நபி (ஸல்) அவர்களை கார்ட்டூன் படம் வரைந்தவரை கொல்ல முயற்சி
கோபன்ஹாகன் ஜனவரி 2, 2010
டென்மார்க்கில் நபிகள் நாயகம் குறித்து கேலி சித்திரம் வரைந்தவரை வீடு புகுந்து கொல்ல நடந்த முயற்சி காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டது.
டென்மார்க்கை சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் குர்ட் வெஸ்டர்கார்ட் என்பவர், அண்மையில் நபிகள் நாயகம் குறித்த கேலிச் சித்திரம் ஒன்றை வரைந்திருந்தார். இதற்கு முஸ்லிம்கள் தரப்பில் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் வசித்து வரும் அந்த கார்ட்டூனிஸ்ட்டை வீடு புகுந்து, சோமாலிய நாட்டைச் சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் கொல்ல மேற்கொண்ட முயற்சியை காவல் துறையினர் முறியடித்தனர்.
நேற்றிரவு 10 மணியளவில், கையில் கத்தி மற்றும் கோடாலியுடன் வீட்டிற்குள் நுழைய முயன்ற அந்த வாலிபரைக் கண்டதும் கார்ட்டூனிஸ்ட் வெஸ்டர்கார்ட், வீட்டிலிருந்த அபாய மணியை அழுத்தினார்.
இதனையடுத்து மின்னல் வேகத்தில் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரை துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் அந்த வாலிபர் காயமடைந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரைப் பிடித்துச் சென்றனர்.