இப்னுமாஜா பக்கம் – 51

பக்கம் – 51 (ஹதீஸ்கள் 501 முதல் 510 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

501 حدثنا إسحاق بن إبراهيم السَّوَّاقُ ثنا الضَّحَّاكُ بن مَخْلَدٍ ثنا زَمْعَةُ بن صَالِحٍ عن بن شِهَابٍ عن أَنَسِ بن مَالِكٍ قال حَلَبَ رسول اللَّهِ (ص) شَاةً وَشَرِبَ من لَبَنِهَا ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَضْمَضَ فَاهُ وقال إِنَّ له دَسَمًا

ஹதீஸ் எண்: 501

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டில் பால் கறந்தார்கள். அதன் பாலை அருந்தினார்கள். பிறகு தண்ணீர் கொண்டு வரச் செய்து வாய் கொப்பளித்து விட்டு ‘இதில் கொழுப்பு உள்ளது’ எனவும் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.

69 بَاب الْوُضُوءِ من الْقُبْلَةِ  

502 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ ثنا الْأَعْمَشُ عن حَبِيبِ بن أبي ثَابِتٍ عن عُرْوَةَ بن الزُّبَيْرِ عن عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قَبَّلَ بَعْضَ نِسَائِهِ ثُمَّ خَرَجَ إلى الصَّلَاةِ ولم يَتَوَضَّأْ قلت ما هِيَ إلا أَنْتِ فَضَحِكَتْ

பாடம் 69. முத்தமிட்டால் ஒளூ நீங்குமா?

ஹதீஸ் எண்: 502

‘நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரில் ஒருவரை முத்தமிட்டு விட்டு ஒளூ செய்யாமலே தொழுகைக்குப் புறப்பட்டார்கள்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய போது, ‘அந்த மனைவி உங்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?’ என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் சிரித்தார்கள் என உர்வா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: உர்வா அவர்களிடம் இதை அறிவிக்கும் ஹபீப் இப்னு அபீஸாபித் என்பார் உர்வாவிடம் எதனையும் செவியுற்றதில்லை, எனவே இந்த ஹதீஸ் முர்ஸல் எனும் வகையைச் சேர்ந்ததாகும்.)

503 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا محمد بن فُضَيْلٍ عن حَجَّاجٍ عن عَمْرِو بن شُعَيْبٍ عن زَيْنَبَ السَّهْمِيَّةِ عن عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) كان يَتَوَضَّأُ ثُمَّ يُقَبِّلُ ويصلى ولا يَتَوَضَّأُ وَرُبَّمَا فَعَلَهُ بِي

ஹதீஸ் எண்: 503

‘நபி (ஸல்) அவர்கள் ஒளூ செய்து விட்டு முத்தமிடுவார்கள். பிறகு ஒளூ செய்யாமலேயே தொழுவார்கள். சிலசமயம் என்னிடமும் அவ்வாறு நடந்து கொள்வார்கள்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளரான ஸைனப் அல்ஸஹ்மிய்யா என்பவரும் நான்காவது அறிவிப்பாளரான ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத் என்பவரும் பலவீனமானவர்கள்.)

70 بَاب الْوُضُوءِ من الْمَذْيِ  

504 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا هُشَيْمٌ عن يَزِيدَ بن أبي زِيَادٍ عن عبد الرحمن بن أبي لَيْلَى عن عَلِيٍّ قال سُئِلَ رسول اللَّهِ (ص) عن الْمَذْيِ فقال فيه الْوُضُوءُ وفي الْمَنِيِّ الْغُسْلُ

பாடம் 70. ‘மதீ’ வெளிப்படுவது ஒளூவை நீக்கும்

(ஆண்கள் காம உணர்வுக்கு ஆளாகும் போது கசியும் நீர் அரபியில் ‘மதீ’ எனப்படும்)

ஹதீஸ் எண்: 504

‘மதீ’ யைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அதற்கவர்கள் ‘ஒளூ செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்’ என்று விடையளித்ததாக அலீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

505 حدثنا محمد بن بَشَّارٍ ثنا عُثْمَانُ بن عُمَرَ ثنا مَالِكُ بن أَنَسٍ عن سَالِمٍ أبي النَّضْرِ عن سُلَيْمَانَ بن يَسَارٍ عن الْمِقْدَادِ بن الْأَسْوَدِ أَنَّهُ سَأَلَ النبي (ص) عن الرَّجْلِ يَدْنُو من امْرَأَتِهِ فلا يُنْزِلُ قال إذا وَجَدَ أحدكم ذلك فَلْيَنْضَحْ فَرْجَهُ يعنى لِيَغْسِلْهُ وَيَتَوَضَّأْ

ஹதீஸ் எண்: 505

‘ஒரு மனிதர் தன் மனைவியுடன் நெருங்கி, விந்து வெளிப்பட வில்லையானால்…?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ‘இந்த நிலையை ஒருவர் அடைந்தால் மர்ம உறுப்பைக் கழுவிவிட்டு, ஒளூ செய்யட்டும்’ என்று விடையளித்தார்கள் என்ற மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், முஅத்தா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

506 حدثنا أبو كُرَيْبٍ ثنا عبد اللَّهِ بن الْمُبَارَكِ وَعَبْدَةُ بن سُلَيْمَانَ عن مُحَمَّدِ بن إسحاق حدثنا سَعِيدُ بن عُبَيْدِ بن السَّبَّاقِ عن أبيه عن سَهْلِ بن حُنَيْفٍ قال كنت أَلْقَى من الْمَذْيِ شِدَّةً فَأُكْثِرُ منه الِاغْتِسَالَ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ (ص) فقال إنما يُجْزِيكَ من ذلك الْوُضُوءُ قلت يا رَسُولَ اللَّهِ كَيْفَ بِمَا يُصِيبُ ثَوْبِي قال إنما يَكْفِيكَ كَفٌّ من مَاءٍ تَنْضَحُ بِهِ من ثَوْبِكَ حَيْثُ تَرَى أَنَّهُ أَصَابَ

ஹதீஸ் எண்: 506

நான் கடுமையான மதியின் பாதிப்புக்கு ஆளாகி இருந்தேன். இதனால் அடிக்கடி குளித்துக் கொண்டிருந்தேன். இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்ட போது, ‘அதற்கு ஒளூ செய்வதே போதுமாகும்’ என்றார்கள். ‘அப்படியானால் ஆடையில் பட்டு விட்டதை என்ன செய்வது?’ என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘அதுபட்ட இடத்தில் ஒரு கையளவு தண்ணீரை தெளித்துக் கொள்வது உனக்குப் போதுமாகும்’ என்று விடையளித்தார்கள் என ஸஹ்ல் இப்னு ஹுனைப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

507 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا محمد بن بِشْرٍ ثنا مِسْعَرٌ عن مُصْعَبِ بن شَيْبَةَ عن أبي حَبِيبِ بن يَعْلَى بن مُنْيَةَ عن بن عَبَّاسٍ أَنَّهُ أتى أُبَيَّ بن كَعْبٍ وَمَعَهُ عُمَرُ فَخَرَجَ عَلَيْهِمَا فقال إني وَجَدْتُ مَذْيًا فَغَسَلْتُ ذكرى وَتَوَضَّأْتُ فقال عُمَرُ أَوَ يُجْزِئُ ذلك قال نعم قال أَسَمِعْتَهُ من رسول اللَّهِ (ص) قال نعم

ஹதீஸ் எண்: 507

உபை இப்னு கஃபு (ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சென்றார்கள். அவருடன் உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவ்விருவரிடமும் சென்று, ‘என்னிடமிருந்து மதி வெளிப்பட்டது, என் உறுப்பைக் கழுவி விட்டு ஒளூ செய்து கொண்டேன்’ எனக் கூறினார். அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், ‘இவ்வாறு செய்வது போதுமா?’ என்று கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்றார். ‘நபி (ஸல்) அவர்களிடம் இதை நீ செவியுற்றுள்ளீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்’ என்றார் என்று அபூஹபீப் இப்னு யஃலா என்பார் அறிவிக்கிறார்.

(குறிப்பு: இக்கருத்து புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

71 بَاب وُضُوءِ النَّوْمِ  

508 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ سمعت سُفْيَانَ يقول لِزَائِدَةَ بن قُدَامَةَ يا أَبَا الصَّلْتِ هل سَمِعْتَ في هذا شيئا فقال ثنا سَلَمَةُ بن كُهَيْلٍ عن كُرَيْبٍ عن بن عَبَّاسٍ أَنَّ النبي (ص) قام من اللَّيْلِ فَدَخَلَ الْخَلَاءَ فَقَضَى حَاجَتَهُ ثُمَّ غَسَلَ وَجْهَهُ وَكَفَّيْهِ ثُمَّ نَامَ حدثنا أبو بَكْرِ بن خَلَّادٍ الْبَاهِلِيُّ ثنا يحيى بن سَعِيدٍ ثنا شُعْبَةُ أنا سَلَمَةُ بن كُهَيْلٍ أنا بُكَيْرٌ عن كُرَيْبٍ قال فَلَقِيتُ كُرَيْبًا فَحَدَّثَنِي عن بن عَبَّاسٍ عن النبي (ص) فذكر نَحْوَهُ

பாடம் 71. தூங்கு முன் ஒளூ செய்தல்

ஹதீஸ் எண்: 508

நபி (ஸல்) அவர்கள் இரவில் எழுந்து கழிப்பிடம் சென்று தம் தேவையை நிறைவேற்றினார்கள். பிறகு தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவி விட்டு பின்னர் உறங்கி விட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

72 بَاب الْوُضُوءِ لِكُلِّ صَلَاةٍ وَالصَّلَوَاتِ كُلِّهَا بِوُضُوءٍ وَاحِدٍ  

509 حدثنا سُوَيْدُ بن سَعِيدٍ ثنا شَرِيكٌ عن عَمْرِو بن عَامِرٍ عن أَنَسِ بن مَالِكٍ قال كان رسول اللَّهِ (ص) يَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ وَكُنَّا نَحْنُ نصلى الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ

பாடம் 72. ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்தலும் ஒரு ஒளூவில் பல தொழுகைகளைத் தொழுவதும்

ஹதீஸ் எண்: 509

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்பவர்களாக இருந்தனர். நாங்கள் பல தொழுகைகளை ஒரே ஒளூவின் மூலம் தொழுபவர்களாக இருந்தோம் என்று அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

510 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن مُحَارِبِ بن دِثَارٍ عن سُلَيْمَانَ بن بُرَيْدَةَ عن أبيه أَنَّ النبي (ص) كان يَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ فلما كان يَوْمُ فَتْحِ مَكَّةَ صلى الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ

ஹதீஸ் எண்: 510

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்பவர்களாக இருந்தனர். மக்கா வெற்றியின் தினத்தில் ஒரே ஒளூவைக் கொண்டு பல தொழுகைகளைத் தொழுதார்கள் என்று புரைதா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

 

By admin