அத்தியாயம்: முகத்திமா – முகப்பு
171 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَسُوَيْدُ بن سَعِيدٍ قالا ثنا أبو الْأَحْوَصِ عن سِمَاكٍ عن عِكْرِمَةَ عن بن عَبَّاسٍ قال قال رسول اللَّهِ لَيَقْرَأَنَّ الْقُرْآنَ نَاسٌ من أُمَّتِي يَمْرُقُونَ من الْإِسْلَامِ كما يَمْرُقُ السَّهْمُ من الرَّمِيَّةِ |
ஹதீஸ் எண்: 171
‘என் சமுதாயத்தில் திருக்குர்ஆனை ஓதுகின்ற சிலர் தோன்றுவார்கள். வெட்டைப் பிராணியின் மேல் பாய்ந்த அம்பு மறுபுறம் வெளிப்படுவதைப் போல் அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறுவார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதில் இடம்பெறும் ஸிமாக் இப்னு ஹர்பு என்ற அறிவிப்பாளர் நம்பகமானவரே எனினும் இவர் இக்ரிமா என்பவர் வழியாக அறிவிக்கும் போது முதுமையினால் மனக்கலக்கம் அடைந்திருந்தார். அதனால் இக்ரிமா வழியாக அறிவிக்கும் இந்த ஹதீஸ் பலமானது அல்ல, ஆயினும் இதை பலப்படுத்தும் வேறு பல ஹதீஸ்கள் உள்ளதால் ஹஸன் என்ற நிலைக்கு இது உயர்கிறது.)
172 حدثنا محمد بن الصَّبَّاحِ أنبانا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن أبي الزُّبَيْرِ عن جَابِرِ بن عبد اللَّهِ قال كان رسول اللَّهِ بِالْجِعْرَانَةِ وهو يَقْسِمُ التِّبْرَ وَالْغَنَائِمَ وهو في حِجْرِ بِلَالٍ فقال رَجُلٌ اعْدِلْ يا محمد فَإِنَّكَ لم تَعْدِلْ فقال وَيْلَكَ وَمَنْ يَعْدِلُ بَعْدِي إذا لم أَعْدِلْ فقال عُمَرُ دَعْنِي يا رَسُولَ اللَّهِ حتى أَضْرِبَ عُنُقَ هذا الْمُنَافِقِ فقال رسول اللَّهِ إِنَّ هذا في أَصْحَابٍ أو أُصَيْحَابٍ له يقرؤون الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ يَمْرُقُونَ من الدِّينِ كما يَمْرُقُ السَّهْمُ من الرَّمِيَّةِ |
ஹதீஸ் எண்: 172
நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு அருகிலமைந்த) ஜிஇர்ரானா என்ற இடத்தில் போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களையும், தங்கம் வெள்ளிக் கட்டிகளையும் பிலால் (ரலி) அவர்களின் மடியிலிருந்து எடுத்து பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதன் ‘முஹம்மதே! நீர் நேர்மையாக நடக்க வில்லை, நேர்மையாக நடப்பீராக!’ என்றான். அதற்கு, நபி (ஸல்) அவர்கள் ‘நான் நேர்மையாக நடக்கவில்லையானால் வேறு யார் தான் நேர்மையாக நடக்க முடியும்? உனக்குக் கேடு உண்டாகட்டும்!’ என்றார்கள்.
அப்போது உமர் ரலி அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த முனாபிக்குடைய கழுத்தை வெட்ட என்னை அனுமதியுங்கள்! என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘ஒரு கூட்டத்தினர் குர்ஆனை ஓதுவார்கள், அது அவர்களின் தொண்டைக் குழியைக் கடக்காது. வேட்டைப் பிராணியின் மேல் பாய்ந்த அம்பு மறுபுறம் வெளியாவதைப் போல் இந்த மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள். அந்தக் கூட்டத்தில் இவனும் இருப்பான்’ என்று கூறினார்கள்.
173 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا إسحاق الْأَزْرَقُ عن الْأَعْمَشِ عن بن أبي أَوْفَى قال قال رسول اللَّهِ الْخَوَارِجُ كِلَابُ النَّارِ |
ஹதீஸ் எண்: 173
‘காரிஜிய்யாக்கள்’ நரகத்தின் நாய்களாவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அபீ அவ்பா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வரிசைக்கிடையே தொடர்பின்றி உள்ளதால் இது ஏற்கத்தகாத ஹதீஸ் என்றாலும் திர்மிதியில் அபூஉமாமா ரலி மூலமாக ஆதாரப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.)
174 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا يحيى بن حَمْزَةَ ثنا الْأَوْزَاعِيُّ عن نَافِعٍ عن بن عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ قال يَنْشَأُ نَشْءٌ يقرؤون الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ كُلَّمَا خَرَجَ قَرْنٌ قُطِعَ قال بن عُمَرَ سمعت رَسُولَ اللَّهِ يقول كُلَّمَا خَرَجَ قَرْنٌ قُطِعَ أَكْثَرَ من عِشْرِينَ مَرَّةً حتى يَخْرُجَ في عِرَاضِهِمْ الدَّجَّالُ |
ஹதீஸ் எண்: 174
தங்களின் தொண்டைக் குழியைக் கடக்காதவாறு குர்ஆனை ஓதுபவர்கள் தோன்றுவார்கள். இத்தகைய கூட்டம் தோன்றும் போதெல்லாம் முறியடிக்கப்படுவர் என்று இருபது முறைக்கு மேல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொடர்ந்து, ‘இவர்களின் கூட்டத்தின் துணையுடன் தஜ்ஜாலும் வெளிவருவான்’ என்றார்கள் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
175 حدثنا بَكْرُ بن خَلَفٍ أبو بِشْرٍ ثنا عبد الرَّزَّاقِ عن مَعْمَرٍ عن قَتَادَةَ عن أَنَسِ بن مَالِكٍ قال قال رسول اللَّهِ يَخْرُجُ قَوْمٌ في آخِرِ الزَّمَانِ أو في هذه الْأُمَّةِ يقرؤون الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ أو حُلُوقَهُمْ سِيمَاهُمْ التَّحْلِيقُ إذا رَأَيْتُمُوهُمْ أو إذا لَقِيتُمُوهُمْ فَاقْتُلُوهُمْ |
ஹதீஸ் எண்: 175
இந்த உம்மத்தில் அல்லது இறுதிக்காலத்தில் ஒரு கூட்டத்தினர் தோன்றுவர். தங்களின் தொண்டைக் குழியைக் கடக்காதவாறு குர்ஆனை ஓதுவர். அவர்களின் அடையாளம் மொட்டையடிப்பதாகும். அவர்களை நீங்கள் காணும் போது அவர்களைக் கொல்லுங்கள்! என்று நபி (ஸல்) கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.
176 حدثنا سَهْلُ بن أبي سَهْلٍ ثنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن أبي غَالِبٍ عن أبي أُمَامَةَ يقول شَرُّ قَتْلَى قُتِلُوا تَحْتَ أَدِيمِ السَّمَاءِ وَخَيْرُ قَتِيلٍ من قَتَلُوا كِلَابُ أَهْلِ النَّارِ قد كان هَؤُلَاءِ مُسْلِمِينَ فَصَارُوا كُفَّارًا قلت يا أَبَا أُمَامَةَ هذا شَيْءٌ تَقُولُهُ قال بَلْ سَمِعْتُهُ من رسول اللَّهِ |
ஹதீஸ் எண்: 176
முஸ்லிம்களாக இருந்து காபிர்களாக மாறிவிட்ட நரகவாசிகளின் நாய்கள் தான், வானத்தின் கீழ் கொல்லப்பட்டவர்களிலேயே மிகவும் கெட்டவர்கள். அவர்களைக் கொன்றவர்கள் தான் கொன்றவர்களிலேயே மிகச் சிறந்தவர்கள் என்று அபூஉமாமா (ரலி) கூறிய போது, அபூஉமாமாவே! இதை நீங்களாகச் சொல்கிறீர்களா? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் ‘அல்ல! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கேட்டுள்ளேன்’ என்றார்கள்.
(குறிப்பு: திர்மிதியிலும் இது இடம் பெற்றுள்ளது.)
3 بَاب فِيمَا أَنْكَرَتْ الْجَهْمِيَّةُ
177 حدثنا محمد بن عبد اللَّهِ بن نُمَيْرٍ ثنا أبي وَوَكِيعٌ ح وحدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا خَالِي يَعْلَى وَوَكِيعٌ وأبو مُعَاوِيَةَ قالوا ثنا إسماعيل بن أبي خَالِدٍ عن قَيْسِ بن أبي حَازِمٍ عن جَرِيرِ بن عبد اللَّهِ قال كنا جُلُوسًا عِنْدَ رسول اللَّهِ فَنَظَرَ إلى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ قال إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كما تَرَوْنَ هذا الْقَمَرَ لَا تَضَامُّونَ في رُؤْيَتِهِ فَإِنْ اسْتَطَعْتُمْ أَنْ لَا تُغْلَبُوا على صَلَاةٍ قبل طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا ثُمَّ قَرَأَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قبل طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ |
ஜஹ்மிய்யா என்ற பிரிவினர் மறுத்துரைத்த கொள்கைகள்
ஹதீஸ் எண்: 177
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். பவுர்ணமி இரவாகிய அன்று சந்திரனைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் இந்தச் சந்திரனை நீங்கள் காண்பது போல உங்கள் இறைவனைக் காண்பீர்கள்.
அவனைப் பார்ப்பதற்கு நெருக்கியடித்துக் கொண்டு சிரமப்படாமல் அனைவரும் அவனைக் காண்பீர்கள்! (இந்தப் பாக்கியத்தை அடைய) சூரியன் உதிப்பதற்கு முன்னரும் சூரியன் மறைவதற்கு முன்னரும் உள்ள தொழுகையை (தூக்கம், மறதி போன்றவை) உங்களை மிகைக்காதிருக்குமானால் அதைச் செய்து வாருங்கள் எனக் கூறி விட்டு திருக்குர்ஆனின் 50:39 வது வசனத்தையும் ஓதினார்கள் என ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும்; இது இடம் பெற்றுள்ளது.)
178 حدثنا محمد بن عبد اللَّهِ بن نُمَيْرٍ ثنا يحيى بن عِيسَى الرَّمْلِيُّ عن الْأَعْمَشِ عن أبي صَالِحٍ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ تَضَامُّونَ في رُؤْيَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ قالوا لَا قال فَكَذَلِكَ لَا تَضَامُّونَ في رُؤْيَةِ رَبِّكُمْ يوم الْقِيَامَةِ |
ஹதீஸ் எண்: 178
‘பவுர்ணமி இரவில் சந்திரனைப் பார்ப்பதில் உங்களுக்குச் சிரமம் எதுவுமிருக்குமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது ‘இருக்காது’ என்று அவர்களின் தோழர்கள் கூறினார்கள். ‘அது போலவே உங்கள் இறைவனை மறுமையில் காண்பதற்கு நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
179 حدثنا محمد بن الْعَلَاءِ الْهَمْدَانِيُّ ثنا عبد اللَّهِ بن إِدْرِيسَ عن الْأَعْمَشِ عن أبي صَالِحٍ السَّمَّانِ عن أبي سَعِيدٍ قال قُلْنَا يا رَسُولَ اللَّهِ أَنَرَى رَبَّنَا قال تَضَامُّونَ في رُؤْيَةِ الشَّمْسِ في الظَّهِيرَةِ في غَيْرِ سَحَابٍ قُلْنَا لَا قال فَتَضَارُّونَ في رُؤْيَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ في غَيْرِ سَحَابٍ قالوا لَا قال إِنَّكُمْ لَا تَضَارُّونَ في رُؤْيَتِهِ إلا كما تَضَارُّونَ في رُؤْيَتِهِمَا |
ஹதீஸ் எண்: 179
‘அல்லாஹ்வின் தூதரே! எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா?’ என்று நாங்கள் கேட்டோம். ‘மேகத்தால் மறைக்கப்படாத சூரியனை நடுப்பகலில் காண்பதற்கு உங்களுக்குச் சிரமம் எதுவும் இருக்குமா?’ என்று திருப்பிக் கேட்டார்கள். ‘இருக்காது’ என்று நாங்கள் கூறினோம். ‘மேகமற்ற பவுர்ணமி இரவில் சந்திரனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் எதுவுமிருக்குமா?’ என்று கேட்டார்கள். ‘இருக்காது’ என்று நாங்கள் கூறினோம். ‘இவ்விரண்டையும் காண்பதில் உங்களுக்குச் சிரமம் ஏற்படாது என்பது போலவே, உங்கள் இறைவனைக் காண்பதில் சிரமப்பட மாட்டீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
180 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا يَزِيدُ بن هَارُونَ أنا حَمَّادُ بن سَلَمَةَ عن يَعْلَى بن عَطَاءٍ عن وَكِيعِ بن حُدُسٍ عن عَمِّهِ أبي رَزِينٍ قال قلت يا رَسُولَ اللَّهِ أَنَرَى اللَّهَ يوم الْقِيَامَةِ وما آيَةُ ذلك في خَلْقِهِ قال يا أَبَا رَزِينٍ أَلَيْسَ كُلُّكُمْ يَرَى الْقَمَرَ مُخْلِيًا بِهِ قال قلت بَلَى قال فَاللَّهُ أَعْظَمُ وَذَلِكَ آيَةٌ في خلقة |
ஹதீஸ் எண்: 180
‘மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? இறைவன் படைத்தவற்றில் இதற்கு ஏதும் எடுத்துக் காட்டு உண்டா?’ என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். ‘சிரமமின்றி நீங்கள் ஒவ்வொருவரும் சந்திரனைக் காண்பதில்லையா?’ என்று திருப்பிக் கேட்டார்கள். ‘ஆம்’ என்று நான் பதிலளித்தேன். ‘அல்லாஹ் அதைவிடவும் மகத்தானவன். இறைவனை அனைவரும் காணமுடியும் என்பதற்கு சந்திரனே சான்றாக அமைந்துள்ளது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(குறிப்பு: வகீவு இப்னு ஹுதுஸ் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுவதால் இது பலவீனமான ஹதீஸ் ஆகும்.)