இப்னுமாஜா பக்கம் – 42
பக்கம் – 42 (ஹதீஸ்கள் 411 முதல் 420 வரை)
அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்
411 حدثنا أبو بَكْرِ بن خَلَّادٍ الْبَاهِلِيُّ ثنا يحيى بن سَعِيدٍ الْقَطَّانُ عن سُفْيَانَ عن زَيْدِ بن أَسْلَمَ عن عَطَاءِ بن يَسَارٍ عن بن عَبَّاسٍ قال رأيت رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ غُرْفَةً غُرْفَةً |
ஹதீஸ் எண்: 411
‘நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை ஒளூ செய்ததை நான் பார்த்திருக்கிறேன்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இக்கருத்து புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
412 حدثنا أبو كُرَيْبٍ ثنا رِشْدِينُ بن سَعْدٍ أنا الضَّحَّاكُ بن شر حبيل عن زَيْدِ بن أَسْلَمَ عن أبيه عن عُمَرَ قال رأيت رَسُولَ اللَّهِ (ص) في غَزْوَةِ تَبُوكَ تَوَضَّأَ وَاحِدَةً وَاحِدَةً |
ஹதீஸ் எண்: 412
‘தபூக்’ போரின் போது நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை ஒளூ செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்’ என்று உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் ஐந்தாவது அறிவிப்பாளர் ரிஷ்தீன் இப்னு ஸஃது என்பவர் பலவீனமானவர்.)
46 بَاب الْوُضُوءِ ثَلَاثًا ثَلَاثًا 413 حدثنا مَحْمُودُ بن خَالِدٍ الدِّمَشْقِيُّ ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ الدِّمَشْقِيُّ عن بن ثَوْبَانَ عن عَبْدَةَ بن أبي لُبَابَةَ عن شَقِيقِ بن سَلَمَةَ قال رأيت عُثْمَانَ وَعَلِيًّا يتوضأن ثَلَاثًا ثَلَاثًا وَيَقُولَانِ هَكَذَا كان وُضُوءُ رسول اللَّهِ (ص) قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ حَدَّثَنَاهُ أبو حَاتِمٍ ثنا أبو نُعَيْمٍ ثنا عبد الرحمن بن ثَابِتِ بن ثَوْبَانَ فذكر نَحْوَهُ |
பாடம் 46. முன்மூன்று தடவை உறுப்புக்களைக் கழுவுதல்
ஹதீஸ் எண்: 413
உஸ்மான் (ரலி), அலி (ரலி) இருவரும் மும்மூன்று தடவை உறுப்புக்களைக் கழுவி விட்டு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே ஒளூ செய்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்கள் என்று ஷகீக் இப்னு ஸலமா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
414 حدثنا عبد الرحمن بن إبراهيم الدِّمَشْقِيُّ ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ ثنا الْأَوْزَاعِيُّ عن الْمُطَّلِبِ بن عبد اللَّهِ بن حَنْطَبٍ عن بن عُمَرَ أَنَّهُ تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا وَرَفَعَ ذلك إلى النبي (ص) |
ஹதீஸ் எண்: 414
இப்னு உமர் (ரலி) அவர்கள் மும்மூன்று தடவை உறுப்புக்களைக் கழுவி விட்டு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் குறிப்பிட்டார்கள் என்று முத்தலிப் இப்னு அப்துல்லாஹ் என்பார் அறிவிக்கிறார்கள்.
415 حدثنا أبو كُرَيْبٍ ثنا خَالِدُ بن حَيَّانَ عن سَالِمٍ أبي الْمُهَاجِرِ عن مَيْمُونِ بن مِهْرَانَ عن عَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ أَنَّ النبي (ص) تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا |
ஹதீஸ் எண்: 415
நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவை உறுப்புக்களைக் கழுவியதாக அபூஹுரைரா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகிய இருவரும் அறிவித்ததாக மைமூன் இப்னு மிஹ்ரான் என்பார் அறிவிக்கிறார்கள்.
416 حدثنا سُفْيَانُ بن وَكِيعٍ ثنا عِيسَى بن يُونُسَ عن فَائِدِ أبي الورقاء بن عبد الرحمن عن عبد اللَّهِ بن أبي أَوْفَى قال رأيت رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا وَمَسَحَ رَأْسَهُ مَرَّةً |
ஹதீஸ் எண்: 416
நபி (ஸல்) அவர்கள் உறுப்புக்களை மும்மூன்று தடவை கழுவி விட்டு தலைக்கு (மட்டும்) ஒரு தடவை மஸஹ் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்’ என்று அப்துல்லாஹ் இப்னு அபீஅவ்பா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய ஃபாயித் இப்னு அப்துர்ரஹ்மான் நம்பகமானவர் அல்ல.)
417 حدثنا محمد بن يحيى ثنا محمد بن يُوسُفَ عن سُفْيَانَ عن لَيْثٍ عن شَهْرِ بن حَوْشَبٍ عن أبي مَالِكٍ الْأَشْعَرِيِّ قال كان رسول اللَّهِ (ص) يَتَوَضَّأُ ثَلَاثًا ثَلَاثًا |
ஹதீஸ் எண்: 417
‘நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவை கழுவி ஒளூ செய்பவர்களாக இருந்தனர்’ என்று அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான லைஸ் இப்னு அபீஸைஃப் என்பவர் பலவீனமானவர்.)
418 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بن عَفْرَاءَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا |
ஹதீஸ் எண்: 418
நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவை கழுவி ஒளூ செய்ததாக ருபைய்யிஃ பின்து அஃப்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
47 بَاب ما جاء في الْوُضُوءِ مَرَّةً وَمَرَّتَيْنِ وَثَلَاثًا 419 حدثنا أبو بَكْرِ بن خَلَّادٍ الْبَاهِلِيُّ حدثني مَرْحُومُ بن عبد الْعَزِيزِ الْعَطَّارُ حدثني عبد الرَّحِيمِ بن زَيْدٍ الْعَمِّيُّ عن أبيه عن مُعَاوِيَةَ بن قُرَّةَ عن بن عُمَرَ قال تَوَضَّأَ رسول اللَّهِ (ص) وَاحِدَةً وَاحِدَةً فقال هذا وُضُوءُ من لَا يَقْبَلُ الله منه صَلَاةً إلا بِهِ ثُمَّ تَوَضَّأَ ثِنْتَيْنِ ثِنْتَيْنِ فقال هذا وُضُوءُ الْقَدْرِ من الْوُضُوءِ وَتَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا وقال هذا أَسْبَغُ الْوُضُوءِ وهو وُضُوئِي وَوُضُوءُ خَلِيلِ اللَّهِ إبراهيم وَمَنْ تَوَضَّأَ هَكَذَا ثُمَّ قال عِنْدَ فَرَاغِهِ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلا الله وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فُتِحَ له ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ يَدْخُلُ من أَيِّهَا شَاءَ |
பாடம் 47. இரண்டிரண்டு தடவை கழுவி ஒளூ செய்தல்
ஹதீஸ் எண்: 419
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி ஒளூ செய்து விட்டு ‘இதுவே இறைவன் தொழுகையை ஒப்புக் கொள்ள அவசியமான அளவாகும்’ என்றார்கள். இரண்டிரண்டு தடவை கழுவி ஒளூ செய்து விட்டு, ‘இது ஒளூவின் சரியான – போதுமான – அளவாகும்’ என்றார்கள். மும்மூன்று தடவை ஒளூ செய்து விட்டு ‘இதுவே ஒளூவின் முழுமையான அளவாகும். இதுவே இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த ஒளூவாகும். யார் இவ்வாறு ஒளூ செய்து விட்டு முடிவில், ‘அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹுவரஸுலுஹு என்று கூறுகிறாரோ அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படுகின்றன அவர் விரும்பிய வாசல் வழியாக பிரவேசிக்கலாம்’ என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய ஸைத் அல் அம்மீ என்பவரும் நான்காவது அறிவிப்பாளரான அவரது மகன் அப்துர்ரஹீம் என்பவரும் பலவீனமானவர்கள். இதன் இரண்டாவது அறிவிப்பாளர் முஆவியா இப்னு குர்ரா என்பவர் தனக்கு முந்தைய அறிவிப்பாளர் இப்னு உமரைச் சந்தித்தது கிடையாது.)
420 حدثنا جَعْفَرُ بن مُسَافِرٍ ثنا إسماعيل بن قَعْنَبٍ أبو بِشْرٍ ثنا عبد اللَّهِ بن عَرَادَةَ الشَّيْبَانِيُّ عن زَيْدِ بن الْحَوَارِيِّ عن مُعَاوِيَةَ بن قُرَّةَ عن عُبَيْدِ بن عُمَيْرٍ عن أُبَيِّ بن كَعْبٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) دَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ مَرَّةً مَرَّةً فقال هذا وَظِيفَةُ الْوُضُوءِ أو قال وُضُوءٌ من لم يَتَوَضَّأْهُ لم يَقْبَلْ الله له صَلَاةً ثُمَّ تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ثُمَّ قال هذا وُضُوءٌ من تَوَضَّأَهُ أَعْطَاهُ الله كِفْلَيْنِ من الْأَجْرِ ثُمَّ تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا فقال هذا وُضُوئِي وَوُضُوءُ الْمُرْسَلِينَ من قَبْلِي |
ஹதீஸ் எண்: 420
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி ஒளூ செய்து விட்டு ‘இது ஒளூவின் போதிய அளவாகும்’ என்றோ ‘இந்த அளவு கூட செய்யாவிட்டால் இறைவன் தொழுகையை ஏற்கமாட்டான் என்றோ கூறினார்கள். பிறகு இரண்டிரண்டு தடவைகள் ஒளூ செய்து விட்டு ‘இவ்வாறு ஒளூ செய்பவருக்கு இரு மடங்கு கூலிகளை இறைவன் அளிக்கிறான்’ என்றார்கள். பிறகு மும்மூன்று தடவை ஒளூ செய்து விட்டு, ‘இதுவே எனக்கு முன் சென்ற நபிமார்களின் ஒளூவாகும்’ என்றார்கள். இதை உபை இப்னு கஃபு (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இங்கேயும் ஸைத் அல் அம்மீ என்பார் இடம் பெறுகிறார். அவர் வழியாக அறிவிக்கும் அப்துல்லாஹ் இப்னு அராதா என்பவரும் பலவீனமானவர்.)