بن الْعَلَاءِ ثنا أبو مُعَاوِيَةَ عن أبي سُفْيَانَ السَّعْدِيِّ عن أبي نَضْرَةَ عن أبي سَعِيدٍ الْخُدْرِيِّ عن النبي (ص) قال مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ

ஹதீஸ் எண்: 276

மேற்கூறிய அதே ஹதீஸ் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வாயிலாக இங்கே இடம் பெற்றுள்ளது.

4 بَاب الْمُحَافَظَةِ على الْوُضُوءِ  

277 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن مَنْصُورٍ عن سَالِمِ بن أبي الْجَعْدِ عن ثَوْبَانَ قال قال رسول اللَّهِ (ص) اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا وَاعْلَمُوا أَنَّ خَيْرَ أَعْمَالِكُمْ الصَّلَاةَ ولا يُحَافِظُ على الْوُضُوءِ إلا مُؤْمِنٌ

பாடம் 4. ஒளூவைப் பேணுதல்

ஹதீஸ் எண்: 277

(எல்லா விஷயங்களிலும்) சீராக நடப்பது உங்களுக்கு இயலா விட்டாலும் நீங்கள் சீராக நடங்கள்! உங்களது செயல்களில் தொழுகையே சிறந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! விசுவாசியைத் தவிர மற்ற எவரும் ஒளூவைப் பேணமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸவ்பான் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: ஸவ்பான் (ரலி) மூலம் அறிவிக்கும் ஸாலிம் இப்னு அபில்ஜஃது என்பவர் ஸவ்பான் காலத்தவர் அல்ல என்பதால் இது அறிவிப்பாளர் வரிசை தொடர்பற்ற ஹதீஸாகும்.)

278 حدثنا إسحاق بن إبراهيم بن حَبِيبِ ثنا الْمُعْتَمِرُ بن سُلَيْمَانَ عن لَيْثٍ عن مُجَاهِدٍ عن عبد اللَّهِ بن عَمْرٍو قال قال رسول اللَّهِ (ص) اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا وَاعْلَمُوا أَنَّ من أَفْضَلِ أَعْمَالِكُمْ الصَّلَاةَ ولا يُحَافِظُ على الْوُضُوءِ إلا مُؤْمِنٌ

ஹதீஸ் எண்: 278

மேற்கூறிய அதே ஹதீஸ் தான் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) வழியாக இங்கே இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய லைஸ் இப்னு அபிஸுலைம் என்பவர் பலவீனமாவராவார்.)

279 حدثنا محمد بن يحيى ثنا بن أبي مَرْيَمَ ثنا يحيى بن أَيُّوبَ حدثني إسحاق بن أَسِيدٍ عن أبي حَفْصٍ الدِّمَشْقِيِّ عن أبي أُمَامَةَ يَرْفَعُ الحديث قال اسْتَقِيمُوا وَنِعِمَّا إن اسْتَقَمْتُمْ وَخَيْرُ أَعْمَالِكُمْ الصَّلَاةُ ولا يُحَافِظُ على الْوُضُوءِ إلا مُؤْمِنٌ

ஹதீஸ் எண்: 279

மேற்கூறிய அதே ஹதீஸ் அபூஉமாமா (ரலி) வாயிலாக இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அபூஹஃப்ஸ் அத்திமிஷ்கீ என்பவர் பலவீனமானவர்.)

5 بَاب الْوُضُوءُ شَطْرُ الْإِيمَانِ  

280 حدثنا عبد الرحمن بن إبراهيم الدِّمَشْقِيُّ ثنا محمد بن شُعَيْبِ بن شَابُورَ أخبرني مُعَاوِيَةُ بن سَلَّامٍ عن أَخِيهِ أَنَّهُ أخبره عن جَدِّهِ أبي سَلَّامٍ عن عبد الرحمن بن غَنْمٍ عن أبي مَالِكٍ الْأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال إِسْبَاغُ الْوُضُوءِ شَطْرُ الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ مِلْءُ الْمِيزَانِ وَالتَّسْبِيحُ وَالتَّكْبِيرُ مِلْءُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالصَّلَاةُ نُورٌ وَالزَّكَاةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ وَالْقُرْآنُ حُجَّةٌ لك أو عَلَيْكَ كُلُّ الناس يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أو مُوبِقُهَا

பாடம் 5. ஒளூ ஈமானின் ஒரு பகுதி

ஹதீஸ் எண்: 280

ஒளூவைப் பூரணமாகச் செய்தல் ஈமானின் ஒரு பகுதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (என்று கூறுவது) மீஸான் (எனும் தராசை) நிரப்பக் கூடியதாகும். ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர் (எனக் கூறுவது) வானம் பூமியை நரப்பக் கூடியதாகும். தொழுகை ஒரு பிரகாசமாகும். ஸகாத் வழங்குதல் (வழங்குபவனின் விசுவாசத்துக்கு) சான்றாகும். பொறுமை பேரொளியாகும். குர்ஆன் உனக்கு சாதகமான சான்றாகும். அல்லது உனக்கு எதிரானதாகும். ஒவ்வொரு மனிதனும் தினமும் தன்னை விற்பனை செய்கிறான். (சிலர்) தன்னை விடுவித்துக் கொள்கின்றனர். (வேறு சிலர்) தன்னை அழித்துக் கொள்கின்றனர் என் நபி (ஸல்) கூறியதாக அபூமாலிக் அல் அஷ்அரி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

இப்னுமாஜா பக்கம் – 27

இப்னுமாஜா பக்கம் – 27

பக்கம் – 27 (ஹதீஸ்கள் 261 முதல் 266 வரை)

அத்தியாயம்: முகத்திமா – முகப்பு

24 بَاب من سُئِلَ عن عِلْمٍ فَكَتَمَهُ  

261 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أَسْوَدُ بن عَامِرٍ ثنا عِمَارَةُ بن زَاذَانَ ثنا عَلِيُّ بن الْحَكَمِ ثنا عَطاَءٌ عن أبي هُرَيْرَةَ عن النبي (ص) قال ما من رَجُلٍ يَحْفَظُ عِلْمًا فَيَكْتُمُهُ إلا أتى بِهِ يوم الْقِيَامَةِ مُلْجَمًا بِلِجَامٍ من النَّارِ قال أبو الْحَسَنِ أَيِ الْقَطَّانُ وَحَدَّثَنَا أبو حَاتِمٍ ثنا أبو الْوَلِيدِ ثنا عِمَارَةُ بن زَاذَانَ فذكر نَحْوَهُ

பாடம் 24. கல்வியை மறைத்தல் பற்றியது

ஹதீஸ் எண்: 261

எந்த மனிதரேனும் கல்வியைக் கற்று, அதை மறைத்தால் கியாமத் நாளில் நெருப்புக் கடிவாளம் இடப்பட்டவராகவே அவர் வருவார் என நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், திர்மிதியிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

262 حدثنا أبو مَرْوَانَ الْعُثْمَانِيُّ محمد بن عُثْمَانَ ثنا إِبْرَاهِيمُ بن سَعْدٍ عن الزُّهْرِيِّ عن عبد الرحمن بن هُرْمُزَ الْأَعْرَجِ أَنَّهُ سمع أَبَا هُرَيْرَةَ يقول والله لَوْلَا آيَتَانِ في كِتَابِ اللَّهِ تَعَالَى ما حَدَّثْتُ عنه يعنى عن النبي (ص) شيئا أَبَدًا لَوْلَا قَوْلُ اللَّهِ ( إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ ما أَنْزَلَ الله من الْكِتَابِ ) إلى آخِرِ الْآيَتَيْنِ

ஹதீஸ் எண்: 262

இறைவன் அருளிய வேதத்தை யார் மறைக்கிறார்களோ என்று தொடங்கும் இரண்டு வசனங்களை (2:174,175) அபூஹுரைரா ரலி அவர்கள் ஓதிக் காண்பித்து இந்த இரண்டு வசனங்கள் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாதிருந்தால் நபி ஸல் அவர்கள் வழியாக நான் எதனையும் அறிவித்திருக்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், திர்மிதியிலும் இது இடம் பெற்றுள்ளது.)

263 حدثنا الْحُسَيْنُ بن أبي السَّرِيِّ الْعَسْقَلَانِيُّ ثنا خَلَفُ بن تَمِيمٍ عن عبد اللَّهِ بن السَّرِيِّ عن مُحَمَّدِ بن الْمُنْكَدِرِ عن جَابِرٍ قال قال رسول اللَّهِ (ص) إذا لَعَنَ آخِرُ هذه الْأُمَّةِ أَوَّلَهَا فَمَنْ كَتَمَ حَدِيثًا فَقَدْ كَتَمَ ما أَنْزَلَ الله

ஹதீஸ் எண்: 263

இந்த உம்மத்தின் இறுதியில் வருவோர், இந்த உம்மத்தின் ஆரம்ப காலத்தவர்களைச் சபிக்க முற்படும் போது யுகமுடிவு நாள் ஏற்படும். யார் ஒரு ஹதீஸை மறைக்கிறாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ் அருளியதை மறைத்தவராவார் என்று நபி ஸல் கூறியதாக ஜாபிர் ரலி அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் ஐந்தாவது அறிவிப்பாளரான ஹுஸைன் இப்னு அபிஸ்ஸரீ என்பவர் பெரும் பொய்யராவார். முஹம்மத் இப்னுல் முன்கதிர் வழியாக அறிவிக்கும் இதன் மூன்றாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னுஸ்ஸரீ என்பவர் முஹம்மத் இப்னுல் முன் கதிரை சந்தித்ததில்லை. எனவே இது தொடர்பு விடுபட்ட ஹதீஸாகும்.)

264 حدثنا أَحْمَدُ بن الْأَزْهَرِ ثنا الْهَيْثَمُ بن جَمِيلٍ حدثني عمرو بن سُلَيْمٍ ثنا يُوسُفُ بن إبراهيم قال سمعت أَنَسَ بن ما لك يقول سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول من سُئِلَ عن عِلْمٍ فَكَتَمَهُ أُلْجِمَ يوم الْقِيَامَةِ بِلِجَامٍ من نَارٍ

ஹதீஸ் எண்: 264

‘யாரேனும் ஒரு கல்வி விஷயமாக கேட்கப்பட்டு, அதை மறைத்தால் மறுமைநாளில் நெருப்புக் கடிவாளம் இடப்படுவார்’ என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அனஸ் ரலி அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளராகிய யூசுப் இப்னு இப்ராஹீம் என்பவர் பலவீனமானவர் எனினும் இந்தக் கருத்தில் வேறு நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக ஹதீஸ்கள் வந்துள்ளதால் இது ஹஸன் எனும் தரத்தைப் பெறுகிறது!)

265 حدثنا إسماعيل بن حِبَّانَ بن وَاقِدٍ الثَّقَفِيُّ أبو إسحاق الْوَاسِطِيُّ ثنا عبد اللَّهِ بن عَاصِمٍ ثنا محمد بن دَابٍ عن صَفْوَانَ بن سُلَيْمٍ عن عبد الرحمن بن أبي سَعِيدٍ الْخُدْرِيِّ عن أبي سَعِيدٍ الْخُدْرِيِّ قال قال رسول اللَّهِ (ص) من كَتَمَ عِلْمًا مِمَّا يَنْفَعُ الله بِهِ في أَمْرِ الناس أَمْرِ الدِّينِ أَلْجَمَهُ الله يوم الْقِيَامَةِ بِلِجَامٍ من النَّارِ

ஹதீஸ் எண்: 265

‘மக்களுக்குப் பயன் தரும் மார்க்க விஷயம் பற்றிய ஒரு கல்வியை யாரேனும் மறைத்தால் மறுமை நாளில் அவருக்கு அல்லாஹ் நெருப்புக் கடிவாளம் இடுவான்’ என்று நபி ஸல் அவாகள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரீ ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான முஹம்மது இப்னு தஃபு என்பவர் பெரும் பொய்யர். எனினும் மேற்கூறிய அதே காரணத்தினால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)

266 حدثنا محمد بن عبد اللَّهِ بن حَفْصِ بن هِشَامِ بن زَيْدِ بن أَنَسِ بن مَالِكٍ ثنا أبو إبراهيم إسماعيل بن إبراهيم الْكَرَابِيسِيُّ عن بن عَوْنٍ عن مُحَمَّدِ بن سِيرِينَ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) من سُئِلَ عن عِلْمٍ يعلمه فَكَتَمَهُ أُلْجِمَ يوم الْقِيَامَةِ بِلِجَامٍ من نَارٍ

ஹதீஸ் எண்: 266

இங்கே 261 வது ஹதீஸின் கருத்தே இடம் பெறுகிறது.

_______________________________________________________

இந்த ஹதீஸுடன் முகத்திமா (முகப்பு) முடிகிறது. அடுத்து அத்தியாயம் 1. ‘சுத்தம் செய்தல்’ அடுத்த பக்கத்திலிருந்து ஆரம்பமாகிறது.

இப்னுமாஜா பக்கம் – 26

இப்னுமாஜா பக்கம் – 26

பக்கம் – 26 (ஹதீஸ்கள் 251 முதல் 260 வரை)

அத்தியாயம்: முகத்திமா – முகப்பு

251 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عبد اللَّهِ بن نُمَيْرٍ عن مُوسَى بن عُبَيْدَةَ عن مُحَمَّدِ بن ثَابِتٍ عن أبي هُرَيْرَةَ قال كان رسول اللَّهِ (ص) يقول اللهم انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي ما يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا وَالْحَمْدُ لِلَّهِ على كل حَالٍ  

ஹதீஸ் எண்: 251

‘இறைவா! எனக்கு நீ கற்றுத் தந்தவைகள் மூலம் எனக்குப் பயனளிப்பாயாக! பயனுள்ளவற்றையே எனக்குக் கற்றுத்தருவாயாக! கல்வியை எனக்கு அதிகமாக்குவாயாக! எல்லா நிலையிலும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தனர் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: திர்மிதியிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

252 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا يُونُسُ بن مُحَمَّدٍ وَسُرَيْجُ بن النُّعْمَانِ قالا ثنا فُلَيْحُ بن سُلَيْمَانَ عن عبد اللَّهِ بن عبد الرحمن بن مَعْمَرٍ أبي طُوَالَةَ عن سَعِيدِ بن يَسَارٍ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) من تَعَلَّمَ عِلْمًا مِمَّا يبتغي بِهِ وَجْهُ اللَّهِ لَا يَتَعَلَّمُهُ إلا لِيُصِيبَ بِهِ عَرَضًا من الدُّنْيَا لم يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يوم الْقِيَامَةِ يعنى رِيحَهَا قال أبو الْحَسَنِ أَنْبَأَنَا أبو حَاتِمٍ ثنا سَعِيدُ بن مَنْصُورٍ ثنا فُلَيْحُ بن سُلَيْمَانَ فذكر نَحْوَهُ

ஹதீஸ் எண்: 252

இறைவனின் பொருத்தத்தைப் பெறுவதற்குரிய கல்வியை யாரேனும் கற்று, அவ்வாறு கற்பதன் மூலம் உலகப் பொருளை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டால் கியாமத் நாளில் சுவர்க்கத்தின் வாடையைக்கூட அவன் நுகர முடியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

253 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا حَمَّادُ بن عبد الرحمن ثنا أبو كَرِبٍ الْأَزْدِيُّ عن نَافِعٍ عن بن عُمَرَ عن النبي (ص) قال من طَلَبَ الْعِلْمَ ليمارى بِهِ السُّفَهَاءَ أو لِيُبَاهِيَ بِهِ الْعُلَمَاءَ أو لِيَصْرِفَ وُجُوهَ الناس إليه فَهُوَ في النَّارِ

ஹதீஸ் எண்: 253

‘அறிவீனர்களிடம் பெருமை அடிப்பதற்காகவோ, அறிஞர்களை மட்டம் தட்டுவதற்காகவோ மக்களின் கவனத்தைத் தன் பால் திருப்பிக் கொள்வதற்காகவோ யாரேனும் கல்வியைக் கற்றால் அவன் நரகிலிருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளரான அபூகுரைப் என்பவரும், நான்காவது அறிவிப்பாளரான ஹம்மாத் இப்னு அப்துர்ரஹ்மான் என்பவரும் பலவீனமானவர்கள்.)

254 حدثنا محمد بن يحيى ثنا بن أبي مَرْيَمَ أَنْبَأَنَا يحيى بن أَيُّوبَ عن بن جُرَيْجٍ عن أبي الزُّبَيْرِ عن جَابِرِ بن عبد اللَّهِ أَنَّ النبي (ص) قال لَا تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ ولا لِتُمَارُوا بِهِ السُّفَهَاءَ ولا تَخَيَّرُوا بِهِ الْمَجَالِسَ فَمَنْ فَعَلَ ذلك فَالنَّارُ النَّارُ

ஹதீஸ் எண்: 254

‘அறிஞர்களை மட்டம் தட்டவோ, அறிவீனர்களிடம் பெருமை அடிக்கவோ, சபைகளில் சிறப்பான இடத்தைப் பெறவோ நீங்கள் கல்வி கற்காதீர்கள்! யார் இவ்வாறு செய்கிறாரோ அவருக்கு நரகம் தான், நரகம் தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இப்னு ஹிப்பானிலும் ஹாகிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இதே கருத்தைக் கூறும் இதற்கு முந்தைய ஹதீஸ் ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது என்பதை நினைவில் கொள்க!)

255 حدثنا محمد بن الصَّبَّاحِ أَنْبَأَنَا الْوَلِيدُ بن مُسْلِمٍ عن يحيى بن عبد الرحمن الْكِنْدِيِّ عن عُبَيْدِ اللَّهِ بن أبي بُرْدَةَ عن بن عَبَّاسٍ عن النبي (ص) قال إِنَّ أُنَاسًا من أُمَّتِي سَيَتَفَقَّهُونَ في الدِّينِ وَيَقْرَءُونَ الْقُرْآنَ وَيَقُولُونَ نَأْتِي الْأُمَرَاءَ فَنُصِيبُ من دُنْيَاهُمْ وَنَعْتَزِلُهُمْ بِدِينِنَا ولا يَكُونُ ذلك كما لَا يُجْتَنَى من الْقَتَادِ ألا الشَّوْكُ كَذَلِكَ لَا يُجْتَنَى من قُرْبِهِمْ إلا قال محمد بن الصَّبَّاحِ كَأَنَّهُ يَعْنِي الْخَطَايَا

ஹதீஸ் எண்: 255

என் சமுதாயத்தில் சிலர் மார்க்கக் கல்வியைக் கற்று, குர்ஆனையும் நன்கு ஓதுவார்கள். (தலைவர்களிடம் நெருக்கமாக இருப்பார்கள்) ‘நாங்கள் தலைவர்களைத் தேடிச் சென்றாலும் அவர்களிடமிருந்து இவ்வுலகப் பொருட்களையே பெறுகிறோம். மார்க்க விஷயத்தில் அவர்களிடமிருந்து விலகியே இருக்கிறோம்’ என்றும் அவர்கள் கூறுவார்கள். (அதாவது எங்களது மார்க்கத்தை விட்டுக் கொடுக்காமல் உலகப் பொருள்களைப் பெறுகிறோம் என்பார்கள்.) இது நடக்க முடியாததாகும். முள் மரத்திலிருந்து முள்ளைத் தவிர வேறு எதனையும் அடைய முடியாது என்பது போல், தலைவர்களிடமிருந்து பாவங்களைத் தவிர வேறு எதனையும் அடைய முடியாது’ என நபி (ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளரான உபைதுல்லாஹ் இப்னு அபீ புர்தா என்பவர் யாரென்றே அறியப்படாதவர் எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.)

256 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ وَمُحَمَّدُ بن إسماعيل قالا ثنا عبد الرحمن بن مُحَمَّدٍ الْمُحَارِبِيُّ ثنا عَمَّارُ بن سَيْفٍ عن أبي مُعَاذٍ الْبَصْرِيِّ ح وحدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا إسحاق بن مَنْصُورٍ عن عَمَّارِ بن سَيْفٍ عن أبي مُعَاذٍ عن بن سِيرِينَ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) تَعَوَّذُوا بِاللَّهِ من جُبِّ الْحُزْنِ قالوا يا رَسُولَ اللَّهِ وما جُبُّ الْحُزْنِ قال وَادٍ في جَهَنَّمَ يتعوذ منه جَهَنَّمُ كُلَّ يَوْمٍ أربعمائة مَرَّةٍ قالوا يا رَسُولَ اللَّهِ ومن يَدْخُلُهُ قال أُعِدَّ لِلْقُرَّاءِ الْمُرَائِينَ بِأَعْمَالِهِمْ وَإِنَّ من أَبْغَضِ الْقُرَّاءِ إلى اللَّهِ الَّذِينَ يَزُورُونَ الْأُمَرَاءَ قال الْمُحَارِبِيُّ الْجَوَرَةَ قال أبو الْحَسَنِ حدثنا حَازِمُ بن يحيى ثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَمُحَمَّدُ بن نُمَيْرٍ قالا ثنا بن نُمَيْرٍ عن مُعَاوِيَةَ النَّصْرِيِّ وكان ثِقَةً ثُمَّ ذَكَرَ الحديث نَحْوَهُ بِإِسْنَادِهِ حدثنا إِبْرَاهِيمُ بن نَصْرٍ ثنا أبو غَسَّانَ مَالِكُ بن إِسْمَاعِيلَ ثنا عَمَّارُ بن سَيْفٍ عن أبي مُعَاذٍ قال مَالِكُ بن إِسْمَاعِيلَ قال عَمَّارٌ لَا أَدْرِي مُحَمَّدٌ أو أَنَسُ بن سِيرِينَ

ஹதீஸ் எண்: 256

‘கவலைக் கிணற்றை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, கவலைக் கிணறு என்றால் என்னவென்று நபித்தோழர்கள் கேட்டனர். ‘அது நரகில் உள்ள ஒரு ஓடையாகும். தினமும் நானூறு தடவை நரகம் (கூட) அந்த ஓடையை விட்டும் காவல் தேடுகின்றது’ என்று நபி (ஸல்) கூறினார்கள். ‘அதில் நுழைவோர் யார்?’ என நபித்தோழர்கள் கேட்டனர். ‘பிறருக்குக் காண்பிப்பதற்காக செயல் புரியும் அறிஞர்களுக்காக அது தயார் செய்யப்பட்டுள்ளது. இறைவனின் மிகவும் கடுமையான கோபத்திற்கு ஆளானோர் மன்னர்களைச் சந்திக்கச் செல்பவர்களாவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வரிசையில் மூன்றாவதாக இடம் பெறும் அதா இப்னு அபீமைமூனா என்ற அபூமுஆத் என்பவர் விதியை மறுக்கும் கொள்கையுடையவராவார். இவர் நம்பகமானவரல்ல என்று அபூஹாதம் குறிப்பிடுகிறார்கள்.)

257 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ وَالْحُسَيْنُ بن عبد الرحمن قالا ثنا عبد اللَّهِ بن نُمَيْرٍ عن مُعَاوِيَةَ النَّصْرِيِّ عن نَهْشَلٍ عن الضَّحَّاكِ عن الْأَسْوَدِ بن يَزِيدَ عن عبد اللَّهِ بن مَسْعُودٍ قال لو أَنَّ أَهْلَ الْعِلْمِ صَانُوا الْعِلْمَ وَوَضَعُوهُ عِنْدَ أَهْلِهِ لَسَادُوا بِهِ أَهْلَ زَمَانِهِمْ وَلَكِنَّهُمْ بَذَلُوهُ لِأَهْلِ الدُّنْيَا لِيَنَالُوا بِهِ من دُنْيَاهُمْ فَهَانُوا عليهم سمعت نَبِيَّكُمْ (ص) يقول من جَعَلَ الْهُمُومَ هَمًّا وَاحِدًا هَمَّ آخِرَتِهِ كَفَاهُ الله هَمَّ دُنْيَاهُ وَمَنْ تَشَعَّبَتْ بِهِ الْهُمُومُ في أَحْوَالِ الدُّنْيَا لم يُبَالِ الله في أَيِّ أَوْدِيَتِهَا هَلَكَ قال أبو الحسن حدثنا حازم بن يحيى ثنا أبو بكر بن أبي شيبة ومحمد بن عبد الله بن نمير قالا ثنا بن نمير عن معاوية النصري وكان ثقة ثم ذكر الحديث نحوه بإسناده

ஹதீஸ் எண்: 257

கல்வியாளர்கள் கல்வியைப் பேணி, தக்கவர்களிடம் அதை ஒப்படைத்திருந்தால், தம் காலத்தவர்களுக்கு தலைவர்களாகி இருப்பர். எனினும் அவர்கள் உலகத்தாரிடம் உலகத்தை அடைவதையே நோக்கமாக மாற்றிக் கொண்டனர். இதனால் அவர்களை விடவும் இழிநிலையை அடைந்தனர் என்று இப்னு மஸ்வூது (ரலி) கூறி விட்டு, யார் மறுமை பற்றிய கவலையையே தன் ஒரே கவலையாகக் கொண்டாரோ அவரது உலகக் கவலைக்கு இறைவன் போதுமாகின்றான். உலகத்து நிலமைகளில் யார் தன் கவலையைச் சிதறவிடுகிறாரோ அவர் உலகப் பிரச்சனைகளில் எதில் அழிந்து போனாலும் அவரை அல்லாஹ் பொருட்படுத்துவதில்லை’ என்று நபி (ஸல்) கூறியதாகத் தெரிவித்தனர்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான நஹ்ஷல் இப்னு ஸயீத் என்பவர் இட்டுக் கட்டுபவராக இருந்தவர் என ஹதீஸ் கலை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.)

258 حدثنا زَيْدُ بن أَخْزَمَ وأبو بَدْرٍ عَبَّادُ بن الْوَلِيدِ قالا ثنا محمد بن عَبَّادٍ الْهُنَائِيُّ ثنا عَلِيُّ بن الْمُبَارَكِ الْهُنَائِيُّ عن أَيُّوبَ السَّخْتِيَانِيِّ عن خَالِدِ بن دُرَيْكٍ عن بن عُمَرَ أَنَّ النبي (ص) قال من طَلَبَ الْعِلْمَ لِغَيْرِ اللَّهِ أو أَرَادَ بِهِ غير اللَّهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ من النَّارِ

ஹதீஸ் எண்: 258

அல்லாஹ் அல்லாத (நோக்கத்)திற்காக, எவர் கற்கிறாரோ அல்லது (நல்ல நோக்கத்தில் கற்று விட்டு பின்னர்) கல்வி மூலம் இறைவனல்லாதவற்றை நாடுகிறாரோ அவர் தனது தங்குமிடமாக நரகத்தை ஆக்கிக் கொள்ளட்டும்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

259 حدثنا أَحْمَدُ بن عَاصِمٍ الْعَبَّادَانِيُّ ثنا بَشِيرُ بن مَيْمُونٍ قال سمعت أَشْعَثَ بن سَوَّارٍ عن بن سِيرِينَ عن حُذَيْفَةَ قال سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول لَا تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ أو لِتُمَارُوا بِهِ السُّفَهَاءَ أو لِتَصْرِفُوا وُجُوهَ الناس إِلَيْكُمْ فَمَنْ فَعَلَ ذلك فَهُوَ في النَّارِ

ஹதீஸ் எண்: 259

கல்வியின் மூலம் அறிஞர்களை மட்டம் தட்டுவதற்காகவோ, அறிவீனர்களிடம் பெருமை அடிப்பதற்காகவோ, மக்கள் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பிக் கொள்வதற்காகவோ கல்வியைக் கற்காதீர்கள்! யார் அவ்வாறு செய்கிறாரோ அவர் நரகிலிருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான பஷீர் இப்னு மைமூன் என்பவர் ஹதீஸ் கலையில் நிராகரிக்கப்பட்டவராவார்.)

260 حدثنا محمد بن إسماعيل أَنْبَأَنَا وَهْبُ بن إسماعيل الْأَسَدِيُّ ثنا عبد اللَّهِ بن سَعِيدٍ الْمَقْبُرِيُّ عن جَدِّهِ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) من تَعَلَّمَ الْعِلْمَ لِيُبَاهِيَ بِهِ الْعُلَمَاءَ وَيُجَارِيَ بِهِ السُّفَهَاءَ وَيَصْرِفَ بِهِ وُجُوهَ الناس إليه أَدْخَلَهُ الله جَهَنَّمَ

ஹதீஸ் எண்: 260

மேற்கூறிய ஹதீஸின் கருத்தே வேறு அறிவிப்பாளர் வழியாக இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

(குறிப்பு: இந்த அறிவிப்பாளர் வரிசையும் சரியானதல்ல. இதன் மூன்றாவது அறிவிப்பாளரான அப்துல்லாஹ் இப்னு ஸயீத் அல்மக்புரி என்பவர் பலவீனமானவராவார்.)

இப்னுமாஜா பக்கம் – 25

இப்னுமாஜா பக்கம் – 25

பக்கம் – 25 (ஹதீஸ்கள் 241 முதல் 250 வரை)

அத்தியாயம்: முகத்திமா – முகப்பு

241 حدثنا إسماعيل بن أبي كَرِيمَةَ الْحَرَّانِيُّ حدثنا محمد بن سَلَمَةَ عن أبي عبد الرَّحِيمِ حدثني زَيْدُ بن أبي أُنيْسَةَ عن زيْدِ بن أَسْلَمَ عن عبد اللَّهِ بن أبي قَتَادَةَ عن أبيه قال قال رسول اللَّهِ (ص) خَيْرُ ما يُخَلِّفُ الرَّجُلُ من بَعْدِهِ ثَلَاثٌ وَلَدٌ صَالِحٌ يَدْعُو له وَصَدَقَةٌ تَجْرِي يَبْلُغُهُ أَجْرُهَا وَعِلْمٌ يُعْمَلُ بِهِ من بَعْدِهِ قال أبو الْحَسَنِ وَحَدَّثَنَا أبو حَاتِمٍ محمد بن يَزِيدَ بن سِنَانٍ الرَّهَاوِيُّ حدثنا يَزِيدُ بن سِنَانٍ يَعْنِي أَبَاهُ حدثني زَيْدُ بن أبي أُنَيْسَةَ عن فُلَيْحِ بن سُلَيْمَانَ عن زَيْدِ بن أَسْلَمَ عن عبد اللَّهِ بن أبي قَتَادَةَ عن أبيه سمعت رَسُولَ اللَّهِ (ص) فذكر نَحْوَهُ

ஹதீஸ் எண்: 241

தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி, தொடர்ந்து நன்மை கிடைக்கும் விதமாக செய்த நிலையான நல்லறம், தனக்குப் பின்னர் (பிறரால்) செயல்படுத்தப்படும் கல்வி ஆகிய மூன்று காரியங்கள் மனிதன் விட்டுச் செல்பவற்றிலேயே மிகவும் சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூகதாதா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இப்னு ஹிப்பான் நூலிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

242 حدثنا محمد بن يحيى ثنا محمد بن وَهْبِ بن عَطِيَّةَ ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ ثنا مَرْزُوقُ بن أبي الْهُذَيْلِ حدثني الزُّهْرِيُّ حدثني أبو عبد اللَّهِ الْأَغَرُّ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ من عَمَلِهِ وَحَسَنَاتِهِ بَعْدَ مَوْتِهِ عِلْمًا عَلَّمَهُ وَنَشَرَهُ وَوَلَدًا صَالِحًا تَرَكَهُ وَمُصْحَفًا وَرَّثَهُ أو مَسْجِدًا بَنَاهُ أو بَيْتًا لابن السَّبِيلِ بَنَاهُ أو نَهْرًا أَجْرَاهُ أو صَدَقَةً أَخْرَجَهَا من مَالِهِ في صِحَّتِهِ وَحَيَاتِهِ يَلْحَقُهُ من بَعْدِ مَوْتِهِ

ஹதீஸ் எண்: 242

ஒருவன் பிறருக்குக் கற்பித்து பரவச் செய்த கல்வி, அவன் விட்டுச் சென்ற நல்லொழுக்கமுள்ள சந்ததி, அவன் விட்டுச் சென்ற (பயனுள்ள) நூல், அவன் கட்டிய பள்ளிவாசல், வழிப்போக்கர்களுக்காக எழுப்பிய விடுதி, அவன் வெட்டிய ஆறுகள், நல்ல ஆரோக்கியத்துடன் வாழும் போது தனது பொருளிலிருந்து அவன் செய்த தர்மங்கள் ஆகியவை ஒரு மனிதனது மரணத்திற்குப் பின்னரும் பயனளிக்கும் நல்லறங்களில் உள்ளவையாகும். இவற்றின் நன்மைகள் அவனது மரணத்திற்குப் பின்னரும் அவனுக்குக் கிடைக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இப்னுகுஸைமாவிலும் இது இடம் பெற்றுள்ளது.)

243 حدثنا يَعْقُوبُ بن حُمَيْدِ بن كَاسِبٍ الْمَدَنِيُّ حدثني إسحاق بن إبراهيم عن صَفْوَانَ بن سُلَيْمٍ عن عُبَيْدِ اللَّهِ بن طَلْحَةَ عن الْحَسَنِ الْبَصْرِيِّ عن أبي هُرَيْرَةَ أَنَّ النبي (ص) قال أَفْضَلُ الصَّدَقَةِ أَنْ يَتَعَلَّمَ الْمَرْءُ الْمُسْلِمُ عِلْمًا ثُمَّ يُعَلِّمَهُ أَخَاهُ الْمُسْلِمَ

ஹதீஸ் எண்: 243

‘ஒரு முஸ்லிம் ஒரு கல்வியைக் கற்று, பின்னர் தமது முஸ்லிமான மற்றொரு சகோதரனுக்குக் கற்பிப்பது நல்லறங்களில் மிகவும் சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்தக் கருத்து சரியானது என்றாலும் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து ஹஸன் பஸரி அறிவிப்பதாக இந்த ஹதீஸ் உள்ளது. ஆனால் இருவரும் சந்தித்ததில்லை. மேலும் இதன் ஐந்தாவது அறிவிப்பாளரான இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம் என்பவரும், ஆறாவது அறிவிப்பாளரான எஃகூப் இப்னு ஹுமைத் என்பவரும் பலவீனமான அறிவிப்பாளர்களாவர்.)

21 بَاب من كَرِهَ أَنْ يُوطَأَ عَقِبَاهُ  

244 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا سُوَيْدُ بن عَمْرٍو عن حَمَّادِ بن سَلَمَةَ عن ثَابِتٍ عن شُعَيْبِ بن عبد اللَّهِ بن عَمْرٍو عن أبيه قال ما رُئِيَ رسول اللَّهِ (ص) يَأْكُلُ مُتَّكِئًا قَطُّ ولا يَطَأُ عَقِبَيْهِ رَجُلَانِ قال أبو الْحَسَنِ وَحَدَّثَنَا حَازِمُ بن يحيى ثنا إِبْرَاهِيمُ بن الْحَجَّاجِ السَّامِيُّ ثنا حَمَّادُ بن سَلَمَةَ قال أبو الْحَسَنِ وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بن نَصْرٍ الْهَمْدَانِيُّ صَاحِبُ الْقَفِيزِ ثنا مُوسَى بن إسماعيل ثنا حَمَّادُ بن سَلَمَةَ

21.புடை சூழ செல்லலாகாது

ஹதீஸ் எண்: 244

‘நபி (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு உண்பவர்களாகவும், அவர்களுக்குப் பின் இரண்டு நபர்கள் பின் தொடர்ந்து செல்பவர்களாகவும் காணப்பட்டதே இல்லை’ என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இது அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது ஒருவருக்குப் பின்னால் அவரது அடிமைகள் போல் சிலரைப் பின் தொடர்ந்து வரச் செய்து ‘பந்தா’ காட்டுவது இங்கே குறிப்பிடப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்க!)

245 حدثنا محمد بن يحيى ثنا أبو الْمُغِيرَةِ ثنا مُعَانُ بن رِفَاعَةَ حدثني عَلِيُّ بن يَزِيدَ قال سمعت الْقَاسِمَ بن عبد الرحمن يحدث عن أبي أُمَامَةَ قال مَرَّ النبي (ص) في يَوْمٍ شَدِيدِ الْحَرِّ نحو بَقِيعِ الْغَرْقَدِ وكان الناس يَمْشُونَ خَلْفَهُ فلما سمع صَوْتَ النِّعَالِ وَقَرَ ذلك في نَفْسِهِ فَجَلَسَ حتى قَدَّمَهُمْ أَمَامَهُ لِئَلَّا يَقَعَ في نَفْسِهِ شَيْءٌ من الْكِبْرِ

ஹதீஸ் எண்: 245

‘பகீவுல்கர்கத்’ எனும் இடம் நோக்கி நபி (ஸல்) அவர்கள் கடுமையான வெயிலில் புறப்பட்டார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னே நடந்து வரலானார்கள். அவர்களின் செருப்போசையைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் இதை உணர்ந்து, வந்தவர்கள் முன்னால் செல்லும் வரை உட்கார்ந்து விட்டார்கள். தனது உள்ளத்தில் பெருமை எதுவும் ஏற்படலாகாது என்பதற்காக இவ்வாறு செய்தார்கள்’ என்று அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான அலீ இப்னு யஸீத் என்பவர் அனைத்து ஹதீஸ் கலை வல்லுனர்களாலும் பலவீனமானவர் என் முடிவு செய்யப்பட்டவராவார்.)

246 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن الْأَسْوَدِ بن قَيْسٍ عن نُبَيْحٍ الْعَنَزِيِّ عن جَابِرِ بن عبد اللَّهِ قال كان النبي (ص) إذا مَشَى مَشَى أَصْحَابُهُ أَمَامَهُ وَتَرَكُوا ظَهْرَهُ لِلْمَلَائِكَةِ

ஹதீஸ் எண்: 246

‘நபி (ஸல்) அவர்கள் நடக்கும் போது அவர்களின் தோழர்கள் அவர்களுக்கு முன்னால் நடப்பார்கள். நபி (ஸல்) அவர்களின் பின்னே வானவர்கள் வருவதற்கு விட்டு விடுவார்கள்’ என ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

22 بَاب الْوَصَاةِ بِطَلَبَةِ الْعِلْمِ  

247 حدثنا محمد بن الْحَارِثِ بن رَاشِدٍ الْمِصْرِيُّ ثنا الْحَكَمُ بن عَبْدَةَ عن أبي هَارُونَ الْعَبْدِيِّ عن أبي سَعِيدٍ الْخُدْرِيِّ عن رسول اللَّهِ (ص) قال سَيَأْتِيكُمْ أَقْوَامٌ يَطْلُبُونَ الْعِلْمَ فإذا رَأَيْتُمُوهُمْ فَقُولُوا لهم مَرْحَبًا مَرْحَبًا بِوَصِيَّةِ رسول اللَّهِ (ص) وَاقْنُوهُمْ قلت لِلْحَكَمِ ما اقْنُوهُمْ قال عَلِّمُوهُمْ

22.கல்வி கற்பவர்கள் பற்றி

ஹதீஸ் எண்: 247

கல்வியைத் தேடி உங்களிடம் பல கூட்டத்தினர் வருவர். அவர்களை நீங்கள் கண்டதும் ‘நபி (ஸல்) அவர்களின் ‘வஸிய்யத்’ (இறுதி போதனை) காரணமாக நல்வாழ்த்துக்கள்! நல்வாழ்த்துக்கள்! என்று கூறுங்கள்! மேலும் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

248 حدثنا عبد اللَّهِ بن عَامِرِ بن زُرَارَةَ ثنا الْمُعَلَّى بن هِلَالٍ عن إسماعيل قال دَخَلْنَا على الْحَسَنِ نَعُودُهُ حتى مَلَأْنَا الْبَيْتَ فَقَبَضَ رِجْلَيْهِ ثُمَّ قال دَخَلْنَا على أبي هُرَيْرَةَ نَعُودُهُ حتى مَلَأْنَا الْبَيْتَ فَقَبَضَ رِجْلَيْهِ ثُمَّ قال دَخَلْنَا على رسول اللَّهِ (ص) حتى مَلَأْنَا الْبَيْتَ وهو مُضْطَجِعٌ لِجَنْبِهِ فلما رَآنَا قَبَضَ رِجْلَيْهِ ثُمَّ قال إنه سَيَأْتِيكُمْ أَقْوَامٌ من بَعْدِي يَطْلُبُونَ الْعِلْمَ فَرَحِّبُوا بِهِمْ وَحَيُّوهُمْ وَعَلِّمُوهُمْ قال فَأَدْرَكْنَا والله أَقْوَامًا ما رَحَّبُوا بِنَا ولا حَيَّوْنَا ولا عَلَّمُونَا إلا بَعْدَ أَنْ كنا نَذْهَبُ إِلَيْهِمْ فَيَجْفُونَا

ஹதீஸ் எண்: 248

ஹஸன் (ரஹ்) அவர்களை நோய் விசாரிக்க நாங்கள் சென்று வீடு முழுவதும் நிறைந்து விட்டோம். அவர்கள் தமது கால்களை மடக்கிக் கொண்டு, ‘நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களை நோய் விசாரிக்கச் சென்று அவர்களின் வீட்டில் குழுமிய போது, அவர்கள் தமது கால்களை மடக்கிக் கொண்டு கூறியதாவது, நாங்கள் நபி (ஸல்) அவர்களை நோய் விசாரிக்கச் சென்று இல்லத்தில் குழுமிய போது ஒருக்களித்துப் படுத்திருந்த நபி (ஸல்) அவர்கள் தமது கால்களை மடக்கிக் கொண்டு ‘எனக்குப் பின் சிலர் கல்வியை தேடி உங்களிடம் வருவர், அவர்களுக்கு வாழ்த்துக் கூறி அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்!’ என்றும் கூறினார்கள். (இதை நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களை நோய் விசாரிக்கச் சென்ற போது கூறினார்கள்) என்று ஹஸன் (ரஹ்) தெரிவித்தார்கள்.

மேலும் தொடர்ந்து ‘நாங்கள் கல்வி கற்பதற்காக பலரிடம் சென்றோம்’ அவர்கள் எங்களுக்கு நல் வாழ்த்துக் கூறவில்லை. எங்களுக்குக் கற்றும் தரவில்லை. நாங்கள் அவர்களிடம் சென்ற பிறகும் எங்களை அவர்கள் வெறுத்து ஒதுக்குகின்றனர் என்று ஹஸன் (ரலி) குறிப்பிட்டார்கள்.

(குறிப்பு: இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும். இதன் மூன்றாம் அறிவிப்பாளராகிய இஸ்மாயில் இப்னு முஸ்லிம் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர். இதன் நான்காவது அறிவிப்பாளரான அல் முஅல்லா இப்னு ஹிலால் என்பவர் பெரும் பொய்யரும், இட்டுக் கட்டுபவருமானவார் என்று அஹ்மது இமாம், இப்னு முயீன் மற்றும் பலர் கூறியுள்ளனர். மேலும் அபூஹுரைரா (ரலி) அவர்களை ஹஸன் பஸ்ரீ அவர்கள் சந்தித்ததே கிடையாது என்பதால் இது திட்டமிட்டு இட்;டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.)

249 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا عَمْرُو بن مُحَمَّدٍ الْعَنْقَزِيُّ أَنْبَأَنَا سُفْيَانُ عن أبي هَارُونَ الْعَبْدِيِّ قال كنا إذا أَتَيْنَا أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قال مَرْحَبًا بِوَصِيَّةِ رسول اللَّهِ (ص) إِنَّ رَسُولَ اللَّهِ (ص) قال لنا إِنَّ الناس لَكُمْ تَبَعٌ وَإِنَّهُمْ سَيَأْتُونَكُمْ من أَقْطَارِ الأرض يَتَفَقَّهُونَ في الدِّينِ فإذا جَاءُوكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا

ஹதீஸ் எண்: 249

நாங்கள் அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்களிடம் வந்தால் ‘அல்லாஹ்வின் தூதரின் போதனைக் கேற்ப உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்’ என்று கூறுவார்கள். மக்கள் உங்களைப் பின் தொடர்ந்து வருவார்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மார்க்கத்தைக் கற்றுக் கொள்ள உங்களிடம் வருவார்கள். அவர்கள் உங்களிடம் வரும் போது அவர்களுக்கு நல்லதையே நாடுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அவர்கள் கூறுவார்கள்.

23 بَاب الِانْتِفَاعِ بِالْعِلْمِ وَالْعَمَلِ بِهِ  

250 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو خَالِدٍ الْأَحْمَرُ عن بن عَجْلَانَ عن سَعِيدِ بن أبي سَعِيدٍ عن أبي هُرَيْرَةَ قال كان من دُعَاءِ النبي (ص) اللهم إني أَعُوذُ بِكَ من عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ دُعَاءٍ لَا يُسْمَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ

ஹதீஸ் எண்: 250

‘இறைவா! பயனற்ற கல்வியை விட்டும், ஏற்கப்படாத பிரார்த்தனையை விட்டும், அடக்கமற்ற உள்ளத்தை விட்டும், திருப்தியடையாத ஆத்மாவை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்பது நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருந்தது என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

இப்னுமாஜா பக்கம் – 24

இப்னுமாஜா பக்கம் – 24

பக்கம் – 24 (ஹதீஸ்கள் 231 முதல் 240 வரை)

அத்தியாயம்: முகத்திமா – முகப்பு

231 حدثنا محمد بن عبد اللَّهِ بن نُمَيْرٍ ثنا أبي عن مُحَمَّدِ بن إسحاق عن عبد السَّلَامِ عن الزُّهْرِيِّ عن مُحَمَّدِ بن جُبَيْرِ بن مُطْعِمٍ عن أبيه قال قام رسول اللَّهِ (ص) بِالْخَيْفِ من مِنًى فقال نَضَّرَ الله امْرَأً سمع مَقَالَتِي فَبَلَّغَهَا فَرُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرِ فَقِيهٍ وَرُبَّ حَامِلِ فِقْهٍ إلى من هو أَفْقَهُ منه حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا خَالِي يَعْلَى ح وحدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا سَعِيدُ بن يحيى قالا ثنا محمد بن إسحاق عن الزُّهْرِيِّ عن مُحَمَّدِ بن جُبَيْرِ بن مُطْعِمٍ عن أبيه عن النبي (ص) بِنَحْوِهِ  

ஹதீஸ் எண்: 231

‘மினா’வில் உள்ள மலையடிவாரத்தில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு மேற்கூறிய ஹதீஸின் இரண்டாம் பாராவில் உள்ளதைக் கூறியதாக ஜுபைர் இப்னு முத்இம் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: திர்மிதி, அஹ்மத், இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

232 حدثنا محمد بن بَشَّارٍ وَمُحَمَّدُ بن الْوَلِيدِ قالا ثنا محمد بن جَعْفَرٍ ثنا شُعْبَةُ عن سِمَاكٍ عن عبد الرحمن بن عبد اللَّهِ عن أبيه أن النبي (ص) قال نَضَّرَ الله امْرَأً سمع مِنَّا حَدِيثًا فَبَلَّغَهُ فَرُبَّ مُبَلَّغٍ أَحْفَظُ من سَامِعٍ

ஹதீஸ் எண்: 232

‘என்னிடமிருந்து ஒரு செய்தியைச் செவியுற்று அதைப் (பிறருக்கு) எடுத்துச் சொல்பவருக்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக! நேரடியாகச் செவிமடுக்கும் எத்தனையோ நபர்களை விட அவரால் எடுத்துச் சொல்லப்படுபவர் நினைவாற்றல் மிக்கவராக (அதைப் பேணக் கூடியவராக) இருக்கிறார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

233 حدثنا محمد بن بَشَّارٍ ثنا يحيى بن سَعِيدٍ الْقَطَّانُ أَمْلَاهُ عَلَيْنَا ثنا قُرَّةُ بن خَالِدٍ ثنا محمد بن سِيرِينَ عن عبد الرحمن بن أبي بَكْرَةَ عن أبيه وَعَنْ رَجُلٍ آخَرَ هو أَفْضَلُ في نَفْسِي من عبد الرحمن عن أبي بَكْرَةَ قال خَطَبَ رسول اللَّهِ (ص) يوم النَّحْرِ فقال لِيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ فإنه رُبَّ مُبَلَّغٍ يَبْلُغُهُ أَوْعَى له من سَامِعٍ

ஹதீஸ் எண்: 233

நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாளில் (ஹஜ்பெருநாள் தினத்தில்ஸ சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது, ‘இங்கு வருகை தந்திருப்போர் வராதவர்களுக்கு (நான் கூறியவைகளை) எடுத்துச் சொல்லுங்கள்! எடுத்துச் சொல்லப்படும் எத்தனையோ பேர், நேரடியாகக் கேட்பவரை விட அதை மனனம் செய்பவர்களாக உள்ளனர்’ என்று குறிப்பிட்டார்கள் என அபூபக்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

234 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو أُسَامَةَ ح وحدثنا إسحاق بن مَنْصُورٍ أَنْبَأَنَا النَّضْرُ بن شُمَيْلٍ عن بَهْزِ بن حَكِيمٍ عن أبيه عن جَدِّهِ مُعَاوِيَةَ الْقُشَيْرِيِّ قال قال رسول اللَّهِ (ص) ألا لِيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ

ஹதீஸ் எண்: 234

‘கவனம்! இங்கே வந்திருப்போர் வராதவர்களுக்கு எடுத்துச் சொல்லி விடுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா அல் குஷைரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

235 حدثنا أَحْمَدُ بن عَبْدَةَ أَنْبَأَنَا عبد الْعَزِيزِ بن مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ حدثني قُدَامَةُ بن مُوسَى عن مُحَمَّدِ بن الْحُصَيْنِ التَّمِيمِيِّ عن أبي عَلْقَمَةَ مولى بن عَبَّاسٍ عن يَسَارٍ مولى بن عُمَرَ عن بن عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال لِيُبَلِّغْ شَاهِدُكُمْ غَائِبَكُمْ

ஹதீஸ் எண்: 235

முந்தைய ஹதீஸின் கருத்தே இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாக இங்கே இடம் பெறுகிறது.

(குறிப்பு: அபூதாவூதிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

236 حدثنا محمد بن إبراهيم الدِّمَشْقِيُّ ثنا مُبَشِّرُ بن إسماعيل الْحَلَبِيُّ عن مُعَانِ بن رِفَاعَةَ عن عبد الْوَهَّابِ بن بُخْتٍ الْمَكِّيِّ عن أَنَسِ بن مَالِكٍ قال قال رسول اللَّهِ (ص) نَضَّرَ الله عَبْدًا سمع مَقَالَتِي فَوَعَاهَا ثُمَّ بَلَّغَهَا عَنِّي فَرُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرِ فَقِيهٍ وَرُبَّ حَامِلِ فِقْهٍ إلى من هو أَفْقَهُ منه

ஹதீஸ் எண்: 236

இங்கே 231 வது ஹதீஸ் இடம் பெறுகிறது. ஆயினும் இதை அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.

بَاب من كان مِفْتَاحًا لِلْخَيْرِ  

237 حدثنا الْحُسَيْنُ بن الْحَسَنِ الْمَرْوَزِيُّ أنبانا محمد بن أبي عَدِيٍّ ثنا محمد بن أبي حُمَيْدٍ ثنا حَفْصُ بن عُبَيْدِ اللَّهِ بن أَنَسٍ عن أَنَسِ بن مَالِكٍ قال قال رسول اللَّهِ (ص) إِنَّ من الناس مَفَاتِيحَ لِلْخَيْرِ مَغَالِيقَ لِلشَّرِّ وَإِنَّ من الناس مَفَاتِيحَ لِلشَّرِّ مَغَالِيقَ لِلْخَيْرِ فَطُوبَى لِمَنْ جَعَلَ الله مَفَاتِيحَ الْخَيْرِ على يَدَيْهِ وَوَيْلٌ لِمَنْ جَعَلَ الله مَفَاتِيحَ الشَّرِّ على يَدَيْهِ

நல்லறங்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்பவனின் சிறப்புக்கள்

ஹதீஸ் எண்: 237

‘நன்மையின் வாயில்களைத் திறந்து, தீமையின் வாயில்களை அடைப்பவர்களும் மனிதர்களில் உள்ளனர். தீமையின் வாயில்களைத் திறந்து நன்மையின் வாயில்களை அடைப்பவர்களும் மனிதர்களில் உள்ளனர். எவரது கைகளில் நன்மையின் திறவுகோல்களை அல்லாஹ் வழங்கி விட்டானோ அவருக்கு நல்வாழ்த்துக்கள்! எவரது கைகளில் தீமையின் திறவு கோல்களை இறைவன் வழங்கி விட்டானோ அவருக்குக் கேடுகள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஹம்மத் இப்னு அபூஹுமைத் என்ற பலவீனமான அறிவிப்பாளர் மூன்றாவது அறிவிப்பாளராக இங்கே இடம் பெறுவதால் இது பலவீனமான ஹதீஸாகும்.)

238 حدثنا هَارُونُ بن سَعِيدٍ الْأَيْلِيُّ أبو جَعْفَرٍ ثنا عبد اللَّهِ بن وَهْبٍ أخبرني عبد الرحمن بن زَيْدِ بن أَسْلَمَ عن أبي حَازِمٍ عن سَهْلِ بن سَعْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال إِنَّ هذا الْخَيْرَ خَزَائِنُ وَلِتِلْكَ الْخَزَائِنِ مَفَاتِيحُ فَطُوبَى لِعَبْدٍ جَعَلَهُ الله مِفْتَاحًا لِلْخَيْرِ مِغْلَاقًا لِلشَّرِّ وَوَيْلٌ لِعَبْدٍ جَعَلَهُ الله مِفْتَاحًا لَلشَّرِّ مِغْلَاقًا لِلْخَيْرِ

ஹதீஸ் எண்: 238

‘நிச்சயமாக இந்த நன்மைகள் கருவூலங்களாகும். இந்தக் கருவூலங்களுக்கு என்று திறவுகோல்கள் உள்ளன. எவரை நன்மையின் திறவு கோலாகவும், தீமையைத் தடுப்பவராவும் அல்லாஹ் ஏற்படுத்தி விட்டானோ அந்த அடியாருக்கு நல்வாழ்த்துக்கள்! எவரைத் தீமையின் திறவுகோலாகவும், நன்மையை தடுப்பவராகவும் அல்லாஹ் ஏற்படுத்தி விட்டானோ அவருக்குக் கேடுகள்!’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளராக அப்துர்ரஹ்மான் இப்னு அஸ்லம் என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார்.)

بَاب ثَوَابِ مُعَلِّمِ الناس الْخَيْرَ  

239 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا حَفْصُ بن عُمَرَ عن عُثْمَانَ بن عَطَاءٍ عن أبيه عن أبي الدَّرْدَاءِ قال سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول إنه لَيَسْتَغْفِرُ لِلْعَالِمِ من في السَّمَاوَاتِ وَمَنْ في الأرض حتى الْحِيتَانِ في الْبَحْرِ

நல்லவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்பவருக்கு கிடைக்கும் பரிசுகள்

ஹதீஸ் எண்: 239

‘அறிஞருக்காக வானங்களிலுள்ளோரும், பூமியில் உள்ளோரும், பாவமன்னிப்புத் தேடுகின்றனர். கடலில் வாழும் மீன்கள் உட்பட’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என அபுத்தர்தா (ரலி) அறிவிக்கிறார்கள்.

240 حدثنا أَحْمَدُ بن عِيسَى الْمِصْرِيُّ ثنا عبد اللَّهِ بن وَهْبٍ عن يحيى بن أَيُّوبَ عن سَهْلِ بن مُعَاذِ بن أَنَسٍ عن أبيه أَنَّ النبي (ص) قال من عَلَّمَ عِلْمًا فَلَهُ أَجْرُ من عَمِلَ بِهِ لَا يَنْقُصُ من أَجْرِ الْعَامِلِ

ஹதீஸ் எண்: 240

‘யார் கல்வியைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கின்றாரோ அதைச் செயல்படுத்தியவர்களின் கூலியும் அவருக்கு உண்டு. (இதனால்) செயல்பட்டவரின் கூலியில் எதுவும் குறைந்து விடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாம் அறிவிப்பாளரான ஸஹ்ல் இப்னு முஆத் வழியாக மூன்றாம் அறிவிப்பாளரான எஹ்யா இப்னு அய்யூப் என்பவர் அறிவிப்பதாக உள்ளது. இவ்விருவரும் சந்தித்ததில்லை என்பதாக இது தொடர்பற்றதாக உள்ளது. ஆயினும் அந்தக் கருத்தை ஆதாரப்பூர்வமான ஏராளமான ஹதீஸ்கள் வலுப்படுத்துவதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)

இப்னுமாஜா பக்கம் – 23

இப்னுமாஜா பக்கம் – 23

பக்கம் – 23 (ஹதீஸ்கள் 221 முதல் 230 வரை)

அத்தியாயம்: முகத்திமா – முகப்பு

221 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ مَرْوَانُ بن جَنَاحٍ عن يُونُسَ بن مَيْسَرَةَ بن حَلْبَسٍ أَنَّهُ حدثه قال سمعت مُعَاوِيَةَ بن أبي سُفْيَانَ يحدث عن رسول اللَّهِ (ص) أَنَّهُ قال الْخَيْرُ عَادَةٌ وَالشَّرُّ لَجَاجَةٌ وَمَنْ يُرِدْ الله بِهِ خَيْرًا يُفَقِّهْهُ في الدِّينِ

ஹதீஸ் எண்: 221

‘நல்ல காரியங்கள் (தொடர்ந்து செய்யப்படும்) வழக்கமாக அமைந்திருக்கும். தீமையான காரியங்கள் (வழக்கத்தை மீறி ஷைத்தானின்) தூண்டுதலால் ஏற்படும். (அதாவது நன்மையான காரியங்களை எவரது நிர்பந்தத்திற்காகவும் இல்லாமல் இயல்பாக விரும்பி – வழக்கமாக செய்து வர வேண்டும். தீய காரியங்கள் அவனையும் மீறி எப்போதாவது ஷைத்தானின் தூண்டுதலால் தான் ஏற்பட வேண்டும்.) யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை மார்க்க விஷயத்தில் ஞானமுள்ளவனாக ஆக்குகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

222 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ ثنا رَوْحُ بن جَنَاحٍ أبو سَعْدٍ عن مُجَاهِدٍ عن بن عَبَّاسٍ قال قال رسول اللَّهِ (ص) فَقِيهٌ وَاحِدٌ أَشَدُّ على الشَّيْطَانِ من أَلْفِ عَابِدٍ

ஹதீஸ் எண்: 222

‘ஆயிரம் வணக்கசாலிகளை விட, ஒரு மார்க்க அறிஞன் ஷைத்தானுக்கு மிகவும் பிரச்சனையானவன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸின் நான்காவது அறிவிப்பாளராக இடம் பெறும் ரவ்ஹ் இப்னு ஜனாஹ் என்பவர் மறுக்கப்பட்டவர்.)

223 حدثنا نَصْرُ بن عَلِيٍّ الْجَهْضَمِيُّ ثنا عبد اللَّهِ بن دَاوُدَ عن عَاصِمِ بن رَجَاءِ بن حَيْوَةَ عن دَاوُدَ بن جَمِيلٍ عن كَثِيرِ بن قَيْسٍ قال كنت جَالِسًا عِنْدَ أبي الدَّرْدَاءِ في مَسْجِدِ دِمَشْقَ فَأَتَاهُ رَجُلٌ فقال يا أَبَا الدَّرْدَاءِ أَتَيْتُكَ من الْمَدِينَةِ مَدِينَةِ رسول اللَّهِ (ص) لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُ بِهِ عن النبي (ص) قال فما جاء بِكَ تِجَارَةٌ قال لَا قال ولا جاء بِكَ غَيْرُهُ قال لَا قال فَإِنِّي سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول من سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فيه عِلْمًا سَهَّلَ الله له طَرِيقًا إلى الْجَنَّةِ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ طَالِبَ الْعِلْمِ يَسْتَغْفِرُ له من في السَّمَاءِ وَالْأَرْضِ حتى الْحِيتَانِ في الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ على الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ على سَائِرِ الْكَوَاكِبِ إِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ إِنَّ الْأَنْبِيَاءَ لم يُوَرِّثُوا دِينَارًا ولا دِرْهَمًا إنما وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ  

ஹதீஸ் எண்: 223

நான் அபூதர்தா (ரலி) என்ற நபித்தோழருடன் திமிஷ்க் (டமாஸ்கஸ்) நகரின் பள்ளியில் அமர்ந்திருந்தேன். அவரிடத்தில் ஒரு மனிதர் வந்து ‘அபூதர்தா அவர்களே! நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை நீங்கள் அறிவிக்கிறீர்கள் என்ற காரணத்துக்காக நபி (ஸல்) அவர்களின் மதீனாவிலிருந்து உங்களிடம் வந்திருக்கிறேன்’ என்றார். அவரிடம் அபுதர்தா அவர்கள் ‘வியாபார நோக்கத்திற்காக நீ வரவில்லையல்லவா?’ என்றார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘வேற எந்த நோக்கமும் இல்லையல்லவா?’ என்று அபூதர்தா (ரலி) அவர்கள் கேட்டுவிட்டு, ‘யார் கல்வியைத் தேடி ஒரு வழியில் செல்கிறாரோ, சுவர்க்கத்தின் பால் செல்லும் வழியை அல்லாஹ் அவருக்கு எளிதாக்குகின்றான். கல்வி கற்பவனைத் திருப்தியுற்று வானவர்கள் தங்கள் சிறகுகளைத் தாழ்த்துகின்றனர். கல்வியைத் தேடுபவனுக்காக வானம், பூமியில் உள்ளவர்கள், தண்ணீரில் வாழும் மீன்கள் உட்பட பாவமன்னிப்புத் தேடுகின்றன. ஒரு வணக்கசாலியை விடவும், அறிஞனுக்குரிய சிறப்பாவது, ஏனைய நட்சத்திரங்களை விட சந்திரனுக்கு இருக்கும் சிறப்பு போன்றதாகும். நிச்சயமாக அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நிச்சயமாக நபிமார்கள் தங்க நாணயங்களையோ, வெள்ளி நாணயங்களையோ விட்டுச் செல்ல வில்லை. கல்வியையே விட்டுச் சென்றனர். யார் அந்தக் கல்வியை அடைந்து கொள்கிறானோ அவன் பெரும் பாக்கியத்தை அடைந்தவனாவான்’ என்று நபி (ஸல்) கூறியதாக குறிப்பிட்டார் என் கஸீர் இப்னு கைஸ் அறிவிக்கிறார்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அபூதாவூத், திர்மிதியிலும் இடம் பெற்று உள்ளது, இரண்டாம் அறிவிப்பாளராகிய கஸீர் இப்னு கைஸ் என்பவர் பலவீனமானவராவார். மேலும் அவர் மூலம் அறிவிக்கின்ற அடுத்த அறிவிப்பாளர் தாவூத் இப்னு ஜமீல் என்பவர் யாரென்றே தெரியாதவராவார்.)

224 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا حَفْصُ بن سُلَيْمَانَ ثنا كَثِيرُ بن شِنْظِيرٍ عن مُحَمَّدِ بن سِيرِينَ عن أَنَسِ بن مَالِكٍ قال قال رسول اللَّهِ (ص) طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ على كل مُسْلِمٍ وَوَاضِعُ الْعِلْمِ عِنْدَ غَيْرِ أَهْلِهِ كَمُقَلِّدِ الْخَنَازِيرِ الْجَوْهَرَ وَاللُّؤْلُؤَ وَالذَّهَبَ

ஹதீஸ் எண்: 224

‘கல்வியைத் தேடுவது முஸ்லிமான அனைவர் மீதும் கடமையாகும். தகுதியற்றவர்களிடம் கல்வியை வழங்குபவன், பன்றிகளின் (கழுத்தில்) மாணிக்கம், முத்து, தங்க ஆபரணங்களைத் தொங்க விடுபவன் போலாவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான ஹப்ஸ் இப்னு ஸுலைமான் என்பவர் பலவீனமானவராவார். இதன் முற்பகுதி ஆதாரப்பூர்வமான வேறு அறிவிப்பாளர் வரிசையில் பல்வேறு நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

225 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا أبو مُعَاوِيَةَ عن الْأَعْمَشِ عن أبي صَالِحٍ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) من نَفَّسَ عن مُسْلِمٍ كُرْبَةً من كُرَبِ الدُّنْيَا نَفَّسَ الله عنه كُرْبَةً من كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ الله في الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَنْ يَسَّرَ على مُعْسِرٍ يَسَّرَ الله عليه في الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ في عَوْنِ الْعَبْدِ ما كان الْعَبْدُ في عَوْنِ أَخِيهِ وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فيه عِلْمًا سَهَّلَ الله له بِهِ طَرِيقًا إلى الْجَنَّةِ وما اجْتَمَعَ قَوْمٌ في بَيْتٍ من بُيُوتِ اللَّهِ ( يَتْلُونَ كِتَابَ اللَّهِ ) وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إلا حَفَّتْهُمْ الْمَلَائِكَةُ وَنَزَلَتْ عليهم السَّكِينَةُ وَغَشِيَتْهُمْ الرَّحْمَةُ وَذَكَرَهُمْ الله فِيمَنْ عِنْدَهُ وَمَنْ أَبْطَأَ بِهِ عَمَلُهُ لم يُسْرِعْ بِهِ نَسَبُهُ

ஹதீஸ் எண்: 225

‘இவ்வுலகத் துன்பத்திலிருந்து ஒரு துன்பத்தை விட்டும் ஒரு முஸ்லிமை யாரேனும் விடுவித்தால், நியாயத் தீர்ப்பு நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை விட்டும் அவனை அல்லாஹ் விடுவிக்கிறான். ஒரு முஸ்லிமின் குறையை யாரேனும் மறைத்தால் அவ(னை)ன(து குறைகளை) இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் மறைக்கின்றான். (கடன் போன்றவற்றை நிறைவேற்ற) கஷ்டப்படும் ஒருவருக்கு யாரேனும் சலுகை அளித்தால் இம்மையிலும மறுமையிலும் அல்லாஹ் அவருக்கு சலுகை அளிக்கிறான். ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்வதில் ஈடுபட்டிருக்கும் போது, அவனுக்கு உதவி செய்வதில் இறைவன் ஈடுபடுகிறான். யார் கல்வியைத் தேடி ஒரு வழியில் செல்கிறாரோ, சுவர்க்கத்திற்குச் செல்லும் வழியை இதன் மூலம் இறைவன் அவருக்கு எளிதாக்குகின்றான். அல்லாஹ்வின் இல்லங்கள் எதிலேனும் ஒரு கூட்டத்தினர் கூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதி, தங்களுக்கு இடையே அதைப் போதித்துக் கொண்டால் அவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. இறைவனின் பேரருள் அவர்களை மூடிக் கொள்கிறது. மேலும் அல்லாஹ் இவர்களைப் பற்றி தன்னிடம் உள்ள (வான)வர்களிடம் (புகழ்ந்து) பேசுகிறான். எவனது செயல்பாடுகள் சரி இல்லையோ, அவனது பாரம்பரியம் அவனுக்குப் பயனளிக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயி, இப்னுஹிப்பான், ஹாகிம் ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

226 حدثنا محمد بن يحيى ثنا عبد الرَّزَّاقِ أَنْبَأَنَا مَعْمَرٌ عن عَاصِمِ بن أبي النَّجُودِ عن زِرِّ بن حُبَيْشٍ قال أَتَيْتُ صَفْوَانَ بن عَسَّالٍ الْمُرَادِيَّ فقال ما جاء بِكَ قلت أُنْبِطُ الْعِلْمَ قال فَإِنِّي سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول ما من خَارِجٍ خَرَجَ من بَيْتِهِ في طَلَبِ الْعِلْمِ إلا وَضَعَتْ له الْمَلَائِكَةُ أَجْنِحَتَهَا رِضًا بِمَا يَصْنَعُ

ஹதீஸ் எண்: 226

நான் ஸஃப்வான் இப்னு அஸ்ஸால் (ரலி) என்ற நபித்தோழரிடம் சென்றேன். ‘எதற்காக வந்தீர்கள்?’ என்று அவர்கள் கேட்டார்கள். ‘கல்வி கற்பதற்காக வந்தேன்’ என்று கூறினேன். ‘யார் கல்வி கற்பதற்காக தனது இல்லத்திலிருந்து புறப்படுகின்றாரோ அவரது செயலில் வானவர்கள் திருப்தியுற்று தங்களின் சிறகுகளை தாழ்த்துகின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என ஸஃப்வான் கூறியதாக ஸிர் இப்னு ஹுபைஷ் அறிவிக்கிறார்.

(குறிப்பு: இதன் எல்லா அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களே. எனினும் மூன்றாவது அறிவிப்பாளரான ஆஸிம் இப்னு அபின்னுஜுத் என்பவர் இறுதிக் காலத்தில் நினைவு குறைந்து குழம்பிப் போய் விட்டார்.)

227 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا حَاتِمُ بن إسماعيل عن حُمَيْدِ بن صَخْرٍ عن الْمَقْبُرِيِّ عن أبي هُرَيْرَةَ قال سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول من جاء مَسْجِدِي هذا لم يَأْتِهِ إلا لِخَيْرٍ يَتَعَلَّمُهُ أو يُعَلِّمُهُ فَهُوَ بِمَنْزِلَةِ الْمُجَاهِدِ في سَبِيلِ اللَّهِ وَمَنْ جاء لِغَيْرِ ذلك فَهُوَ بِمَنْزِلَةِ الرَّجُلِ يَنْظُرُ إلى مَتَاعِ غَيْرِهِ

ஹதீஸ் எண்: 227

‘கற்றுக் கொள்ள, அல்லது கற்றுக் கொடுக்க என்ற ஒரே நோக்கத்திற்காக யார் எனது இந்தப் பள்ளிவாசலுக்கு வருகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவரின் அந்தஸ்த்தில் இருக்கிறார், யார் இது அல்லாத வேறு நோக்கங்களுக்காக வருகின்றாரோ அவர், பிறரது பொருளைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற மனிதரின் அந்தஸ்த்தில் இருக்கிறார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெறும் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாகும்.)

228 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا صَدَقَةُ بن خَالِدٍ ثنا عُثْمَانُ بن أبي عَاتِكَةَ عن عَلِيِّ بن يَزِيدَ عن الْقَاسِمِ عن أبي أُمَامَةَ قال قال رسول اللَّهِ (ص) عَلَيْكُمْ بهذا الْعِلْمِ قبل أَنْ يُقْبَضَ وَقَبْضُهُ أَنْ يُرْفَعَ وَجَمَعَ بين إِصْبَعَيْهِ الْوُسْطَى وَالَّتِي تَلِي الْإِبْهَامَ هَكَذَا ثُمَّ قال الْعَالِمُ وَالْمُتَعَلِّمُ شَرِيكَانِ في الْأَجْرِ ولا خَيْرَ في سَائِرِ الناس

ஹதீஸ் எண்: 228

‘இந்தக் கல்வி கைப்பற்றப்படுமுன் இக்கல்வியைப் பற்றிக் கொள்ளுங்கள்! கைப்பற்றப்படுவது என்பது (இறைவனால்) அது உயர்த்தப்படும் என்பதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு தனது ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் சேர்த்து ‘அறிஞரும், அறிவைத் தேடுபவரும் கூலியில் பங்காளிகளாவர். ஏனைய மக்கள் எவரிடமும் எந்த நன்மையுமில்லை’ எனக் கூறினார்கள் என்று அபூ உமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளரான அலீ இப்னு யஸீத என்பவர் பலவீனமானவராவார்.)

229 حدثنا بِشْرُ بن هِلَالٍ الصَّوَّافُ ثنا دَاوُدُ بن الزِّبْرِقَانِ عن بَكْرِ بن خُنَيْسٍ عن عبد الرحمن بن زِيَادٍ عن عبد اللَّهِ بن يَزِيدَ عن عبد اللَّهِ بن عَمْرٍو قال خَرَجَ رسول اللَّهِ (ص) ذَاتَ يَوْمٍ من بَعْضِ حُجَرِهِ فَدَخَلَ الْمَسْجِدَ فإذا هو بِحَلْقَتَيْنِ إِحْدَاهُمَا يقرأون الْقُرْآنَ وَيَدْعُونَ اللَّهَ وَالْأُخْرَى يَتَعَلَّمُونَ وَيُعَلِّمُونَ فقال النبي (ص) كُلٌّ على خَيْرٍ هَؤُلَاءِ يقرأون الْقُرْآنَ وَيَدْعُونَ اللَّهَ فَإِنْ شَاءَ أَعْطَاهُمْ وَإِنْ شَاءَ مَنَعَهُمْ وَهَؤُلَاءِ يَتَعَلَّمُونَ ويعلمون وَإِنَّمَا بُعِثْتُ مُعَلِّمًا فَجَلَسَ مَعَهُمْ

ஹதீஸ் எண்: 229

நபி (ஸல்) அவர்கள் தமது அறைகளில் ஒன்றிலிருந்து ஒரு நாள் வெளிப்பட்டு பள்ளியில் துழைந்தார்கள். அங்கே குர்ஆனை ஓதிக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தையும், கற்றுக் கொண்டும், கற்பித்துக் கொண்டுமிருக்கும் மற்றொரு கூட்டத்தையும் கண்டார்கள். ‘அனைவரும் நல்ல காரியத்திலேயே (ஈடுபட்டு) உள்ளனர். இவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர். அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றனர். (அல்லாஹ்) நாடினால் அவர்களுக்கு வழங்குவான். அவன் நாடினால் வழங்காதிருக்கலாம். இவர்களோ கற்றுக் கொண்டும் கற்பித்துக் கொண்டும் இருக்கிறார்கள். நான் கற்பிப்பவனாகவே அனுப்பப்பட்டுள்ளேன் என்று நபி (ஸல்) கூறிவிட்டு இவர்களுடன் (கல்விப் பணியில் ஈடுபட்டிருப்போருடன்) அமர்ந்து கொண்டார்கள் என் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளராகிய அப்துர்ரஹ்மான் இப்னு ஸியாத் என்பவரும், நான்காவது அறிவிப்பாளரான பக்ரு இப்னு குனைஸ் என்பவரும், ஐந்தாவது அறிவிப்பாளரான தாவூத் இப்னு ஸிப்ரிகான் என்பவரும் பலவீனமானவர்களாக உள்ளதால் இது மிக மிக பலவீனமான ஹதீஸாகும்.)

 بَاب من بَلَّغَ عِلْمًا  

230 حدثنا محمد بن عبد اللَّهِ بن نُمَيْرٍ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا محمد بن فُضَيْلٍ ثنا لَيْثُ بن أبي سُلَيْمٍ عن يحيى بن عَبَّادٍ أبي هُبَيْرَةَ الْأَنْصَارِيِّ عن أبيه عن زَيْدِ بن ثَابِتٍ قال قال رسول اللَّهِ (ص) نَضَّرَ الله امْرَأً سمع مَقَالَتِي فَبَلَّغَهَا فَرُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرِ فَقِيهٍ وَرُبَّ حَامِلِ فِقْهٍ إلى من هو أَفْقَهُ منه زَادَ فيه عَلِيُّ بن مُحَمَّدٍ ثَلَاثٌ لَا يُغِلُّ عَلَيْهِنَّ قَلْبُ امْرِئٍ مُسْلِمٍ إِخْلَاصُ الْعَمَلِ لِلَّهِ وَالنُّصْحُ لِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَلُزُومُ جَمَاعَتِهِمْ

கல்வி கற்பிப்பவனது சிறப்புக்கள்!

ஹதீஸ் எண்: 230

‘அல்லாஹ்வுக்காக செயல்களைக் கலப்பற்ற முறையில் செய்தல், முஸலிம்களின் தலைவர்களது நலம் நாடுதல், (அதாவது நல்லவைகளில் அவர்களுக்குக் கட்டுப்படுதல்) முஸ்லிம்களின் கூட்டமைப்பைப் பற்றிக் கொள்ளுதல் ஆகிய மூன்று காரியங்களின் எந்த முஸ்லிமுடைய உள்ளமும் குறைவைக்காது என நபி (ஸல்) கூறினார்கள்.

மேலும் எனது சொல்லைச் செவியுற்று அதைப் பிறருக்கு எடுத்துச் சொன்ன மனிதருக்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக! மார்க்கச் சட்டத்தை மனனம் செய்திருக்கும் எத்தனையோ பேர் மார்க்கச் சட்டத்தை அறிந்தவர்களாக இருப்பதில்லை, மார்க்கச் சட்டங்களை மனனம் செய்திருக்கும் எத்தனையோ பேர், அவரை விடவும் விவரமானவரிடம் அதை எடுத்துச் சொல்கின்றார் எனவும் நபி (ஸல்) கூறியதாக ஸைது இப்னு ஸாபித் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் பிற்பகுதி (இரண்டாவது பாரா) மட்டும் திர்மிதி, அபூதாவூத், அஹ்மத், தாரிமி ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

இப்னுமாஜா பக்கம் – 22

இப்னுமாஜா பக்கம் – 22

பக்கம் – 22 (ஹதீஸ்கள் 211 முதல் 220 வரை)

அத்தியாயம்: முகத்திமா – முகப்பு

211 حدثنا محمد بن بَشَّارٍ ثنا يحيى بن سَعِيدٍ الْقَطَّانُ ثنا شُعْبَةُ وَسُفْيَانُ عن عَلْقَمَةَ بن مَرْثَدٍ عن سَعْدِ بن عُبَيْدَةَ عن أبي عبد الرحمن السُّلَمِيِّ عن عُثْمَانَ بن عَفَّانَ قال قال رسول اللَّهِ (ص) قال شُعْبَةُ خَيْرُكُمْ وقال سُفْيَانُ أَفْضَلُكُمْ من تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

திருக்குர்ஆனைக் கற்றுக் கொள்வதும் கற்றுக் கொடுப்பதும்

ஹதீஸ் எண்: 211

‘குர்ஆனைக் கற்பவரும், அதனைக் கற்றுக் கொடுப்பவருமே உங்களில் மிகச் சிறந்தவர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் இப்னு அப்பான் (ரல)ி அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, அபூதாவூத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

212 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا سُفْيَانُ عن عَلْقَمَةَ بن مَرْثَدٍ عن أبي عبد الرحمن السُّلَمِيِّ عن عُثْمَانَ بن عَفَّانَ قال قال رسول اللَّهِ (ص) أَفْضَلُكُمْ من تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

ஹதீஸ் எண்: 212

அதே ஹதீஸ் வேறு அறிவிப்பாளர் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

213 حدثنا أَزْهَرُ بن مَرْوَانَ ثنا الْحَارِثُ بن نَبْهَانَ ثنا عَاصِمُ بن بَهْدَلَةَ عن مُصْعَبِ بن سَعْدٍ عن أبيه قال قال رسول اللَّهِ (ص) خِيَارُكُمْ من تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ قال وَأَخَذَ بِيَدِي فَأَقْعَدَنِي مَقْعَدِي هذا أقرىء

ஹதீஸ் எண்: 213

மேற்கூறிய ஹதீஸே வேறு அறிவிப்பாளர் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

214 حدثنا محمد بن بَشَّارٍ وَمُحَمَّدُ بن الْمُثَنَّى قالا ثنا يحيى بن سَعِيدٍ عن شُعْبَةَ عن قَتَادَةَ عن أَنَسِ بن مَالِكٍ عن أبي مُوسَى الْأَشْعَرِيِّ عن النبي (ص) قال مَثَلُ الْمُؤْمِنِ الذي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ وَمَثَلُ الْمُؤْمِنِ الذي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ ولا رِيحَ لها وَمَثَلُ الْمُنَافِقِ الذي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الذي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ ولا رِيحَ لها

ஹதீஸ் எண்: 214

திருக்குர்ஆனை ஓதிவருகின்ற மூமினுக்கு உவமை ‘உத்ருஜ்ஜா’ எனும் பழம் போன்றதாகும். அதன் சுவையும் சிறந்தது, அதன் வாசனையும் சிறந்தது. குர்ஆனை ஓதிவராத மூமினுக்கு உவமை, பேரீத்தம்பழம் போன்றதாகும். அதன் சுவை சிறந்தது, ஆனால் அதற்கு வாசம் எதுவும் இல்லை. குர்ஆனை ஓதிவருகின்ற முனாபிக் (வேஷதாரி)யின் உவமை, ‘ரைஹானா’ எனும் பழம் போன்றதாகும். அதன் வாசனை சிறந்தது. அதன் சுவையோ கசப்பு. குர்ஆனை ஓதிவராத முனாபிக் உடைய உவமை ‘எட்டிக்காய்’ போன்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அபூதாவூதிலும் இடம் பெறுகின்றது. எனினும் ‘முனாபிக்’ என்பதற்கு பதிலாக பாஜிர் (பாவி) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.)

215 حدثنا بَكْرُ بن خَلَفٍ أبو بِشْرٍ ثنا عبد الرحمن بن مَهْدِيٍّ ثنا عبد الرحمن بن بُدَيْلٍ عن أبيه عن أَنَسِ بن مَالِكٍ قال قال رسول اللَّهِ (ص) إِنَّ لِلَّهِ أَهْلِينَ من الناس قالوا يا رَسُولَ اللَّهِ من هُمْ قال هُمْ أَهْلُ الْقُرْآنِ أَهْلُ اللَّهِ وَخَاصَّتُهُ

ஹதீஸ் எண்: 215

‘அல்லாஹ்வுக்கு, பிரத்தியேகமான மனிதர்களும் உள்ளனர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, ‘அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்?’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். ‘குர்ஆனை உடையவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களும், பிரத்தியேகமானவர்களுமாவர்’ என்று நபி (ஸல்) பதிலளித்தார்கள் என் அனஸ் ரலி அறிவிக்கிறார்கள்.

216 حدثنا عَمْرُو بن عُثْمَانَ بن سَعِيدِ بن كَثِيرِ بن دِينَارٍ الْحِمْصِيُّ ثنا محمد بن حَرْبٍ عن أبي عُمَرَ عن كَثِيرِ بن زَاذَانَ عن عَاصِمِ بن حمزة عن عَلِيِّ بن أبي طَالِبٍ قال قال رسول اللَّهِ (ص) من قَرَأَ الْقُرْآنَ وَحَفِظَهُ أَدْخَلَهُ الله الْجَنَّةَ وَشَفَّعَهُ في عَشَرَةٍ من أَهْلِ بَيْتِهِ كلهم قد استوجب النَّارَ

ஹதீஸ் எண்: 216

‘யார் குர்ஆனை ஓதி அதைப் பேணி நடக்கின்றாரோ, அவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழையச் செய்கிறான். நரகத்திற்கு உரித்தாகி விட்ட அவரது குடும்பத்தில் பத்து நபர்களுக்காக அவரைப் பரிந்துரை செய்ய வைக்கிறான்’ என்று நபி (ஸல)் அவர்கள் கூறியதாக அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், தாரிமி, திர்மிதியிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இது பலவீனமான ஹதீஸ் என்று திர்மிதி குறிப்பிடுகிறார்கள்.)

217 حدثنا عَمْرُو بن عبد اللَّهِ الْأَوْدِيُّ ثنا أبو أُسَامَةَ عن عبد الْحَمِيدِ بن جَعْفَرٍ عن الْمَقْبُرِيِّ عن عَطَاءٍ مولى أبي أَحْمَدَ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) تَعَلَّمُوا الْقُرْآنَ واقرؤوه وَارْقُدُوا فإن مَثَلَ الْقُرْآنِ وَمَنْ تَعَلَّمَهُ فَقَامَ بِهِ كَمَثَلِ جِرَابٍ مَحْشُوٍّ مِسْكًا يَفُوحُ رِيحُهُ كُلَّ مَكَانٍ وَمَثَلُ من تَعَلَّمَهُ فَرَقَدَ وهو في جَوْفِهِ كَمَثَلِ جِرَابٍ أُوكِيَ على مِسْكٍ

ஹதீஸ் எண்: 217

‘குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள்! அதனை ஓதுங்கள்! குர்ஆனுக்கும், அதைக் கற்றுச் செயல்பட்டவருக்கும் உவமை கஸ்தூரி நிரப்பப்பட்ட தோல்பை போன்றதாகும். அதன் நறுமணம் எல்லாப்பக்கமும் வீசுகின்றது. குர்ஆனைக் கற்று தனக்குள்ளே வைத்துக் கொண்டு (பிறருக்குச் சொல்லாது) தூங்குபவனது உவமை, கஸ்தூரி நிரப்பப்பட்டு பின்னர் (நறுமணம் வெளியேறாதவாறு) அதன் வாய் கட்டப்பட்டிருப்பது போலாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.

218 حدثنا أبو مَرْوَانَ محمد بن عُثْمَانَ الْعُثْمَانِيُّ ثنا إِبْرَاهِيمُ بن سَعْدٍ عن بن شِهَابٍ عن عَامِرِ بن وَاثِلَةَ أبي الطُّفَيْلِ أَنَّ نَافِعَ بن عبد الحرث لَقِيَ عُمَرَ بن الْخَطَّابِ بِعُسْفَانَ وكان عُمَرُ اسْتَعْمَلَهُ على مَكَّةَ فقال عُمَرُ من اسْتَخْلَفْتَ على أَهْلِ الْوَادِي قال اسْتَخْلَفْتُ عليهم بن أبزي قال وَمَنْ بن أبزي قال رَجُلٌ من مَوَالِينَا قال عُمَرُ فَاسْتَخْلَفْتَ عليهم مَوْلًى قال إنه قَارِئٌ لِكِتَابِ اللَّهِ تَعَالَى عَالِمٌ بِالْفَرَائِضِ قَاضٍ قال عُمَرُ أَمَا إِنَّ نَبِيَّكُمْ (ص) قال إِنَّ اللَّهَ يَرْفَعُ بهذا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ

ஹதீஸ் எண்: 218

நாஃபிவு இப்னு அப்துல்ஹாரிஸ் என்பவரை மக்கா நகரின் நிர்வாகியாக உமர் (ரலி) அவர்கள் நியமனம் செய்திருந்தார்கள். அவரை ‘உஸ்ஃபான்’ என்ற இடத்தில் வைத்து உமர் (ரலி) அவர்கள் சந்தித்த போது, ‘அந்தப் பள்ளத்தாக்குப் பகுதிக்கு யாரை பொறுப்பாளராக ஆக்கியுள்ளீர்?’ என்று கேட்டார்கள். அதற்கு நாஃபிவு அவர்கள் ‘இப்னு அப்ஸா என்பவரை பொருப்பாளராக ஆக்கியுள்ளேன்’ என்றார். இப்னு அப்ஸா என்பவர் யார்? என்று உமர் (ரலி) கேட்டார்கள். ‘அவர் நமது (எனது) அடிமைகளில் ஒருவர்’ என்று நாஃபிவு பதிலளித்தார்கள். ‘ஒரு அடிமையைப் பொருப்பாளராக ஆக்கியுள்ளீரா?’ என்று உமர் (ரலி) அவர்கள் கேட்க ‘அந்த அடிமை அல்லாஹ்வின் வேதத்தை (நன்கு உணர்ந்து) ஓதுபவர், பாகப்பிரிவினை சட்டங்களை நன்கு அறிந்தவர்’ என்று நாஃபிவு பதிலளித்தார். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் ‘இந்த வேதத்தின் மூலம் சிலரை அல்லாஹ் உயர்த்துகிறான், மற்றும் சிலரைத் தாழ்த்துகிறான் என்று உங்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்று கூறினார்கள் என அபுத்துபைல் என்ற ஆமிர் இப்னு வாஸிலா என்பார் அறிவிக்கின்றார்.

(குறிப்பு: இந்த செய்தி முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)

219 حدثنا الْعَبَّاسُ بن عبد اللَّهِ الْوَاسِطِيُّ ثنا عبد اللَّهِ بن غَالِبٍ الْعَبَّادَانِيُّ عن عبد اللَّهِ بن زِيَادٍ الْبَحْرَانِيِّ عن عَلِيِّ بن زَيْدٍ عن سَعِيدِ بن الْمُسَيَّبِ عن أبي ذَرٍّ قال قال لي رسول اللَّهِ (ص) يا أَبَا ذَرٍّ لَأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ آيه من كِتَابِ اللَّهِ خَيْرٌ لك من أَنْ تُصَلِّيَ مِائَةَ رَكْعَةٍ وَلَأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ بَابًا من الْعِلْمِ عُمِلَ بِهِ أو لم يُعْمَلْ خَيْرٌ من أَنْ تُصَلِّيَ أَلْفَ رَكْعَةٍ

ஹதீஸ் எண்: 219

அபூதர்ரே! நீ காலைப் பொழுதில் புறப்பட்டு அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனத்தைக் கற்றுக் கொள்வது, நீ நூறு ரக்அத்கள் தொழுவதை விட சிறந்ததாகும். மார்க்கக் கல்வி சம்பந்தமான ஒரு சட்டத்தை நீ காலையில் புறப்பட்டுச் சென்று அறிந்து கொள்வது நீ ஆயிரம் ரக்அத்கள் தொழுவதை விடவும் சிறந்ததாகும். அந்தச் சட்டத்தின் படி செயல்பட்டாலும், செயல்படா விட்டாலும் (அது ஆயிரம் ரக்அத்கள் தொழுவதை விட சிறந்ததாகும்.) என்று தன்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளராகிய அலீ இப்னு ஸைத் இப்னு ஜத்ஆன் என்பவரும், அவரிடமிருந்து அறிவிக்கும் நான்காவது அறிவிப்பாளராகிய அப்துல்லாஹ் இப்னு ஸியாத் அல்பஹ்ரானி என்பவரும் பலவீனமானவர்களாக உள்ளதால் இது பலவீனமான ஹதீஸாகும். மேலும் கருத்து அடிப்படையில் கவனிக்கும் போது இது இட்டுக்கட்டப்பட்டதாகவும் அமைந்துள்ளது.)

 بَاب فَضْلِ الْعُلَمَاءِ وَالْحَثِّ على طَلَبِ الْعِلْمِ  

220 حدثنا بَكْرُ بن خَلَفٍ أبو بِشْرٍ ثنا عبد الأعلى عن مَعْمَرٍ عن الزُّهْرِيِّ عن سَعِيدِ بن الْمُسَيَّبِ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) من يُرِدْ الله بِهِ خَيْرًا يُفَقِّهْهُ في الدِّينِ  

அறிஞர்களின் சிறப்பும் கல்வி கற்பதில் ஆர்வமூட்டுதலும்

ஹதீஸ் எண்: 220

யாருக்கேனும் அல்லாஹ் நன்மை புரிய நாடினால் அவரை மார்க்க விஷயத்தில் ஞானமுடையவராக ஆக்குகின்றான் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது. இதை இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக இமாம் திர்மிதி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.)