75:16 நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்
لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ فإذا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ
|
‘அதனை அவசரப்பட்டு மனனம் செய்து கொள்ள வேண்டுமென்பதற்காக நீங்கள் உங்கள் நாவை அசைக்க வேண்டாம்! ஏனெனில் அதனை ஒன்று சேர்ப்பதும், ஓத வைப்பதும் எம்மீது கடமையாகும். எனவே நாம் அதனை ஓதும் போது அதன் ஓதுதலையே நீர் கவனம் செலுத்துவீராக! பின்னர் (உம்மூலம்) அதற்கு விளக்கம் செய்வது எம் மீது கடமையாகும், பின்னர் அதனை நீர் (பிறருக்கு) ஓதிக் காட்டும் படிச் செயவதும் எம் மீது கடமையாகும்’ (75: 16-19)
விளக்கம்: இந்த வசனங்களுக்கான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கீழ்கண்டவாறு விளக்குகிறார்கள்.
5 حدثنا مُوسَى بن إِسْمَاعِيلَ قال حدثنا أبو عَوَانَةَ قال حدثنا مُوسَى بن أبي عَائِشَةَ قال حدثنا سَعِيدُ بن جُبَيْرٍ عن بن عَبَّاسٍ في قَوْلِهِ تَعَالَى ( لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ ) قال كان رسول اللَّهِ (ص) يُعَالِجُ من التَّنْزِيلِ شِدَّةً وكان مِمَّا يُحَرِّكُ شَفَتَيْهِ فقال بن عَبَّاسٍ فَأَنَا أُحَرِّكُهُمَا لَكُمْ كما كان رسول اللَّهِ (ص) يُحَرِّكُهُمَا وقال سَعِيدٌ أنا أُحَرِّكُهُمَا كما رأيت بن عَبَّاسٍ يُحَرِّكُهُمَا فَحَرَّكَ شَفَتَيْهِ فَأَنْزَلَ الله تَعَالَى ( لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ ) قال جَمْعُهُ له في صَدْرِكَ وَتَقْرَأَهُ ( فإذا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ) قال فَاسْتَمِعْ له وَأَنْصِتْ ( ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ ) ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ فَكَانَ رسول اللَّهِ (ص) بَعْدَ ذلك إذا أَتَاهُ جِبْرِيلُ اسْتَمَعَ فإذا انْطَلَقَ جِبْرِيلُ قَرَأَهُ النبي (ص) كما قَرَأَهُ
|
(ஜிப்ரீல் (அலை) அவர்கள் தங்களுக்கு திருக்குர்ஆனை ஓதிக் காட்டும் போது) அதை மனதில் பதிக்க வேண்டும் என்பதற்காக அவசரப்பட்டு நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் (75:16) என்ற திருக்குர்ஆன் வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
திருக்குர்ஆன் அருளப்பட்டதை நபி (ஸல்) அவர்கள் மிகுந்த சிரமத்துடனேயே சமாளித்து வந்தார்கள் என்பது அவர்களின் உதடுகளை அவர்கள் வேகமாக அசைப்பதன் மூலம் அது புலனாகும் என்று கூறிவிட்டு, ‘நபி (ஸல்) அவர்கள் தங்கள் இரு உதடுகளை அசைத்தது போன்று நான் அசைக்கிறேன்’ என்று சொல்லி தங்கள் இரு உதடுகளையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அசைத்துக் காட்டுவார்களாம்.
‘(ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதிக்காட்டும் போது) அதனை அவசரப்பட்டு மனனம் செய்து கொள்ள வேண்டுமென்பதற்காக நீங்கள் உங்கள் நாவை அசைக்க வேண்டாம்! ஏனெனில் அதனை (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும், (உங்கள் நாவு மூலம்) ஓத வைப்பதும் எம்மீது கடமையாகும். (அதாவது உமது நெஞ்சம் உமக்காக அதனை ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ளும், பின்னர் அதனை பிறருக்கு ஓதிக் காட்டுவீர்கள்) எனவே நாம் அதனை ஓதும் போது அதன் ஓதுதலையே நீர் கவனம் செலுத்துவீராக! (அதாவது மவுனமாக இருந்து அதனை செவிதாழ்த்திக் கேட்பீராக!) பின்னர் (உம்மூலம்) அதற்கு விளக்கம் செய்வது எம் மீது கடமையாகும், பின்னர் அதனை நீர் (பிறருக்கு) ஓதிக் காட்டும் படிச் செயவதும் எம் மீது கடமையாகும்’ (75: 16-19)
என்ற திருக்குர்ஆன் வசனங்களை அப்போது தான் அல்லாஹ் அருளினான்.
அதன் பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வரும் போது (அவர்களின் ஓதுவதை) செவிதாழ்த்திக் கேட்கும் வழக்கம் உடையவர்களாக ஆனார்கள். ஜிப்ரீல் சென்றதும் அவர்கள் ஓதியது போன்றே நபி (ஸல்) அவர்களும் ஓதலானார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5.