பக்கம் – 40 (ஹதீஸ்கள் 391 முதல் 400 வரை)
அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்
391 حدثنا بِشْرُ بن آدَمَ ثنا زَيْدُ بن الْحُبَابِ حدثني الْوَلِيدُ بن عُقْبَةَ حدثني حُذَيْفَةُ بن أبي حُذَيْفَةَ الْأَزْدِيُّ عن صَفْوَانَ بن عَسَّالٍ قال صَبَبْتُ على النبي (ص) الْمَاءَ في السَّفَرِ وَالْحَضَرِ في الْوُضُوءِ |
ஹதீஸ் எண்: 391
‘பிரயாணத்தின் போதும் ஊரிலிருக்கும் போதும் நபி (ஸல்) அவர்களுக்கு ஒளூ செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றியுள்ளேன்’ என்று ஸஃப்வான் இப்னு அஸ்ஸால் (ரலி) குறிப்பிடுகின்றார்கள்.
392 حدثنا كُرْدُوسُ بن أبي عبد اللَّهِ الْوَاسِطِيُّ ثنا عبد الْكَرِيمِ بن رَوْحٍ ثنا أبي رَوْحُ بن عَنْبَسَةَ بن سَعِيدِ بن أبي عَيَّاشٍ مولى عُثْمَانَ بن عَفَّانَ عن أبيه عَنْبَسَةَ بن سَعِيدٍ عن جَدَّتِهِ أُمِّ أبيه أُمِّ عَيَّاشٍ وَكَانَتْ أَمَةً لِرُقَيَّةَ بِنْتِ رسول اللَّهِ (ص) قالت كنت أوضىء رَسُولَ اللَّهِ (ص) أنا قَائِمَةٌ وهو قَاعِدٌ |
ஹதீஸ் எண்: 392
‘நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்திருக்கும் போது நான் நின்று கொண்டு அவர்கள் ஒளூ செய்வதற்காக தண்ணீர் ஊற்றியுள்ளேன் என்று உம்மு அய்யாஷ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான ரவ்ஹ் இப்னு அன்பஸா என்பவர் யாரென்று தெரியாதவராவார். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.)
40 بَاب الرَّجُلِ يَسْتَيْقِظُ من مَنَامِهِ هل يُدْخِلُ يَدَهُ في الْإِنَاءِ قبل أَنْ يَغْسِلَهَا
393 حدثنا عبد الرحمن بن إبراهيم الدِّمَشْقِيُّ ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ ثنا الْأَوْزَاعِيُّ حدثني الزُّهْرِيُّ عن سَعِيدِ بن الْمُسَيَّبِ وَأَبِي سَلَمَةَ بن عبد الرحمن أَنَّهُمَا حَدَّثَاهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ كان يقول قال رسول اللَّهِ (ص) إذا اسْتَيْقَظَ أحدكم من اللَّيْلِ فلا يُدْخِلْ يَدَهُ في الْإِنَاءِ حتى يُفْرِغَ عليها مَرَّتَيْنِ أو ثَلَاثًا فإن أَحَدَكُمْ لَا يَدْرِي فِيمَ بَاتَتْ يَدُهُ |
பாடம் 40. தூங்கி எழுந்ததும் கைகளைக் கழுவாமல் பாத்திரத்தில் கையை விடலாகாது.
ஹதீஸ் எண்: 393
‘உங்களில் எவரும் இரவில் உறங்கி எழுந்தால், இரண்டு அல்லது மூன்று தடவை கைகளைக் கழுவாமல் பாத்திரத்தில் கைகளை விட வேண்டாம். ஏனெனில் இரவில் அவரது கைகள் எங்கெங்கே பட்டன என்பது அவருக்குத் தெரியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது. எனினும் ‘இரண்டு அல்லது மூன்று தடவை’ என்ற வாசகம் புகாரியில் இல்லை. முஸ்லிமில் மூன்று தடவை என்று இடம் பெற்றுள்ளது.)
394 حدثنا حَرْمَلَةُ بن يحيى ثنا عبد اللَّهِ بن وَهْبٍ أخبرني بن لَهِيعَةَ وَجَابِرُ بن إسماعيل عن عُقَيْلٍ عن بن شِهَابٍ عن سَالِمٍ عن أبيه قال قال رسول اللَّهِ (ص) إذا اسْتَيْقَظَ أحدكم من نَوْمِهِ فلا يُدْخِلْ يَدَهُ في الْإِنَاءِ حتى يَغْسِلَهَا |
ஹதீஸ் எண்: 394
‘உங்களில் எவரும் உறங்கி எழுந்தால் தன்கையைக் கழுவாமல் பாத்திரத்தில் விட வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
395 حدثنا إسماعيل بن تَوْبَةَ ثنا زِيَادُ بن عبد اللَّهِ الْبَكَّائِيُّ عن عبد الْمَلِكِ بن أبي سُلَيْمَانَ عن أبي الزُّبَيْرِ عن جَابِرٍ قال قال رسول اللَّهِ (ص) إذا قام أحدكم من النَّوْمِ فَأَرَادَ أَنْ يَتَوَضَّأَ فلا يُدْخِلْ يَدَهُ في وَضُوئِهِ حتى يَغْسِلَهَا فإنه لَا يدرى أَيْنَ بَاتَتْ يَدُهُ ولا على ما وَضَعَهَا |
ஹதீஸ் எண்: 395
‘உங்களில் எவரேனும் உறக்கத்திலிருந்து எழுந்து ஒளூ செய்ய நாடினால் கையைக் கழுவாமல் பாத்திரத்தில் விட வேண்டாம். ஏனெனில் அவரது கை எங்கெங்கு பட்டது என்பதும், அவர் எங்கெங்கு கைகளை வைத்தார் என்பதும் அவருக்குத் தெரியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
396 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو بَكْرِ بن عَيَّاشٍ عن أبي إسحاق عن الْحَارِثِ قال دَعَا عَلِيٌّ بِمَاءٍ فَغَسَلَ يَدَيْهِ قبل أَنْ يُدْخِلَهُمَا الْإِنَاءَ ثُمَّ قال هَكَذَا رأيت رَسُولَ اللَّهِ (ص) صَنَعَ |
ஹதீஸ் எண்: 396
அலி (ரலி) அவர்கள் தண்ணீர் வரவழைத்து, கைகளைப் பாத்திரத்தில் விடுவதற்கு முன் கழுவிக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை தான் பார்த்திருப்பதாகவும் கூறினார்கள் என ஹாரிஸ் என்பார் அறிவிக்கிறார்.
41 بَاب ما جاء في التَّسْمِيَةِ في الْوُضُوءِ
397 حدثنا أبو كُرَيْبٍ محمد بن الْعَلَاءِ ثنا زَيْدُ بن الْحُبَابِ ح وحدثنا محمد بن بَشَّارٍ ثنا أبو عَامِرٍ الْعَقَدِيُّ ح وحدثنا أَحْمَدُ بن مَنِيعٍ ثنا أبو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قالوا ثنا كَثِيرُ بن زَيْدٍ عن رُبَيْحِ بن عبد الرحمن بن أبي سَعِيدٍ عن أبيه عن أبي سعيد أَنَّ النبي (ص) قال لَا وُضُوءَ لِمَنْ لم يذكر اسْمَ اللَّهِ عليه |
பாடம் 41. ஒளூ செய்யும் போது இறைநாமம் கூறுவது
ஹதீஸ் எண்: 397
‘அல்லாஹ்வின் பெயரைக் கூறாதவருக்கு ஒளூ இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான கஸீர் இப்னு ஸைத் என்பவர் பலவீனமானவர் என்று இப்னு முயீன், அபூஹாதம், புகாரி மற்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.)
398 حدثنا الْحَسَنُ بن عَلِيٍّ الْخَلَّالُ ثنا يَزِيدُ بن هَارُونَ أنا يَزِيدُ بن عِيَاضٍ ثنا أبو ثِفَالٍ عن رَبَاحِ بن عبد الرحمن بن أبي سُفْيَانَ أَنَّهُ سمع جَدَّتَهُ بِنْتَ سَعِيدِ بن زَيْدٍ تَذْكُرُ أنها سَمِعَتْ أَبَاهَا سَعِيدَ بن زَيْدٍ يقول قال رسول اللَّهِ (ص) لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ له ولا وُضُوءَ لِمَنْ لم يذكر اسْمَ اللَّهِ عليه |
ஹதீஸ் எண்: 398
‘ஒளூ இல்லாதவருக்குத் தொழுகை இல்லை, அல்லாஹ்வின் பெயர் கூறாதவருக்கு ஒளூ இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸயீத் இப்னு ஸைத் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய ரபாஹ் இப்னு அப்துர் ரஹ்மான் என்பவரும், நான்காவது அறிவிப்பாளரான அபூஸிகார் என்பவரும் யாரென்றே தெரியாதவர்கள் என அபூஹாதம், அபூஸுர்ஆ ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.)
399 حدثنا أبو كُرَيْبٍ وَعَبْدُ الرحمن بن إبراهيم قالا ثنا بن أبي فُدَيْكٍ ثنا محمد بن مُوسَى بن أبي عبد اللَّهِ عن يَعْقُوبَ بن سَلَمَةَ اللَّيْثِيِّ عن أبيه عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ له ولا وُضُوءَ لِمَنْ لم يذكر اسْمَ اللَّهِ عليه |
ஹதீஸ் எண்: 399
மேற்கூறிய ஹதீஸின் கருத்தே இங்கும் இடம் பெறுகின்றது.
(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய யஃகூப் இப்னு ஸலமா என்பவர் தம் தந்தை வாயிலாக இதை அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது. ஆனால் இவர் தம் தந்தையிடம் எதையும் செவியுற்றதற்குச் சான்று இல்லை என்று புகாரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.)
400 حدثنا عبد الرحمن بن إبراهيم ثنا بن أبي فُدَيْكٍ عن عبد الْمُهَيْمِنِ بن عَبَّاسِ بن سَهْلِ بن سَعْدٍ السَّاعِدِيِّ عن أبيه عن جَدِّهِ عن النبي (ص) قال لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ له ولا وُضُوءَ لِمَنْ لم يذكر اسْمَ اللَّهِ عليه ولا صَلَاةَ لِمَنْ لَا يُصَلِّي علي النبي ولا صَلَاةَ لِمَنْ لَا يُحِبُّ الْأَنْصَارَ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ حدثنا أبو حَاتِمٍ ثنا عِيسَى عبيس بن مَرْحُومٍ الْعَطَّارُ ثنا عبد الْمُهَيْمِنِ بن عَبَّاسٍ فذكر نَحْوَهُ |
ஹதீஸ் எண்: 400
மேற்கூறிய கருத்துடன் ‘யார் நபியின் மீது ஸலவாத் கூறவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை’ என்ற வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான அப்துல் முஹைமின் இப்னு அப்பாஸ் என்பார் அனைத்து அறிஞர்களாலும் பலவீனமானவர் என்று நிராகரிக்கப்பட்டவராவார். இந்தக் கருத்தில் வரும் எல்லா ஹதீஸ்களும் பலவீனமானதாக இருந்தாலும் நஸயியில் இடம் பெறும் 78 வது ஹதீஸ் பலமானதாக உள்ளதாக அதன் அடிப்படையில் பிஸ்மில்லாஹ் கூறுவது ஸுன்னத் ஆகும்.)