பக்கம் – 19 (ஹதீஸ்கள் 181 முதல் 190 வரை)
அத்தியாயம்: முகத்திமா – முகப்பு
181 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا يَزِيدُ بن هَارُونَ أَنْبَأَنَا حَمَّادُ بن سَلَمَةَ عن يَعْلَى بن عَطَاءٍ عن وَكِيعِ بن حُدُسٍ عن عَمِّهِ أبي رَزِينٍ قال قال رسول اللَّهِ (ص) ضَحِكَ رَبُّنَا من قُنُوطِ عِبَادِهِ وَقُرْبِ غِيَرِهِ قال قلت يا رَسُولَ اللَّهِ أَوَ يَضْحَكُ الرَّبُّ قال نعم قلت لَنْ نَعْدَمَ من رَبٍّ يَضْحَكُ خَيْرًا |
ஹதீஸ் எண்: 181
‘(ஒருவனுக்கு துன்பம் நேரும் போது) அந்தத் துன்பம் வெகு விரைவில் விலகி விடும் என்ற நிலையில் தன் அருளில் தன் அடியார்கள் நம்பிக்கை இழப்பதைக் கண்டு இறைவன் சிரிக்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! இறைவனும் சிரிப்பானா?’ என்று நான் கேட்டேன். ‘ஆம்’ என்றனர் நபி (ஸல்) அவர்கள். ‘சிரிக்கும் இறைவனிடமிருந்து நன்மைகளை நாம் இழக்க மாட்டோம்’ என்று நான் குறிப்பிட்டேன் என்று அபூரஸீன் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: வகீவு இப்னு ஹுதுஸ் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இங்கேயும் இடம் பெறுவதால் இது பலவீனமான ஹதீஸ் ஆகும்.)
182 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَمُحَمَّدُ بن الصَّبَّاحِ قالا ثنا يَزِيدُ بن هَارُونَ أَنْبَأَنَا حَمَّادُ بن سَلَمَةَ عن يَعْلَى بن عَطَاءٍ عن وَكِيعِ بن حُدُسٍ عن عَمِّهِ أبي رَزِينٍ قال قلت يا رَسُولَ اللَّهِ أَيْنَ كان رَبُّنَا قبل أَنْ يَخْلُقَ خَلْقَهُ قال كان في عَمَاءٍ ما تَحْتَهُ هَوَاءٌ وما فَوْقَهُ هَوَاءٌ وما ثَمَّ خَلْقٌ عَرْشُهُ على الْمَاءِ |
ஹதீஸ் எண்: 182
‘படைப்பினங்களைப் படைக்கும் முன்பாக நமது இறைவன் எங்கே இருந்தான்?’ என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். ‘அவன் மேகத்திலிருந்தான், அதன் மேலும் கீழும் வெட்ட வெளியாக இருந்தது. அப்பொழுது எந்தப் படைப்பினமும் இருந்ததில்லை, அவனுடைய ‘அர்ஷ்’ தண்ணீரின் மேல் இருந்தது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூரஸீன் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: வகீவு இப்னு ஹுதுஸ் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இங்கேயும் இடம் பெறுவதால் இது ஏற்கத்தகாத ஹதீஸ் ஆகும்.)
183 حدثنا حُمَيْدُ بن مَسْعَدَةَ ثنا خَالِدُ بن الحرث ثنا سَعِيدٌ عن قَتَادَةَ عن صَفْوَانَ بن مُحْرِزٍ الْمَازِنِيِّ قال بَيْنَمَا نَحْنُ مع عبد اللَّهِ بن عُمَرَ وهو يَطُوفُ بِالْبَيْتِ إِذْ عَرَضَ له رَجُلٌ فقال يا بن عُمَرَ كَيْفَ سَمِعْتَ رَسُولَ اللَّهِ (ص) يَذْكُرُ في النَّجْوَى قال سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول يدني الْمُؤْمِنُ من رَبِّهِ يوم الْقِيَامَةِ حتى يَضَعَ عليه كَنَفَهُ ثُمَّ يُقَرِّرُهُ بِذُنُوبِهِ فيقول هل تَعْرِفُ فيقول يا رَبِّ أَعْرِفُ حتى إذا بَلَغَ منه ما شَاءَ الله أَنْ يَبْلُغَ قال إني سَتَرْتُهَا عَلَيْكَ في الدُّنْيَا وأنا أَغْفِرُهَا لك الْيَوْمَ قال ثُمَّ يُعْطَى صَحِيفَةَ حَسَنَاتِهِ أو كِتَابَهُ بِيَمِينِهِ قال وَأَمَّا الْكَافِرُ أو الْمُنَافِقُ فَيُنَادَى على رؤوس الْأَشْهَادِ قال خَالِدٌ في الْأَشْهَادِ شَيْءٌ من انْقِطَاعٍ ( هَؤُلَاءِ الَّذِينَ كَذَبُوا على رَبِّهِمْ ألا لَعْنَةُ اللَّهِ على الظَّالِمِينَ ) |
ஹதீஸ் எண்: 183
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் கஃபாவை தவாப் செய்து கொண்டிருந்த போது ஒரு மனிதர் அவர்களை இடைமறித்து ‘உமருடைய மகனே! இறைவன் தன் அடியார்களுடன் நடத்தும் இரகசிய உரையாடல் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் செவியுற்றது என்ன?’ என்று கேட்டார். கியாமத் நாளில் மூமின் தன் இறைவனுக்கு அருகே கொண்டு வரப்படுவான். மற்றவர்கள் காணாத வகையில் ஒரு திரையை இறைவன் அவனுக்காக ஏற்படுத்துவான். பின்பு, அவன் செய்த பாவங்கள் ஒவ்வொன்றையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். (இந்தப்பாவம் செய்தாயே!) அது உனக்குத் தெரியுமா? என்று இறைவன் கேட்பான். ‘என் இறைவா! நான் அறிவேன்’ என்று அவன் கூறுவான். இப்படியே கேட்க வேண்டியவற்றையெல்லாம் இறைவன் கேட்பான். இறுதியில் ‘உலக வாழ்வில் இந்தத் தவறுகளை நீ செய்த போது, மற்றவர்களை விட்டும் மறைத்தேன். இன்று அவற்றை நான் மன்னித்து விட்டேன்’ என்று இறைவன் கூறி விடுவான். பின்பு அவனது நன்மை ஏடு அவனது வலது கையில் வழங்கப்படும். இறை மறுப்பாளனாக இரட்டை வேடம் போட்டவனாக இருந்தால் மக்கள் மத்தியில் வைத்து ‘இவர்கள் தான் தங்கள் இறைவன் பெயரால் பொய் கூறியவர்கள். இந்த அக்கிரமக்காரர்கள் மீது இறைவனின் லஃனத் (சாபம்) ஏற்படட்டும். (11:18) என்று பிரகடனப்படுத்தப்படுவார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர் (ரலி) பதிலளித்தார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
184 حدثنا محمد بن عبد الْمَلِكِ بن أبي الشَّوَارِبِ ثنا أبو عَاصِمٍ الْعَبَّادَانِيُّ ثنا الْفَضْلُ الرَّقَاشِيُّ عن مُحَمَّدِ بن الْمُنْكَدِرِ عن جَابِرِ بن عبد اللَّهِ قال قال رسول اللَّهِ (ص) بَيْنَا أَهْلُ الْجَنَّةِ في نَعِيمِهِمْ إِذْ سَطَعَ لهم نُورٌ فَرَفَعُوا رؤوسهم فإذا الرَّبُّ قد أَشْرَفَ عليهم من فَوْقِهِمْ فقال السَّلَامُ عَلَيْكُمْ يا أَهْلَ الْجَنَّةِ قال وَذَلِكَ قَوْلُ اللَّهِ ( سَلَامٌ قَوْلًا من رَبٍّ رَحِيمٍ ) قال فَيَنْظُرُ إِلَيْهِمْ وَيَنْظُرُونَ إليه فلا يَلْتَفِتُونَ إلى شَيْءٍ من النَّعِيمِ ما دَامُوا يَنْظُرُونَ إليه حتى يَحْتَجِبَ عَنْهُمْ وَيَبْقَى نُورُهُ وَبَرَكَتُهُ عليهم في دِيَارِهِمْ |
ஹதீஸ் எண்: 184
சுவர்க்கவாசிகள் தங்கள் இன்பங்களில் திளைத்திருக்கும் போது அவர்களுக்கு பேரொளி ஒன்று தோன்றும். அவர்கள் தங்கள் தலையை உயர்த்திப் பார்ப்பார்கள். மேற்புறத்திலிருந்து அவர்களுக்கு இறைவன் காட்சி தருவான். ‘சுவர்க்கவாசிகளே அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று கூறுவான். ‘நிகரற்ற அன்புடைய இறைவனிடமிருந்து ஸலாம் உண்டு’ என்று இறைவன் (36:58 வசனத்தில்) இதையே குறிப்பிடுகிறான். அவனும் அவர்களை நோக்குவான். அவர்களும் அவனை நோக்குவார்கள். அவனை பார்த்துக் கொண்டிருக்கும் போது வேறு எந்த இன்பங்களையும் திரும்பிப் பார்க்கவும் மாட்டார்கள். இறைவன் அவர்களை விட்டும் மறைந்த பின், அவனது பேரொளியும் அவனது பரகத்தும் அவர்களின் இல்லங்களில் எஞ்சி நிற்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: அபூஆஸ் அல்அப்பாதானி என்ற பொய்யரும், பழ்லு அர்ரகாஷ் என்ற பலவீனமானவரும் இங்கே இடம் பெறுவதால் இது நம்பகமற்ற ஹதீஸாகும்.)
185 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن الْأَعْمَشِ عن خَيْثَمَةَ عن عَدِيِّ بن حَاتِمٍ قال قال رسول اللَّهِ (ص) ما مِنْكُمْ من أَحَدٍ إلا سَيُكَلِّمُهُ رَبُّهُ ليس بَيْنَهُ وَبَيْنَهُ تَرْجُمَانٌ فَيَنْظُرُ من عن أَيْمَنَ منه فلا يَرَى إلا شيئا قَدَّمَهُ ثُمَّ يَنْظُرُ من عن أَيْسَرَ منه فلا يَرَى إلا شيئا قَدَّمَهُ ثُمَّ يَنْظُرُ أَمَامَهُ فَتَسْتَقْبِلُهُ النَّارُ فَمَنْ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَتَّقِيَ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ فَلْيَفْعَلْ |
ஹதீஸ் எண்: 185
‘உங்களில் எவருடனும் உங்கள் இறைவன் பேசாமலிருக்க மாட்டான். அவனுக்கும் அவனது இறைவனுக்கும் இடையே எந்த மொழி பெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்கள். அவனுக்கு வலப்புறத்தில் உள்ளோர் நாங்கள் முற்படுத்திய (நன்மைகளைத்) தவிர வேறு எதையும் காண மாட்டார்கள். அவனுக்கு இடப்புறத்திலிருப்போர் தாங்கள் முற்படுத்திய (தீமைகளைத்) தவிர வேறு எதையும் காண மாட்டார்கள். பின்பு நரகம் அவனை முன்னோக்கியதாகக் காண்பான். எனவே எவர் நரகின் வேதனையிலிருந்து ஒரு பேரீத்தம் பழத்தின் சிறு பகுதியைத் தர்மம் செய்வதன் மூலம் தப்பித்துக் கொள்ள விரும்புகிறாரோ அவர் அதைச் செய்யட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அதீ இப்னு ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
186 حدثنا محمد بن بَشَّارٍ ثنا أبو عبد الصَّمَدِ عبد الْعَزِيزِ بن عبد الصَّمَدِ ثنا أبو عِمْرَانَ الْجَوْنِيُّ عن أبي بَكْرِ بن عبد اللَّهِ بن قَيْسٍ الْأَشْعَرِيِّ عن أبيه قال قال رسول اللَّهِ (ص) جَنَّتَانِ من فِضَّةٍ آنِيَتُهُمَا وما فِيهِمَا وَجَنَّتَانِ من ذَهَبٍ آنِيَتُهُمَا وما فِيهِمَا وما بين الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إلى رَبِّهِمْ تَبَارَكَ وَتَعَالَى إلا رِدَاءُ الْكِبْرِيَاءِ على وَجْهِهِ في جَنَّةِ عَدْنٍ |
ஹதீஸ் எண்: 186
வெள்ளிப் பாத்திரங்களையும் வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களையும் கொண்ட இரண்டு சுவர்க்கங்கள் உள்ளன. தங்கப் பாத்திரங்களையும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களையும் கொண்ட இரண்டு சுவர்க்கங்கள் உள்ளன. ‘அத்னு’ என்னும் சுவனத்திலிருந்து கொண்டு இறைவனைத் தரிசிப்பவர்களுக்கும் இறைவனுக்கும் இடையே அவனது பெருமை எனும் மேல் ஆடை தவிர வேறு எதுவும் இராது (அதாவது அவன் தன் பெருமையை குறைத்துக் கொள்ளாத அளவுக்கு காட்சி தருவான்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
187 حدثنا عبد الْقُدُّوسِ بن مُحَمَّدٍ ثنا حَجَّاجٌ ثنا حَمَّادٌ عن ثَابِتٍ الْبُنَانِيِّ عن عبد الرحمن بن أبي لَيْلَى عن صُهَيْبٍ قال تَلَا رسول اللَّهِ (ص) هذه الْآيَةَ ( لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ ) وقال إذا دخل أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ نَادَى مُنَادٍ يا أَهْلَ الْجَنَّةِ إِنَّ لَكُمْ عِنْدَ اللَّهِ مَوْعِدًا يُرِيدُ أَنْ يُنْجِزَكُمُوهُ فَيَقُولُونَ وما هو أَلَمْ يُثَقِّلْ الله مَوَازِينَنَا وَيُبَيِّضْ وُجُوهَنَا وَيُدْخِلْنَا الْجَنَّةَ وَيُنْجِنَا من النَّارِ قال فَيَكْشِفُ الْحِجَابَ فَيَنْظُرُونَ إليه فَوَاللَّهِ ما أَعَطَاهُمْ الله شيئا أَحَبَّ إِلَيْهِمْ من النَّظَرِ يَعْنِي إليه ولا أَقَرَّ لِأَعْيُنِهِمْ |
ஹதீஸ் எண்: 187
சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்தவுடன் ‘சுவனவாசிகளே! அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதி ஒன்று உள்ளது. அதை உங்கள் இறைவன் நிறைவேற்ற விரும்புகிறான்’ என்று அழைப்பாளர் ஒருவர் கூறுவார். அதற்கு அவர்கள் ‘அது என்ன வாக்குறுதி? எங்கள் நன்மையின் எடையை அவன் அதிகப்படுத்தவில்லையா? எங்கள் முகங்களை வெண்மையாக்கிடவில்லையா? எங்களை சுவர்க்கத்தில் நுழைக்கவில்லையா? நரகத்திலிருந்து எங்களை அவன் விடுவிக்கவில்லையா? (இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்) என்பர். உடன் இறைவன் திரையை விலக்குவான். அவனை அவர்கள் காண்பர். அவனை காண்பதை விடவும் விருப்பமான மகிழ்ச்சியான வேறு ஒன்றையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு ‘நன்மை செய்தவர்களுக்கு நல்ல கூலியும் (அதைவிட) அதிகமும் உண்டு (10:26) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள் என்று ஸுஹைப் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: அஹ்மத், திர்மிதியிலும் இது இடம் பெற்றுள்ளது.)
188 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو مُعَاوِيَةَ ثنا الْأَعْمَشُ عن تَمِيمِ بن سَلَمَةَ عن عُرْوَةَ بن الزُّبَيْرِ عن عَائِشَةَ قالت الْحَمْدُ لِلَّهِ الذي وَسِعَ سَمْعُهُ الْأَصْوَاتَ لقد جَاءَتْ الْمُجَادِلَةُ إلى النبي (ص) وأنا في نَاحِيَةِ الْبَيْتِ تَشْكُو زَوْجَهَا وما أَسْمَعُ ما تَقُولُ فَأَنْزَلَ الله ( قد سمع الله قَوْلَ التي تُجَادِلُكَ في زَوْجِهَا ) |
ஹதீஸ் எண்: 188
‘எல்லா ஓசைகளையும் செவியுறும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். நான் வீட்டின் ஒரு மூலையில் இருக்கும் போது தன் கணவன் பற்றி முறையிடக்கூடிய பெண் ஒருத்தி வந்து நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டாள். அந்தப் பெண் கூறியதை நான் கூட செவியுற முடியவில்லை. (அவ்வளவு மெதுவாக முறையிட்டாள்) உடனே ‘தன் கணவன் பற்றி இந்த பெண் முறையிட்டதை அல்லாஹ் செவியுற்று விட்டான்’ (58:1) என்ற வசனம் இறங்கியது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
189 حدثنا محمد بن يحيى ثنا صَفْوَانُ بن عِيسَى عن بن عَجْلَانَ عن أبيه عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) كَتَبَ رَبُّكُمْ على نَفْسِهِ بيده قبل أَنْ يَخْلُقَ الْخَلْقَ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي |
ஹதீஸ் எண்: 189
‘என் கோபத்தை என் இரக்க குணம் வென்று விட்டது’ என இறைவன் படைப்பினங்களைப் படைப்பதற்கு முன் தன் மீது தன் கையால் எழுதி விட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: அஹ்மத், திர்மிதியிலும் இது இடம் பெற்றுள்ளது.)
190 حدثنا إِبْرَاهِيمُ بن الْمُنْذِرِ الْحِزَامِيُّ وَيَحْيَى بن حَبِيبِ بن عَرَبِيٍّ قالا ثنا مُوسَى بن إبراهيم بن كَثِيرٍ الْأَنْصَارِيُّ الْحَرَامِيُّ قال سمعت طَلْحَةَ بن خِرَاشٍ قال سمعت جَابِرَ بن عبد اللَّهِ يقول لَمَّا قُتِلَ عبد اللَّهِ بن عَمْرِو بن حَرَامٍ يوم أُحُدٍ لَقِيَنِي رسول اللَّهِ (ص) فقال يا جَابِرُ ألا أُخْبِرُكَ ما قال الله لِأَبِيكَ وقال يحيى في حَدِيثِهِ فقال يا جَابِرُ مالي أَرَاكَ مُنْكَسِرًا قال قلت يا رَسُولَ اللَّهِ اسْتُشْهِدَ أبي وَتَرَكَ عِيَالًا وَدَيْنًا قال أَفَلَا أُبَشِّرُكَ بِمَا لَقِيَ الله بِهِ أَبَاكَ قال بَلَى يا رَسُولَ اللَّهِ قال ما كَلَّمَ الله أَحَدًا قَطُّ إلا من وَرَاءِ حِجَابٍ وَكَلَّمَ أَبَاكَ كِفَاحًا فقال يا عَبْدِي تَمَنَّ عَلَيَّ أُعْطِكَ قال يا رَبِّ تُحْيِينِي فَأُقْتَلُ فِيكَ ثَانِيَةً فقال الرَّبُّ سُبْحَانَهُ إنه سَبَقَ مِنِّي أَنَّهُمْ إِلَيْهَا لَا يَرْجِعُونَ قال يا رَبِّ فَأَبْلِغْ من وَرَائِي قال فَأَنْزَلَ الله تَعَالَى ( ولا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا في سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ ) |
ஹதீஸ் எண்: 190
‘என் தந்தை அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஹராம் (ரலி) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்ட போது, என்னை நபி (ஸல்) அவர்கள் சந்தித்து, ‘ஜாபிரே! ஏன் மனமுடைந்து காணப்படுகிறீர்?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஷஹீதாக்கப்பட்டு விட்டார்’ குடும்பத்தினரையும், கடனையும் அவர் விட்டுச் சென்று விட்டார்’ என்று நான் கூறினேன். ‘அல்லாஹ் உம் தந்தையை எவ்வாறு எதிர் கொண்டான் என்ற நற்செய்தியை உமக்குக் கூறட்டுமா?’ என்று நபி (ஸல்) கேட்க, ‘ஆம்’ என்றேன். ‘அல்லாஹ் எவருடனும் திரைக்குப் பின்னாலிருந்தே தவிர உரையாடியது இல்லை, உம் தந்தையுடன் நேருக்கு நேர் உரையாடினான். எனது அடியானே! உமக்கு விருப்பமானதைக் கேள்! உமக்கு நான் வழங்குகிறேன்’ என்று இறைவன் கூறினான். என் இறைவா! எனக்கு உயிரளிப்பாயாக! மறுமுறையும் உன் பாதையில் கொல்லப்பட விரும்புகிறேன்’ என்று உம் தந்தை கூறினார். ‘மாந்தர் எவரும் திரும்பவும் உலகுக்குச் செல்ல முடியாது என முன்பே விதித்து விட்டேன்’ என இறைவன் கூறினான். ‘அப்படியானால் (எனக்குக் கிடைத்த பாக்கியம் பற்றி) உலகில் உள்ளோருக்கு அறிவித்து விடு’ என்று உம் தந்தை கூறினார். (அதை ஏற்று) இறைவன் ‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களென எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடனிருக்கிறார்கள். (அவனால்) உணவளிக்கப்படுகிறார்கள் (3:169) என்ற வசனத்தை அருளி அவர்களின் நிலையை உலகோருக்கு அறிவித்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: திர்மிதியிலும் இது இடம் பெற்றுள்ளது.)