அத்தியாயம்: முகத்திமா – முகப்பு
151 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن حَمَّادِ بن سَلَمَةَ عن ثَابِتٍ عن أَنَسِ بن مَالِكٍ قال قال رسول اللَّهِ لقد أُوذِيتُ في اللَّهِ وما يوذى أَحَدٌ وَلَقَدْ أُخِفْتُ في اللَّهِ وما يُخَافُ أَحَدٌ وَلَقَدْ أَتَتْ عَلَيَّ ثَالِثَةٌ ومالي وَلِبِلَالٍ طَعَامٌ يَأْكُلُهُ ذُو كَبِدٍ إلا ما وَارَى إِبِطُ بِلَالٍ
|
ஹதீஸ் எண்: 151
‘அல்லாஹ்வின் பாதையில் எவரும் கொடுக்கப்படாத அளவுக்கு நான் தொல்லைப் படுத்தப்பட்டேன். அல்லாஹ்வின் விஷயத்திற்காக வேறு எவரும் அச்சுறுத்தப்படாத அளவுக்கு நான் அச்சுறுத்தப்பட்டேன். இதயம் உள்ள எவரும் சாப்பிடக்கூடிய உணவு எனக்கும் பிலாலுக்கும் கிடைக்காமல் மூன்று நாட்கள் கூட கழிந்திருக்கின்றது. பிலால் உடைய அக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வரும் உணவு தவிர வேறு எதுவும் இராது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: திர்மிதியிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
فَضَائِلِ بِلَالٍ
152 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو أُسَامَةَ عن عُمَرَ بن حَمْزَةَ عن سَالِمٍ أَنَّ شَاعِرًا مَدَحَ بِلَالَ بن عبد اللَّهِ فقال بِلَالُ بن عبد اللَّهِ خَيْرُ بِلَالٍ فقال بن عُمَرَ كَذَبْتَ لَا بَلْ بِلَالُ رسول اللَّهِ خَيْرُ بِلَالٍ
|
பிலால் (ரலி) அவர்கள் பற்றி!
ஹதீஸ் எண்: 152
ஒரு கவிஞர் பிலால் (ரலி) அவர்களைப் புகழ்ந்து பாடும் போது ‘அப்துல்லாஹ்வின் மகன் பிலால், மிகச் சிறந்த பிலால்’ என்று கூறினார். அதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘நீ பொய் சொல்கிறாய், அவ்வாறு அல்ல, ‘ரஸுலுல்லாஹ்வின் பிலால்’ என்று கூறு என்றார்கள் என ஸாலிம் அறிவிக்கிறார்.
فَضَائِلِ خَبَّابٍ
153 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ وَعَمْرُو بن عبد اللَّهِ قالا ثنا وَكِيعٌ ثنا سُفْيَانُ عن أبي إسحاق عن أبي لَيْلَى الْكِنْدِيِّ قال جاء خَبَّابٌ إلى عُمَرَ فقال ادْنُ فما أَحَدٌ أَحَقَّ بهذا الْمَجْلِسِ مِنْكَ إلا عَمَّارٌ فَجَعَلَ خَبَّابٌ يُرِيهِ آثَارًا بِظَهْرِهِ مِمَّا عَذَّبَهُ الْمُشْرِكُون
|
கப்பாப் (ரலி) அவர்கள் பற்றி!
ஹதீஸ் எண்: 153
கப்பாப் (ரலி), உமர் (ரலி) அவர்களிடம் வந்தனர். நெருங்கி உட்காருவீராக! இந்த இடததிற்கு உம்மையும் அம்மாரையும் தவிர வேறு எவரும் அருகதை படைத்தவர்கள் அல்லர் என்று கூறினார்கள். அப்போது இணைவைப்போர் அவருக்கு ஏற்படுத்திய காயத்தின் சுவடுகளை கப்பாப் (ரலி), உமர் (ரலி) அவர்களுக்கு காட்டலானார்கள் என்று அபூலைலா அறிவிக்கிறார்.
154 حدثنا محمد بن الْمُثَنَّى ثنا عبد الْوَهَّابِ بن عبد الْمَجِيدِ ثنا خَالِدٌ الْحَذَّاءُ عن أبي قِلَابَةَ عن أَنَسِ بن مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ قال أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أبو بَكْرٍ وَأَشَدُّهُمْ في دِينِ اللَّهِ عُمَرُ وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ وَأَقْضَاهُمْ عَلِيُّ بن أبي طَالِبٍ وَأَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ أُبَيُّ بن كَعْبٍ وَأَعْلَمُهُمْ بِالْحَلَالِ وَالْحَرَامِ مُعَاذُ بن جَبَلٍ وَأَفْرَضُهُمْ زَيْدُ بن ثَابِتٍ ألا وَإِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا وَأَمِينُ هذه الْأُمَّةِ أبو عُبَيْدَةَ بن الْجَرَّاحِ
|
ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் பற்றி!
ஹதீஸ் எண்: 154
‘என் சமுதாயத்திலேயே என் சமுதாயத்தின் மீது மிகுந்த இரக்கம் கொண்டவர், அபூபக்ராவார். அல்லாஹ்வின் மார்க்க விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர் உமராவார். உண்மையான வெட்கம் நிரம்பியவர் உஸ்மான் ஆவார். சரியான தீர்ப்பு வழங்குபவர் அலியாவார். அல்லாஹ்வின் வேதத்தை அழகுற ஓதுபவர் உபை இப்னு கஃபு ஆவார். ஹலால் ஹராம் பற்றி நன்கு அறிந்தவர் முஆத் இப்னு ஜபல் ஆவார். வாரிசுரிமைச் சட்டத்தை நன்கு விளங்கியவர் ஸைத் இப்னு ஸாபித் ஆவார். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. இந்த உம்மத்தில் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் அபூஉபைதா அல்ஜர்ராஹ் ஆவார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: திர்மிதி, இப்னு ஹிப்பான், ஹாகிம் ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.)
155 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن خَالِدٍ الْحَذَّاءِ عن أبي قِلَابَةَ مثله عِنْدَ بن قُدَامَةَ غير أَنَّهُ يقول في حَقِّ زَيْدٍ وَأَعْلَمُهُمْ بِالْفَرَائِضِ
|
ஹதீஸ் எண்: 155
மேற்கூறிய அதே ஹதீஸ் தான் இங்கேயும் இடம் பெற்றுள்ளது.
فَضْلِ أبي ذَرٍّ
156 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا عبد اللَّهِ بن نُمَيْرٍ ثنا الْأَعْمَشُ عن عُثْمَانَ بن عُمَيْرٍ عن أبي حَرْبِ بن أبي الْأَسْوَدِ الدِّيْلِيِّ عن عبد اللَّهِ بن عَمْرٍو قال سمعت رَسُولَ اللَّهِ يقول ما أَقَلَّتْ الْغَبْرَاءُ ولا أَظَلَّتْ الْخَضْرَاءُ من رَجُلٍ أَصْدَقَ لَهْجَةً من أبي ذَرٍّ
|
அபூதர் (ரலி) அவர்கள் பற்றி!
ஹதீஸ் எண்: 156
‘அபூதர் அவர்களை விட உண்மை பேசும் வேறு எவரையும் இந்த பூமியும் சுமந்ததில்லை! வானமும் நிழலிட்டதில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: திர்மிதியிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
فَضْلِ سَعْدِ بن مُعَاذٍ
157 حدثنا هَنَّادُ بن السَّرِيِّ ثنا أبو الْأَحْوَصِ عن أبي إسحاق عن الْبَرَاءِ بن عَازِبٍ قال أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ سَرَقَةٌ من حَرِيرٍ فَجَعَلَ الْقَوْمُ يَتَدَاوَلُونَهَا بَيْنَهُمْ فقال رسول اللَّهِ أَتَعْجَبُونَ من هذا فَقَالُوا له نعم يا رَسُولَ اللَّهِ فقال وَالَّذِي نَفْسِي بيده لَمَنَادِيلُ سَعْدِ بن مُعَاذٍ في الْجَنَّةِ خَيْرٌ من هذا
|
ஸஃது இப்னு முஆத் (ரலி) அவர்கள் பற்றி!
ஹதீஸ் எண்: 157
நபி (ஸல்) அவர்களுக்கு பட்டுத்துணி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. (அதன் மென்மையைக் கண்டு வியந்த) நபித் தோழர்கள் தங்கள் கைகளால் தொட்டுப் பார்க்கலானார்கள். ‘இதைப் பார்த்து நீங்கள் வியப்படைகிறீர்களா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, ‘ஆம் அல்லாஹ்வின் தூதரே!’ என்றனர் நபித் தோழர்கள். ‘எனது உயர் எவனது கைவசத்தில் உள்ளதோ, அவன் மீது ஆணையாக! ஸஃது இப்னு முஆத் (ரலி) அவர்களுக்கு சுவனத்தில் கிடைக்கும் ஆடை, இதை விடவும் சிறந்ததாக இருக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம் திர்மிதி ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
158 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا أبو مُعَاوِيَةَ عن الْأَعْمَشِ عن أبي سُفْيَانَ عن جَابِرٍ قال قال رسول اللَّهِ اهْتَزَّ عَرْشُ الرحمن عز وجل لِمَوْتِ سَعْدِ بن مُعَاذٍ
|
ஹதீஸ் எண்: 158
‘ஸஃது இப்னு முஆத் அவர்களின் மரணத்திற்காக ரஹ்மானின் அர்ஷ் கூட அதிர்ந்தது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம் திர்மிதி ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
فَضْلِ جَرِيرِ بن عبد اللَّهِ الْبَجَلِيِّ
159 حدثنا محمد بن عبد اللَّهِ بن نُمَيْرٍ ثنا عبد اللَّهِ بن إِدْرِيسَ عن إسماعيل بن أبي خَالِدٍ عن قَيْسِ بن أبي حَازِمٍ عن جَرِيرِ بن عبد اللَّهِ الْبَجَلِيِّ قال ما حَجَبَنِي رسول اللَّهِ مُنْذُ أَسْلَمْتُ ولا رَآنِي إلا تَبَسَّمَ في وَجْهِي وَلَقَدْ شَكَوْتُ إليه أَنِّي لَا أَثْبُتُ على الْخَيْلِ فَضَرَبَ بيده في صَدْرِي فقال اللهم ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا
|
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி) அவர்கள் பற்றி!
ஹதீஸ் எண்: 159
‘நான் இஸ்லாத்தை ஏற்றது முதல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்க எனக்குத் தடை இருக்க வில்லை, என்னை நோக்கி புன்னகை பூத்தவர்களாக தவிர என்னை அவர்கள் பார்த்ததில்லை, (ஒரு முறை) ‘குதிரையின் மீது உறுதியாக என்னால் அமர இயலவில்லை’ என்று அவர்களிடம் முறையிட்டேன். தங்கள் கரத்தால் எனது நெஞ்சைத் தட்டி ‘இறைவா! இவரை நிலைப்படுத்துவாயாக! இவரை நேர்வழி காட்டக் கூடியவராகவும், நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!’ என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள் என ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம் திர்மிதி ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
فَضْلِ أَهْلِ بَدْرٍ
160 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ وأبو كُرَيْبٍ قالا ثنا وَكِيعٌ ثنا سُفْيَانُ عن يحيى بن سَعِيدٍ عن عَبَايَةَ بن رِفَاعَةَ عن جَدِّهِ رَافِعِ بن خَدِيجٍ قال جاء جِبْرِيلُ أو مَلَكٌ إلى النبي فقال ما تَعُدُّونَ من شَهِدَ بَدْرًا فِيكُمْ قالوا خِيَارَنَا قال كَذَلِكَ هُمْ عِنْدَنَا خِيَارُ الْمَلَائِكَةِ
|
பத்ருப் போர் வீரர்கள் பற்றி!
ஹதீஸ் எண்: 160
‘பத்ருப் போரில் பங்கெடுத்தவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கேட்ட போது, எங்களில் மிகச் சிறந்தவர்களாக (கருதுகிறோம்)’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் ‘வானவர்களில் மிகச் சிறந்தவர்களின் அந்தஸ்தில் அவர்கள் எங்களால் கருதப்படுகின்றார்கள்’ என்று கூறினார்கள். ராபிவு இப்னு கதீஜ் (ரலி) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரியிலும் இது இடம் பெற்றுள்ளது.)