23 கேள்வி : மாற்றுமத நண்பர்களுக்கு புது வருடம், கிருஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் மற்றும் பிறந்த நாளின் போது வாழ்த்து
சொல்லலாமா? வாழ்த்து அட்டைகள் அனுப்பலாமா? (மன்சூர், யாகூ மெயில் மூலமாக)

    மாற்று மதத்தவர்களுக்கு கிருஸ்துமஸ் போன்ற அவர்களது பெருநாட்களின் போது வாழ்த்துச் சொல்வது கூடாது என்பது
எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் தமது ‘அஹ்காமு அஹ்லித்திம்மா’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். ‘மாற்று மதத்தினரின் விசேஷ நிகழ்ச்சிகளின் போது அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது ஹராம் என்பது ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். வாழ்த்துச் சொல்லக் கூடியவர் ‘குப்ர்’ என்னும் இறைநிராகரிப்பு அளவுக்குச் செல்லாவிட்டாலும் அவர் ஹராமைச் செய்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. சிலுவையை வணங்குவதற்காக ஒருவரை வாழ்த்துவது போன்றே இது. ஏன் அதைவிட பாவம் கூடியது என்று கூடச் சொல்லலாம். யார் ஓர் அடியானை அவன் செய்த பாவத்திற்காக அல்லது பித்அத்திற்காக அல்லது குப்ருக்காக வாழ்த்துகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறார்’

    இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவது போல் வாழ்த்துக் கூறுவது ஹராம் என்று சொல்லக் காரணம், வாழ்த்துபவர்
வாழ்த்தப்படுபவரின் இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்களை அங்கீகரிக்கின்றார் என்பதனலாகும்.

    வாழ்த்தப்படுபவர் நம்முடன் தொழில் புரியக்கூடியவராகவோ, கல்லூரித் தோழனாகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரனாகவோ
இருப்பினும் சரியே!

    மாற்று மதத்தவர்கள் அவர்களுடைய பெருநாள் தினங்களில் நமக்கு வாழ்த்துச் சொன்னால் அவர்களுக்கு நாம் பதில் சொல்லவும்
கூடாது. ஏனெனில் அது நமது பெருநாள் அல்ல. அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுமில்லை.

    அவ்வாறே அத்தினங்களில் அவர்களது அழைப்புகளுக்கு பதில் சொல்லவும் கூடாது.

    மேலும் சில முஸ்லிம்கள் அத்தினங்களை தமது பெருநாள் போன்று கொண்டாடுகின்ற நிலையும் காணப்படுகிறது, அதுவும்
ஹராமாகும்.

    ‘எவர் பிறசமயத்தவர்களுக்கு ஒப்பாகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது)

    அஷ்ஷெய்க் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘மாற்று மதத்தவர்களின் விசேஷ தினங்களில் அவர்களை வாழ்த்துவது அவர்களது வாழ்த்துக்குப் பதில் சொல்வது, அத்தினங்களில் அவர்களது அழைப்பை ஏற்று அவர்களது விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல் அல்லது அத்தினங்களை கொண்டாடுவது அனைத்தும் கூடாது. அவ்வாறு செய்பவர் பாவியாவார். இவற்றை ஒருவர் முகஸ்துதிக்காகவோ அன்பினாலோ அல்லது வெட்கத்தினாலோ செய்தாலும் அவர் பாவியாவார். ஏனெனில் அல்லாஹ்வுடைய தீனில் காம்ப்ரமைஸ் என்னும் (சமரசத்திற்கு) இடம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

By admin