இப்னுமாஜா பக்கம் – 44

பக்கம் – 44 (ஹதீஸ்கள் 431 முதல் 440 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

431 حدثنا محمد بن عبد اللَّهِ بن حَفْصِ بن هِشَامِ بن زَيْدِ بن أَنَسِ بن مَالِكٍ ثنا يحيى بن كَثِيرٍ أبو النَّضْرِ صَاحِبُ الْبَصْرِيِّ عن يَزِيدَ الرَّقَاشِيِّ عن أَنَسِ بن مَالِكٍ قال كان رسول اللَّهِ (ص) إذا تَوَضَّأَ خَلَّلَ لِحْيَتَهُ وَفَرَّجَ أَصَابِعَهُ مَرَّتَيْنِ

ஹதீஸ் எண்: 431

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்யும் போது தமது விரல்களால் இரண்டு தடவை தாடியைக் கோதிக் கழுவுவார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளரான யஸீத் அர்ரகாஷீ என்பவரும் மூன்றாவது அறிவிப்பாளரான யஹ்யா இப்னுகஸீர் என்பவரும் நம்பகமானவர்கள் அல்லர்.)

432 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا عبد الْحَمِيدِ بن حَبِيبٍ ثنا الْأَوْزَاعِيُّ ثنا عبد الْوَاحِدِ بن قَيْسٍ حدثني نَافِعٌ عن بن عُمَرَ قال كان رسول اللَّهِ (ص) إذا تَوَضَّأَ عَرَكَ عَارِضَيْهِ بَعْضَ الْعَرْكِ ثُمَّ شَبَكَ لِحْيَتَهُ بِأَصَابِعِهِ من تَحْتِهَا  

ஹதீஸ் எண்: 432

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்யும் போது முகத்தின் இரு ஓரங்களையும் சிறிது தேய்த்து விட்டு தமது விரல்களைத் தாடியின் கீழ்ப்புறமாகச் செலுத்தி தாடியைக் கோதுவார்கள் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராக இடம் பெறும் அப்துல் வாஹித் இபுன் கைஸ் என்பவரும் விமர்சிக்கப்பட்டுள்ளார் இதுவும் நம்பகமான ஹதீஸ் அல்ல.)

433 حدثنا إسماعيل بن عبد اللَّهِ الرَّقِّيُّ حدثنا محمد بن رَبِيعَةَ الْكِلَابِيُّ ثنا وَاصِلُ بن السَّائِبِ الرَّقَاشِيُّ عن أبي سَوْرَةَ عن أبي أَيُّوبَ الْأَنْصَارِيِّ قال رأيت رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ فَخَلَّلَ لِحْيَتَهُ

ஹதீஸ் எண்: 433

இங்கே 429 வது ஹதீஸையே அபூஅய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அறிவிப்பதாக கூறப்படுகின்றது.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அபூஸவ்ரா என்பவரும் அவரிடமிருந்து அறிவிக்கும் வாஸில் இப்னுஸ் ஸாயிப் அர்ரகாஷீ என்பவரும் நம்பகமானவர்கள் அல்லர். தாடியைக் கோதிக் கழுவுவது சம்பந்தமாக அறிவிக்கப்படும் எந்த ஒரு ஹதீஸும் நம்பகமானது அல்ல என்று இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் குறிப்பிட்டுள்ளனர்.)

51 بَاب ما جاء في مَسْحِ الرَّأْسِ  

434 حدثنا الرَّبِيعُ بن سُلَيْمَانَ وَحَرْمَلَةُ بن يحيى قالا أخبرنا محمد بن إِدْرِيسَ الشَّافِعِيُّ قال أَنْبَأَنَا مَالِكُ بن أَنَسٍ عن عَمْرِو بن يحيى عن أبيه أَنَّهُ قال لِعَبْدِ اللَّهِ بن زَيْدٍ وهو جَدُّ عَمْرِو بن يحيى هل تَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي كَيْفَ كان رسول اللَّهِ (ص) يَتَوَضَّأُ فقال عبد اللَّهِ بن زَيْدٍ نعم فَدَعَا بِوَضُوءٍ فَأَفْرَغَ على يَدَيْهِ فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثًا ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إلى الْمِرْفَقَيْنِ ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ ذَهَبَ بِهِمَا إلى قَفَاهُ ثُمَّ رَدَّهُمَا حتى رَجَعَ إلى الْمَكَانِ الذي بَدَأَ منه ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ

பாடம் 51. தலைக்கு மஸஹ் செய்தல்

ஹதீஸ் எண்: 434

நபி (ஸல்) அவர்கள் எப்படி ஒளூ செய்வார்கள் என்பதை எனக்கு நீங்கள் செய்து காட்ட முடியுமா? என்று அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம் அவர்களின் மகன் யஹ்யா கேட்டார். அதற்கு அவர்கள் ‘ஆம்’ எனக்கூறி தண்ணீரை வரவழைத்தார்கள்.

தனது இரு (முன்) கைகள் மீது தண்ணீர் ஊற்றி இரண்டு தடவைக் கைகளைக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் மூன்று தடவை சுத்தம் செய்தார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று தடவை கழுவினார்கள். பிறகு தமது கைகளை முழங்கை வரை இரண்டு தடவை கழுவினார்கள். பிறகு தமது இரு கைகளையும் தலைக்கு முன்னும் பின்னும் கொண்டு சென்று தலைக்கு மஸஹ் செய்தார்கள். (அதாவது) தலையில் முன்பாகத்தில் துவங்கி பிடரி வரை கைகளைக் கொண்டு சென்றார்கள். பிறகு ஆரம்பித்த இடத்திற்கே கைகளைக் கொண்டு வந்தார்கள். பின்னர் இரண்டு கால்களையும் கழுவினார்கள் என்று அம்ரு இப்னு யஹ்யா அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

435 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عَبَّادُ بن الْعَوَّامِ عن حَجَّاجٍ عن عَطَاءٍ عن عُثْمَانَ بن عَفَّانَ قال رأيت رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ فَمَسَحَ رَأْسَهُ مَرَّةً

ஹதீஸ் எண்: 435

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்யும் போது தமது தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று உஸ்மான் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் தாரகுத்னியிலும் இடம் பெற்றுள்ளது.)

436 حدثنا هَنَّادُ بن السَّرِيِّ ثنا أبو الْأَحْوَصِ عن أبي إسحاق عن أبي حَيَّةَ عن عَلِيٍّ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) مَسَحَ رَأْسَهُ مَرَّةً

ஹதீஸ் எண்: 436

நபி (ஸல்) அவர்கள் தம் தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்தார்கள் என்று அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.)

437 حدثنا محمد بن الْحَارِثِ الْمِصْرِيُّ ثنا يحيى بن رَاشِدٍ الْبَصْرِيُّ عن يَزِيدَ مولى سَلَمَةَ عن سَلَمَةَ بن الْأَكْوَعِ قال رأيت رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ فَمَسَحَ رَأْسَهُ مَرَّةً

ஹதீஸ் எண்: 437

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்த போது தமது தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்தார்கள் என்று ஸலமா இப்னுல் அக்வஃ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான யஹ்யா இப்னு ராஷித் அல்பஸரீ என்பவர் பலவீனமானவர்.)

438 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بن عَفْرَاءَ قالت تَوَضَّأَ رسول اللَّهِ (ص) فَمَسَحَ رَأْسَهُ مَرَّتَيْنِ

ஹதீஸ் எண்: 438

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்யும் போது தமது தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்தார்கள் என்று ருபய்யிஃ பின்து அப்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: திர்மிதி, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அகீல் என்பவர் குறை கூறப்பட்டிருக்கிறார்.)

52 بَاب ما جاء في مَسْحِ الْأُذُنَيْنِ  

439 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عبد اللَّهِ بن إِدْرِيسَ عن بن عَجْلَانَ عن زَيْدِ بن أَسْلَمَ عن عَطَاءِ بن يَسَارٍ عن بن عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) مَسَحَ أُذُنَيْهِ دَاخِلَهُمَا بِالسَّبَّابَتَيْنِ وَخَالَفَ إِبْهَامَيْهِ إلى ظَاهِرِ أُذُنَيْهِ فَمَسَحَ ظَاهِرَهُمَا وَبَاطِنَهُمَا

பாடம் 52. இரு காதுகளுக்கும் மஸஹ் செய்வது

ஹதீஸ் எண்: 439

‘நபி (ஸல்) அவர்கள் தமது இரு காதுகளுக்கும் மஸஹ் செய்தார்கள். இரு ஆட்காட்டி விரல்களைக் கொண்டு காதுகளின் உட்புறத்திலும் கட்டை விரல்களால் காதுகளின் வெளிப்புறத்திலுமாக மஸஹ் செய்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: நஸயி, பைஹகீ, ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)  

440 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا شَرِيكٌ ثنا عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن الرُّبَيِّعِ أَنَّ النبي (ص) تَوَضَّأَ فَمَسَحَ ظَاهِرَ أُذُنَيْهِ وَبَاطِنَهُمَا

ஹதீஸ் எண்: 440

மேற்கூறிய ஹதீஸின் கருத்தே ருபய்யிஃ வழியாக இங்கும் இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அகீல் என்பார் குறை கூறப்பட்டுள்ளார்.)
 

By admin