இப்னுமாஜா பக்கம் – 41

பக்கம் – 41 (ஹதீஸ்கள் 401 முதல் 410 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

42 بَاب التَّيَمُّنِ في الْوُضُوءِ  

401 حدثنا هَنَّادُ بن السَّرِيِّ ثنا أبو الْأَحْوَصِ عن أَشْعَثَ بن أبي الشَّعْثَاءِ ح وحدثنا سُفْيَانُ بن وَكِيعٍ ثنا عُمَرُ بن عُبَيْدٍ الطَّنَافِسِيُّ عن أَشْعَثَ بن أبي الشَّعْثَاءِ عن أبيه عن مَسْرُوقٍ عن عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) كان يُحِبُّ التَّيَمُّنَ في الطُّهُورِ إذا تَطَهَّرَ وفي تَرَجُّلِهِ إذا تَرَجَّلَ وفي انْتِعَالِهِ إذا انْتَعَلَ

பாடம் 42. ஒளூவின் போது வலப்புறமாக துவக்குதல்

ஹதீஸ் எண்: 401

‘நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்யும் போதும், தலை வாரும் போதும், செருப்பணியும் போதும் வலப்புறமாகத் துவக்குவதை விரும்பக் கூடியவர்களாக இருந்தனர்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், திர்மிதி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

402 حدثنا محمد بن يحيى ثنا أبو جَعْفَرٍ النُّفَيْلِيُّ ثنا زُهَيْرُ بن مُعَاوِيَةَ عن الْأَعْمَشِ عن أبي صَالِحٍ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) إذا تَوَضَّأْتُمْ فابدؤوا بِمَيَامِنِكُمْ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ ثنا أبو حَاتِمٍ ثنا يحيى بن صَالِحٍ وبن نُفَيْلٍ وَغَيْرُهُمَا قالوا ثنا زُهَيْرٌ فذكر نَحْوَهُ

ஹதீஸ் எண்: 402

‘நீங்கள் ஒளூ செய்தால் உங்களின் வலப்புறத்தைக் கொண்டு துவக்குங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

43 بَاب الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ من كَفٍّ وَاحِدٍ  

403 حدثنا عبد اللَّهِ بن الْجَرَّاحِ وأبو بَكْرِ بن خَلَّادٍ الْبَاهِلِيُّ ثنا عبد الْعَزِيزِ بن مُحَمَّدٍ عن زَيْدِ بن أَسْلَمَ عن عَطَاءِ بن يَسَارٍ عن بن عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) مَضْمَضَ وَاسْتَنْشَقَ من غُرْفَةٍ وَاحِدَةٍ

பாடம் 43. ஒரு கை நீரால் வாய் கொப்பளித்து மூக்கை சுத்தம் செய்தல்

ஹதீஸ் எண்: 403

‘நபி (ஸல்) அவர்கள் ஒரு கை நீரால் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்பவர்களாக இருந்தனர்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். 

404 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا شَرِيكٌ عن خَالِدِ بن عَلْقَمَةَ عن عبد خَيْرٍ عن عَلِيٍّ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ فَمَضْمَضَ ثَلَاثًا وَاسْتَنْشَقَ ثَلَاثًا من كَفٍّ وَاحِدٍ

ஹதீஸ் எண்: 404

‘நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்த போது ஒரு கைநீரில் மூன்று தடவை வாய் கொப்பளித்து மூன்று தடவை மூக்கையும் சுத்தம் செய்தார்கள்’ என்று அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.

405 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو الْحُسَيْنِ الْعُكْلِيُّ عن خَالِدِ بن عبد اللَّهِ عن عَمْرِو بن يحيى عن أبيه عن عبد اللَّهِ بن يزيد الْأَنْصَارِيِّ قال أَتَانَا رسول اللَّهِ (ص) فَسَأَلَنَا وَضُوءًا فَأَتَيْتُهُ بِمَاءٍ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ من كَفٍّ وَاحِدٍ

ஹதீஸ் எண்: 405

எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்து தண்ணீர் கேட்டார்கள். நான் அவர்களிடம் தண்ணீர் கொண்டு வந்தேன். ஒரு கை நீரில் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள்’ என்று அப்துல்லாஹ் இப்னு யஸீத் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)  

44 بَاب الْمُبَالَغَةِ في الِاسْتِنْشَاقِ وَالِاسْتِنْثَارِ  

406 حدثنا أَحْمَدُ بن عَبْدَةَ ثنا حَمَّادُ بن زَيْدٍ عن مَنْصُورٍ ح وحدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو الْأَحْوَصِ عن مَنْصُورٍ عن هِلَالِ بن يَسَافٍ عن سَلَمَةَ بن قَيْسٍ قال قال لي رسول اللَّهِ (ص) إذا تَوَضَّأْتَ فَانْثُرْ وإذا اسْتَجْمَرْتَ فَأَوْتِرْ

பாடம் 44. மூக்கையும் சுத்தம் செய்வது அவசியம்

ஹதீஸ் எண்: 406

‘நீ ஒளூ செய்யும் போது மூக்கையும் சுத்தம் செய்! (கற்களால்) சுத்தம் செய்வதென்றால் ஒற்றை எண்ணிக்கையில் பயன்படுத்து!’ என்று நபி (ஸல்) கூறியதாக ஸலமா இப்னு கைஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் நஸயீ, திர்மிதி ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

407 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا يحيى بن سُلَيْمٍ الطَّائِفِيُّ عن إسماعيل بن كَثِيرٍ عن عَاصِمِ بن لَقِيطِ بن صَبْرَةَ عن أبيه قال قلت يا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي عن الْوُضُوءِ قال أَسْبِغْ الْوُضُوءَ وَبَالِغْ في الِاسْتِنْشَاقِ إلا أَنْ تَكُونَ صَائِمًا

ஹதீஸ் எண்: 407

அல்லாஹ்வின் தூதரே! ஒளூ செய்வது பற்றி எனக்குக் கூறுங்கள்! என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒளூவைப் பூரணமாகச் செய், நீ நோன்பு நோற்றிருக்கும் சமயத்தில் தவிர மற்ற சமயங்களில் மூக்கை நன்கு சுத்தம் செய்! என்று கூறினார்கள் என லகீத் இப்னு ஸப்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.) 

408 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا إسحاق بن سُلَيْمَانَ ح وحدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن بن أبي ذِئْبٍ عن قَارِظِ بن شَيْبَةَ عن أبي غَطَفَانَ الْمُرِّيِّ عن بن عَبَّاسٍ قال قال رسول اللَّهِ (ص) اسْتَنْثِرُوا مَرَّتَيْنِ بَالِغَتَيْنِ أو ثَلَاثًا

ஹதீஸ் எண்: 408 

‘நீங்கள் நல்ல முறையில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் மூக்கைச் சுத்தம் செய்யுங்கள்!’ என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது.) 

409 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا زَيْدُ بن الْحُبَابِ وَدَاوُدُ بن عبد اللَّهِ قالا ثنا مَالِكُ بن أَنَسٍ عن بن شِهَابٍ عن أبي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) من تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ وَمَنْ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ

ஹதீஸ் எண்: 409

ஒருவர் ஒளூச் செய்யும் போது மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். தூய்மை செய்ய கற்களைப் பயன்படுத்தினால் ஒற்றை எண்ணிக்கையில் பயன்படுத்த வேண்டும் என் நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், முஅத்தா, நஸயீ, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)  

45 بَاب ما جاء في الْوُضُوءِ مَرَّةً مَرَّةً  

410 حدثنا عبد اللَّهِ بن عَامِرِ بن زُرَارَةَ ثنا شَرِيكُ بن عبد اللَّهِ النَّخَعِيُّ عن ثَابِتِ بن أبي صَفِيَّةَ الثُّمَالِيِّ قال سَأَلْتُ أَبَا جَعْفَرٍ قلت له حُدِّثْتَ عن جَابِرِ بن عبد اللَّهِ أَنَّ النبي (ص) تَوَضَّأَ مَرَّةً مَرَّةً قال نعم قلت وَمَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَثَلَاثًا ثَلَاثًا قال نعم

பாடம் 45. உறுப்புக்களை ஒவ்வொரு தடவை கழுவி ஒளூ செய்தல்

ஹதீஸ் எண்: 410

நபி (ஸல்) ஒவ்வொரு தடவை (உறுப்புக்களைக் கழுவி) ஒளூ செய்தார்கள் என்று ஜாபிர் (ரலி) உங்களுக்குக் கூறினார்களா? என்று அபூஜஃபர் அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆம்’ என்றார்கள். ‘இரண்டிரண்டு தடவைகள்?’ என்று நான் கேட்ட போது ‘ஆம்’ என்றனர். ‘மும்மூன்று தடவைகள்?’ என்று நான் கேட்ட போது ‘ஆம்’ என்றனர் என ஸாபித் இப்னு அபூஸஃபிய்யா என்பார் அறிவிக்கின்றார்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது. இதை அறிவிக்கும் ஸாபித் இப்னு அபீஸஃபிய்யா என்பவர் பலவீனமானவர்.)

 

 

By admin