இப்னுமாஜா பக்கம் – 37

பக்கம் – 37 (ஹதீஸ்கள் 361 முதல் 370 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்

361 حدثنا عِصْمَةُ بن الْفَضْلِ وَيَحْيَى بن حَكِيمٍ قالا ثنا حَرَمِيُّ بن عُمَارَةَ بن أبي حَفْصَةَ ثنا حَرِيشُ بن الْخِرِّيتِ أن بن أبي مُلَيْكَةَ عن عَائِشَةَ قالت كنت أصنع لِرَسُولِ اللَّهِ (ص) ثَلَاثَةَ آنِيَةٍ من اللَّيْلِ مُخَمَّرَةً إِنَاءً لِطَهُورِهِ وَإِنَاءً لِسِوَاكِهِ وَإِنَاءً لِشَرَابِهِ

ஹதீஸ் எண்: 361

‘நான் நபி (ஸல்) அவர்களுக்காக, அவர்கள் குடிப்பதற்காக ஒன்றும் பல்துலக்குவதற்காக ஒன்றும், தூய்மைப்படுத்துவதற்காக ஒன்றும் ஆக மூன்று பாத்திரங்களை இரவில் அவர்களுக்காக தயார் செய்து மூடி வைப்பேன்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: கரீஷி இப்னுல் கிர்ரீத் என்பவர் இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளராக இடம் பெறுகிறார். இவர் அனைத்து அறிஞர்களாலும் பலவீனமானவராகக் கருதப்படுவார். எனவே இந்தச் செய்தி நம்பகமானது அல்ல.)

362 حدثنا أبو بَدْرٍ عَبَّادُ بن الْوَلِيدِ ثنا مُطَهَّرُ بن الْهَيْثَمِ ثنا عَلْقَمَةُ بن أبي جَمْرَةَ الضُّبَعِيُّ عن أبيه أبي جَمْرَةَ عن بن عَبَّاسٍ قال كان رسول اللَّهِ (ص) لَا يَكِلُ طُهُورَهُ إلى أَحَدٍ ولا صَدَقَتَهُ التي يَتَصَدَّقُ بها يَكُونُ هو الذي يَتَوَلَّاهَا بِنَفْسِهِ

ஹதீஸ் எண்: 362

‘நபி (ஸல்) அவர்கள் (ஒளூ செய்தல் மற்றும் தன்னைத் துப்புரவு செய்தல் போன்ற) தூய்மை செய்யும் காரியங்களை எவரிடமும் ஒப்படைக்க மாட்டார்கள். மேலும் தாங்கள் செய்யும் தர்மத்தை தாங்களே பொறுப்பாளராக இருந்து தன் கையாலேயே செய்வார்கள்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளராகிய முதஹ்ஹிர் இப்னு ஹைஸம் என்பவர் நம்பகமானவர் அல்ல.)

31 بَاب غَسْلِ الْإِنَاءِ من وُلُوغِ الْكَلْبِ  

363 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو مُعَاوِيَةَ عن الْأَعْمَشِ عن أبي رَزِينٍ قال رأيت أَبَا هُرَيْرَةَ يَضْرِبُ جَبْهَتَهُ بيده وَيَقُولُ يا أَهْلَ الْعِرَاقِ أَنْتُمْ تَزْعُمُونَ أَنِّي أَكْذِبُ على رسول اللَّهِ (ص) لِيَكُونَ لَكُمْ الْمَهْنَأُ وعلى الْإِثْمُ أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ (ص) يقول إذا وَلَغَ الْكَلْبُ في إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ

பாடம் 31. நாய் வாய் வைத்து விட்ட பாத்திரங்களை கழுவுதல்

ஹதீஸ் எண்: 363

இராக் வாசிகளே! நான் நபி (ஸல்) அவர்கள் பெயரால் பொய் கூறுவதாக நீங்கள் கருதுகிறீர்கள். (இவ்வாறு பொய் சொல்லி இருந்தால்) எனக்கு அதன் பாவமும் உங்களுக்கு கூலியும் கிடைக்கும். (எனக்குப் பாவத்தை ஏற்படுத்தும் போது நான் எப்படி பொய் சொல்லி இருப்பேன்.) என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் தமது கையை தமது நெற்றியில் அடித்துக் கூறினார்கள்.

மேலும் தொடர்ந்து, ‘உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் விட்டு விடுமானால் அப்பாத்திரத்தை அவர் ஏழுமுறை கழுவிக் கொள்ள வேண்டும்’ என்று நபி (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என்றும் குறிப்பிட்டார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது பாரா மட்டும் முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

364 حدثنا محمد بن يحيى ثنا رَوْحُ بن عُبَادَةَ ثنا مَالِكُ بن أَنَسٍ عن أبي الزِّنَادِ عن الْأَعْرَجِ عن أبي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال إذا ولغ الْكَلْبُ في إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ

ஹதீஸ் எண்: 364

முந்தைய ஹதீஸின் இரண்டாவது பாராவே இங்கும் இடம் பெற்றுள்ளது.

365 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا شَبَابَةُ ثنا شُعْبَةُ عن أبي التَّيَّاحِ قال سمعت مُطَرِّفًا يحدث عن عبد اللَّهِ بن الْمُغَفَّلِ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال إذا وَلَغَ الْكَلْبُ في الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ وَعَفِّرُوهُ الثَّامِنَةَ بِالتُّرَابِ

ஹதீஸ் எண்: 365

பாத்திரங்களில் நாய் வாய் விட்டுவிடுமானால் அதை ஏழு தடவைக் குழுவிக் கொள்ளுங்கள்! எட்டாவது தடவையாக மண்ணால் தேய்த்துக் கழுவுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், நஸயீ, அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

366 حدثنا محمد بن يحيى ثنا بن أبي مَرْيَمَ أَنْبَأَنَا عبيد اللَّهِ بن عُمَرَ عن نَافِعٍ عن بن عُمَرَ قال قال رسول اللَّهِ (ص) إذا وَلَغَ الْكَلْبُ في إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ

ஹதீஸ் எண்: 366

இங்கே 364 வது ஹதீஸ் இப்னு உமர் (ரலி) வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

32 بَاب الْوُضُوءِ بِسُؤْرِ الْهِرَّةِ وَالرُّخْصَةِ في ذلك  

367 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا زَيْدُ بن الْحُبَابِ أَنْبَأَنَا مَالِكُ بن أَنَسٍ أخبرني إسحاق بن عبد اللَّهِ بن أبي طَلْحَةَ الْأَنْصَارِيُّ عن حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بن رِفَاعَةَ عن كَبْشَةَ بِنْتِ كَعْبٍ وَكَانَتْ تَحْتَ بَعْضِ وَلَدِ أبي قَتَادَةَ أنها صَبَّتْ لِأَبِي قَتَادَةَ مَاءً يَتَوَضَّأُ بِهِ فَجَاءَتْ هِرَّةٌ تَشْرَبُ فَأَصْغَى لها الْإِنَاءَ فَجَعَلْتُ أَنْظُرُ إليه فقال يا ابْنَةَ أَخِي أَتَعْجَبِينَ قال رسول اللَّهِ (ص) إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ هِيَ من الطَّوَّافِينَ أو الطَّوَّافَاتِ

பாடம் 32. பூனையின் எச்சில் நீரால் ஒளூ செய்யலாமா?

ஹதீஸ் எண்: 367

(எனது மாமனார்) அபூகதாதா (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்கு ஒளூ செய்யும் நீரை நான் வார்த்துக் கொடுத்தேன். அப்போது ஒரு பூனை வந்து அதிலிருந்து குடிக்கலாயிற்று. அது குடித்து முடியும் வரை அவர் பாத்திரத்தை (அது குடிப்பதற்கு ஏற்றவாறு) சாய்த்துக் கொண்டிருந்தார். அவர்களையே நான் கூர்ந்து நோக்குவதைக் கண்ட போது ‘என் சகோதரர் மகளே! நீ வியப்படைகிறாயா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். அதற்கு அவர்கள் ‘பூனைகள் அசுத்தமானவை அல்ல’ அவை உங்களைச் சுற்றி வரக்கூடியவை (அண்டி வாழ்பவை)’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக குறிப்பிட்டார்கள் என்று கப்ஷா பின்து கஃபு (ரலி) அறிவிக்கிறார்கள்.

368 حدثنا عَمْرُو بن رَافِعٍ وإسماعيل بن تَوْبَةَ قالا ثنا يحيى بن زَكَرِيَّا بن أبي زَائِدَةَ عن حَارِثَةَ عن عَمْرَةَ عن عَائِشَةَ قالت كنت أَتَوَضَّأُ أنا وَرَسُولُ اللَّهِ (ص) من إِنَاءٍ وَاحِدٍ قد أَصَابَتْ منه الْهِرَّةُ قبل ذلك

ஹதீஸ் எண்: 368

‘முன்பே பூனை வாய் விட்டிருந்த ஒரு பாத்திரத்தில் நானும் நபி (ஸல்) அவர்களும் ஒளூ செய்பவர்களாக இருந்தோம்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாம் அறிவிப்பாளராக ஹாரிஸா இப்னு அபிர் ரிஜால் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவராவார்.)

369 حدثنا محمد بن بَشَّارٍ ثنا عُبَيْدُ اللَّهِ بن عبد الْمَجِيدِ يَعْنِي أَبَا بَكْرٍ الْحَنَفِيَّ ثنا عبد الرحمن بن أبي الزِّنَادِ عن أبيه عن أبي سَلَمَةَ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) الْهِرَّةُ لَا تَقْطَعُ الصَّلَاةَ لِأَنَّهَا من مَتَاعِ الْبَيْتِ

ஹதீஸ் எண்: 369

‘பூனை தொழுகையை முறிக்காது, ஏனெனில் அது வீட்டுப் பொருட்களில் ஒன்றாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளர் அப்துர்ரஹ்மான் இப்னு அபிஸ் ஸினாத் என்பவர் நம்பகமானவரே. எனினும் இவரது நினைவாற்றல் இவர் பாக்தாதுக்கு வந்த கால கட்டத்தில் மாறி விட்டது.)

33 بَاب الرُّخْصَةِ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ  

370 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو الْأَحْوَصِ عن سِمَاكِ بن حَرْبٍ عن عِكْرِمَةَ عن بن عَبَّاسٍ قال اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النبي (ص) في جَفْنَةٍ فَجَاءَ النبي (ص) لِيَغْتَسِلَ أو يَتَوَضَّأَ فقالت يا رَسُولَ اللَّهِ إني كنت جُنُبًا فقال الْمَاءُ لَا يُجْنِبُ

பாடம் 33. பெண்கள் ஒளூ செய்து விட்டு மீதம் வைத்த தண்ணீரில் மற்றவர்கள் ஒளூ செய்யலாம்

ஹதீஸ் எண்: 370

நபி (ஸல்) அவர்களின் மனைவியருள் ஒருவர் அகன்ற பாத்திரத்தில் குளித்தார்கள். அந்த தண்ணீரில் ஒளூ செய்யவோ குளிக்கவோ நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! நான் கடமையான குளிப்பை இதில் நிறைவேற்றியுள்ளேன்’ என்று அந்த மனைவி கூறிய போது, ‘தண்ணீர் தவிர்க்கப்படுவதில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், நஸயீ, அபூதாவூத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

By admin