இப்னுமாஜா பக்கம் – 35
பக்கம் – 35 (ஹதீஸ்கள் 341 முதல் 350 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்

341 حدثنا محمد بن عَقِيلِ بن خُوَيْلِدٍ حدثني حَفْصُ بن عبد اللَّهِ حدثني إِبْرَاهِيمُ بن طَهْمَانَ عن مُحَمَّدِ بن ذَكْوَانَ عن يَعْلَى بن حَكِيمٍ عن سَعِيدِ بن جُبَيْرٍ عن بن عَبَّاسٍ قال عَدَلَ رسول اللَّهِ (ص) إلى الشِّعْبِ فَبَالَ حتى أنى آوى له من فَكِّ وَرِكَيْهِ حين بَالَ

ஹதீஸ் எண்: 341

‘நபி (ஸல்) அவர்கள் ஒரு பள்ளத்தாக்கின்பால் சென்று சிறுநீர் கழித்தார்கள். அவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக அவர்களின் பின் பகுதியை நான் மறைத்துக் கொண்டேன்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளராகிய முஹம்மத் இப்னு தக்வான் என்பவர் நம்பகமானவர் அல்ல)

24 بَاب النَّهْيِ عن الِاجْتِمَاعِ على الْخَلَاءِ وَالْحَدِيثِ عِنْدَهُ  

342 حدثنا محمد بن يحيى ثنا عبد اللَّهِ بن رَجَاءٍ أَنْبَأَنَا عِكْرِمَةُ بن عَمَّارٍ عن يحيى بن أبي كَثِيرٍ عن هِلَالِ بن عِيَاضٍ عن أبي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال لَا يَتَنَاجَى اثْنَانِ على غَائِطِهِمَا يَنْظُرُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا إلى عَوْرَةِ صَاحِبِهِ فإن اللَّهَ عز وجل يَمْقُتُ على ذلك

حدثنا محمد بن يحيى ثنا سَلْمُ بن إبراهيم الْوَرَّاقُ ثنا عِكْرِمَةُ عن يحيى بن أبى كَثِيرٍ عن عِيَاضِ بن هِلَالٍ قال محمد بن يحيى وهو الصَّوَابُ حدثنا محمد بن حُمَيْدٍ ثنا عَلِيُّ بن أبي بَكْرٍ عن سُفْيَانَ الثَّوْرِيِّ عن عِكْرِمَةَ بن عَمَّارٍ عن يحيى بن أبي كَثِيرٍ عن عِيَاضِ بن عبد اللَّهِ نَحْوَهُ

பாடம் 24. மலஜலம் கழிக்கும் போது பேசுவது கூடாது!

ஹதீஸ் எண்: 342

‘ஒருவரது மறைவிடத்தை மற்றவர்கள் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் மலம் கழிக்கலாகாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதன் இரண்டாவது அறிவிப்பாளரான ஹிலால் இப்னு இயாழ் என்பவர் யாரென்றே தெரியாதவர்.)

25 بَاب النَّهْيِ عن الْبَوْلِ في الْمَاءِ الرَّاكِدِ  

343 حدثنا محمد بن رُمْحٍ أنا اللَّيْثُ بن سَعْدٍ عن أبي الزُّبَيْرِ عن جَابِرٍ عن رسول اللَّهِ (ص) أَنَّهُ نهى عن أَنْ يُبَالَ في الْمَاءِ الرَّاكِدِ

பாடம் 25. தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கலாகாது!

ஹதீஸ் எண்: 343

தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்க நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அஹ்மத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

344 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو خَالِدٍ الْأَحْمَرُ عن بن عَجْلَانَ عن أبيه عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) لَا يَبُولَنَّ أحدكم في الْمَاءِ الرَّاكِدِ

ஹதீஸ் எண்: 344

தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும் இந்தக்கருத்து இடம் பெற்றுள்ளது.)

345 حدثنا محمد بن يحيى ثنا محمد بن الْمُبَارَكِ ثنا يحيى بن حَمْزَةَ ثنا بن أبي فَرْوَةَ عن نَافِعٍ عن بن عُمَرَ قال قال رسول اللَّهِ (ص) لَا يَبُولَنَّ أحدكم في الْمَاءِ النَّاقِعِ

ஹதீஸ் எண்: 345

‘பயன் தரும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான இப்னு அபீஃபர்வா என்பவர் பலவீனமானவர்.)

26 بَاب التَّشْدِيدِ في الْبَوْلِ  

346 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو مُعَاوِيَةَ عن الْأَعْمَشِ عن زَيْدِ بن وَهْبٍ عن عبد الرحمن بن حَسَنَةَ قال خَرَجَ عَلَيْنَا رسول اللَّهِ (ص) وفي يَدِهِ الدَّرَقَةُ فَوَضَعَهَا ثُمَّ جَلَسَ فَبَالَ إِلَيْهَا فقال بَعْضُهُمْ انْظُرُوا إليه يَبُولُ كما تَبُولُ الْمَرْأَةُ فَسَمِعَهُ النبي (ص) فقال وَيْحَكَ أَمَا عَلِمْتَ ما أَصَابَ صَاحِبَ بَنِي إِسْرَائِيلَ كَانُوا إذا أَصَابَهُمْ الْبَوْلُ قَرَضُوهُ بِالْمَقَارِيضِ فَنَهَاهُمْ عن ذلك فَعُذِّبَ في قَبْرِهِ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ ثنا أبو حَاتِمٍ ثنا عُبَيْدُ اللَّهِ بن مُوسَى أَنْبَأَنَا الْأَعْمَشُ فذكر نَحْوَهُ

பாடம் 26. சிறுநீர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருத்தல்

ஹதீஸ் எண்: 346

‘நபி (ஸல்) அவர்கள் கையில் ஒரு கேடயத்துடன் எங்களை நோக்கி வந்தார்கள். அதைத் (தரையில்) வைத்து அதை நோக்கி சிறுநீர் கழித்தார்கள். ‘இவர் பெண் சிறுநீர் கழிப்பது போல் (மறைவாக) சிறுநீர் கழிப்பதைப் பாருங்கள்!’ என்று ஒருவர் கூறினார். இதனைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் உமக்குக் கேடு உண்டாகட்டும்! பனீஇஸராயீல்கள் சமுதாயத்தில் அவர்களின் ஆடையில் சிறுநீர் பட்டுவிடுமானால் அவ்விடத்தைக் கத்தரியால் கத்தரிப்பவர்களாகவே இருந்தனர். இதை அவர்களில் ஒருவர் தடுத்தார். இதன் காரணமாகவே கப்ரில் அவர் வேதனை செய்யப்பட்டார் என்பது உமக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள். இதை அப்துர்ரஹ்மான் இப்னு ஹஸனா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இது நஸயியிலும் இடம் பெற்றுள்ளது.)

347 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عن الْأَعْمَشِ عن مُجَاهِدٍ عن طَاوُسٍ عن بن عَبَّاسٍ قال مَرَّ رسول اللَّهِ (ص) بِقَبْرَيْنِ جَدِيدَيْنِ فقال إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وما يُعَذَّبَانِ في كَبِيرٍ إما أَحَدُهُمَا فَكَانَ لَا يَسْتَنْزِهُ من بَوْلِهِ وَأَمَّا الْآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ

ஹதீஸ் எண்: 347

புதிய இரண்டு சமாதிகளுக்கருகில் நபி (ஸல்) அவர்கள் சென்றனர். அப்போது அவர்கள் ‘இவ்விருவரும் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பெரும் குற்றங்கள் காரணமாக இவர்கள் வேதனை செய்யப்பட வில்லை. இவர்களில் ஒருவர் சிறுநீர் விஷயத்தில் கவனமாக இருப்பதில்லை. மற்றவர் கோள் சொல்லிக் கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதி அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

348 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عَفَّانُ ثنا أبو عَوَانَةَ عن الْأَعْمَشِ عن أبي صَالِحٍ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ من الْبَوْلِ

ஹதீஸ் எண்: 348

‘கப்ருடைய வேதனையில் பெரும் பகுதி சிறுநீர் காரணமாகவே ஏற்படுகின்றது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், ஹாகிம், தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

349 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا وَكِيعٌ ثنا الْأَسْوَدُ بن شَيْبَانَ حدثني بَحْرُ بن مَرَّارٍ عن جَدِّهِ أبي بَكْرَةَ قال مَرَّ النبي (ص) بِقَبْرَيْنِ فقال إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وما يُعَذَّبَانِ في كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَيُعَذَّبُ في الْبَوْلِ وَأَمَّا الْآخَرُ فَيُعَذَّبُ في الْغَيْبَةِ

ஹதீஸ் எண்: 349

347 வது ஹதீஸே இங்கும் இடம் பெறுகின்றது. கோள் சொல்வதற்கு பதிலாக புறம் பேசுதல் இங்கே கூறப்படுகின்றது. இதை அபூபக்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

27 بَاب الرَّجُلِ يُسَلَّمُ عليه وهو يَبُولُ  

350 حدثنا إسماعيل بن مُحَمَّدٍ الطَّلْحِيُّ وَأَحْمَدُ بن سَعِيدٍ الدَّارِمِيُّ قالا ثنا رَوْحُ بن عُبَادَةَ عن سَعِيدٍ عن قَتَادَةَ عن الْحَسَنِ عن حُضَيْنِ بن الْمُنْذِرِ بن الْحَارِثِ بن وَعْلَةَ أبي سَاسَانَ الرَّقَاشِيِّ عن الْمُهَاجِرِ بن قُنْفُذِ بن عمير بن جذعان قال أَتَيْتُ النبي (ص) وهو يَتَوَضَّأُ فَسَلَّمْتُ عليه فلم يَرُدَّ على السَّلَامَ فلما فَرَغَ من وُضُوئِهِ قال إنه لم يَمْنَعْنِي من أَنْ أَرُدَّ إِلَيْكَ إلا أَنِّي كنت علي غَيْرِ وُضُوءٍ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ ثنا أبو حَاتِمٍ ثنا الْأَنْصَارِيُّ عن سَعِيدِ بن أبي عَرُوبَةَ فذكر نَحْوَهُ

பாடம் 27. சிறுநீர் கழிக்கும் போது ஸலாம் கூறலாமா?

ஹதீஸ் எண்: 350

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்து கொண்டிருக்கும் போது அவர்களிடம் சென்று ஸலாம் கூறினேன். அவர்கள் எனக்கு பதில் ஸலாம் கூறவில்லை. ஒளூ செய்து முடித்து பின், ‘நான் ஒளுவின்றி இருந்ததாலேயே உமக்கு பதில் கூறவில்லை’ என்றார்கள் என முஹாஜிர் இப்னு குன்ஃபுத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

 

By admin