இப்னுமாஜா பக்கம் – 13

பக்கம் – 13 (ஹதீஸ்கள் 121 முதல் 130 வரை)

அத்தியாயம்: முகத்திமா – முகப்பு

121 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو مُعَاوِيَةَ ثنا مُوسَى بن مُسْلِمٍ عن بن سَابِطٍ وهو عبد الرحمن عن سَعْدِ بن أبي وَقَّاصٍ قال قَدِمَ مُعَاوِيَةُ في بَعْضِ حَجَّاتِهِ فَدَخَلَ عليه سَعْدٌ فَذَكَرُوا عَلِيًّا فَنَالَ منه فَغَضِبَ سَعْدٌ وقال تَقُولُ هذا لِرَجُلٍ سمعت رَسُولَ اللَّهِ  يقول من كنت مَوْلَاهُ فَعَلِيٌّ مَوْلَاهُ وَسَمِعْتُهُ يقول أنت مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ من مُوسَى إلا أَنَّهُ لَا نَبِيَّ بَعْدِي وَسَمِعْتُهُ يقول لَأُعْطِيَنَّ الرَّايَةَ الْيَوْمَ رَجُلًا يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ

ஹதீஸ் எண்: 121

முஆவியா (ரலி) அவர்கள் ஒரு ஹஜ்ஜுக்கு வந்த போது மக்கள் அலி (ரலி) அவர்களைப் பற்றி பேசலானார்கள். முஆவியா (ரலி) அவர்களும் அலி (ரலி) அவர்களை ஏதோ குறை கூறினார். இதைக் கேட்ட ஸஃது (ரலி) அவர்கள் கோபமுற்று, ‘அலியே! மூஸாவுக்கு ஹாரூன் அமைந்தது போல் நீ எனக்கு அமைந்திருக்கிறாய்! எனினும் எனக்குப் பின் எந்த நபியும் கிடையாது’ எனவும், ‘நான் யாருக்கு நேசனாக இருக்கிறேனோ அவருக்கு அலியும் நேசராவார்’ எனவும் ‘அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் இன்று (கைபர்) (தளபதிக்குரிய) கொடியை வழங்குவேன்’ எனவும் நபி (ஸல்) அவர்கள் எவரைப் புகழ்ந்துரைத்தார்களோ அவரையா நீங்கள் குறை கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள் என அப்துர் ரஹ்மான் அறிவிக்கிறார்.

فَضْلِ الزُّبَيْرِ رضي الله عنه  
122 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا سُفْيَانُ عن مُحَمَّدِ بن الْمُنْكَدِرِ عن جَابِرٍ قال قال رسول اللَّهِ  يوم قُرَيْظَةَ من يَأْتِينَا بِخَبَرِ الْقَوْمِ فقال الزُّبَيْرُ أنا فقال من يَأْتِينَا بِخَبَرِ الْقَوْمِ فقال الزُّبَيْرُ أنا ثَلَاثًا فقال النبي لِكُلِّ نَبِيٍّ حَوَارِيٌّ وَإِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ


ஸுபைர் (ரலி) அவர்கள் பற்றி

ஹதீஸ் எண்: 122

‘குரைளா’ கூட்டத்தாருடன் போர் நடந்த நாளில் ‘அந்தக் கூட்டத்தினரின் நிலவரங்களை அறிந்து வந்து சொல்பவர் யார்? ‘ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். ‘நான்’ என்று ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள். மீண்டும் அதே கேள்வியைக் கேட்ட போது ‘நான்’ என்றார்கள். மூன்றாம் முறையும் அதே கேள்வியைக் கேட்ட போதும் ‘நான்’ என்றார்கள். ‘ஒவ்வொரு நபிக்கும் ‘ஹவாரிய்யூன்’ (துணை நிற்பவர்கள்) என்னுடைய உதவியாளர் ஸுபைர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், திர்மிதி ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)

123 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو مُعَاوِيَةَ ثنا هِشَامُ بن عُرْوَةَ عن أبيه عن عبد اللَّهِ بن الزُّبَيْرِ عن الزُّبَيْرِ قال لقد جَمَعَ لي رسول اللَّهِ  أَبَوَيْهِ يوم أُحُدٍ

ஹதீஸ் எண்: 123

உஹத் போரின் போது நபி ஸல் அவர்கள் (என் தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணமாகட்டும் என்று கூறி) தன் தாய் தந்தையரை எனக்கு அர்ப்பணமாக்கினார்கள் என ஸுபைர் (ரலி) கூறினார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிம், திர்மிதி ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)

124 حدثنا هِشَامُ بن عَمَّارٍ وَهَدِيَّةُ بن عبد الْوَهَّابِ قالا ثنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن هِشَامِ بن عُرْوَةَ عن أبيه قال قالت لي عَائِشُةُ يا عُرْوَةُ كان أَبَوَاكَ من الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ من بَعْدِ ما أَصَابَهُمْ الْقَرْحُ أبو بَكْرٍ وَالزُّبَيْرُ

ஹதீஸ் எண்: 124

‘உர்வாவே! உன் தந்தைமார் அபூபக்ரு, ஸுபைர் இருவரும் ‘தங்களுக்குத் துன்பம் ஏற்பட்ட பின்பும் அல்லாஹ், அவனது தூதர் ஆகியோரின் அழைப்பை ஏற்றவர்கள் (என்று இறைவன் 3:172 இல் குறிப்பிடுபவர்களில்) உள்ளவர்கள் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.)

فَضْلِ طَلْحَةَ بن عُبَيْدِ اللَّهِ رضي الله عنه

 
125 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ وَعَمْرُو بن عبد اللَّهِ الْأَوْدِيُّ قالا ثنا وَكِيعٌ ثنا الصَّلْتُ الْأَزْدِيُّ ثنا أبو نَضْرَةَ عن جَابِرٍ أَنَّ طَلْحَةَ مَرَّ على النبي  فقال شَهِيدٌ يَمْشِي على وَجْهِ الأرض

 

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) பற்றி

ஹதீஸ் எண்: 125

நபி ஸல் அவர்களை தல்ஹா (ரலி) கடந்து சென்ற போது ‘இவர் பூமியில் (உயிருடன்) நடமாடும் ஷஹீத் ஆவார்’ என்று கூறியதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

126 حدثنا أَحْمَدُ بن الْأَزْهَرِ ثنا عَمْرُو بن عُثْمَانَ ثنا زُهَيْرُ بن مُعَاوِيَةَ حدثني إسحاق بن يحيى بن طَلْحَةَ عن مُوسَى بن طَلْحَةَ عن مُعَاوِيَةَ بن أبي سُفْيَانَ قال نَظَرَ النبي  إلى طَلْحَةَ فقال هذا مِمَّنْ قَضَى نَحْبَهُ

ஹதீஸ் எண்: 126

நபி (ஸல்) அவர்கள் தல்ஹாவை நோக்கி (33:23 வசனத்தில்) தங்கள் பணியை முழுமையாக நிறைவேற்றியவர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்களில் இவரும் ஒருவர்’ என்று கூறினார்கள் என முஆவியா (ரலி) கூறினார்கள்.

127 حدثنا أَحْمَدُ بن سِنَانٍ ثنا يَزِيدُ بن هَارُونَ أنبانا إسحاق عن مُوسَى بن طَلْحَةَ قال كنا عِنْدَ مُعَاوِيَةَ فقال أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ  يقول طَلْحَةُ مِمَّنْ قَضَى نَحْبَهُ

ஹதீஸ் எண்: 127

இதே ஹதீஸ் தான் திரும்பவும் இடம் பெற்றுள்ளது.

128 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن إسماعيل عن قَيْسٍ قال رأيت يَدَ طَلْحَةَ شَلَّاءَ وَقَى بها رَسُولَ اللَّهِ  يوم أُحُدٍ

ஹதீஸ் எண்: 128

தல்ஹா (ரலி) அவர்களின் ஒருகை செயலிழந்து போன நிலையிலும் அதன் துணையால் உஹத் போரில் அல்லாஹ்வின் தூதரைக் காத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று கைஸ் (ரலி) குறிப்பிட்டார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரியிலும் இடம் பெற்றுள்ளது.)

فَضْلِ سَعْدِ بن أبي وَقَّاصٍ رضي الله عنه

 
129 حدثنا محمد بن بَشَّارٍ ثنا محمد بن جَعْفَرٍ ثنا شُعْبَةُ عن سَعْدِ بن إبراهيم عن عبد اللَّهِ بن شَدَّادٍ عن عَلِيٍّ قال ما رأيت رَسُولَ اللَّهِ  جَمَعَ أَبَوَيْهِ لِأَحَدٍ غير سَعْدِ بن مَالِكٍ فإنه قال له يوم أُحُدٍ ارْمِ سَعْدُ فِدَاكَ أبي وَأُمِّي

ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) பற்றி

 

ஹதீஸ் எண்: 129

ஸஃது இப்னு மாலிக் அவர்களுக்குத் தவிர வேறெவருக்கும் நபி ஸல் தன் பெற்றோர்களை அர்ப்பணித்ததாக நான் கண்டதில்லை, உஹத் போரின் போது ‘ஸஃதே! என் தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணமாகட்டும்! ஸஃதே! நீ அம்பு எய்வீராக! என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(குறிப்பு: முஸ்லிமிலும் இது இடம் பெற்றுள்ளது.)

130 حدثنا محمد بن رُمْحٍ أنبانا اللَّيْثُ بن سَعْدٍ ح وحدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا حَاتِمُ بن إسماعيل وإسماعيل بن عَيَّاشٍ عن يحيى بن سَعِيدٍ عن سَعِيدِ بن الْمُسَيَّبِ قال سمعت سَعْدَ بن أبي وَقَّاصٍ يقول لقد جَمَعَ لي رسول اللَّهِ  يوم أُحُدٍ أَبَوَيْهِ فقال ارْمِ سَعْدُ فِدَاكَ أبي وَأُمِّي

ஹதீஸ் எண்: 130

இதே வார்த்தையை ஸஃது (ரலி) அவர்களே கூறியதாக இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு: இதுவும் முஸ்லிமில் இது இடம் பெற்றுள்ளது.)

By admin