இப்னுமாஜா பக்கம் – 32

பக்கம் – 32 (ஹதீஸ்கள் 311 முதல் 320 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்

311 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا الصَّلْتُ بن دِينَارٍ عن عُقْبَةَ بن صُهْبَانَ قال سمعت عُثْمَانَ بن عَفَّانَ يقول ما تَغَنَّيْتُ ولا تَمَنَّيْتُ ولا مَسِسْتُ ذكرى بِيَمِينِي مُنْذُ بَايَعْتُ بها رَسُولَ اللَّهِ (ص)

ஹதீஸ் எண்: 311

‘என் வலக்கரத்தால் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி எடுத்ததிலிருந்து அதன் மூலம் என் மர்ம உறுப்பை நான் தொட்டதில்லை, மேலும் நான் பொய் சொன்னதில்லை, பாடல்களைப் படியதுமில்லை’ என்று உஸ்மான் (ரலி) கூறியதாக உக்பா இப்னு ஸுஹபான் என்பார் அறிவிக்கிறார்.

312 حدثنا يَعْقُوبُ بن حُمَيْدِ بن كَاسِبٍ ثنا الْمُغِيرَةُ بن عبد الرحمن وَعَبْدُ اللَّهِ بن رَجَاءٍ الْمَكِّيُّ عن مُحَمَّدِ بن عَجْلَانَ عن الْقَعْقَاعِ بن حَكِيمٍ عن أبي صَالِحٍ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) إذا اسْتَطَابَ أحدكم فلا يَسْتَطِبْ بِيَمِينِهِ لِيَسْتَنْجِ بِشِمَالِهِ

ஹதீஸ் எண்: 312

உங்களில் எவரும் மலஜலம் கழித்து சுத்தம் செய்யும் போது தன் வலக்கரத்தால் சுத்தம் செய்யக் கூடாது, தனது இடக்கரத்தால் சுத்தம் செய்யட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

16 بَاب الِاسْتِنْجَاءِ بِالْحِجَارَةِ والنهى عن الرَّوْثِ وَالرِّمَّةِ  

313 حدثنا محمد بن الصَّبَّاحِ أنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن بن عَجْلَانَ عن الْقَعْقَاعِ بن حَكِيمٍ عن أبي صَالِحٍ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص)  إنما أنا لَكُمْ مِثْلُ الْوَالِدِ لِوَلَدِهِ أُعَلِّمُكُمْ إذا أَتَيْتُمْ الْغَائِطَ فلا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ ولا تَسْتَدْبِرُوهَا وَأَمَرَ بِثَلَاثَةِ أَحْجَارٍ وَنَهَى عن الرَّوْثِ وَالرِّمَّةِ وَنَهَى أَنْ يَسْتَطِيبَ الرَّجُلُ بِيَمِينِهِ

பாடம் 16. கற்களால் சுத்தம் செய்யலாம், விட்டை மற்றும் எலும்புகளால் சுத்தம் செய்யலாகாது

ஹதீஸ் எண்: 313

ஒரு தந்தை தன் மகனுக்குக் கற்றுத் தருவது போல் உங்களுக்கு நான் கற்றுத் தருகிறேன். இந்த விஷயத்தில் நான் உங்களின் தந்தை போன்று இருக்கிறேன். நீங்கள் மலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கவும் கூடாது. முதுகுக்குப் பின்புறமும் ஆக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று கற்களால் சுத்தம் செய்ய உத்தர விட்டார்கள். விட்டை எலும்பு போன்றவற்றால் சுத்தம் செய்வதைத் தடுத்தார்கள். மேலும் வலக்கரத்தால் ஒரு மனிதன் சுத்தம் செய்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

 314 حدثنا أبو بَكْرِ بن خَلَّادٍ الْبَاهِلِيُّ ثنا يحيى بن سَعِيدٍ الْقَطَّانُ عن زُهَيْرٍ عن أبي إسحاق قال ليس أبو عُبَيْدَةَ ذَكَرَهُ وَلَكِنْ عبد الرحمن بن الْأَسْوَدِ عن الْأَسْوَدِ عن عبد اللَّهِ بن مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص)  أتى الْخَلَاءَ فقال ائْتِنِي بِثَلَاثَةِ أَحْجَارٍ فَأَتَيْتُهُ بِحَجَرَيْنِ وَرَوْثَةٍ فَأَخَذَ الْحَجَرَيْنِ وَأَلْقَى الرَّوْثَةَ وقال هِيَ رِجْسٌ

ஹதீஸ் எண்: 314

நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்ற போது ‘எனக்கு மூன்று கற்களை எடுத்துவா!’ என்று கூறினார்கள். நான் அவர்களிடம் இரண்டு கற்களையும் ஒரு விட்டையையும் எடுத்து வந்தேன். இரண்டு கற்களை மட்டும் எடுத்துக் கொண்டு விட்டையை எறிந்து விட்டு இது நஜீஸ் ஆகும் என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது)

315 حدثنا محمد بن الصَّبَّاحِ أنبانا سُفْيَانُ بن عُيَيْنَةَ ح وحدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ جميعا عن هِشَامِ بن عُرْوَةَ عن أبي خُزَيْمَةَ عن عُمَارَةَ بن خُزَيْمَةَ عن خُزَيْمَةَ بن ثَابِتٍ قال قال رسول اللَّهِ (ص)  في الِاسْتِنْجَاءِ ثَلَاثَةُ أَحْجَارٍ ليس فيها رَجِيعٌ

ஹதீஸ் எண்: 315

‘தூய்மை செய்வதற்கு மூன்று கற்கள் போதுமாகும். விட்டையால் சுத்தம் செய்யக் கூடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக குஸைமா இப்னு ஸாபித் (ரலி) அறிவிக்கிறார்கள்.

316 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن الْأَعْمَشِ ح وحدثنا محمد بن بَشَّارٍ ثنا عبد الرحمن ثنا سُفْيَانُ عن مَنْصُورٍ وَالْأَعْمَشُ عن إبراهيم عن عبد الرحمن بن يَزِيدَ عن سَلْمَانَ قال قال له بَعْضُ الْمُشْرِكِينَ وَهُمْ يَسْتَهْزِئُونَ بِهِ إني أَرَى صَاحِبَكُمْ يُعَلِّمُكُمْ كُلَّ شَيْءٍ حتى الْخِرَاءَةِ قال أَجَلْ أَمَرَنَا أَنْ لَا نَسْتَقْبِلَ الْقِبْلَةَ ولا نَسْتَنْجِيَ بِأَيْمَانِنَا ولا نَكْتَفِيَ بِدُونِ ثَلَاثَةِ أَحْجَارٍ ليس فيها رَجِيعٌ ولا عَظْمٌ

ஹதீஸ் எண்: 316

‘மலம் கழிப்பது உட்பட அனைத்துக் காரியங்களையும் உங்கள் நபி உங்களுக்குப் போதிக்கிறாரே!’ என்று கிண்டலாக முஷ்ரிக்குகள் ஸல்மான் (ரலி) அவர்களிடம் கூறிய போது, ஆம்! நாங்கள் கிப்லாவை முன்னோக்கி மலஜலம் கழிக்கக் கூடாது எனவும், வலக்கரத்தால் சுத்தம் செய்யலாகாது எனவும், மூன்று கற்களை விடக் குறைவாக பயன்படுத்தலாகாது எனவும், விட்டை, எலும்பு ஆகியவற்றால் சுத்தம் செய்யக் கூடாது என்றும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர்’ என்று ஸல்மான் (ரலி) பதிலளித்தார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், நஸயீ, திர்மிதி, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)

17 بَاب النَّهْيِ عن اسْتِقْبَالِ الْقِبْلَةِ بِالْغَائِطِ وَالْبَوْلِ  

317 حدثنا محمد بن رُمْحٍ الْمِصْرِيُّ أنا اللَّيْثُ بن سَعْدٍ عن يَزِيدَ بن أبى حَبِيبٍ أَنَّهُ سمع عَبْدَ اللَّهِ بن الْحَارِثِ بن جَزْءٍ الزُّبَيْدِيَّ يقول أنا أَوَّلُ من سمع النبي (ص)  يقول لَا يَبُولَنَّ أحدكم مُسْتَقْبِلَ الْقِبْلَةِ وأنا أَوَّلُ من حَدَّثَ الناس بِذَلِكَ

பாடம் 17. மலஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கலாகாது

ஹதீஸ் எண்: 317

‘உங்களில் எவரும் கிப்லாவை முன்னோக்கி சிறுநீர் கழிக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை முதன் முதலில் செவியுற்றவனும் முதன் முதலில் மக்களுக்கு இது பற்றி அறிவித்தவனும் நானே’ என்று அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ் (ரலி) குறிப்பிட்டார்கள்.

318 حدثنا أبو الطَّاهِرِ أَحْمَدُ بن عَمْرِو بن السَّرْحِ أنا عبد اللَّهِ بن وَهْبٍ أخبرني يُونُسُ عن بن شِهَابٍ عن عَطَاءِ بن يَزِيدَ أَنَّهُ سمع أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ يقول نهى رسول اللَّهِ (ص)  أَنْ يَسْتَقْبِلَ الذي يَذْهَبُ إلى الْغَائِطِ الْقِبْلَةَ وقال شَرِّقُوا أو غَرِّبُوا

ஹதீஸ் எண்: 318

மலம் கழிக்கச் செல்பவர் கிப்லாவை முன்னோக்குவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ மலஜலம் கழியுங்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. கிழக்கு மேற்காக அமருமாறு நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது மதீனா வாசிகளைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும்)

319 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا خَالِدُ بن مَخْلَدٍ عن سُلَيْمَانَ بن بِلَالٍ حدثني عَمْرُو بن يحيى الْمَازِنِيُّ عن أبي زَيْدٍ مولى الثَّعْلَبِيِّينَ عن مَعْقِلِ بن أبي مَعْقِلٍ الْأَسَدِيِّ وقد صَحِبَ النبي (ص)  قال نهى رسول اللَّهِ (ص)  أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَتَيْنِ بِغَائِطٍ أو بِبَوْلٍ

ஹதீஸ் எண்: 319

(பைத்துல் முகத்தஸ், கஃபா ஆகிய) இரண்டு கிப்லாக்களையும் மலஜலம் கழிக்கும் போது முன்னோக்கக் கூடாது’ என்று நபி (ஸல்) தடுத்ததாக மஃகில் இப்னு அபீமஃகில் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளரான ‘அபூஸைத்’ என்பவர் யாரென்றே தெரியாதவர், எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்)

320 حدثنا الْعَبَّاسُ بن الْوَلِيدِ الدِّمَشْقِيُّ ثنا مَرْوَانُ بن مُحَمَّدٍ ثنا بن لَهِيعَةَ عن أبي الزُّبَيْرِ عن جَابِرِ بن عبد اللَّهِ حدثني أبو سَعِيدٍ الْخُدْرِيُّ أَنَّهُ شَهِدَ على رسول اللَّهِ (ص)  أَنَّهُ نهى أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أو بِبَوْلٍ

ஹதீஸ் எண்: 320

‘மலஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்’ என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளராக ‘இப்னு லஹ்யஆ’ என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றாலும், இந்த கருத்து நம்பகமான மற்ற அறிவிப்பாளர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்படுவதால் இது ‘ஹஸன்’ எனும் நிலையை அடையும்.)

By admin