இப்னுமாஜா பக்கம் – 47

பக்கம் – 47 (ஹதீஸ்கள் 461 முதல் 470 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

58 بَاب ما جاء في النَّضْحِ بَعْدَ الْوُضُوءِ  

461 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا محمد بن بِشْرٍ ثنا زَكَرِيَّا بن أبي زَائِدَةَ قال قال مَنْصُورٌ حدثنا مُجَاهِدٌ عن الْحَكَمِ بن سُفْيَانَ الثَّقَفِيِّ أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ ثُمَّ أَخَذَ كَفًّا من مَاءٍ فَنَضَحَ بِهِ فَرْجَهُ

பாடம் 58. ஒளூ செய்த பின் மர்மஸ்தானத்தில் தண்ணீர் தெளித்தல்

ஹதீஸ் எண்: 461

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்து விட்டு ஒரு கையளவு தண்ணீர் எடுத்து தமது மர்மஸ்தானத்தில் தெளித்துக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று ஹகம் ஸுப்யான் அறிவிக்கிறார்.

(குறிப்பு: அபூதாவூது, நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதை அறிவிப்பவர் ஸுப்யான் மகன் ஹகம் என்று சிலரும், ஹகமுடைய மகன் ஸுப்யான் என்று வேறு சிலரும் குறிப்பிடுகின்றனர். இதன் அறிவிப்பாளர் உண்மையில் யார் என்பது உறுதி செய்யப்பட வில்லை. ‘ஸுப்யானின் மகன் ஹகம் என்பவர் தான் அறிவிப்பாளர் என்றால் அவர் நபித்தோழர் அல்ல என்று புகாரி, அஹ்மத் ஆகியோர் குறிப்பிடுகின்றனர். எனவே இந்த ஹதீஸ் சரியானதல்ல. இந்தக் கருத்தில் வருகின்ற எந்த ஒரு ஹதீஸும் சரியானதல்ல.)

462 حدثنا إِبْرَاهِيمُ بن مُحَمَّدٍ الْفِرْيَابِيُّ ثنا حَسَّانُ بن عبد اللَّهِ ثنا بن لَهِيعَةَ عن عُقَيْلٍ عن الزُّهْرِيِّ عن عُرْوَةَ قال حدثنا أُسَامَةُ بن زيد عن أبيه زَيْدِ بن حَارِثَةَ قال قال رسول اللَّهِ (ص) عَلَّمَنِي جِبْرَائِيلُ الْوُضُوءَ وَأَمَرَنِي أَنْ أَنْضَحَ تَحْتَ ثَوْبِي لِمَا يَخْرُجُ من الْبَوْلِ بَعْدَ الْوُضُوءِ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ ثنا أبو حَاتِمٍ ح وثنا عبد اللَّهِ بن يُوسُفَ التَّنِّيسِيُّ ثنا بن لَهِيعَةَ فذكر نَحْوَهُ   

ஹதீஸ் எண்: 462

ஜிப்ரில் (அலை) அவர்கள் எனக்கு ஒளூ செய்வதைக் கற்றுத் தந்தார்கள். ஒளூ செய்த பிறகு கசியும் சிறுநீர் காரணமாக ஒளூவுக்குப் பின் ஆடையின் கீழ் தண்ணீர் தெளிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் ஆறாவது அறிவிப்பாளராக இப்னு லஹ்யஆ என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுகிறார்.)

463 حدثنا الْحُسَيْنُ بن سَلَمَةَ الْيَحْمِدِيُّ ثنا سَلْمُ بن قُتَيْبَةَ ثنا الْحَسَنُ بن عَلِيٍّ الْهَاشِمِيُّ عن عبد الرحمن الْأَعْرَجِ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) إذا تَوَضَّأْتَ فَانْتَضِحْ

ஹதீஸ் எண்: 463

நீ ஒளூ செய்த பின் மர்மஸ்தானத்தில் தண்ணீர் தெளித்துக் கொள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது. இதன் மூன்றாவது அறிவிப்பாளரான ஹஸன் இப்னு அலீ அல்ஹாஷிமீ என்பவர் ஹதீஸ் கலையில் நிராகரிக்கப் படுபவராவார்.)

464 حدثنا محمد بن يحيى ثنا عَاصِمُ بن عَلِيٍّ ثنا قَيْسٌ عن بن أبي لَيْلَى عن أبي الزُّبَيْرِ عن جَابِرٍ قال تَوَضَّأَ رسول اللَّهِ (ص) فَنَضَحَ فَرْجَهُ

ஹதீஸ் எண்: 464

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்த போது தனது மர்மஸ்தானத்தில் தண்ணீர் தெளித்தார்கள் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான கைஸ் இப்னு ஆஸிம் என்பவர் பலவீனமானவர் என்பதால் இது சரியான ஹதீஸ் அல்ல.)

59 بَاب الْمِنْدِيلِ بَعْدَ الْوُضُوءِ وَبَعْدَ الْغُسْلِ  

465 حدثنا محمد بن رُمْحٍ أنا اللَّيْثُ بن سَعْدٍ عن يَزِيدَ بن أبي حَبِيبٍ عن سَعِيدِ بن أبي هِنْدٍ أَنَّ أَبَا مُرَّةَ مولى عَقِيلٍ حدثه أَنَّ أُمَّ هَانِئٍ بِنْتَ أبي طَالِبٍ حَدَّثَتْهُ أَنَّهُ لَمَّا كان عَامُ الْفَتْحِ قام رسول اللَّهِ (ص) إلى غُسْلِهِ فَسَتَرَتْ عليه فَاطِمَةُ ثُمَّ أَخَذَ ثَوْبَهُ فَالْتَحَفَ بِهِ

பாடம் 59. ஒளூ செய்த பின்பும் குறித்த பின்பும் ஈரத்தை துடைப்பது

ஹதீஸ் எண்: 465

மக்கா வெற்றியின் போது நபி (ஸல்) அவர்கள் குளிக்கமிடம் சென்றார்கள். (அவர்களின் மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கள், அவர்களை மறைத்துக் கொண்டார்கள். (குளித்த) பிறகு தமது ஆடையைச் சுற்றிக் கொண்டார்கள் என உம்முஹானி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)

466 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا بن أبي لَيْلَى عن مُحَمَّدِ بن عبد الرحمن بن سعد بن زُرَارَةَ عن مُحَمَّدِ بن شُرَحْبِيلَ عن قَيْسِ بن سَعْدٍ قال أَتَانَا النبي (ص) فَوَضَعْنَا له مَاءً فَاغْتَسَلَ ثُمَّ أَتَيْنَاهُ بِمِلْحَفَةٍ وَرْسِيَّةٍ فَاشْتَمَلَ بها فَكَأَنِّي أَنْظُرُ إلى أَثَرِ الْوَرْسِ على عُكَنِهِ

ஹதீஸ் எண்: 466

எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களுக்காக நாங்கள் தண்ணீர் எடுத்து வைத்தோம். அவர்கள் குளித்தார்கள். பிறகு நாங்கள் குங்குமப்பூ இலைகளால் சாயமேற்றப்பட்ட போர்வையை அவர்களிடம் கொண்டு வந்தோம். அதைச் சுற்றிக் கொண்டார்கள். அவர்களின் வயிற்று மடிப்பில் அந்தச் சாயத்தின் சுவடு படிந்திருந்ததை இன்று பார்ப்பது போல உள்ளது என்று கைஸ் இப்னு ஸஃது (ரலி) அறிவிக்கிறார்கள்.

467 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ ثنا الْأَعْمَشُ عن سَالِمِ بن أبي الْجَعْدِ عن كُرَيْبٍ ثنا بن عَبَّاسٍ عن خَالَتِهِ مَيْمُونَةَ قالت أَتَيْتُ رَسُولَ اللَّهِ (ص) بِثَوْبٍ حين اغْتَسَلَ من الْجَنَابَةِ فَرَدَّهُ وَجَعَلَ يَنْفُضُ الْمَاءَ

ஹதீஸ் எண்: 467

நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றியதும் அவர்களிடம் ஒரு துணியை நான் எடுத்து வந்தேன். அதை அவர்கள் மறுத்து விட்டு தண்ணீரை உதறிக் கொண்டார்கள் என்று மைமூனா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்தக் கருத்து இடம் பெற்றுள்ளது.)

468 حدثنا الْعَبَّاسُ بن الْوَلِيدِ وَأَحْمَدُ بن الْأَزْهَرِ قالا ثنا مَرْوَانُ بن مُحَمَّدٍ ثنا يَزِيدُ بن السِّمْطِ ثنا الْوَضِينُ بن عَطَاءٍ عن مَحْفُوظِ بن عَلْقَمَةَ عن سَلْمَانَ الْفَارِسِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) تَوَضَّأَ فَقَلَبَ جُبَّةَ صُوفٍ كانت عليه فَمَسَحَ بها وَجْهَهُ

ஹதீஸ் எண்: 468

நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்து விட்டு அவர்கள் அணிந்திருந்த குளிராடையைப் புரட்டி அதன் மூலம் தம் முகத்தைத் துடைத்துக் கொண்டார்கள் என்று ஸல்மான் அல்பாரிஸி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: ஸலமான் ஃபாரிஸி அவர்களிடமிருந்து அறிவிக்கும் மஹபூழ் அவர்கள் ஸல்மான் ஃபாரிஸி அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளாரா என்ற விஷயம் நிரூபிக்கப்பட வில்லை.)

60 بَاب ما يُقَالُ بَعْدَ الْوُضُوءِ  

469 حدثنا مُوسَى بن عبد الرحمن ثنا الْحُسَيْنُ بن عَلِيٍّ وَزَيْدُ بن الْحُبَابِ ح وحدثنا محمد بن يحيى ثنا أبو نُعَيْمٍ قالوا ثنا عَمْرُو بن عبد اللَّهِ بن وَهْبٍ أبو سُلَيْمَانَ النَّخَعِيُّ قال حدثني زَيْدٌ الْعَمِّيُّ عن أَنَسِ بن مَالِكٍ عن النبي (ص) قال من تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قال ثَلَاثَ مَرَّاتٍ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلا الله وَحْدَهُ لَا شَرِيكَ له وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فُتِحَ له ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ من أَيِّهَا شَاءَ دخل قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ الْقَطَّانُ ثنا إِبْرَاهِيمُ بن نَصْرٍ ثنا أبو نُعَيْمٍ بِنَحْوِهِ

பாடம் 60. உலூ செய்த பின் சொல்ல வேண்டியவை

ஹதீஸ் எண்: 469

யார் அழகிய முறையில் உலூ செய்து, பிறகு மூன்று தடவை அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு என்று கூறுவாரோ, அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவற்றில் அவர் விரும்பிய வாசல் வழியாக அதில் நுழையலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளராக வரும் ஸைத் அல் அம்மீ என்பார் பலவீனமானவர், எனினும் இதை அடுத்து வருகின்ற ஹதீஸின் காரணமாக இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)

470 حدثنا عَلْقَمَةُ بن عَمْرٍو الدَّارِمِيُّ حدثنا أبو بَكْرِ بن عَيَّاشٍ عن أبي إسحاق عن عبد اللَّهِ بن عَطَاءٍ الْبَجَلِيِّ عن عُقْبَةَ بن عَامِرٍ الْجُهَنِيِّ عن عُمَرَ بن الْخَطَّابِ قال قال رسول اللَّهِ (ص) ما من مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ ثُمَّ يقول أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلا الله وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ إلا فُتِحَتْ له ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ يَدْخُلُ من أَيِّهَا شَاءَ

ஹதீஸ் எண்: 470

மேற்கூறிய ஹதீஸ் உமர் (ரலி) வழியாக அறிவிக்கப்படுகிறது. எனினும் இங்கே ‘வஹ்தஹு லாஷரீகலஹு என்ற வாசகம் இடம் பெற வில்லை.

(குறிப்பு: முஸ்லிம், அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
 

By admin