இப்னுமாஜா பக்கம் – 50

பக்கம் – 50 (ஹதீஸ்கள் 491 முதல் 500 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

491 حدثنا محمد بن الصَّبَّاحِ ثنا حَاتِمُ بن إسماعيل عن جَعْفَرِ بن مُحَمَّدٍ عن أبيه عن عَلِيِّ بن الْحُسَيْنِ عن زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ عن أُمِّ سَلَمَةَ قالت أُتِيَ رسول اللَّهِ (ص) بِكَتِفِ شَاةٍ فَأَكَلَ منه وَصَلَّى ولم يَمَسَّ مَاءً

ஹதீஸ் எண்: 491

நபி (ஸல்) அவர்களுக்கு ஆட்டின் தொடைப்பகுதி கொடுக்கபட்டது, அதிலிருந்து அவர்கள் சாப்பிட்டு விட்டு தண்ணீரைத் தொடாமல் (அதாவது ஒளூ செய்யாமல்) தொழுதார்கள் என்று உம்மு ஸலமா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதே செய்தியை மைமூனா (ரலி) வழியாக புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.)

492 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عَلِيُّ بن مُسْهِرٍ عن يحيى بن سَعِيدٍ عن بُشَيْرِ بن يَسَارٍ أنا سُوَيْدُ بن النُّعْمَانِ الْأَنْصَارِيُّ أَنَّهُمْ خَرَجُوا مع رسول اللَّهِ (ص) إلى خَيْبَرَ حتى إذا كَانُوا بِالصَّهْبَاءِ صلى الْعَصْرَ ثُمَّ دَعَا بِأَطْعِمَةٍ فلم يُؤْتَ إلا بِسَوِيقٍ فَأَكَلُوا وَشَرِبُوا ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَضْمَضَ فَاهُ ثُمَّ قام فَصَلَّى بِنَا الْمَغْرِبَ  

ஹதீஸ் எண்: 492

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். ‘ஸஹ்பா’ எனும் இடத்தை அடைந்த போது நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகை நடத்தினார்கள். பிறகு உணவுப் பொருட்களைக் கொண்டு வரச்சொன்னார்கள். வறுத்த மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதை (அனைவரும்) சாப்பிட்டு விட்டு நீரருந்தினார்கள். பிறகு தண்ணீர் கொண்டு வரச் செய்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு எழுந்து எங்களுக்கு மஃரிப் தொழுகை நடத்தினார்கள் என்று ஸுவைத் இப்னு நுஃமான் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஅத்தா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

493 حدثنا محمد بن عبد الْمَلِكِ بن أبي الشَّوَارِبِ ثنا عبد الْعَزِيزِ بن الْمُخْتَارِ ثنا سُهَيْلٌ عن أبيه عن أبي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) أَكَلَ كَتِفَ شَاةٍ فَمَضْمَضَ وَغَسَلَ يَدَيْهِ وَصَلَّى

ஹதீஸ் எண்: 493

நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடைப் பகுதியைச் சாப்பிட்டுவிட்டு வாய் கொப்பளித்து இரண்டு கைகளையும் கழுவி விட்டு தொழுதார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இக்கருத்து அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

67 بَاب ما جاء في الْوُضُوءِ من لُحُومِ الْإِبِلِ  

494 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عبد اللَّهِ بن إِدْرِيسَ وأبو مُعَاوِيَةَ قالا ثنا الْأَعْمَشُ عن عبد اللَّهِ بن عبد اللَّهِ عن عبد الرحمن بن أبي لَيْلَى عن الْبَرَاءِ بن عَازِبٍ قال سُئِلَ رسول اللَّهِ (ص) عن الْوُضُوءِ من لُحُومِ الْإِبِلِ فقال توضؤوا منها

பாடம் 67. ஒட்டக மாமிசம் உண்பதால் ஒளூ நீங்கும்

ஹதீஸ் எண்: 494

ஒட்டக மாமிசம் உண்பதால் ஒளூ செய்ய வேண்டுமா என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ‘அதை உண்டால் ஒளூ செய்யுங்கள்’ என்று விடையளித்தார்கள். இதை பாரா இப்னு ஆஸீப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

495 حدثنا محمد بن بَشَّارٍ ثنا عبد الرحمن بن مَهْدِيٍّ ثنا زَائِدَةُ وَإِسْرَائِيلُ عن أَشْعَثَ بن أبي الشَّعْثَاءِ عن جَعْفَرِ بن أبي ثَوْرٍ عن جَابِرِ بن سَمُرَةَ قال أَمَرَنَا رسول اللَّهِ (ص) أَنْ نَتَوَضَّأَ من لُحُومِ الْإِبِلِ ولا نَتَوَضَّأَ من لُحُومِ الْغَنَمِ

ஹதீஸ் எண்: 495

ஒட்டகையின் மாமிசத்(தை உண்ப)தினால் நாங்கள் ஒளூ செய்ய வேண்டுமெனவும் ஆட்டு மாமிச(த்தை உண்ப)தினால் ஒளூ செய்ய வேண்டியதில்லை எனவும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர் என்று ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்தக் கருத்து முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

496 حدثنا أبو إسحاق الْهَرَوِيُّ إِبْرَاهِيمُ بن عبد اللَّهِ بن حَاتِمٍ ثنا عَبَّادُ بن الْعَوَّامِ عن حَجَّاجٍ عن عبد اللَّهِ بن عبد اللَّهِ مولى بنى هَاشِمٍ وكان ثِقَةً وكان الْحَكَمُ يَأْخُذُ عنه ثنا عبد الرحمن بن أبي لَيْلَى عن أُسَيْدِ بر حُضَيْرٍ قال قال رسول اللَّهِ (ص) لَا توضؤوا من أَلْبَانِ الْغَنَمِ وَتَوَضَّئُوا من أَلْبَانِ الْإِبِلِ

ஹதீஸ் எண்: 496

ஆட்டின் பாலை அருந்துவதால் நீங்கள் ஒளூ செய்ய வேண்டியதில்லை, ஒட்டகத்தின் பாலை அருந்துவதால் ஒளூ செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸைத் இப்னு ஹுலைர் (ரலி) அறிவிக்கிறார்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத் என்பவர் பலவீனமானவர்.)

497 حدثنا محمد بن يحيى ثنا يَزِيدُ بن عبد رَبِّهِ ثنا بَقِيَّةُ عن خَالِدِ بن يَزِيدَ بن عُمَرَ بن هُبَيْرَةَ الْفَزَارِيِّ عن عَطَاءِ بن السَّائِبِ قال سمعت مُحَارِبَ بن دِثَارٍ يقول سمعت عَبْدَ اللَّهِ بن عمرو يقول سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول توضؤوا من لُحُومِ الْإِبِلِ ولا تَتَوَضَّئُوا من لُحُومِ الْغَنَمِ وَتَوَضَّئُوا من أَلْبَانِ الْإِبِلِ ولا توضؤوا من أَلْبَانِ الْغَنَمِ وَصَلُّوا في مُرَاحِ الْغَنَمِ ولا تُصَلُّوا في مَعَاطِنِ الْإِبِلِ

ஹதீஸ் எண்: 497

ஒட்டகையின் மாமிசம் உண்பதால் ஒளூ செய்யுங்கள்! ஆட்டின் மாமிசம் உண்பதால் ஒளூ செய்யாதீர்கள்! ஒட்டகத்தின் பாலருந்துவதால் ஒளூ செய்யுங்கள்! ஆட்டுப் பால் அருந்துவதால் ஒளூ செய்யாதீர்கள்! ஆடுகள் கட்டுமிடங்களில் தொழுங்கள்! ஒட்டகம் கட்டுமிடங்களில் தொழாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளராகிய காலித் இப்னு யஸீத் இப்னு உமர் என்பவர் யாரெனத் தெரியாதவர்.)

68 بَاب الْمَضْمَضَةِ من شُرْبِ اللَّبَنِ  

498 حدثنا عبد الرحمن بن إبراهيم الدِّمَشْقِيُّ ثنا الْوَلِيدُ بن مُسْلِمٍ ثنا الْأَوْزَاعِيُّ عن الزُّهْرِيِّ عن عُبَيْدِ اللَّهِ بن عبد اللَّهِ بن عُتْبَةَ عن بن عَبَّاسٍ أَنَّ النبي (ص) قال مَضْمِضُوا من اللَّبَنِ فإن له دَسَمًا

பாடம் 68. பால் அருந்திய பின் வாய் கொப்பளித்தல்

ஹதீஸ் எண்: 498

பால் அருந்திய பின் வாய் கொப்பளியங்கள்! ஏனெனில் அதில் கொழுப்பு உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், நஸயீ, திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

499 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا خَالِدُ بن مَخْلَدٍ عن مُوسَى بن يَعْقُوبَ حدثني أبو عُبَيْدَةَ بن عبد اللَّهِ بن زَمْعَةَ عن أبيه عن أُمِّ سَلَمَةَ زَوْجِ النبي (ص) قالت قال رسول اللَّهِ (ص) إذا شَرِبْتُمْ اللَّبَنَ فَمَضْمِضُوا فإن له دَسَمًا

ஹதீஸ் எண்: 499

மேற்கூறிய கருத்து உம்முஸலமா (ரலி) வாயிலாக அறிவிக்கப்படுகின்றது.

500 حدثنا أبو مُصْعَبٍ ثنا عبد الْمُهَيْمِنِ بن عَبَّاسِ بن سَهْلِ بن سَعْدٍ السَّاعِدِيُّ عن أبيه عن جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال مَضْمِضُوا من اللَّبَنِ فإن له دَسَمًا

ஹதீஸ் எண்: 500

மேற்கூறிய ஹதீஸ் ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளரான அப்துல் முஹைமின் என்பார் நம்பத்தக்கவர் அல்ல.)
 

By admin