96:1 நபிகளாருக்கு வந்த முதல் வஹீ

 اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الذي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ من عَلَقٍ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ

‘படைத்தானே அந்த உமதிறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக! அவன் தான் மனிதனை ‘அலக்’கிலிருந்து படைத்தான். ஓதுவீராக, உமதிறைவன் கண்ணியம் மிக்கவன்’ (அல்குர்ஆன் 96:1-3)

விளக்கம்: முதன் முதலில் வஹீ வந்த நிகழ்ச்சியை நபி (ஸல்) அவர்கள் கீழ் கண்டவாறு விளக்குகிறார்கள்.

3 حدثنا يحيى بن بُكَيْرٍ قال حدثنا اللَّيْثُ عن عُقَيْلٍ عن بن شِهَابٍ عن عُرْوَةَ بن الزُّبَيْرِ عن عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أنها قالت أَوَّلُ ما بُدِئَ بِهِ رسول اللَّهِ (ص) من الْوَحْيِ الرُّؤْيَا الصَّالِحَةُ في النَّوْمِ فَكَانَ لَا يَرَى رُؤْيَا إلا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ ثُمَّ حُبِّبَ إليه الْخَلَاءُ وكان يَخْلُو بِغَارِ حِرَاءٍ فَيَتَحَنَّثُ فيه وهو التَّعَبُّدُ اللَّيَالِيَ ذَوَاتِ الْعَدَدِ قبل أَنْ يَنْزِعَ إلى أَهْلِهِ وَيَتَزَوَّدُ لِذَلِكَ ثُمَّ يَرْجِعُ إلى خَدِيجَةَ فَيَتَزَوَّدُ لِمِثْلِهَا حتى جَاءَهُ الْحَقُّ وهو في غَارِ حِرَاءٍ فَجَاءَهُ الْمَلَكُ فقال اقْرَأْ قال ما أنا بِقَارِئٍ قال فَأَخَذَنِي فَغَطَّنِي حتى بَلَغَ مِنِّي الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي فقال اقْرَأْ قلت ما أنا بِقَارِئٍ فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيَةَ حتى بَلَغَ مِنِّي الْجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي فقال اقْرَأْ فقلت ما أنا بِقَارِئٍ فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّالِثَةَ ثُمَّ أَرْسَلَنِي فقال ( اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الذي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ من عَلَقٍ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ )

(நபி (ஸல்)) அவர்கள் ஹிரா மலைக்குகையில் இருக்கும் நிலையில் (ஒரு நாள்) திடீரென்று ஒரு வானவர் அவர்களிடம் வந்து, ‘ஓதுவீராக!’ என்றார். அதற்கவர்கள், ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே’ என்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

உடனே அவர் என்னைப் பிடித்து எனக்கு மூச்சுத் திணறுமாறு என்னை இறுக்கியணைத்தார். (என் சிரமத்தை அவர் உணர்ந்ததும்) என்னை (அணைப்பதை) விட்டுவிட்டு மீண்டும் ‘ஓதுவீராக!’ என்றார். (அப்போதும்) ‘நான் ஓதத்தெரிந்தவனில்லையே’ என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து மூச்சுத் திணறும் வரை என்னை அணைத்து (என் சிரமத்தை அவர் உணர்ந்ததும்) என்னை (அணைப்பதை) விட்டுவிட்டு மீண்டும் ‘ஓதுவீராக!’ என்றார். (அப்போதும்) ‘நான் ஓதத்தெரிந்தவனில்லையே’ என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் என்னை அணைத்துப் பின்னர் விட்டுவிட்டு,

‘படைத்தானே அந்த உமதிறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக! அவன் தான் மனிதனை ‘அலக்’கிலிருந்து படைத்தான். ஓதுவீராக, உமதிறைவன் கண்ணியம் மிக்கவன்’ என்று ஓதினார்.

(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 3 ஹதீஸின் ஒரு பகுதி)

By admin