இப்னுமாஜா பக்கம் – 53

பக்கம் – 53 (ஹதீஸ்கள் 521 முதல் 530 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

521 حدثنا مَحْمُودُ بن خَالِدٍ وَالْعَبَّاسُ بن الْوَلِيدِ الدِّمَشْقِيَّانِ قالا ثنا مَرْوَانُ بن مُحَمَّدٍ ثنا رِشْدِينُ أَنْبَأَنَا مُعَاوِيَةُ بن صَالِحٍ عن رَاشِدِ بن سَعْدٍ عن أبي أُمَامَةَ الْبَاهِلِيِّ قال قال رسول اللَّهِ (ص) إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ إلا ما غَلَبَ على رِيحِهِ وَطَعْمِهِ وَلَوْنِهِ

ஹதீஸ் எண்: 521

வாடை, சுவை, நிறம் மாறிவிடும் போது தவிர தண்ணீரை எப்பொருளும் அசுத்தப்படுத்தாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸின் நான்காவது அறிவிப்பாளராக ரிஷ்தீன் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்பதால் இந்த ஹதீஸ் ஏற்கத்தக்கதல்ல.)

77 بَاب ما جاء في بَوْلِ الصَّبِيِّ الذي لم يُطْعَمْ  

522 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو الْأَحْوَصِ عن سِمَاكِ بن حَرْبٍ عن قَابُوسَ بن أبي الْمُخَارِقِ عن لُبَابَةَ بِنْتِ الحرث قالت بَالَ الْحُسَيْنُ بن عَلِيٍّ في حِجْرِ النبي (ص) فقلت يا رَسُولَ اللَّهِ أَعْطِنِي ثَوْبَكَ وَالْبَسْ ثَوْبًا غَيْرَهُ فقال إنما يُنْضَحُ من بَوْلِ الذَّكَرِ وَيُغْسَلُ من بَوْلِ الْأُنْثَى

பாடம் 77. உணவு உட்கொள்ளாத குழந்தைகளின் சிறுநீர் பற்றியது

ஹதீஸ் எண்: 522

நபி (ஸல்) அவர்களின் மடி மீது (அவர்களின் பேரர்) அலி (ரலி) அவர்களின் மகன் ஹுஸைன் (ரலி) சிறுநீர் கழித்து விட்டார். ‘அல்லாஹ்வின் தூதரே! உங்களின் இந்த ஆடையை என்னிடம் கொடுத்துவிட்டு வேறு ஆடையை அணிந்து கொள்ளுங்கள்’ என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘பெண் குழந்தையின் சிறுநீர் (பட்டால்) கழுவப்பட வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீர் (பட்டால் பட்ட இடத்தில்) தண்ணீர் தெளித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று விடையளித்தார்கள் என்று லுபாபா பின்துல் ஹாரிஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத், ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

523 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ ثنا هِشَامُ بن عُرْوَةَ عن أبيه عن عَائِشَةَ قالت أُتِيَ النبي (ص) بِصَبِيٍّ فَبَالَ عليه فَأَتْبَعَهُ الْمَاءَ ولم يَغْسِلْهُ

ஹதீஸ் எண்: 523

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டான். நபி (ஸல்) அவர்கள் மீது அவன் சிறுநீர் கழித்தான். நபி (ஸல்) அவர்கள் அதைக் கழுவாமல் அதன் மீது தண்ணீர் தெளித்துக் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.    

524 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَمُحَمَّدُ بن الصَّبَّاحِ قالا ثنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن الزُّهْرِيِّ عن عُبَيْدِ اللَّهِ بن عبد اللَّهِ عن أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ قالت دَخَلْتُ بِابْنٍ لي على رسول اللَّهِ (ص) لم يَأْكُلْ الطَّعَامَ فَبَالَ عليه فَدَعَا بِمَاءٍ فَرَشَّ عليه

ஹதீஸ் எண்: 524

‘உணவு உண்ணாத என் மகனை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அவர்கள் மீது அவன் சிறுநீர் கழித்து விட்டான். நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் செய்து அவ்விடத்தில் தெளித்துக் கொண்டார்கள்’ என்று உம்முகைஸ் பின்து மிஹ்ஸன் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, தாரிமீ, திர்மிதி, அஹ்மத், பைஹகீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

525 حدثنا حَوْثَرَةُ بن مُحَمَّدٍ وَمُحَمَّدُ بن سَعِيدِ بن يَزِيدَ بن إبراهيم قالا ثنا مُعَاذُ بن هِشَامٍ أَنْبَأَنَا أبي عن قَتَادَةَ عن أبي حَرْبِ بن أبي الْأَسْوَدِ الدِّيْلِيِّ عن أبيه عن عَلِيٍّ أَنَّ النبي (ص) قال في بَوْلِ الرَّضِيعِ يُنْضَحُ بَوْلُ الْغُلَامِ وَيُغْسَلُ بَوْلُ الْجَارِيَةِ قال أبو الْحَسَنِ بن سَلَمَةَ حدثنا أَحْمَدُ بن مُوسَى بن مَعْقِلٍ ثنا أبو الْيَمَانِ الْمِصْرِيُّ قال سَأَلْتُ الشَّافِعِيَّ عن حديث النبي (ص) يُرَشُّ من بَوْلِ الْغُلَامِ وَيُغْسَلُ من بَوْلِ الْجَارِيَةِ وَالْمَاءَانِ جميعا وَاحِدٌ قال لِأَنَّ بَوْلَ الْغُلَامِ من الْمَاءِ وَالطِّينِ وَبَوْلَ الْجَارِيَةِ من اللَّحْمِ وَالدَّمِ ثُمَّ قال لي فَهِمْتَ أو قال لَقِنْتَ قال قلت لَا قال إِنَّ اللَّهَ تَعَالَى لَمَّا خَلَقَ آدَمَ خُلِقَتْ حَوَّاءُ من ضِلْعِهِ الْقَصِيرِ فَصَارَ بَوْلُ الْغُلَامِ من الْمَاءِ وَالطِّينِ وَصَارَ بَوْلُ الْجَارِيَةِ من اللَّحْمِ وَالدَّمِ قال قال لي فَهِمْتَ قلت نعم قال لي نَفَعَكَ الله بِهِ

ஹதீஸ் எண்: 525

குழந்தையின் சிறுநீர் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது ‘ஆண் குழந்தையின் சிறுநீர் (பட்டால்) கழுவப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டதாக அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

மேற்கூறிய ஹதீஸ் பற்றி நான் ஷாபி அவர்களிடம் இரண்டுமே (அசுத்தமான) தண்ணீர் தானே! ஏனிந்த வித்தியாசம்? என்று கேட்டேன். அதற்கு ஷாபி அவர்கள் ஆண் குழந்தையின் சிறுநீர் தண்ணீரிலிருந்தும் களிமண்ணிலிருந்தும் உருவானது. பெண் குழந்தையின் சிறுநீர் இரத்தம் சதையிலிருந்து உருவானது என்று கூறிவிட்டு புரிகிறதா? எனக் கேட்டார்கள். நான் புரியவில்லை என்றேன். அல்லாஹ் ஆதமைப் படைத்து அவரது சிறிய விலா எலும்பிலிருந்து ஹவ்வா படைக்கப்பட்டார். எனவே (ஆண்கள் மண் தண்ணீர் ஆகியவற்றிலிருந்து நேரடியாகப் படைக்கப்பட்டதால்) ஆண் குழந்தையின் சிறுநீர் தண்ணீராலும் களிமண்ணாலும் ஆனது. பெண் குழந்தையின் சிறுநீர் சதையிலிருந்தும் இரத்தத்திலிருந்தும் ஆனது என்று விளக்கம் தந்துவிட்டு புரிகிறதா என்றார்கள். நான் ஆம் என்றேன். இதன் மூலம் இறைவன் உனக்குப் பயனளிப்பானாக என்றார்கள் என்று அபுல்யமான் அல் மிஸ்ரீ என்பார் அறிவிக்கின்றார்.

(குறிப்பு: இது இமாம் ஷாபி அவர்களின் சொந்தக் கருத்தாகும். இது நபி (ஸல்) அவர்களின் கூற்று அல்ல என்பதை கவனிக்கவும்.)

526 حدثنا عَمْرُو بن عَلِيٍّ وَمُجَاهِدُ بن مُوسَى وَالْعَبَّاسُ بن عبد الْعَظِيمِ قالوا حدثنا عبد الرحمن بن مَهْدِيٍّ ثنا يحيى بن الْوَلِيدِ حدثنا مُحِلُّ بن خَلِيفَةَ أخبرنا أبو السَّمْحِ قال كنت خَادِمَ النبي (ص) فجئ بِالْحَسَنِ أو الْحُسَيْنِ فَبَالَ على صَدْرِهِ فَأَرَادُوا أَنْ يَغْسِلُوهُ فقال رسول اللَّهِ (ص) رُشَّهُ فإنه يُغْسَلُ بَوْلُ الْجَارِيَةِ وَيُرَشُّ من بَوْلِ الْغُلَامِ

ஹதீஸ் எண்: 526

நான் நபி (ஸல்) அவர்களின் ஊழியனாக இருந்தேன். அப்போது ஹஸன் அல்லது ஹுஸைன் கொண்டு வரப்பட்டார். அவர் நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் சிறுநீர் கழித்தார். அங்கிருந்தோர் அதை கழுவிவிட எத்தனித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தெளியுங்கள்! ஏனெனில் பெண் குழந்தையின் சிறுநீர் பட்டால் கழுவப்பட வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் தெளிக்கப்பட வேண்டும் என்று கூறியதாக அபுஸ்ஸம்ஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அபூதாவூத், நஸயீ, ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

527 حدثنا محمد بن بَشَّارٍ ثنا أبو بَكْرٍ الْحَنَفِيُّ ثنا أُسَامَةُ بن زَيْدٍ عن عَمْرِو بن شُعَيْبٍ عن أُمِّ كُرْزٍ أَنَّ رَسُولَ اللَّهِ (ص) قال بَوْلُ الْغُلَامِ يُنْضَحُ وَبَوْلُ الْجَارِيَةِ يُغْسَلُ

ஹதீஸ் எண்: 527

ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் தெளிக்கப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு குர்ஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளராகிய அம்ரு இப்னு ஷுஐப் அவர்கள் உம்முகுர்ஸ் (ரலி) அவர்களைச் சந்தித்ததில்லை என்பதால் இது அறிவிப்பாளர் இடையில் விடுபட்ட ஹதீஸாகும். ஆயினும் இக்கருத்தில் வந்துள்ள முந்தைய ஹதீஸ்கள் இதை வலுப்படுத்துகின்றன.)

78 بَاب الأرض يُصِيبُهَا الْبَوْلُ كَيْفَ تُغْسَلُ  

528 حدثنا أَحْمَدُ بن عَبْدَةَ أنا حَمَّادُ بن زَيْدٍ ثنا ثَابِتٌ عن أَنَسٍ أَنَّ أَعْرَابِيًّا بَالَ في الْمَسْجِدِ فَوَثَبَ إليه بَعْضُ الْقَوْمِ فقال رسول اللَّهِ (ص) لَا تُزْرِمُوهُ ثُمَّ دَعَا بِدَلْوٍ من مَاءٍ فَصَبَّ عليه

பாடம் 78. தரையில் பட்ட சிறுநீரை எவ்வாறு சுத்தம் செய்வது?

ஹதீஸ் எண்: 528

ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டார். மக்கள் அவர் மீது பாய முற்பட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அரைகுறையாக சிறுநீர் கழிக்கும் நிலைக்கு அவரைத் தள்ளாதீர்கள்’ என்று கூறிவிட்டு தண்ணீர் வாளியைக் கொண்டு வரச் செய்து அந்த இடத்தில் ஊற்றினார்கள்’ என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இக்கருத்து புகாரி, முஸ்லிம், நஸயீ, தாரிமி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

529 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عَلِيُّ بن مُسْهِرٍ عن مُحَمَّدِ بن عَمْرٍو عن أبي سَلَمَةَ عن أبي هُرَيْرَةَ قال دخل أَعْرَابِيٌّ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ (ص) جَالِسٌ فقال اللهم اغْفِرْ لي وَلِمُحَمَّدٍ ولا تَغْفِرْ لِأَحَدٍ مَعَنَا فَضَحِكَ رسول اللَّهِ (ص) وقال لقد احْتَظَرْتَ وَاسِعًا ثُمَّ وَلَّى حتى إذا كان في نَاحِيَةِ الْمَسْجِدِ فَشَجَ يَبُولُ فقال الْأَعْرَابِيُّ بَعْدَ أَنْ فَقِهَ فَقَامَ إلي بِأَبِي وَأُمِّي فلم يُؤَنِّبْ ولم يَسُبَّ فقال إِنَّ هذا الْمَسْجِدَ لَا يُبَالُ فيه وَإِنَّمَا بُنِيَ لِذِكْرِ اللَّهِ وَلِلصَّلَاةِ ثُمَّ أَمَرَ بِسَجْلٍ من مَاءٍ فَأُفْرِغَ على بَوْلِهِ

ஹதீஸ் எண்: 529

ஒரு கிராமவாசி பள்ளியில் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர் ‘என்னையும் முஹம்மதையும் இறைவா நீ மன்னிப்பாயாக! எங்களுடன் வேறு எவரையும் நீ மன்னிக்காதே’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டு இறைவனின் பரந்த அருளுக்கு தடை போடுகிறீரே என்று கேட்டார்கள். பிறகு அவர் திரும்பி பள்ளியின் ஒரு ஓரம் சென்று அங்கே சிறுநீர் கழித்தார். (தன் தவறை) விளங்கிய பிறகு என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடிந்து கொள்ள வில்லை. ஏசவில்லை. இந்தப் பள்ளிவாசல் இறைவனை நினைவு கூர்வதற்கும், தொழுவதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிறுநீர் கழிக்கப்படாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு தண்ணீர் நிரம்பிய பெரிய வாளியைக் கொண்டு வரச் செய்து அவரது சிறுநீர் மீது கொட்டப்பட்டது என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மதிலும் இடம் பெற்றுள்ளது.)

530 حدثنا محمد بن يحيى ثنا محمد بن عبد اللَّهِ عن عُبَيْدِ اللَّهِ الْهُذَلِيِّ قال محمد بن يحيى وهو عِنْدَنَا بن أبي حُمَيْدٍ أنا أبو الْمَلِيحِ الْهُذَلِيُّ عن وَاثِلَةَ بن الْأَسْقَعِ قال جاء أَعْرَابِيٌّ إلى النبي (ص) فقال اللهم ارْحَمْنِي وَمُحَمَّدًا ولا تُشْرِكْ في رَحْمَتِكَ إِيَّانَا أَحَدًا فقال لقد حَظَرْتَ وَاسِعًا وَيْحَكَ أو وَيْلَكَ قال فَشَجَ يَبُولُ فقال أَصْحَابُ النبي (ص) مَهْ فقال رسول اللَّهِ (ص) دَعُوهُ ثُمَّ دَعَا بِسَجْلٍ من مَاءٍ فَصَبَّ عليه

ஹதீஸ் எண்: 530

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைவா! எனக்கும் முஹம்மதுக்கும் அருள் புரிவாயாக! நீ எங்களுக்கு செய்யும் அருளில் எவரையும் கூட்டாக்கி விடாதே! என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் விசாலமான அருளைச் சுருக்கி விட்டீரே! உனக்குக் கேடு உண்டாகட்டும் என்று கூறினார்கள். பின்னர் கால்களை விரித்து அவர் சிறுநீர் கழிக்கலானார். அப்போது நபித்தோழர்கள் ‘நிறுத்து!’ என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அவரை விட்டுவிடுங்கள்’! என்று கூறி விட்டு ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வரச் செய்து அந்த இடத்தில் ஊற்றினார்கள் என்று வாஸிலா இப்னுல் அஸ்கஃ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் அல்ஹுதலீ என்பவர் அனைவராலும் பலவீனமானவர் என ஒதக்கப்பட்டவராவார். ஆயினும் 529 வது ஹதீஸ் இதே கருத்தைக் கூறுவதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)
 

By admin