இப்னுமாஜா பக்கம் – 54

பக்கம் – 54 (ஹதீஸ்கள் 531 முதல் 540 வரை)

அத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்  

79 بَاب الْأَرْضُ يُطَهِّرُ بَعْضُهَا بَعْضًا  

531 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا مَالِكُ بن أَنَسٍ ثنا محمد بن عُمَارَةَ بن عَمْرِو بن حَزْمٍ عن مُحَمَّدِ بن إبراهيم بن الْحَارِثِ التَّيْمِيِّ عن أُمِّ وَلَدٍ لِإِبْرَاهِيمَ بن عبد الرحمن بن عَوْفٍ أنها سَأَلَتْ أُمَّ سَلَمَةَ زَوْجَ النبي (ص) قالت إني امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي فَأَمْشِي في الْمَكَانِ الْقَذِرِ فقالت قال رسول اللَّهِ (ص) يُطَهِّرُهُ ما بَعْدَهُ

பாடம் 79. பூமியும் சுத்தப்படுத்தக் கூடியதாகும்

ஹதீஸ் எண்: 531

நான் முந்தானையை நீளமாக விட்டுக் கொண்டவளாக இருக்கிறேன். அசுத்தமான இடங்களைக் கடந்து வருகின்றேன். (அந்த அசுத்தங்கள் ஆடையில் படுவதால் என்ன செய்வது?) என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அந்த அசுத்தமான இடத்திற்கு அடுத்து வரும் தூய்மையான இடம் அதைத் தூய்மைப்படுத்தும்’ என்றார்கள் என அன்னை உம்முஸலமா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளராக அப்துர்ரஹ்மான் இப்னு அவ்பு (ரலி) அவர்களின் அடிமைப் பெண் என்பவர் இடம் பெறுகிறார். ஆனால் அவர் யாரென்று அறிப்படாதவர் என்பதால் இது பலவீனமானதாகும். ஆனால் 533 வது ஹதீஸில் இந்தக் கருத்து இடம் பெறுவதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கின்றது.)

532 حدثنا أبو كُرَيْبٍ ثنا إِبْرَاهِيمُ بن إسماعيل الْيَشْكُرِيُّ عن بن أبي حَبِيبَةَ عن دَاوُدَ بن الْحُصَيْنِ عن أبي سُفْيَانَ عن أبي هُرَيْرَةَ قال قِيلَ يا رَسُولَ اللَّهِ إِنَّا نُرِيدُ الْمَسْجِدَ فَنَطَأُ الطَّرِيقَ النَّجِسَةَ فقال رسول اللَّهِ (ص) الْأَرْضُ يُطَهِّرُ بَعْضُهَا بَعْضًا

ஹதீஸ் எண்: 532

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பள்ளிக்கு வரும் போது அசுத்தான பாதையை மிதித்து விடுகிறோம் என்று கேட்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘பூமியில் சிலபகுதி (யில்பட்ட அசுத்தத்தை) சிலபகுதி சுத்தப்படுத்தி விடும் என்று கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளர் இப்னு அபூஹபீபா என்பவரும் ஐந்தாவது அறிவிப்பாளர் இப்ராஹீம் இப்னு இஸ்மாயில் அல்யெஷ்குரீ என்பவரும் பலவீனமானவர்கள்.)

533 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا شَرِيكٌ عن عبد اللَّهِ بن عِيسَى عن مُوسَى بن عبد اللَّهِ بن يَزِيدَ عن امْرَأَةٍ من بَنِي عبد الْأَشْهَلِ قالت سَأَلْتُ النبي (ص) فقلت إِنَّ بَيْنِي وَبَيْنَ الْمَسْجِدِ طَرِيقًا قَذِرَةً قال فَبَعْدَهَا طَرِيقٌ أَنْظَفُ منها قلت نعم قال فَهَذِهِ بِهَذِهِ

ஹதீஸ் எண்: 533

எனக்கும் பள்ளிக்குமிடையே அசுத்தமான இடம் உள்ளது என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அந்த இடத்தைக் கடந்ததும் சுத்தமான இடம் இல்லையா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அதற்கு இது சரியாகி விட்டது’ என்றார்கள் என பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த பெண்மணி அறிவிக்கிறார்.

(குறிப்பு: இது அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது. நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இந்தப் பெண்மணியின் பெயர் தெரியாமலிருப்பது இந்த ஹதீஸின் தரத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. நபித்தோழர் அல்லாத மற்றவர்களுக்கே இந்த அளவுகோல் கவனிக்கப்பட வேண்டும்.)    

80 بَاب مُصَافَحَةِ الْجُنُبِ  

534 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا إسماعيل بن عُلَيَّةَ عن حُمَيْدٍ عن بَكْرِ بن عبد اللَّهِ عن أبي رَافِعٍ عن أبي هُرَيْرَةَ أَنَّهُ لَقِيَهُ النبي (ص) في طَرِيقٍ من طُرُقِ الْمَدِينَةِ وهو جُنُبٌ فَانْسَلَّ فَفَقَدَهُ النبي (ص) فلما جاء قال أَيْنَ كُنْتَ يا أَبَا هُرَيْرَةَ قال يا رَسُولَ اللَّهِ لَقِيتَنِي وأنا جُنُبٌ فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ حتى أَغْتَسِلَ فقال رسول اللَّهِ (ص) الْمُؤْمِنُ لَا يَنْجُسُ

பாடம் 80. குளிப்புக் கடமையானவருடன் கைலாகு கொடுத்தல்

ஹதீஸ் எண்: 534

மதீனாவின் ஒரு வீதியில் நான் குளிப்புக் கடமையானவனாக உள்ள நிலையில் என்னை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தனர். நான் நழுவி விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைக் காணாமல் தேடிய போது அவர்களிடம் வந்தேன். ‘அபூஹுரைராவே! எங்கே போய்விட்டீர்?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! நான் குளிப்புக் கடமையானவனாக உள்ள நிலையில் நீங்கள் என்னை சந்தித்தீர்கள். குளிக்காமல் உங்களுடன் சேர்ந்து அமர்வதை நான் விரும்ப வில்லை என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘மூமின் அசுத்தமாக மாட்டார்’ என்று விடையளித்தனர் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத், ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

535 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ح وحدثنا إسحاق بن مَنْصُورٍ أَنْبَأَنَا يحيى بن سَعِيدٍ جميعا عن مِسْعَرٍ عن وَاصِلٍ الْأَحْدَبِ عن أبي وَائِلٍ عن حُذَيْفَةَ قال خَرَجَ النبي (ص) فَلَقِيَنِي وأنا جُنُبٌ فَحِدْتُ عنه فَاغْتَسَلْتُ ثُمَّ جِئْتُ فقال مالك قلت كنت جُنُبًا قال رسول اللَّهِ (ص) إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ

ஹதீஸ் எண்: 535

நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்த போது என்னைக் குளிப்புக் கடமையான நிலையில் சந்தித்தார்கள். அவர்களை விட்டும் வேறு பாதையில் சென்று குளித்து விட்டு பிறகு வந்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்ன விஷயம்’ என்றனர். ‘நான் குளிப்புக் கடமையானவனாக இருந்தேன்’ என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘முஸ்லிம் அசுத்தமாவது இல்லை’ என்று கூறினார்கள் என ஹுதைபா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அபூதாவூத், நஸயி, அஹ்மத், பைஹகீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

81 بَاب الْمَنِيِّ يُصِيبُ الثَّوْبَ  

536 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عَبْدَةُ بن سُلَيْمَانَ عن عَمْرِو بن مَيْمُونٍ قال سَأَلْتُ سُلَيْمَانَ بن يَسَارٍ عن الثَّوْبِ يُصِيبُهُ الْمَنِيُّ أَنَغْسِلُهُ أو نَغْسِلُ الثَّوْبَ كُلَّهُ قال سُلَيْمَانُ قالت عَائِشَةُ كان النبي (ص) يُصِيبُ ثَوْبَهُ فَيَغْسِلُهُ من ثَوْبِهِ ثُمَّ يَخْرُجُ في ثَوْبِهِ إلى الصَّلَاةِ وأنا أَرَى أَثَرَ الْغَسْلِ فيه

பாடம் 81. ஆடையில் விந்து பட்டிருந்தால்…?

ஹதீஸ் எண்: 536

ஆடையில் விந்து பட்டுவிடும் போது அந்த இடத்தை மட்டும் கழுவ வேண்டுமா? அல்லது முழு ஆடையையும் கழுவ வேண்டுமா? என்று சுலைமான் இப்னு யஸார் அவர்களிடம் கேட்டேன். அதற்கு சுலைமான் அவர்கள் ‘நபி (ஸல்) அவர்களின் ஆடையில் விந்து பட்டுவிடும். அந்த இடத்தை (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் கழுவி விட்டு அதே ஆடையுடன் தொழுகைக்கு கிளம்புவார்கள். கழுவிய ஈரத்தை அவர்களின் ஆடையில் நான் காண்பேன்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக பதிலளித்தார்கள். இதை அம்ரு இப்னு மைமூன் அறிவிக்கிறார்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

82 بَاب في فَرْكِ الْمَنِيِّ من الثَّوْبِ  

537 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو مُعَاوِيَةَ ح وحدثنا محمد بن طَرِيفٍ ثنا عَبْدَةُ بن سُلَيْمَانَ جميعا عن الْأَعْمَشِ عن إبراهيم عن هَمَّامِ بن الحرث عن عَائِشَةَ قالت رُبَّمَا فَرَكْتُهُ من ثَوْبِ رسول اللَّهِ (ص) بِيَدِي

பாடம் 82. ஆடையில் பட்ட விந்தை சுரண்டி விடதல்

ஹதீஸ் எண்: 537

‘நபி (ஸல்) அவர்களின் ஆடையில் பட்ட விந்தை சில சமயங்களில் என் கையால் நான் சுரண்டி விடுவேன்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)

538 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو مُعَاوِيَةَ عن الْأَعْمَشِ عن إبراهيم عن هَمَّامِ بن الْحَارِثِ قال نَزَلَ بِعَائِشَةَ ضَيْفٌ فَأَمَرَتْ له بِمِلْحَفَةٍ لها صَفْرَاءَ فَاحْتَلَمَ فيها فاستحيى أَنْ يُرْسِلَ بها وَفِيهَا أَثَرُ الِاحْتِلَامِ فَغَمَسَهَا في الْمَاءِ ثُمَّ أَرْسَلَ بها فقالت عَائِشَةُ لِمَ أَفْسَدَ عَلَيْنَا ثَوْبَنَا إنما كان يَكْفِيهِ أَنْ يَفْرُكَهُ بِإِصْبَعِهِ رُبَّمَا فَرَكْتُهُ من ثَوْبِ رسول اللَّهِ (ص) بِإِصْبَعِي

ஹதீஸ் எண்: 538

ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு விருந்தாளி வந்து தங்கினார். மஞ்சள் நிறமுடைய ஒரு ஆடையை அவருக்குக் கொடுக்குமாறு ஆயிஷா (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அந்த ஆடையை விரித்து அதில் அவர் உறங்கிய போது) அவர் ஸ்கலிதமாகி விட்டார். ஸ்கலிதம் ஏற்பட்டதன் சுவடு அந்த ஆடையில் தென்பட்டதால் அதை ஆயிஷா (ரலி) அவர்களிடம் திரும்பிக் கொடுக்க அவர் வெட்கப்பட்டார். எனவே அந்த ஆடையைத் தண்ணீரில் நனைத்து (கழுவி) பிறகு கொடுத்தனுப்பினார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் ‘எங்கள் ஆடையை ஏன் அவர் பாழாக்கி விட்டார். தம் விரலால் அதை அவர் சுரண்டிவிடுவது அவருக்குப் போதுமே! நபி (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து விந்து பட்ட இடத்தை என் விரலால் நான் சுரண்டி விட்டிருக்கிறேன் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். இதை ஹம்மாம் இப்னுல் ஹாரிஸ் என்பார் அறிவிக்கிறார்.

(குறிப்பு: முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

539 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا هُشَيْمٌ عن مُغِيرَةَ عن إبراهيم عن الْأَسْوَدِ عن عَائِشَةَ قالت لقد رَأَيْتُنِي أَجِدُهُ في ثَوْبِ رسول اللَّهِ (ص) فَأَحُتُّهُ عنه

ஹதீஸ் எண்: 539

இங்கே 537 வது ஹதீஸின் கருத்தே இடம் பெறுகிறது.

83 بَاب الصَّلَاةِ في الثَّوْبِ الذي يُجَامِعُ فيه  

540 حدثنا محمد بن رُمْحٍ أنا اللَّيْثُ بن سَعْدٍ عن يَزِيدَ بن أبي حَبِيبٍ عن سُوَيْدِ بن قَيْسٍ عن مُعَاوِيَةَ بن حُدَيْجٍ عن مُعَاوِيَةَ بن أبي سُفْيَانَ أَنَّهُ سَأَلَ أُخْتَهُ أُمَّ حَبِيبَةَ زَوْجَ النبي (ص) هل كان رسول اللَّهِ (ص) يصلى في الثَّوْبِ الذي يُجَامِعُ فيه قالت نعم إذا لم يَكُنْ فيه أَذًى

ஹதீஸ் எண்: 540

‘நபி (ஸல்) அவர்கள் உடலுறவு கொள்ளும் போது அணிந்திருந்த ஆடையுடனேயே தொழுததுண்டா?’ என்று அவர்களின் மனைவியும் தனது சகோதரியுமான உம்முஹபீபா (ரலி) அவர்களிடம் முஆவியா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் அந்த ஆடையில் அசுத்தம் ஏதும் பட்டிருக்கா விட்டால் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள், என்று முஆவியா இப்னு ஹுதைஜ் என்பார் அறிவிக்கிறார்.

(குறிப்பு: அபூதாவூத், நஸயீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
 

By admin