அத்தியாயம்: முகத்திமா – முகப்பு
161 حدثنا محمد بن الصَّبَّاحِ ثنا جَرِيرٌ ح وحدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ ح وثنا أبو كُرَيْبٍ ثنا أبو مُعَاوِيَةَ جميعا عن الْأَعْمَشِ عن أبي صَالِحٍ عن أبي هريرة قال قال رسول اللَّهِ لَا تَسُبُّوا أَصْحَابِي فَوَالَّذِي نَفْسِي بيده لو أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا ما أَدْرَكَ مُدَّ أَحَدِهِمْ ولا نَصِيفَهُ |
ஹதீஸ் எண்: 161
‘என் தோழர்களை நீங்கள் ஏசாதீர்கள்! எவனது கைவசம் எனது உயிர் இருக்கிறதோ அவன் மேல் ஆணையாக! உங்களில் எவரேனும் ‘உஹத்’ மலை அளவு தங்கத்தை செலவு செய்தாலும், என் தோழர்களில் ஒருவர் ஒரு ‘முத்து’ அல்லது அதில் பாதியளவு செலவு செய்ததற்கு ஈடாகாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. ‘முத்து’ என்பது இரு கைகளின் கொள்ளளவைக் குறிக்கும்.)
162 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ وَعَمْرُو بن عبد اللَّهِ قالا ثنا وَكِيعٌ قال حدثنا سُفْيَانُ عن نُسَيْرِ بن زعلوق قال كان بن عُمَرَ يقول لَا تَسُبُّوا أَصْحَابَ مُحَمَّدٍ فَلَمُقَامُ أَحَدِهِمْ سَاعَةً خَيْرٌ من عَمَلِ أَحَدِكُمْ عُمْرَهُ |
‘முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களை ஏசாதீர்கள்! அவர்கள் சிறிது நேரம் (நபியவர்களுடன்) தங்கியிருந்தது, உங்களில் எவரும் தனது வாழ்நாள் முழுவதும் செய்த அமலை விடவும் சிறப்பானது’ என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.
فَضْلِ الْأَنْصَارِ
163 حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ وَعَمْرُو بن عبد اللَّهِ قالا ثنا وَكِيعٌ عن شُعْبَةَ عن عَدِيِّ بن ثَابِتٍ عن الْبَرَاءِ بن عَازِبٍ قال قال رسول اللَّهِ من أَحَبَّ الْأَنْصَارَ أَحَبَّهُ الله وَمَنْ أَبْغَضَ الْأَنْصَارَ أَبْغَضَهُ الله قال شُعْبَةُ قلت لِعَدِيٍّ أَسَمِعْتَهُ من الْبَرَاءِ بن عَازِبٍ قال إِيَّايَ حَدَّثَ |
ஹதீஸ் எண்: 163
‘யார் அன்ஸார்களை நேசிக்கிறாரோ அவரை அல்லாஹ் நேசிக்கிறான். யார் அன்ஸார்களை வெறுக்கின்றாரோ, அவரை அல்லாஹ்வும் வெறுக்கின்றான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பரா இப்னு ஆஸிப் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம் திர்மிதி ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
164 حدثنا عبد الرحمن بن إبراهيم ثنا بن أبي فُدَيْكٍ عن عبد الْمُهَيْمِنِ بن عَبَّاسِ بن سَهْلِ بن سَعْدٍ عن أبيه عن جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ قال الْأَنْصَارُ شِعَارٌ وَالنَّاسُ دِثَارٌ وَلَوْ أَنَّ الناس اسْتَقْبَلُوا وَادِيًا أو شِعْبًا وَاسْتَقْبَلَتْ الْأَنْصَارُ وَادِيًا لَسَلَكْتُ وَادِيَ الْأَنْصَارِ وَلَوْلَا الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً من الْأَنْصَارِ |
‘அன்ஸார்கள், (உடலுடன் நேரடியாக ஒட்டியிருக்கும்) உள் ஆடை போன்றவர்களாவர். ஏனையோர் வெளி ஆடை போன்றவர்களாவர். ஏனைய மக்கள் ஏதேனும் கணவாயில் சென்று, அன்ஸார்கள் வேறொரு கணவாயில் சென்றால், நான் அன்ஸார்கள் செல்லும் கணவாயிலேயே செல்வேன். ஹிஜ்ரத் என்பது இல்லை என்றால் நானும் அன்ஸார்களில் ஒருவனாகி இருப்பேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்லு இப்னு ஸஃது (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல் முஹைமின் என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார். எனினும் அவர் இடம் பெறாமல் இதே ஹதீஸ் அனஸ் (ரலி) வழியாகவும், அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) வழியாகவும் புகாரி, முஸ்லிம், அஹ்மத், ஆகிய நூல்களிலும் அபூஹுரைரா (ரலி) வழியாக புகாரி, அஹ்மத், இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)
165 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا خَالِدُ بن مَخْلَدٍ حدثني كَثِيرُ بن عبد اللَّهِ بن عَمْرِو بن عَوْفٍ عن أبيه عن جَدِّهِ قال قال رسول اللَّهِ رَحِمَ الله الْأَنْصَارَ وَأَبْنَاءَ الْأَنْصَارِ وَأَبْنَاءَ أَبْنَاءِ الْأَنْصَارِ |
‘அல்லாஹ் அன்ஸார்களுக்கு அருள் புரிவானாக! அன்ஸார்களின் மைந்தர்களுக்கும் அருள் புரிவானாக! அன்ஸார்களின் மைந்தர்களின் மைந்தர்களுக்கும் அருள் புரிவானாக!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அம்ரு இப்னு அவ்பு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் கஸீர் இப்னு அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு அவ்பு என்பவர் ஹதீஸ் கலை வல்லுனர்களால் ஏகோபித்து பலவீனமானவர் என்று நிராகரிக்கப்படுபவர்.)
فَضْلِ بن عَبَّاسٍ
166 حدثنا محمد بن الْمُثَنَّى وأبو بَكْرِ بن خَلَّادٍ الْبَاهِلِيُّ قالا ثنا عبد الْوَهَّابِ ثنا خَالِدٌ الْحَذَّاءُ عن عِكْرِمَةَ عن بن عَبَّاسٍ قال ضَمَّنِي رسول اللَّهِ إليه وقال اللهم عَلِّمْهُ الْحِكْمَةَ وَتَأْوِيلَ الْكِتَابِ |
ஹதீஸ் எண்: 166
‘என்னை நபி (ஸல்) அவர்கள் தன்னுடன் அணைத்துக் கொண்டு, இறைவா! இவருக்கு ஹிக்மத்தையும், (நுணுக்கமான விளக்கம்) வேதத்தின் விளக்கத்தையும் கற்றுக் கொடுப்பாயாக!’ என்று கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(குறிப்பு: இந்தக் கருத்து புகாரி, முஸ்லிம் திர்மிதி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
2 بَاب في ذِكْرِ الْخَوَارِجِ
167 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا إسماعيل بن عُلَيَّةَ عن أَيُّوبَ عن مُحَمَّدِ بن سِيرِينَ عن عَبِيدَةَ عن عَلِيِّ بن أبي طَالِبٍ قال وَذَكَرَ الْخَوَارِجَ فقال فِيهِمْ رَجُلٌ مُخْدَجُ الْيَدِ أو مودن الْيَدِ أو مَثْدُونُ الْيَدِ وَلَوْلَا أَنْ تَبْطَرُوا لَحَدَّثْتُكُمْ بِمَا وَعَدَ الله الَّذِينَ يَقْتُلُونَهُمْ على لِسَانِ مُحَمَّدٍ قلت أنت سَمِعْتَهُ من مُحَمَّدٍ e قال إِي وَرَبِّ الْكَعْبَةِ ثَلَاثَ مَرَّاتٍ |
ஹதீஸ் எண்: 167
அலி (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்கள் பற்றிக் கூறும் போது, ‘அவர்களில் கை குட்டையாக உள்ள ஒருவன் இருக்கிறான். நீங்கள் ரொம்பவும் பூரித்துப் போய் விடுவீர்கள் என்று இல்லா விட்டால், காரிஜியாக்களை யார் யார் கொலை செய்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் வாயிலாக அல்லாஹ் அறிவித்தானோ, அந்தப் பட்டியலை உங்களுக்கு நான் அறிவித்திருப்பேன்’ என்று குறிப்பிட்டார்கள். ‘நபி (ஸல்) அவர்கள் கூற அதை நீங்கள் செவியுற்றீர்களா?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்!’ கஃபாவின் இறைவன் மேல் ஆணையாக!’ என்றார்கள் என உபைதா அறிவிக்கிறார்.
(குறிப்பு: முஸ்லிமிலும்; இடம் பெற்றுள்ளது.)
168 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ وَعَبْدُ اللَّهِ بن عَامِرِ بن زُرَارَةَ قالا ثنا أبو بَكْرِ بن عَيَّاشٍ عن عَاصِمٍ عن زِرٍّ عن عبد اللَّهِ بن مَسْعُودٍ قال قال رسول اللَّهِ يَخْرُجُ في آخِرِ الزَّمَانِ قَوْمٌ أَحْدَاثُ الْأَسْنَانِ سُفَهَاءُ الْأَحْلَامِ يَقُولُونَ من خَيْرِ قَوْلِ الناس يقرؤون الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ يَمْرُقُونَ من الْإِسْلَامِ كما يَمْرُقُ السَّهْمُ من الرَّمِيَّةِ فَمَنْ لَقِيَهُمْ فَلْيَقْتُلْهُمْ فإن قَتْلَهُمْ أَجْرٌ عِنْدَ اللَّهِ لِمَنْ قَتَلَهُمْ |
‘சிறிய பற்களைக் கொண்ட, அறிவு குறைந்த ஒரு கூட்டத்தினர் கடைசி காலத்தில் தோன்றுவர். மிகச் சிறந்த சொற்களை அவர்கள் கூறுவார்கள். திருக்குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழியைக் கடக்காது. வேட்டைப் பிராணிகள் மீது பாய்ந்து அம்பு மறுபுறம் வெளிவருவதைப் போல் இவர்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். இத்தகையவர்களை யாரேனும் சந்தித்தால் அவர்களை கொன்று விட வேண்டும். இத்தகையவர்களைக் கொல்லுவது அல்லாஹ்விடம் கூலி பெறத்தக்க ஒன்றாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
169 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا يَزِيدُ بن هَارُونَ أنبانا محمد بن عَمْرٍو عن أبي سَلَمَةَ قال قلت لِأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ هل سَمِعْتَ رَسُولَ اللَّهِ يَذْكُرُ في الْحَرُورِيَّةِ شيئا فقال سَمِعْتُهُ يَذْكُرُ قَوْمًا يَتَعَبَّدُونَ يَحْقِرُ أحدكم صَلَاتَهُ مع صَلَاتِهِمْ وَصَوْمَهُ مع صَوْمِهِمْ يَمْرُقُونَ من الدِّينِ كما يَمْرُقُ السَّهْمُ من الرَّمِيَّةِ أَخَذَ سَهْمَهُ فَنَظَرَ في نَصْلِهِ فلم يَرَ شيئا فَنَظَرَ في رِصَافِهِ فلم يَرَ شيئا فَنَظَرَ في قِدْحِهِ فلم يَرَ شيئا فَنَظَرَ في الْقُذَذِ فَتَمَارَى هل يَرَى شيئا أَمْ لَا |
ஹரூரா என்ற ஊரில் தோன்றிய (காரிஜிய்யாக்கள் என்ப)வர்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் கூற நீங்கள் செவியுற்றதுண்டா? என்று அபூஸயீத் அல்குத்ரீ ரலி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நபி (ஸல்) அவர்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் ஒரு கூட்டத்தினர் பற்றிக் கூற நான் செவியுற்றுள்ளேன். அவர்கள் தங்களின் தொழுகையை அற்பமாகக் கருதுவார்கள். தங்கள் நோன்பை மற்றவர்களின் நோன்புடன் ஒப்பிட்டு மற்றவர்களின் நோன்பை அற்பமாகக் கருதுவார்கள். ஆயினும் வேட்டைப் பிராணியின் மேல் பாய்ந்த அம்பு மறுபுறம் வெளிப்படுவதைப் போல் இவர்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவர். (வேட்டைப் பிராணியின் மேல் பாய்ந்த அம்பு விரைந்து சென்று மறுபுறம் வெளிப்படுவதால் அதன் முனையிலோ அதன் நடுப்பகுதியிலோ அதன் கடைசிப் பகுதியிலோ இரத்தம் ஒட்டி இருக்காது இது போல் இஸ்லாத்திலேயே அவர்கள் இருந்தாலும் அதன் எந்த அம்சமும் அவர்களுடன் ஒட்டாமல் வெளியேறி விடுவர்) என்று அபூஸலமா கூறுகிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. அடைப்புக் குறிக்குள் உள்ள வாசகம் நேரடி மொழிபெயர்ப்பு அல்ல, அதன் கருத்து மட்டுமே தரப்பட்டுள்ளது.)
170 حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا أبو أُسَامَةَ عن سُلَيْمَانَ بن الْمُغِيرَةِ عن حُمَيْدِ بن هِلَالٍ عن عبد اللَّهِ بن الصَّامِتِ عن أبي ذَرٍّ قال قال رسول اللَّهِ إِنَّ بَعْدِي من أُمَّتِي أو سَيَكُونُ بَعْدِي من أُمَّتِي قوما يقرؤون الْقُرْآنَ لَا يُجَاوِزُ حُلُوقَهُمْ يَمْرُقُونَ من الدِّينِ كما يَمْرُقُ السَّهْمُ من الرَّمِيَّةِ ثُمَّ لَا يَعُودُونَ فيه هُمْ شِرَارُ الْخَلْقِ وَالْخَلِيقَةِ قال عبد اللَّهِ بن الصَّامِتِ فَذَكَرْتُ ذلك لِرَافِعِ بن عَمْرٍو أَخِي الْحَكَمِ بن عَمْرٍو الْغِفَارِيِّ فقال وأنا أَيْضًا قد سَمِعْتُهُ من رسول اللَّهِ |
‘எனக்குப் பின் என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தினர் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். அவர்களின் தொண்டையை அது கடந்து (உள்ளத்திற்குச்) செல்லாது. வெட்டைப் பிராணியின் மேல் எய்த அம்பு மறுபுறம் வெளிவருவதைப் போல், இந்த மார்க்கத்திலிருந்து வெளியேறுவார்கள். பின்னர் திரும்பவும் அதை நோக்கி வர மாட்டார்கள். இவர்கள் தான், மனிதர்கள், கால்நடைகள் ஆகிய எல்லாவற்றையும் விட மிகக் கெட்டவர்கள்’ என்று நபி (ஸல்) கூறியதாக அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள். இதை நான் ராபிவு இப்னு அம்ரு (ரலி) அவர்களிடம் கூறிய போது, தானும் இதை நபி (ஸல்) அவர்களிடம் செவியுற்றிருப்பதாக கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸாமித் (ரலி) கூறுகிறார்கள்.
(குறிப்பு: முஸ்லிமிலும் இது இடம் பெற்றுள்ளது.)