இப்னுமாஜா பக்கம் – 14
 
பக்கம் – 14 (ஹதீஸ்கள் 131 முதல் 140 வரை)
 
அத்தியாயம்: முகத்திமா – முகப்பு  

131 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا عبد اللَّهِ بن إِدْرِيسَ وَخَالِي يَعْلَى وَوَكِيعٌ عن إسماعيل عن قَيْسٍ قال سمعت سَعْدَ بن أبي وَقَّاصٍ يقول إني لَأَوَّلُ الْعَرَبِ رَمَى بِسَهْمٍ في سَبِيلِ اللَّهِ

 
ஹதீஸ் எண்: 131
 
‘அல்லாஹ்வின் பாதையில் முதன் முதலில் அம்பு எய்த அரபி நானாவேன்’ என்று ஸஃது (ரலி) கூறினார்கள்.(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும் இது இடம் பெற்றுள்ளது.)

132 حدثنا مَسْرُوقُ بن الْمَرْزُبَانِ ثنا يحيى بن أبي زَائِدَةَ عن هَاشِمِ بن هَاشِمٍ قال سمعت سَعِيدَ بن الْمُسَيَّبِ يَقُولَ قال سَعْدُ بن أبي وَقَّاصٍ ما أَسْلَمَ أَحَدٌ في الْيَوْمِ الذي أَسْلَمْتُ فيه وَلَقَدْ مَكَثْتُ سَبْعَةَ أَيَّامٍ وَإِنِّي لَثُلُثُ الْإِسْلَامِ

 
ஹதீஸ் எண்: 132
 
நான் இஸ்லாத்தை ஏற்ற நாளில் வேறு எவரும் இஸ்லாத்தை ஏற்றதில்லை. முதலில் இஸ்லாத்தை ஏற்றிருந்த மூவரில் மூன்றாமவனாக நான் இருந்தேன். அதன் பின் ஏழு நாட்கள் கழித்தே மற்றவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்று ஸஃது (ரலி) குறிப்பிட்டார்கள்.
(குறிப்பு: புகாரியிலும் இதே ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இங்கே கருத்து மட்டும் தரப்பட்டுள்ளது. நேரடி மொழிபெயர்ப்பு அல்ல.)

 

فَضَائِلِ الْعَشَرَةِ رضي الله عَنْهُمْ  

133 حدثنا هِشَامُ بن عَمَّارٍ ثنا عِيسَى بن يُونُسَ ثنا صَدَقَةُ بن الْمُثَنَّى أبو الْمُثَنَّى النَّخَعِيُّ عن جَدِّهِ رِيَاحِ بن الْحَارِثِ سمع سَعِيدَ بن زَيْدِ بن عَمْرِو بن نُفَيْلٍ يقول كان رسول اللَّهِ  عَاشِرَ عَشَرَةٍ فقال أبو بَكْرٍ في الْجَنَّةِ وَعُمَرُ في الْجَنَّةِ وَعُثْمَانُ في الْجَنَّةِ وَعَلِيٌّ في الْجَنَّةِ وَطَلْحَةُ في الْجَنَّةِ وَالزُّبَيْرُ في الْجَنَّةِ وَسَعْدٌ في الْجَنَّةِ وَعَبْدُ الرحمن في الْجَنَّةِ فَقِيلَ له من التَّاسِعُ قال أنا 

 
பத்து நபித்தோழர்கள் பற்றி!
 
ஹதீஸ் எண்: 133
அபூபக்ரு சுவர்க்கத்தில், உமர் சுவர்க்கத்தில், உஸ்மான் சுவர்க்கத்தில், அலீ சுவர்க்கத்தில், தல்ஹா சுவர்க்கத்தில், ஸுபைர் சுவர்க்கத்தில், ஸஃது சுவர்க்கத்தில், அப்துர் ரஹ்மான் சுவர்க்கத்தில் என்று தன்னையும் சேர்த்து பத்து நபர்களை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று ஸயீத் இப்னு ஸைத் (ரலி) கூறிய போது (பத்துக்கு ஒன்று குறைகிறதே!) அந்த நபர் யார் என்று அவர்களிடம் கேட்டேன். ‘நான்’ என்று கூறினார்கள் என ரியாஹ் இப்னுல் ஹாரிஸ் குறிப்பிட்டார்கள்.

(குறிப்பு: திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது)

134 حدثنا محمد بن بَشَّارٍ ثنا بن أبي عَدِيٍّ عن شُعْبَةَ عن حُصَيْنٍ عن هِلَالِ بن يَسَافٍ عن عبد اللَّهِ بن ظَالِمٍ عن سَعِيدِ بن زَيْدٍ قال أَشْهَدُ على رسول اللَّهِ  أنى سَمِعْتُهُ يقول اثْبُتْ حِرَاءُ فما عَلَيْكَ إلا نَبِيٌّ أو صِدِّيقٌ أو شَهِيدٌ وَعَدَّهُمْ رسول اللَّهِ  وأبو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَعَلِيٌّ وَطَلْحَةُ وَالزُّبَيْرُ وَسَعْدٌ وبن عَوْفٍ وَسَعِيدُ بن زَيْدٍ

 
ஹதீஸ் எண்: 134
 
‘ஹிரா மலையே! நீ (அசையாது) உறுதியாக இரு! ஏனெனில் அபூபக்ரு, உமர், உஸ்மான், அலி, தல்ஹா, ஸுபைர், ஸஃது, இப்னு அவ்பு, ஸயீத் இப்னு ஸைத், (நான்) ஆகிய நபி, ஸித்தீக், ஷஹீத் என ஆகியோரே உன் மீது இருக்கிறோம்’ என்று நபி ஸல் கூறினார்கள் என ஸயீத் இப்னு ஸைத் (ரலி) குறிப்பிட்டார்கள்.
  

فَضْلِ أبي عُبَيْدَةَ بن الْجَرَّاحِ رضي الله عنه  

135 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن سُفْيَانَ ح وحدثنا محمد بن بَشَّارٍ ثنا محمد بن جَعْفَرٍ ثنا شُعْبَةُ جميعا عن أبي إسحاق عن صِلَةَ بن زُفَرَ عن حُذَيْفَةَ أَنَّ رَسُولَ اللَّهِ  قال لِأَهْلِ نَجْرَانَ سَأَبْعَثُ مَعَكُمْ رَجُلًا أَمِينًا حَقَّ أَمِينٍ قال فَتَشَرَّفَ له الناس فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ بن الْجَرَّاحِ

 
அபூஉபைதா (ரலி) பற்றி!
 
ஹதீஸ் எண்: 135
நபி ஸல் அவர்கள் நஜ்ரான் வாசிகளை நோக்கி ‘உங்களுக்கு முழு நம்பிக்கைக்குரிய ஒருவரை நான் அனுப்பி வைப்பேன்’ என்று கூறினார்கள். யாரை அனுப்பப் போகிறார்கள் என்று மக்கள் கவனித்த போது அபூஉபைதா அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களை நபி ஸல் அவர்கள் அனுப்பி வைத்தனர் என்று ஹுதைபா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும் இது இடம் பெற்றுள்ளது.)

136 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا يحيى بن آدَمَ ثنا إِسْرَائِيلُ عن أبي إسحاق عن صِلَةَ بن زُفَرَ عن عبد اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ  قال لِأَبِي عُبَيْدَةَ بن الْجَرَّاحِ هذا أَمِينُ هذه الْأُمَّةِ

 
ஹதீஸ் எண்: 136
 
இவர் இந்த உம்மத்தின் ‘அமீன்’ (மிகுந்த நம்பிக்கைக்குரியவர்) என்று நபி (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி) யைப் பற்றிக் குறிப்பிட்டதாக அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: முஸ்லிமிலும் இது இடம் பெற்றுள்ளது.)

 

فَضْلِ عبد اللَّهِ بن مَسْعُودٍ رضي الله عنه  

137 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ثنا سُفْيَانُ عن أبي إسحاق عن الحرث عن عَلِيٍّ قال قال رسول اللَّهِ  لو كنت مُسْتَخْلِفًا أَحَدًا عن غَيْرِ مَشُورَةٍ لَاسْتَخْلَفْتُ بن أُمِّ عَبْدٍ

 
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) பற்றி!
 
ஹதீஸ் எண்: 137
‘எவ்வித ஆலோசனையுமின்றி ஒருவரை நான் என்னுடைய இடத்தில் நியமிப்பதென்றால் இப்னு மஸ்ஊதை நியமித்திருப்பேன்’ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என அலி (ரலி) குறிப்பிடுகிறார்கள்.

 

138 حدثنا الْحَسَنُ بن عَلِيٍّ الْخَلَّالُ ثنا يحيى بن آدَمَ ثنا أبو بَكْرِ بن عَيَّاشٍ عن عَاصِمٍ عن زِرٍّ عن عبد اللَّهِ بن مَسْعُودٍ أَنَّ أَبَا بَكْرٍ وَعُمَرَ بَشَّرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ  قال من أَحَبَّ أَنْ يَقْرَأَ الْقُرْآنَ غَضًّا كما أُنْزِلَ فَلْيَقْرَأْهُ على قِرَاءَةِ بن أُمِّ عَبْدٍ

 
ஹதீஸ் எண்: 138
 
குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டதோ அவ்வாறே ஓத விரும்புபவர் இப்னு மஸ்ஊது ஓதியவாறு ஓதட்டும்! என்று நபி ஸல் கூறியதாக அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோர் குறிப்பிட்டனர் என்று ‘ஸிர்’ அவர்கள் குறிப்பிட்டார்கள்.  

139 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا عبد اللَّهِ بن إِدْرِيسَ عن الْحَسَنِ بن عُبَيْدِ اللَّهِ عن إبراهيم بن سُوَيْدٍ عن عبد الرحمن بن يَزِيدَ عن عبد اللَّهِ قال قال لي رسول اللَّهِ  إِذْنُكَ عَلَيَّ أَنْ تَرْفَعَ الْحِجَابَ وَأَنْ تَسْمَعَ سِوَادِي حتى أَنْهَاكَ

 
ஹதீஸ் எண்: 139
 
நான் தடை செய்தவரை என் ரகசியத்தைக் கேட்கவும், திரையை விலக்கி (உள்ளே வரவும்) உமக்கு பொது அனுமதி உண்டு’ என்று நபி ஸல் அவர்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள்.
(குறிப்பு: முஸ்லிமிலும் இது இடம் பெற்றுள்ளது.)

 

فَضْلِ الْعَبَّاسِ بن عبد الْمُطَّلِبِ رضي الله عنه  

140 حدثنا محمد بن طَرِيفٍ ثنا محمد بن فُضَيْلٍ ثنا الْأَعْمَشُ عن أبي سَبْرَةَ النَّخَعِيِّ عن مُحَمَّدِ بن كَعْبٍ الْقُرَظِيِّ عن الْعَبَّاسِ بن عبد الْمُطَّلِبِ قال كنا نَلْقَى النَّفَرَ من قُرَيْشٍ وَهُمْ يَتَحَدَّثُونَ فَيَقْطَعُونَ حَدِيثَهُمْ فَذَكَرْنَا ذلك لرسول الله  فقال ما بَالُ أَقْوَامٍ يَتَحَدَّثُونَ فإذا رَأَوْا الرَّجُلَ من أَهْلِ بَيْتِي قَطَعُوا حَدِيثَهُمْ والله لَا يَدْخُلُ قَلْبَ رَجُلٍ الْإِيمَانُ حتى يُحِبَّهُمْ لِلَّهِ وَلِقَرَابَتِهِمْ مِنِّي

 
அப்பாஸ் (ரலி) அவர்கள் பற்றி!

 

ஹதீஸ் எண்: 140

‘குரைஷிகளில் சிலர் பேசிக் கொண்டிருக்கும் போது நாங்கள் அவர்களை கண்டு விட்டால் தங்கள் பேச்சை நிறுத்திக் கொள்கிறார்கள்’. இது பற்றி ரஸுல் ஸல் அவர்களிடம் நாங்கள் கூறிய போது, ‘பேசிக் கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்தினர் என் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மனிதரைக் கண்டால் தங்கள் பேச்சை நிறுத்திக் கொள்கிறார்களே! இவர்களுக்கு என்ன வந்து விட்டது? அல்லாஹ்வின் மேல் ஆணை! அல்லாஹ்வுக்காகவும் அவர்கள் என்னுடன் நெருக்கமானவர்கள் என்பதற்காகவும் (என் குடும்பத்தினரை) விரும்பாத வரை ஒரு மனிதனின் உள்ளத்தில் ஈமான் நுழையாது’ என்று நபி ஸல் கூறியதாக அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள்.

(குறிப்பு: முஹம்மத் இப்னு கஃபு என்பவர் அப்பாஸ் (ரலி) வழியாக இதை அறிவிக்கிறார். ஆனால் இவர் அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்ததில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.)

 

 

By admin