எவ்வாறு முஸ்லிம்கள் வென்றார்கள்?
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُواْ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللّهُ وَاللّهُ خَيْرُ الْمَاكِرِينَ |
‘(நபியே) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை ஊரை விட்டு வெளியேற்றவோ நிராகரிப்போர் சூழ்ச்சி செய்ததை நினைவு கூறுவீராக! அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்’ (அல்குர்ஆன் 8:30)
இந்த அத்தியாயம் முன்பு நடந்த நிகழ்சிகளை தொடர்ந்து சொல்கிறது, அவைகளை இக்காலத்தோடு ஒப்பிடவும் செய்கிறது. முஸ்லிம் சமுதாய நலனுக்காக போரிட்டு பெரும் வெற்றியைப் பெற்ற அன்றைய முஸ்லிம்களுக்கும், இன்றைய முஸ்லிம்களுக்கும் உள்ள பெரும் வித்தியாசத்தை அந்த அத்தியாயம் சொல்கிறது.
முஸ்லிம்களுக்காக இறைவன் எதில் திட்டமிட்டு இருந்தானோ அது வெளிப்பட்ட போது, அவனது உதவியின் மகத்துவத்தை அவர்களால் உணர முடிந்தது.
அந்த இறை அருளோடு ஒப்பிடுகையில் போரில் கிடைத்த வெற்றிப் பொருள்கள் மிகச் சாதாரணமானவை, அவர்களின் எல்லா தியாகங்களும் மிகச் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை.
போருக்கு முன்பு மக்காவிலும் மதீனாவிலும் முஸ்லிம்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தார்கள் என்பதை பின்வரும் பகுதி விளக்குகிறது.
அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் மிகவும் குறைந்த ஆயுதங்களே இருந்தன. எந்த அளவுக்கு என்றால், காபிர்கள் எந்த நிமிடத்திலும் அவர்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தார்கள்.
இருந்தும் கூட, அல்லாஹ்வின் பேரருளால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அவர்கள் பலமிக்கவர்களாகவும் பாதுகாப்பு பெற்றவர்களாகவும் வசதி மிக்கவர்களாகவும் மாறி விட்டார்கள்.
இன்று விளக்கவுரைக்காக எடுத்துக் கொண்ட வசனத்தின் ஆரம்ப பகுதியில் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனா புறப்படுவதற்கு சற்று முன்பு, அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்த காபிர்களின் நடவடிக்கைகளை விவரிக்கப்படுகின்றது.
அவர்கள் அல்லாஹ்வின் வேதங்களை புறக்கணித்தனர், அவர்கள் நாடினால் அதைப் போன்ற ஒன்றை அவர்களால் தயாரிக்க முடியும் என்று சொன்னார்கள். அவர்களின் தவறான எண்ணத்தில் மிகவும் விடாப்பிடியாகவும் இருந்தார்கள்.
எந்த அளவுக்கு என்றால், முஹம்மது உண்மையில் அல்லாஹ்வின் தூதராக இருந்தால், அவர் உண்மையைக் கொண்டு வந்திருந்தால் உடனே எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையை கொண்டு வரட்டும் என்று வேண்டினார்கள். அதை ஏற்றுக் கொள்வதையும் அவ்வாறே நடப்பதையும் அவர்கள் விரும்பினார்கள்.
இறைவனின் நேர்வழியை விட்டு மக்களை திசை திருப்புவதற்காக பயன்படுத்த அவர்களின் சொத்துக்களை விட்டுக் கொடுத்தனர்.
நபி (ஸல்) அவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்துவதற்காக பணத்தை திரட்டினார்கள் என்ற உண்மை விபரத்தையும் இந்த பகுதி உள்ளடக்கியுள்ளது. அவர்களது எல்லா முயற்சிகளும் இவ்வுலகில் படுதோல்வியே அடையும், வரக்கூடிய மறுவுலகத்தில் அவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டார்கள். இருவுலகங்களின் இழப்பு தான் அவர்களின் சூழ்ச்சியின் பலனாக கிடைக்கும் இறுதி விளைவாகும்.
இறுதியாக, ஒன்று மற்றொன்றுக்கு எதிரான இரண்டு விசயங்களை இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்து அவைகளில் இருந்து ஒன்றை மட்டும் தேர்வு செய்து கொள்ளுமாறு கூறி, அக்காபிர்களை எதிர் கொள்ளச் செய்தான்.
ஒன்று, அவர்கள் உண்மையை மறுப்பதிலிருந்தும், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வதிலிருந்தும் விலகிக் கொள்ளட்டும், அவ்வாறு செய்தால் அவர்கள் முன்பு செய்த பாவங்களையும் தீமைகளையும் இறைவன் மன்னித்து விடுவான்.
மற்றொன்று, அவர்களின் எண்ணப்படி அவர்களின் சதித்திட்டங்களை செய்யட்டும், அவ்வாறு செய்தால் அவர்களுக்கு முன்பிருந்த சமுதாயத்தவர்களை சூழ்ந்து கொண்ட விதியே இவர்கள் மீதும் விதிக்கப்படும். இறைவனின் விருப்பப்படி அவன் அவர்களுக்காக நிர்ணயித்த தண்டனையால் அவர்கள் அவதிப்படுவார்கள்.
பின்னர் காபிர்களுடன் போர் புரியுமாறு இறைவன் முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டான், முஸ்லிம்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்ட முடியாத அளவுக்கு சக்தியை இழக்கும் வரையிலும் அவர்களோடு போர் புரியுமாறு கட்டளையிட்டான்.
முஸ்லிம்களின் ஈமானை பலமிழக்கச் செய்வதற்கு, காபிர்கள் திட்டம் தீட்ட முடியாத அளவுக்கு சக்தியை இழக்கும் வரை அவர்களோடு போர் புரியுமாறு கட்டளை இட்டான்.
உலகம் முழுவதும் இறைத்தன்மை புரிய வைக்கப்படும் வரையிலும், இப்பூமி இறைவனுக்கு மட்டும் சொந்தமானதாக ஆகும் வரையிலும், அனைத்து கீழ்படிதல்களும் இறைவனுக்கு மட்டும் என்று ஆகும் வரையிலும் அவர்களோடு போர் புரியுமாறும் கட்டளையிட்டான்.
பின்னர் அவர்கள் தங்களது சூழ்ச்சியை கைவிட்டு விட்டால், சரணடைந்து விட்டால் அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களின் நினைப்பையும் எண்ணங்களையும் பொறுத்த வரை இறைவன் நன்கு அறிவான். இந்தக் கணக்கை தீர்ப்பதற்காக அவர்களை இறைவன் பிடித்துக் கொள்வான்.
ஆனால் அவர்கள் புறக்கணித்தால் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுத்தால் இறைவனின் அரசாங்கம் அகில உலகிலும் நடப்பதை உறுதி கொள்ள மறுத்தால், இறைவனுக்கு கட்டுப்பட மறுத்தால், முஸ்லிம்கள் தொடர்ந்து அவர்களோடு போரிடுவார்கள்.
முஸ்லிம்கள் அவர்களது எஜமானன் அல்லாஹ்வின் மீது உறுதி கொண்டவர்களாகவும், எந்த இறைவன் அவனது ஆதரவை அவர்களுக்கு தருவானோ அந்த அல்லாஹ்வின் மீது உறுதி கொண்டவர்களாக போர் புரிவார்கள்.
‘(நபியே) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை ஊரை விட்டு வெளியேற்றவோ நிராகரிப்போர் சூழ்ச்சி செய்தார்கள்’. மக்காவிலே நிலைமை தலை கீழாக மாறுவதற்கு முன்பு எவ்வாறு இருந்தது என்பதைத் தான் இந்த வசனம் ஞாபகமூட்டுகிறது. இந்த நினைவூட்டல் எதிர்காலத்தில் கவலையை போக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
இறைவனின் விருப்பப்படி நடந்தவற்றுக்கு பின்னால் உள்ள இறைவல்லமையின் பக்கம் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகவும் இந்த நினைவூட்டல் விளங்குகிறது.
குர்ஆனால் முதன்முதலில் முஸ்லிம்கள் என அழைக்கப்பட்ட ஆரம்பகால முஸ்லிம்கள் இவ்விரு சூழ்நிலைகளையும் எதிர் பார்த்தே எச்சரிக்கையாக இருந்தனர், அவர்கள் அவ்விரு சூழ்நிலைகளையும் அனுபவித்தும் விட்டனர்.
அவர்களின் முந்தைய பயமும் கவலையும் அந்த நாட்களில் அவர்கள் பட்ட கஷ்டமும் தற்போது அவர்கள் போதுமான பாதுகாப்பையும் நிம்மதியையும் பெற்றவர்களாக ஆகுவதற்கு காரணமாக இருந்தன. அவர்களுக்கு எதிரான காபிர்களின் சதித்திட்டங்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சிகளுக்கும் முஸ்லிம்கள் ஜாக்கிரதையாகவே இருந்தனர்.
அவர்கள் அத்திட்டங்களிலிருந்து மட்டும் காப்பாற்றப்பட வில்லை, அவர்கள் அக்காபிர்களுக்கு எதிராக மாபெரும் வெற்றியை பெற்றார்கள்.
காபிர்கள் பலவாராக ஆலோசனை செய்தார்கள்: நபி (ஸல்) அவர்களைப் பிடித்து அவர்கள் இறக்கும் வரை விலங்கிட நனைத்தார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து எந்த சிரமமும் அவர்களைத் தொடராமல் இருக்க அவர்களைக் கொலை செய்யவும் நினைத்தார்கள். அவர்களை நாடு கடத்தவும் நினைத்தார்கள்.
அவர்களின் ஒவ்வொரு திட்டங்களின் லாபநஷ்டங்களை தெளிவாக ஆலோசனை செய்து பார்த்த பின்பே, நபி (ஸல்) அவர்களை கொன்று விடுவது என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். அவர்களைக் கொல்லும் முயற்சியை பல இளைஞர்களிடம் ஒப்படைத்தார்கள்.
இந்தக் கொலையை எல்லோரும் சேர்ந்து செய்தாக வேண்டும் என்பதற்காக எல்லாக் கோத்திரங்களிலிருந்தும் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போது தான் நபி (ஸல்) அவர்கள் சார்ந்த கோத்திரமான ஹாஸிம் கோத்திரத்தார் எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்த்து போரிட முடியாதவர்களாக இருப்பர். அப்போது தான் நபி (ஸல்) அவர்களை கொன்றதற்கான நஷ்ட ஈட்டுத்தொகையை அக்கோத்திரத்தார் பெற்றுக் கொள்வர், பிரட்சனையும் எளிதில் தீர்க்கப்பட்டு விடும் என்றும் திட்டமிட்டனர்.
இந்த வசனத்தின் விளக்கவுரையில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் அவர்களின் அறிவிப்பை இமாம் அஹ்மத் அவர்கள் சொல்கிறார்கள்: மக்காவில் ஓர் இரவு குரைஷிகள் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள். விடிந்ததும் நபி (ஸல்) அவர்களை விலங்கிட வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். மற்றும் சிலரோ அவர்களை நாடு கடத்துமாறு சொன்னார்கள்.
இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு இவர்களின் சூழ்ச்சியை வஹீ அறிவித்து விட்டான். அந்த இரவு நபி (ஸல்) அவர்களின் படுக்கையில் அலி (ரலி) அவர்கள் தூங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்காவைக் கடந்து ஒரு குகையை அடைந்தார்கள். காபிர்கள், நபி (ஸல்) அவர்கள் தான் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு அலி (ரலி) அவர்களை காலை வரை காவல் காத்து நின்றார்கள். காலையில் அவர் அருகே விரைந்து சென்றார்கள். அங்கே அலி (ரலி) அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
அவர்களின் திட்டம் பாழ்பட்டுப் போனதை அந்தக் காபிர்கள் உணர்ந்தார்கள். ‘உமது தோழர் எங்கே?’ என்று அவர்கள் அலி (ரலி) யைக் கேட்டனர். அவர், ‘தெரியாது’ என பதிலளித்தார்.
நபி (ஸல்) அவர்களின் காலடியைத் தொடர்ந்து சென்றார்கள். அவர்கள் மலையை அடைந்ததும் அவர்களால் காலடியை தொடர தொடர முடியவில்லை. அவர்கள் மலையின் மீது ஏறினார்கள். குகை வழியாக சென்றார்கள். அந்தக் குகையின் வாயிலில் சிலந்தி, வலை பிண்ணி இருப்பதைக் கண்டார்கள். அவர்கள் இந்தக் குகைக்குள் சென்றிருந்தால் இதன் வாசலில் சிலந்தி வலை இருக்காது என்று நினைத்தார்கள். அவர்கள் மூன்று இரவுகள் குகையில் தங்கினார்கள்.
‘அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன் ஆவான்’.
இந்த வார்த்தைகள் மனதுக்குள் அந்த நிகழ்ச்சியை தோற்றுவித்து, மனதில் அதை ஆழமாகப் பதியும் படி செய்கிறது. குறிப்பாக குரைஷிகள் எவ்வாறு கூடி எல்லாத் திட்டங்களைப் பற்றியும் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும், குரைஷியர்களில் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திட்டத்தை சொன்ன போது ஒவ்வொரு திட்டத்தின் லாப நஷ்டங்களை எவ்வாறு ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் என்பதையும் மனதுக்குள் கொண்டு வரும் போது, அந்த நிகழ்ச்சிகள் மனதுக்குள் பதிந்து ஆழமான தழும்பை ஏற்படுத்துகிறது.
இறைவன் அவனது வல்லமையினால் அவர்களைச் சூழ்ந்திருக்கின்றான், இறைவனின் திட்டத்தை முற்றிலும் அறியாத, அவர்களின் எல்லாச் சூழ்ச்சிகளையும் இறைவன் தனது திட்டத்தினால் வீணானவையாக ஆக்கிவிட்டான்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வினோதங்கள் இருக்கின்றன, இது அதேநேரத்தில் ஆச்சர்யப்படத்தக்க நிகழ்ச்சியும் ஆகும். இறைவனின் வல்லமையோடு மனிதர்களை ஒப்பிடும் போது அவர்கள் எவ்வளவு பலவீனமானவர்களாகவும், மோசமானவர்களாகவும் இருக்கிறார்கள். இருந்தும் கூட இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களால் எவ்வாறு நடக்க முடிந்தது?
இந்த நிகழ்ச்சியின் மூலம், குர்ஆன் ஏராளமான இதயங்களை உலுக்கவும், எல்லோரும் இந்த நிகழ்ச்சியை மனதால் நினைத்துப் பார்க்கவும், தனக்கே உரிய தனிப்பாணியில் அந்நிகழ்ச்சிக்கு உயிர் கொடுத்து விளக்கிக் கொண்டிருக்கின்றது.
குரைஷிகளின் சூழ்ச்சிகள், நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்த சதித்திட்டம் ஆகிய ஆச்சர்யப்படத்தக்க விபரங்களுக்குப் பிறகு இந்த அத்தியாயம், காபிர்களின் எண்ணம், அவர்களின் நடத்தை, அவர்களின் திட்டம், அவர்களின் கோரிக்கை ஆகியவற்றை விளக்குகிறது.
அவர்கள் விரும்பினால் குர்ஆனைப் போன்ற ஒன்றை அவர்களால் தயாரிக்க முடியும் என்று சொல்லும் அளவுக்கு சென்றார்கள். அதே நேரத்தில் குர்ஆனை முன்னோர்களின் கட்டுக்கதைகள் என்றும் கூறினார்கள்.