இன்டெக்ஸ்

 செய்திகள் இன்டெக்ஸ்

Unicode Page

தம்மாமில் இஸ்லாமிய கருத்தரங்கம்

தம்மாம், 08.08.2009 சனிக்கிழமை

    தம்மாமில் இயங்கி வரும் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் (ICC) சார்பாக தம்மாம் - கோபர் கடற்கரை சாலையில் அமைந்துள்ள ராக்கா பகுதியில் அல் ஸாமில் தொழிலாளர் குடியிருப்பு வளாகத்தில் கடந்த வெள்ளியன்று (07.08.09) இஸ்லாமிய கருத்தரங்கம் நடைபெற்றது.

    அஸர் தொழுகைக்குப் பின் அல் ஸாமிலில் பணிபுரியும் மவ்லவி முஹைதீன் ரஷாதி அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து கருத்தரங்கம் துவங்கியது. அமர்வுத் தலைவர் மவ்லவி நூஹ் மஹ்லரி (IDGC - தம்மாம்) அவர்கள் இக்கருத்தரங்கின் நோக்கம் மற்றும் பயன்களை பட்டியலிட்டார்.

மௌலவி நூஹ் மஹ்ளரி (IDGC - தம்மாம்)

    அதனைத் தொடர்ந்து மவ்லவி அலாவுதீன் பாகவி (அல் அஹ்ஸா) அவர்கள் எதிர்வரும் ரமளானை நாம் எவ்விதம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ரமளானில் நமக்காக காத்திருக்கும் அருட் கொடைகளைப் பற்றியும் சுருக்கமாகவும் சுவையாகவும் எடுத்துரைத்தார்.

மௌலவி அலாவுதீன் பாகவி (அல் அஹ்ஸா)  

    தேனீர் மற்றும் சிற்றுண்டி வினியோகத்திற்குப் பிறகு, மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (KIC – அல்கோபர்) மறுமை குறித்து சபையோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் விதமாக உரையாற்றினார். இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் துவங்கியதே இந்த மறுமை நம்பிக்கை பற்றித் தான் எனக் குறிப்பிட்டவர், இந் நம்பிக்கையினால் ஸஹாபாக்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு பரிசுத்தமாக மாறியது என்பதனை வரலாற்று ரீதியாக எடுத்துரைத்தார்.

மௌலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (KIC - அல்கோபர்)

    இறுதியாக இஸ்லாத்தில் நுழைந்து விட்ட பித்அத்களையும் அதன் காரணமாக ஏற்பட்டு வரும் இணைவைப்பையும் (ஷிர்க்கையும்) பித்அத்தும் ஷிர்க்கும் என்ற தலைப்பில் மவ்லவி மன்ஸுர் மதனி (ICC – தம்மாம்) அவர்கள் படம் பிடித்துக் காட்டினார்கள்.

மௌலவி மன்சூர் மதனி (ICC -தம்மாம்)

    மஃஅரிபுக்கு முன் நிகழ்ச்சியை நிறைவு செய்ய வேண்டுமென்ற கட்டாயத்தினால் ஒவ்வொரு தலைப்புக்கும் தலா 35 நிமிடங்களே ஒதுக்கப்பட்டன. நேரம் குறைவாக இருந்தாலும் கருத்துக்கள் நிறைவாக எடுத்து வைக்கப்பட்டதனால் பங்கு பெற்ற அனைவரும் பயனடைந்தனர்.

கருத்தரங்கில் கலந்து கொண்டோர்

    ஒவ்வொரு உரையிலிருந்தும் தலா மூன்று கேள்விகள் கேட்கப்பட்டு அவையோரில் சரியான பதிலளித்தவர்களுக்கும், நுழைவுப் பரிசாக மூவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. உரை நிகழ்த்திய அறிஞர் பெருமக்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி தம்மாம் தஃவா கமிட்டி தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் நன்றியுரை வழங்கினார்.

பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் (தமிழ் தஃவா கமிட்டி)

    இது அல் ஸாமில் வளாகத்தில் ஆறாவது ஆண்டாக நடைபெற்ற கருத்தரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது செய்தியாளர்: அபூஹாஜர்

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்