இன்டெக்ஸ்

 செய்திகள் இன்டெக்ஸ்

Unicode Page

சொராபுதீன் போலி என்கௌண்டர் - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

புதன், 13 ஜனவரி 2010

கடந்த 2005 ம் ஆண்டில் குஜராத்தை சேர்ந்த சொராபுதீன், அவருடைய மனைவி கௌசர் பீ மற்றும் அவர்களது நண்பர் துளசிராம் பிரஜாபதி ஆகியோரை குஜாராத் மாநில காவல் துறை போலி என்கௌண்டர் நடத்தி சுட்டுக் கொன்றனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல வந்ததாகவும் அதன் காரணமாக அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதாகவும் கூறப்பட்டது .

இது போலியான என்கௌண்டர் என்று விசாரணையில் தெரிய வந்ததையடுத்து சம்பவத்துக்கு பொறுப்பான தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் டி.ஜி.வஞ்சாரா, போலீஸ் கண்காணிப்பாளர்கள் ராஜ்குமார் பாண்டியன், எம்.என்.தினேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு   பின் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.

இந்த வழக்கில் விசாரணை நேர்மையாக நடைபெற வில்லை என்றும் அதன் காரணமாக  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சொராபுதீனின்  சகோதரர் ரூபாபுதீன் ஷேக் மனு தாக்கல் செய்து இருந்தார்.  இதுதொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி மற்றும் அப்டாப் ஆலம் ஆகியோரடங்கிய டிவிஷன் பெஞ்ச், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.  வழக்கு விசாரணையை பாரபட்சம் இல்லாமல் நடத்திவருவதாக கூறி வரும்  குஜராத் அரசுக்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்