Category Archives: இஸ்லாம் ஓர் அறிமுகம்

அன்பே உருவான அம்மா…! – பாகம் – 2

இறையொளியால் என் உள்ளம் நிறைந்து இருக்கிறது

என் அம்மா!

நான் உங்கள் மகன். நான் இஸ்லாத்தை ஏற்குமுன், இஸ்லாமியப் பாதையிலான பயணத்தை ஆரம்பிக்குமுன், எத்தகைய கெட்ட செயல்களை உடையவனாக இருந்தேன் என்பது நீங்கள் அறியாதது அல்ல. திருடுவது, பொய் சொல்வது போன்றவை அப்போது எனக்கு மிகச் சிறிய விஷயங்கள். எந்தக் கணமும் இத்தகைய தீமைகளில் மிக தைரியமாக ஈடுபட பின் வாங்கியது இல்லையே! அந்த அளவுக்கு தீய எண்ணங்கள் என் உள்ளத்தை ஆக்கிரமித்து இருந்தன. என்னுடைய தரங்கெட்ட வார்த்தைகள், தமாஷ்கள், நிந்தனைகள் எத்தனை பேரின் கண்களில் நீர் மல்கச் செய்திருக்கும்?

ஆனால் இன்று, இப்படி ஒரு தீர்மானம் எடுத்ததன் பின்பு, இஸ்லாத்தை என் வாழ்வோடு ஒன்றிவிட்ட மார்க்கமாக ஏற்றதற்குப் பின்னர், இறையொளியால் என் உள்ளம் நிறைந்து காணப்படுகிறது. பாவ இருள்கள் முற்றாக நீங்கி விட்டுள்ளன.

என்னைப் படைத்த நாயன் ‘இவை கெட்டவை’ எனத் தடுத்தவற்றை நான் எப்படியம்மா தைரியமாகச் செய்ய முடியும்? அது அவனுடைய கூற்றைப் புறக்கணிக்கும் கொடிய குற்றமல்லவா?

அன்புள்ள என் அம்மா!

நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறைக்குப் பெயர் இஸ்லாம். அது முழு மனித சமுதாயத்திற்கும் அல்லாஹ்வால் அருளப் பெற்றது. அதில் எத்தகைய குறையும் இலலை. மனிதனின் முழு வாழ்வுக்கும் அவசியமான அத்தனை சட்டதிட்டங்களும் அதில் அடங்கியுள்ளன.

ஒரு மனிதன்

எப்படி வாழ்வது

எப்படி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது

மற்றவர்களுடன் நெருங்கிப் பழகும் பொழுது ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது.

அரசியலில் எவ்வாறு ஈடுபடுவது

ஓர் ஆட்சியை எவ்வாறு நடத்திச் செல்வது

வாழ்வில் எத்தகைய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது.

எவ்வாறு உண்பது, உழைப்பது, திருமணம் புரிவது

இவை போன்ற எல்லா விஷயங்களிலும் இஸ்லாம் முன் வைக்கும் இறையாணைகள் பொருத்தமான வழிவகைகளை நமக்குக் காட்டித் தருகின்றன.

இன்னும் கேளுங்கள் அம்மா!

இஸ்லாம், மனிதர்கள் தமது பெற்றோர், சகோதர சகோதரிகள், கணவன், மனைவி, அயல்வீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றுமுள்ளோருடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதையும் சொல்லித் தருகின்றது. நபி (ஸல்) அவர்கள் நடந்து காண்பித்து விட்டுச் சென்றார்கள்.

நான் இப்பொழுது வல்லமையும், அன்பும், கருணையும் உடைய அல்லாஹ்வின் ஆணைகளை சிரமேற்கொண்டு, அவன் விருப்பப்படி வாழ திடசங்கற்பம் பூண்டுள்ளேன். அந்த வகையில், பெற்றோருடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றிய அவனது வழிகாட்டல் என்ன என அறிய விழைந்து, அவற்றிற்கு அமைய நடந்து கொள்கிறேன்.

அல்லாஹ்வும், அவனது இறுதித் தூதர் (ஸல்) அவர்களும், பெற்றோருடன் எவ்வாறு நடந்து கொள்வது? அவர்களுக்கு எவ்வாறு மரியாதை செய்வது என்பன பற்றி என்ன மொழிந்துள்ளனர் என உங்களுக்குத் தெளிவுபடுத்த விழைகின்றேன்.

வல்லமைமிக்க அல்லாஹ் தனது பரிசுத்த குர்ஆனில் பெற்றோருக்குப் பணிந்து நடப்பது பற்றி பெருமளவு குறிப்பிட்டுள்ளான்.

‘பெற்றோருடன் பேணுதலாக நடந்து கொள்ளுங்கள், அவர்களைத் துன்புறுத்தாதீர்கள், அவர்கள் கூறுபவற்றை மிக்க மரியாதையுடன் செவிமடுங்கள், அவர்கள் செய்த உதவிகளுக்கு நன்றி செலுத்துங்கள் என்பன அவற்றுள் சில.

முஹம்மத் (ஸல்) அவர்கள் பெற்றோருக்குக் கண்ணியம் அளிப்பது பற்றி மொழிந்தவை இவ்விறை போதனைகளுக்கு முற்றிலும் இணக்கமானவை.

ஒருமுறை, ஒருவர் வந்து, ‘யா ரசூலுல்லாஹ்! அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவினார்.

‘உரிய வேளையில் தொழுவது’ என நபி (ஸல்) அவர்கள் பதில் மொழிந்தார்கள்.

‘அதற்கு அடுத்த, அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது?’ என மீண்டும் அவர் வினவினார்.

‘பெற்றோருடன் கண்ணியமாக நடந்து கொள்வது’ என அல்லாஹ்வின் தூதர் பதில் மொழிந்தார்கள்.

மற்றொரு முறை, வேறொருவர் வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, ‘யா ரசூலுல்லாஹ்! தாய் நாட்டையும் பிறந்தகத்தையும் விட்டுவிட்டு அல்லாஹ்வுக்காகப் புனிதப் போரில் ஈடுபடுவதாக உங்கள் கரங்களில் சத்தியம் செய்கிறேன். அதற்கான வெகுமதிகளை அவனிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்’ எனக் கூறினார்.

இதை நிதானமாக கேட்டுக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் மிக அமைதியாக, ‘உங்கள் பெற்றோர் இருக்கின்றனரா? எனக் கேட்டார்கள்.

அதற்கவர், ‘அல்லாஹ்வின் அருளால் அவ்விருவரும் நலமாக இருக்கின்றனர்’ என பதில் அளித்தார்.

‘அப்படியா? நீங்கள் அவர்களுக்குப் பணிவிடை செய்யுங்கள். அப்பணிவிடைகளாவன அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத்தும், ஜிஹாதும் செய்த நன்மையை அவனிடமிருந்து பெற்றுத் தரும்’ என்பது ரசூல் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமாக இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்:

‘உங்கள் சுவனமும் நரகமும் உங்கள் பெற்றோரின் பாதத்தடியில் தான்!’ என்று.

இந்த நபி மொழியின் கருத்து இதுதான்:

தமது பெற்றோருக்கு அடிபணிந்து, அவர்களுக்குப் பணிவிடை புரிந்து, அவர்கள் செய்த உதவி ஒத்தாசைகளுக்கு நன்றி பகர்ந்து, அவர்களுக்கு நல்லன செய்தால் சுவனம் கிட்டும். அவ்வாறின்றி, அவர்களைத் துன்புறுத்தி, தொல்லைகள் பல கொடுத்து வாழும் ஒருவர், நரகில் கொழுந்து விட்டெரியும் நெருப்புக்கு இரையாவார் என்பதாகும்.

பிள்ளைகள் தம் பெற்றோருடன் மிக நல்ல விதமாக நடந்து கொள்ளல் வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பல கட்டங்களில் மொழிந்துள்ளார்கள்.

அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

‘அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை ‘உஃப்’ (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்’. (அல்குர்ஆன் 17:23

அன்பே உருவான அம்மா…! – பாகம் – 1

அன்பே உருவான அம்மா…!

அன்பே உருவான அம்மா…!

அல்லாஹ்வுடைய அருளும் பாதுகாப்பும் கிடைத்து நீங்கள் நல்ல சுகமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எழுதிய அன்புக் கடிதம் என் கரம் கிட்டியது. எனினும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அதற்கு பதில் எழுத தாமதித்து விட்டேன். எல்லாவற்றிற்கும் முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன்.

நீங்கள் என்னைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும் என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதேபோன்று, நான் என்னுள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்துக் கூற முடியாதவை.

உங்கள் அன்பு நிறைந்த முகத்தைக் காண ஓடோடி வர வேண்டும் என என்னுள்ளம் அவாவுறுகின்றது. எனினும், நான் பெற்றுவரும் சன்மார்க்க கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்த தடை இல்லாவிட்டால் நான் ஒரு கணமும் உங்களை விட்டுப் பிரிந்திருக்க மாட்டேன். உண்மையில், மார்க்கத்தைக் கற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் நான் உணர்ந்திருப்பது தான் நான் உங்களைப் பரிந்திருப்பதை சகித்துக் கொள்ளச் செய்கின்றது. இருப்பினும் உங்களைப் பற்றிய நினைவால் என் நெஞ்சம் நிறைந்திருக்கின்றது. நான் கழிக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் நீங்கள் என்மீது வைத்துள்ள வரையறையற்ற அன்பை, கருணையை எண்ணிப்பார்க்கிறேன்.

நீங்கள் என்மீது செலுத்தும் அளவற்ற கருணைக்கும், எனக்காகக் காலமெல்லாம் செய்த தியாகங்களுக்கும் நான் எப்படித்தான் கைம்மாறு செய்வேனோ? உங்கள் தன்னலமற்ற உதவி ஒத்தாசைகளை என் நாவினால் எப்படித்தான் வர்ணித்து முடிப்பேனோ? உங்கள் முடிவேயில்லாத அன்புடன் கூடிய மகத்தான பணிகளுக்கு எந்த விதத்தில் பிரதி உபகாரம் செய்வேனோ? நான் அறியேன்!

என் அகம் நிறைந்த அம்மா!

நீங்கள் எப்பொழுதும் வேதனையுடனும் வடித்த கண்ணீருடனும் சொல்லும் சில விஷயங்கள் என் உள்ளத்தில் சதா எதிரொலித்துக் கொண்டுள்ளன. அவற்றிற்காக நான் கவலைப்படாத நாளே இல்லை எனலாம்.

நீங்கள் கூறுவீர்கள்:

‘என் தங்க மகன் என்னை விட்டுப் போய்விட்டான், தவறான பாதையின்பால் அழைத்துச் செல்லப்பட்டு விட்டான். சோதிடர் கூறியது போலவே என் மகன் எனக்கு இல்லாமலாகி விட்டான்’ என்று.

அம்மா! இவற்றை நான் எப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். ஏனம்மா இப்படி என்னைப் பற்றி வேதனைப் படுகின்றீர்கள்? எனது எந்தச் செயல் உங்களுக்கு இப்படியான வருத்தத்தைத் தருகின்றது? இப்படி அச்சத்தைத் தோற்றுவிக்கின்றது? இப்படி பலமுறை எண்ணிப் பார்த்தது உண்டு.

சொல்லுங்கள் தாயே! நான் செய்த குற்றம் என்ன?

‘அல்லாஹ் ஒருவன் தான் உண்மையான படைப்பாளன்’ என்று நான் ஏற்றுக் கொண்டது குற்றமா?

இறுதி நபிகளார் மீது இறுக்கமான விசுவாசங் கொண்டேன். அது நான் செய்த குற்றமா?

என் வாழ்வு முழுவதையும் இறை கட்டளைக்கு இணக்கமான முறையில் அமைத்துக் கொள்ள விழைந்தேனே, அதுதான் என் குற்றமா?

‘அல்லாஹ்வை புகழ்கின்றேன், அவனுக்கு இணையான எதுவுமே இல்லை’ என நான் உறுதியான இறை விசுவாசம் கொண்டதுதான் என் குற்றமா?

இல்லையெனில்,

‘எமக்கு உணவளித்து வாழ வைக்கும் இறைவன் அந்த அல்லாஹ்தான்’ என மனப்பூர்வமாக ஏற்றேனே, அதுதான் நான் செய்து விட்ட, உங்கள் மனதைக் குடையும் குற்றமா?

அன்புத்தாயே! இந்த வாழ்வு, இதில் காணப்படும் எண்ணற்ற வசதிகள், காற்று, நீர், உணவு, உடை ஆகிய அனைத்துமே அல்லாஹ்வின் அருட்கொடைகள். நிச்சயமாக இந்த வாழ்வும் உலகமும் என்றோ அழிந்து விடும். இப்படி அழிந்து போகும் எம்மை, அல்லாஹ் மீண்டும் உயிர் தந்து எழச் செய்வான். எமக்கு இவ்விஷயத்தில் வாழும் வாய்ப்பைத் தந்த அவனுக்கு ‘நாம் எப்படி வாழ்ந்தோம்’ எனக் கேட்கும் உரிமை உண்டு என்பதை நான் திடமாக நம்புகின்றேன்.

அவன் தந்த சட்ட திட்டங்களுக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப வாழாதவர்கள் நரகில் எறியப்படுவர், அங்கு அவர்கள் மிகக் கடுமையான வேதனைகளை அனுபவிப்பர். இந்த உண்மைகள் யாவற்றையும் எத்தகைய சந்தேகமுமின்றி முழு மனதோடு ஏற்றுக் கொண்டது நான் செய்த குற்றமா?

‘நரக நெருப்புக்கு இரையாகாது இறை சட்டங்களுக்கு ஏற்ப இயங்கி சுவனத்தைப் பெற வேண்டும்’ என உறுதி பூண்டு செயற்படுகின்றேனே – இது குற்றமா?

‘எல்லாவற்றையும் படைத்து பரிபாலித்து வரும் அல்லாஹ், தனது இறுதித் தூதரான நபி (ஸல்) அவர்கள் மூலம் அருளிய ஆணைகள் யாவற்றையும் நெஞ்சம் நிறைத்து பின்பற்றுவேன், அவன் ‘கூடாது’ என தடுத்த பாவச் செயல்களிலிருந்து முற்றாக ஒதுங்கி நிற்பேன்’ என்ற முடிவோடு வாழ்வை அமைத்துக் கொள்ள முற்படுகின்றேனே – இதை குற்றம் என்கிறீர்களா?

ஆமாம் தாயே! உங்கள் கண்ணோட்டத்தில் நான் செய்த குற்றங்கள் இவைதான்! உங்களது வேதனைக்கும் வெறுப்பிற்கும் காரணமாகி இருப்பவை இத்தகைய என் குற்றங்களே!

சுருக்கமாகச் சொல்கிறேன்:

உண்மையான இறைவனுக்கு உளப்பூர்வமாக அடிபணிந்து வாழும் ஒரு முஸ்லிமின் வாழ்வுதான் என் வாழ்வு. என் செயல்கள் யாவும் அப்படித்தான் அமைந்துள்ளன. எவர் தனது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் எல்லாக் கட்டங்களிலும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு இணக்கமாக வாழ்கிறாரோ அவர்தான் ‘முஸ்லிம்’ என அழைக்கப்படுவர். அதனை நன்கு உணர்ந்தவன் நான், எனவே, இறைவன் ‘வேண்டாம்’ என தடுத்துள்ள பாவச் செயல்களிலிருந்து நானும் ஒதுங்கி வாழ முயற்சிக்கின்றேன்.

கல்கி

கல்கி

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்.. இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

தமிழ் மொழி பெயர்ப்பு: சகோதரி ஸுஹைநா (சுமஜ்லா)

கமலாதாஸ் – ஸுரையா

கமலாதாஸ் – ஸுரையா

கேரள பத்திரிக்கை துறையில் முத்திரை பதித்திருக்கும் பெண் எழுத்தாளர் டாக்டர் கமலாதாஸ் கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் அன்று தாம் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாக உலகுக்கு அறிவித்தார். அத்தோடு தமக்கு ஸுரையா என்று புதிய பெயரைச் சூட்டிக் கொண்டதாகவும் பிரகடனப்படுத்தினார் அவர்.

கேரளாவில் எர்ணாகுலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டைத் துவக்கி வைத்த போது அவர் திடீரென அந்த அறிவிப்பை வெளியிட்டார். அவரது உரைநடை மற்றும் கவிதை நடைக்கு மக்களிடத்தில் சிறந்த வரவேற்பிருந்ததால் அவரது இந்த திடீர் அறிவிப்பு மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திற்று.

அவர் தமது அறிக்கையில், ‘நான் இந்துக்களைப் போல என்னை – எனது பிணத்தை எரிக்க விரும்பவில்லை. இதுவே நான் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரதான காரணம். நானோ ஒரு கைம்பெண். எனது குழந்தைகளும் என்னோடு இல்லை. எனவே இந்த மார்க்கத்தில் நான் என்னை இணைத்து நான் எல்லோராலும் நேசிக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன். இதோ இந்த ரமளான் மாதம் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சிறந்த மாதம்.

எனவே தான் இப்போதே நான் இந்த அறிவிப்பை வெளியிட்டேன். என்னிடம் இஸ்லாத்தைப் பற்றிய பல புதிய தகவல்கள் உள்ளன. அது பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்குகிறது. நானோ ஆதரவற்றவள். சொந்த – பந்தமில்லாத எனக்குப் பாதுகாப்பு தேவைப்படுகின்றது.

இந்துச் சமய மக்கள் விக்கிரகங்களைக் கடவுள்களாகக் கருதி வழிபாடு செய்கின்றனர். அவை பக்தர்களைத் தண்டிக்கும் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் அல்லாஹ்வோ பாவங்களை மன்னிப்பவன். எனவே மன்னிக்கின்ற இறைவன் தான் எனக்கு வேண்டும் – என்று குறிப்பிட்ட எழுத்தாளர் கமலாதாஸ், இந்த முடிவைப் பற்றி நீண்ட காலமாக தாம் சிந்தித்து வந்ததாகவும் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுவதாவது:

இந்து மதக் கோட்பாட்டின்படி நான் இறந்து போன பின்பு அடுத்த தலைமுறையில் காகமாகவோ மற்ற விலங்காகவோ பிறப்பேன் என்றெல்லாம் எனது சந்ததிகள் கருதுவதை நான் விரும்பவில்லை. மேலும் இந்த ரமளான் மாதம்தான் நான் இஸ்லாத்தை தழுவியதைப் பிரகடனப்படுத்த வேண்டிய பொருத்தமான மாதமாகும். எனவே நான் இஸ்லாத்தை தழுவியதற்கு நீங்கள் அனைவரும் சாட்சிகளாக இருங்கள்! நான் நீண்ட காலமாக எந்த மதத்திலும் பிடிப்பில்லாமல் இருந்தேன். நான் எது வரை இவ்வாறு இலட்சியமற்றவளாக இருக்க முடியும்?

டாக்டர் கமலாதாஸ், மாதவிக்குட்டி என்ற புனைப்பெயரில் தொடர்ந்து மலையாளத்தில் எழுத விரும்புகிறார். ஆங்கிலத்தில் எழுதும் போது தமது புதிய பெயரான ‘ஸுரையா’வை பயன்படுத்துகிறார்.

இவரது பெற்றோர்கள் பிரபலமானவர்கள். தந்தை எஃப்.எம்.நாயர் மலையாள தினசரியான மாதருபூமி பத்திரிக்கையில் முன்னாள் ஆசிரியராவார். தாயார் நாலபாட்டு பாலாமணி அம்மா மலையாள மொழியில் எழுத்தாளராகவும் கவிஞராகவும் பிரபலமானவர்.

உங்களைப் பற்றி மக்கள் விமர்சித்தால் உன்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு ஸுரையா பதில் கூறும் போது, ‘இது என்னுடைய சுயவிருப்பத்தை அடிப்படையாகக் கொண்ட முடிவாகும். இதில் யாருடைய தலையீட்டையும் நான் பொருட்படுத்தப் போவதில்லை. நான் எனது அறையிலிருந்த அனைத்து விக்ரகங்களையும் எடுத்து இந்துக்களிடம் கொடுத்து விட்டேன். அவர்களிடமிருந்து நான் பெற்றது வேதனைகள் மற்றும் கேவலமான விமர்சனங்களையும் தான்.

ஆனால் இப்போதோ நான் புதிதாக பிறந்தவளாக இருக்கின்றேன். குர்ஆனின் சில பாகங்களை நான் மனனம் செய்துள்ளேன். அவற்றை எனது கவிதைகளில் வடித்துள்ளேன். சில இஸ்லாமிய சிந்தனையாளர்களின் உதவியுடன் இஸ்லாத்தைப் பற்றிய விவரங்களை அறிந்தும் வருகின்றேன்’ என்று குறிப்பிடுகிறார்.

அவருடைய பூர்வீக ஊரான நாலபாட்டைப் பற்றி அதன் தோற்றம் வித்தியாசமாக மனதில் தோன்றுவதாக ஓர் எழுத்தாளர் கூறிய போது, ‘அங்கு எனது வீட்டுக்கருகில் ஒரு பள்ளிவாசலை நான் உருவாக்குவேன். அப்போது அங்கிருந்து வரும் முஅத்தினின் பாங்கோசையை நீர் கேட்பீர், அப்போது அந்த ஊரைப்பற்றி உமது உள்ளத்தில் உதித்த தோற்றம் மாறும்’ எனக் கூறினார் ஸுரையா.

இன்று டாக்டர் ஸுரையா, இஸ்லாமிய அழைப்பு சம்பந்தமான பிரசுரங்களிலும் பிரச்சாரங்களிலும் அதிகமாக ஈடுபட்டு வருகிறார். இஸ்லாத்தின் தனித்துவங்களையும் பெருமைகளையும் விவரிக்கிறார்.

குறிப்பாக இஸ்லாம் பெண்ணினத்திற்கு வழங்கியிருக்கும் உரிமைகள், பாதுகாப்புகள் கண்ணியங்கள் ஆகியவற்றைப் பெண்களுக்கு எடுத்துக் கூறி பெண்களை இஸ்லாத்தில் இணையச் செய்து புரட்சி செய்து கொண்டிருக்கிறார் டாக்டர் கமலா ஸுரையா.

(குறிப்பு: டாக்டர் கமலா ஸுரையா அவர்கள் மே 31, 2009 ஞாயிற்றுக் கிழமை சுவாசக் கோளாறு காரணமாக வஃபாத்தானார்.  அவரின் மறுமை வாழ்வு சிறக்க துஆச் செய்வோமாக!)

கேட் ஸ்டீபன்ஸ் – யூசுப் இஸ்லாம்

  பாகம் – 1

கேட் ஸ்டீபன்ஸ் – யூசுப் இஸ்லாம்

பிரபல பாப் இசைப் பாடகரான முன்னாள் கேட் ஸ்டீபன்ஸ், தாம் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை இதோ விவரிக்கிறார்:

நான் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை நீங்கள் அனைவரும் அறிந்துள்ள செய்தியின் மூலம் துவக்குகின்றேன். அது யாதெனில்.. எல்லாம் வல்ல இறைவன் இந்த பூமியில் நம்மை வழித்தோன்றல்களாக ஆக்கி நமக்கு தூதர்களை அனுப்பியுள்ளான். குறிப்பாக நமக்கு சீரான பாதையைக் காண்பிப்பதற்காக இறுதித்தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களைத் தெரிவு செய்துள்ளான். எனவே இதற்காக நன்றி செலுத்த வேண்டும் என்பதை மனிதன் கருத்தில் கொள்ள வேண்டும். இனி வரவிருக்கும் நிரந்தர வாழ்க்கைக்காக தம்மைத் தயார்படுத்துவதற்கு முயற்சி செய்யவும் வேண்டும். ஏனென்றால் இன்றைய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவன் அதை மீண்டும் பெறவே இயலாது. அல்லாஹ் கூறுகிறான்:

இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், ‘எங்கள் இறiவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டுக் கொண்டோம். ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை! நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்’ என்று சொல்லும் போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).

மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம். ஆனால் ‘நான் நிச்சயமாக நரகத்தை – ஜின்களையும், (தீய) மனிதர்களையும் – ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்’ என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது. ஆகவே, உங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததன் (பலனை) அனுபவியுங்கள், நிச்சயமாக நாமும் எங்களை மறந்து விட்டோம். மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்!’ (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்). 32:12-14

இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள் ‘எங்கள் இறiவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும், ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்வோம்’ என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) ‘சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார். ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்! ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை’ (என்று கூறுவான்). 35:37

சிறு பிராயம்:

தொழில் நுட்பத்துறையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பகுதியில் நான் பிறந்து வளர்ந்தேன். எனது குடும்பம் கிறிஸ்துவ குடும்பம். குழந்தை பொதுவாக இயல்பான நிலையில்தான் பிறக்கிறது. அதன் குடும்பத்தினர் தாம் அதை நெருப்பு வணங்கியாகவோ யூதனாகவோ கிறிஸ்தவனாகவோ மாற்றுகின்றனர் என நாம் அறிந்திருப்பதைப் போல, எனது தந்தை கிறிஸ்துவர் என்பதால் அவரது பராமரிப்பில் வளர்ந்த நானும் அந்த வழியிலேயே மாறிவிட்டிருந்தேன். அப்போது இறைவன் இருப்பதாகவும் அவனை நாம் ஈஸா (அலை) மூலமாகத்தான் அணுக இயலுமே அல்லாது நேரடியாக தொடர்பு கொள்ளவியலாது. அவர்தாம் கடவுளை அடைவதற்கான வாயில் என்பதாகவும் அறிந்து வைத்திருந்தேன். இந்தக் கருத்தை ஓரளவுக்கு நான் ஏற்றிருந்தாலும் எனது அறிவு முழுமையாக இதை ஏற்றிருக்கவில்லை.

ஈஸா (அலை) அவர்களின் சிலையை நான் உற்று நோக்கினேன். அது ஒரு கல், வாழ்க்கையைப் பற்றி எதுவும் அறியாது. அது போல திரித்துவ கொள்கையும் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆயினும் இந்தக் கோட்பாடுகள் எனது தந்தையின் மதம் சார்ந்தவையாக இருந்ததால் அவரது மரியாதையைக் கருதி அவற்றைப் பற்றிய தர்க்கத்தில் என்னை நான் ஈடுபடுத்தவில்லை.

பிரபல பாப் இசைப்பாடகராக…

நான் கொஞ்சங் கொஞ்சமாக மதக்கோட்பாட்டிலிருந்து தூரமாகி இசை மற்றும் பாடல் துறைக்குத் தாவினேன். ஒரு பிரபல பாடகனாக ஆக வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தது. அந்த வேகமான வாழ்க்கையின் அலங்காரங்களும் ரசனைகளும் என்னை ஈர்த்துக் கொண்டன. அதனால் இசையே எனது கடவுளானது. பொதுவாக பணமே எனது குறிக்கோள் என்றானது. ஏனெனில் எனது மாமா ஒருவர் அதிகமான பொருளாதாரத்திற்குச் சொந்தக்காரராக இருந்தார். அவரைப் போலவே நானும் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மேலும் எனக்கு இந்தச் சிந்தனையை ஊட்டுவதில் என்னைச் சுற்றியிருந்த சமூக அமைப்புகளுக்கும் அதிகப்பங்கு இருந்தது. காரணம் உலகமே சதம் என்றும் அதுவே எல்லாம், அதுவே கடவுள் என்றும் சமூகம் கருதியிருந்தது.

எனவேதான் காசு மட்டுமே குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை நான் உறுதியாக தெரிவு செய்தேன். இந்த உலகம் என்னுடைய ஆசைகளை அடைந்து கொள்ள வேண்டிய களம், என்னைப் பொருத்த வரை இத்தோடு நமது ஆட்டங்கள் முடிந்துவிடும் என்றெல்லாம் நான் கருதியிருந்தேன். இத்துறையில் உலக அளவில் பேசப்படும் பாப் இசை வித்துவான்களே எனக்கு முன்மாதிரிகளாகத் தோன்றினர்.

இவ்வாறாக நான் இவ்வுலக வாழ்க்கையில் எனது சக்தியைப் பிரயோகித்து முழுமையாகவே மூழ்கியிருந்தேன். அதிகமான பாடல்களை நான் வழங்கியுள்ளேன். ஆயினும் தேடப்பட்ட பொருளாதாரத்தை நான் ஆராயும் போது எனது அடி மனதில் மனிதாபிமான ஆசையும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையும் உறுத்திக் கொண்டிருந்தன. ஆனாலும் குர்ஆன் கூறுவதைப் போல மனித மனம் வாக்களிப்பதை நிறைவேற்றுவதில்லை. மாறாக அதிகமான பொருளாதாரம் வரும்போதெல்லாம் கூடவே ஆசைகளும் அதிகரித்தே விடுகின்றன.

இவ்வாறாக பத்தொன்பது வயதை நான் கடக்காத கட்டத்திலேயே மாபெரும் வெற்றியை அடைந்தேன். எனது புகைப்படங்களும் என்னைப் பற்றிய செய்திகளும் தகவல் தொடர்புச் சாதனங்களுக்கு வெகுவாகவே தீனி போட்டன. இந்தப் பகட்டான முன்னேற்றம் கால எல்லைகளைக் கடந்து ஆடம்பர வாழக்கைக்கு என்னை இட்டுச் சென்றது. அதன் காரணமாக மதுவிலும் போதையிலும் நான் மூழ்கிப் போயிருந்தேன்.

மருத்துவமனையில் நுழைதல்:

வாழ்க்கையில் முன்னேற்றமும் பொருளாதார வெற்றியும் பிரபலமும் நான் அடைந்து ஏறத்தாழ ஓராண்டு கழிந்திருக்கும் அப்போது என்னைக் காசநோய் பீடித்தது. சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன்.

நான் அங்கிருந்த போது எனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கலானேன். நான் என்ன வெறும் ஜடம் தானா? நான் என்ன செய்தால் இந்த ஜடத்தைச் சிறப்பாக அமைக்கலாம்? என்றெல்லாம் பல வினாக்கள் என்னுள் எழுந்தன. உண்மையில் எனது நிலையைப் பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்த அந்தக் கட்டம் எனக்கு இறையருளாகவே அமைந்தது. அது எனது கண்களை நான் திறப்பதற்கும் சீரான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கும் இறைவன் வழங்கிய ஒரு சந்தர்ப்பம் என்றே நான் நினைக்கின்றேன்.

நான் ஏன் இந்தப் படுக்கையில் கிடக்க வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகள் உருவாயின. இவற்றிற்கான விடைகளை நான் தேட ஆரம்பித்தேன். நான் ஏற்றுக் கொண்டிருந்த கோட்பாடுகள் கிழக்காசிய நாடுகளில் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்தது. எனவே அந்தக் கொள்கைகளைப் பற்றி சிந்திக்கலானேன்.

முதலில் மரணத்தைப் பற்றிய சிந்தனை ஏற்பட்டது. அப்போது தான் ஆன்மாக்கள் ஒரு வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கு மாறுகின்றது. இந்த உலக வாழ்க்கையோடு அவற்றின் சகாப்தம் முடிவடைவதில்லை என்பதை அறிந்தேன். அன்றே நான் சீரான பாதையை நோக்கிப் பயணிக்கத் துவங்கி விட்டதை அறிந்தேன்.

இவ்வாறாக ஆன்மீக சிந்தனை பற்றிய அக்கறை என்னைத் தொற்றிக் கொள்ள படிப்படியாக இதய அமைதி எனக்குள் அதிகரித்தது. அதன் விளைவாக நான் வெறும் வெற்றுடம்பு அல்ல என்ற முடிவுக்கு வந்தேன்.

ஒரு நாள் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது மழை பெய்தது. உடனே நான் மழையில் நனையாமல் இருப்பதற்காக சற்று ஓடினேன். அப்போது ஒரு தத்துவம் எனது நினைவிற்கு வந்தது. அது யாதெனில், ‘உடம்பு என்பது ஒரு கழுதையைப் போன்றது, அதைப் பழக்கப்படுத்தினால் தான் அதை அதன் எஜமானன் தனது விருப்பத்திற்கிணங்க பயன்படுத்த இயலும். இல்லையெனில் கழுதை தனது விருப்பத்திற்கிணங்க எஜமானனைப் பயன்படுத்திக் கொள்ளும்.’

அப்படியாயின் சுயமான விருப்பும் வெறுப்புமுள்ள மனிதனாகிய நான் வெறும் ஜடமல்லவே. கிழக்கத்திய கோட்பாடுகளை ஆராயும்போதும் இந்த முடிவே எனக்குத் தென்பட்டது. ஆயினும் கிறிஸ்தவம் எனக்கு முழுமையாகவே பிடிக்காமல் போயிற்று.

நான் குணமடைந்ததும் மீண்டும் இசைத்துறைக்குத் திரும்பினேன். அது எனது புதிய சிந்தனைகளை மழுங்கடிப்பதைப் போல் தோன்றியது. அது பற்றி நான் பாடிய பாடல் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன:

சுவனத்தையும் நகரத்தையும் படைத்த (இறை)வனை அறிய வேண்டுமே! இந்த உண்மையை நான் படுக்கையில் கிடந்து அறிய இயலுமா, இல்லை, ஒண்டுக் குடிசையில் ஒதுங்கித்தான் புரிய இயலுமா? மற்றவர்களோ ஆடம்பரமான உணவகங்களின் அறைகளில் உழன்று கிடக்கின்றனர். (கவிதையின் கருத்து)

இந்த சந்தர்ப்பத்தில் தான் நான் சரியான பாதையில் இருப்பதாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் இன்னொரு பாடலையும் நான் பாடினேன். அது கடவுளை அறிவதற்கான வழியைப் பற்றியது.

இந்நிலையில் இசைவுலகில் எனது பிரபலம் அதிகரித்தது. அப்போது நான் மிகவும் சிரமத்திற்குள்ளாயிருந்தேன். காரணம், எனது பாடல்கள் ஒரு பக்கம் பிரபலமாகிக் கொண்டிருக்கும் வேளையில் நானோ உண்மையைத் தேடும் வேட்கையில் மூழ்கியிருந்தேன். அந்த வேளையில் புத்த மதம் சிறந்ததும் உயர்ந்ததுமாக இருக்கும் என்று நம்பியிருந்தேன். ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ளவோ இசையுலகத்தைக் கைவிடவோ வழிபாடுகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ எனக்குத் தோன்றவில்லை. நானோ உலக வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தேன்.

பிறகு எனது சத்திய வேட்கை, கிரகங்கள் மற்றும் எண்கணித ஆய்வுகளின் வாயிலாக தொடர்ந்தது. அவைகளிலும் எனக்குச் சரியான நம்பிக்கை வரவில்லை. அப்போது இஸ்லாத்தைப் பற்றியும் நான் வெகுவாக அறிந்திருக்கவில்லை.

ஒரு நாள் நான் ஆச்சர்ய மிக்க வகையில் இஸ்லாத்தைப் பற்றி அறிய முடிந்தது. அதாவது எனது சகோதரர் பைத்துல் முகத்தஸ் சென்று விட்டுத் திரும்பினார். அப்போது அவருடைய நடையுடை பாவனைகள் சற்றே வித்தியாசமாக இருந்தன.