இன்டெக்ஸ்

 செய்திகள் இன்டெக்ஸ்

Unicode Page

அல்கோபரில் சிறப்பாக நடந்த இஸ்லாமிய கருத்தரங்கம்

தம்மாம் 11.09.2009

நேற்று 10.09.2009 வியாழன் மாலை அல்கோபர் இஸ்லாமிய நடுவத்தின் இப்தார் பந்தலில் இஸ்லாமிய கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. பெரும் திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி இரண்டு அமர்வுகளாக அமைக்கப்பட்டிருந்தது. முதல் அமர்வுக்கு மவ்லவி உவைஸ் பாகவி தலைமை தாங்கினார். சகோ.மீராசாஹிப் வரவேற்புரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து ஜுபைல் தஃவா சென்டரில் இருந்து வந்திருந்த மவ்லவி ரிஸ்கான் மதனி அவர்கள் மறுமை என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து அல்கோபர் இஸ்லாமிய நடுவத்தின் மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் பேசினார். தலைப்பு அறிவிக்கப்படாவிட்டாலும் அவரது பேச்சு பொதுவாகவும் ரமளானின் எஞ்சிய 10 நாட்களின் சிறப்புக்களை எடுத்துரைப்பதாகவும் அமைந்திருந்தது.

பின்னர் இரவுத் தொழுகைக்
காக நேரம் ஒதுக்கப்பட்டது. அதில் சகோ.முஹம்மது சூபி அவர்களும் கமாலுத்தீனும் தொழுகையை நடத்தினார்கள்.

இரண்டாம் அமர்வு தொடங்குவதற்கு முன்பு புதிதாக இஸ்லாத்தை தழுவும் தர்மா என்ற பெயருடைய சகோதரரை மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் அப்துல்லாஹ் என்ற பெயரோடு அறிமுகம் செய்து வைத்தார். இஸ்லாத்தை தழுவிய இந்த சகோதரர் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு என்ற ஊரை சேர்ந்தவராவார்.

அதன் பிறகு இரண்டாவது அமர்வு ஆரம்பமானது, இந்த அமர்வுக்கு தம்மாம் இஸ்லாமிய தஃவா மற்றும் வழிகாட்டல் மையத்தின் மவ்லவி நூஹ் மஹ்லரி தலைமை தாங்கினார். இந்த அமர்வின் முதலாவது பேச்சாளராக தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் மவ்லவி மன்சூர் மதனி அவர்கள் அழகிய அணுகுமுறை என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து அல்அஹ்ஸா மவ்லவி அலாவுதீன் பாகவி அவர்கள் உறவைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

ஒவ்வொரு உரையிலிருந்தும் கேள்வி கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பலருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஆடியோ வீடியோவை சகோ.சீனி முஹம்மது கவனித்துக் கொண்டார். சகோ.மீரா சாஹிப் உறுதுணையாக இருந்தார்.

இறுதியாக சகோ. இன்கோ ஐயூப் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பான சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதிவரை குளிர்பானமும் தேனீரும் பரிமாறப்பட்டது.

எஞ்சியுள்ள ரமளானின் பத்து நாட்களை அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான முறையில் கழிக்க வேண்டும் என்ற நினைவுகளை ஏந்தியவர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் கலைந்து சென்றனர்.

நமது செய்தியாளர்

அபூஅன்ஸாரி

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்