இன்டெக்ஸ்

 செய்திகள் இன்டெக்ஸ்

Unicode Page

தம்மாமில் சிறப்பாக நடைபெற்ற இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி

தம்மாம் 12.09.2009

தம்மாம் கலாச்சார மையம் சார்பாக அதன் நோன்பு திறக்கும் இப்தார் பந்தலில் 11.09.2009 வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்

சரியாக மணி 9:30க்கு ஆரம்பமான இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சியை பொறியாளர் ஷபியுல்லாஹ்கான் அவர்கள் துவக்கி வைத்து வரவேற்புரை நிகழ்த்தினார். அவரது உரையில் இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பிறமத நண்பர்கள் இஸ்லாம் பற்றி எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறினார். மேலும், கோபமாக ஆக்ரோஷமாக கூட கேட்பதற்குரிய உரிமையை, கேள்வி கேட்பவர்களுக்கு வழங்கி பேசினார்.

பொறியாளர் ஷபியுல்லாஹ்கான்

அதனைத் தொடர்ந்து தம்மாம் கலாச்சார மையத்தின் மவ்லவி மன்ஸுர் மதனி அவர்கள் இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்.

மவ்லவி மன்ஸுர் மதனி

அதன் பிறகு இதன் முக்கிய நிகழ்வான பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமானது.

கேள்விக்கான பதில்களை பொறியாளர் ஜக்கரிய்யா மற்றும் மவ்லவி மன்ஸுர் மதனி ஆகியோர் அளித்தனர்.

கேள்விகள் தொடுக்கப்படும் காட்சி

ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் பொறியாளர் ஜக்கரிய்யா பதிலளித்தார்.

பொறியாளர் ஜக்கரிய்யா

கேள்விகள் தொடுக்கப்படும் காட்சி

கேள்விகள் தொடுக்கப்படும் காட்சி

கேள்விகள் தொடுக்கப்படும் காட்சி

நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்

கேள்விகள் நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் கேட்கப்பட்டன.

நன்றியுரையை தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் மவ்லவி அப்துல் அஜீஸ் மதனி வழங்கினார்.

மவ்லவி அப்துல் அஜீஸ் மதனி

சரியாக 11:00 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.

வருகை தந்த அனைவருக்கும் சைவ அவைச உணவுகள் பரிமாறப்பட்டன.

குறுகிய நேரமாக இருந்தாலும், அதிகமான கேள்விகள் கேட்க முடியாமல் போனாலும், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுருக்கமாக கூறப்பட்ட பதில்கள் பயனுள்ளதாக இருந்ததாக கலந்து கொண்ட பிறமத நண்பர்கள் தெரிவித்தனர்.

நமது செய்தியாளர்
அபூஅன்ஸாரி

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்