இப்னுமாஜா பக்கம் – 12

பக்கம் – 12 (ஹதீஸ்கள் 111 முதல் 120 வரை)

அத்தியாயம்: முகத்திமா – முகப்பு

111 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا عبد اللَّهِ بن إِدْرِيسَ عن هِشَامِ بن حَسَّانَ عن مُحَمَّدِ بن سِيرِينَ عن كَعْبِ بن عُجْرَةَ قال ذَكَرَ رسول اللَّهِ  فِتْنَةً فَقَرَّبَهَا فَمَرَّ رَجُلٌ مُقَنَّعٌ رَأْسُهُ فقال رسول اللَّهِ  هذا يَوْمَئِذٍ على الْهُدَى فَوَثَبْتُ فَأَخَذْتُ بِضَبْعَيْ عُثْمَانَ ثُمَّ اسْتَقْبَلْتُ رَسُولَ اللَّهِ  فقلت هذا قال هذا

ஹதீஸ் எண்: 111

நபி (ஸல்) அவர்கள் (வருங்காலத்தில் ஏற்படப்போகும்) ஒரு குழப்பத்தைப் பற்றி கூறிவிட்டு, அது விரைவில் சம்பவிக்கும் என்றும் கூறினார்கள். அப்போது தலையில் முக்காடிட்ட ஒரு மனிதர் சென்றார். அந்தக் குழப்பம் சம்பவிக்கும் நாளில் இவர்தான் நேர்வழியில் இருப்பார். (இவருக்கு எதிரானவர்களே வழிகேட்டில் இருப்பார்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உடனே பாய்ந்து சென்று (முக்காடிட்டுச் சென்று கொண்டிருந்து) உஸ்மானைப் பிடித்து நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து ‘இவரையா சொன்னீர்கள்’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘இவர் தான்’ என்று கூறினார்கள் என கஃபு இப்னு உஜ்ரா (ரலி) கூறினார்கள்.

(குறிப்பு: கஃபு இப்னு உஜ்ரா (ரலி) கூறியதாக இதை அறிவிக்கும் முஹம்மத் இப்னு ஸீரீன், அவர்களைச் சந்தித்ததில்லை என்பதால் அறிவிப்பாளர் வரிசை தொடர்பற்றுப் போகிறது. எனினும் வேறு அறிவிப்பாளர் வரிசையில் திர்மிதியிலும் இந்த ஹதீஸ் இடம் பெறுகிறது. அது ஆதாரப்பூர்வமானது.)

112 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو مُعَاوِيَةَ ثنا الْفَرَجُ بن فَضَالَةَ عن رَبِيعَةَ بن يَزِيدَ الدِّمَشْقِيِّ عن النُّعْمَانِ بن بَشِيرٍ عن عَائِشَةَ قالت قال رسول اللَّهِ  يا عُثْمَانُ إن وَلَّاكَ الله هذا الْأَمْرَ يَوْمًا فَأَرَادَكَ الْمُنَافِقُونَ أَنْ تَخْلَعَ قَمِيصَكَ الذي قَمَّصَكَ الله فلا تَخْلَعْهُ يقول ذلك ثَلَاثَ مَرَّاتٍ قال النُّعْمَانُ فقلت لِعَائِشَةَ ما مَنَعَكِ أَنْ تُعْلِمِي الناس بهذا قالت أُنْسِيتُهُ

ஹதீஸ் எண்: 112

‘உஸ்மானே! அல்லாஹ் உம்மிடம் ஆட்சிப் பொறுப்பைத் தந்தால் அல்லாஹ் உமக்கு அணிவித்துள்ள (ஆட்சி எனும்) சட்டையைக் கழற்றுமாறு முனாபிக்குகள் விரும்பினால் அதை நீ கழற்ற வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள் என் ஆயிஷா (ரலி) கூறிய போது, ‘இதை மக்களிடம் முன்பே ஏன் நீங்கள் அறிவிக்கவில்லை?’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர் அறிவிக்கிறார்.

(குறிப்பு: திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது)

 

113 حدثنا محمد بن عبد اللَّهِ بن نُمَيْرٍ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ ثنا إسماعيل بن أبي خَالِدٍ عن قَيْسِ بن أبي حَازِمٍ عن عَائِشَةَ قالت قال رسول اللَّهِ  في مَرَضِهِ وَدِدْتُ أَنَّ عِنْدِي بَعْضَ أَصْحَابِي قُلْنَا يا رَسُولَ اللَّهِ ألا نَدْعُو لك أَبَا بَكْرٍ فَسَكَتَ قُلْنَا ألا نَدْعُو لك عُمَرَ فَسَكَتَ قُلْنَا ألا نَدْعُو لك عُثْمَانَ قال نعم فَجَاءَ فَخَلَا بِهِ فَجَعَلَ النبي  يُكَلِّمُهُ وَوَجْهُ عُثْمَانَ يَتَغَيَّرُ قال قَيْسٌ فَحَدَّثَنِي أبو سَهْلَةَ مولى عُثْمَانَ أَنَّ عُثْمَانَ بن عَفَّانَ قال يوم الدَّارِ إِنَّ رَسُولَ اللَّهِ  عَهِدَ إلي عَهْدًا فَأَنَا صَائِرٌ إليه وقال عَلِيٌّ في حَدِيثِهِ وأنا صَابِرٌ عليه قال قَيْسٌ فَكَانُوا يُرَوْنَهُ ذلك الْيَوْمَ

ஹதீஸ் எண்: 113

நபி (ஸல்) அவர்கள் நோயுற்ற போது ‘என்னுடன் என் தோழர்கள் சிலர் இருப்பதை விரும்புகிறேன்’ என்றார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ரை உங்களிடம் அழைத்து வரட்டுமா?’ என்று கேட்டோம். பதில் ஏதும் கூறவில்லை. ‘உமரை உங்களிடம் அழைத்து வரட்டுமா?’ என்றோம். அதற்கும் மௌனமாக இருந்தார்கள். ‘உஸ்மானை உங்களிடம் அழைத்து வரட்டுமா?’ என்றோம். ‘ஆம்’ என்றார்கள். உஸ்மான் வந்து நபி (ஸல்) அவர்களுடன் தனிமையில் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் உஸ்மானுடன் ஏதோ பேச அவரது முகம் மாறுதலடைந்தது. (பின்னர் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) அவர்களின் வீட்டை எதிரிகள் முற்றுகையிட்ட போது ‘நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ஒரு உறுதி மொழி பெற்றுள்ளனர். அதற்காகவே நான் பொறுமை காக்கிறேன்’ என்று குறிப்பிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உஸ்மானுடன் பேசிய நிகழ்ச்சியை ஆயிஷா (ரலி) அவர்களும், முற்றுகையின் போது உஸ்மான் கூறிய செய்தியை ‘அபூஸஹ்லா’ என்ற உஸ்மான் (ரலி) உடைய அடிமையும அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.)

فَضْلِ عَلِيِّ بن أبي طَالِبٍ رضي الله عنه

 114 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ وأبو مُعَاوِيَةَ وعَبْدُ اللَّهِ بن نُمَيْرٍ عن الْأَعْمَشِ عن عَدِيِّ بن ثَابِتٍ عن زِرِّ بن حُبَيْشٍ عن عَلِيٍّ قال عَهِدَ إلي النبي الْأُمِّيُّ  أَنَّهُ لَا يُحِبُّنِي إلا مُؤْمِنٌ ولا يُبْغِضُنِي إلا مُنَافِقٌ

அலி (ரலி) அவர்கள் பற்றி!

ஹதீஸ் எண்: 114

மூமின்கள் என்னை விரும்புவார்கள் என்றும், முனாபிக்’ கள் என்னை வெறுப்பார்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் உறுதியளித்தார்கள் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)

 

115 حدثنا محمد بن بَشَّارٍ ثنا محمد بن جَعْفَرٍ ثنا شُعْبَةُ عن سَعْدِ بن إبراهيم قال سمعت إبراهيم بن سَعْدِ بن أبي وَقَّاصٍ يحدث عن أبيه عن النبي  أَنَّهُ قال لِعَلِيٍّ ألا تَرْضَى أَنْ تَكُونَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ من مُوسَى

ஹதீஸ் எண்: 115

‘மூஸா (அலை) அவர்களுக்கு ஒரு ஹாரூன் இருந்தது போல், எனக்கு நீ இருப்பதில் திருப்தி கொள்ள மாட்டாயா?’ என்று அலி (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) கூறுகிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

 

116 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو الْحُسَيْنِ أخبرني حَمَّادُ بن سَلَمَةَ عن عَلِيِّ بن زَيْدِ بن جُدْعَانَ عن عَدِيِّ بن ثَابِتٍ عن الْبَرَاءِ بن عَازِبٍ قال أَقْبَلْنَا مع رسول اللَّهِ  في حَجَّتِهِ التي حَجَّ فَنَزَلَ في بَعْضِ الطَّرِيقِ فَأَمَرَ الصَّلَاةَ جَامِعَةً فَأَخَذَ بِيَدِ عَلِيٍّ فقال أَلَسْتُ أَوْلَى بِالْمُؤْمِنِينَ من أَنْفُسِهِمْ قالوا بَلَى قال أَلَسْتُ أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ من نَفْسِهِ قالوا بَلَى قال فَهَذَا وَلِيُّ من أنا مَوْلَاهُ اللهم وَالِ من وَالَاهُ اللهم عَادِ من عَادَاهُ

ஹதீஸ் எண்: 116

நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜின் போது நாங்களும் அவர்களுடன் இருந்தோம். வழியில் இறங்கி தொழுகைக்கு தயாராகும் படி கட்டளையிட்டார்கள். பின்னர் அலி (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு ‘மூமின்களுக்கு அவர்களின் உயிர்களை விடவும் நான் சிறந்தவனில்லையா? என்றார்கள். நாங்கள் ‘ஆம்’ என்றோம். மீண்டும் அவ்வாறே கேட்க நாங்கள் ‘ஆம்’ என்றோம். நான் யாருக்கு உற்ற நண்பனாக இருக்கின்றேனோ அவருக்கு அலியும் உற்ற நண்பராவார். இறைவா! இவரை நேசித்தவர்களை நீயும் நேசி! இவரைப் பகைத்துக் கொண்டவர்களை நீயும் பகைத்து விடு’ என்று கூறினார்கள் என பரா இப்னு ஆஸிப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஸைத் இப்னு அலி இப்னு ஜத்ஆன் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். எனினும் அவர் இடம் பெறாமல் பலமான அறிவிப்பாளர் வரிசையில் நஸயி, ஹாகிம், அஹ்மத், தப்ரானி, இப்னுஹிப்பான், திர்மிதி ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இதே இப்னுமாஜாவில் 121 வது ஹதீஸாக இடம் பெற்றுள்ள ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாகும்.)

117 حدثنا عُثْمَانُ بن أبي شَيْبَةَ ثنا وَكِيعٌ ثنا بن أبي لَيْلَى ثنا الْحَكَمُ عن عبد الرحمن بن أبي لَيْلَى قال كان أبو لَيْلَى يَسْمُرُ مع عَلِيٍّ فَكَانَ يَلْبَسُ ثِيَابَ الصَّيْفِ في الشِّتَاءِ وَثِيَابَ الشِّتَاءِ في الصَّيْفِ فَقُلْنَا لو سَأَلْتَهُ فقال إِنَّ رَسُولَ اللَّهِ  بَعَثَ إلي وأنا أَرْمَدُ الْعَيْنِ يوم خَيْبَرَ قلت يا رَسُولَ اللَّهِ إني أَرْمَدُ الْعَيْنِ فَتَفَلَ في عَيْنِي ثُمَّ قال اللهم أَذْهِبْ عنه الْحَرَّ وَالْبَرْدَ قال فما وَجَدْتُ حَرًّا ولا بَرْدًا بَعْدَ يَوْمِئِذٍ وقال لَأَبْعَثَنَّ رَجُلًا يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَيُحِبُّهُ الله وَرَسُولُهُ ليس بِفَرَّارٍ فَتَشَرَّفَ له الناس فَبَعَثَ إلى عَلِيٍّ فَأَعْطَاهَا إِيَّاهُ

ஹதீஸ் எண்: 117

அபூலைலா அவர்கள் அலி (ரலி) அவர்களுடன் இரவு நேரங்களில் பேசிக் கொண்டிருப்பார். அப்போது அலி (ரலி) அவர்கள் கோடைக்கேற்ற ஆடையைக் குளிர் காலத்திலும், குளிருக்கேற்ற ஆடையைக் கோடை காலத்திலும் அணிந்திருப்பார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்ட போது, எனக்குக் கண்வலி ஏற்பட்ட சமயத்தில் கைபர் யுத்தத்தின் போது, நபி (ஸல்) அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்கள். ‘எனக்குக் கண் நோய்’ என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் என் கண்களில் உமிழ்ந்து விட்டு ‘இறைவா! இவரை விட்டு குளிரையும், வெப்பத்தையும் போக்கி விடுவாயாக’ என்று துஆ செய்தார்கள். அதன் பிறகு ஒரு போதும் வெப்பத்தையும் குளிரையும் நான் உணர்ந்ததில்லை என்று அலி (ரலி) கூறினார்கள்.

அதே நாளில் நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விரும்புகின்ற, அல்லாஹ்வாலும், அவனது தூதராலும் விரும்பப்படுகின்ற ஒரு வீரரை நாளை தளபதியாக அனுப்புவேன்’ என்று கூறினார்கள். மக்கள் யாரென அறிய முற்பட்ட போது அலியை அழைத்து வரச் செய்து அவரிடம் (தளபதிக்குரிய) கொடியை வழங்கினார்கள் என அப்துர்ரஹ்மான் இப்னு அபீலைலா அறிவிக்கிறார்.

(குறிப்பு: அப்துர்ரஹ்மான் இப்னு அபீலைலா என்பவர் பலவீனமானவர் எனினும் இரண்டாம் பாராவில் உள்ள செய்தி மட்டும் புகாரி, முஸ்லிமிலும் வேறு அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ளது. முதல் பாராவில் இடம் பெற்றது ஏற்கத்தக்கதல்ல.)

118 حدثنا محمد بن مُوسَى الْوَاسِطِيُّ ثنا الْمُعَلَّى بن عبد الرحمن ثنا بن أبي ذِئْبٍ عن نَافِعٍ عن بن عُمَرَ قال قال رسول اللَّهِ  الْحَسَنُ وَالْحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ وَأَبُوهُمَا خَيْرٌ مِنْهُمَا

ஹதீஸ் எண்: 118

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஹஸனும் ஹுஸைனும் சுவர்க்கத்து இளைஞர்களின் தலைவர்களாவர், அவர்களது தந்தை இவ்விருவரை விடவும் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

119 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَسُوَيْدُ بن سَعِيدٍ وإسماعيل بن مُوسَى قالوا ثنا شَرِيكٌ عن أبي إسحاق عن حُبْشِيِّ بن جُنَادَةَ قال سمعت رَسُولَ اللَّهِ  يقول عَلِيٌّ مِنِّي وأنا منه ولا يُؤَدِّي عَنِّي إلا عَلِيٌّ

ஹதீஸ் எண்: 119

‘நான் அலியைச் சேர்ந்தவன், அலி என்னைச் சேர்ந்தவர். என் சார்பாக (என் கடன்களை) அலியைத் தவிர வேறெவரும் நிறைவேற்றலாகாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹுப்ஷீ இப்னு ஜனாதா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: திர்மிதி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

 

120 حدثنا محمد بن إسماعيل الرَّازِيُّ ثنا عُبَيْدُ اللَّهِ بن مُوسَى أَنْبَأَنَا الْعَلَاءُ بن صَالِحٍ عن الْمِنْهَالِ عن عَبَّادِ بن عبد اللَّهِ قال قال عَلِيٌّ أنا عبد اللَّهِ وَأَخُو رَسُولِهِ  وأنا الصِّدِّيقُ الْأَكْبَرُ لَا يَقُولُهَا بَعْدِي إلا كَذَّابٌ صَلَّيْتُ قبل الناس لسبع سِنِينَ

ஹதீஸ் எண்: 120

‘நான் அல்லாஹ்வின் அடிமையாவேன், நான் அல்லாஹ்வின் தூதருக்கு சகோதரனாவேன், நான் மிகப்பெரும் உண்மையாளன் பெரும் பொய்யனைத் தவிர வேறு எவரும் எனக்குப் பின் இவ்வாறு கூற மாட்டார்கள். மற்றவர்கள் தொழுவதற்கு முன்னே ஏழு வயதிலேயே நான் தொழுதிருக்கிறேன்’ என்று அலி (ரலி) கூறினார்கள்.

(குறிப்பு: ஹாகிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

By admin