இப்னுமாஜா பக்கம் – 36

பக்கம் – 36 (ஹதீஸ்கள் 351 முதல் 360 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்

351 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا مَسْلَمَةُ بن عَلِيٍّ ثنا الْأَوْزَاعِيُّ عن يحيى بن أبي كَثِيرٍ عن أبي سَلَمَةَ عن أبي هُرَيْرَةَ قال مَرَّ رَجُلٌ على النبي (ص) وهو يَبُولُ فَسَلَّمَ عليه فلم يَرُدَّ عليه فلما فَرَغَ ضَرَبَ بِكَفَّيْهِ الْأَرْضَ فَتَيَمَّمَ ثُمَّ رَدَّ عليه السَّلَامَ

ஹதீஸ் எண்: 351

‘நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த போது அவர்களை ஒரு மனிதர் கடந்து சென்றார். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறவில்லை. சிறுநீர் கழித்து முடித்ததும் தமது இரு கைகளையும் தரையில் அடித்து ‘தயம்மும்’ செய்து விட்டு அவரது ஸலாமுக்கு பதில் கூறினார்கள்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் ஐந்தாவது அறிவிப்பாளராகிய மஸ்லமா இப்னு அலி என்பவர் ஹதீஸ்கலை வல்லுனர்களிடம் நம்பகமானவர் அல்ல. எனவே இது பலவீனமான ஹதீஸாகும். ஆயினும் நம்பகமான வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் இந்த ஹதீஸ் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.)

352 حدثنا سُوَيْدُ بن سَعِيدٍ ثنا عِيسَى بن يُونُسَ عن هَاشِمِ بن الْبَرِيدِ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن جَابِرِ بن عبد اللَّهِ أَنَّ رَجُلًا مَرَّ على النبي (ص) وهو يَبُولُ فَسَلَّمَ عليه فقال له رسول اللَّهِ (ص) إذا رَأَيْتَنِي على مِثْلِ هذه الْحَالَةِ فلا تُسَلِّمْ عَلَيَّ فَإِنَّكَ إن فَعَلْتَ ذلك لم أَرُدَّ عَلَيْكَ

ஹதீஸ் எண்: 352

‘நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது அவர்களைக் கடந்து சென்ற ஒரு மனிதர் அவர்கள் மீது ஸலாம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இது போன்ற நிலையில் நீ என்னைக் கண்டால் என் மீது ஸலாம் கூறாதே! அவ்வாறு நீ கூறினால் உனக்கு நான் பதிலளிக்க மாட்டேன்’ என்று கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

353 حدثنا عبد اللَّهِ بن سَعِيدٍ وَالْحُسَيْنُ بن أبي السَّرِيِّ الْعَسْقَلَانِيُّ قالا ثنا أبو دَاوُدَ عن سُفْيَانَ عن الضَّحَّاكِ بن عُثْمَانَ عن نَافِعٍ عن بن عُمَرَ قال مَرَّ رَجُلٌ على النبي (ص) وهو يَبُولُ فَسَلَّمَ عليه فلم يَرُدَّ عليه

ஹதீஸ் எண்: 353

‘நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த போது அவர்களைக் கடந்து சென்ற ஒரு மனிதர், அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘அவருக்கு பதில் ஸலாம் கூறவில்லை’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதி, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

8 بَاب الِاسْتِنْجَاءِ بِالْمَاءِ  

354 حدثنا هَنَّادُ بن السَّرِيِّ ثنا أبو الْأَحْوَصِ عن مَنْصُورٍ عن إبراهيم عن الْأَسْوَدِ عن عَائِشَةَ قالت ما رأيت رَسُولَ اللَّهِ (ص) خَرَجَ من غَائِطٍ قَطُّ إلا مَسَّ مَاءً

பாடம் 28. தண்ணீரால் சுத்தம் செய்தல்

ஹதீஸ் எண்: 354

‘நபி (ஸல்) அவர்கள் மலம் கழித்தவுடன் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடியவர்களாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

355 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا صَدَقَةُ بن خَالِدٍ ثنا عُتْبَةُ بن أبي حَكِيمٍ حدثني طَلْحَةُ بن نَافِعٍ أبو سُفْيَانَ قال حدثني أبو أَيُّوبَ الْأَنْصَارِيُّ وَجَابِرُ بن عبد اللَّهِ وَأَنَسُ بن مَالِكٍ أَنَّ هذه الْآيَةَ نَزَلَتْ ) فيه رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ ( قال رسول اللَّهِ (ص) يا مَعْشَرَ الْأَنْصَارِ إِنَّ اللَّهَ قد أَثْنَى عَلَيْكُمْ في الطُّهُورِ فما طُهُورُكُمْ قالوا نَتَوَضَّأُ لِلصَّلَاةِ وَنَغْتَسِلُ من الْجَنَابَةِ وَنَسْتَنْجِي بِالْمَاءِ قال فَهُوَ ذَاكَ فَعَلَيْكُمُوهُ

ஹதீஸ் எண்: 355

அங்கே தூய்மையை விரும்பக் கூடிய மக்கள் உள்ளனர். (9:108) என்ற வசனம் இறங்கிய போது, ‘அன்ஸார்களே! உங்கள் தூய்மையை இறைவன் புகழ்ந்துரைக்கின்றான். உங்கள் தூய்மை தான் என்ன?’ என்ற நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் ‘நாங்கள் தொழுகைக்காக ஒளூச் செய்கிறோம். குளிப்புக் கடமையானால் குளித்து விடுகிறோம். (மலஜலம் கழித்து விட்டு) தண்ணீரால் சுத்தம் செய்கிறோம்’ என்று விடையளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இதுதான் இறைவன் பாராட்டிய தூய்மையாகும். இதைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள்!’ என்று கூறினார்கள். இதை அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்தச் செய்தி நம்பகமானது அல்ல. ஏனெனில் அபூஅய்யூப் (ரலி) இவ்வாறு அறிவிப்பதாகக் கூறும் ‘தல்ஹா இப்னு நாபிவு’ என்பார் அபூஅய்யூப் (ரலி)யின் காலத்தவர் அல்ல. மேலும் இதன் மூன்றாவது அறிவிப்பாளரான உத்பா இப்னு அபீஹகீம் என்பவர் பலவீனமானவராவார்.)

356 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن شَرِيكٍ عن جَابِرٍ عن زَيْدٍ الْعَمِّيِّ عن أبي الصِّدِّيقِ النَّاجِيِّ عن عَائِشَةَ أَنَّ النبي (ص) كان يَغْسِلُ مَقْعَدَتَهُ ثَلَاثًا قال بن عُمَرَ فَعَلْنَاهُ فَوَجَدْنَاهُ دَوَاءً وَطُهُورًا قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ ثنا أبو حَاتِمٍ وَإِبْرَاهِيمُ بن سُلَيْمَانَ الْوَاسِطِيُّ قالا ثنا أبو نُعَيْمٍ ثنا شَرِيكٌ نَحْوَهُ

ஹதீஸ் எண்: 356

‘நபி (ஸல்) அவர்கள் (மலம் கழித்ததும்) மூன்று தடவை கழுவக் கூடியவர்களாக இருந்தனர்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், இவ்வாறு நாங்களும் செய்யலானோம். இதனால் நல்ல சுத்தமும், நோய் நிவாரணமும் ஏற்பட நாங்கள் கண்டோம்’ என்று இப்னு உமர் (ரலி) குறிப்பிடுகின்றார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான ‘ஸைத் அல் அம்மீ’ என்பவரும் நான்காவது அறிவிப்பாளரான ‘ஜாபிர் அல்ஜுஃபீ’ என்பவரும் நம்பகமானவர்கள் அல்லர்’ எனவே இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அன்று)

357 حدثنا أبو كُرَيْبٍ ثنا مُعَاوِيَةُ بن هِشَامٍ عن يُونُسَ بن الحرث عن إبراهيم بن أبي مَيْمُونَةَ عن أبي صَالِحٍ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) نَزَلَتْ في أَهْلِ قُبَاءَ ) فيه رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ ( قال كَانُوا يَسْتَنْجُونَ بِالْمَاءِ فَنَزَلَتْ فِيهِمْ هذه الْآيَةُ

ஹதீஸ் எண்: 357

இங்கே 355 வது ஹதீஸின் கருத்து இடம் பெற்றுள்ளது.

9 بَاب من دَلَكَ يَدَهُ بِالْأَرْضِ بَعْدَ الِاسْتِنْجَاءِ  

358 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ عن شَرِيكٍ عن إبراهيم بن جَرِيرٍ عن أبي زُرْعَةَ بن عَمْرِو بن جَرِيرٍ عن أبي هُرَيْرَةَ أَنَّ النبي (ص) قَضَى حَاجَتَهُ ثُمَّ اسْتَنْجَى من تَوْرٍ ثُمَّ دَلَكَ يَدَهُ بِالْأَرْضِ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ ثنا أبو حَاتِمٍ ثنا سَعِيدُ بن سُلَيْمَانَ الْوَاسِطِيُّ عن شَرِيكٍ نَحْوَهُ

பாடம் 29. மலஜலம் கழித்து சுத்தம் செய்தபின் கைகளைத் தரையில் தேய்த்துக் கழுவுதல்

ஹதீஸ் எண்: 358

‘நபி (ஸல்) அவர்கள் மலம் கழித்த பின் பித்தளைப் பாத்திரத்தின் மூலம் சுத்தம் செய்தார்கள். பின்பு தமது கையைத் தரையில் தேய்த்தார்கள்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான ஷரீக் என்பவர் நினைவாற்றல் குறைந்தவர் என்பதால் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல.)

359 حدثنا محمد بن يحيى ثنا أبو نُعَيْمٍ ثنا أَبَانُ بن عبد اللَّهِ حدثني إِبْرَاهِيمُ بن جَرِيرٍ عن أبيه أَنَّ نَبِيَّ اللَّهِ (ص) دخل الْغَيْضَةَ فَقَضَى حَاجَتَهُ فَأَتَاهُ جَرِيرٌ بِإِدَاوَةٍ من مَاءٍ فَاسْتَنْجَى منها وَمَسَحَ يَدَهُ بِالتُّرَابِ

ஹதீஸ் எண்: 359

நபி (ஸல்) அவர்கள் ஒரு காட்டுக்குள் நுழைந்து தம் தேவையை நிறைவேற்றினார்கள். நான் அவர்களிடம் தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொண்டு வந்தேன். அதிலிருந்து தூய்மை செய்து விட்டு தம் கையை மண்ணில் தடவி தேய்த்தார்கள் என்று ஜரீர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

30 بَاب تَغْطِيَةِ الْإِنَاءِ  

360 حدثنا محمد بن يحيى ثنا يَعْلَى بن عُبَيْدٍ ثنا عبد الْمَلِكِ بن أبي سُلَيْمَانَ عن أبي الزُّبَيْرِ عن جَابِرٍ قال أَمَرَنَا النبي (ص) أَنْ نُوكِيَ أَسْقِيَتَنَا وَنُغَطِّيَ آنِيَتَنَا

பாடம் 30. பாத்திரங்களை மூடி வைத்தல்

ஹதீஸ் எண்: 360

எங்களின் தோல் பாத்திரங்களின் வாய்களைக் கட்டிவைத்துக் கொள்ளுமாறும், எங்களின் பாத்திரங்களை மூடி வைக்குமாறும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

By admin