இப்னுமாஜா பக்கம் – 52

பக்கம் – 52 (ஹதீஸ்கள் 511 முதல் 520 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

511 حدثنا إسماعيل بن تَوْبَةَ ثنا زِيَادُ بن عبد اللَّهِ ثنا الْفَضْلُ بن مُبَشِّرٍ قال رأيت جَابِرَ بن عبد اللَّهِ يصلى الصَّلَوَاتِ بِوُضُوءٍ وَاحِدٍ فقلت ما هذا فقال رأيت رَسُولَ اللَّهِ (ص) يَصْنَعُ هذا فَأَنَا أَصْنَعُ كما صَنَعَ رسول اللَّهِ (ص)

ஹதீஸ் எண்: 511

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரு ஒளூவின் மூலம் பல தொழுகைகளைத் தொழக் கண்டேன். ‘ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக் கண்டேன். நபி (ஸல்) அவர்கள் செய்தவாறு நானும் செய்கிறேன்’ என்று ஜாபிர் (ரலி) விடையளித்தார்கள் என்று பழ்லு இப்னு முபஷ்ஷிர் அறிவிக்கிறார்.

73 بَاب الْوُضُوءِ على الطَّهَارَةِ  

512 حدثنا محمد بن يحيى ثنا عبد اللَّهِ بن يَزِيدَ الْمُقْرِئُ ثنا عبد الرحمن بن زِيَادٍ عن أبي غُطَيْفٍ الْهُذَلِيِّ قال سمعت عَبْدَ اللَّهِ بن عُمَرَ بن الْخَطَّابِ في مَجْلِسِهِ في الْمَسْجِدِ فلما حَضَرَتْ الصَّلَاةُ قام فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ عَادَ إلى مَجْلِسِهِ فلما حَضَرَتْ الْعَصْرُ قام فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ عَادَ إلى مَجْلِسِهِ فلما حَضَرَتْ الْمَغْرِبُ قام فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ عَادَ إلى مَجْلِسِهِ فقلت أَصْلَحَكَ الله أَفَرِيضَةٌ أَمْ سُنَّةٌ الْوُضُوءُ عِنْدَ كل صَلَاةٍ قال أَوَ فَطِنْتَ إلى وَإِلَى هذا مِنِّي فقلت نعم فقال لَا لو تَوَضَّأْتُ لِصَلَاةِ الصُّبْحِ لَصَلَّيْتُ بِهِ الصَّلَوَاتِ كُلَّهَا ما لم أُحْدِثْ وَلَكِنِّي سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول من تَوَضَّأَ على كل طُهْرٍ فَلَهُ عَشْرُ حَسَنَاتٍ وَإِنَّمَا رَغِبْتُ في الْحَسَنَاتِ

பாடம் 73. ஒளூ நீங்காத போதே ஒளூ செய்தல்

ஹதீஸ் எண்: 512

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் பள்ளியில் தமது இடத்தில் அமர்ந்திருந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் எழுந்து ஒளூ செய்து தொழுதார்கள். பின்னர் தாம் அமர்ந்த இடத்தில் திரும்பவும் அமர்ந்தார்கள். அஸர் நேரம் நெருங்கியதும் எழுந்து ஒளூ செய்து தொழுதார்கள். பிறகு தமது இடத்திற்குச் சென்று திரும்ப அமர்ந்தார்கள். மஃரிப் நேரம் வந்ததும் எழுந்து ஒளூ செய்து தொழுதார்கள். பின்னர் தமது இருப்பிடம் சென்று அமர்ந்தார்கள். ‘அல்லாஹ் உங்களுக்கு நன்மை புரிவானாக! ஒவ்வொரு தொழுகையின் போதும் ஒளூ செய்வது அவசியமா? நபிவழியா?’ என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நீர் என்னைக் கவனித்துப் பார்த்தீரா? என்னிடமிருந்து இதை விளங்கிக் கொண்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அதற்கு அவர்கள் ‘(கடமையோ நபிவழியோ) அல்ல சுபுஹ் தொழுகைக்கு நான் ஒளூ செய்து விட்டு அந்த ஒளூ நீங்காதவரை அதன் மூலம் பல தொழுகைகளைத் தொழுதிருப்பேன். ஆனால் ‘யார் ஒளூ இருக்கும் போது மீண்டும் ஒளூ செய்கிறாரோ அவருக்குப் பத்து நன்மைகள் உள்ளன’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன். அந்த நன்மைகளுக்கு ஆசைப்பட்டே இவ்வாறு செய்தேன் என விடையளித்தார்கள் என்று அபூகுதைப் அல்ஹுதலீ அறிவிக்கிறார்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய அப்துர் ரஹ்மான் இப்னு ஸியாரத் அல்அப்ரீகி என்பவர் பலவீனமானவர் என்பதால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.)

74 بَاب لَا وُضُوءَ إلا من حَدَثٍ  

513 حدثنا محمد بن الصَّبَّاحِ قال أَنْبَأَنَا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن الزُّهْرِيِّ عن سَعِيدٍ وَعَبَّادُ بن تَمِيمٍ عن عَمِّهِ قال شُكِيَ إلى النبي (ص) الرَّجُلُ يَجِدُ الشَّيْءَ في الصَّلَاةِ فقال لَا حتى يَجِدَ رِيحًا أو يَسْمَعَ صَوْتًا

பாடம் 74. ஒளூ நீங்காமல் ஒளூ அவசியமில்லை

ஹதீஸ் எண்: 513

தொழும் போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வைப் பெறும் ஒரு மனிதர் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாற்றத்தை உணரும் வரை அல்லது அதன் சப்தத்தை கேட்கும் வரை (தொழுகையை முறித்து விட) வேண்டாம் என்று கூறியதாக அப்பாத் இப்னு தமீம் அறிவிக்கிறார்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

514 حدثنا أبو كُرَيْبٍ ثنا الْمُحَارِبِيُّ عن مَعْمَرِ بن رَاشِدٍ عن الزُّهْرِيِّ أَنْبَأَنَا سَعِيدُ بن الْمُسَيَّبِ عن أبي سَعِيدٍ الْخُدْرِيِّ قال سُئِلَ النبي (ص) عن التَّشَبُّهِ في الصَّلَاةِ فقال لَا يَنْصَرِفْ حتى يَسْمَعَ صَوْتًا أو يَجِدَ رِيحًا

ஹதீஸ் எண்: 514

தொழுகையில் ஏற்படும் சந்தேகம் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தை கேட்கும் வரை (தொழுகையை விட்டு) திரும்பிவிட வேண்டாம் என்று கூறினார்கள் என அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான மஃமர் இப்னு ராஷித் என்பவரிடமிருந்து ஐந்தாவது அறிவிப்பாளரான முஹாரிபீ என்பார் எதனையும் செவியுற்றதில்லை, எனவே இது அறிவிப்பாளரிடையே தொடர்பு அற்ற ஹதீஸாகும். ஆயினும் இந்த கருத்தில் நம்பகமான வேறு பல ஹதீஸ்களும் வந்துள்ளதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)

515 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ح وحدثنا محمد بن بَشَّارٍ ثنا محمد بن جَعْفَرٍ وَعَبْدُ الرحمن قالوا ثنا شُعْبَةُ عن سُهَيْلِ بن أبي صَالِحٍ عن أبيه عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ (ص) لَا وُضُوءَ إلا من صَوْتٍ أو رِيحٍ

ஹதீஸ் எண்: 515

காற்று அல்லது நாற்றம் வெளிப்படுவதால் தவிர ஒளூ இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: அஹ்மத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

516 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا إسماعيل بن عَيَّاشٍ عن عبد الْعَزِيزِ بن عُبَيْدِ اللَّهِ عن مُحَمَّدِ بن عَمْرِو بن عَطَاءٍ قال رأيت السَّائِبَ بن يَزِيدَ يَشُمُّ ثَوْبَهُ فقلت مِمَّ ذلك قال إني سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول لَا وُضُوءَ إلا من رِيحٍ أو سَمَاعٍ

ஹதீஸ் எண்: 516

ஸாயிப் இப்னுயஸீத் (ரலி) அவர்கள் தமது ஆடையை முகர்ந்து பார்ப்பார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் வாடையோ சப்தமோ வெளிப்பட்டால் தவிர ஒளூ (தேவை) இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்று விடையளித்தார்கள் என்று முஹம்மத் இப்னு அம்ரு இப்னு அதா என்பார் அறிவிக்கிறார்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளரான அப்துல் அஸீஸ் இப்னு உபைதுல்லாஹ் என்பவர் பலவீனமானவர் எனவே இந்த ஹதீஸ் சரியானதன்று.)

75 بَاب مِقْدَارِ الْمَاءِ الذي لَا يُنَجَّسُ  

517 حدثنا أبو بَكْرِ بن خَلَّادٍ الْبَاهِلِيُّ ثنا يَزِيدُ بن هَارُونَ أَنْبَأَنَا محمد بن إسحاق عن مُحَمَّدِ بن جَعْفَرِ بن الزُّبَيْرِ عن عُبَيْدِ اللَّهِ بن عبد اللَّهِ بن عُمَرَ عن أبيه قال سمعت رَسُولَ اللَّهِ (ص) سُئِلَ عن الْمَاءِ يَكُونُ بِالْفَلَاةِ من الأرض وما يَنُوبُهُ من الدَّوَابِّ وَالسِّبَاعِ فقال رسول اللَّهِ (ص) إذا بَلَغَ الْمَاءُ قُلَّتَيْنِ لم يُنَجِّسْهُ شَيْءٌ حدثنا عَمْرُو بن رَافِعٍ ثنا عبد اللَّهِ بن الْمُبَارَكِ عن مُحَمَّدِ بن إسحاق عن مُحَمَّدِ بن جَعْفَرٍ عن عُبَيْدِ اللَّهِ بن عبد اللَّهِ بن عُمَرَ عن أبيه عن النبي (ص) نَحْوَهُ

பாடம் 75. எவ்வளவு தண்ணீர் இருந்தால் அசுத்தமாகாது?

ஹதீஸ் எண்: 517

வெட்ட வெளியில் இருக்கும் தண்ணீர் பற்றியும் அங்கே விலங்குகளும் ஊர்வனவும் வந்து செல்வது பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் இரண்டு குல்லத் களை அடைந்து விட்டால் அது அசுத்தமாவதில்லை என்று கூற நான் செவியுற்றுள்ளேன் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

518 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا حَمَّادُ بن سَلَمَةَ عن عَاصِمِ بن الْمُنْذِرِ عن عُبَيْدِ اللَّهِ بن عبد اللَّهِ بن عُمَرَ عن أبيه قال قال رسول اللَّهِ (ص) إذا كان الْمَاءُ قُلَّتَيْنِ أو ثَلَاثًا لم يُنَجِّسْهُ شَيْءٌ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ حدثنا أبو حَاتِمٍ ثنا أبو الْوَلِيدِ وأبو سَلَمَةَ وبن عَائِشَةَ الْقُرَشِيُّ قالوا حدثنا حَمَّادُ بن سَلَمَةَ فذكر نَحْوَهُ

ஹதீஸ் எண்: 518

தண்ணீர் இரண்டு அல்லது மூன்று குல்லத்களை அடைந்து விட்டால் அதை எப்பொருளும் அசுத்தமாக்கி விடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

76 بَاب الْحِيَاضِ  

519 حدثنا أبو مُصْعَبٍ الْمَدَنِيُّ ثنا عبد الرحمن بن زَيْدِ بن أَسْلَمَ عن أبيه عن عَطَاءِ بن يَسَارٍ عن أبي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ النبي (ص) سُئِلَ عن الْحِيَاضِ التي بين مَكَّةَ وَالْمَدِينَةِ تَرِدُهَا السِّبَاعُ وَالْكِلَابُ وَالْحُمُرُ وَعَنْ الطَّهَارَةِ منها فقال لها ما حَمَلَتْ في بُطُونِهَا وَلَنَا ما غَبَرَ طَهُورٌ

ஹதீஸ் எண்: 519

வனவிலங்குகள், நாய்கள், கழுதைகள் நீரருந்துகின்ற மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையில் அமைந்த நீர்துறைகள் பற்றியும் அவற்றிலிருந்து ஒளூ செய்வது பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவை வயிற்றில் சுமந்து கொண்டது (அதாவது குடித்தது) அவற்றுக்கு. மீதம் வைத்தது நமக்குரியதும் சுத்தம் செய்யத் தக்கதுமாகும் என்று விடையளித்தனர் என அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளராகிய அப்துர்ரஹ்மான் இப்னுஸைத் இப்னு அஸ்லம் என்பார் அனைவராலும் பலவீனமானவர் என்று முடிவு செய்யப்பட்டவர். ஆயினும் இந்தக் கருத்தில் வேறு அறிவிப்பாளர்கள் வழியாக பல ஹதீஸ்கள் வந்துள்ளதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)

520 حدثنا أَحْمَدُ بن سِنَانٍ ثنا يَزِيدُ بن هَارُونَ ثنا شَرِيكٌ عن طَرِيفِ بن شِهَابٍ قال سمعت أَبَا نَضْرَةَ يحدث عن جَابِرِ بن عبد اللَّهِ قال انْتَهَيْنَا إلى غَدِيرٍ فإذا فيه جِيفَةُ حِمَارٍ قال فَكَفَفْنَا عنه حتى انْتَهَى إِلَيْنَا رسول اللَّهِ (ص) فقال إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ فَاسْتَقَيْنَا وَأَرْوَيْنَا وَحَمَلْنَا

ஹதீஸ் எண்: 520

நாங்கள் ஒரு குட்டையை அடைந்தோம். அதில் கழுதையின் பிணம் ஒன்று கிடந்தது. எனவே நபி (ஸல்) அவர்களிடம் சென்று விளக்கம் கேட்கும் வரை அத்தண்ணீரிலிருந்து (பயன்படுத்தாமல்) நாங்கள் விலகிக் கொண்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தண்ணீரை எப்பொருளும் அசுத்தப் படுத்தாது என்று கூறினார்கள். (அதன் பிறகு) நாங்கள் அருந்தினோம். பிறரையும் அருந்தச் செய்தோம். வீட்டிற்கும் எடுத்துச் சென்றோம் என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளராகிய தரீப் இப்னு ஷிஹாப் என்பவர் பலவீனமானவர். ஆயினும் தண்ணீரை எப்பொருளும் அசுத்தப்படுத்தாது என்ற வாசகம் மட்டும் அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, தாரகுத்னீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
 

By admin