பக்கம் – 39 (ஹதீஸ்கள் 381 முதல் 390 வரை)
அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்
36 بَاب الرَّجُلِ وَالْمَرْأَةِ يتوضأن من إِنَاءٍ وَاحِدٍ
381 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا مَالِكُ بن أَنَسٍ حدثني نَافِعٌ عن بن عُمَرَ قال كان الرِّجَالُ وَالنِّسَاءُ يتوضؤون على عَهْدِ رسول اللَّهِ (ص) من إِنَاءٍ وَاحِدٍ |
பாடம் 36. ஆணும் பெண்ணும் ஒரு பாத்திரத்திலிருந்து ஒளூ செய்தல்
ஹதீஸ் எண்: 381
‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் ஒரு பாத்திரத்திலிருந்து ஒளூ செய்பவர்களாக இருந்தனர்’ என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஅத்தா, அஹ்மத், நஸயீ, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
382 حدثنا عبد الرحمن بن إبراهيم الدِّمَشْقِيُّ ثنا أَنَسُ بن عِيَاضٍ ثنا أُسَامَةُ بن زَيْدٍ عن سَالِمِ أبي النُّعْمَانِ وهو بن سَرْحٍ عن أُمِّ صُبَيَّةَ الْجُهَنِيَّةِ قالت رُبَّمَا اخْتَلَفَتْ يَدِي وَيَدُ رسول اللَّهِ (ص) في الْوُضُوءِ من إِنَاءٍ وَاحِدٍ قال أبو عَبْد اللَّهِ بْن مَاجَةَ سمعت مُحَمَّدًا يقول أُمُّ صُبَيَّةَ هِيَ خَوْلَةُ بِنْتُ قَيْسٍ فَذَكَرْتُ لِأَبِي زُرْعَةَ فقال صَدَقَ |
ஹதீஸ் எண்: 382
‘ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் ஒளூ செய்யும் போது எங்கள் கைகள் போட்டி போட்டுக் கொள்ளும்’ என்று கவ்லா பின்து கைஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
383 حدثنا محمد بن يحيى ثنا دَاوُدُ بن شَبِيبٍ ثنا حَبِيبُ بن أبي حَبِيبٍ عن عَمْرِو بن هَرَمٍ عن عِكْرِمَةَ عن عَائِشَةَ عن النبي (ص) أَنَّهُمَا كَانَا يتوضأن جميعا لِلصَّلَاةِ |
ஹதீஸ் எண்: 383
‘நபி (ஸல்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களும் தொழுகைக்காக சேர்ந்து ஒளூ செய்பவர்களாக இருந்தனர்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
37 بَاب الْوُضُوءِ بِالنَّبِيذِ
384 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ عن أبيه ح وحدثنا محمد بن يحيى ثنا عبد الرَّزَّاقِ عن سُفْيَانَ عن أبي فَزَارَةَ الْعَبْسِيِّ عن أبي زَيْدٍ مولى عَمْرِو بن حُرَيْثٍ عن عبد اللَّهِ بن مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال له لَيْلَةَ الْجِنِّ عِنْدَكَ طَهُورٌ قال لَا إلا شَيْءٌ من نَبِيذٍ في إِدَاوَةٍ قال تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ فَتَوَضَّأَ هذا حَدِيثُ وَكِيعٍ |
பாடம் 37. நபீத் எனும் பானத்தில் ஒளூ செய்தல்
(குறிப்பு: தண்ணீரில் பேரீத்தம் பழங்களையோ, திராட்சையையோ போட்டு வைத்து, தண்ணீருக்கு சுவை ஏற்றுவது அரபியர் வழக்கம். போதை தரும் அளவுக்கு நீண்ட நாட்கள் ஊற வைப்பதும் உண்டு. போதை தராத அளவுக்கு ஒன்றிரண்டு நாட்கள் ஊற வைப்பதும் உண்டு. போதை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தா விட்டாலும் இரண்டுமே ‘நபீத்’ எனப்படும்.)
ஹதீஸ் எண்: 384
‘உம்மிடம் தூய்மை செய்யும் தண்ணீர் உள்ளதா?’ என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டனர். அதற்கு நான், ‘தோல் பாத்திரத்தில் உள்ள ‘நபீத்’ தவிர வேறொன்றும் இல்லை’ என்றேன். (அதில் போடப்பட்டிருப்பது) நல்ல பேரீத்தம்பழம் தண்ணீரும் தூய்மையானது’ என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அதில் ஒளூ செய்தார்கள். இது நடந்தது ஜின்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்த இரவிலாகும் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளரான அபூஸைத் என்பார் யாரென்றே அறியப்படாதவர். இது பற்றிய அதிக விபரத்தை திர்மிதி 28 வது ஹதீஸில் காண்க.)
385 حدثنا الْعَبَّاسُ بن الْوَلِيدِ الدِّمَشْقِيُّ ثنا مَرْوَانُ بن مُحَمَّدٍ ثنا بن لَهِيعَةَ ثنا قَيْسُ بن الْحَجَّاجِ عن حَنَشٍ الصَّنْعَانِيِّ عن عبد اللَّهِ بن عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال لابن مَسْعُودٍ لَيْلَةَ الْجِنِّ مَعَكَ مَاءٌ قال لَا إلا نَبِيذًا في سَطِيحَةٍ فقال رسول اللَّهِ (ص) تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ صُبَّ عَلَيَّ قال فَصَبَبْتُ عليه فَتَوَضَّأَ بِهِ |
ஹதீஸ் எண்: 385
மேலே கூறிய ஹதீஸுடன் ‘ஒளூ செய்வதற்கு எனக்குத் தண்ணீர் ஊற்றுவாயாக’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் அவ்வாறே ஊற்றியதாகவும் கூறப்படுகின்றது.
(குறிப்பு: இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானதன்று. ஏனெனில் பலவீனமான இப்னு லஹ்யஆ என்பார் இதன் ஐந்தாம் அறிவிப்பாளராக இடம் பெறுகிறார்.)
38 بَاب الْوُضُوءِ بِمَاءِ الْبَحْرِ
386 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا مَالِكُ بن أَنَسٍ حدثني صَفْوَانُ بن سُلَيْمٍ عن سَعِيدِ بن سَلَمَةَ هو من آلِ بن الْأَزْرَقِ أَنَّ الْمُغِيرَةَ بن أبي بُرْدَةَ وهو من بَنِي عبد الدَّارِ حدثه أَنَّهُ سمع أَبَا هُرَيْرَةَ يقول جاء رَجُلٌ إلى رسول اللَّهِ (ص) فقال يا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ من الْمَاءِ فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا أَفَنَتَوَضَّأُ من مَاءِ الْبَحْرِ فقال رسول اللَّهِ (ص) هو الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ |
பாடம் 38. கடல் நீரால் ஒளூ செய்தல்
ஹதீஸ் எண்: 386
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் கடலில் பிரயாணம் செய்யும் போது சிறிதளவு தண்ணீரை எடுத்துச் செல்கிறோம். அந்தத் தண்ணீரால் நாங்கள் ஒளூ செய்தால் தாகத்தால் தவிப்போம். எனவே கடல் நீரால் நாங்கள் ஒளூ செய்யலாமா? என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘கடல் நீர் தூய்மை செய்யத் தக்கதும் அதில் இறந்தவைகள் உண்ண அனுதிக்கப்பட்டதுமாகும்’ என்று விடையளித்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: நஸயீ, அபூதாவூத், திர்மிதி, முஅத்தா, இப்னு குஸைமா, இப்னுஹிப்பான் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
387 حدثنا سَهْلُ بن أبي سَهْلٍ ثنا يحيى بن بُكَيْرٍ حدثني اللَّيْثُ بن سَعْدٍ عن جَعْفَرِ بن رَبِيعَةَ عن بَكْرِ بن سَوَادَةَ عن مُسْلِمِ بن مَخْشِيٍّ عن بن الْفِرَاسِيِّ قال كنت أَصِيدُ وَكَانَتْ لي قِرْبَةٌ أَجْعَلُ فيها مَاءً وَإِنِّي تَوَضَّأْتُ بِمَاءِ الْبَحْرِ فَذَكَرْتُ ذلك لِرَسُولِ اللَّهِ (ص) فقال هو الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ |
ஹதீஸ் எண்: 387
நான் வேட்டைக்குச் செல்பவனாக இருந்தேன். அப்போது ஒரு தோல் பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துச் செல்வேன் (தண்ணீர் குறைவாக இருந்ததால்) கடல் நீரில் ஒளூ செய்தேன். பின்னர் இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது ‘அதன் தண்ணீர் தூய்மை செய்யத்தக்கதும், அதில் இறந்தவை உண்ணத்தக்கதுமாகும்’ என்று கூறினார்கள் என இப்னுல் பராஸீ என்பார் அறிவிக்கிறார்.
(குறிப்பு: இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களே. எனினும் இப்னுல் பிராஸீ என்பவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்ததில்லை. அவரது தந்தைதான் நபித்தோழர். எனவே தந்தை வழியாகவே இதை அவர் அறிவித்திருக்கக் கூடும்.)
388 حدثنا محمد بن يحيى ثنا أَحْمَدُ بن حَنْبَلٍ ثنا أبو الْقَاسِمِ بن أبي الزِّنَادِ قال حدثني إسحاق بن حَازِمٍ عن عُبَيْدِ اللَّهِ هو بن مِقْسَمٍ عن جَابِرٍ أَنَّ النبي (ص) سُئِلَ عن مَاءِ الْبَحْرِ فقال هو الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ حدثنا عَلِيُّ بن الْحَسَنِ الْهَسْتَجَانِيُّ ثنا أَحْمَدُ بن حَنْبَلٍ ثنا أبو الْقَاسِمِ بن أبي الزِّنَادِ ثنى إسحاق بن حَازِمٍ عن عُبَيْدِ اللَّهِ هو بن مِقْسَمٍ عن جَابِرِ بن عبد اللَّهِ أَنَّ النبي (ص) فذكر نَحْوَهُ |
ஹதீஸ் எண்: 388
நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்ட போது ‘அதன் தண்ணீர் தூய்மை செய்யத்தக்கதும், அதில் இறந்தவை உண்ணத்தக்கதுமாகும்’ என் விடையளித்ததாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாகிம், தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
39 بَاب الرَّجُلِ يَسْتَعِينُ على وُضُوئِهِ فَيَصُبُّ عليه
389 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا عِيسَى بن يُونُسَ ثنا الْأَعْمَشُ عن مُسْلِمِ بن صُبَيْحٍ عن مَسْرُوقٍ عن الْمُغِيرَةِ بن شُعْبَةَ قال خَرَجَ النبي (ص) لِبَعْضِ حَاجَتِهِ فلما رَجَعَ تَلَقَّيْتُهُ بِالْإِدَاوَةِ فَصَبَبْتُ عليه فَغَسَلَ يَدَيْهِ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثُمَّ ذَهَبَ يَغْسِلُ ذِرَاعَيْهِ فَضَاقَتْ الْجُبَّةُ فَأَخْرَجَهُمَا من تَحْتِ الْجُبَّةِ فَغَسَلَهُمَا وَمَسَحَ على خُفَّيْهِ ثُمَّ صلى بِنَا |
பாடம் 39. ஒளூ செய்வதற்காக பிறர் உதவியை நாடுதல்
ஹதீஸ் எண்: 389
‘நபி (ஸல்) அவர்கள் தம் தேவையை நிறைவேற்றுவதற்காகப் புறப்பட்டார்கள். அவர்கள் திரும்பி வந்த போது, தண்ணீர் பாத்திரத்துடன் அவர்களை எதிர் கொண்டேன். அவர்கள் (ஒளூ செய்வதற்காக) தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது இரு முன்னங்கைகளையும் கழுவி, பின்னர் தமது முகத்தைக் கழுவினார்கள். பிறகு தம் கைகளைக் கழுவ முயன்ற போது, அவர்களின் ஆடை (இறுக்கமாக இருந்ததால் கைகளை சுருட்ட) சிரமமாக இருந்தது. தம் இரு கைகளையும் சட்டையின் கீழ்ப்புறம் இருந்து வெளிப்படுத்தி இருகைகளையும் கழுவினார்கள். தமது இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்து பின்னர் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள் என்று முகீரா பின் ஷுஃபா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, தாரிமி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)
390 حدثنا محمد بن يحيى ثنا الْهَيْثَمُ بن جَمِيلٍ ثنا شَرِيكٌ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قالت أَتَيْتُ النبي (ص) بِمِيضَأَةٍ فقال اسْكُبِي فَسَكَبْتُ فَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَأَخَذَ مَاءً جَدِيدًا فَمَسَحَ بِهِ رَأْسَهُ مُقَدَّمَهُ وَمُؤَخَّرَهُ وَغَسَلَ قَدَمَيْهِ ثَلَاثًا ثَلَاثًا |
ஹதீஸ் எண்: 390
‘நான் நபி (ஸல்) அவர்களிடம் தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொண்டு வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘ஊற்றுவாயாக!’ எனக் கூறினார்கள். நான் ஊற்றியதும் தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள்’ என்று ருபைய்யிஃ பின்து முஅவ்வித் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: அபூதாவூதிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)