இப்னுமாஜா பக்கம் – 34

பக்கம் – 34 (ஹதீஸ்கள் 331 முதல் 340 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்

22 بَاب التَّبَاعُدِ لِلْبَرَازِ في الْفَضَاءِ  

331 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا إسماعيل بن عُلَيَّةَ عن مُحَمَّدِ بن عَمْرٍو عن أبي سَلَمَةَ عن الْمُغِيرَةِ بن شُعْبَةَ قال كان النبي (ص) إذا ذَهَبَ الْمَذْهَبَ أَبْعَدَ

பாடம் 22. மலம் கழிக்க தொலைவாகச் செல்லுதல்

ஹதீஸ் எண்: 331

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடம் சென்றால் தூரமாக சென்று விடுவார்கள் என்று முகீரா இப்னு ஷுஃபா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: நஸயீ, அபூதாவூத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

332 حدثنا محمد بن عبد اللَّهِ بن نُمَيْرٍ ثنا عمرو بن عُبَيْدٍ عن مُحَمَّدِ بن الْمُثَنَّى عن عَطَاءٍ الخرساني عن أَنَسٍ قال كنت مع النبي (ص) في سَفَرٍ فَتَنَحَّى لِحَاجَتِهِ ثُمَّ جاء فَدَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ

ஹதீஸ் எண்: 332

‘நான் ஒரு பிரயாணத்தின் போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். மலஜலம் கழிப்பதற்காக விலகிச் சென்று, பிறகு வந்தார்கள். தண்ணீர் கொண்டு வரச் செய்து ஒளூ செய்தார்கள்’ என்று அனஸ் (ரலி) கூறியதாக அதா அல்குரர்ஸானி அறிவிக்கிறார்.

(குறிப்பு: அனஸ் (ரலி) அவர்களிடம் எதையும் அதா அல்குராஸரானி செவியுறாத காரணத்தால் இது தொடர்பற்ற ஹதீஸாகும்.)

333 حدثنا يَعْقُوبُ بن حُمَيْدِ بن كَاسِبٍ ثنا يحيى بن سُلَيْمٍ عن بن خُثَيْمٍ عن يُونُسَ بن خَبَّابٍ عن يَعْلَى بن مُرَّةَ أَنَّ النبي (ص) كان إذا ذَهَبَ إلى الْغَائِطِ أَبْعَدَ

ஹதீஸ் எண்: 333

இங்கே 331 – வது ஹதீஸ் யஃலா இப்னு முர்ரா (ரலி) அறிவிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

334 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَمُحَمَّدُ بن بَشَّارٍ قالا ثنا يحيى بن سَعِيدٍ الْقَطَّانُ عن أبي جَعْفَرٍ الْخَطْمِيِّ قال أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَاسْمُهُ عُمَيْرُ بن يَزِيدَ عن عُمَارَةَ بن خُزَيْمَةَ وَالْحَارِثُ بن فُضَيْلٍ عن عبد الرحمن بن أبي قُرَادٍ قال حَجَجْتُ مع النبي (ص) فَذَهَبَ لِحَاجَتِهِ فَأَبْعَدَ

ஹதீஸ் எண்: 334

நபி (ஸல்) அவர்களுடன் நான் ஹஜ் செய்துள்ளேன், மலஜலம் கழிக்கும் தேவைக்காக அவர்கள் தொலைவாகச் சென்றார்கள் என்று அப்துர்ரஹ்மான் இப்னு அபீகுராத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: நஸயியிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

335 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عُبَيْدُ اللَّهِ بن مُوسَى أَنْبَأَنَا إسماعيل بن عبد الْمَلِكِ عن أبي الزُّبَيْرِ عن جَابِرٍ قال خَرَجْنَا مع رسول اللَّهِ (ص) في سَفَرٍ وكان رسول اللَّهِ (ص) لَا يَأْتِي الْبَرَازَ حتى يَتَغَيَّبَ فلا يُرَى

ஹதீஸ் எண்: 335

‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றோம். அவர்கள், யாரும் காண முடியாதவாறு மறைவாகவே கழிப்பிடம் செல்பவர்களாக இருந்தனர்’ என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான இஸ்மாயீல் இப்னு அப்துல் மலிக் என்பவர் பலவீனமானவர்.)

336 حدثنا الْعَبَّاسُ بن عبد الْعَظِيمِ الْعَنْبَرِيُّ ثنا عبد اللَّهِ بن كَثِيرِ بن جَعْفَرٍ ثنا كَثِيرُ بن عبد اللَّهِ الْمُزَنِيُّ عن أبيه عن جَدِّهِ عن بِلَالِ بن الْحَارِثِ الْمُزَنِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) كان إذا أَرَادَ الْحَاجَةَ أَبْعَدَ

ஹதீஸ் எண்: 336

‘நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்லும் போது தொலைவாகச் சென்று விடுவார்கள்’ என்று பிலால் இப்னுல் ஹாரிஸ் அல்முஸ்னீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான கஸீர் இப்னு அப்துல்லாஹ் என்பவர் பெரும் பொய்யராவார். எனினும் வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகின்றது. பார்க்க நஸயீ 16,17)

23 بَاب الِارْتِيَادِ لِلْغَائِطِ وَالْبَوْلِ  

337 حدثنا محمد بن بَشَّارٍ ثنا عبد الْمَلِكِ بن الصَّبَّاحِ ثنا ثَوْرُ بن يَزِيدَ عن حُصَيْنٍ الْحِمْيَرِيِّ عن أبي سعيد الْخَيْرِ عن أبي هُرَيْرَةَ عن النبي (ص) قال من اسْتَجْمَرَ فَلْيُوتِرْ من فَعَلَ ذلك فَقَدْ أَحْسَنَ وَمَنْ لَا فلا حَرَجَ وَمَنْ تَخَلَّلَ فَلْيَلْفِظْ وَمَنْ لَاكَ فَلْيَبْتَلِعْ من فَعَلَ ذاك فَقَدْ أَحْسَنَ وَمَنْ لَا فلا حَرَجَ وَمَنْ أتى الْخَلَاءَ فَلْيَسْتَتِرْ فَإِنْ لم يَجِدْ إلا كَثِيبًا من رَمْلٍ فَلْيَمْدُدْهُ عليه فإن الشَّيْطَانَ يَلْعَبُ بِمَقَاعِدِ بن آدَمَ من فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لَا فلا حَرَجَ

பாடம் 23. மலஜலம் கழிக்கும் போது மறைக்கும் விதமாக எதையேனும் ஏற்படுத்திக் கொள்ளுதல்

ஹதீஸ் எண்: 337

(சுத்தம் செய்வதற்காக) கற்களைப் பயன் படுத்துவோர் ஒற்றை எண்ணிக்கையில் பயன்படுத்தட்டும். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நல்லதைச் செய்கிறார். யார் செய்யவில்லையோ அவர் மீது குற்றமில்லை. (பற்களின் இடுக்கில் உள்ள பொருட்களை) குச்சி போன்றவற்றால் குத்தி வெளிப்படுத்தினால் அதைத் துப்பிவிட வேண்டும். நாவால் அவற்றை வெளிப்படுத்தினால் விழுங்கலாம். யார் இவ்வாறு நடக்கின்றாரோ அவர் நல்லதைச் செய்தவராவார். யார் செய்யவில்லையோ அவர் மேல் குற்றம் இல்லை. கழிப்பிடத்திற்கு யாரேனும் சென்றால் மறைத்துக் கொள்ளட்டும். மணற்குவியலைத் தவிர வேறு எதையும் அவர் பெற்றுக் கொள்ளவில்லையானால் அதன் மூலம் பின் பகுதியை மறைத்துக் கொள்ளட்டும். ஏனெனில் ஷைத்தான், மனிதர்களின் பின் பகுதியில் விளையாடுகிறான். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நல்லதைச் செய்தவராவார். யார் செய்யவில்லையோ அவர் மேல் குற்றம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி), அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளராகிய ஹுஸைன் அல்ஹிம்யரீ என்பவர் யாரென்றே தெரியாதவர். எனவே இது பலவீனமான ஹதீஸாகும். அஹ்மத், அபூதாவூத், இப்னு ஹிப்பான், ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

338 حدثنا عبد الرحمن بن عُمَرَ ثنا عبد الْمَلِكِ بن الصَّبَّاحِ بِإِسْنَادِهِ نَحْوَهُ وزاد فيه وَمَنْ اكْتَحَلَ فَلْيُوتِرْ من فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لَا فلا حَرَجَ وَمَنْ لَاكَ فَلْيَبْتَلِعْ

ஹதீஸ் எண்: 338

மேற்கூறிய அதே ஹதீஸுடன் ‘யார் சுருமா இடுகிறாரோ அவர் ஒற்றை எண்ணிக்கையில் இடட்டும்’ என்ற வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: இந்த ஹதீஸிலும் ஹுஸைன் அல்ஹிம்யரீ என்ற நபர் இடம் பெறுகிறார்.)

339 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن الْأَعْمَشِ عن الْمِنْهَالِ بن عَمْرٍو عن يَعْلَى بن مُرَّةَ عن أبيه قال كنت مع النبي (ص) في سَفَرٍ فَأَرَادَ أَنْ يقضى حَاجَتَهُ فقال لي ائْتِ تِلْكَ الْأَشَاءَتَيْنِ قال وَكِيعٌ يعنى النَّخْلَ الصِّغَارَ فَقُلْ لَهُمَا إِنَّ رَسُولَ اللَّهِ (ص) يَأْمُرُكُمَا أَنْ تَجْتَمِعَا فَاجْتَمَعَتَا فَاسْتَتَرَ بِهِمَا فَقَضَى حَاجَتَهُ ثُمَّ قال لي ائْتِهِمَا فَقُلْ لَهُمَا لِتَرْجِعْ كُلُّ وَاحِدَةٍ مِنْكُمَا إلى مَكَانِهَا فقلت لَهُمَا فَرَجَعَتَا

ஹதீஸ் எண்: 339

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தேன். அவர்கள் தம் (மலம் கழிக்கும்) தேவையை நிறைவு செய்ய எண்ணினார்கள். அப்போது என்னிடம் அந்த இரண்டு சிறிய பேரீத்த மரங்களிடம் சென்று ‘நீங்கள் இருவரும் ஒன்றாக வருமாறு அல்லாஹ்வின் தூதர் அழைப்பதாகக் கூறு!’ என்றார்கள். நான் சென்று அவ்வாறு கூறியதும் அம்மரங்கள் வந்தன. நபி (ஸல்) அவர்களை மறைத்துக் கொண்டன. அவர்கள் தம் தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர் என்னிடம் அம்மரங்களைப் பழைய இடத்திற்கே செல்லுமாறு கூறச் செய்தார்கள். நான் கூறியதும் அவை அவ்வாறே சென்றன’ என்று யஃலா இப்னு முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதே ஹதீஸ் அனஸ் (ரலி), இப்னு உமர் (ரலி) வழியாக திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.)

340 حدثنا محمد بن يحيى ثنا أبو النُّعْمَانِ ثنا مَهْدِيُّ بن مَيْمُونٍ ثنا محمد بن أبي يَعْقُوبَ عن الْحَسَنِ بن سَعْدٍ عن عبد اللَّهِ بن جَعْفَرٍ قال كان أَحَبَّ ما اسْتَتَرَ بِهِ النبي (ص) لِحَاجَتِهِ هَدَفٌ أو حَائِشُ نَخْلٍ

ஹதீஸ் எண்: 340

அடர்த்தியான மரங்கள், அல்லது உயரமான பகுதிகள் ஆகியவைகளுக்குப் பின்னால் மல ஜலம் கழிப்பதையே நபி (ஸல்) அவர்கள் விரும்புவார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

By admin