இப்னுமாஜா பக்கம் – 38

பக்கம் – 38 (ஹதீஸ்கள் 371 முதல் 380 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்

371 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن سِمَاكِ عن عِكْرِمَةَ عن بن عَبَّاسٍ أَنَّ امْرَأَةً من أَزْوَاجِ النبي (ص) اغْتَسَلَتْ من جَنَابَةٍ فَتَوَضَّأَ واغتسل النبي (ص) من فَضْلِ وَضُوئِهَا

ஹதீஸ் எண்: 371

‘நபி (ஸல்) அவர்களின் மனைவி ஒருவர் குளித்து விட்டு மீதம் வைத்த தண்ணீரில் நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்தார்கள்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான ஸிமாக் இப்னு ஹர்பு என்பவர் நம்பகமானவரே, எனினும் இவர் இக்ரிமா வழியாக அறிவிப்பவை மட்டும் நம்பகமான செய்தி அல்ல. ஏனெனில் நினைவு தடுமாறிய முதுமைக் காலத்திலேயே இக்ரிமா வழியாக இவர் அறிவித்துள்ளார். இந்த ஹதீஸும் இக்ரிமா வழியாக ‘ஸிமாக்’ அறிவிக்கும் ஹதீஸ்களில் ஒன்றாகும். ஆயினும் இதன் கருத்தை வலுப்படுத்தக் கூடிய வேறு ஹதீஸ்கள் உள்ளதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)

372 حدثنا محمد بن الْمُثَنَّى وَمُحَمَّدُ بن يحيى وإسحاق بن مَنْصُورٍ قالوا ثنا أبو دَاوُدَ ثنا شَرِيكٌ عن سِمَاكٍ عن عِكْرِمَةَ عن بن عَبَّاسٍ عن مَيْمُونَةَ زَوْجِ النبي (ص) أَنَّ النبي (ص) تَوَضَّأَ بِفَضْلِ غُسْلِهَا من الْجَنَابَةِ

ஹதீஸ் எண்: 372

முந்தைய ஹதீஸின் கருத்தே இங்கும் இடம் பெறுகிறது.

34 بَاب النَّهْيِ عن ذلك  

373 حدثنا محمد بن بَشَّارٍ ثنا أبو دَاوُدَ ثنا شُعْبَةُ عن عَاصِمٍ الْأَحْوَلِ عن أبي حَاجِبٍ عن الْحَكَمِ بن عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ (ص) نهى أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ

பாடம் 34. மேற்கூறியவாறு செய்யலாகாது என்பது பற்றியது

ஹதீஸ் எண்: 373

பெண்கள் ஒளூ செய்து விட்டு மீதம் வைத்த தண்ணீரில் ஆண்கள் ஒளூ செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று ஹகம் இப்னு அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், திர்மிதியிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

374 حدثنا محمد بن يحيى ثنا الْمُعَلَّى بن أَسَدٍ ثنا عبد الْعَزِيزِ بن الْمُخْتَارِ ثنا عَاصِمٌ الْأَحْوَلُ عن عبد اللَّهِ بن سَرْجِسَ قال نهى رسول اللَّهِ (ص) أَنْ يَغْتَسِلَ الرَّجُلُ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ وَالْمَرْأَةُ بِفَضْلِ الرَّجُلِ وَلَكِنْ يَشْرَعَانِ جميعا قال أبو عَبْد اللَّهِ بْن مَاجَةَ الصَّحِيحُ هو الْأَوَّلُ وَالثَّانِي وَهْمٌ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ ثنا أبو حَاتِمٍ وأبو عُثْمَانَ الْمُحَارِبِيُّ قالا ثنا الْمُعَلَّى بن أَسَدٍ نَحْوَهُ

ஹதீஸ் எண்: 374

ஆண்கள் மீதம் வைத்த தண்ணீரில் பெண்கள் குளிப்பதையும் பெண்கள் மீதம் வைத்த தண்ணீரில் ஆண்கள் குளிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் எனினும் இருவரும் (ஒரு பாத்திரத்திலிருந்து) ஒரே நேரத்தில் குளிக்கத் துவங்கலாம் என்று அனுமதித்தார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு ஸர்ஜிஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

முதலாவது ஹதீஸ் தான் சரியானது, இரண்டாவது ஹதீஸ் தவறானது என்று இப்னுமாஜா கூறுகிறேன்.

(குறிப்பு: இது அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது. இப்னுமாஜா அவர்கள் இந்த ஹதீஸை தவறானது என்பதற்கு ஆதாரம் எதையும் கூறவில்லை, இதில் குறைகாண நாமறிந்தவரை முகாந்திரம் எதுவும் இல்லை.)

375 حدثنا محمد بن يحيى ثنا عُبَيْدُ اللَّهِ عن إِسْرَائِيلَ عن أبي إسحاق عن الْحَارِثِ عن عَلِيٍّ قال كان النبي (ص) وَأَهْلُهُ يَغْتَسِلُونَ من إِنَاءٍ وَاحِدٍ ولا يَغْتَسِلُ أَحَدُهُمَا بِفَضْلِ صَاحِبِهِ

ஹஹதீஸ் எண்: 375

‘நபி (ஸல்) அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் ஒரு பாத்திரத்திலிருந்து குளிப்பவர்களாக இருந்தனர். ஆயினும் ஒருவர் மீதம் வைத்ததிலிருந்து மற்றவர் குளிக்க மாட்டார்கள்’ என்று அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான அபூஇஸ்ஹாக் என்ற அப்துல்லாஹ் இப்னு மைஸரா என்பவர் ஹதீஸ் கலை வல்லுனர்களால் பலவீனமாக்கப்பட்டவராவார்.)

35 بَاب الرَّجُلِ وَالْمَرْأَةِ يَغْتَسِلَانِ من إِنَاءٍ وَاحِدٍ  

376 حدثنا محمد بن رُمْحٍ أنا اللَّيْثُ بن سَعْدٍ عن بن شِهَابٍ ح وحدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن الزُّهْرِيِّ عن عُرْوَةَ عن عَائِشَةَ قالت كنت أَغْتَسِلُ أنا وَرَسُولُ اللَّهِ (ص) من إِنَاءٍ وَاحِدٍ

பாடம் 35. ஆண்களும் பெண்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிக்கலாம்

ஹதீஸ் எண்: 376

‘நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்திலிருந்து குளிப்பவர்களாக இருந்தோம்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத், நஸயியிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

377 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن عَمْرِو بن دِينَارٍ عن جَابِرِ بن زَيْدٍ عن بن عَبَّاسٍ عن خَالَتِهِ مَيْمُونَةَ قالت كنت أَغْتَسِلُ أنا وَرَسُولُ اللَّهِ (ص) من إِنَاءٍ وَاحِدٍ

ஹதீஸ் எண்: 377

மேற்கூறிய ஹதீஸ் மைமூனா (ரலி) வழியாக இங்கே இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: இதுவும் நஸயியில் இடம் பெற்றுள்ளது.)

378 حدثنا أبو عَامِرٍ الْأَشْعَرِيُّ عبد اللَّهِ بن عَامِرٍ ثنا يحيى بن أبي بُكَيْرٍ ثنا إِبْرَاهِيمُ بن نَافِعٍ عن بن أبي نَجِيحٍ عن مُجَاهِدٍ عن أُمِّ هَانِئٍ أَنَّ النبي (ص) اغْتَسَلَ وَمَيْمُونَةَ من إِنَاءٍ وَاحِدٍ في قَصْعَةٍ فيها أَثَرُ الْعَجِينِ

ஹதீஸ் எண்: 378

‘குழைத்த மாவின் அடையாளம் படிந்திருந்த ஒரு பாத்திரத்தில் மைமூனா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களும் குளிப்பவர்களாக இருந்தனர்’ என்று உம்முஹானி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: உம்முஹானி அவர்கள் வழியாக அறிவிக்கும் முஜாஹித் அவர்கள் உம்முஹானியின் காலத்தவர் அல்ல என்பதால் இது சரியானதல்ல, எனினும் நஸயியில் இடம் பெறும் இதே ஹதீஸில் உம்முஹானி வழியாக ‘அதாஃ’ என்பவர் அறிவிப்பதாக உள்ளதால் இது ஹஸன் நிலைக்கு உயர்கிறது.)

379 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا محمد بن الْحَسَنِ الْأَسَدِيُّ ثنا شَرِيكٌ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن جَابِرِ بن عبد اللَّهِ قال كان رسول اللَّهِ (ص) وَأَزْوَاجُهُ يَغْتَسِلُونَ من إِنَاءٍ وَاحِدٍ

ஹதீஸ் எண்: 379

‘நபி (ஸல்) அவர்களும், அவர்களது மனைவியரும் ஒரு பாத்திரத்திலிருந்து குளிப்பவர்களாக இருந்தனர்’ என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

380 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا إسماعيل بن عُلَيَّةَ عن هِشَامٍ الدَّسْتُوَائِيِّ عن يحيى بن أبي كَثِيرٍ عن أبي سَلَمَةَ عن زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ عن أُمِّ سَلَمَةَ أنها كانت وَرَسُولُ اللَّهِ (ص) يَغْتَسِلَانِ من إِنَاءٍ وَاحِدٍ

ஹதீஸ் எண்: 380

‘நபி (ஸல்) அவர்களும் உம்முஸலமா (ரலி) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்பவர்களாக இருந்தனர்’ என்று உம்முஸலமா (ரலி) அவர்களின் புதல்வி ஸைனப் என்பார் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இது நஸயியிலும் இடம் பெற்றுள்ளது.)

By admin