இப்னுமாஜா பக்கம் – 20

பக்கம் – 20 (ஹதீஸ்கள் 191 முதல் 200 வரை)

அத்தியாயம்: முகத்திமா – முகப்பு

191 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن أبي الزِّنَادِ عن الْأَعْرَجِ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص)  إِنَّ اللَّهَ يَضْحَكُ إلى رَجُلَيْنِ يَقْتُلُ أَحَدُهُمَا الْآخَرَ كلاهما دخل الْجَنَّةَ يُقَاتِلُ هذا في سَبِيلِ اللَّهِ فَيُسْتَشْهَدُ ثُمَّ يَتُوبُ الله على قَاتِلِهِ فَيُسْلِمُ فَيُقَاتِلُ في سَبِيلِ اللَّهِ فَيُسْتَشْهَدُ

ஹதீஸ் எண்: 191

ஒருவரை ஒருவர் கொலை செய்து விட்டு இருவருமே சுவர்க்கத்தில் பிரவேசிப்பது பற்றி இறைவனே சிரிக்கிறான். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு ஷஹீதாக்கப்படுகிறார். அவரைக் கொன்றவர் பின்பு இஸ்லாத்தை ஏற்று அதனால் பாவம் மன்னிக்கப்பட்டு, அவரும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு ஷஹீதாக்கப்படுகிறார். (எனவே இருவருமே சுவர்க்கம் செல்கின்றனர்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

192 حدثنا حَرْمَلَةُ بن يحيى وَيُونُسُ بن عبد الأعلى قالا ثنا عبد اللَّهِ بن وَهْبٍ أخبرني يُونُسُ عن بن شِهَابٍ حدثني سَعِيدُ بن الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ كان يقول قال رسول اللَّهِ (ص) يَقْبِضُ الله الْأَرْضَ يوم الْقِيَامَةِ وَيَطْوِي السَّمَاءَ بِيَمِينِهِ ثُمَّ يقول أنا الْمَلِكُ أَيْنَ مُلُوكُ الأرض

ஹதீஸ் எண்: 192

மறுமை நாளில் பூமியை அல்லாஹ் தன் கைப்பிடிக்குள் கொண்டு வருவான், வானத்தை தன் வலக்கரத்தில் சுருட்டுவான். பின்பு ‘நானே உண்மையான அரசன், பூமியில் அரசர்களாக இருந்தோர் எங்கே?’ என்று கேட்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

193 حدثنا محمد بن يحيى ثنا محمد بن الصَّبَّاحِ ثنا الْوَلِيدُ بن أبي ثَوْرٍ الْهَمْدَانِيُّ عن سِمَاكٍ عن عبد اللَّهِ بن عَمِيرَةَ عن الْأَحْنَفِ بن قَيْسٍ عن الْعَبَّاسِ بن عبد الْمُطَّلِبِ قال كنت بِالْبَطْحَاءِ في عِصَابَةٍ وَفِيهِمْ رسول اللَّهِ (ص) فَمَرَّتْ بِهِ سَحَابَةٌ فَنَظَرَ إِلَيْهَا فقال ما تُسَمُّونَ هذه قالوا السَّحَابُ قال وَالْمُزْنُ قالوا وَالْمُزْنُ قال وَالْعَنَانُ قال أبو بَكْرٍ قالوا وَالْعَنَانُ قال كَمْ تَرَوْنَ بَيْنَكُمْ وَبَيْنَ السَّمَاءِ قالوا لَا نَدْرِي قال فإن بَيْنَكُمْ وَبَيْنَهَا إِمَّا وَاحِدًا أو اثْنَيْنِ أو ثَلَاثًا وَسَبْعِينَ سَنَةً وَالسَّمَاءُ فَوْقَهَا كَذَلِكَ حتى عَدَّ سَبْعَ سَمَاوَاتٍ ثُمَّ فَوْقَ السَّمَاءِ السَّابِعَةِ بَحْرٌ بين أَعْلَاهُ وَأَسْفَلِهِ كما بين سَمَاءٍ إلى سَمَاءٍ ثُمَّ فَوْقَ ذلك ثَمَانِيَةُ أَوْعَالٍ بين أَظْلَافِهِنَّ وَرُكَبِهِنَّ كما بين سَمَاءٍ إلى سَمَاءٍ ثُمَّ على ظُهُورِهِنَّ الْعَرْشُ بين أَعْلَاهُ وَأَسْفَلِهِ كما بين سَمَاءٍ إلى سَمَاءٍ ثُمَّ الله فَوْقَ ذلك تَبَارَكَ وَتَعَالَى

ஹதீஸ் எண்: 193

ஒரு கூட்டத்துடன் ‘பத்ஹா’ எனும் இடத்தில் நானிருந்தேன். அக்கூட்டத்தில் நபி (ஸல்) அவர்களும் இருந்தனர். அப்போது ஒரு மேகம் அவர்களைக் கடந்து சென்றது. அதனைப் பார்த்துவிட்டு ‘இதற்கு நீங்கள் என்ன பெயர் கூறுவீர்கள்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அங்கிருந்தோர் ‘ஸஹாப்’ என்றனர். ‘முஸ்னு’ என்றும் கூறுவீர்களா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க அவர்கள் ‘ஆம்’ என்றனர். ‘அனான்’ என்றும் கூறுவீர்களா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர்கள் ‘ஆம்’ என்றனர். (மூன்று வார்த்தைகளுக்கும் மேகம் என்பதே பொருள்.) ‘உங்களுக்கும் வானத்துக்கும் இடையே எவ்வளவு தூரம்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘எங்களுக்குத் தெரியாது’ என்று அவர்கள் கூறினர். உங்களுக்கும் வானத்துக்கும் இடையே ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று அல்லது எழுபது ஆண்டுகள் தொலைவு உள்ளது. இவ்வாறே அதற்கடுத்த வானத்திற்கும், இப்படியே ஏழு வானங்களுக்கும் இடையே இடைவெளி உண்டு எனக் கூறினார்கள். ஏழாம் வானத்திற்கு மேல் ‘கடல்’ ஒன்று உண்டு. அதன் அடிப்பாகத்திற்கும் மேல் பாகத்திற்கும் இடையே உள்ள தூரம் ஒரு வானத்திற்கும் மறுவானத்திற்கும் இடையே உள்ள தூரமாகும். அதற்கும் மேலே எட்டு மான்கள் உள்ளன. அதன் குளம்புகளுக்கும் முட்டுக் கால்களுக்கும் இடையே உள்ள தூரம் ஒரு வானத்திற்கும் மறுவானத்திற்கும் இடையே உள்ள தூரமாகும். அதன் முதுகுகள் மீது அர்ஷ் உண்டு. அதன் அடிப்பாகத்திற்கும் மேல் பாகத்திற்கும் இடையே ஒரு வானத்திற்கும், மற்றொரு வானத்திற்கும் இடையே உள்ள தூரமாகும். அதற்கும் மேலே அல்லாஹ் இருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்னப் என்பவர் வழியாக அப்துல்லாஹ் இப்னு உமைர் என்பவர் இதனை அறிவிக்கிறார், ஆனால் அப்துல்லாஹ், அஹ்னப் என்பவரிடம் எதையும் செவியுற்றதில்லை என புகாரி இமாம் கூறுகிறார்கள். இது தொடர்பற்ற ஹதீஸாகும்.)

194 حدثنا يَعْقُوبُ بن حُمَيْدِ بن كَاسِبٍ ثنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن عَمْرِو بن دِينَارٍ عن عِكْرِمَةَ عن أبي هُرَيْرَةَ أَنَّ النبي (ص)  قال إذا قَضَى الله أَمْرًا في السَّمَاءِ ضَرَبَتْ الْمَلَائِكَةُ أَجْنِحَتَهَا خُضْعَانًا لِقَوْلِهِ كَأَنَّهُ سِلْسِلَةٌ على صَفْوَانٍ فإذا فُزِّعَ عن قُلُوبِهِمْ قالوا مَاذَا قال رَبُّكُمْ قالوا الْحَقَّ وهو الْعَلِيُّ الْكَبِيرُ قال فَيَسْمَعُهَا مُسْتَرِقُو السَّمْعِ بَعْضُهُمْ فَوْقَ بَعْضٍ فَيَسْمَعُ الْكَلِمَةَ فَيُلْقِيهَا إلى من تَحْتَهُ فَرُبَّمَا أَدْرَكَهُ الشِّهَابُ قبل أَنْ يُلْقِيَهَا إلى الذي تَحْتَهُ فَيُلْقِيهَا على لِسَانِ الْكَاهِنِ أو السَّاحِرِ فَرُبَّمَا لم يُدْرَكْ حتى يُلْقِيَهَا فَيَكْذِبُ مَعَهَا مِائَةَ كَذْبَةٍ فَتَصْدُقُ تِلْكَ الْكَلِمَةُ التي سُمِعَتْ من السَّمَاءِ

ஹதீஸ் எண்: 194

வானுலகில் இறைவன் ஏதேனும் ஒரு விஷயம் பற்றி முடிவெடுத்தவுடன் வழுக்குப் பாறையில் விழுந்த இரும்பு வளையம் போல தங்கள் சிறகுகளை வானவர்கள் பணிவுடன் அடிப்பார்கள். அவர்களின் திடுக்கம் நீங்கிய பின் (தங்களுக்குள்) ‘உங்கள் இறைவன் கூறியது என்ன?’ என்று கேட்டுக் கொண்டு ‘உண்மையே கூறினான்’ எனப் பதிலும் கூறிக் கொள்வார்கள். (34:23) ஒட்டுக் கேட்கும் (ஷைத்தான்கள்) சிலருக்கு மேல் சிலராக அதனைக் கேட்க முயற்சிப்பார்கள், அவற்றில் ஓரிரு வார்த்தையை செவியுறவும் செய்வார்கள். அதைத் தங்களுக்குக் கீழே உள்ளவர்களுக்கு அனுப்புவார்கள். சில சமயங்களில் கீழுள்ளவர்களுக்கு அவர்கள் தகவல் அனுப்புவதற்கு முன் தீப்பந்தமும் அவர்களைத் தாக்கும். தாங்கள் ஒட்டுக் கேட்ட செய்தியுடன் நூறு பொய்களைக் கலந்து சூனியக்காரர்கள், ஜோதிடர்களிடம் சமர்ப்பிப்பார்கள். அவற்றில் வானிலிருந்து செவியுற்ற ஒரு வார்த்தை மட்டும் மெய்யாக நடந்தேறும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

195 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو مُعَاوِيَةَ عن الْأَعْمَشِ عن عَمْرِو بن مُرَّةَ عن أبي عُبَيْدَةَ عن أبي مُوسَى قال قام فِينَا رسول اللَّهِ (ص) بِخَمْسِ كَلِمَاتٍ فقال إِنَّ اللَّهَ لَا يَنَامُ ولا يَنْبَغِي له أَنْ يَنَامَ يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ يُرْفَعُ إليه عَمَلُ اللَّيْلِ قبل عَمَلِ النَّهَارِ وَعَمَلُ النَّهَارِ قبل عَمَلِ اللَّيْلِ حِجَابُهُ النُّورُ لو كَشَفَهُ لا حرقت سُبُحَاتُ وَجْهِهِ ما انْتَهَى إليه بَصَرُهُ من خَلْقِهِ

ஹதீஸ் எண்: 195

நிச்சயமாக இறைவன் உறங்குவதில்லை, உறங்குவது அவனுக்குத் தகுதியானதுமல்ல, தராசை உயர்த்துகிறான், தாழ்த்துகிறான். இரவில் செய்யப்படும் காரியங்கள் பகலில் செய்யப்படும் காரியங்களுக்கு முன்பும், பகலில் செய்யப்படும் காரியங்கள் இரவில் செய்யப்படும் காரியங்களுக்கு முன்பும் அவன் பார்வைக்குச் சென்று விடுகின்றன. அவனுக்கும் (அடியார்களுக்கும் இடையே) ஒளித்திரை உள்ளது. அந்த ஒளித்திரையை அவன் அகற்றினால் அவன் திருமுகத்தின் ஜோதி அவன் பார்வை படும் படைப்பினங்களை எல்லாம் எரித்துவிடும்’ என்ற ஐந்து விஷயங்களை ஒரு நாள் தமது சொற்பொழிவில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதாக அபூமூஸா (ரலி) அறிவிக்கிறார்கள்.

196 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا الْمَسْعُودِيُّ عن عَمْرِو بن مُرَّةَ عن أبي عُبَيْدَةَ عن أبي مُوسَى قال قال رسول اللَّهِ (ص) إِنَّ اللَّهَ لَا يَنَامُ ولا يَنْبَغِي له أَنْ يَنَامَ يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ حِجَابُهُ النُّورُ لو كَشَفَهَا لَأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ كُلَّ شَيْءٍ أَدْرَكَهُ بَصَرُهُ ثُمَّ قَرَأَ أبو عُبَيْدَةَ ( أَنْ بُورِكَ من في النَّارِ وَمَنْ حَوْلَهَا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ )

ஹதீஸ் எண்: 196

மேற்கூறிய அதே ஹதீஸுடன் 27:8 வசனத்தையும் நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டியதாக கூறப்படுகிறது.

197 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا يَزِيدُ بن هَارُونَ أَنْبَأَنَا محمد بن إسحاق عن أبي الزِّنَادِ عن الْأَعْرَجِ عن أبي هُرَيْرَةَ عن النبي (ص) قال يَمِينُ اللَّهِ مَلْأَى لَا يَغِيضُهَا شَيْءٌ سَحَّاءُ اللَّيْلَ وَالنَّهَارَ وَبِيَدِهِ الْأُخْرَى الْمِيزَانُ يَرْفَعُ الْقِسْطَ وَيَخْفِضُ قال أَرَأَيْتَ ما أَنْفَقَ مُنْذُ خَلَقَ الله السَّمَاوَاتِ وَالْأَرْضَ فإنه لم يَنْقُصْ مِمَّا في يَدَيْهِ شيئا

ஹதீஸ் எண்: 197

அல்லாஹ்வின் வலக்கரம் நிரம்பியுள்ளது. எதுவும் அதைக் குறைத்துவிட இயலாது. இரவிலும், பகலிலும வாரி வழங்குகிறான். அவனது மற்றொரு கரத்தில் துலாக்கோல் உண்டு. அதை உயரவும் தாழவும் செய்கிறான். வானங்களையும் பூமியையும் அவன் படைத்ததிலிருந்து அவன் செலவிட்டவை அவனது கைகளில் உள்ளவற்றில் எதனையும் குறைத்து விடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

198 حدثنا هِشَامُ بن عَمَّارٍ وَمُحَمَّدُ بن الصَّبَّاحِ قالا ثنا عبد الْعَزِيزِ بن أبي حَازِمٍ حدثني أبي عن عُبَيْدِ اللَّهِ بن مِقْسَمٍ عن عبد اللَّهِ بن عُمَرَ أَنَّهُ قال سمعت رَسُولَ اللَّهِ (ص) وهو على الْمِنْبَرِ يقول يَأْخُذُ الْجَبَّارُ سَمَاوَاتِهِ وَأَرْضَهُ بيده وَقَبَضَ بيده فَجَعَلَ يَقْبِضُهَا وَيَبْسُطُهَا ثُمَّ يقول أنا الْجَبَّارُ أَيْنَ الْجَبَّارُونَ أَيْنَ الْمُتَكَبِّرُونَ قال وَيَتَمَيَّلُ رسول اللَّهِ (ص) عن يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ حتى نَظَرْتُ إلى الْمِنْبَرِ يَتَحَرَّكُ من أَسْفَلِ شَيْءٍ منه حتى إني أَقُولُ أَسَاقِطٌ هو بِرَسُولِ اللَّهِ (ص)

ஹதீஸ் எண்: 198

(அனைத்தையும்) அடக்கியாளும் இறைவன் தனது வானங்களையும், தனது பூமியையும் தன்கையால் பிடிப்பான். இதைக் கூறும் போது தனது கைகளை நபி (ஸல்) அவர்கள் மூடித் திறந்து காட்டினார்கள். பின்னர் ‘நானே அடக்கியாள்பவன், பெருமையடித்துக் கொண்டிருந்தோரும் அடக்கியாண்டோரும் எங்கே?’ என்று இறைவன் கேட்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறும் போது அவர்கள் நின்று கொண்டிருந்த மிம்பர் (எனும் மேடை) கீழே விழுந்து விடுமோ என்று நான் எண்ணும் அளவுக்கு வலதுபுறமும், இடது புறமும் சாய்ந்தார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

199 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا صَدَقَةُ بن خَالِدٍ ثنا بن جَابِرٍ قال سمعت بُسْرَ بن عُبَيْدِ اللَّهِ يقول سمعت أَبَا إِدْرِيسَ الْخَوْلَانِيَّ يقول حدثني النَّوَّاسُ بن سَمْعَانَ الْكِلَابِيُّ قال سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول ما من قَلْبٍ إلا بين إِصْبَعَيْنِ من أَصَابِعِ الرحمن إن شَاءَ أَقَامَهُ وَإِنْ شَاءَ أَزَاغَهُ وكان رسول اللَّهِ (ص) يقول يا مُثَبِّتَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا على دِينِكَ قال وَالْمِيزَانُ بِيَدِ الرحمن يَرْفَعُ أَقْوَامًا وَيَخْفِضُ آخَرِينَ إلى يَوْمِ الْقِيَامَةِ

ஹதீஸ் எண்: 199

‘எவரது உள்ளமும் ரஹ்மானுடைய இரண்டு விரல்களுக்கு இடையே தான் உள்ளது, அவன் நாடினால் அதை நிலைப்படுத்துவான். அவன் நாடினால் அதை வழிதவறச் செய்வான்’ என்று நபி (ஸல்) கூற நான் செவியுற்றிருக்கிறேன். ‘உள்ளங்களை நிலைப்படுத்துபவனே! எங்கள் உள்ளங்களை உன் மார்க்கத்தில் நீ நிலைப்படுத்துவாயாக!’ என்றும் ‘துலாக்கோல் ரஹ்மானுடைய கரத்தில் உள்ளது. கியாம நாள் வரை சிலரை உயர்த்திக் கொண்டும் வேறு சிலரைத் தாழ்த்திக் கொண்டும் இருப்பான்’ என்றும் நபி (ஸல்) கூறுபவர்களாக இருந்தனர் என்று நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் அல்கிலாபி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதில் இடம் பெறும் ஒவ்வொரு வாக்கியமும் தனித்தனி ஹதீஸ்களாக பல்வேறு ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

200 حدثنا أبو كُرَيْبٍ محمد بن الْعَلَاءِ ثنا عبد اللَّهِ بن إسماعيل عن مُجَالِدٍ عن أبي الْوَدَّاكِ عن أبي سَعِيدٍ الْخُدْرِيِّ قال قال رسول اللَّهِ (ص) إِنَّ اللَّهَ لَيَضْحَكُ إلى ثَلَاثَةٍ لِلصَّفِّ في الصَّلَاةِ وَلِلرَّجُلِ يُصَلِّي في جَوْفِ اللَّيْلِ وَلِلرَّجُلِ يُقَاتِلُ أُرَاهُ قال خَلْفَ الْكَتِيبَةِ

ஹதீஸ் எண்: 200

தொழுகையில் அணி வகுப்பவன், நள்ளிரவில் தொழும் மனிதன், படையில் (சேர்ந்து) போர் புரியும் மனிதன் ஆகிய மூவரை நோக்கி அல்லாஹ் சிரிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் முஜாலித் இப்னு உமைர் என்பவர் பலவீனமானவர்.)

By admin