Category Archives: ஹதீஸ்

ஹதீஸ் விளக்கம்

இப்னுமாஜா பக்கம் – 11

இப்னுமாஜா பக்கம் – 11
பக்கம் – 11 (ஹதீஸ்கள் 101 முதல் 110 வரை)

அத்தியாயம்: முகத்திமா – முகப்பு

101 حدثنا أَحْمَدُ بن عَبْدَةَ وَالْحُسَيْنُ بن الْحَسَنِ الْمَرْوَزِيُّ قالا ثنا الْمُعْتَمِرُ بن سُلَيْمَانَ عن حُمَيْدٍ عن أَنَسِ قال قِيلَ يا رَسُولَ اللَّهِ أَيُّ الناس أَحَبُّ إِلَيْكَ قال عَائِشَةُ قِيلَ من الرِّجَالِ قال أَبُوهَا

ஹதீஸ் எண்: 101

‘மனிதர்களில் உங்களுக்கு மிகவும் விருப்பமானவர் யார்?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ‘ஆயிஷா’ என்றார்கள். ஆண்களில் உங்களுக்கு மிக விருப்பமானவர் யார்? என்று கேட்கப்பட்ட போது ‘ஆயிஷாவின் தந்தை’ என்று பதிலளித்ததாக அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)

باب فضل عمر رضي الله عنه

 102 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو أُسَامَةَ أخبرني الْجُرَيْرِيُّ عن عبد اللَّهِ بن شَقِيقٍ قال قلت قلت لِعَائِشَةَ أَيُّ أَصْحَابِهِ كان أَحَبَّ إليه قالت أبو بَكْرٍ قلت ثُمَّ أَيُّهُمْ قالت عُمَرُ قلت ثُمَّ أَيُّهُمْ قالت أبو عُبَيْدَةَ

உமர் (ரலி) அவர்கள் பற்றி!

ஹதீஸ் எண்: 102

நபித்தோழர்களில் நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானவர் யார்? என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். ‘அபூபக்ரு’ என்று பதிலளித்தார்கள். அடுத்து? என்று நான் கேட்டேன். ‘உமர்’ என்றார்கள். அடுத்து? என்று கேட்டேன். ‘அபூஉபைதா’ என்றார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஷகீக் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது)

103 حدثنا إسماعيل بن مُحَمَّدٍ الطَّلْحِيُّ ثنا عبد اللَّهِ بن خِرَاشٍ الْحَوْشَبِيُّ عن الْعَوَّامِ بن حَوْشَبٍ عن مُجَاهِدٍ عن بن عَبَّاسٍ قال لَمَّا أَسْلَمَ عُمَرُ نَزَلَ جِبْرِيلُ فقال يا محمد لقد اسْتَبْشَرَ أَهْلُ السَّمَاءِ بِإِسْلَامِ عُمَرَ

ஹதீஸ் எண்: 103

உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்றவுடன் ஜிப்ரீல் (அலை) இறங்கி வந்து, ‘முஹம்மதே! உமர் இஸ்லாத்தை ஏற்றதால் வானுலகில் உள்ளவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்’ என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ‘அப்துல்லாஹ் இப்னு கிராஷ்’ என்பவர் ஹதீஸ் கலை வல்லுனர்களால் ஏகோபித்து பலவீனமானவர் என முடிவு செய்யப்பட்டவர்.)

104 حدثنا إسماعيل بن مُحَمَّدٍ الطَّلْحِيُّ أنبانا دَاوُدُ بن عَطَاءٍ الْمَدِينِيُّ عن صَالِحِ بن كَيْسَانَ عن بن شِهَابٍ عن سَعِيدِ بن الْمُسَيَّبِ عن أُبَيِّ بن كَعْبٍ قال قال رسول اللَّهِ  أَوَّلُ من يُصَافِحُهُ الْحَقُّ عُمَرُ وَأَوَّلُ من يُسَلِّمُ عليه وَأَوَّلُ من يَأْخُذُ بيده فَيُدْخِلُهُ الْجَنَّةَ

ஹதீஸ் எண்: 104

‘உண்மை’ முதன் முதலில் ஒருவரைக் கை பிடித்து அவருக்கு ஸலாம் சொல்லி அவர் கையைப் பிடித்து சுவர்க்கத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்றால் அது ‘உமர்’ தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபை இப்னு கஃபு (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதில் இடம்பெறும் தாவூத் இப்னு அதா அல்மதீனி என்பவர் பலவீனமானவர் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. இந்த ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டதாகும்.)

105 حدثنا محمد بن عُبَيْدٍ أبو عُبَيْدٍ الْمَدِينِيُّ ثنا عبد الْمَلِكِ بن الْمَاجِشُونِ حدثني الزَّنْجِيُّ بن خَالِدٍ عن هِشَامِ بن عُرْوَةَ عن أبيه عن عَائِشَةَ قالت قال رسول اللَّهِ  اللهم أَعِزَّ الْإِسْلَامَ بِعُمَرَ بن الْخَطَّابِ خَاصَّةً

ஹதீஸ் எண்: 105

‘இறiவா! உமர் மூலம் இஸ்லாத்தை மேலோங்கச் செய்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதில் இடம் பெறும் அப்துல் மலிக் இப்னுல் மாஜஷீன் என்பவர் பலவீனமானவர், எனினும் ‘அபூஜஹ்ல், உமர்’ இருவரில் எவர் மூலமாவது இஸ்லாத்தை மேலோங்கச் செய்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், திர்மிதியில் இடம் பெற்றுள்ளதால், இது ‘ஹஸன்’ என்ற தரத்தில் அமையும்.)

106 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا شُعْبَةُ عن عَمْرِو بن مُرَّةَ عن عبد اللَّهِ بن سَلَمَةَ قال سمعت عَلِيًّا يقول خَيْرُ الناس بَعْدَ رسول اللَّهِ  أبو بَكْرٍ وَخَيْرُ الناس بَعْدَ أبي بَكْرٍ عُمَرُ

ஹதீஸ் எண்: 106

நபி (ஸல்) அவர்களுக்கு பின் மனிதர்களில் மிகவும் சிறந்தவர் அபூபக்ராவார். அபூபக்ருக்குப் பின் ‘உமர்’ ஆவார் என்று அலி (ரலி) கூற நான் கேட்டுள்ளேன் என்று அப்துல்லாஹ் இப்னு ஸலமா கூறுகிறார்.

(குறிப்பு: இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.)

107 حدثنا محمد بن الْحَارِثِ الْمِصْرِيُّ أَنْبَأَنَا اللَّيْثُ بن سَعْدٍ حدثني عُقَيْلٌ عن بن شِهَابٍ أخبرني سَعِيدُ بن الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ قال كنا جُلُوسًا عِنْدَ النبي  قال بَيْنَا أنا نَائِمٌ رَأَيْتُنِي في الْجَنَّةِ فإذا أنا بِامْرَأَةٍ تَتَوَضَّأُ إلى جنب قَصْرٍ فقلت لِمَنْ هذا الْقَصْرُ فقالت لِعُمَرَ فَذَكَرْتُ غَيْرَتَهُ فَوَلَّيْتُ مُدْبِرًا قال أبو هُرَيْرَةَ فَبَكَى عُمَرُ فقال أَعَلَيْكَ بِأَبِي وَأُمِّي يا رَسُولَ اللَّهِ أَغَارُ

ஹதீஸ் எண்: 107

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது ‘நான் உறங்கிக் கொண்டிருந்த போது என்னை சுவர்க்கத்தில் கண்டேன். ஒரு மாளிகையின் ஓரத்தில் ஒரு பெண் ஒளு செய்து கொண்டிருந்தாள். ‘இந்த மாளிகை யாருக்குரியது’ என்று அவளிடம் கேட்டேன். ‘உமர்’ அவர்களுக்கு உரியது என்றாள். உமர் ரோஷக்காரர் என்பது நினைவுக்கு வந்து (அந்த மாளிகைக்குள் நுழையாமல்) திரும்பி விட்டேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! உங்கள் மீதா நான் ரோஷம் பாராட்டுவேன்’ என்று அழுது கொண்டே கூறினார்கள்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)

108 حدثنا أبو سَلَمَةَ يحيى بن خَلَفٍ ثنا عبد الأعلى عن مُحَمَّدِ بن إسحاق عن مَكْحُولٍ عن غُضَيْفِ بن الْحَارِثِ عن أبي ذَرٍّ قال سمعت رَسُولَ اللَّهِ  يقول إِنَّ اللَّهَ وَضَعَ الْحَقَّ على لِسَانِ عُمَرَ يقول بِهِ

ஹதீஸ் எண்: 108

‘அல்லாஹ்’ உண்மையை உமருடைய நாவில் வைத்திருகிறான். அவர் உண்மையையே பேசுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது. இதன் கருத்து திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.)

فَضْلِ عُثْمَانَ رضي الله عنه

 109 حدثنا أبو مَرْوَانَ محمد بن عُثْمَانَ الْعُثْمَانِيُّ ثنا أبي عُثْمَانُ بن خَالِدٍ عن عبد الرحمن بن أبي الزِّنَادِ عن أبيه عن الْأَعْرَجِ عن أبي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ  قال لِكُلِّ نَبِيٍّ رَفِيقٌ في الْجَنَّةِ وَرَفِيقِي فيها عُثْمَانُ بن عَفَّانَ

உஸ்மான் (ரலி) அவர்கள் பற்றி!

ஹதீஸ் எண்: 109

‘ஒவ்வொரு நபிக்கும் சுவர்க்கத்தில் ஒரு நண்பர் உண்டு. சுவர்க்கத்தில் எனது நண்பர் ‘உஸ்மான் இப்னு அப்பான் ஆவார்’ என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதில்; இடம் பெறும் உஸ்மான் இப்னு காலித் என்பவர் பலவீனமானவர்.)

110 حدثنا أبو مَرْوَانَ محمد بن عُثْمَانَ الْعُثْمَانِيُّ ثنا أبي عُثْمَانُ بن خَالِدٍ عن عبد الرحمن بن أبي الزِّنَادِ عن أبي الزناد عن الْأَعْرَجِ عن أبي هُرَيْرَةَ أَنَّ النبي  لَقِيَ عُثْمَانَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ فقال يا عُثْمَانُ هذا جِبْرِيلُ أخبرني أَنَّ اللَّهَ قد زَوَّجَكَ أُمَّ كُلْثُومٍ بِمِثْلِ صَدَاقِ رُقَيَّةَ على مِثْلِ صُحْبَتِهَا

ஹதீஸ் எண்: 110

பள்ளியின் வாசலில் உஸ்மான் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சந்தித்த போது, ‘உஸ்மானே! (என் மகள்) உம்மு குல்ஸுமை ‘ருகையா’வுக்கு நீ மஹராக அளித்த அதே அளவு மஹருக்கு அல்லாஹ் உமக்கு மணமுடித்து தருவதாக இதோ ஜிப்ரீல் கூறுகிறார்’ என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதற்கு முந்தைய ஹதீஸில் இடம் பெற்ற உஸ்மான் இப்னு காலித் என்ற பலவீனமானவரே இதிலும் பெறுகிறார்.)

இப்னுமாஜா பக்கம் – 10

இப்னுமாஜா பக்கம் – 10
 
பக்கம் – 10 (ஹதீஸ்கள் 91 முதல் 100 வரை)
 
அத்தியாயம்: முகத்திமா – முகப்பு 
  

91 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا عَطَاءُ بن مُسْلِمٍ الْخَفَّافُ ثنا الْأَعْمَشُ عن مُجَاهِدٍ عن سُرَاقَةَ بن جُعْشُمٍ قال قلت يا رَسُولَ اللَّهِ الْعَمَلُ فِيمَا جَفَّ بِهِ الْقَلَمُ وَجَرَتْ بِهِ الْمَقَادِيرُ أَمْ في أَمْرٍ مُسْتَقْبَلٍ قال بَلْ فِيمَا جَفَّ بِهِ الْقَلَمُ وَجَرَتْ بِهِ الْمَقَادِيرُ وَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ له  

 
ஹதீஸ் எண்: 91
 
‘அல்லாஹ்வின் தூதரே! மனிதனின் செயல்பாடுகள், விதிகள் எதைச் செயல்படுத்துகின்றதோ அதனடிப்படையில் அமைந்ததா? அல்லது வருங்காலத்தில் (மனிதனின் திட்டப்படி) நடக்கும் காரியமா?’ என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘விதிகள் எதை செயல்படுத்துகின்றதோ அதன் அடிப்படையில் தான். ஆயினும் ஒவ்வொருவனும் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றானோ அதற்கேற்ப (செயல் புரிய) வாய்ப்பளிக்கப்படுகிறான்’ என்று கூறினார்கள் என ஸுராகா இப்னு ஜுஉதும் (ரலி) அறிவிக்கிறார்கள்.
 
(குறிப்பு: இது முஸ்லிமில் வேறு அறிவிப்பாளர் வரிசையுடன் இடம் பெற்றுள்ளது.)  
 

92 حدثنا محمد بن الْمُصَفَّى الْحِمْصِيُّ ثنا بَقِيَّةُ بن الْوَلِيدِ عن الْأَوْزَاعِيِّ عن بن جُرَيْجٍ عن أبي الزُّبَيْرِ عن جَابِرِ بن عبد اللَّهِ قال قال رسول اللَّهِ  إِنَّ مَجُوسَ هذه الْأُمَّةِ الْمُكَذِّبُونَ بِأَقْدَارِ اللَّهِ إن مَرِضُوا فلا تَعُودُوهُمْ وَإِنْ مَاتُوا فلا تَشْهَدُوهُمْ وَإِنْ لَقِيتُمُوهُمْ فلا تُسَلِّمُوا عليهم  

 
ஹதீஸ் எண்: 92
 
‘அல்லாஹ்வின் விதியை நம்பாதவர்கள் இந்த சமுதாயத்தில் உள்ள மஜுஸி (நெருப்பை வணங்குபவர்)களாவர். அவர்கள் மரணித்து விட்டால் அவர்களின் (மரணச் சடங்குகளில்) பங்கெடுக்காதீர்கள்! அவர்களை நீங்கள் சந்தித்தால் ஸலாம் கூறாதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
 
(குறிப்பு: இதில் இடம் பெறும் அபுஸ்ஸுபைர் என்ற அறிவிப்பாளர் அவ்வளவு நம்பத்தக்கவரல்ல.) 
  

1 باب في فَضَائِلِ أَصَحَابِ رسول اللَّهِ

 فَضْلِ أبي بَكْرٍ الصِّدِّيقِ رضي الله عنه

 93 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا الْأَعْمَشُ عن عبد اللَّهِ بن مُرَّةَ عن أبي الْأَحْوَصِ عن عبد اللَّهِ قال قال رسول اللَّهِ  ألا إني أَبْرَأُ إلى كل خَلِيلٍ من خُلَّتِهِ وَلَوْ كنت مُتَّخِذًا خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا إِنَّ صَاحِبَكُمْ خَلِيلُ اللَّهِ قال وَكِيعٌ يَعْنِي نَفْسَهُ

 
 
 
 
 

11. நபித்தோழர்களின் தனிச்சிறப்புக்கள்!
அபூபக்ரு (ரலி) அவர்கள் பற்றி!
 
ஹதீஸ் எண்: 93
‘அறிந்து கொள்க! நிச்சயமாக நான் எல்லா உயிர் நண்பர்களை விட்டும் அவரது நட்பை நீக்கிக் கொள்கிறேன், நான் யாரையேனும் உயிர் நண்பனாக்கிக் கொள்வதென்றால் அபூபக்ரை உயிர் நண்பராக்கி இருப்பேன். நிச்சயம் உங்கள் தோழராகிய (நான்) அல்லாஹ்வின் உயர் நண்பனாவேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: ‘உயிர் நண்பர்’ என்று நாம் மொழி பெயர்த்த இடத்தில் ‘கலீல்’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது, அதற்கு ஈடான தமிழ்ச் சொல் கிடைக்காததால் ‘உயிர் நண்பர்’ என்று மொழி பெயர்த்துள்ளோம். ‘தோழர்’ என்று நாம் மொழி பெயர்த்த இடத்தில் ‘ஸாஹிப்’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)

94 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا أبو مُعَاوِيَةَ ثنا الْأَعْمَشُ عن أبي صَالِحٍ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ  ما نَفَعَنِي مَالٌ قَطُّ ما نَفَعَنِي مَالُ أبي بَكْرٍ قال فَبَكَى أبو بَكْرٍ وقال يا رسول الله هل أنا وَمَالِي إلا لك يا رَسُولَ اللَّهِ

 
ஹதீஸ் எண்: 94
 
‘அபூபக்ருடைய செல்வம் எனக்குப் பயன்பட்ட அளவுக்கு எந்த செல்வமும் எனக்கு பயன்பட்டதில்லை’ என்று நபி (ஸல்) கூறியதைக் கேட்ட அபூபக்ரு (ரலி) அவர்கள் அழலானார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! நானும் எனது செல்வமும் உங்களுக்கில்லாமல் வேறு யாருக்கு?’ என்றும் கேட்டார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 
(குறிப்பு: இது திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.)  
 

95 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا سُفْيَانُ عن الْحَسَنِ بن عُمَارَةَ عن فِرَاسٍ عن الشَّعْبِيِّ عن الْحَارِثِ عن عَلِيٍّ قال قال رسول اللَّهِ  أبو بَكْرٍ وَعُمَرُ سَيِّدَا كُهُولِ أَهْلِ الْجَنَّةِ من الْأَوَّلِينَ وَالْآخِرِينَ إلا النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ لَا تُخْبِرْهُمَا يا عَلِيُّ ما دَامَا حَيَّيْنِ

 
ஹதீஸ் எண்: 95
 
‘நபிமார்கள், ரஸுல்மார்கள் நீங்கலாக உள்ள முன்னோர் பின்னோர் அனைவரிலும் இளைய தலைமுறையின் தலைவர்களாவர் அபூபக்ரும் உமரும்’ என்று நபி (ஸல்) கூறிவிட்டு அலியே! அவ்விருவரும் உன்னுடனிருக்கும் வரை அவ்விருவரிடமும் இதைக் கூறாதே!’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.
 
(குறிப்பு: திர்மிதியில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.) 
  

96 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ وَعَمْرُو بن عبد اللَّهِ قالا ثنا وَكِيعٌ ثنا الْأَعْمَشُ عن عَطِيَّةَ بن سَعْدٍ عن أبي سَعِيدٍ الْخُدْرِيِّ قال قال رسول اللَّهِ e إِنَّ أَهْلَ الدَّرَجَاتِ العلي يَرَاهُمْ من أَسْفَلَ منهم كما يُرَى الْكَوْكَبُ الطَّالِعُ في الْأُفُقِ من آفَاقِ السَّمَاءِ وَإِنَّ أَبَا بَكْرٍ وَعُمَرَ منهم وَأَنْعَمَا

 
ஹதீஸ் எண்: 96
 
‘(மறுமையில்) உயர் பதவிகளைப் பெற்றவர்களை, அவர்களை விட குறைந்த பதவிகளைப் பெற்றவர்கள், வானத்தில் உதிக்கும் விண்மீனைப் பார்ப்பது போல் (அவ்வளவு உயரத்தில்) காண்பார்கள். அத்தகைய உயர் பதவிகள் பெற்று இன்ப வாழ்வை அடைந்தவர்களில் அபூபக்ரும், உமரும் அடங்குவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.
 
(குறிப்பு: இதே ஹதீஸ் அபூதாவூத், திர்மிதியிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.) 
  

97 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ح وَحَدَّثَنَا محمد بن بَشَّارٍ ثنا مُؤَمَّلٌ قالا ثنا سُفْيَانُ عن عبد الْمَلِكِ بن عُمَيْرٍ عن مَوْلًى لِرِبْعِيِّ بن حِرَاشٍ عن رِبْعِيِّ بن حِرَاشٍ عن حُذَيْفَةَ بن الْيَمَانِ قال قال رسول اللَّهِ  إني لَا أَدْرِي ما قَدْرُ بَقَائِي فِيكُمْ فَاقْتَدُوا بِاللَّذَيْنِ من بَعْدِي وَأَشَارَ إلى أبي بَكْرٍ وَعُمَرَ

 
ஹதீஸ் எண்: 97
 
நான் உங்களுடன் வாழும் நாட்களை அறிய மாட்டேன். எனக்குப் பின் இவ்விருவரையும் நீங்கள் பின்பற்றி நடங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அபூபக்கரையும் உமரையும் சுட்டிக் காட்டினார்கள் என ஹுதைபா இப்னுல் எமான் (ரலி) அறிவிக்கிறார்கள்.
 
(குறிப்பு: இதே ஹதீஸ் அபூதாவூத், திர்மிதியிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. ‘பின்பற்றுங்கள்’ என்ற இடத்தில் ‘இக்திதா’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.)  

98 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا يحيى بن آدَمَ ثنا بن الْمُبَارَكِ عن عُمَرَ بن سَعِيدِ بن أبي حُسَيْنٍ عن بن أبي مُلَيْكَةَ قال سمعت بن عَبَّاسٍ يقول لَمَّا وُضِعَ عُمَرُ على سَرِيرِهِ اكْتَنَفَهُ الناس يَدْعُونَ وَيُصَلُّونَ أو قال يُثْنُونَ وَيُصَلُّونَ عليه قبل أَنْ يُرْفَعَ وأنا فِيهِمْ فلم يَرُعْنِي إلا رَجُلٌ قد زَحَمَنِي وَأَخَذَ بِمَنْكِبِي فَالْتَفَتُّ فإذا عَلِيُّ بن أبي طَالِبٍ فَتَرَحَّمَ على عُمَرَ ثُمَّ قال ما خَلَّفْتُ أَحَدًا أَحَبَّ إلي أَنْ أَلْقَى اللَّهَ بِمِثْلِ عَمَلِهِ مِنْكَ وأيم اللَّهِ إن كنت لَأَظُنُّ لَيَجْعَلَنَّكَ الله عز وجل مع صَاحِبَيْكَ وَذَلِكَ أَنِّي كنت أَكْثَرُ أَنْ أَسْمَعَ رَسُولَ اللَّهِ  يقول ذَهَبْتُ أنا وأبو بَكْرٍ وَعُمَرُ وَدَخَلْتُ أنا وأبو بَكْرٍ وَعُمَرُ وَخَرَجْتُ أنا وأبو بَكْرٍ وَعُمَرُ فَكُنْتُ أَظُنُّ لَيَجْعَلَنَّكَ الله مع صَاحِبَيْكَ

 
ஹதீஸ் எண்: 98
 
உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை (அதற்கான) கட்டிலின் மேல் வைக்கப்பட்டதும் மக்கள் அதைச் சூழ்ந்து கொண்டனர். அவருக்காக துஆ செய்யலானார்கள். அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். திடீரென என் தோள் புஜங்களைப் பிடித்துக் கொண்டு ஒரு மனிதர் என்னை நெருக்கலானார். நான் திரும்பிப் பார்த்த போது அலி (ரலி) அவர்கள் அங்கே நின்று, உமர் (ரலி) மீது அனுதாபம் தெரிவித்தார்கள். ‘ஒருவர் செய்த அமல்கள் போன்று செய்து அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புவதெல்லாம் உம்மை விட (அதற்குத் தகுதியான வரை) விருப்பமானவரை நான் கண்டதேயில்லை, அல்லாஹ்வின் மேல் ஆணை! நிச்சயம் அல்லாஹ் உம்முடைய இரு தோழர்களுடன் சேர்த்து வைப்பான் என்று எண்ணுகிறேன். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ‘நானும் அபூபக்ரும் உமரும் போனோம்’, ‘நானும் அபூபக்ரும் உமரும் நுழைந்தோம்’, ‘நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம்’ என்று (மூவரையும் சம்பந்தப்படுத்தியே) கூறிக் கொண்டிருந்ததை அனேக தடவைகள் நான் கேட்டிருக்கிறேன். அல்லாஹ் உம்மை (உமது நெருங்கிய இரு தோழர்களான நபி (ஸல்), அபூபக்ரு) என்ற இரு தோழர்களுடன் சேர்த்து வைப்பான் என்று எண்ணுகிறேன்’ என அலி (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
 
(குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)
  

99 حدثنا عَلِيُّ بن مَيْمُونٍ الرَّقِّيُّ ثنا سَعِيدُ بن مَسْلَمَةَ عن إسماعيل بن أُمَيَّةَ عن نَافِعٍ عن بن عُمَرَ قال خَرَجَ رسول الله  بين أبي بَكْرٍ وَعُمَرَ فقال هَكَذَا نُبْعَثُ

 
ஹதீஸ் எண்: 99
 
‘நபி (ஸல்) அவர்கள், அபூபக்ரு, உமர் இருவருக்கும் நடுவில் இருக்குமாறு வெளிப்பட்டு, இவ்வாறே நாங்கள் எழுப்பப்படுவோம்’ என்றார்கள் என் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 
(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஸயீத் இப்னு மஸ்லமா நிராகரிக்கப்பட வேண்டியவர் என இமாம் புகாரி குறிப்பிடுகிறார்கள்.) 
 

100 حدثنا أبو شُعَيْبٍ صَالِحُ بن الْهَيْثَمِ الْوَاسِطِيُّ ثنا عبد الْقُدُّوسِ بن بَكْرِ بن خُنَيْسٍ ثنا مَالِكُ بن مِغْوَلٍ عن عَوْنِ بن أبي جُحَيْفَةَ عن أبيه قال قال رسول اللَّهِ  أبو بَكْرٍ وَعُمَرُ سَيِّدَا كُهُولِ أَهْلِ الْجَنَّةِ من الْأَوَّلِينَ وَالْآخِرِينَ إلا النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ

 
ஹதீஸ் எண்: 100
 
95 வது ஹதீஸே இங்கும் இடம் பெறுகிறது, இதை அபூ ஜுஹைபா (ரலி) அறிவிக்கிறார்கள். 

இப்னுமாஜா பக்கம் – 9

இப்னுமாஜா பக்கம் – 9
பக்கம் – 9 (ஹதீஸ்கள் 81 முதல் 90 வரை)

அத்தியாயம்: முகத்திமா – முகப்பு

81 حدثنا عبد اللَّهِ بن عَامِرِ بن زُرَارَةَ ثنا شَرِيكٌ عن مَنْصُورٍ عن رِبْعِيٍّ عن عَلِيٍّ قال قال رسول اللَّهِ e لَا يُؤْمِنُ عَبْدٌ حتى يُؤْمِنَ بِأَرْبَعٍ بِاللَّهِ وَحْدَهُ لَا شَرِيكَ له وَأَنِّي رسول اللَّهِ وَبِالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ وَالْقَدَرِ َ

ஹதீஸ் எண்: 81

அல்லாஹ் ஏகன், அவனுக்கு இணையாக எவருமில்லை என்றும், நான் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் என்றும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படும் என்றும், விதி உண்டென்றும் ஆகிய நான்கு விஷயங்களை ஒரு அடியான் நம்பாத வரை மூமினாக முடியாது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: திர்மிதி, ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

82 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ ثنا طَلْحَةُ بن يحيى بن طَلْحَةَ بن عُبَيْدِ اللَّهِ عن عَمَّتِهِ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عن عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قالت دُعِيَ رسول اللَّهِ  إلى جِنَازَةِ غُلَامٍ من الْأَنْصَارِ فقلت يا رَسُولَ اللَّهِ طُوبَى لِهَذَا عُصْفُورٌ من عَصَافِيرِ الْجَنَّةِ لم يَعْمَلْ السُّوءَ ولم يُدْرِكْهُ قال أَوَ غَيْرُ ذلك يا عَائِشَةُ إِنَّ اللَّهَ خَلَقَ لِلْجَنَّةِ أَهْلًا خَلَقَهُمْ لها وَهُمْ في أَصْلَابِ آبَائِهِمْ وَخَلَقَ لِلنَّارِ أَهْلًا خَلَقَهُمْ لها وَهُمْ في أَصْلَابِ آبَائِهِمْ َ

ஹதீஸ் எண்: 82

அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு சிறுவனின் ஜனாஸாவுக்காக நபி ஸல் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு தீமையும் செய்யாத, தீமையின் பக்கம் நெருங்காத சுவனத்துச் சிட்டுக்களில், இது ஒரு சிட்டு! இதற்கு நல்வாழ்த்து’ என்று நான் கூறினேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் ‘ஆயிஷாவே’ இவ்வாறு கூறாதே! சிலரை அவர்கள் தந்தைகளின் முதுகுத்தண்டில் இருக்கும் போதே, சுவர்க்கத்திற்கென்று அல்லாஹ் படைத்து விட்டான், வேறு சிலரை அவர்கள் தங்கள் தந்தையின் முதுகுத்தண்டில் இருக்கும் போதே நரகத்திற்கென்று படைத்து விட்டான்’ என்று கூறினார்கள் என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம் நூலிலும் இடம் பெற்றுள்ளது.)

83 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ عن زِيَادِ بن إسماعيل الْمَخْزُومِيِّ عن مُحَمَّدِ بن عَبَّادِ بن جَعْفَرٍ عن أبي هُرَيْرَةَ قال جاء مُشْرِكُو قُرَيْشٍ يُخَاصِمُونَ النبي  في الْقَدَرِ فَنَزَلَتْ هذه الْآيَةُ  يوم يُسْحَبُونَ في النَّارِ على وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ ِ

ஹதீஸ் எண்: 83

குரைஷ் குல இணை வைப்பாளர்கள் நபி ஸல் அவர்களிடம் விதியைப் பற்றி தர்க்கம் செய்ய வந்தனர். உடனே அவர்கள் நரகில் முகம் குப்புறத் தள்ளப்படும் போது நரகின் வேதனையை சுவைத்துப் பாருங்கள்! (என்று கூறப்படும்). ஒவ்வொரு பொருளையும் (அதற்கான) முன் திட்டப்படியே நாம் படைத்திருக்கிறோம் (அல்குர்ஆன் 54:48,49) வசனம் இறங்கியது.

(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம் நூலிலும் இடம் பெற்றுள்ளது.)

84 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ قال ثنا مَالِكُ بن إسماعيل ثنا يحيى بن عُثْمَانَ مولى أبي بَكْرٍ ثنا يحيى بن عبد اللَّهِ بن أبي مُلَيْكَةَ عن أبيه أَنَّهُ دخل على عَائِشَةَ فذكر لها شيئا من الْقَدَرِ فقالت سمعت رَسُولَ اللَّهِ e يقول من تَكَلَّمَ في شَيْءٍ من الْقَدَرِ سُئِلَ عنه يوم الْقِيَامَةِ وَمَنْ لم يَتَكَلَّمْ فيه لم يُسْأَلْ عنه قال أبو الْحَسَنِ الْقَطَّانُ حَدَّثَنَاهُ حَازِمُ بن يحيى ثنا عبد الْمَلِكِ بن سنان ثنا يحيى بن عُثْمَانَ فذكر نَحْوَهُ

ஹதீஸ் எண்: 84

விதியைப் பற்றி யாரேனும் எதையேனும் பேசினால் மறுமை நாளில் அது பற்றி விசாரிக்கப்படுவான், யார் அது பற்றி எதுவும் பேச வில்லையோ, அவனிடம் கேள்வி கேட்கப்படாது என்று நபி ஸல் அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதில் இடம் பெறும் எஹ்யா இப்னு உஸ்மான் என்பவர் இடம் பெறுகிறார், இவர் பலவீனமானவர்.)

85 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو مُعَاوِيَةَ ثنا دَاوُدُ بن أبي هِنْدٍ عن عَمْرِو بن شُعَيْبٍ عن أبيه عن جَدِّهِ قال خَرَجَ رسول اللَّهِ  على أَصْحَابِهِ وَهُمْ يَخْتَصِمُونَ في الْقَدَرِ فَكَأَنَّمَا يُفْقَأُ في وَجْهِهِ حَبُّ الرُّمَّانِ من الْغَضَبِ فقال بهذا أُمِرْتُمْ أو لِهَذَا خُلِقْتُمْ تَضْرِبُونَ الْقُرْآنَ بَعْضَهُ بِبَعْضٍ بهذا هَلَكَتْ الْأُمَمُ قَبْلَكُمْ قال فقال عبد اللَّهِ بن عَمْرٍو ما غَبَطْتُ نَفْسِي بِمَجْلِسٍ تَخَلَّفْتُ فيه عن رسول اللَّهِ e ما غَبَطْتُ نَفْسِي بِذَلِكَ الْمَجْلِسِ وَتَخَلُّفِي عنه

ஹதீஸ் எண்: 85

நபித்தோழர்கள் விதியைப் பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்த போது அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் வந்தனர். கோபத்தின் காரணமாக அவர்களது முகத்தில் மாதுளை முத்துக்கள் வெடித்தது போல் சிவந்து விட்டது. ‘இப்படித்தான் நீங்கள் கட்டளையிடப்பட்டீர்களா? அல்லது இதற்காகத்தான் படைக்கடப்பட்டீர்களா? குர்ஆனின் சில வசனங்களை வேறு சில வசனங்களுடன் மோதச் செய்கிறீர்களா? உங்களுக்கு முன்னுள்ள சமுதாயத்தவர் இதனாலேயே அழிக்கப்பட்டனர் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இந்த நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிடும் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் நபி ஸல் அவர்களின் எந்த அவையிலும் நான் கலந்து கொள்ளாதிருந்ததை நல்லதென்று நான் கருதியதில்லை. ஆனால் (நபி (ஸல்) அவர்களின் கடும் கோபத்திற்கு ஆளான) இந்த அவையில் நானும் ஒருவனாக இல்லாதது பற்றி ரொம்பவும் சந்தோஷப்பட்டேன் என்று கூறினார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) வாயிலாக திர்மிதி பதிவு செய்துள்ளார்கள்)

86 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا حدثنا وَكِيعٌ ثنا يحيى بن أبي حَيَّةَ أبو جَنَابٍ الْكَلْبِيُّ عن أبيه عن بن عُمَرَ قال قال رسول اللَّهِ e لَا عَدْوَى ولا طِيَرَةَ ولا هَامَةَ فَقَامَ إليه رَجُلٌ أَعْرَابِيٌّ فقال يا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ الْبَعِيرَ يَكُونُ بِهِ الْجَرَبُ فَيُجْرِبُ الْإِبِلَ كُلَّهَا قال ذَلِكُمْ الْقَدَرُ فَمَنْ أَجْرَبَ الْأَوَّلَ  

ஹதீஸ் எண்: 86

‘தொற்று நோய் இல்லை, சகுனம் என்பதுமில்லை, பறவை சாஸ்திரம் என்பதுமில்லை’ என்று நபி ஸல் அவர்கள் கூறிய போது கிராமப்புற மனிதர் ஒருவர் எழுந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகைக் கூட்டத்தில் ஒரு ஒட்டகைக்கு நோய் வந்ததும், எல்லா ஒட்டகைகளுக்கும் அந்த நோயை ஏற்படுத்தி விடுகிறதே! (இது தொற்று நோய் இல்லையா?) என்று கேட்டார். ‘அது தான் விதி! அது சரி! முதல் ஒட்டகத்திற்கு நோயைத் தொற்றச் செய்தவன் யார்?’ என்று நபி ஸல் திருப்பிக் கேட்டார்கள் என்று இப்னு உமர் ரலி அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதே ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அபூதாவூது, அஹ்மத் ஆகிய நூல்களிலும் அபூஹுரைரா (ரலி) வாயிலாக அறிவிக்கப்படுகிறது, எனினும் அதில் ‘அது தான் விதி’ என்ற வாசகம் இல்லை.)

87 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا يحيى بن عِيسَى الخزاز عن عبد الأعلى بن أبي الْمُسَاوِرِ عن الشَّعْبِيِّ قال لَمَّا قَدِمَ عَدِيُّ بن حَاتِمٍ الْكُوفَةَ أَتَيْنَاهُ في نَفَرٍ من فُقَهَاءِ أَهْلِ الْكُوفَةِ فَقُلْنَا له حَدِّثْنَا ما سَمِعْتَ من رسول اللَّهِ  فقال أَتَيْتُ النبي e فقال يا عَدِيَّ بن حَاتِمٍ أَسْلِمْ تَسْلَمْ قلت وما الْإِسْلَامُ فقال تَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلا الله وَأَنِّي رسول اللَّهِ وَتُؤْمِنُ بِالْأَقْدَارِ كُلِّهَا خيرها وَشَرِّهَا حُلْوِهَا وَمُرِّهَا َ

ஹதீஸ் எண்: 87

நான் நபி ஸல் அவர்களிடம் வந்தேன். ஹாமிதின் மகன் அதியே! நீ இஸ்லாத்தை தழுவு! வெற்றியடைவாய்! என்று நபி ஸல் கூறினார்கள். இஸ்லாம் என்றால் என்ன? என்று நான் கேட்டேன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் என்று திட்டவட்டமாக நீ நம்புவதும், விதியில் நல்லவை கெட்டவை, இன்பம் துன்பம் அனைத்தையும் நீ நம்புவதும் தான் இஸ்லாம் என்று நபி ஸல் கூறினார்கள் என்று அதீ இப்னு ஹாதிம் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வரியையில் இடம் பெறும் அப்துல் அஃலா இப்னு அபுல் முஸாவிர் நிராகரிக்கத்தக்கவர்)

88 حدثنا محمد بن عبد اللَّهِ بن نُمَيْرٍ ثنا أَسْبَاطُ بن مُحَمَّدٍ ثنا الْأَعْمَشُ عن يَزِيدَ الرِّقَاشِيِّ عن غُنَيْمِ بن قَيْسٍ عن أبي مُوسَى الْأَشْعَرِيِّ قال قال رسول اللَّهِ  مَثَلُ الْقَلْبِ مَثَلُ الرِّيشَةِ تُقَلِّبُهَا الرِّيَاحُ بِفَلَاةٍ

ஹதீஸ் எண்: 88

‘வெட்ட வெளியில் காற்றுக்களால் புரட்டி அடிக்கப்படும் இறகு போன்றது தான் (மனித) உள்ளங்கள்’ என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மதிலும் இடம் பெற்றுள்ளது.)

89 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا خَالِي يَعْلَى عن الْأَعْمَشِ عن سَالِمِ بن أبي الْجَعْدِ عن جَابِرٍ قال جاء رَجُلٌ من الْأَنْصَارِ إلى النبي  فقال يا رَسُولَ اللَّهِ إِنَّ لي جَارِيَةً أَعْزِلُ عنها قال سَيَأْتِيهَا ما قُدِّرَ لها فَأَتَاهُ بَعْدَ ذلك فقال قد حَمَلَتْ الْجَارِيَةُ فقال النبي  ما قُدِّرَ لِنَفْسٍ شَيْءٌ إلا هِيَ كَائِنَةٌ

ஹதீஸ் எண்: 89

அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அடிமைப் பெண்ணொருத்தி இருக்கிறாள். அவள் (கருவடையாமலிருக்க) நான் ‘அஸ்ல்’ செய்து கொள்ளலாமா? என்று அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் கேட்டார். அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை அடைந்தே தீரும் என்று நபி ஸல் அவர்கள் பதிலளித்தார்கள். சிறிது காலத்திற்குப் பின் அதே மனிதர் வந்து அந்த அடிமைப் பெண் கர்ப்பமடைந்து விட்டாள் என்று கூறினார். எந்த ஆத்மாவுக்கும் அதற்கென விதிக்கப்பட்டது நடந்தே தீரும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(உடலுறவு கொள்ளும் போது கர்ப்ப அறையில் விந்து சென்று விடாமலிருக்க விந்தை வெளியே விட்டு விடுவதற்கே அஸ்ல் எனப்படும்)

(குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மதிலும் இடம் பெற்றுள்ளது.)

90 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن عبد اللَّهِ بن عِيسَى عن عبد اللَّهِ بن أبي الْجَعْدِ عن ثَوْبَانَ قال قال رسول اللَّهِ  لَا يَزِيدُ في الْعُمْرِ إلا الْبِرُّ ولا يَرُدُّ الْقَدَرَ إلا الدُّعَاءُ وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِخَطِيئَةٍ يَعْمَلُهَا

ஹதீஸ் எண்: 90

‘ஆயுளை நல்லறங்கள் தான் அதிகப்படுத்தும். பிரார்த்தனைகள் தான் விதியை மாற்றும்! ஒரு மனிதன் தான் செய்யும் தவறுகளினால் ரிஸ்கையும் இழந்து விடுகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸவ்பான் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: ‘தவறுகளினால் ரிஸ்கை இழந்து விடுகிறான்’ என்ற வாசகம் நீங்கலாக மற்றவை திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் இப்னு அபில் ஜஃது என்பவர் இடம் பெறுகிறார். ‘இவர் யாரென்றே தெரியாதவர்’ என தஹபீ அவர்கள் மீஸானில் குறிப்பிடுகிறார்கள். இது ஆதாரப்பூர்வமானது அல்ல.)

 

இப்னுமாஜா பக்கம் – 8

இப்னுமாஜா பக்கம் – 8

பக்கம் – 8 (ஹதீஸ்கள் 71 முதல் 80 வரை)

அத்தியாயம்: முகத்திமா – முகப்பு

71 حدثنا أَحْمَدُ بن الْأَزْهَرِ ثنا أبو النَّضْرِ ثنا أبو جَعْفَرٍ عن يُونُسَ عن الْحَسَنِ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ  أُمِرْتُ أَنْ أُقَاتِلَ الناس حتى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إلا الله وَأَنِّي رسول اللَّهِ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ

ஹதீஸ் எண்: 71

‘வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் திட்டவட்டமாக நம்பி, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுக்கும் வரை மக்களிடம் போராடுமாறு நான் கட்டளையிடப் பட்டுள்ளேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

72 حدثنا أَحْمَدُ بن الْأَزْهَرِ ثنا محمد بن يُوسُفَ ثنا عبد الْحَمِيدِ بن بَهْرَامَ عن شَهْرِ بن حَوْشَبٍ عن عبد الرحمن بن غَنْمٍ عن مُعَاذِ بن جَبَلٍ قال قال رسول اللَّهِ  أُمِرْتُ أَنْ أُقَاتِلَ الناس حتى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إلا الله وَأَنِّي رسول اللَّهِ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ

ஹதீஸ் எண்: 72

மேற்கூறிய அதே ஹதீஸ் முஆத் இப்னு ஜபல் வழியாக இங்கே குறிப்பிடப்படுகிறது. அதுவும் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் காணப்படுகிறது.

73 حدثنا محمد بن إسماعيل الرَّازِيُّ أَنْبَأَنَا يُونُسُ بن مُحَمَّدٍ ثنا عبد اللَّهِ بن مُحَمَّدٍ اللَّيْثِيُّ ثنا نِزَارُ بن حَيَّانَ عن عِكْرِمَةَ عن بن عَبَّاسٍ وَعَنْ جَابِرِ بن عبد اللَّهِ قالا قال رسول اللَّهِ  صِنْفَانِ من أُمَّتِي ليس لَهُمَا في الْإِسْلَامِ نَصِيبٌ أَهْلُ الْإِرْجَاءِ وَأَهْلُ الْقَدَرِ

ஹதீஸ் எண்: 73

என் சமுதாயத்தில் இரு பிரிவினர் உள்ளனர். அவர்களுக்கு இஸ்லாத்தில் எந்தப் பங்குமில்லை. (அவர்கள் யாரெனில்) மனிதன் எந்த தீமை செய்தாலும் மன்னித்து விடுவான் என்று அசட்டு நம்பிக்கை வைப்பவர்களும், விதியை மறுப்பவர்களுமாவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி), ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) இருவரும் அறிவிக்கின்றனர்.

(குறிப்பு: இந்த ஹதீஸில் அறிமுகமற்ற பலர் இடம் பெறுகின்றனர். முல்லா அல் தாரி ‘இதை இட்டுக் கட்டப்பட்டது’ என்று ‘மவ்லூஆத்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.)

74 حدثنا أبو عُثْمَانَ الْبُخَارِيُّ سَعِيدُ بن سَعْدٍ قال ثنا الْهَيْثَمُ بن خَارِجَةَ ثنا إسماعيل يَعْنِي بن عَيَّاشٍ عن عبد الْوَهَّابِ بن مُجَاهِدٍ عن مُجَاهِدٍ عن أبي هُرَيْرَةَ وبن عباس قالا الْإِيمَانُ يَزِيدُ وَيَنْقُصُ

ஹதீஸ் எண்: 74

‘ஈமான் (சில போது) அதிகரிக்கும், (சிலபோது) குறைந்து விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர்.

(குறிப்பு: இதில் அப்துல் வஹ்ஹாப் இப்னு முஜாஹித்’ என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர்.)

75 حدثنا أبو عُثْمَانَ الْبُخَارِيُّ ثنا الْهَيْثَمُ ثنا إسماعيل عن جرير بن عُثْمَانَ عن الحرث أَظُنُّهُ عن مُجَاهِدٍ عن أبي الدَّرْدَاءِ قال الْإِيمَانُ يَزْدَادُ وَيَنْقُصُ

ஹதீஸ் எண்: 75

இதற்கு முன்னுள்ள ஹதீஸ் தான் 75 வது ஹதீஸாகவும் அறிவிப்பாளர் வரிசையில் சிறிது மாற்றத்துடன் இடம் பெற்றுள்ளது.)

0 بَاب في الْقَدَرِ

76 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ وَمُحَمَّدُ بن فُضَيْلٍ وأبو مُعَاوِيَةَ ح وحدثنا عَلِيُّ بن مَيْمُونٍ الرَّقِّيُّ ثنا أبو مُعَاوِيَةَ وَمُحَمَّدُ بن عُبَيْدٍ عن الْأَعْمَشِ عن زَيْدِ بن وَهْبٍ قال قال عبد اللَّهِ بن مَسْعُودٍ حدثنا رسول اللَّهِ وهو الصَّادِقُ الْمَصْدُوقُ إنه يُجْمَعُ خَلْقُ أَحَدِكُمْ في بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذلك ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذلك ثُمَّ يَبْعَثُ الله إليه الْمَلَكَ فَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ فيقول اكْتُبْ عَمَلَهُ وَأَجَلَهُ وَرِزْقَهُ وَشَقِيٌّ أَمْ سَعِيدٌ فَوَالَّذِي نَفْسِي بيده إِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ حتى ما يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إلا ذِرَاعٌ فَيَسْبِقُ عليه الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُهَا وَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حتى ما يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إلا ذِرَاعٌ فَيَسْبِقُ عليه الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَيَدْخُلُهَا

பாடம் 10 விதி

ஹதீஸ் எண்: 76

உங்களில் ஒவ்வொருவரும் தன் தாய் வயிற்றில் நாற்பது நாட்களில் உங்களில் ஒவ்வொருவரும் சமைக்கப்படுகின்றனர். பின்னர் இதே அளவு காலம் (நாற்பது நாட்கள்) கர்ப்ப அறைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையை அடைகிறான். பின்னர் இதே அளவு காலம் சதைத் துண்டாக இருக்கிறான். பின்னர் இவன் என்ன செய்வான் என்பதையும், இவன் (மரணிக்கும்) தவணையையும், இவனது உணவையும், இவன் நல்லவனா, கெட்டவனா என்பதையும் ஆக நான்கு காரியங்களை எழுதுவீராக என்று கூறி அவனிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான்.

எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக உங்களில் ஒருவன் தனக்கும் சுவர்க்கத்திற்கும் ஒரு முழம் தான் உள்ளது என்று சொல்லுமளவு சுவனவாசிக்குரிய செயல்களைச் செய்வான், ஆனால் விதி அவனை வென்றுவிடும். (கடைசியாக) ‘அவன் நரகவாசிகளின் செயல்களைச் செய்து அதில் பிரவேசிப்பான். தனக்கும் நரகத்துக்கும் ஒரு முழம் இடைவெளி உள்ள அளவுக்கு நரகவாசிகளின் செயலைச் செய்வான். அப்போது விதி அவனை வென்று விடும். நரகவாசிகளின் செயல்களைச் செய்து நரகில் நுழைவான் என்று நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

77 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا إسحاق بن سُلَيْمَانَ قال سمعت أَبَا سِنَانٍ عن وَهْبِ بن خَالِدٍ الْحِمْصِيِّ عن بن الدَّيْلَمِيِّ قال وَقَعَ في نَفْسِي شَيْءٌ من هذا الْقَدَرِ خَشِيتُ أَنْ يُفْسِدَ عَلَيَّ دِينِي وَأَمْرِي فَأَتَيْتُ أُبَيَّ بن كَعْبٍ فقلت أَبَا الْمُنْذِرِ إنه قد وَقَعَ في نَفْسِي شَيْءٌ من هذا الْقَدَرِ فَخَشِيتُ على دِينِي وَأَمْرِي فَحَدِّثْنِي من ذلك بِشَيْءٍ لَعَلَّ اللَّهَ أَنْ يَنْفَعَنِي بِهِ فقال لو أَنَّ اللَّهَ عَذَّبَ أَهْلَ سَمَاوَاتِهِ وَأَهْلَ أَرْضِهِ لَعَذَّبَهُمْ وهو غَيْرُ ظَالِمٍ لهم وَلَوْ رَحِمَهُمْ لَكَانَتْ رَحْمَتُهُ خَيْرًا لهم من أَعْمَالِهِمْ وَلَوْ كان لك مِثْلُ جَبَلِ أُحُدٍ ذَهَبًا أو مِثْلُ جَبَلِ أُحُدٍ تُنْفِقُهُ في سَبِيلِ اللَّهِ ما قُبِلَ مِنْكَ حتى تُؤْمِنَ بِالْقَدَرِ فَتَعْلَمَ أَنَّ ما أَصَابَكَ لم يَكُنْ لِيُخْطِئَكَ وَأَنَّ ما أَخْطَأَكَ لم يَكُنْ لِيُصِيبَكَ وَأَنَّكَ إن مُتَّ على غَيْرِ هذا دَخَلْتَ النَّارَ ولا عَلَيْكَ أَنْ تَأْتِيَ أَخِي عَبْدَ اللَّهِ بن مَسْعُودٍ فَتَسْأَلَهُ فَأَتَيْتُ عَبْدَ اللَّهِ فَسَأَلْتُهُ فذكر مِثْلَ ما قال أُبَيٌّ وقال لي ولا عَلَيْكَ أَنْ تَأْتِيَ حُذَيْفَةَ فَأَتَيْتُ حُذَيْفَةَ فَسَأَلْتُهُ فقال مِثْلَ ما قالا وقال ائْتِ زَيْدَ بن ثَابِتٍ فَاسْأَلْهُ فَأَتَيْتُ زَيْدَ بن ثَابِتٍ فَسَأَلْتُهُ فقال سمعت رَسُولَ اللَّهِ يقول لو أَنَّ اللَّهَ عَذَّبَ أَهْلَ سَمَاوَاتِهِ وَأَهْلَ أَرْضِهِ لَعَذَّبَهُمْ وهو غَيْرُ ظَالِمٍ لهم وَلَوْ رَحِمَهُمْ لَكَانَتْ رَحْمَتُهُ خَيْرًا لهم من أَعْمَالِهِمْ وَلَوْ كان لك مِثْلُ أُحُدٍ ذَهَبًا أو مِثْلُ جَبَلِ أُحُدٍ ذَهَبًا تُنْفِقُهُ في سَبِيلِ اللَّهِ ما قَبِلَهُ مِنْكَ حتى تُؤْمِنَ بِالْقَدَرِ كُلِّهِ فَتَعْلَمَ أَنَّ ما أَصَابَكَ لم يَكُنْ لِيُخْطِئَكَ وما أَخْطَأَكَ لم يَكُنْ لِيُصِيبَكَ وَأَنَّكَ إن مُتَّ على غَيْرِ هذا دَخَلْتَ النَّارَ

ஹதீஸ் எண்: 77

விதி சம்பந்தமாக என் மனதில் ஒரு சந்தேகம் தோன்றியது. என் மார்க்கமும் என் நம்பிக்கையும் (இதனால்) பாழ்பட்டுவிடுமோ என்று அஞ்சி (விளக்கம் பெறுவதற்காக) உபை இப்னு கஃபு (ரலி) அவர்களிடம் சென்றேன். ‘முன்திருடைய தந்தையே! விதி சம்பந்தமாக எனக்கு சந்தேகம் தோன்றியுள்ளது. என் மார்க்கமும் நம்பிக்கையும் (இதனால்) பாழ்பட்டு விடுமோ என அஞ்சுகிறேன். இது பற்றி நீங்கள் ஏதேனும் (விளக்கம்) கூறுங்கள்! அதன் மூலம் அல்லாஹ் எனக்கு பயன் தரக்கூடும்’ என்று கேட்டேன்.

அல்லாஹ் வானம் மற்றும் பூமியிலுள்ள அனைவரையும் தண்டிப்பதாக வைத்துக் கொண்டாலும், இவ்வாறு தண்டிப்பதால் அவன் அவர்களுக்கு அநீதி இழைத்தவனாக மாட்டான். அவன் அவர்கள் அனைவருக்கும் அருள் புரிந்தாலும், அவர்கள் செய்த செயல்களை விடவும் அவனது அருள்தான் அவர்களுக்குச் சிறந்ததாகும். உஹத் மலையளவு உனக்குத் தங்கம் இருந்து நீ அதனை அல்லாஹ்வின் பாதையில் செயவு செய்தாலும் விதியின் மீது நம்பிக்கை கொள்ளாதவரை உன்னிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப் படாது. எது உனக்குக் கிடைக்க வேண்டும் என்று உள்ளதோ அது உன்னை விட்டு தப்பி விடாது. எது உனக்குத் தவறி விடும் என்று உள்ளதோ அது உனக்கு கிடைத்து விடாது என்பதை அறிந்து கொள். இந்த நம்பிக்கையின்றி நீ மரணித்தால் நிச்சயம் நீ நரகில் நுழைவாய்! என்று அவர்கள் கூறிவிட்டு ‘என் சகோதரர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்களிடம் சென்று அவரிடம் இது பற்றிக் கேட்கலாம்’ என்றும் கூறினார்கள்.

அப்துல்லாஹ்விடம் வந்து அவரிடம் (இது பற்றி) கேட்டேன். ‘உபை’ கூறியவாறே அவரும் கூறிவிட்டு ‘ஹுதைபா(ரலி) அவர்களிடம் நீ செல்லலாமே’ என்றும் கூறினார்கள். ஹுதைபாவிடம் கேட்ட போது அவ்விருவரும் கூறியவாறே ‘ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களிடம் சென்று அவரிடம் கேள்’ என்றும் கூறினார்கள். நானும் ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களிடம் வந்து கேட்டேன். உபை சொன்ன அதே வாசகங்களைக் கூறிவிட்டு (மூல நூலில் அந்த வாசகங்கள் திரும்பவும் சொல்லப்பட்டுள்ளது. சுருக்கம் கருதி மொழிபெயர்க்க வில்லை) இதை நபி ஸல் கூற நான் கேட்டுள்ளேன் என்றும் கூறினார்கள் என்று இப்னுத்தைலமீ அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)

 78 حدثنا عُثْمَانُ بن أبي شَيْبَةَ ثنا وَكِيعٌ ح وحدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عن الْأَعْمَشِ عن سَعْدِ بن عُبَيْدَةَ عن أبي عبد الرحمن السُّلَمِيِّ عن عَلِيِّ قال كنا جُلُوسًا عِنْدَ النبي  وَبِيَدِهِ عُودٌ فَنَكَتَ في الأرض ثُمَّ رَفَعَ رَأْسَهُ فقال ما مِنْكُمْ من أَحَدٍ إلا وقد كُتِبَ مَقْعَدُهُ من الْجَنَّةِ وَمَقْعَدُهُ من النَّارِ قِيلَ يا رَسُولَ اللَّهِ أَفَلَا نَتَّكِلُ قال لَا اعْمَلُوا ولا تَتَّكِلُوا فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ له ثُمَّ قَرَأَ  فَأَمَّا من أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى وَأَمَّا من بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى

ஹதீஸ் எண்: 78

நாங்கள் நபி ஸல் அவர்களுடன் அமர்ந்திருந்தோம், அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த கைத்தடியால் பூமியில் தட்டினார்கள். பின்னர் தலையை உயர்த்தி ‘உங்களில் எவராயினும் அவர் சுவர்க்கத்தில் தங்குமிடம், நரகத்தில் தங்குமிடம் எல்லாம் எழுதப்பட்டு விட்டது’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அப்படியானால் நாங்கள் அமல்கள் எதுவும் செய்யாது சோம்பி இருந்து விடலாமா? என்று கேட்கப்பட்டது. ‘அவ்வாறு இருக்கக் கூடாது, (மாறாக) செயல்படுங்கள்! சோம்பி இருக்காதீர்கள்! (சுவர்க்கம் நரகம் இவற்றில்) எதற்காக ஒருவன் படைக்கப்பட்டிருக்கிறானோ அதற்கேற்ப செயல்படவே வாய்ப்பளிக்கப்படுகின்றான்’ என்று கூறிவிட்டு, ‘யார் (பிறருக்கு) வழங்கி, (இறைவனை) அஞ்சி நடந்து, அழகியவற்றை உண்மை என நம்புகின்றானோ அவனுக்கு (சுவனம் செல்வதற்கான) வழியை எளிதாக்குவோம், எவன் கஞ்சத்தனம் செய்து பெருமை கொள்கிறானோ, மேலும் அழகியவற்றைப் பொய்யெனக் கருதுகிறானோ அவனுக்கு (நரகம் செல்வதற்கான) வழியை எளிதாக்குவோம் (அல்குர்ஆன் 92:5,6,7,8,9,10) ஆகிய வசனங்களையும் நபி ஸல் அவர்கள் ஓதிக் காட்டினார்கள்’ என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

79 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ الطَّنَافِسِيُّ قالا ثنا عبد اللَّهِ بن إِدْرِيسَ عن رَبِيعَةَ بن عُثْمَانَ عن مُحَمَّدِ بن يحيى بن حَبَّانَ عن الْأَعْرَجِ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ  الْمُؤْمِنُ القوى خَيْرٌ وَأَحَبُّ إلى اللَّهِ من الْمُؤْمِنِ الضَّعِيفِ وفي كُلٍّ خَيْرٌ احْرِصْ على ما يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ ولا تَعْجَزْ فَإِنْ أَصَابَكَ شَيْءٌ فلا تَقُلْ لو أَنِّي فَعَلْتُ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَّرَ الله وماشاء فَعَلَ فإن لو تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ

ஹதீஸ் எண்: 79

பலமான நம்பிக்கையுள்ள மூமின், பலவீனமான நம்பிக்கை உள்ள மூமினை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவனும் சிறந்தவனுமாவான். எல்லோரிடமும் நல்லவை உண்டு. உனக்குப் பயனளிக்கக் கூடியவைகளை நீ ஆசைப்படு. அல்லாஹ்விடம் உதவி தேடு! உன்னை இயலாதவன் என்று எண்ணிவிடாதே! (அதையும் மீறி) உனக்கு ஏதேனும் சம்பவித்தால், ‘இவ்வாறு நான் நடந்திருந்தால் இந்த அசம்பாவிதத்தைத் தவிர்த்திருப்பேனே’ என்று நீ கூறாதே! ‘இது அல்லாஹ் விதித்தது, அவன் நினைத்ததைச் செய்கிறான்’ என்று கூறு! ஏனென்றால் ‘இவ்வாறு நடந்திருந்தால், அவ்வாறு நடந்திருந்தால் என்று கூறுவது ஷைத்தானின் செயல்பாட்டுக்கு வழிவகுக்கும்’ என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)

80 حدثنا هِشَامُ بن عَمَّارٍ وَيَعْقُوبُ بن حُمَيْدِ بن كَاسِبٍ قالا ثنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن عَمْرِو بن دِينَارٍ سمع طَاوُسًا يقول سمعت أَبَا هُرَيْرَةَ يُخْبِرُ عن النبي  قال احْتَجَّ آدَمُ وَمُوسَى فقال له مُوسَى يا آدَمُ أنت أَبُونَا خَيَّبْتَنَا وَأَخْرَجْتَنَا من الْجَنَّةِ بِذَنْبِكَ فقال له آدَمُ يا مُوسَى اصْطَفَاكَ الله بِكَلَامِهِ وَخَطَّ لك التَّوْرَاةَ بيده أَتَلُومُنِي على أَمْرٍ قَدَّرَهُ الله عَلَيَّ قبل أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً فَحَجَّ آدَمُ مُوسَى فَحَجَّ آدَمُ مُوسَى فَحَجَّ آدَمُ مُوسَى ثَلَاثًا

ஹதீஸ் எண்: 80

ஆதம் (அலை) அவர்களும், மூஸா (அலை) அவர்களும் தர்க்கித்துக் கொண்டனர், அப்போது ஆதமை நோக்கி ‘எங்கள் தந்தை ஆதமே! நீங்கள் செய்த குற்றத்தினால் சுவர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி எங்களை நஷடப்படுத்தி விட்டீரே!’ என்று மூஸா (அலை) கேட்டார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘மூஸாவே! தன்னோடு உரையாடுவதற்கு உன்னை இறைவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான், தவ்ராத்தை தன் கையால் உனக்கு எழுதித் தந்தான், உன்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன் என் முன் அல்லாஹ் விதித்து விட்ட ஒரு காரியத்தில் நீ என்னைக் குறை காணலாமோ?’ என்று கேட்டார்கள். (இவ்வாறு கேட்டதன் மூலம்) ஆதம் மூஸாவை வென்று விட்டார் என்று மும்முறை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

இப்னுமாஜா பக்கம் – 7

இப்னுமாஜா பக்கம் – 7

பக்கம் – 7 (ஹதீஸ்கள் 61 முதல் 70 வரை)

அத்தியாயம்: முகத்திமா – முகப்பு

61 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا حَمَّادُ بن نَجِيحٍ وكان ثِقَةً عن أبي عِمْرَانَ الْجَوْنِيِّ عن جُنْدُبِ بن عبد اللَّهِ قال كنا مع النبي  وَنَحْنُ فِتْيَانٌ حَزَاوِرَةٌ فَتَعَلَّمْنَا الْإِيمَانَ قبل أَنْ نَتَعَلَّمَ الْقُرْآنَ ثُمَّ تَعَلَّمْنَا الْقُرْآنَ فَازْدَدْنَا بِهِ إِيمَانًا

ஹதீஸ் எண்: 61

‘நாங்கள் இளைஞர்களாக இருந்த போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கிறோம். குர்ஆனைக் கற்றுக் கொள்வதற்கு முன் ஈமானைக் கற்றுக் கொண்டோம். பின்னர் குர்ஆனைக் கற்று அதன் மூலம் ஈமானை அதிகப்படுத்திக் கொண்டோம்’ என்று ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

62 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا محمد بن فُضَيْلٍ ثنا عَلِيُّ بن نِزَارٍ عن أبيه عن عِكْرِمَةَ عن بن عَبَّاسٍ قال قال رسول اللَّهِ  صِنْفَانِ من هذه الْأُمَّةِ ليس لَهُمَا في الْإِسْلَامِ نَصِيبٌ الْمُرْجِئَةُ وَالْقَدَرِيَّةُ

ஹதீஸ் எண்: 62

என் சமுதாயத்தில் தோன்றும் இரு பிரிவினருக்கு, இஸ்லாத்தில் எந்தப் பங்கும் இல்லை. (விதியை மறுக்கின்ற) கத்ரியா என்பவர்களும், (எவ்வளவு பாவம் வேண்டுமானாலும் செய்யலாம், ஈமான் மட்டும் போதும் என்று கூறுகின்ற) ‘முர்ஜியா’ என்பவர்களுமே அவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.)

 

63 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن كَهْمَسِ بن الْحَسَنِ عن عبد اللَّهِ بن بُرَيْدَةَ عن يحيى بن يَعْمَرَ عن بن عُمَرَ عن عُمَرَ قال كنا جُلُوسًا عِنْدَ النبي  فَجَاءَ رَجُلٌ شَدِيدُ بَيَاضِ الثِّيَابِ شَدِيدُ سَوَادِ شَعَرِ الرَّأْسِ لَا يُرَى عليه أَثَرُ سَفَرٍ ولا يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ قال فَجَلَسَ إلى النبي  فَأَسْنَدَ رُكْبَتَهُ إلى رُكْبَتِهِ وَوَضَعَ يَدَيْهِ على فَخِذَيْهِ ثُمَّ قال يا محمد ما الْإِسْلَامُ قال شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إلا الله وَأَنِّي رسول اللَّهِ وَإِقَامُ الصَّلَاةِ وَإِيتَاءُ الزَّكَاةِ وَصَوْمُ رَمَضَانَ وَحَجُّ الْبَيْتِ قال صَدَقْتَ فَعَجِبْنَا منه يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ ثُمَّ قال يا محمد ما الْإِيمَانُ قال أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَكُتُبِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ قال صَدَقْتَ فَعَجِبْنَا منه يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ ثُمَّ قال يا محمد ما الْإِحْسَانُ قال أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنَّكَ إن لَا تَرَاهُ فإنه يَرَاكَ قال فَمَتَى السَّاعَةُ قال ما الْمَسْئُولُ عنها بِأَعْلَمَ من السَّائِلِ قال فما أَمَارَتُهَا قال أَنْ تَلِدَ الْأَمَةُ رَبَّتَهَا قال وَكِيعٌ يَعْنِي تَلِدُ الْعَجَمُ الْعَرَبَ وَأَنْ تَرَى الْحُفَاةَ الْعُرَاةَ الْعَالَةَ رِعَاءَ الشَّاءِ يَتَطَاوَلُونَ في الْبِنَاءِ قال ثُمَّ قال فَلَقِيَنِي النبي e بَعْدَ ثَلَاثٍ فقال أَتَدْرِي من الرَّجُلُ قلت الله وَرَسُولُهُ أَعْلَمُ قال ذَاكَ جِبْرِيلُ أَتَاكُمْ يُعَلِّمُكُمْ مَعَالِمَ دِينِكُمْ

ஹதீஸ் எண்: 63

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம், கன்னங்கரிய தலைமுடியும், வெள்ளை வெளேர் நிறமும் கொண்ட ஒரு மனிதர் வந்தார். பிரயாணத்தின் அறிகுறி எதுவும் அவரிடம் தென்பட வில்லை. எங்களில் எவருக்கும் அவரைத் தெரியவில்லை. நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன் முழங்காலை அவர்களின் முழங்காலுடன் ஒட்டி உட்கார்ந்து, தன் தொடை மீது தன் கைகளை வைத்துக் கொண்டார்.

‘முஹம்மதே! இஸ்லாம் என்பது எது? என்று அவர் கேட்கலானார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புவதும், நான் நிச்சயம் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதி கொள்வதும், தொழுகையை நிலைநாட்டுவதும் ஸகாத் வழங்குவதும், ரமளானில் நோன்பு நோற்பதும், (இறை) இல்லத்தை ஹஜ் செய்வதுமாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் கூறுவது உண்மையே! என்று வந்தவர் கூறினார். இவர் கேள்வியும் கேட்டுவிட்டு அதை உண்மை எனவும் கூறுகிறாரே! என்று நாங்கள் வியப்படைந்தோம்.

‘முஹம்மதே! ஈமான் என்பது எது?’ என்றார். அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனது வேதங்களையும், இறுதி நாளையும், நன்மை தீமை உட்பட விதியையும் நம்புவதே ஈமான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் கூறுவது உண்மையே! என்று அவர் சொன்னார். கேள்வியும் கேட்டுவிட்டு, அதை உண்மைப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.

‘முஹம்மதே! இஹ்ஸான் என்பது எது?’ என்று வந்தவர் கேட்டார். இறைவனை நீ காண்பது போல் அவனை வணங்குவது தான் (இஹ்ஸான்). நீ அவனைக் காணாவிட்டாலும் நிச்சயம் அவன் உன்னைக் காண்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘யுகமுடிவு நாள் எப்போது?’ என்றார் அவர். இது பற்றிக் கேட்பவரை விட (அதாவது உங்களைவிட) கேட்கப்படுபவர் (அதாவது நான்) மிக அறிந்தவனில்லை என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

‘அதன் அடையாளம் எவை?’ என்று அவர் கேட்டார். ஒரு அடிமைப்பெண் தன் எஜமானியை ஈன்றெடுப்பதும், ஆடு மேய்த்துக் கொண்டு, வறிய நிலையில் செருப்பணியாமலும் நிர்வாணிகளாகவும் இருந்தவர்கள் உயர்ந்த கட்டிடங்களை எழுப்புவதை நீர் காண்பதும் அந்த அடையாளங்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மூன்று நாட்களுக்குப் பின் என்னை நபி ஸல் அவர்கள் சந்தித்து ‘அந்த மனிதர் யாரெனத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வும்இ அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்றேன். அவர் தான் ஜிப்ரீல்! உங்கள் மார்க்க நடைமுறைகளைக் கற்றுத்தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.

(குறிப்பு: ஒரு சில மாற்றங்களுடன் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

 

64 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا إسماعيل بن عُلَيَّةَ عن أبي حَيَّانَ عن أبي زُرْعَةَ عن أبي هُرَيْرَةَ قال كان رسول اللَّهِ e يَوْمًا بَارِزًا لِلنَّاسِ فَأَتَاهُ رَجُلٌ فقال يا رَسُولَ اللَّهِ ما الْإِيمَانُ قال أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَلِقَائِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ الْآخِرِ قال يا رَسُولَ اللَّهِ ما الْإِسْلَامُ قال أَنْ تَعْبُدَ اللَّهَ ولا تُشْرِكَ بِهِ شيئا وَتُقِيمَ الصَّلَاةَ الْمَكْتُوبَةَ وتؤدى الزَّكَاةَ الْمَفْرُوضَةَ وَتَصُومَ رَمَضَانَ قال يا رَسُولَ اللَّهِ ما الْإِحْسَانُ قال أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنَّكَ إن لَا تَرَاهُ فإنه يَرَاكَ قال يا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قال ما الْمَسْئُولُ عنها بِأَعْلَمَ من السَّائِلِ وَلَكِنْ سَأُحَدِّثُكَ عن أَشْرَاطِهَا إذا وَلَدَتْ الْأَمَةُ رَبَّتَهَا فَذَلِكَ من أَشْرَاطِهَا وإذا تَطَاوَلَ رِعَاءُ الْغَنَمِ في الْبُنْيَانِ فَذَلِكَ من أَشْرَاطِهَا في خَمْسٍ لَا يَعْلَمُهُنَّ إلا الله فَتَلَا رسول اللَّهِ   إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ ما في الْأَرْحَامِ وما تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وما تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

ஹதீஸ் எண்: 64

நபி ஸல் அவர்கள் ஒரு நாள் மக்களிடம் வந்தார்கள். அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! ஈமான் என்பது எது?’ என்று கேட்டார். அல்லாஹ்வையும் அவனது வானவர்களையும் அவனது வேதங்களையும் அவனது தூதர்களையும், அவனது சந்திப்பையும் நம்புவதுடன், இறுதியாக திரும்பவும் எழுப்பப்படுவதையும் நீங்கள் நம்ப வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இஹ்ஸான் என்பது எது? என்று அவர் கேட்டார். அல்லாஹ்வை நீ காண்பது போல் அவனை நீ வணங்குவது (இஹ்ஸான்). நீ அவனைக் காணாவிட்டாலும் நிச்சயம் அவன் உன்னைக் காண்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உலகமுடிவு நாள் எப்போது? என்றார் அவர். இது பற்றி கேட்பவரை விட கேட்கப்படுபவர் மிக அறிந்தவரில்லை. எனினும் அதன் சில அடையாளங்களை நான் உமக்குக் கூறுகிறேன். ஒரு அடிமைப் பெண் தன் எஜமானியை ஈன்றெடுப்பதும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தோர் உயர்ந்த கட்டிடங்களைக் கட்டிக் கொள்வதும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர எவரும் அறிய மாட்டார்கள் என்று கூறிவிட்டு பின்வரும் வசனத்தையும் நபி ஸல் அவர்கள் ஓதக் காட்டினார்கள்.

கியாமத் நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. மழையை அவனே இறக்குகிறான். கார்ப்ப அறையில் உள்ளதை அவனே அறிகிறான். நாளை தான் எதை சம்பாதிப்போம் என்பதை எந்த ஆன்மாவும் அறிய முடியாது. எந்த இடத்தில் மரணிப்போம் என்பதையும் எந்த ஆன்மாவும் அறிய முடியாது. நிச்சயமாக அல்லாஹ் அறிந்தவனும் நுண்ணறிவாளனுமாவான். (அல்குர்ஆன் 31:34)

(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

 

65 حدثنا سَهْلُ بن أبي سَهْلٍ وَمُحَمَّدُ بن إسماعيل قالا ثنا عبد السَّلَامِ بن صَالِحٍ أبو الصَّلْتِ الْهَرَوِيُّ ثنا عَلِيُّ بن مُوسَى الرِّضَا عن أبيه عن جَعْفَرِ بن مُحَمَّدٍ عن أبيه عن عَلِيِّ بن الْحُسَيْنِ عن أبيه عن عَلِيِّ بن أبي طَالِبٍ قال قال رسول اللَّهِ  الْإِيمَانُ مَعْرِفَةٌ بِالْقَلْبِ وَقَوْلٌ بِاللِّسَانِ وَعَمَلٌ بِالْأَرْكَانِ قال أبو الصَّلْتِ لو قُرِئَ هذا الْإِسْنَادُ على مَجْنُونٍ لَبَرَأَ

ஹதீஸ் எண்: 65

ஈமான் என்பது உள்ளத்தால் அறிவதும், நாவால் மொழிவதும், கடமைகளைச் செயல்படுத்துவதுமாகும், என நபி ஸல் கூறியதாக அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘அபுஸ்ஸல்த்’ என்பவர் பலவீனமானவர் என்பது ஹதீஸ்கலை வல்லுனர்களின் ஒரு மித்த முடிவாகும்.)

 

66 حدثنا محمد بن بَشَّارٍ وَمُحَمَّدُ بن الْمُثَنَّى قالا ثنا محمد بن جَعْفَرٍ ثنا شُعْبَةُ قال سمعت قَتَادَةَ يحدث عن أَنَسِ بن مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ e قال لَا يُؤْمِنُ أحدكم حتى يُحِبَّ لِأَخِيهِ أو قال لِجَارِهِ ما يُحِبُّ لِنَفْسِهِ

ஹதீஸ் எண்: 66

‘தனக்கு விரும்பக் கூடியவைகளைத் தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை ஒருவன் மூமினாக முடியாது’ என நபி ஸல் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

 

67 حدثنا محمد بن بَشَّارٍ وَمُحَمَّدُ بن الْمُثَنَّى قالا ثنا محمد بن جَعْفَرٍ ثنا شُعْبَةُ قال سمعت قَتَادَةَ عن أَنَسِ بن مَالِكٍ قال قال رسول اللَّهِ  لَا يُؤْمِنُ أحدكم حتى أَكُونَ أَحَبَّ إليه من وَلَدِهِ وَوَالِدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ

ஹதீஸ் எண்: 67

தன் குழந்தைகள், தன் தந்தை மற்றும் எல்லா மனிதர்களை விடவும் என்னை நேசிக்காதவரை ஒருவன் மூமினாக முடியாது என நபி ஸல் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)

 

68 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا وَكِيعٌ وأبو مُعَاوِيَةَ عن الْأَعْمَشِ عن أبي صَالِحٍ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ  وَالَّذِي نَفْسِي بيده لَا تَدْخُلُوا الْجَنَّةَ حتى تُؤْمِنُوا ولا تُؤْمِنُوا حتى تَحَابُّوا أَوَ لَا أَدُلُّكُمْ على شَيْءٍ إذا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ

ஹதீஸ் எண்: 68

என் உயிர் எவனது கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாக, விசுவாசம் கொள்ளாதவரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசக்காதவரை விசுவாசம் கொள்ள முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும் படியான செயலை நான் உங்களுக்குக் கற்றுத் தரட்டுமா? (என்று கேட்டு விட்டு) உங்களுக்கிடையே ஸலாமைப் பரவச் செய்யுங்கள்! என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

 

69 حدثنا محمد بن عبد اللَّهِ بن نُمَيْرٍ ثنا عَفَّانُ ثنا شُعْبَةُ عن الْأَعْمَشِ ح وحدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا عِيسَى بن يُونُسَ ثنا الْأَعْمَشُ عن أبي وَائِلٍ عن عبد اللَّهِ قال قال رسول اللَّهِ  سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ

ஹதீஸ் எண்: 69

‘முஸ்லிமை ஏசுவது குற்றமாகும், அவனைக் கொல்வது இறை மறுப்பு (குப்ரு) ஆகும்’ என நபி ஸல் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

 

70 حدثنا نَصْرُ بن عَلِيٍّ الْجَهْضَمِيُّ ثنا أبو أَحْمَدَ ثنا أبو جَعْفَرٍ الرَّازِيُّ عن الرَّبِيعِ بن أَنَسٍ عن أَنَسِ بن مَالِكٍ قال قال رسول اللَّهِ  من فَارَقَ الدُّنْيَا على الْإِخْلَاصِ لِلَّهِ وَحْدَهُ وَعِبَادَتِهِ لَا شَرِيكَ له وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ مَاتَ وَاللَّهُ عنه رَاضٍ قال أَنَسٌ وهو دِينُ اللَّهِ الذي جَاءَتْ بِهِ الرُّسُلُ وَبَلَّغُوهُ عن رَبِّهِمْ قبل هَرْجِ الْأَحَادِيثِ وَاخْتِلَافِ الْأَهْوَاءِ وَتَصْدِيقُ ذلك في كِتَابِ اللَّهِ في آخِرِ ما نَزَلَ يقول الله ) فَإِنْ تَابُوا ( قال خَلْعُ الْأَوْثَانِ وَعِبَادَتِهَا ) وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوْا الزَّكَاةَ ( وقال في آيَةٍ أُخْرَى ) فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوْا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ في الدِّينِ ( حدثنا أبو حَاتِمٍ حدثنا عُبَيْدُ اللَّهِ بن مُوسَى الْعَبْسِيُّ حدثنا أبو جَعْفَرٍ الرَّازِيُّ عن الرَّبِيعِ بن أَنَسٍ مثله

ஹதீஸ் எண்: 70

‘அல்லாஹ் ஒருவனுக்காக கலப்பற்ற முறையில் வாழ்ந்து, இணையற்ற இறைவனை வணங்கி, தொழுகையை நிலை நாட்டி, ஜகாத்தை வழங்கியவனாக உலகை ஒருவன் பிரிந்து சென்றால், அல்லாஹ் அவனை திருப்தி கொண்டவனாகவே அவன் மரணிப்பான்’ என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.

செய்திகளில் கலப்படமும், மாறுபட்ட மனோ இச்சைகளும் ஏற்படுமுன், இறைதூதர்கள் தங்கள் இறைவனிடமிருந்து பெற்று பிரச்சாரம் செய்த மார்க்கம் இது தான். இதற்குச் சான்று அல்லாஹ்வின் வேதத்திலேயே இறுதியாக இறங்கிய வசனத்திலேயே உள்ளது.

‘அவர்கள் திருந்தி தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தும் வழங்கி விட்டால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்’ (9:5)

அவர்கள் திருந்தி தொழுகையை நிலைநாட்டிஇ ஜகாத்தும் வழங்கிவிட்டால் அவர்கள் மார்க்கத்தில் உள்ள சகோதரர்களாவர் (9:11) என்று அனஸ் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸைத் தொடர்ந்து குறிப்பிட்டார்கள்.

(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வரிசையில் அறிமுகமற்றவர்கள் இடம் பெறுவதால் இது பலவீனமானதாகும்.)

புஹாரி 2739 – முன்மாதிரி அரசியல் தலைவர்

ஹதீஸ் விளக்கம்

புஹாரி 2739 முன்மாதிரி மிக்க அரசியல் தலைவர்

மௌலவி இஸ்மாயில் ஸலபி

‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளிக் காசையோ, தங்கக் காசையோ), அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளைக் கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும் தர்மமாக வழங்கிச் சென்ற ஒரு நிலத்தையுமே அவர்கள் விட்டுச் சென்றார்கள்’ அறிவிப்பவர்: ஜுவைரியா பின்த் ஹாரிஸ் (ரலி) நூல்: புகாரி 2739, 2839, 2912, 3098, 4461

பத்து ஆண்டுகள் பேரரசராக ஆட்சி புரிந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்களின் பெயர்ப்பட்டியலையே இந்த ஹதீஸ் எமக்குத் தெளிவு படுத்து கின்றது.

ஆட்சியதிகாரம், நிர்வாகப் பொறுப்புகள், பதவி பட்டங்கள் என்பன அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட அமானிதங்கள், ஆதலால் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றுவது அவசியமாகின்றது. அவற்றைத் துஷ்பிரயோகம் செய்த நிலையில் மரணிப்போரின் மறுமை நிலையோ மகா பயங்கரமாகவே இருக்கும். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தார்கள்.

‘நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148

அல்லாஹ்வின் தூதரே! என்னை நீங்கள் பதவிக்கு நியமிக்க மாட்டீர்களா? என்று நான் கேட்ட போது அவர்கள் தன் கையால் என் தோளைத் தட்டி விட்டு ‘அபூதர்ரே! நீ பலவீனமானவன். ஆனால் பதவி (அதிகாரம்) என்பதோ அமானிதமாக இருக்கிறது. யார் அப்பதவிக்கு வந்து பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுகிறாரோ அவர் தவிர ஏனையோருக்கு அது இழிவையும் வருத்தத்தையுமே கொடுக்கும்’ எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 1825)

பாராளுமன்ற, மாகாண, நகர, உள்ளூராட்சி போன்ற தேர்தல்களுக்காக இலட்சக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொட்டி அக்கிரமம், அநியாயம், அச்சுறுத்தல் போன்ற அசுத்தங்களிலும் ஈடுபட்டு இஸ்லாமிய நெறிமுறைகள் எதையுமே பேணாது, எப்படியும் வெற்றி பெற்று உலக சுகபோகங்களில் திளைக்க வேண்டுமென்ற மோகத்தில் பலர் அரசியலில் ஈடுபட்டிருக்கும் இக்காலத்தில் தான் நபி(ஸல்) அவர்கள் தமது பாசறையில் வளர்த்த உத்தமர் ஒருவர் சமுதாய நலனை மாத்திரமே கருத்திற் கொண்டு பதவி கேட்டதற்கு மேற்கண்டவாறு உபதேசிக்கிறார்கள். இது அண்ணலாரின் அரசியல் ஆளுமையையே காட்டுகிறது.

இஸ்லாமியக் கடமைகள், ஒழுக்கம் மற்றும் பண்பாட்டுப் போதனைகள், நடத்தை சார்ந்த விஷயங்கள் போன்ற துறைகளில் வழி காட்டிய அண்ணல் நபி(ஸல்) அவர்கள், தன்னை ஒரு ஆன்மீகவாதியாக அடையாளப்படுத்திய அதே நேரம் தான் ஒரு முன்மாதிரி மிக்க அரசியல்வாதி என்பதையும் நிரூபித்து விட்டே சென்றிருக்கிறார்கள். தனக்கிருந்த ஆன்மீகப் பலத்தை வைத்து அரசியல் இலாபம் பெற அவர்கள் ஒரு போதும் முற்படவில்லை என்பதை நாம் விளக்க முற்பட்டுள்ள ஹதீஸை நடுநிலையோடு சிந்திக்கும் எவரும் விளங்கிக் கொள்ளலாம்.

ஒரு முஸ்லிம் அரசியல்வாதியைப் பொறுத்தவரை தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுடன் இதய சுத்தியுடனேயே நடந்து கொள்ள வேண்டும். மக்கள் நலனையே மையப்படுத்தி மறுமை விமோசனததிற்கான சீர்திருத்தப் பணிகளையே அவர் முன்னெடுக்க வேண்டும். அபிவிருத்தி நிமித்தம் பெறும் நிதிகளில் சுயலாபம் பெறுவதோ, அவற்றை துஷ்பிரயோகங்களில் ஈடுபடுத்துவதோ கூடாது. இலஞ்சம், ஊழல், மோசடி போன்ற தீய விவகாரங்களை விட்டும் அவர் முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய மார்க்க விழுமியங்கள் பேணப்பட்டதாகவே அண்ணலாரின் அரசியல் வாழ்வு அமைந்திருந்தது.

இன்று எமது அரசியல்வாதிகளில் பலர் அதிகாரத்தைத் தமது சுயநலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதைக் காண்கிறோம். தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் சொத்துக்கள் வாங்கிக் குவித்தல், அறுசுவை உணவுகளுடனும், அரண்மனை வாசத்துடனும் சொகுசு வாழ்வு மேற்கொள்ளல், ஆடம்பரப் பொருட்கள் பாவனை, அதிவுயர் உடைகள், மற்றும் குளிரூட்டப்பட்ட வாகன வசதிகள் ஏற்பாடு என அவர்களது ஆடம்பரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இதனால்தான் அரசியல்வாதிகள், அரசு நிர்வாகிகள் போன்றோரின் அதிகார துஷ்பிரயோகங்களால் ஏற்படும் இலஞ்ச ஊழல்களை விசாரிக்கவென ‘இலஞ்ச ஊழல் ஆணைக் குழு’ என்றொரு திணைக்களம் அரசாங்கத்தால் ஏற்படுத்தப் பட்டிருப்பதையும் பார்க்கிறோம். ஆனால் நபி(ஸல்) அவர்களின் அரசியல் நடவடிக்கைகளோ இவை எல்லாவற்றையும் விட முற்றிலும் வித்தியாசமாகவே காணப்படுகின்றது.

எமது அரசியல்வாதிகளுக்கும் செல்வாக்கை விட பன்மடங்கு செலவாக்கே அன்று மாமன்னர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இருந்தது. நுபுவ்வத்தின் பணியை பூரணமாக நிறைவேற்றி இஸ்லாமிய மார்க்கத்தின் ஒரே ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்த மாநபி(ஸல்) அவர்கள் மக்களால் எவ்வளவு மதிக்கப்பட்டார்கள் என்பதையும் கூறத் தேவையில்லை.

நபிகளாரின் நடவடிக்கைகள் அனைத்தையும் சம்பூரணமாகப் பின்பற்றக் கூடிய தொண்டர்களையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். இப்படி எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீகத் தலைமையும், அசைக்க முடியாத ஆட்சித் தலைமையும் அவர்களிடம் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தி அவர்கள் பொருள் திரட்ட வில்லை. வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வில்லை. தமது பெயரிலும் தமது குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்கள் வாங்கிக் குவிக்க வில்லை. அரண்மனையுடன் கூடிய சொகுசு வாழ்கை வாழவில்லை என்பதையே நாம் விளக்க முற்பட்டுள்ள ஹதீஸ் எடுத்தியம்புகிறது.

அரசியல்வாதிகளில் பலர் இன்று தாம் பெற்றுள்ள அதிகாரத்தைத் தம்மையும், தமது குடும்பத்தையும் வளப்படுத்திக் கொள்ளவே பயன்படுத்துகின்றார்கள். அறுசுவை உணவுகளுக்கும் விதவிதமான பானங்களுக்கும் பணங்கள் பல்லாயிரக் கணக்கில் வீண்விரயமாக்கப் படுகின்றன. ஆனால், இறைவழிகாட்டலில் நின்று ஆட்சி நடத்திய அப்பேரரசர் முஹம்மத் (ஸல்) அவர்கள் உட்கொண்ட உணவைப் பார்க்கின்ற போது மிகப்பெரும் ஆச்சரியமாகவே இருக்கின்றது. அரசர்கள் உண்ட உணவுகளை அவர்கள் கண்டதில்லை. ஏன் சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் தொடர்ந்து உண்டதில்லை என்பதற்கு அவர்களின் தூய வரலாறு எமக்கு தக்க சான்றாக இருக்கின்றது.

‘எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்பு பற்ற வைக்கப் படாமலே கழிந்திருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தது. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள் அதை அருந்துவோம்’ என விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: உர்வா (ரலி), நூல்: புகாரி 2567,6459)

‘நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிராற உண்டதில்லை’ என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: புகாரி 5374)

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன். உடனே என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் வந்து இதைக் கூறினேன். ‘அதற்கவர்கள், என்னிடம் ஒரேயொரு ரொட்டித் துண்டும், சில பேசீச்சம் பழங்களும் தான் உள்ளன. அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய் விடும்’ என்றார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளர் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 3802)

‘ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டார்கள். அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரைக் கண்டார்கள். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்ன? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்க, அவ்விருவரும் ‘பசி’ என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் எதற்காக வெளியே வந்துள்ளீர்களோ அதற்காகவே நானும் வெளியே வந்துள்ளேன்’ என்றார்கள்…(ஹதீஸ் சுருக்கம்) நூல்: முஸ்லிம் 3799)

மேற்படி ஹதீஸ்களும், இதுபோன்றே இன்றும் பல ஹதீஸ்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவோ, செல்வத்தைக் குவிக்கவோ முனையவில்லை என்பதைத் தெளிவுற விளக்குவதை அறியலாம்.

ஆன்மீக நெறியுடன் கூடிய அரசியல் பாசறையில் தன்னால் வளர்க்கப்பட்ட அதிகாரிகளிடம் கூட இலஞ்ச, ஊழல் வாடை வீசுவதையோ, மோசடிகள் இடம் பெறுவதையோ அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறவே விரும்பவில்லை. அமானித்தைப் பேணுவதில் அதிகாரிகளிடம் காட்டிய கண்டிப்பு, அன்னாரது முன்மாதிரி மிக்க அரசியல் கலாச்சாரத்தையே எடுத்துக் காட்டுவதாக இருக்கிறன்றது.

‘நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் ‘இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்த போது ‘இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ‘ஸகாத்’ பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், மாடாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்’ என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி ‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) நூல்: புகாரி 2597, 6636, 6679)

தந்தைக்கிருக்கும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பிள்ளைகளும் அரசியல்வாதிகளின் நெருங்கிய உறவினர்களும் சகாக்களும் எமது மக்களின் வரிப்பணமாகிய அரசுக் கருவூலத்தில் கையாடல்கள் செய்வதும் அவற்றை வீண் சுகபோகங்களுக்காக அள்ளி இறைப்பதும் தற்கால அரசியலில் உணரப்படாத தீமைகளாகவே காட்சியளிக்கின்றன. திறை சேரிப் பணங்களின் இத்தகைய துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு அரசியல் வாதிகளின் பூரண ஒத்துழைப்பும் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், முன்மாதிரி மிகு அரசியல்வாதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திறைசேரி விடயத்தில் தன்னையும் சுத்தப்படுத்தி, தனது குடும்பத்தினரையும் எந்தளவு பாதுகாத்து இருக்கிறார்கள் என்பதை பதவிக்கு வரும் ஆட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் நிர்வாகிகளும் தம்மை ஒருமுறை சுய விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் எனும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து ‘துப்பு துப்பு’ என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். (நூல்: புகாரி 1485, 1491, 3072)

இங்கே நபி (ஸல்) அவர்களின் பேரனாக இருந்தவர் அப்போது சிறுவயதுப் பாலகர். குழந்தைகளின் தவறுகளுக்கு இறைவனும் தண்டனை கொடுப்பதில்லை. இத்தகைய தவறுகளை மனிதர்களில் எவரும் பொருட்படுத்துவதுமில்லை. இருப்பினும் அரசுக் கருவூலம் என்பது அமானிதமாதலால் அதை எம்முறையிலும் துஷ்பிரயோகம் செய்யலாகாது என்ற நபிகளாரின் உறுதிமிகு கொள்கையே வாயில் போட்ட ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட விழுங்க விடாமல் துப்பச் செய்தமைக்கான காரணமாக இங்கே அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மாபெரும் தலைவராகத் திகழ்ந்த பெருமானார் (ஸல்) அவர்களது ஆடம்பரமில்லாத எளிமையான அரசியலுக்கும், தான், குடும்பம், உறவினர் என்ற சுயநலமில்லா நடவடிக்கைகளுக்கும் இன்னும் பல சான்றுகளை அவர்களது தூய வரலாறு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

ஒரு முறை யுத்தக் கைதிகள் பலர் பிடிபட்டிருந்தனர். அப்போது வீட்டு வேலைகள் செய்து கையில் தழும்புகளும் ஆடைகள் அழுக்கடைந்து முகம் வாடி வதங்கிய நிலையிலும் காணப்பட்ட தன்னுடைய மனைவி பாத்திமா (ரலி) அவர்களைப் பரிதாபக் கண்கொண்டு பார்த்த அலி (ரலி) அவர்கள், உன் தந்தையிடம் சென்று உனக்கொரு பணியாளைக் கேட்கலாமே! உனக்கு அது உதவியாக இருக்குமே! என வேண்ட, பெருத்த எதிர்பார்ப்புக்களுடன் தந்தையின் இல்லம் விரைகிறார்கள் பாத்திமா (ரலி) அவர்கள். அங்கு சென்று தந்தையிடம் பணியாள் கேட்ட போது நபி ஸல் அவர்கள், ‘அஹ்லுஸ் ஸுப்பா (திண்ணைத் தோழர்கள்) பட்டினியில் படுத்திருக்க உங்களுக்குப் பணியாளைத் தர என்னால் முடியாது. ஆயினும் பணியாளளை விட சிறந்த ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எனக் கேட்டு விட்டு, உறங்கும் முன்னர் சுப்ஹானல்லாஹ் 33, அல்ஹம்துலில்லாஹ் 33, அல்லாஹு அக்பர் 34 விடுத்தம் கூறுமாறு கற்றுக் கொடுத்தார்கள். இதனை அன்னையவர்களும் திருப்தியாக ஏற்றுக் கொண்டார்கள். (பார்க்க: பத்ஹுல் பாரி 6318 ஆம் ஹதீஸ் விளக்கவுரை)

பாத்திமா (ரலி) அவர்கள் யார்? பெருமானார் (ஸல்) அவர்களின் அளவில்லா அன்பிற்கும் பாசத்திற்கும் உரித்தான அன்பு மகள். சுவனத்துப் பெண்களின் தலைவி. இப்படியிருந்தும் பொதுச் சொத்துக்கள் பாவனை விடயத்தில் குடும்பத்திற்கே கொடுக்காமல் கண்டிப்புடன் அண்ணலார் அரசியல் நடாத்தியிருக்கிறார்கள் என்றால் அது பேராச்சரியம் தான்.

இன்றைய அரசியல் காலாச்சாரம் வெறுமனே உலகாதாய சிந்தனைகள் நிரம்பியதாகவே காணப்படுகின்றன. எனவே தான் அரசியல் மேதை நபி (ஸல்) அவர்களது அரசியல் நடவடிக்கைகளின் மேற்படி வெளிப்பாடுகளில் ஒரு துளியைக்கூட இன்றைய அரசியல் வாதிகளிடம் காணக்கிடைக்க முடியவில்லை. உட்பகை, அதிகாரப் போட்டி, பதவி மோகம், உட்கட்சி சண்டைகள், வன்முறைக் கலாச்சாரங்கள், சொகுசு வாழ்வு, சமூக சிந்தனையின்மை என்பன உலகாதாய சிந்தனைகளில் அவர்கள் ஊறிவிட்டனர் என்பதற்குக் கட்டியங் கூறுகின்றன.

அரசியல் பிரவேசத்தின் மூலம் அதிகாரம் பெற்று தம்மை வளப்படுத்திக் கொள்ளும் அடுத்த முக்கிய விடயமே ஆடம்பர வீடும் அதற்கான பாவனைப் பொருட்கள் ஏற்பாடுகளாகும். நன்கு வடிவமைக்கப்பட்ட வீடு, அதற்குள் அலங்கார மின் விளக்குகள் மற்றும் பல நானாவிதப் பொருட்கள் ஆகியன குறுகிய காலத்திற்குள் அரசியல் அதிகாரம் பெறுபவர் சம்பாதித்து விடுபவைகளாகும். ஆனால், பத்து ஆண்டுகள் ஆட்சி புரிந்த மாமன்னர் நபி (ஸல்) அவர்களின் அரண்மனையையும் பாவித்த தளபாடங்களையும் கொஞ்சம் நிதானமாகச் சிந்திப்போம்.

‘நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன் எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜதாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரல்களால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்துவிட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள். (நூல்: புகாரி 382, 513, 1209)

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தமது வீட்டில் தொழுவார்கள். வீட்டின் சுவர் குறைந்த உயரம் கொண்டதாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவதை நபித்தோழர்கள் காண்பார்கள்’. நூல்: புகாரி 729.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அடையாளம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதியளித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம். அது உங்கள் உடலைப் பாதுகாக்கும் எனக் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று இளைப்பாறி விட்டுச் செல்லக் கூடிய ஒரு பயணிக்கும் அந்த மரத்திற்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவுதான் எனக்கும் இவ்வுலகத்திற்கும் உள்ளது’ எனக் கூறி நிராகரித்து விட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி), நூற்கள்: திர்மிதி 2299, இப்னுமாஜா 4099)

எனவே, பெருமானார் ஸல் அவர்களின் இஸ்லாமிய அரசியல் போக்கில் உலகாதாய சிந்தனைகள் எதுவுமே இழையோடி இருக்க வில்லை என்பதை மேற்படி விளக்கங்களிலிருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் சுயநலத்துடன் கூடிய உலகாதாய சிந்தனைகளை விட்டும் தூரமாகி இருக்கும் அரசியல்வாதிகளாலேயே இஸ்லாமிய அரசியலின் எதிர்பார்ப்புகளுக்கு செயல் வடிவமும் கொடுக்க முடியும் என்பதும் இதன் மூலம் நிரூபணமாகின்றது. நபிகளார் இதற்கு சிறந்ததோர் முன்மாதிரி! அரசியல் வாழ்வில் இணைந்திருப்போர் சுயவிசாரணையுடன் இதை மேற்கொள்வார்களேயானால் நிச்சயம் ஒரு மறுமலர்ச்சியைக் காணலாம்.

புஹாரி 3268 – நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மையா?

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம்

அரபு மூலம்: கலாநிதி உமர் சுலைமான் அல் அஷ்கர்

தமிழில்: இப்னு மஸ்ஊத் ஸலஃபி

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மையா?

நூல்: புஹாரி : 3268   

‘நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு அதன் விளைவு இருந்தது. ஒரு நாள் அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள். மீண்டும் பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் என்னிடம், ‘நான் விளக்கம் கேட்ட விஷயத்தில் இறைவன் விளக்கம் தந்து விட்டான். என்னிடம் இருவர் வந்து, ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். ‘இவருக்கு என்ன நேர்ந்துள்ளது?’ என்று ஒருவர் கேட்டார். ‘சூனியம் செய்யப்பட்டுள்ளது’ என்று மற்றவர் கூறினார். ‘சூனியம் செய்தவன் யார்?’ என ஒருவர் கேட்க, ‘லபீத் பின் அல்அஃஸம்’ என மற்றவர் விடையளித்தார். ‘எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது’ என ஒருவர் கேட்க, ‘சீப்பு உதிர்ந்த தலைமுடி, ஆண் பேரீச்சை மரத்தின் பாளை ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளது’ என்று மற்றவர் கூறினார். ‘எந்த இடத்தில்?’ என்று ஒருவர் கேட்க, ‘தர்வான் எனும் கிணற்றுக்குள்’ என்று மற்றவர் கூறினார்’ என்று கூறினார்கள். பின்னர் அங்கே புறப்பட்டுச் சென்று பின்னர் திரும்பி வந்தனர். அங்குள்ள பேரீச்சை மரங்களின் மேற்பகுதி ஷைத்தானின் தலையைப் போல் இருப்பதாகவும் கூறினார்கள். ‘அதை வெளியேற்றி விட்டீர்களா?’ என்று நான் கேட்டேன். ‘இல்லை, அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்கள் மத்தியில் தீமைகள் பரவுவதை நான் அஞ்சுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்று ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி – 3268, முஸ்லிம் – 2189, வேறுசில மாற்றங்களுடன் புகாரி – 5763, 5765, 5766, 6063, 6391 ஆகிய எண்களில் இடம் பெற்றுள்ளது)

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை என்பதை தெட்டத் தெளிவாக கூறுகிறது. இருப்பினும் சிலர் இன்று தமது அறியாமையின் காரணமாக இதனை மறுத்துப் பிரச்சாரம் செய்து வருவதை அவதானிக்க முடிகிறது. இந்த வழிகேடான சிந்தனையின் பின்னால் கண்மூடித்தனமாக மக்கள் செல்வதை தடுக்கும் முகமாக கலாநிதி உமர் சுலைமான் அல் அஷ்கர் அவர்கள் தமது ஆலமுஸ் ஸிஹ்ரி வஷ்ஷஃவதா என்ற நூலில் இந்த ஹதீஸ் பற்றி எழுதிய பகுதி இங்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (மொ-ர்)

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது உண்மை தான் என்பதைச் சொல்லும் ஹதீஸை மறுக்கக்கூடியவர்களின் வாதங்கள் சுருக்கமாக பின்வருமாறு அமைந்திருக்கின்றன:

1. குறிப்பிட்ட ஹதீஸ் பொய்யானது. இட்டுக்கட்டப்பட்டது.

2. அதன் அறிவிப்பாளர் வரிசையில் கோளாறு உள்ளது.

3. இது ‘ஆஹாத்’ என்ற பிரிவைச் சேர்ந்த ஹதீஸ். எனவே இது உறுதியான கருத்தைத் தரமாட்டாது.

4. சூனியம் செய்வது ஷைத்தானுடைய வேலை. ஷைத்தான்கள் நபிமார்கள் மீது எந்த ஆற்றலும் பெறமாட்டார்கள்.
‘எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை’ (என்று இப்லீசுக்கு அல்லாஹ் கூறினான்). அல்குர்ஆன் 15:42)

5. நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் எனக் கூறிய போது அதை ஏற்க மறுத்தவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறினர்.
‘சூனியம் செய்யப்ட்ட மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்’. (அல்குர்ஆன் 17:47)
இந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால் அவர்களது கூற்று உண்மையாகி விடும்.

இவர்களுக்கு மறுப்பு:

இவர்களுக்கு மறுப்பு பல கோணங்களில் அமையும்.

1. இந்த ஹதீஸ் பொய்யானது, இட்டுக்கட்டப்பட்டது என்ற அவர்களது வாதம் அர்த்தமற்றது. ஏனெனில் இந்த ஹதீஸை இமாம்களான புகாரி, முஸ்லிம் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து அறிவிக்கும் செய்திகள் மிக ஆதாரப்பூர்வமானவைகளாகும். இவர்கள் இருவரும் சேர்ந்து அறிவிக்கும் ஹதீஸ்களில் யாரேனும் குறை காண்பார்களாக இருந்தால் ஹதீஸ் துறையில் அவர் அறிவு குறைந்தவர் என்பதையே அது காட்டும்.

2. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் கோளாறு உள்ளது என்ற அவர்களது வாதம் அதாரமற்றது. புகாரியின் விளக்கவுரை நூலாகிய பத்ஹுல் பாரி, இமாம் நவவியின் முஸ்லிமிற்கான விளக்கம் போன்ற நூற்களில் இந்த ஹதீஸ் பற்றிய விளக்கத்தைப் பார்க்கும் போது, இந்த ஹதீஸிலோ அல்லது அதன் அறிவிப்பாளர் வரிசையிலோ கோளாறுகள் இருப்பதாக எந்த அறிஞரும் சுட்டிக்காட்டியதாகக் காணப்பட வில்லை.
இந்த ஹதீஸை பல ஸஹாபாக்கள் அறிவித்துள்ளார்கள். அவர்களிடமிருந்து நம்பகமான பலர் அறிவித்துள்ளனர். உறுதியான ஒரு விஷயத்தில் தெளிவான சான்றுகள் ஏதுமின்றி எடுத்து வைக்கப்படும் வாதங்கள் செல்லுபடியற்றதாகி விடும்.

3. இந்த ஹதீஸ் ‘ஆஹாத்’ என்ற வகையைச் சேர்ந்தது, அகீதா விஷயத்தில் ஆஹாதான ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற அவர்களது வாதமும் தவறானது.

ஆஹாதான ஹதீஸ்களை அமல்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்வது போன்று அகீதா விஷயத்திலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே சரியான முடிவாகும். இதற்கு மாற்றமான கருத்தைச் சொல்வோர் அவர்களது கூற்றுக்கு வலுவான எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.

அத்துடன் அகீதா விஷயத்தில் ஆஹாதான ஹதீஸ்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்ற கருத்து அண்மைக்காலத்தில் தோற்றம் பெற்ற புதிய கருத்தேயாகும். (இது சம்பந்தமாக மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் ‘அஸ்லுல் இஃதிகாத்’ என்ற எனது நூலைப் பார்க்கவும்)

மேலும் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதைச் சொல்லும் இந்த ஹதீஸ் உறுதியான அறிவைத் தரக்கூடியது. ஒன்றுக்கு மேற்பட்ட ஸஹாபாக்கள் இதனை அறிவித்திருக்கிறார்கள். அவர்களைத் தொட்டும் நினைவாற்றலிலும், நம்பகத் தன்மையிலும் உயர்ந்த கண்ணியமிக்க உலமாக்கள் பலர் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் உறுதியானது என்பதை உணர்த்தும் துணை ஆதாரங்கள் (முதாபஆத், ஷவாஹித்) நிறையக் காணப்படுகிறது. அத்துடன் அது ஸஹீஹான ஹதீஸ் என்பதை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஹதீஸ் கலை அறிஞர்களில் எவரும் இந்த ஹதீஸின் நம்பகத்தன்மை பற்றி எந்தவித விமர்சனங்களும் செய்யவில்லை. முஸ்லிம் உம்மத் ஒருபோதும் வழிகேட்டில் ஒன்று சேர மாட்டாது. இமாம்களான புகாரி, முஸ்லிம் ஆகிய இருவரும் இதனை அறிவித்திருப்பதே இது ஏற்றுக் கொள்ளத் தக்க ஹதீஸ் என்பதற்குப் போதுமான சான்றாகும்.

4. நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை என்று கூறும் இந்த ஹதீஸ் நபித்துவத்தைப் பாதிக்கிறது. நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள பாதுகாப்பு (இஸ்மத்து)க்கு முரண்படுகிறது என்ற அவர்களது வாதம் பொருத்தமானது அல்ல.

எத்தி வைப்பதிலும், மார்க்கத்தைச் சொல்வதிலும் தவறுகள் ஏற்படாமல் நபி (ஸல்) அவர்கள் பாதுகாக்கப் பட்டுள்ளார்கள் என்பது எல்லோராலும் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதேவேளை மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய நோய் நொம்பலங்கள் போன்ற குறைகள் நபிமார்களுக்கும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அவர்களும் மனிதர்களே!

‘நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான் என்று அவர்களின் தூதர்கள் கூறினர்’ (அல்குர்ஆன் 14:11)

சூனியம் செய்யப்பட்ட விஷயம் உண்மையானால் அது நபித்துவத்தைப் பாதிக்கும் என்ற சந்தேகத்திற்கு அதிகமான உலமாக்கள் விளக்கம் தந்துள்ளனர்.

இமாம் மாஸிரி (ரஹ்) அவர்கள் கூறுவதாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

சில பித்அத்வாதிகள் இந்த ஹதீஸை மறுக்கின்றனர். இது நபித்துவத்தைப் பாதிப்பதாகவும் அதில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இவர்கள் கருதுகின்றனர். இந்த நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய கருத்தைத் தரக்கூடிய எல்லாம் பொய்யானவை என்றும் இவர்கள் கூறுகின்றனர். மேலும் இவ்வாறு நடந்திருந்தால் நபி (ஸல்) அவர்கள் (இக்காலப்பகுதியில்) சொன்ன மார்க்க விஷயங்கள் அனைத்தும் சந்தேகத்திற்குறியதாகி விடும். நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களைச் சந்தித்தது போன்று உணர்வார்கள். ஆனால் வஹீ வந்திருக்க மாட்டாது என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

உண்மையில் இவை அனைத்தும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதங்களாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்று அறிவிக்கின்ற செய்திகளில் உண்மையாளர் என்பதை உணர்த்தும் ஆதாரங்கள் மிகத் தெளிவாக உள்ளன. அவ்வாறே அவர்கள் எத்தி வைத்த விஷங்களில் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய பாதுகாப்பு (இஸ்மத்) இருக்கிறது என்பதும் ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதாகும். அவர்களுக்கு நடந்த அற்புதங்கள் (முஃஜிஸா) அவர்கள் உண்மையாளர் என்பதற்கு சாட்சியாக இருக்கின்றன.

சில உலக விவகாரங்களைப் பொறுத்த வரை நபி (ஸல்) அவர்கள் அதற்காக அனுப்பப்பட்டவர்கள் அல்ல. ஏனைய மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்தும் நபியவர்களுக்கும் ஏற்படலாம். எனவே உலக விவகாரங்களில் ஏதாவது ஒன்று நடந்து அதற்கு மாற்றமாக அவர்களுக்குத் தோன்றுவதில் எந்த ஆச்சரியமுமில்லை. மார்க்க விவகாரங்களில் இவ்வாறு அவர்களுக்கு நடக்காது. ஏனெனில் அவர்களுக்கு அதில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேறு சில அறிஞர்கள் இவ்வாறு கூறுவர்: அதாவது இந்த ஹதீஸில் வரும் ‘தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் நினைத்தார்கள்’ என்பதன் விளக்கம் – தாம் தமது மனைவியருடன் உறவு கொண்டதாக நினைப்பார்கள், ஆனால் உண்மையில் அவ்வாறு நடந்திருக்காது.

ஒரு மனிதன் தூக்கத்தில் இருக்கும் போது இவ்வாறு நிறைய நடக்கிறது. அவ்வாறே விளித்துக் கொண்டிருக்கும் போது நடப்பதிலும் எந்த ஆச்சரியமுமில்லை.

இது மிகத் தெளிவாக இப்னு உயைனாவுடைய அறிவிப்பிலும் ஹுமைதியுடைய அறிவிப்பிலும் இடம் பெற்றுள்ளது.

காழி இயாழ் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியம் அவர்களது சிந்தனையையோ பிரித்தறியும் ஆற்றலையோ பாதிக்கவில்லை. மாறாக அவர்களது உடல் நிலையையே அது பாதித்தது என்பது தெளிவாகிறது.
‘இவர் நபியாக இருந்தால் இது பற்றி அறிவிப்பார். இன்றேல் இது அவரது புத்தியைப் போக்கி விடும்’ என்று லபீத்தின் சகோதரி சொன்னாள் என்ற செய்தியை இப்னு சஃது பதிவு செய்துள்ளார். இவ்வறிவிப்பில் உள்ளது போல் நபி (ஸல்) அவர்கள் இது பற்றி அறிவித்தார்கள் என்பதை மேற்க்குறிப்பிட்ட ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இன்னும் சில உலமாக்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தாம் செய்யாததைச் செய்ததாக நினைத்தார்கள் என்பது எப்படிப்பட்ட செயலைச் செய்ததாக நினைத்தார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமென்பதை வேண்டி நிற்காது. மாறாக அது உள்ளத்தில் உதித்த ஒரு எண்ணமே தவிர வேறில்லை என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஹதீஸை மறுக்கக் கூடியவர்களுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.

காழி இயாழ் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

செய்யாததைச் செய்ததாக நினைத்தார்கள் என்பதன் அர்த்தம் ஏற்கனவே அவர்கள் செய்து வந்த – மனைவியருடன் இல்லறத்தில் ஈடுபடல் என்ற – விஷயத்தில் ஈடுபடச் செல்வார்கள். மனைவியரை நெருங்கியதும் அவர்களால் அது முடியாமல் போய்விடும்.

வேறு ஓர் அறிவிப்பில் ‘அவர்களது பார்வையை அவர்களால் நம்ப முடியவில்லை’ என்றுள்ளது.

அதாவது ஒன்றை அவர்கள் பார்த்தால் அதன் உண்மை நிலைக்கு மாற்றமாகத் தென்படும். அதை உற்று நோக்கினார்களாக இருந்தால் அதன் உண்மை நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்வார்கள். இவை எல்லாவற்றையும் உறுதிப்படுத்தக் கூடிய விஷயம் என்னவென்றால், சூனியம் வைக்கப்பட்ட காலப்பகுதியில் அவர்கள் ஏதாவது ஒன்றைச் சொல்லி அதற்கு மாற்றமாக எதுவும் நடந்ததாக எந்த ஆதாரமும் கிடையாது.

முஹல்லப் என்ற அறிஞர் பின்வருமாறு கூறுகிறார்:

ஷைத்தான்களை விட்டு நபி (ஸல்) அவர்கள் பாதுகாக்கபட்டுள்ளனர் என்பது ஷைத்தான்கள் அவர்களுக்குச் சதி செய்ய முயற்சிப்பார்கள் என்பதை மறுக்காது. நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவர்களது தொழுகையை வீணாக்க முயற்சி செய்தான் என்ற ஸஹீஹான ஹதீஸ் இதனை உறுதி செய்கிறது. அவ்வாறு தான் சூனியத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியம் அவர்களது பணிக்கு எந்த விதத்திலும் இடையூறாக அமைய வில்லை. ஏனைய நோய்களைப் போன்றே அதுவும் இருந்தது. சூனியத்தின் காரணமாக ஒன்றைச் சொல்வது அல்லது செய்வது சிரமமாக இருந்தது அல்லது சொற்ப நேரத்திற்கு ஏதாவது ஒன்று நடப்பது போன்றிருக்கும். உடனே அந்த உணர்வு மாறிவிடும். ஷைத்தான்களின் சதிகளை அல்லாஹ் செயலிளக்கச் செய்து விடுவான்.

நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது ஒருவகை நோயேயன்றி வேறில்லை என்று இப்னுல் கஸ்ஸார் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார். அதற்கு ஆதாரமாக ‘என்னைப் பொறுத்த வரை அல்லாஹ் எனக்கு சுகத்தைத் தந்து விட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆனால் இவர் எடுத்து வைக்கும் ஆதாரம் அவ்வளவு வலுவானதாகத் தென்படவில்லை. எனினும் அவரது கூற்றுக்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடலாம்.

‘நபி (ஸல்) அவர்கள் சுற்றி வருவார்கள். ஆனால் என்ன வருத்தம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை’ என ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (பைஹகீ)

‘நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். மனைவியர், உணவு, பானம் என்பவற்றில் நாட்டம் இல்லாமல் இருந்தார்கள். அப்போது அவர்களிடம் இரண்டு மலக்குகள் வந்தார்கள்’ என்று இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள் (இப்னு ஸஃது) (ஃபத்ஹுல் பாரி 10-227)

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது நபித்துவத்தைப் பாதிக்கும் என்ற பித்அத்வாதிகளின் சந்தேகத்திற்குப் பல உலமாக்கள் மறுப்புக் கூறியுள்ளனர். அவர்களில் காழி இயாழும் ஒருவர் அவர் பின்வருமாறு கூறுகிறார்:

அறிந்து கொள்ளுங்கள்! இந்த ஹதீஸ் ஸஹீஹானது. இமாம்களான புகாரி, முஸ்லிம் இருவரும் சேர்ந்து இதனை அறிவித்திருக்கிறார்கள். வழிகேடர்கள் இந்த ஹதீஸில் குறை காண்கின்றனர். அவர்களது வழிகெட்ட சிந்தனையால் மார்க்கத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணப் பார்க்கிறார்கள்.

எந்த குழப்பங்களும் இல்லாமல் அல்லாஹ் மார்க்கத்தைத் தூய்மைப் படுத்தியுள்ளான். அவ்வாறே நபி (ஸல்) அவர்களையும் குழப்பங்களிலிருந்து அல்லாஹ் தூய்மைப்படுத்தியுள்ளான்.

சூனியம் ஒரு நோயே தவிர வேறில்லை. ஏனைய நோய்கள் போன்று இதுவும் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்படுவதில் எந்த தடையுமில்லை. அது அவர்களது நபித்துவத்தை எந்தவகையிலும் பாதிக்காது.

நபி (ஸல்) அவர்கள் தாம் செய்யாததைச் செய்ததாக நினைத்தார்கள் என்பது அவர்களது பணியில் எந்தக் களங்கத்தையும் ஏற்படுத்தாது. அதனால் அவர்களது நம்பகத்தன்மையும் பாதிக்கப்பட மாட்டாது. ஏனெனில் இந்த விஷயங்களில் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய பாதுகாப்பு இருக்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. அத்துடன் முஸ்லிம் உம்மத்தும் இந்த விஷயத்தில் ஏகோபித்த முடிவுடன் இருக்கிறது. உலக விவகாரங்களில் அவர்களுக்கு ஏதும் ஏற்படுவது என்பது ஏனைய மனிதர்களைப் போல் சாதாரணமான ஒன்றாகும். ஏனெனில் உலக விவகாரங்களை வைத்து அவர்கள் சிறப்பிக்கப் படவுமில்லை. அதற்காக அனுப்பப்படவுமில்லை.

யதார்த்தத்திற்கு மாற்றமாக அவர்கள் ஒன்றை நினைத்து பின்னர் அதன் உண்மை நிலை அவர்களுக்குத் தெரிய வருவது என்பது ஆச்சரியமான ஒன்றல்ல…. (ஷரஹுஸ் ஷிஃபா 4-439)

5. சூனியம் ஷைத்தானுடைய வேலை. அல்லாஹ்வுடைய அடியார்கள் மீது அவன் ஆற்றல் பெற மாட்டான் என்ற அவர்களது வாதத்திற்குப் பின்வருமாறு பதில் கூறலாம்.

அல் ஹிஜ்ர் 42 ம் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவதன் அர்த்தம் அவர்களை வழிகெடுக்க அவன் ஆற்றல் பெறமாட்டான் என்பதைத் தான்.

இதற்குச் சான்றாக பின்வரும் வசனம் காணப்படுகிறது. ‘உனது கண்ணியத்தின் மீது ஆணையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மையான உனது அடியார்களைத் தவிர அவர்கள் அனைவரையும் வழி கெடுப்பான், என்று (ஷைத்தான்) கூறினான்’. (38:82,83)

அஃதல்லாமல் அவர்களது உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்துதல் என்பதை இந்த வசனங்கள் மறுக்காது. மாறாக இது சாத்தியமானதே என்பதை உறுதிப்படுத்தக் கூடிய பல வசனங்கள் அல்குர்ஆனில் காணப்படுகின்றன.

ஐயூப் (அலை) அவர்கள் பிரார்த்திக்கும் போது, ‘ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்’ (38:41) என்று கூறினார்கள்.

மூஸா (அலை) அவர்கள் கிப்தியைக் கொலை செய்த பின்னர், ‘இது ஷைத்தானின் வேலை …’ (28:16) என்று கூறினார்கள்.

மூஸா (அலை) அவர்களுக்கு பிர்அவ்னுடைய சூனியக்காரர்கள் செய்ததை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
‘உடனே அவர்களின் கயிறுகளும் கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போன்று அவருக்குத் தோற்றமளித்தது’ (20:66)

6. இந்த ஹதீஸ் அல்குர்ஆனுடன் முரண்படுகிறது. இது இணைவைப்பாளர்களின் கூற்றை உண்மைப்படுத்துவதாக உள்ளது என்ற அவர்களின் வாதத்திற்கு நாம் கூறும் மறுப்பு:

இந்த ஹதீஸை நிதானமாக அவர்கள் சிந்திப்பார்களாக இருந்தால் இது முழுக்க முழுக்க அல்குர்ஆனுடன் ஒத்துச் செல்வதைக் காண்பார்கள்.

பிர்அவ்னுடைய சூனியக்காரர்கள் கயிறுகளைப் போட்ட நேரத்தில் அவை சீறுவது போன்று திட உறுதி பூண்ட ரசூல்களில் ஒருவராகிய மூஸா (அலை) அவர்களுக்குத் தோற்றமளித்தது.

‘(அவ்வேளையில்) மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்’ (20:67)

சூனியம் நபிமார்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அல்குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறுகிறது.
இதனால் நபி (ஸல்) அவர்களது மனோ நிலை பாதிக்கப்பட்டது என்ற அவர்களது வாதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஏனெனில் நிலமை அந்த அளவுக்குச் செல்ல வில்லை. அத்துடன் வஹீக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்களுக்கு இந்த விஷயத்தில் அல்லாஹ்விடமிருந்து உத்திரவாதமும் பாதுகாப்பும் உள்ளது என்பதை அல்குர்ஆனும் ஹதீஸும் உணர்த்தி நிற்கின்றன.

‘சூனியம் செய்யப்பட்ட மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள்’ (17:47) என்று இணைவைப்போர் நபி (ஸல்) அவர்கள் பற்றிக் கூறியது என்னவெனில், நபி (ஸல்) அவர்களது சொல் செயல் அனைத்துமே பைத்தியத்தின் கற்பனையின் அடிப்பமையில் அமைந்ததே என்பதாகும். மேலும் அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் அல்ல. அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்படவுமில்லை என்பது தான் அவர்கள் கூறியதன் அர்த்தம்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற விஷயம் இணைவைப்போரின் இந்தக் கூற்றை எந்த வகையிலும் உண்மைப் படுத்துவதாகவோ அதனோடு ஒத்துச் செல்வதாகவோ இல்லை.

புஹாரி 6224 – தும்மலின் ஒழுங்குகள்

தும்மலின் ஒழுங்குகள்

அபூஜமீலா

நூல்: புஹாரி 6224    

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:

 حَدثنا مالك بن إسماعيل حدثنا عبد العزيز بن أبي سلمة أخبرنا عبد الله بن دينار عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا عطس أحدكم فليقل الحمد لله وليقل له أخوه أو صاحبه يرحمك الله فإذا قال له يرحمك الله فليقل يهديكم الله ويصلح بالكم

நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள், (இதைக் கேட்கும்) உங்கள் சகோதரர் அல்லது நண்பர், யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக யர்ஹமுக்கல்லாஹ் என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும் (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையை சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்விடமிருந்து ஏராளமான நன்மைகளை தமது உம்மத்தினர் பரிசாக பெற வேண்டும் என்பதிலும், முஸ்லிம் சமுதாயத்தில் உறவுகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளவு கடந்த அக்கறை காட்டினார்கள்.

ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ்வின் நாட்டப்படி எது நடந்தாலும் அத்தனையும் நன்மைகளாக பதிவு செய்யப்படுகின்றது, அவனுக்கு நல்லது நடந்தால் அதை பொருந்திக் கொண்டு அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான், ஒரு தீயது நடந்தால் அதையும் பொறுந்திக் கொண்டு பொறுமையோடு இருக்கின்றான், இந்த இரண்டு விஷயங்களும் முஃமினுக்கு நன்மைகளாகவே அமைகின்றன.

சர்வசாதாரண நிகழ்வுகளான, தும்மும் போதும் கொட்டாவி விடும் போதும் கூட எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் நம்மிடம் உள்ளன. இவையும் அல்லாஹ்விடம் நன்மைகளை பெற்றுத் தருவதோடு மற்றவர்களோடு உறவுகளை பலப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கின்றன.
நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள், (இதைக் கேட்கும்) உங்கள் சகோதரர் அல்லது நண்பர், யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக யர்ஹமுக்கல்லாஹ் என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும் (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையை சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 6224.

இந்த ஹதீஸில் ஒருவர் தும்மும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற நாகரீகத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தருகின்றார்கள்.

நட்பையும் பிறர் நலம் நாடும் குணத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு நல்வாழ்த்து தான் இது. இது இவ்வுலகுக்கும் மறுமைக்கும் உரிய சிறந்ததைத் தருகின்றது, அல்லாஹவின் அருளை இது ஊர்ஜிதம் செய்கிறது. அதற்கு பதிலாக நாம் அதையே திருப்பிச் சொல்ல வேண்டும்.

இவ்வுலகத்தில் ஒருவர் இறைவனின் வழிகாட்டுதலைப் பெற்றால் அவர் தவறுகளிலிருந்து விலகி இருப்பார். மனம் திருப்திப்படுவதையும் ஆறுதல் அடைவதையும் அவர் உணருவார்.

இப்படிப்பட்ட பரிமாற்றம் நிகழும் போது அதாவது இயல்பாகவே மனதோடு தொடர்புள்ள தும்மல் போன்ற நிகழ்வுகள் நிகழும் போது சமூகத்திற்குள் நல்லுறவுகள் ஏற்பட வழி பிறக்கும்.

இங்கே ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்வது முக்கியமாகும். அதாவது இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் சொல்வதற்கான வாசகங்களை நபி (ஸல்) அவர்கள் ஒருமையில் கற்றுத் தந்துள்ளார்கள், இந்த முறை தான் அம்மக்களிடையே மிகவும் பிரபல்யமான நடைமுறையாகும். மற்றொரு ஹதீஸில் அவ்வாசகங்கள் பன்மையில் இடம் பெற்றுள்ளன, இது மொழி அடிப்படையில் மிகப் பொருத்தமானதாகும்.

பன்மையில் வாசகங்களை உபயோகிக்கும் போது நம்மைக் கண்காணிக்கும் வானவர்களையும் உள்ளடக்கிக் கொள்வதாக இதைச் சொல்ல இயலும்.

இவ்வாறு தும்மும் ஒருவரிடம் ‘அல்லாஹ் உங்களுக்கு அருள்புரியட்டும்’ என்று சொல்லும் போது, அது அவரையும் அவரோடு இருக்கும் வானவர்களையும் சேர்த்தே சொல்கிறார் என்பது பொருள். அதோடு அதற்கான பதிலும் வானவர்களையும் அதோடு தொடர்புள்ளவர்களையும் உள்ளடக்கிய வகையில் பன்மையில் இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வேறொரு அறிவிப்பில், ‘உங்களில் ஒருவர் தும்மும் போது, அல்ஹம்து லில்லாஹ் (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மலக்குகள், ரப்பில் ஆலமீன் ((அவன்) அகில உலகத்தின் இரட்சகன்) என்று கூறுவார்கள். ரப்புல் ஆலமீன் என்பதை தனது முந்தைய வாசகத்தோடு இணைத்துக் கூறினால் மலக்குகள், ‘அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக!’ என்று கூறுவார்கள்’. (ஆதாரம் புஹாரியின் அதபுல் முஃப்ரத், தப்ரானி)

இதில் மலக்குகள் முதன் முதலில் சொல்லும் வாசகம் தும்மலுக்குப் பிறகு ஒருவர் சொல்ல வேண்டிய வார்த்தையை முழுமைப்படுத்துவதற்காக ஆகும்.

இந்த ஹதீஸ் அல்லாஹ்வை புகழும் போது முழுமையாக புகழ வேண்டியதன் அவசியத்தை சொல்கிறது. அகில உலகத்திற்கும் அல்லாஹ்வே இறைவன் என்பதை ஒத்துக் கொண்டு அவ்வாறே புகழ வேண்டும் என்பதைச் சொல்கிறது. அவ்வாறு புகழ்ந்தால் தான் மலக்குகள் அவருக்கு அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள்.

இது கேட்கக் கூடியவர்களின் கவனத்தைக் கவருவதோடு தொடர்பு கொண்டது என்று நபி (ஸல்) அவர்கள் பல சமயங்களில் விளக்கம் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து இன்னொரு தும்மல் ஒழுங்கையும் நாம் கற்றுக் கொள்கிறோம். அதாவது தும்மலுக்குப் பிறகு அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லாதவருக்கு அல்லாஹ்வின் அருளை பிரார்த்திக்க வேண்டியதில்லை. இதை கீழ் வரும் ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களுக்கருகில் இருவர் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என) மறுமொழி கூறினார்கள். இன்னொருவருக்கு மறுமொழி கூற வில்லை. அப்போது அந்த மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு மறுமொழி கூறினீர்கள். எனக்கு மறுமொழி கூறவில்லையே! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) இவர் (தும்மியவுடன்) (அல்ஹம்துலில்லாஹ் என்று) இறைவனைப் புகழ்ந்தார். நீர் (அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி) இறைவனைப் புகழவில்லை. எனவே இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். உமக்கு மறுமொழி பகரவில்லை என்று பதிலளித்தார்கள். (புஹாரி – 6225)

மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: தும்மலை அல்லாஹ் விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான்.

ஒருவர் தும்மியதும் இறைவனைப் புகழ்ந்தால் அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இறைவனின் அருளை வழங்குமாறு அவனை பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அந்த ஹதீஸின் தொடர்ச்சியாக, ‘கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வெளிப்படுவதாகும். ஆகவே முடிந்த வரை அடக்கிக் கொள்ள வேண்டும். ஹா! என்று ஒருவர் சப்தம் செய்தால் அவரைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்’ (புஹாரி – 6226, அஹ்மது)

அல்லாஹ் எதை விரும்புகிறான் எதை வெறுக்கிறான் என்பது செயல்களை வைத்து அல்ல, அது ஏற்படுத்தும் விளைவுகளை பொருத்தது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தும்மல் என்பது ஒருவரை எந்நேரமும் தயாராக இருக்கச் செய்கிறது. தும்மியவுடன் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையான அல்லாஹ்வைப் புகழச் செய்கிறது, அதோடு மற்றவர்களின் துஆவையும் பெற்றுக் கொள்ளச் செய்கிறது. இவை அனைத்தும் நல்லதும் நன்மையை அடைந்து கொள்வதுமாகும்.

அதனால் அதை அல்லாஹ் விரும்புகிறான். அதோடு கொட்டாவி சோம்பலையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது. கொட்டாவி விடும் போது அம்மனிதனின் மானம் கப்பலேற்றப்படுவதோடு, இது அவரைப் பார்த்து ஷைத்தானை சிரிக்க வைக்கிறது.

அதனால் நபி (ஸல்) கொட்டாவியை முடிந்த வரை தடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள். நம்மால் தடுக்க முடியாத போது வாயை கைகளால் மூடிக்கொள்ள வேண்டும்.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது, நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸை நடைமுறைப்படுத்துவது நம் மீது கடமையா? அல்லது பரிந்துரையா?

பல மார்க்க அறிஞர்கள் இதை கடமையாகவே கருதுகிறார்கள், ஏனென்றால் அந்த ஹதீஸ், அதை வலியுறுத்தக்கூடிய விதத்தில் சொல்கிறது. மற்ற அறிஞர்கள் கூறும் போது, நம்மைச் சுற்றி இருப்பவர்களோ அல்லது ஒருவரோ இதை நிறைவேற்றினால் போதுமானது, இந்த கடமையை நிறைவேற்றியதாக கருதப்படும்;, யாருமே இதை செய்யாது விட்டால் நாம் அனைவரும் அந்த குற்றத்திற்காக அல்லாஹ்வால் தண்டிக்கப்படுவோம் என்று கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவைகள், பொதுவாக அன்றாடம் நிகழக்கூடியவைகளாகும், அவை ஒவ்வொரு முந்தைய முஸ்லிமாலும் கடைப்பிடிக்கப்பட்டது, அதோடு அவர்களின் நடைமுறை பழக்கவழக்கமாகவும் மாறியது.
எவர்கள் மார்க்க கல்வியைப் பெற்றார்களோ அல்லது தும்மிய பிறகு அல்லாஹ்வை புகழ கற்றுக் கொண்டார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெறுவதற்காக அவனைப் புகழ்கிறார்கள், மற்றவர்கள் அல்லாஹ்வின் அருளை அவருக்காக பெற்றுத்தருகிறார்கள்.

முந்தைய முஸ்லிம் சமுதாயத்திலிருந்து சில உதாரணங்களை சொல்வதானால், முஆவியா (ரலி) யின் ஆட்சியின் போது கடல் பயணம் மேற்கொண்ட சில முஸ்லிம்களின் சம்பவத்தைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

படகுகள் கடல் கரையை வந்தடைந்தன. ஒரு படகில் இருந்தோர் நபி (ஸல்) அவர்களின் தோழரான அபூ அய்யூப் அல்அன்சாரி அவர்களை விருந்துக்கு அழைத்தார்கள். அவர் அழைப்பை ஏற்று வருகையும் தந்தார், அவர் மேலும் சொன்னார், ‘விருந்துக்கு என்னை அழைத்தீர்கள், ஆனால் நான் நோன்பு வைத்திருக்கிறேன். இருந்தாலும் நான் இங்கே வந்திருக்கிறேன் ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், ‘ஆறு விஷயங்களில் ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்கு பதிலளிக்க வேண்டும். அதில் எதையேனும் விட்டுவிட்டால் அவர் தனது சகோதரனுக்கு செய்யும் கடமையை விட்டுவிட்டார். அவைகளாவன, அவரை சந்திக்கும் போது அவருக்கு ஸலாம் சொல்வது, விருந்துக்கு அழைக்கும் போது பதிலளிப்பது, தும்மும் போது அவருக்கு அருள் புரியுமாறு அல்லாஹ்வை பிரார்த்திப்பது, நோய்வாய்ப்பட்டிருப்பின் சென்று அவரை சந்திப்பது, அவர் இறக்கும் போது அவரது ஜனாஸாவின் அடக்கத்தில் கலந்து கொள்வது, ஆலோசனைகள் தேவைப்படும் போது தனது சரியான ஆலோசனையை வழங்குவது’.

மற்றுமொரு அறிவிப்பில், ‘எங்களிடம் நல்ல நகைச்சுவையாக பேசும் ஒருவர் இருந்தார், அவர் எம்மோடு சேர்ந்து உணவருந்தும் ஒருவரை நோக்கி, ‘அல்லாஹ் உமக்கு நன்மையை தருவானாக!’ என்று பலதடவை கூறியதும் அவர் கோபமடைந்தார். நகைச்சுவை மன்னன், அபூ அய்யூப் அவர்களை சந்தித்து, நன்மைகளை அதிகம் அவர் அடைய வேண்டும் என்பதற்காக பிரார்த்தித்ததால் கோபமடையும் ஒருவரிடம் நான் எவ்வாறு நடந்து கொள்வது? என்று கேட்டார். அதற்கு அபூ அய்யூப் அவர்கள் கூறினார்கள், நல்ல விஷயத்தை ஏற்றுக் கொள்ளாதவரிடம் அதற்கு எதிர்மறையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் சொல்வதுண்டு, அதனால் நீங்கள் எதிர்மறையாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். வெளியூர் சென்று விட்டு திரும்பிய அம்மனிதரிடம் நகைச்சுவையாக பேசக்கூடியவர் சென்று, ‘அல்லாஹ் உமக்கு கெட்டதை பரிசாக தருவானாக!’ என்றார். அதற்கு அவர் சிரித்துக் கொண்டு, ‘உம்முடைய தந்திரங்களை விட்டுவிட மாட்டீரா?’ என்று கூறினார். (அல்புஹாரியின் அதபுல் முஃப்ரத்)

புஹாரி 2306 – கடனைக் கேட்பவருக்கான உரிமை

மாமனிதர் (பாகம் – 8)

அபூமுஹம்மத்

நூல்: புஹாரி 2306,

அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்:

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கடன் கொடுத்திருந்த ஒரு மனிதர் அதை வசூலிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது கடுமையான முறையில் அவர் நடந்து கொண்டார். நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அவரை விட்டு விடுங்கள்! எனென்றால் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாகப்) பேசும் உரிமை உள்ளது’ எனக் கூறினார்கள். மேலும் தம் தோழர்களிடம் ‘அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்குக் கொடுங்கள்’ எனக் கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! அதைவிடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் உள்ளது’ என்று நபித் தோழர்கள் கூறினார்கள். ‘அதையே அவருக்குக் கொடுங்கள் ஏனெனில் அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவராவார்’ எனக் கூறினார்கள்.

விளக்கம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் மாபெரும் ஆட்சித்தலைவராக இருந்த கால கட்டத்தில் நடந்த நிகழ்ச்சி இது.

மாபெரும் ஆட்சித்தலைவர் ஒருவர் தனிநபர் ஒருவரிடம் அற்பமான தொகையைக் கடன் வாங்குவது என்பது வரலாற்றில் இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

எல்லாவிதமான அதிகாரமும் தன் கைவசத்தில் இருந்த போது அரசாங்கத்திலும் நிதிகள் குவிந்திருந்த போது தமக்காக அதைத் தொடாமல் தம் தேவைக்குத் தமது சொந்தப்பணத்தையே நபிகள் நாயகம் (ஸல்) பயன்படுத்தி வந்தனர்.

தனி நபர் ஒருவரிடம் ஒட்டகத்தைக் கடனாக வாங்கியதற்கு இதுவே காரணம்.

கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டு வந்தவர் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி கடனைத் திருப்பிக் கேட்கிறார். நபித்தோழர்கள் அவர்மேல் ஆத்திரப்படும் அளவுக்கு கடுமையாக நடந்து கொள்கிறார்.

ஆட்சியில் உள்ளவர்களுக்கு யாரேனும் கடன் கொடுத்;தால் அதைத் திருப்பிக் கேட்க அஞ்சுவதைக் காண்கிறோம். அச்சத்தைத் துறந்து விட்டு திருப்பிக் கேட்கச் சென்றாலும் ஆட்சியில் உள்ளவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அப்படியே வாய்ப்புக் கிடைத்தாலும் ஏதோ பிச்சை கேட்பது போல் கெஞ்சித்தான் கொடுத்த கடனைக் கேட்க முடியும். ஆட்சியிலுள்ளவர்களால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் என்று அச்சத்தினால் தயங்கித் தயங்கி தனது வறுமையைக் கூறி கூழைக் கும்பிடு போட்டுத்தான் கடனைக் கேட்க முடியும்.

கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி கடனை வசூலிப்பது ஒருபுறமிருக்கட்டும் சாதாரண முறையில் கூட கேட்க முடியாது.

ஆட்சியாளர்களின் தவறுகளை விமர்சிக்க சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்கள் பத்திரிக்கைகள் இருக்கக்கூடிய இன்றைய காலத்தில் கூட அதிகார வர்க்கத்திடம் கொடுத்த கடனைத் திரும்பக் கேட்க முடிவதில்லை.

ஜனாதிபதி பிரதமர் மாநில முதல்வர்கள் அமைச்சர்கள் போன்றவர்களை விட்டு விடுவோம். சாதாரண சட்டமன்ற உறுப்பினரிடம் கடுமையான சொற்களைப் பயன்படுத்திக் கடனை வசூலிக்க முடியாது.

கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினால் கொடுத்த கடன் திரும்ப வராது என்பது மட்டுமின்றி அடி உதைகளையும் சந்திக்க வேண்டிவரும்.

அகில உலகும் அஞ்சி நடுங்கக் கூடிய மாபெரும் வல்லரசின் அதிபராக இருந்த நபிகள் நாயகத்தைக் கடன் கொடுத்தவர் சர்வ சாதாரணமாகச் சந்திக்கிறார். கொடுத்த கடனைக் கேட்கிறார். அதுவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறார். உலக வரலாற்றில் எந்த ஆட்சியாளரிடமாவது யாராவது இப்படி கேட்க முடியுமா?

இவ்வாறு கடுஞ்சொற்களை அவர் பயன்படுத்தும் போதும் ஏராளமான மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தும் போது ‘தாம் ஒரு இறைத்தூதர் மாமன்னர் மக்கள் தலைவர்’ என்பதையும் இதனால் தமது கௌரவம் பாதிக்கப்படும் என்பதையும் அந்த மாமனிதர் எண்ணிப்பார்க்க வில்லை.

தமது நிலையிலிருந்து அதைச் சிந்திக்காமல் கடன் கொடுத்தவரின் நிலையிலிருந்து சிந்திக்கிறார்கள். வாங்கிய கடனை தாமதமாக திருப்பிக் கொடுப்பதால் கடன் கொடுத்தவருக்கு ஏற்படக் கூடிய சங்கடங்களையும் சிரமங்களையும் மனஉளச்சல்களையும நினைத்துப் பார்க்கிறார்கள். இதனால்தான் ‘கடன் கொடுத்தவருக்கு அவ்வாறு பேசும் உரிமை உள்ளது’ எனக் கூறி அவரைத் தாக்கத் துணிந்த தம் தோழர்களைத் தடுக்கிறார்கள்.

கொடுத்த கடனை முறைதவறி கேட்கும் போது ‘ஒழுங்காகக் கேட்டிருந்தால் தந்திருப்பேன். நீ கேட்ட விதம் சரியில்லாததால் தரமாட்டேன்’ என்று எத்தனை பேர் கூறுவதை நாம் அறிகிறோம். நாமும் கூட அதை நியாயம் எனக் கூறிவிடுகிறோம். ‘ஒழுங்காக கேட்காததால் இவர் கடனைத் திருப்பித் தராதது சரிதான்’ என்று தீர்ப்பும் வழங்கி விடுகிறோம்.

கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி சாதாரணமானவர்களிடம் கூட கடனை வசூல் செய்யக் கூடாது. அதனால் அவனது கௌரவம் பாதிக்கப்படுகிறது என மொத்த உலகமும் நினைக்கிறது.

அப்படியானால் அகில உலகும் புகழக்கூடிய மகத்தான மதிப்பைப் பெற்றிருந்த நபிகள் நாயகத்தின் கௌரவம் எந்த அளவு பாதிக்கப்படும்? இது எவ்வளவு பெரிய மரியாதைக் குறைவை ஏற்படுத்தியிருக்கும்?

தமது மரியாதையை விட மற்றவரின் உரிமையைப் பெரிதாக மதித்ததால் தான் ‘அவர் கடுஞ்சொல்லைப் பயன்படுத்தும் உரிமை பெற்றிருக்கிறார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி அந்த வார்த்தையை சகித்துக் கொள்கிறார்கள்.

மேலும் உடனடியாக அவரது கடனைத் தீர்க்கவும் ஏற்பாடு செய்கிறார்கள். கடனாக வாங்கிய ஒட்டகத்தை விட வயது கூடிய ஒட்டகம் தான் தம்மிடம் இருக்கிறது என்பதை அறிந்த போது அதையே அவருக்குக் கொடுக்க உத்தரவிடுகிறார்கள்.

கடுஞ்சொற்களை என்னதான் சகித்துக் கொண்டாலும் இத்தகையவருக்கு வாங்கிய கடனைவிட அதிகமாகக் கொடுக்க யாருக்கும் மனம் வராது. முடிந்தவரைக் குறைவாகக் கொடுக்கவே உள்ளம் தீர்ப்பளிக்கும்.

ஆனால் இந்த மாமனிதரோ தாம் வாங்கிய கடனைவிட அதிகமாகக் கொடுக்குமாறு உத்தரவிட்டதுடன் இவ்வாறு நடப்பவர்களே மனிதர்களில் சிறந்தவர் எனவும் போதனை செய்கிறார்கள்.

இதனால் தான் முஸ்லிமல்லாத நடுநிலையாளர்களும் இவரை மாமனிதர் எனப் போற்றுகின்றனர்.

புஹாரி 2035 – மனிதனின் ரத்த நாளங்களில் ஷைத்தான்

மாமனிதர் (பாகம் – 7)

அபூமுஹம்மத்

நூல்: புஹாரி 2035,

அன்னை ஸஃபிய்யா (ரலி) கூறுகிறார்:

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில் (இஃதிகாப்) தங்கியிருப்பார்கள். நான் அவர்களைச் சந்திக்கச் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பேன். (ஒரு நாள் அவர்களை சந்தித்துவிட்டு) நான் புறப்பட எழுந்த போது என்னை வழியனுப்புவதற்காக பள்ளியின் வாசல்வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தனர். அப்போது மதீனாவாசிகளான இருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு கடந்து சென்றனர். அவர்களிருவரிடமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அப்படியே நில்லுங்கள்’ என்று கூறிவிட்டு ‘இவர் (எனது மனைவியாகிய) ஸஃபிய்யா ஆவார்’ என்று கூறினார்கள். அதைக்கேட்ட இருவரும் கவலையடைந்தனர். ஆச்சரியத்துடன் ‘அல்லாஹ்வின் தூதரே!’ என்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஷைத்தான் ஊடுருவியுள்ளான். எனவே அவன் உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடுவானோ என்று நான் அஞ்சுகிறேன்’ எனக் கூறினார்கள்.

விளக்கம்:

பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எவருக்கும் பதில் கூறத்தேவையில்லை என்றும், தமது தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு களங்கமிருந்தாலும் அதுபற்றி கேள்வி கேட்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்றும் நினைத்துச் செயல்படுவதைக் காண்கிறோம்.

தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி மக்கள் சம்மந்தப்பட்ட – மக்களைப் பாதிக்கின்ற – விஷயங்கள் குறித்துக் கூட யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்று தலைவர்கள் நினைக்கின்றனர்.

இதன் காரணமாகத்தான் ஹவாலா பேர்வழிகள் கூட ஆட்சிபீடத்தில் இன்னமும் அமர்ந்திருக்கிறார்கள். அமரத் துடிக்கிறார்கள். மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் முதல்வர் 100 கோடி ரூபாய் செலவு செய்து தமது வளர்ப்பு மகனுக்குத் திருமணம் செய்து வைத்ததற்கும், ஒரு முதல்வர் வீட்டுத் திருமணம் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கும் என்று அறிக்கை விட்டதற்கும் காரணம் இதுதான்.

முதல்வரின் தோழி தமிழகத்தையே முயைகேடாகத் தனதாக்கிவருவதை அறிவு ஜீவிகள் கண்டிக்கும் போது அவருக்கு ஆதரவாக முதல்வர் அறிக்கை விட்டதற்கும் இதுதான் காரணம்.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் இலவசச் சீருடைகளைக் கொள்ளையடித்துவிட்டு அமைச்சராக நீடிப்பதற்கும், மயானக் கொட்டகையில் கூட ஊழல் செய்துவிட்டு பதவியில் தொடர்வதற்கும் கூட இதுதான் காரணம்.
மக்களைப் பாதிக்கின்ற பொதுவான விஷயங்களிலேயே மக்களைப்பற்றி கவலைப்படாதவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை இதை விட மோசமானதாகவே உள்ளது.

திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வது, சின்ன வீடுகள் வைத்துக் கொள்வது ஆகியவை தலைவர்களுக்குப் பெருமை சேர்க்கும் காரியங்களாகி விட்டன.

அரசியல், சமுதாயத் தலைவர்களின் நிலை இதுவென்றால் மதத்தலைவர்களின் நிலைமை இதைவிட மோசமானதாகவே உள்ளது. மதத்தலைவர்களாக இருப்போர் ஆடம்பரமான அரண்மனைகளில் வசித்தாலும், கோடிகோடியாகக் குவித்தாலும், காமக்களியாட்டத்தில் மூழ்கிக் கிடந்தாலும் இதற்கெல்லாம் மக்களுக்கு பதில் கூற வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் மதத்தலைமையை அவர்கள் துறந்து விடுவதில்லை. மக்களும் அவர்களை விரட்டிவிடுவதில்லை.

இத்தகைய அரசியல், சமுதாய மற்றும் மதத்தலைவர்களைப் பார்த்துச் சலித்து விரக்தியடைந்துள்ள மக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வரலாற்றுத் துணுக்கில் ஆறுதலும் படிப்பினையும் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருட்டில் தம் மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் பிரட்சனை இல்லை. ஒருவர் தம் மனைவியுடன் பேசிக் கொண்டிருப்பது தவறானதுமன்று. இதனால் தனி மனித ஒழுக்கத்திற்கு பங்கம் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் தம்மீது சந்தேகத்தின் சாயல் கூடப் படியக்கூடாது என்பதில் அவர்களுக்கு அதிகமான அக்கரை இருந்தது.

அவர்களைக் கடந்து சென்ற நபித்தோழர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி ஒருபோதும் தவறாக எண்ணக் கூடியவர்களல்லர். ஆனாலும் அவர்களை நிறுத்தி ‘நான் பேசிக் கொண்டிருப்பது என் மனைவியுடன் தான்’ எனக் கூறுகிறார்கள்.

தமது செயல் யாருக்கும் எந்தப் பாதிப்பையும ஏற்படுத்தாது என்றாலும் – தம்மைப் பற்றி மக்கள் ஒருபோதும் தவறாக நினைக்க மாட்டார்கள் என்றாலும் – தனிப்பட்ட ஒழுக்கம் சம்மந்தப்பட்ட – விவகாரங்களில் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்றாலும் இந்த மாமனிதர் சந்தேகத்தின் நிழல்கூட தம்மேல் விழக்கூடாது என்று கருதுகிறார்கள்.

யாருக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத விஷயத்தில் கூட அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால் மற்றவர்கள் சம்மந்தப்பட்ட விஷயத்தில் எவ்வளவு நேர்மையுடன் நடந்திருப்பார்கள் என்பதை ஊகிக்க முடியும்.

இதனால் தான் உலகம் அவர்களை மாமனிதர் என்கிறது.