இப்னுமாஜா பக்கம் – 15
பக்கம் – 15 (ஹதீஸ்கள் 141 முதல் 150 வரை)
அத்தியாயம்: முகத்திமா – முகப்பு

 

141 حدثنا عبد الْوَهَّابِ بن الضَّحَّاكِ ثنا إسماعيل بن عَيَّاشٍ عن صَفْوَانَ بن عَمْرٍو عن عبد الرحمن بن جُبَيْرِ بن نُفَيْرٍ عن كَثِيرِ بن مُرَّةَ الْحَضْرَمِيِّ عن عبد اللَّهِ بن عَمْرٍو قال قال رسول اللَّهِ  إِنَّ اللَّهَ اتَّخَذَنِي خَلِيلًا كما اتَّخَذَ إبراهيم خَلِيلًا فَمَنْزِلِي وَمَنْزِلُ إبراهيم في الْجَنَّةِ يوم الْقِيَامَةِ تُجَاهَيْنِ وَالْعَبَّاسُ بَيْنَنَا مُؤْمِنٌ بين خَلِيلَيْنِ

ஹதீஸ் எண்: 141
இப்ராஹீமை கலீல் (உற்ற நண்பனாக) அல்லாஹ் ஏற்படுத்திக் கொண்டது போல் என்னையும் கலீலாக ஏற்படுத்தி விட்டான். மறுமை நாளில் சுவர்க்கத்தில் எனது இடமும், இப்ராஹிம் (அலை) அவர்களின் இடமும் எதிரெதிரே அமைந்திருக்கும். இந்த இரண்டு கலீல்களுக்கு இடையே ‘அப்பாஸ்’ என்ற விசுவாசி இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் அப்துல் வஹ்ஹாப் என்பவர் இட்டுக் கட்டுபவர் என்பது அனைவராலும் ஏற்கப்பட்ட முடிவாகும்.)

فَضْلِ الْحَسَنِ وَالْحُسَيْنِ ابْنَيْ عَلِيِّ بن أبي طَالِبٍ رضي الله عَنْهُمْ  

142 حدثنا أَحْمَدُ بن عَبْدَةَ ثنا سُفْيَانُ بن عُيَيْنَةَ عن عُبَيْدِ اللَّهِ بن أبي يَزِيدَ عن نَافِعِ بن جُبَيْرٍ عن أبي هُرَيْرَةَ أن النبي  قال لِلْحَسَنِ اللهم إني أُحِبُّهُ فَأَحِبَّهُ وَأَحِبَّ من يُحِبُّهُ قال وَضَمَّهُ إلى صَدْرِهِ

ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) பற்றி!
ஹதீஸ் எண்: 142

‘இறiவா! இவரை நான் விரும்புகிறேன்! இவரை நீயும் விரும்புவாயாக! இவரை விரும்பியவர்களையும் நீ விரும்புவாயாக!’ என்று ஹஸன் (ரலி) பற்றி நபி ஸல் கூறி விட்டு தன் நெஞ்சோடு அவரை அணைத்துக் கொண்டார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிமிலும் இதே ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

143 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن دَاوُدَ بن أبي عَوْفٍ أبي الْجَحَّافِ وكان مَرْضِيًّا عن أبي حَازِمٍ عن أبي هُرَيْرَةَ قال قال رسول اللَّهِ  من أَحَبَّ الْحَسَنَ وَالْحُسَيْنَ فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَبْغَضَهُمَا فَقَدْ أَبْغَضَنِي

ஹதீஸ் எண்: 143
ஹஸனையும், ஹுஸைனையும் நேசிப்பவர்கள் என்னை நேசித்தவராவர், அவ்விருவரையும் வேறுப்பவர்கள் என்னை வெறுப்பவராவார்’ என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத், ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)

144 حدثنا يَعْقُوبُ بن حُمَيْدِ بن كَاسِبٍ ثنا يحيى بن سُلَيْمٍ عن عبد اللَّهِ بن عُثْمَانَ بن خُثَيْمٍ عن سَعِيدِ بن أبي رَاشِدٍ أَنَّ يَعْلَى بن مُرَّةَ حَدَّثَهُمْ أَنَّهُمْ خَرَجُوا مع النبي  إلى طَعَامٍ دُعُوا له فإذا حُسَيْنٌ يَلْعَبُ في السِّكَّةِ قال فَتَقَدَّمَ النبي  أَمَامَ الْقَوْمِ وَبَسَطَ يَدَيْهِ فَجَعَلَ الْغُلَامُ يَفِرُّ هَا هُنَا وههنا وَيُضَاحِكُهُ النبي  حتى أَخَذَهُ فَجَعَلَ إِحْدَى يَدَيْهِ تَحْتَ ذَقْنِهِ وَالْأُخْرَى في فَأْسِ رَأْسِهِ فَقَبَّلَهُ وقال حُسَيْنٌ مِنِّي وأنا من حُسَيْنٍ أَحَبَّ الله من أَحَبَّ حُسَيْنًا حُسَيْنٌ سِبْطٌ من الْأَسْبَاطِ حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن سُفْيَانَ مثله

ஹதீஸ் எண்: 144
அழைக்கப்பட்ட ஒரு விருந்துக்காக நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்களும் புறப்பட்டனர். அப்போது ஹுஸைன் (ரலி) வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் தன் கையை விரித்தவர்களாக கூட்டத்தினரின் முன்னே வந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் பிடி கொடுக்காமல் அந்த சிறுவர் அங்குமிங்கும் ஓட்டம் காட்டி நபி (ஸல்) அவர்களை சிரிக்க வைத்தார். முடிவில் நபி (ஸல்) அவர்கள் அவரைப் பிடித்து விட்டார்கள். தன் ஒரு கையை அவரது தாழ்வாய்க் கட்டையின் மீது வைத்து, மறு கையை தலை உச்சியில் வைத்து அவரை முத்தமிட்டார்கள். ‘ஹுஸைன் என்னிடமிருந்து உள்ளவர். நான் ஹுஸைனிலிருந்து உள்ளவன். ஹுஸைனை நேசிப்பவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். ஹுஸைன் (என்) பேரர்களில் ஒருவராவார்’ என்றும் கூறினார்கள் என யஃலா இப்னு முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: திர்மிதி, அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாகிம் ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.)

145 حدثنا الْحَسَنُ بن على الْخَلَّالُ وَعَلِيُّ بن الْمُنْذِرِ قالا حدثنا أبو غَسَّانَ ثنا أَسْبَاطُ بن نَصْرٍ عن السُّدِّيِّ عن صُبَيْحٍ مولى أُمِّ سَلَمَةَ عن زَيْدِ بن أَرْقَمَ قال قال رسول اللَّهِ  لَعَلِيٍّ وَفَاطِمَةَ وَالْحَسَنِ وَالْحُسَيْنِ أنا سِلْمٌ لِمَنْ سَالَمْتُمْ وَحَرْبٌ لِمَنْ حَارَبْتُمْ

ஹதீஸ் எண்: 145
இவர்களுடன் நல்லுறவு வைப்போருடன் நானும் நல்லுறவு வைப்பவன், இவர்களைப் பகைத்துக் கொண்டவர்களை நானும் பகைத்துக் கொள்பவன்’ என்று அலி, பாத்திமா, ஹஸன், ஹுஸைன் ஆகியோர் பற்றி நபி ஸல் அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு அர்கம் (ரலி) அறிவிக்கிறார்கள்.

 

فَضْلِ عَمَّارِ بن يَاسِرٍ

 

146 حدثنا عُثْمَانُ بن أبي شَيْبَةَ وَعَلِيُّ بن مُحَمَّدٍ قالا ثنا وَكِيعٌ ثنا سُفْيَانُ عن أبي إسحاق عن هَانِئِ بن هَانِئٍ عن عَلِيِّ بن أبي طَالِبٍ قال كنت جَالِسًا عِنْدَ النبي  فَاسْتَأْذَنَ عَمَّارُ بن يَاسِرٍ فقال النبي e ائْذَنُوا له مَرْحَبًا بِالطَّيِّبِ الْمُطَيَّبِ

அம்மார் இப்னு யாஸிர் (ரலி) பற்றி!
ஹதீஸ் எண்: 146

நான் நபி (ஸல்;) அவர்களுடன் அமர்ந்திருந்த போது அம்மார் (உள்ளே வர) அனுமதி கோரினார். ‘அவரை அனுமதியுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு ‘உள்ளும் புறமும் தூய்மையானவருக்கு வாழ்த்துக்கள்’ என்று கூறினார்கள் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: திர்மிதியிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

147 حدثنا نَصْرُ بن عَلِيٍّ الْجَهْضَمِيُّ ثنا عَثَّامُ بن عَلِيٍّ عن الْأَعْمَشِ عن أبي إسحاق عن هَانِئِ بن هانئ قال دخل عَمَّارٌ على عَلِيٍّ فقال مَرْحَبًا بِالطَّيِّبِ الْمُطَيَّبِ سمعت رَسُولَ اللَّهِ  يقول مُلِئَ عَمَّارٌ إِيمَانًا إلى مُشَاشِهِ

ஹதீஸ் எண்: 147
அலி (ரலி) யிடம் அம்மார் (ரலி) வந்த போது ‘உள்ளும் புறமும் தூய்மையானவருக்கு வாழ்த்துக்கள்’ என்றார்கள். ‘அம்மார் மூட்டு எலும்பு வரை ஈமானால் நிரப்பப்பட்டுள்ளார்’ என்று நபி ஸல் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று அலி (ரலி) கூறினார்கள்.

(குறிப்பு: நஸயி, ஹாகிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

148 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عُبَيْدُ اللَّهِ بن مُوسَى ح وحدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ وَعَمْرُو بن عبد اللَّهِ قالا جميعا ثنا وَكِيعٌ عن عبد الْعَزِيزِ بن سِيَاهٍ عن حَبيبِ بن أبي ثَابِتٍ عن عَطَاءِ بن يَسَارٍ عن عَائِشَةَ قالت قال رسول اللَّهِ  عَمَّارٌ ما عُرِضَ عليه أَمْرَانِ إلا اخْتَارَ الْأَرْشَدَ مِنْهُمَا

ஹதீஸ் எண்: 148
அம்மாரிடம் இரண்டு காரியங்கள் முன் வைக்கப்படுமானால் அவ்விரண்டில் எது சிறந்ததோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார் என்று நபி ஸல் கூறியதாக ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

(குறிப்பு: திர்மிதியிலும் இது இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஹபீப் இப்னு அபீஸாபித் என்பவர் பலவீனமானவர் எனினும் அவர் இடம் பெறாமல் நம்பகமான வேறு அறிவிப்பாளர் வரிசையுடன் இதே ஹதீஸ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்க, ஹாகிமில் இடம் பெற்றுள்ளது.)

فَضْلِ سَلْمَانَ وَأَبِي ذَرٍّ وَالْمِقْدَادِ

 

149 حدثنا إسماعيل بن مُوسَى وَسُوَيْدُ بن سَعِيدٍ قالا حدثنا شَرِيكٌ عن أبي رَبِيعَةَ الأيادي عن بن بُرَيْدَةَ عن أبيه قال قال رسول اللَّهِ  أن اللَّهَ أَمَرَنِي بِحُبِّ أَرْبَعَةٍ وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ قِيلَ يا رَسُولَ اللَّهِ من هُمْ قال عَلِيٌّ منهم يقول ذلك ثَلَاثًا وأبو ذَرٍّ وَسَلْمَانُ وَالْمِقْدَادُ

ஸல்மான் (ரலி), அபூதர் (ரலி), மிக்தாத் (ரலி) ஆகியோர் பற்றி!
ஹதீஸ் எண்: 149

அல்லாஹ் நால்வரை நேசிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டுள்ளான், மேலும் தானும் அவர்களை நேசிப்பதாகக் கூறியுள்ளான் என்று நபி ஸல் அவர்கள் கூறிய போது, ‘அவர்கள் யார்?’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அலியும் அவர்களில் ஒருவர் என்று மும்முறை கூறி விட்டு, மேலும் அபூதர், ஸல்மான், மிக்தாத் ஆகியோர் என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக புரைதா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: திர்மிதியிலும் இது இடம் பெற்றுள்ளது. இரண்டிலும் நினைவாற்றல் மிகவும் மோசமான ஷரீக் அல்காழி என்பவர் இடம் பெறுகிறார்.)

150 حدثنا أَحْمَدُ بن سَعِيدٍ الدَّارِمِيُّ ثنا يحيى بن أبي بُكَيْرٍ ثنا زَائِدَةُ بن قُدَامَةَ عن عَاصِمِ بن أبي النَّجُودِ عن زِرِّ بن حُبَيْشٍ عن عبد اللَّهِ بن مَسْعُودٍ قال كان أَوَّلَ من أَظْهَرَ إِسْلَامَهُ سَبْعَةٌ رسول اللَّهِ  وأبو بَكْرٍ وَعَمَّارٌ وَأُمُّهُ سُمَيَّةُ وَصُهَيْبٌ وَبِلَالٌ وَالْمِقْدَادُ فَأَمَّا رسول اللَّهِ  فَمَنَعَهُ الله بِعَمِّهِ أبي طَالِبٍ وَأَمَّا أبو بَكْرٍ فَمَنَعَهُ الله بِقَوْمِهِ وَأَمَّا سَائِرُهُمْ فَأَخَذَهُمْ الْمُشْرِكُونَ وَأَلْبَسُوهُمْ أَدْرَاعَ الْحَدِيدِ وَصَهَرُوهُمْ في الشَّمْسِ فما منهم من أَحَدٍ إلا وقد وَاتَاهُمْ على ما أَرَادُوا إلا بِلَالًا فإنه هَانَتْ عليه نَفْسُهُ في اللَّهِ وَهَانَ على قَوْمِهِ فَأَخَذُوهُ فَأَعْطَوْهُ الْوِلْدَانَ فَجَعَلُوا يَطُوفُونَ بِهِ في شِعَابِ مَكَّةَ وهو يقول أَحَدٌ أَحَدٌ

பிலால் (ரலி) அவர்கள் பற்றி!
ஹதீஸ் எண்: 150

இஸ்லாத்தை ஆரம்பத்தில் பகிரங்கப்படுத்தியோர், ‘நபி (ஸல்) அவர்கள், அபூபக்ரு, அம்மார், அவரது தாயார் சுமய்யா, ஸுஹைப், பிலால், மிக்தாத் ஆகிய எழுவராவர். அவர்களில் ர}ஸுல் (ஸல்) அவர்களுக்கு (கேடுவராமல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபின் மூலம் இறைவன் காத்துக் கொண்டான். அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு (கேடுவராமல்) அவர்களின் குடும்பத்தார் மூலம் அவர்களைக் காத்துக் கொண்டான். ஆனால் மற்றவர்களின் நிலையோ இணைவைப்போர் அவர்களைப் பிடித்து உருக்குச் சட்டையை அவர்களுக்கு அணிவித்து, அவர்களை வெயிலில் வாட்டினர். பிலாலைத் தவிர மற்றவர்கள் (தற்காப்புக்காக) முஷ்ரிக்குகளின் விருப்பத்திற்கு ஒத்துப் போவதாக நடித்தார்கள். ஆனால் பிலால், அல்லாஹ்வுக்காக தன் உயிரை பெரியதாக மதிக்க வில்லை. அவரது சமுதாயத்தினருக்கு இழி பிறவியாக அவர் தோன்றினார். அவரைப் பிடித்து சிறுவர்களின் கைகளில் கொடுத்து பக்கத்து பள்ளத்தாக்கில் இழுத்துச் செல்ல வைத்தார்கள். அவரோ (அத்தனையையும் சகித்துக் கொண்டு) அஹத், அஹத் என்று கூறிக் கொண்டிருந்தார் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.

(குறிப்பு: ஹாகிமிலும், இப்னு ஹிப்பானிலும் இது இடம் பெற்றுள்ளது.)

By admin